திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -2-1-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் ..

நொந்தாராக் காதல்நோய் மெல்லாவி உள்உலர்த்த
நந்தா விளக்கமே! நீயும் அளியத்தாய்!
செந்தா மரைத்தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண்துழாய் ஆசையால் வேவாயே?

    பொ – ரை : ‘கெடாத விளக்கே! ஒருகால் வருந்த, அதனுடன் முடிந்தது என்பது இன்றி, அமையாது மேலும் மேலும் வளர்ந்து கொண்டே செல்லுகின்ற காதல் நோயானது, மிருதுவான உயிரை உள்ளே உள்ள பசையெல்லாம் அறும்படி உலர்த்த, உலர்த்திய காரணத்தால் நீயும் இரங்கத் தக்கதாக இருக்கின்றாய்; செந்தாமரை

போன்ற அகன்ற திருக்கண்களையும், சிவந்த கனி போன்ற திருவாயினையுமுடைய எம்பெருமானுடைய அழகிய திருத்துழாய் மாலையில் வைத்த ஆசையால் வேகின்றாயோ?’ என்கிறார்.

    வி – கு : நொந்து – செயவெனச்சத் திரிபு; ‘நோவ’ என்பது பொருள். ஆரா, நந்தா – ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள். அளியத்தாய், ஒரு சொல். ‘அந்தமிலா அன்புஎன்மேல் வைத்தாய் அளியத்தாய்’ (கம்பரா. இரணியன் வதை. 136) என்றார் கம்பநாடர்.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1அக்கழிக்கு ஒரு கரை காணமாட்டாமல் மீண்டு வந்து படுக்கையிலே விழுந்தாள்; அங்கு எரிகிற விளக்கைக் கண்டாள்; அது ‘உடம்பில் கை வைக்க ஒண்ணாதபடி விரஹசுரம் பற்றி எரியாநின்றது’ என்று அதனைப் பார்த்து, ‘நீயும் நோவுபட்டாய் ஆகாதே?’ என்கிறாள்.

    நொந்து ஆராக் காதல் நோய் மெல் ஆவி உள் உலர்த்த – ‘நோவ’ என்று புக்கால், நொந்து தலைக்கட்டக் கூடியதல்லாமல் இருக்கிற காதல் நோயானது, மிருதுவாயிருக்கிற ஆத்துமாவைக் குருத்துவற்றாக உலர்த்த, தொட்டார் மேல் தோஷமாம்படி காற்றுப் படவும் பொறாதிருக்கின்றதாலின், ‘மெல் ஆவி’ என்கிறாள். ஆத்துமாவிற்கு மென்மை, பகவானுடைய குணங்களை அநுபவித்து நைந்திருத்தல். நந்தா  விளக்கமே – கெடாத விளக்கே! ‘ஒன்றன் பின் ஒன்று மாறிக்கொண்டே அழிகின்ற சுவாலையை ‘நந்தா விளக்கே’ என்றது என்னை?’ எனின், தான் மயக்கம் கொண்டவள் ஆதலின், மிக நுண்ணியதாக ஆய்ந்து அறியக்கூடிய சுவாலையினுடைய வேறுபாட்டினை இருந்து பார்க்கின்றாள் அல்லள்; சுவாலையானது கெடுதல் இன்றித் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பது போலத் தோற்றுதலின், அதனைப் பார்த்து, ‘நந்தா விளக்கே’ என்கிறாள். அளியத்தாய் நீயும் – நாட்டுக்குக் 2கண் காட்டியான அருமந்த நீயும். அளியத்தாய் வேவாயே – பிறர்க்கு உதவி செய்கிற உடம்பிலே உனக்கு நோவு வருவதே?

    செந்தாமரைத் தடம் கண் – முகத்தைப் பார்த்துக் குளிர நோக்கின போதைத் திருக்கண்களில் செவ்வி சொல்லுகிறது. செம் கனி வாய் – இன்சொல் சொல்லுகிற போதைத் திரு அதரத்தில் பழுப்பைச் சொல்லுகிறது. எம்பெருமான் – நோக்காலும் புன்சிரிப்பாலும் என்னைத்

தனக்கே உரிமையாக்கினவன். அம் தாமம் தண் துழாய் ஆசையால் -‘அழகிய திருத்துழாய் மாலை பெற வேண்டும்’ என்னும் ஆசையாலே. 3 ‘கருமை நிறைந்த கண்களையுடைய பிராட்டி, கணவனாகிய ஸ்ரீராமபிரானால் மாலை அணிந்து  கௌரவிக்கப் பட்டாள்,’ என்ற பேறு பெறவேண்டும் என்று அதனையோ நீயும் ஆசைப்பட்டாய்?’ என்றபடி. வேவாயே- 2‘உக்கக்காலுக்கு உளையக்கூடிய 3உன்உடம்பே நெருப்பாக வேகிறாயே!’ என்கிறாள்.   

விளக்கு பார்த்து கதறுகிறார்
சுற்றி வந்தது போதும் என்று -மாளிகை திரும்பி வந்ததும்
கழிவுக்கு கரை காண மாட்டாதே -துக்கத்துக்கு

உடம்பில் கை ஒக்க ஒண்ணாத படி பற்றி எரிய
விரகத்தால் சுடுகிறது என்று நினைத்து –
நொந்து ஆரா காதல் நோய் -முடியாத -திருப்தி அடையாத –
மெல்லாவி உள் உலர்த்த -மிருதுவான ஆவி
நந்துதல் அணைதல் நந்தா விளக்கு –
எம்பெருமான்விஷயத்தில் அம்  தண் தாமம் துழாய் ஆசை பட்டு –
நொந்து-நோவா -பிரேமா வியாதி -நொந்து அனுபவிக்க முடியாத வியாதி –
மெல்லாவி -மெல்லிய -தொட்டார் மேலே தோஷம் ஆகும் படி -மிருதுவான –
சூஷ்மம் -குருத்து வற்றாக உலர்த்த -வேரோடு சேர்த்து –
பகவத் குண அனுபவத்தால் நைந்து இருக்க -காற்று பட பொறாது இருக்கை –
விரக விசனம் வாடை காற்று துக்கம் –
நந்தா விளக்கமே -தொடர்ந்து எரிந்து கொண்டே –
அழியாத -ஜூவால பேதம் அனுமானம் –சுடர் தொடர்ச்சியாக பார்கிறோமே -ஒரே சுடர் இல்லை
வர்த்தி அவயவ விநாசத்வாத் -அனுமானத்தால் பார்த்தல் பல சுடர் –திரி குறையுமே எண்ணையும் குறையுமே –
ஷணம் தோறும் சுடர் உண்டாகி அழிந்து -ஷணிகம் புத்தன் இதையே திருஷ்டாந்தமாக சொல்லுவான் –
பிரதி ஷணம் உத்பத்தி வினாசயவதி –
பிரதம சரம ஜுவாலை -மத்திமத்தில் –
இவளோ நந்தா விளக்கமே -ஜுவாலா பேதம் அனுமானம் பார்க்க வில்லை -ஞானம் கலங்கி –
சந்தானம் விச்சேதம் இன்றி -நோவு படுகிறது –
நாட்டுக்கு கண் காட்டியான நீயும் -கூடவா நோவு பட வேண்டும் –
அளியத்தாய் –
பரார்தமான உடம்பில் நோவு வருவதே –
அரு மருந்த நீ அரிய வஸ்து
செம்ய்தாமரை கண் செம் கனி வாய் எம்பெருமான்
அம் தாமத்து தண் துழாய் ஆசைப் பட்டாயா
ஸ்ரீ ராமாயணம் நினைவு வர -பத்தி சம்மானிதா -வார்த்தை -ஆத்வாரம் -வாசல் வரை வந்தாள் பிராட்டி
படி தாண்ட கூடாது மறந்து -தன கழுத்து மாலை போட்டு இங்கே நில் சொன்னார் பெருமாள்
நீ போர நடந்தாய் திருவடி தொட்டார் பட்டர் நிர்வாகம்
அஸி தேஷிணா -பர்த்தாரம் -கண்ணாலே மாலை இட்டாள் இவள் -தோள் மாலை போட்டார் அவர்
யாம் பெரும் சம்மானம் .-நீயும் இதற்க்கு ஆசைப்பட்டாயா -என்னை போலே
செம் தாமரை தடம் கண்-முகத்தில் பார்க்கும் பொழுது செவ்வி நினைவு கொண்டு
இன் சொல்லு சொல்லும் பொழுது திரு அதரத்தில் பழுப்பு செம் கனி வாய் நினைவு
நோக்காலும் ஸ்மிததாலும் அனந்யார்கையாக ஆக்கினவன் எம்பெருமான்
நெருப்பாக வேகிராயே
உக்கம் -விசிறி – காத்துக்கு உளைய கடவ உடம்பு
அதற்கே உடம்பு கன்னி விடும் போலே
உக்க காலுக்கு உளைய கடவ உடம்பு -மார்த்தவம் நெருப்பாக வேகிறதே –

நம் ஜீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading