அவதாரிகை-
இது யஜூர் வேத சாரமாகும்
திரு விருத்தத்தில் ஸ்வரூப ரூப குண விபூதி காட்டி கொடுக்க – உபய விபூதிகளை அனுசந்தித்து –
நித்ய விபூதி உள்ளோர் -நித்ய சம்சாரிகளை
வீட்டைத் திருத்த -கலியும் கெடும் கண்டு கொண்மின் –
கர்ம பர தந்த்ராய் இதர விஷய போக -தேக -யாத்ரையிலே கழித்து —சர்வேஸ்வரன் உடன் நித்யர் போல் இருக்க தமக்கு யோகியதை இருந்தும்
சமோகம் சர்வ பூயோஷம்–இழந்ததை அனுசந்தித்து –தேக சம்பந்தம் கழித்து கொள்ள வழி தம் பக்கம் இல்லாமல்–கர்மாதீனம் பிறந்து–
மேலும் கர்மா சேர்த்து-பிறவி மாறி மாறி-அவனை திரு அடிகளில் விண்ணப்பம் செய்து-இனி உறாமை-அருளி–அழுந்தார் பிறப்பாம் -இறுதி பாசுரமும் அருளி-
இப் பிர பந்தத்திலும் அதுவே தாத்பர்யம்-
உறாமை உடன் உற்றேன் ஆக்காமல்-அலற துடிக்க அழ பிராத்திக்க வைத்து –
நச்சு பொய்கை ஆகாது இருக்க /பிர பந்தம் தலை கட்ட/நாடு திருத்த /–தன் குழந்தை பட்டினி போட்டு நம்மை வாழ வைக்க-
பிறந்த ஆற்றாமை தீர பாசுரம் அருளுகிறார் —அம்பு படுக்கை சம்சாரம் பீஷ்மர் பஞ்ச பாண்டவர் போல்-
ஸ்ரீ ஆழ்வார் நமக்கு அருள-இங்கு வைக்கலாம் படி அல்ல இவர் த்வரை–இது தாழ்ந்தது என்று அறிந்த ஸ்ரீ ஆழ்வாரை கொண்டே பாட வைத்து –
இருபது தடவை இனி இனி கூப்பிட வைத்தார்-பல நீ காட்டி-குண அனுபவம் இங்கே கொடுத்து திவ்ய தேசம் காட்டி-தேகம் தோஷம் –
அங்கே போய் அனுபவம் கேட்க வேண்டாம் படி அனுபவம் அதிகம் இங்கே காட்டி–அவற்றை அந்ய பரராய் அனுபவிக்கிறார்-
அந்தமில் பேரின்பம் அடைய துடிப்பது
நமது குணாநுபவம் செய்ய என்று அறிந்து கொண்டு
அவை எல்லாம் இங்கேயே காட்டி அருள
இங்கேயே பண்ணிக் களித்தாராய்
அந்த அனுபவம் உள்ளடங்காமல்
புற வெள்ளம் இட்டுப் பெரு வெள்ளம் இட்டு பிரபந்தங்களாக பெருகி
லோகம் எல்லாம் உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி
தனது ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டிக் கொடுக்க
அவனது
மேன்மையையும்
நீர்மையையும்
வடிவு அழகையும்
ஏழு பாசுரங்களாலே
அருளிச் செய்கிறார் –
————————————————————————–
செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர்
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செவ்வாய்
திகழ பசும் சோதி மரகத குன்றம்
கடலோன் கை மிசை கண் வளர்வது போல்
பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு
பச்சை மேனி மிக பகைப்ப
நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி
எரி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
தாமரை வுந்தி தனி பெரு நாயக
மூ வுலகு அளந்த சேவடியோயே –1-
————————————————————————–
திரு மேனி அழகை வர்ணிக்கிறார்-நேராக அருள சக்தி இல்லை ஸ்ரீ ஆழ்வாருக்கு ..
உதாரணம் வேறு சொல்லி–மரகத பச்சை மலை வர்ணிக்கிறார்–
ஸ்வரூப ரூப குணங்கள் அடைவு-நேராக உருவம் அருளுகிறார்-
நேர் நேர் கொடு காண முடியாத படி முகத்தில் அலை எரிவதாலே –அச்சோ ஒருவர் அழிகிய வா–
கிண்ணகத்தில் இறங்குவார் போல-உபமானம் மூலம் அருள–ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்–ஓர் அளவுக்கு உபமானம்–இழிகிறார் –
அதிலும் நேர் நேர் கொடு இன்றி-மரகத மலை உடன் சேர்த்து–சூர்யன் சந்திரன் சூட்டி ,பவளம் வைத்து சேர்த்து -நஷத்ரம் ஒட்டி.
மேகம் கொண்டு கட்டி-செய்ய முடியாத ஒன்றை –சிஷ்டித்து கொண்டு இருக்கிறார்–ஒப்பனை பண்ணி
உருவம் விட்டு உபமானம்-பச்சை மா மாலை போல் மேனி பவள வாய் கமல செம்கண் பாசுரம்-பாலின் நீர்மை பாசுரம்-
செக்கர்-சிவந்த மா பெரிய மேகம்-சந்த்யா வானம் உடன் சேர்ந்த மேகம் –இதை ஆடையாக உடுத்தி-
சூர்யனை தலையில் சூடி –சந்திரனை அணிந்து –தேஜஸ் உள்ள நஷத்ரம் புனைந்து
பவளம் போன்ற சிவப்பு -இடம்கள் செவ்வாய்-வாயை சொல்ல வில்லை-
இந்த மலை நடந்து போய் -வருண தேவன் கடல் மிசை -அலை திரை கையில்- கண் வளர -போல்-
கிரீடம் போல் சூர்யன்/மா முகில்-பீதாம்பரம் /திரு ஆபரணம் நஷத்ரம்-செவ்வாய் கண்கள் வாய் திரு கரங்கள் போல்வன -ஆதி சேஷனில் சாய்ந்தார்
பீதக ஆடை /முடி /பூண் முதலா மேதகு பல் கலன் அணிந்து சோதி வையவும் கண்ணவும் சிவப்ப –
மீது இட்டு பச்சை மேனி மிக பகைப்ப -அலை வீசும் கடலுக்குள் அரவின் அமளி ஏறி-அறி துயில்-அறிவுடன்
தூங்குவான் போல் யோகு செய்யும்–தெய்வ குழாங்கள் முப்பத்து முக் கோடி தேவர்களும் –
தாமரை உந்தி தனி பெரு நாயகன் -தனி/பெரு நாயகன்–மூவடி அளந்தான் -சேவடி ஆனை கண்டவர்-ஆனை ஆனை என்னுமா போல் –
உலகம் ஏத்தும் தென் ஆனாய்–அனுபவ ஜனித ப்ரீதி—பரபாக வர்ண கலவை-சொவ்குமார்யம்
சேர்ந்து குளிர்ந்த முகிலை வஸ்த்ரமாக கொண்டு–திவி சூர்ய சகஸ்ரச்ய -கீதை- கதிர் ஆயிரம் இரவி நீள் முடி-
கிட்டே போக முடியாத சூர்யன் போல் அன்றி-சீதளமாக அம் சுடர் மதியம்-பூர்ண சந்தரன்–தேய்ந்து வளராத சந்தரன்
அபூத உபமானம் –பல சுடர் நஷத்ரம் பூண்டு–பல சிவந்த இடம் கொண்டு-மரகத மலை- வருண தேவன் கை- கடல் அலைகள்-
சாய்வது போல் சொல்லாமல்-கண் வளருவது போல்—உவமானமே கண் வளர்வது-ஸ்ரீ திரு மலை நம்பி–ஸ்ரீ எம்பெருமானார்
-பொன்னால் ஆகிய தோடு கூட போட முடியாத காது கொண்டவர் அடையாளம் போல்–மேதகு-உயர்ந்த -ஸ்வரூப அநுரூப மேவி தகுந்த
நஷத்ரம்-அணிகலன் -குளிர்ந்து பளிச்ச் என்று -நூபுராதி-ஆதி சப்தம் அபரிமத திவ்ய பூஷணம்-சூடகமே -என்று அனைய பல்கலனும்..
சோதி வாயவும் கண்ணவும் சிவப்ப– இரண்டு -செவ்வாய் =சிவந்த இடங்கள்-என்று முன்பு அருளி–
ஒளி உமிழ்ந்து -மீதிட்டு- இடித்து மோதி மிக பதைப்ப –சுட்டு உரைத்த பொன் மேனி நின் திரு மேனி ஒளி ஒவ்வாது —
மீது இட்டு-தள்ளி விட்டு-நச்சு வினை-மது கைடபர் விரோதிகளை நச்சு மூச்சால் -உமிழ்ந்த செம் தீ -பல தலைகளை உடைத்தாய்-
ஸ்வ ஸ்பர்சத்தால் பணைத்த -சிந்தாமணி -கக்கி-பெருமாள் திரு மேனி பட்டு ஆனந்தத்தால் பெருத்து–விகசித்து-
பிரஜை மடியில் வைத்த தாய் போல்–ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்ரீ திரு கோஷ்டியூர் நடந்த இடத்தில்- ஸ்ரீ பட்டரை மடியில் கொண்டு ஆதரவுடன்–பார்த்து
முன் குழந்தை-பெருமாள் திரு மஞ்சன நீரை -ஸ்ரீ ரெங்க ராஜா கமலா லாலி–மெய் நொந்து பெத்த பிள்ளை போல் அரவு பார்த்து இருந்தது போல் அமளி-
பஞ்ச சயனம் -மென்மை வெளுத்து வாசனை குளிர்ந்து விசாலம்–ஏறி-தன பேறாக -பெரிய ஆதரவுடன்–கைங்கர்யம் பெற்ற ஆனந்தம்-
இவனுக்கு -கைங்கர்யம் செய்யும் ஆனந்தம்-ஆறு கால் திரு சிவிகை-எழுந்து அருளும் பொழுது 16 பேர் எழுந்து அருள பிராட்டி மார் உடன்-நம் பெருமாள்
அலை ஆர்பரிக்கும் கடல்-ஸ்ரீ பெருமாள் இருப்பதால்-நித்தரை பொழுதும் ஞானம்-அறி துயில்- உறங்குவான் போல் யோகு செய்யும் —
கண் மூடி இருக்கும் பொழுதும் பிரகாசம்–பிரசித்த தேவர் அனைவரும் பிரம்மாதி தேவர்-இறுமாப்பு புகட்டி
அபிமான பங்கமாய் சாய்ந்து இருந்த அழகில் அடிமை சாசனம் எழுதி கொடுப்பார்கள்-கிடந்த -ஒன்றே அவன் செயல்-
கொக்கு கூட்டம் கடல் கரையில் இருந்தால் கடல் அசையாதே ஏக ரூபமாய் -ஐஸ்வர்ய செருக்கால்-விகாரம் இன்றி–
ஜகத் உத்பத்தி காரணம் ஆன உந்தி தாமரை —தனி பெரு நாயக-அவ் வருகு இல்லை-ஒப்பிலா அப்பன் -பொன் அப்பன் மணி அப்பன் என் அப்பன்
அத்வீதிய நாயகம்-மற்றவர் உபசார வார்த்தை-வேண்டியதை கேட்டு வாங்குவார் வரம் கொடுத்து கஷ்டம் படும் பொழுது-பெரு நாயகன்-
தனக்கு ஒரு நாயகன் இன்றி -நிமித்த உபபாதன சக கார்யம் அவனே–தனி/பெரு நாயகன்–வேர் முதல் வித்தாய்-
அவர்கள் இருந்த இடத்தில் சென்று அனுபவிக்க பண்ணும்-திரு விக்ரமன்-தலை தீண்டி-இழந்த இழவை–
கொள்ள வந்த திரு அடி இல்லை-செவ்வடி- அழகுக்கு -காதுகன் ஆனாலும் விட ஒண்ணாத அழகன்-அழகையும் குணங்களையும் அனுபவித்தார் இத்தால்
————————————————————————–
செக்கர் மா முகில் –
கீழ் திருவிருத்தம் முதல் பாசுரத்தில் -அழுக்கு உடம்பு -தன் உடம்பை பற்றி பேசி
இங்கு எம்பெருமான் திரு மேனி வைலஷண்யத்தை-
அப்ராக்ருதமான திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு பிராக்ருத வஸ்துக்களில் ஒன்றை உபமானமாக சொல்வது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னை புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி -என்றபடியே
அவத்யமேயாயினும்
உபமானத்தை இட்டு அனுபவித்து தீர வேண்டியும்
வேதாந்தங்களிலும் அப்படியே சொல்லி இருப்பதாலும்
ஸ்ரீ ஆழ்வார் அப்படியே அருளிச் செய்கிறார்– உவமை -பிரசித்த உவமை அபூத உவமை இரண்டு வகை உண்டே
இல் பொருள் உவமை
மரகத பச்சையான மலை –
செந் நிறமான மேகத்தை பீதக வாடையாக உடுத்திக் கொண்டு –
செக்கர் -சிகப்பு நிறத்துக்கும் செவ் வானத்துக்கும்
மேகங்கள் மலையிலே படியுமே –
கிரீடத்தின் ஸ்தானத்திலே சூர்யனை அணிந்து கொண்டு
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீண் முடியன் –
மிக்க செஞ்சுடர் பரிதி சூடி
முத்துவடம் சந்திர ஹாரம் போன்ற திரு ஆபரணங்கள் ஸ்தானத்தில் நஷத்ரங்களை புணைந்து
தேஜஸ் சமூஹம் -பல சுடர் –
மேதகு -மேவத்தகு -திரு மேனிக்குப் பொருந்தித் தக்கின –
மெய் தகு -என்றும் பாடம்
மெய் -திரு மேனி அதற்குத் தக்க
திரு அதரம் திருக் கண்கள் -ஸ்தானத்தில் பவள மயமான பிரதேசங்கள் –
பவளச் செவ்வாய் –
மலையிலே பல இடங்களிலே பவளம் உண்டே
பவள வாய் கமலச் செங்கண்-
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண்ணினையும் அரவிந்தம் அடியும் அக்தே-
பவளத்தால் சிவந்து இருக்குமே –
திகழ் பசுஞ்சோதி மரகதக் குன்றம் –
பசுமை நீலம் கருமை
காளமேக திரு உருவம் -மரகத குன்றம்
கண்ணையும் நெஞ்சையும் குளிர வைத்து
தாபத் த்ரயங்களை ஆற்ற வல்ல -திகழ் பசுஞ்சோதி மரகதம் –இவற்றுடன் கடலிலே பள்ளி கொண்டு அருளுமா போலே-
மீதிட்டு பச்சை மேனி மிகப் பகைப்ப –
பீதக வாடை
திரு அபிஷேகம்
திவ்ய பூஷணங்கள்
திவ்ய அவயவங்கள்
இவற்றின் சோதி வெவ்வேற நிறமாக இருந்தாலும்
திருமேனியின் நிறமாகிய பாசின் நீர்மை -பச்சை நிறமே
போட்டி போன்று வென்று விளங்குகின்றனவாம்
மேனி -உடலுக்கும் நிறத்துக்கும் பெயர்
மீதிட்டு மிகப் பகைப்ப -மிகப் பகைத்து மீதிட -விகுதி மாற்றி கூட்டி உரைக்கலாம்
மீதிடுதல் -வெற்றி பெறுதல்
மேலே பள்ளி கொள்ளும் அழகை பாடி அருளுகிறார் –
ஷீர சாகர மத்தியிலே திரு வநந்த ஆழ்வான் மடியிலே சாய்ந்து அருளி
சிவன் பிரமன் இந்த்ராதி தேவர்களால் தொழப் படுமவனே
தாமரை பூத்த திரு நாபியை உடைய சர்வேஸ்வரனே
மாவலி இடம் நீர் ஏற்று உலகு அளந்து அருளினவனே
ஜய விஜயீ பவ –
அழகிலே ஈடு பட்டு வினை முற்று உடன் முடிக்காமல்
மூவுலகு அளந்த சேவடியோயே
கவர்தலை -கப்பு விட்டு கிளர்கின்ற தலையை உடைய -பல பல தலைகளை உடைய
அமளி -படுக்கை
அறி துயில் யோக நித்தரை
சேவடியாய் -சேவடியோன்-என்பதன் விளி –
————————————————————————–
நளிர் மதி சடையனும் நான் முக கடவுளும்
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை வுலகமும் யாவரும் அகப்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்
மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒரு பொருள் புறப் பாடின்றி முழுவதும்
அகப் படக் கரந்து ஓர் ஆல் இலை சேர்ந்த எம்
பெரு மா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே ?–7
————————————————————-
ரிக் வேத சமம் திரு விருத்தம் /யஜுர் வேத திரு வாசிரியம் /திருவாய் மொழி -சாம வேதம் /
பெரிய திரு அந்தாதி -அதர்வண வேதம்
அங்கம் -இரும் தமிழ் நூல் புலவன் பனுவல் ஆறும் –உப அங்கம் மற்ற எண்மர் நல மாலைகளும்-
திரு மேனி மேன்மை எளிமை முதல் பாசுரம்
திரு அடி பக்தியே பிராப்தி இரண்டாம் பாசுரம்
ததீய சேஷத்வம் மூன்றாம் பாசுரம்
அடியார் யாத்ரை மங்களாசாசனம் நான்காம் பாசுரம்
திரு விக்ரமன் அடிக்கே மங்களா சாசனம் ஐந்தாம் பாசுரம்
உலோகர் இயற்கை நொந்து ஆறாம் பாசுரம்
தம்மை இப்படி விலஷணம் ஆக்கிய பேற்றை அருளுகிறார் இதில்-
———————————–
ஆல் இலை துயின்ற பெருமானை அருளுகிறார் –யாவகை உலகமும் யாவரும் இல்லா -ஸ்ருஷ்ட்டி –அங்கு–
இங்கு யாவகை உலகமும் யாவரும் அகப் பட -லயம்–
அகப் பட –அத்வாரக சிருஷ்டி-சமஷ்டி சிருஷ்டி பண்ணியவை அகப்பட
வியஷ்டி ஸ்ருஷ்ட்டி—நிலம் நீர் தீ வாய் ஆகாசம் -சுடர் இரு விசும்பு முதலில் தோன்றி இறுதியில் அழிவதால்-
ஆகாசம்/வாயு அக்னி /தண்ணீர் /பிர்த்வி–லயம் பிர்த்வி தண்ணீரில் சேர அது அக்னியில் சேர அவை வாயுவில் அவை ஆகாசத்தில் லயிக்கும் —
திட விசும்பு – எரி -அங்கும் திட விசேஷணம் –பிறவும் சிறிது உடன்-ஒரே சமயத்தில்-உள்ளே விழுங்க நினைத்த மாதரத்தில்-
சிறிது-வயற்றில் ஒரு பகுதியில்- மயங்க-லயிக்க
ஏக தேசத்தில் இருக்கும்–புறப் பாடு இன்றி நழுவி வராமல் –கரந்து-மறைந்து -சிறிது என்பதால் வயிறில் மாற்றம் இன்றி
ஓர் ஆல் இலை-சேர்ந்த -தளிரில்-அத்வதீயம்-தான் தேர்ந்து எடுத்த -எம் பெரு மா மாயன்—
வேறு ஒருவரை உடையோமோ-ஆனந்தம் உடன் உலோகர் போல் இல்லாமல்
பண்ணிய உபகாரம் சேதனர் அறிவு படைத்த கடமை அவனுக்கு மங்களாசாசனம்-
ஜடாயு-சந்திர காசம் வாளால் ராவணன் சிறகை அறுக்க -பெருமாளை கண்டதும்-
சிறகில் அடங்கி இருக்க வந்தேன்-தசரதர் நடு தாயால் பிரிந்து -விதி வலியதே பெருமாள் கதற- –
ஆயுஷ்மான் -ஸ்வரூப விருத்தமா மங்களா சாசனம் –
ஸ்ரீ பெருமாளைக் கண்ட உடன் முதலில் -ஸ்ரீ ஜனக ராஜன் -இயம் சீதா மம சுத சக தர்ம சாரீதவ–பத்ரந்தே
மங்களம்-கையை கையால் பிடி சொல்வதன் முன் மனசில் திவ்ய தம்பதிக்கு —
ஸ்ரீ தசரதன்–ஸ்ரீ பரசு ராமனை-பாலான் அபயம் என்று பல ராமன் இடம்கேட்டு மயங்கி-விளித்து எழுந்து -மங்களா சாசனம்
ஸ்ரீ சீதை–நடந்த அழகை கண்ணால் பருகி-மங்களாம்-திக் பாலர் ரஷிகட்டும்-
ஸ்ரீ பெருமாள் பிரபாவம் அறிந்தும் பல்லாண்டு பாடுவது ஸ்வரூபம் இவர்களும்-
நம போற்றி ஜிதந்தே –ஞானம் மட்டும் இன்றி பிரேமம்கொண்டு —கதே ஜலே சேது பந்தம் செய்வது –
நடந்து முடிந்த கதைக்கு-உறகல் உறகல் சொல்லுகை பய நிவர்த்த கங்களுக்கு பயப் படுவது –
இதை விட்டு இதர தெய்வம் ஆஸ்ரயித்து சம்சாரம் வர்த்திக்க =இது என்ன படு கொலை ஒ ஒ உலகின் இயல்பே —
மூழ்கும் கப்பலில்- அல்லால் செய்வதை செய்கிறார்கள்–இவ் அனர்த்தத்தைத் தப்பப் பெற்றோம்-
அர்த்தமான பகவானைப் பெற்றோம் என்று உகக்கிறார் –சுய லாபம் பேசி இனியர் ஆகிறார் –
நாட்டார் கண்டார் காலில் விழுந்து இருக்க -வித்யாரண்யர் தேசிகன்-வைராக்ய பஞ்சகம்-
பட்டானார் சேர்த்த சொத்து ஸ்ரீ ஹஸ்திகிரி மலையில் சேவை சாதித்து இருக்க -சந்தன பூஷணம் தனம் —
மறந்தும் புறம் தொழா மாந்தர்– மூ உலகும் திரி தருவோன் —இடர் கெடுத்த திரு வாளன்
முதுநீர் தெளித்து கபாலம் வெடித்து போய் -படைக்க பட்டவர் தானே
வைஷ்ணவானாம் அஹம் சம்பு-கீதையில் சொல்லி கொள்கிறான் –
ரஜோ குணம் பிரம்மா தமோ குணம் ருத்ரன் தொழுவார் சத்வ குணம் விஷ்ணு–லிங்க புராணம் இறுதியில் ஸ்லோஹம்–
வைகுண்டேது பரே லோகே -ஸ்ரியா சாத்ர்தம் ஜகத் பதி ஆஸ்தே விஷ்ணு ரஜிந் யாத்மா பக்தர் ஹி பாகவத சக -நித்யம் சொல்கிறோம்—
லிங்க மாகாத்ம்யம் சொல்லி நாக்கு சுத்திபட இதை சொல்ல சொன்னார் ரிஷி–
நாராயணோ பிரம்மா ஜாயதே -நான் முகனை நாராயணன் படைத்தான் –
ஆனை துரத்தினாலும் ஆனை கால் நுழையாதே —ஸ்ரீ சௌரி பெருமாளும் ஒரே நாளில் சிவன் பிரம்மா திரு கோலம்-சாத்தி கொள்கிறான்
கூராளும் தனி உடம்பன்—-ஸ்வாமி ஸ்ரீ எம்பெருமானார் நுழையாத சரித்ரம்—மதம் கொள்கை சித்தாந்தம்–
ஆதி சங்கரர் மாதவர் -வைஷ்ணவர் தான்-ஸ்ரீ ப்ரஹ்ம சூத்திரம்- ஸ்ரீ கீதை -ஸ்ரீ சகஸ்ர நாமம் பாஷ்யம் பண்ணி இருக்கிறார்கள்-
ப்ரஹ்ம விஷ்ணு மாற்றவில்லை- கொள்கை தான் வேறு-ப்ரஹ்மம் ஒன்றே தான் அது ப்ரஹ்ம விஷ்ணு -என்கிறார் ப்ரஹ்ம சங்கரர்
சைவத்திலே -நாயன்மார்கள்-விசிஷ்ட அத்வைதி வள்ளலார் அத்வைதிகள் ஜோதிஸ் ஒரே உருவம்-
கொள்கையில் நம்பிக்கை மாறலாம் -குழப்ப கூடாது-
ஊர்த்த புண்டரீகம் சந்தனம் ஆதி சங்கரர் ஈஸ்வர சீலன் நாராயணன் நியமன சாமர்த்தியம் இயற்கையாக பெற்ற பெருமை– என்கிறார்–
ப்ரஹ்மம் சுத்த ப்ரஹ்மம்- கோவில் விக்ரகம் இல்லை அவருக்கு –
பூர்வர் பட்ட பாடு வைஷ்ணவர் களுக்கு அவர் பெருமை சொல்ல -குறுகிய மனப் பான்மை இல்லை-
மனைவி கணவன் உறவு போல்–சகல பதார்த்தங்களையும் நோக்கும் பொழுது நம் உடன் ஒக்கு புகுந்த அவர் காலில்–
போகாத தெய்வம் ஒன்றும் இல்லையே –அகில ஜகத் காரணம்-கூப்பிட -வந்தது உங்கள் தெய்வமோ–ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் —
அல்லாத பிர பந்தங்களை அந்தாதி ஆக்கி- –இது மண்டல அந்தாதி இல்லை –
இறுதி பாசுரம் முடிவு முதல் பாசுர ஆரம்பம் இல்லை-யாமே முடிந்து ஆரம்பிக்க வில்லை–அந்தாதி தான்-
உகப்புக்கு இதற்க்கு மேற் பட இல்லாமையாலே மேலே போகாமல் முடித்தார்-
————————————————————————–
தன்னோடு சிறை இருந்தவர்களை ஆஸ்ரயித்து பலன் உண்டா அரையனை ஆஸ்ரயித்து தானே பலன் அரையன்-அரசன் —
சந்த்ரே சேகரர்-சாதக வேஷம் தோற்ற சந்த்ரனை தலையில் வைத்து கொண்டு–கொடுக்கும் பலன் தரும் அவன்க்ரீடம் தவிர்த்து –
துர் மானம் –ஈஸ்வரன் என்று -மற்றவரும் பேசும் படி அகங்கரிக்க -அவன் தனக்கும் ஜனகன்
சிருஷ்டிக்கு தக்க நான்கு முகம் கொண்ட- நான்கு வேதம் கொண்டு-
இரண்டு அதிகாரிகள் –குசவனையும் -புற மடக்கி போல்- இருவரும்–
அடுத்து தளிர் ஒளி இமையவர்-போக பிரவணர் அனுபவம் அப்சரஸ் மெய் அனுபவித்து கொண்டு-
யாவகை உலகமும் யாவரும் அகப் பட -இவர்கள் அனைவருக்கும் -காரணம் ஆக இருக்கிற பூத பஞ்சகமும் –
சுடர் இரு-உண்டாகும் பொழுது முன்னும் அழியும் போதும் இருதியில் அழிவதாலும் –
மலர் சுடர் பிறவும் உடன் சிறிது-ஏக தேசத்தில் –பெரிய வயிறு எதற்கு—-ரஷிக்க பேர் ஆதரம்–
நீண்ட அப் பெரிய வாய கண்கள்-சில பேருக்கு இட சொல்லி உண்பார் பலர் உண்டாகில் சோறு மட்டம் ஆகும் –
பல வாகி உள்ளே போக பாரிப்பின் பெருமை-சிறிதாக -மயங்க -லயிக்க கலக்க
உடன் மயங்க -உடல் மயங்க -என்ற பாடம்-திரு மேனி -ஆல் இலை தளிரில் -கலச –
பிரி கதிர் படாத படி அனைத்தையும்–பக்தி உழவன்-
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னாத அஹம் அன்னாத அஹம் அன்னாத
உண்டிட்டாய் உண்டு ஒழியாய்–வயிற்றை எக்கி காட்டி ஒன்றும் இல்லை என்று சொல்லும் படி-
சதா ஏக ரூப ரூபாயா –சிறியதாக ஏக தேசம் அனைத்தும் அடங்கி–
அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா அமுதம் மாறா விடிலும் –
சேராதவற்றை சேர்க்கும் சக்தி போல்–கரார விந்தேன –வைஷ்ணவ போகய லிப்சயாக
திரு அடி இனிக்கும் போக்கியம் என்று பார்க்க தானே சாத்தி கொண்டான் முதலில்
இப் பொழுது தானே வாயில் வைத்து கொண்டு பார்த்தான்-
களத்து மேட்டில் அளந்த படி கொண்டே அளக்க வேண்டுமே வீட்டில்-
திரு அடி கொண்டு அளந்தானே முன்பு அதை கொண்டே
இப் பொழுதும் பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும் பாத கமலம் வந்து காணீரே –
முகிழ் விரியாத ஆல் இலை சேர்ந்தான் –ஆல் இலை
பாலன் தனது உருவாய் எழ உலகு உண்டு -மிக ஞான சிறு குழவி-பால் உண்ட குழவி
ஏழு உலகும் உண்டான் –ஆல் இலையின் மேல் வளர்ந்தது மெய் என்பர்-
எழுதி வைக்க பண்ணினாய்–ஆலின் மேல் ஓர் இளம் தளிரில் கண் வளர்ந்த ஈசன்-
தரிக்கைக்கு எசோதாதிகள் அன்றிக்கே இருக்க –யசோதை தேவகி கௌசல்யை மடியில் பார்த்து இருக்கிறேன்
ஜலத்தில்–அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ–ஸ்ரீ திரு புளிங்குடி -மடியாது துயில் -கொடியார் மாட கோளூர் அகத்தும்
இறக்கி வைத்து துயிலாயோ –பய நிவர்திகங்களுக்கும் பயப் படுவார்கள் –
தோள் காட்ட அதற்கும் பல்லாண்டு ..–சுசி ஸ்மிர்த்த சிரித்து கொண்டே-துயில்கிறான்
அவ் ஆல் அன்று நீர் உளதோ -ஆகாசத்தில் உள்ளதோ-மண்ணிலே உள்ளதோ-
விண்ணதோ சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு
பருவம் நிரம்பும் முன் ஏழு வயசில் கோவர்த்தனம் தூக்கியவனே சொல்லு-
ஒரு படி பட்டு மலையை -இதுவும் ஓர் ஆச்சர்யம்–இதுவும் சொல்லு அதுவும் சொல்லு –
மூன்றும் ஆச்சர்யம்-உண்டதும் தூக்கியதும் ஆல் இலை சேர்ந்ததும் –
அகடிதகடன சாமர்த்தியம் —
அவன் தானும் ஸ்ரீ ஆழ்வார் வந்தால் பதில் கேட்டு கடவோம் என்று நினைத்து இருந்தானாம்-
பின்னையும் -அதுவா இதுவா -தொனி மாற்றி–ஆச்சர்யம்- பட்டு விட்டார்-
சர்வ ஆதர பூதன் நீ -ஓன்று வேறு ஒன்றுக்கு ஆதாரம் இல்லை உன்னை தவிர –
ஆல் இலை நீரில் ஆகாசம் மண் விண் தாரகம் இல்லையே—நீ தானே தாரகம்-
உன் உளது புரிந்து கொண்டேன்-மகோ உபகாரம் காட்டி கொடுத்த பின்
புறம்பே ஒன்றுக்கு ஓன்று ஆதாரம் இல்லை–விச்மிதர் ஆனார் ஸ்ரீ பட்டார் அருளி செய்தார் –
வியப்பாயா வியப்பு -இல்லா மெய் ஞான வேதியன்-ஆச்சர்ய யோகம் சொல்கிறது
பெருத்த மா மாயன்—சகல லோகத்துக்கும் இவனே–கால் காணி தெய்வம் இல்லை-
எடுத்துக் கழிக்கைக்கு வேறு தெய்வம் இல்லை–நான் உன்னை ரஷிகிறேன் என்று பச்சை இட்டு
தன் சடை முடி நானும் உன்னை போல் சாதக வேஷம் காட்டி-ஒரு தலைவனை பற்றியே இருக்கிறேன் –
அவனை விட்டார் மார்கண்டேயர் -பரா அஸ்ய சக்தி–சந்தி கூட்டி பராசக்தி வராது–விதண்டா வாதம்
அந்தர் ஆத்மா ஆக இருக்கிறான் என்று சொல்லும் வார்த்தை பிறர் இவர்களை ஆஸ்ரயிகிறார் —
கண்டும் தெளிய கில்லீர் –மார்க்கண்டேயரும் கரியே
பரிமித பலம் தான் இவர்கள் அருளுவார்கள் பரம புருஷார்த்த ஆசை கொண்டால் -மோஷ பிரதன் இவன் ஒருவனே
இவ் அருகு அல்பம் அஸ்திரம்–மோஷம் விரும்பி மத பக்தி அவய விசாரனி–
அநந்ய பக்தி -திரு அடி தன நாமம் மறந்தும் புறம் தொழா மாந்தர் என்னக் கடவரே –
பர்தா பார்யா -சம்பந்தம்-பகவத் சேஷத்வத்திலும் அந்ய சேஷத்வம் கழிவதே பிரதானம் –
பகவத் பிராவண்யம் கிரமத்திலே வரலாம் தேவதாந்திர சம்பந்தம் விட வேண்டும்.
முதலில் லோகம் போல் இன்றி நாம் அவனை பல்லாண்டு பாட பெற்ற பேறு கொடுத்து அருளினானே என்று-
ப்ரீதி உடன் தலை கட்டுகிறார்-
————————————————————————–
நளிர் மதிச் சடையன் –
சாதக வேஷம் பெற்ற ஜடையைத் தரித்துக் கொண்டு இருக்கச் செய்தேயும்
துர்மானத்தாலே
ஸூக ப்ரதன் என்று தோன்றும் படி தாழை மடலைக் கீறி தலையிலே வைப்பாரைப் போலே
குளிர்ந்த சந்த்ரனை தலையிலே தரித்து இருந்த ருத்ரன் –முதலா யாவகை வுலகமும் யாவையும் அகப்பட –
ஸ்ரீ எம்பெருமான் திரு வயிற்றின் உள்ளே சென்று சத்தை பெற்ற இவற்றை வாய் கொண்டு சொல்லுவதும்
பெரும் பாக்கியம் என்று
நில நீர் தீ கால் சுடர் இரு விசும்பும் மலர் சுடர் -என்று மீண்டும் விவரித்து அருளிச் செய்கிறார் –
சிறிதுடன் மயங்கி –
கீழ்ச் சொன்ன வஸ்துக்கள் சிறியவை
உடன் -ஏக காலத்திலேயே
மயங்க -உள்ளே அடங்கும்படி
அன்றிக்கே
சிறிய உடல் மயங்க
பேதை குழவி -உடலில் என்றுமாம் –
பாலன் தனதுருவாய் ஏழ் உலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் –
முகிழ் விரியாத சிறு குழந்தை வடிவாகி
சிற்றாலம் தளிரிலே கண் வளர்ந்து அருளிய அத்புத சக்தி உடைய
ஸ்ரீ மன் நாராயணனே பர தெய்வம் –
நெற்றி மேல் கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நீண்ட நாள் வாய்
ஒற்றைக்கை வெண் பகட்டில் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்
வெற்றிப் போர் கடலைரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட
கொற்றப் போர் ஆழியான் குணம் பரவாச் சிறு தொண்டர் கொடியவாறே -என்றும்
அன்று எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்
அல்லாதார் தாம் உளரே -என்றும்
ஸ்ரீ பெரிய திரு மொழியில் ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் அருளிச் செய்தார் இறே
மங்கை பாகன் சடையில் வைத்த கங்கை யார் பதத்து நீர் —
அங்கண் ஞாலம் உண்ட போது வெள்ளி வெற்பு அகன்றதோ
ஆதலால் அரங்கன் அன்றி வேறு தெய்வம் இல்லையே -ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் பாசுரம் அனுசந்தேயம்
இந்த ஸ்ரீ திரு பிரபந்தம் எம்பெருமான் பரத்வ ஸ்தாபனம் -நோக்கு
இதில் ஸ்ரீ ஆழ்வார் தமது திருநாமம் இதிலும் ஸ்ரீ பெரிய திருவந்தாதியிலும் அருளிச் செய்ய வில்லை-
இது மண்டல அந்தாதி பிரபந்தம் இல்லை-
————————–—————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply