திரு விருத்தத்தில் ஸ்வரூப ரூப குண விபூதி காட்டி கொடுக்க – உபய விபூதிகளை அனுசந்தித்து –
நித்ய விபூதி உள்ளோர் -நித்ய சம்சாரிகளை–வீட்டைத் திருத்த -கலியும் கெடும் கண்டு கொண்மின் –
கர்ம பர தந்த்ராய் இதர விஷய போக -தேக -யாத்ரையிலே கழித்து —சர்வேஸ்வரன் உடன் நித்யர் போல் இருக்க தமக்கு யோகியதை இருந்தும்
சமோகம் சர்வ பூயோஷம்–இழந்ததை அனுசந்தித்து –தேக சம்பந்தம் கழித்து கொள்ள வழி தம் பக்கம் இல்லாமல்–கர்மாதீனம் பிறந்து–
மேலும் கர்மா சேர்த்து-பிறவி மாறி மாறி-அவனை திரு அடிகளில் விண்ணப்பம் செய்து-
இனி உறாமை-அருளி–அழுந்தார் பிறப்பாம் -இறுதி பாசுரமும் அருளி-
இப் பிர பந்தத்திலும் அதுவே தாத்பர்யம்-
உறாமை உடன் உற்றேன் ஆக்காமல்-அலற துடிக்க அழ பிராத்திக்க வைத்து –
நச்சு பொய்கை ஆகாது இருக்க /பிர பந்தம் தலைக் கட்ட/நாடு திருத்த /–தன் குழந்தை பட்டினி போட்டு நம்மை வாழ வைக்க-
பிறந்த ஆற்றாமை தீர பாசுரம் அருளுகிறார் —அம்பு படுக்கை சம்சாரம் ஸ்ரீ பீஷ்மர் பஞ்ச பாண்டவர் போல்-
ஸ்ரீ ஆழ்வார் நமக்கு அருள-இங்கு வைக்கலாம் படி அல்ல இவர் த்வரை–இது தாழ்ந்தது என்று அறிந்த ஸ்ரீ ஆழ்வாரை கொண்டே பாட வைத்து –
இருபது தடவை இனி இனி கூப்பிட வைத்தார்-பல நீ காட்டி-குண அனுபவம் இங்கே கொடுத்து திவ்ய தேசம் காட்டி-தேகம் தோஷம் –
அங்கே போய் அனுபவம் கேட்க வேண்டாம் படி அனுபவம் அதிகம் இங்கே காட்டி–அவற்றை அந்ய பரராய் அனுபவிக்கிறார்-
அந்தமில் பேரின்பம் அடைய துடிப்பது
நமது குணாநுபவம் செய்ய என்று அறிந்து கொண்டு
அவை எல்லாம் இங்கேயே காட்டி அருள
இங்கேயே பண்ணிக் களித்தாராய்
அந்த அனுபவம் உள்ளடங்காமல்
புற வெள்ளம் இட்டுப் பெரு வெள்ளம் இட்டு பிரபந்தங்களாக பெருகி
லோகம் எல்லாம் உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி
தனது ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் காட்டிக் கொடுக்க
அவனது
மேன்மையையும்
நீர்மையையும்
வடிவு அழகையும்
ஏழு பாசுரங்களாலே
அருளிச் செய்கிறார் –
————————————————————————–
திரு மேனி அழகை வர்ணிக்கிறார்-நேராக அருள சக்தி இல்லை ஆழ்வாருக்கு ..
உதாரணம் வேறு சொல்லி–மரகத பச்சை மலை வர்ணிக்கிறார்–
ஸ்வரூப ரூப குணங்கள் அடைவு-நேராக உருவம் அருளுகிறார்-
நேர் நேர் கொடு காண முடியாத படி முகத்தில் அலை எரிவதாலே –அச்சோ ஒருவர் அழிகிய வா–
கிண்ணகத்தில் இறங்குவார் போல-உபமானம் மூலம் அருள–ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்–ஓர் அளவுக்கு உபமானம்–இழிகிறார் –
அதிலும் நேர் நேர் கொடு இன்றி-மரகத மலை உடன் சேர்த்து–சூர்யன் சந்திரன் சூட்டி ,பவளம் வைத்து சேர்த்து -நஷத்ரம் ஒட்டி.
மேகம் கொண்டு கட்டி-செய்ய முடியாத ஒன்றை –சிஷ்டித்து கொண்டு இருக்கிறார்–ஒப்பனை பண்ணி
உருவம் விட்டு உபமானம்-பச்சை மா மாலை போல் மேனி பவள வாய் கமல செம்கண் பாசுரம்-பாலின் நீர்மை பாசுரம்-போலே-
செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர்
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செவ்வாய்
திகழ பசும் சோதி மரகத குன்றம்
கடலோன் கை மிசை கண் வளர்வது போல்
பீதக ஆடை முடி பூண் முதலா
மேதகு பல் கலன் அணிந்து சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப மீது இட்டு
பச்சை மேனி மிக பகைப்ப
நச்சு வினை கவர் தலை அரவின் அமளி ஏறி
எரி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கை தொழ கிடந்த
தாமரை வுந்தி தனி பெரு நாயக
மூ வுலகு அளந்த சேவடியோயே –1-
————————————————————
திரு மேனி -அனுபவித்தார் முன்பு -அடுத்து அதில் முக்ய அங்கம்-திரு அடி -அடைய படைய வேண்டிய இடம்-சுயம் பிரயோஜனம்-சேவடியோயே
-சொல் நிரம்பி உள்ளம் முழுவதும் தொடர்கிறார் இதில்–
உபாயம் உபேயம்– பிராபகம் பிராப்யம் -பக்தி கொண்டு மோஷம் -இல்லாமல் பக்தியே உபாயம் உபேயம்-
——————————————————–
ஆதித்ய வர்ணம் தமஸ் பரஸ்தாத் தேயம்-தியானத்துக்கு வஸ்து பற்றி முன்பு சொன்னார்-தேய வஸ்துவின் விக்ரக வைலஷண்யம்-
அயனாய ந அந்ய பந்தகா வித்யதே வேதாக மேதம் புருஷம் மகாந்தே -வேதம் அஹம் புருசம் மகாந்தம் வேத அறிந்து கொண்டேன்-
பிரகிருதி விட உயர்ந்து சூர்யன் விட பெரிய -இதையே தமிழ் படுத்தினார் முதல் பாசுரத்தில்-
செஞ்சுடர் பரிதி சூடி–அறிவதால் ஒன்றே மோஷ வழி-திரு மேனி வர்ணித்தார் அந்த தேய வஸ்துவின் பக்கல் பிறக்கும் -பர பக்தி முதல் பரம பக்தி ஈறாக
நாம் கீழே இருக்கும் -பரபக்தி அடையவே பல தூரம்-பந்து பொருக்கி போடுவாரை வெளியில் இருந்து பார்த்து இருக்கிறோம்
ஞான தர்சன பிராப்தி அவஸ்தைகள்–பக்தாது அனந்யா சகாயா -அஹம் ஏவம் ஞாதும் த்ரஷ்ட்டும் பிரவேஷ்டும்-அடைய -பிராப்ய தசை மோஷம்-
பர பக்தி அறியும் தசை-ஞானம் ஏற்பட்டதும் பயம் விலகும்-தட தட சப்தம் கேட்டு பயந்து தென்னம் மட்டை விழுந்தது அறிந்ததும் பயம் போகும் போல –
அறிவு முக்கியம்–ஞானம் பிரமம் பற்றி-ரஷிக்க அவன் இருக்கிறான் என்று அறிந்து–பயம் போகும்-சேர்ந்து இருந்தால் சுகம் பிரிந்தால் துக்கம் –
பர பக்தி நிலை/ சேர முயற்சி எடுக்கும் நிலை/அடுத்து சேர்ந்து ஆனந்திக்க –
மூன்று முதல் ஆழ்வார்கள் இந்த மூன்றையும்-காட்ட-பிராப்ய அந்தர்கதி–ஆனந்தமே பயன்-தத் விஷய பக்தியே அமையும்-
வடி அழகு/மேன்மை-தேவர் குழாம் தொழ இருந்த /எளிமை மூவடி அளந்த சேவடி-நம்மை தீண்ட -மூன்றையும் முதல் பாசுரத்தில் காட்டினார்-
தாப த்ர்யத்தால் கொதிக்கும் தலையும் தாமரை போன்ற திருஅடி-தேவிமாரும் கூசி பிடிக்கும் மெல் அடி-நீர்மை
கர்ம ஞான யோகம் செய்து பக்தி யோகம் கிட்டும்–சு தர்ம ஞான சாதனம்–
நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் -குளித்து மூன்று அனலை ஓம்பும் -ஒழித்திட்டேன் –
லோக விக்ராந்த சரணவ் சரணம்-கர்ம ஞானம் இன்றி பக்தி கிட்டியதே-
திரு மேனி குண அனுபவமே பக்தி கொடுத்ததே–கர்ம ஞான ஸ்தானம் போல் இவை நிற்க–
உபாயம்-அவன் திரு மேனி குண அனுபவம் தான் என்கிறார்
சரணா கதி–நீயே உபாயம்–பக்தி அடைகிறோம்–பக்தி உபாயம் கொண்டு அவனை அடைவது சாதனம் உபாயாந்தரம்–
அவனை அனுபவித்து பக்தி பெறுவோம்-சுலபமான உபாயம்-மாம் ஏக சரணம் விரஜ–சர்வ தர்மான் பரித்யஜ்ய-அவனே தர்மமாக பற்றி-
மற்றவை தர்மம் இல்லை -அவன் திரு உள்ள ப்ரீதி ஏற்படுத்துவதே புண்யம்-பக்தி சாதனம் இல்லை-பிராப்யம் தான்-
அவ் அருகு இல்லாதா பிராப்யம்-பக்திக்கு மேம் பட்ட பிராப்யம் வேறு இல்லை..
பர பக்தி ஆதிகள் உத்தேசம்-ஞான கர்ம ஸ்தானம்– இனி அவன் திரு அடிகள் தலையால் தரிப்பதை அருளுகிறார்-
திரு அடியை தலையால் சூடுவதே வேண்டும்
உலகு படைத்து உண்டான் எந்தை–உண்டு ரஷித்தான் என் ஸ்வாமி-
அறை கழல் சப்திக்கும் -நடந்தும் ஓடியும் ரஷிக்க வருகிற ஓசை–
தென் கலையும் வட கலையும் திவழ்ந்த நாவர்-வேதமும் திரு வாய் மொழி
சுடர் பூம் தாமரை-போன்ற –உலகம் தாவி வையம் கொண்ட தடம் தாமரை போல்-அடிகள் என்று வருவித்து கொள்ள வேண்டும்
உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல்
சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆர்
உயிர் உருகி யுக்க நேரிய காதல்
அன்பில் இன்பீன் தேறல் அமுத
வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருள்க்கு
அசைவோர் அசைக திரு வோடு மருவிய
இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம்
மூன்றினோடு நல் வீடு பெறினும்
கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே ?-2-
————————
தான் நினைத்த படி நடத்த வல்லவனே —வணங்கு தோன்று புகழ் உடையவன்–இவன் ஆணை பொய் ஆகாதபடி-
தெய்வம் மூவர்-பிரம்மா ருத்ரன் இந்த்ரன்
இனி தேவர்க்கு உதவி பாற் கடல் கடைந்த விருத்தாந்தம் அருளுகிறார்
தலை பக்கம் பிடிக்க தேவர் இடம் சொல்லி கொடுக்க அசுரர் அதை கேட்டு பெற்றார்கள்-ஆயாச பட வைத்தான்-
மோகினி அவதாரம் கொடுத்து-பலம் குறைந்த தேவர்களுக்கு முதலில் கொடுக்க -அழகில் மயங்கி-இருக்க –
ராகு கேது-தலை அறுபட்டு-கிரகணம்
தன் கார்யம்-அமுதில் வரும் பெண் அமுதம் கொண்டு உகந்த –பெம்மான்–
நீள் நாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ கடலை கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மான்-கொடுத்து உகந்தான் இல்லை–
ஆயிரம் தோளால் அலை கடல்/மந்தரம் வாசுகி அந்தர் ஆத்மா /கூர்ம/ கை கொண்டு மேல் அழுத்தி –
இவனே கடைந்தான்/அகலம்-திரு மார்பு-சுடர் விளங்கு-கடையும் காலத்தில் திரு மார்பு ஆபரணம் அசைய அதற்க்கு பாடுகிறார்-
அடியவர்க்கு இனி நாம் அடியவர் ஆக இசைய வேண்டும்–துர் லபம் கொல் –
எப் பொழுதும் கல்ப காலம் -வடி அழகை முதலில் அனுபவித்து-
பக்தியே அவனை பெற்று அனுபவிப்பதை விட ஏற்றம் என்றார் அடுத்து –
இப் பாட்டில் பக்தி பண்ணும் விஷய எல்லை –யார் வரைக்கும்- அவனில் தொடக்கி ததீய சேஷத்வம் வரை செல்வதை-
அடியார் அடியார்–அடியோங்களே –சப்த பர்வ ஏழு தடவை அருளினாரே–மதுர கவி ஆழ்வார் நிலைமை பெற பெறுவோம்
சேஷத்வ காஷ்ட்டை –திரி தந்தாகிலும் தேவ பிரான் உடை கரிய திருமேனி காண்பான்
தேவு மற்று அறியேன்–நழுவினாலும் கண்ணன் மடியில் விழுவார்-சூஷ்மம்—முதல்வன்-அடை மொழி-
குறிப்பில் கொண்டு நெறிப் பட உலகம்
மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை
மெய் பெற நடாய தெய்வம் மூவரில்
முதல்வனாகி சுடர் விளங்க கலத்து
வரை புரை திரை பொர பெரு வரை வெருவர
உரு முர வொலி மலி நளிர் கடல் பட வர
வர கடல் தடவரை சுழற்றிய தனி மா
தெய்வத்து அடியவர்க்கு இனிதாமாள் ஆகவே
இசையும் கொல் ஊழி தோறு ஊழி ஓவாதே –3–
————————–
ததீய சேஷத்வம் -அடியவர் கால ஷேபம் எப் படி பரிமாற்றம்-நித்ய அனுஷ்டானம் என்ன-
வாழ்க்கை நடை முறை-வாழிய என்று பல்லாண்டு பாடியே காலம் போக்குவார் சம்சாரி ஆத்ம சொரூபம் இது ஒன்றே –
ஆண்டு /பல ஆண்டு நூறு ஆயிரம் கோடி-இவர் ஊழி ஆரம்பித்து 43 லஷம் வர்ஷம் சதுர யுகம்
1000 சதுர யுகம் பகல் இரட்டிப்பிது ஒரு நாள் வருஷம் 100 வருஷம் -ஊழி ஆரம்பித்து -பல் ஊழி
நூறு ஊழி ஆயிரம் ஊழி கோடி ஊழி -வினை சொல் இன்றி சேவடி செவ்வி திரு காப்பு-பல்லாண்டு சொல்லி முடிந்தது எண்ணம் வர வில்லை-
பிரிவின்றி பல்லாண்டு என்று இருப்பார்-கல்பம் தோறும் நித்ய அக்நி கோதரம் போல் –ஆக்க ஒண்ணாது–
ஓவாது விடாமல்-ஷணம் பொழுது கூட –வாழிய என்று –
சர்வேச்வரனின் சேஷத்வம் உபக்ரமித்து ததீய சேஷத்வம் கிட்டி அதை கொண்டு அவன் திரு அடிகளுக்கு பல்லாண்டு —
அவன் திரு அடி தான் பக்தர்கள்–ஆத்மா அவன் உடல் பக்தர்கள்..யாம்-ஆயுர் ஆசாச்தே –
ஆயுளை கேட்டு இருந்த -பார்த்தது எல்லாம் எனக்கு -தவிர்ந்து-தொழ -மங்களா சாசனம் பண்ணுவது-
ஊழி தோற் ஊழி ஓவாது வாழிய
வென்று யாம் தொழ இசையும் கொல்?
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல் வரும் பெரும் பாழ் காலத்து இரும் பொருள்க்கு
எல்லாம் அரும் பெறல் தனி வித்து ஒரு தான்
ஆகி தெய்வ நான் முக கொழு முளை
ஈன்று முக் கண் ஈசனோடு தேவு பல நுதலி
மூ உலகம் விளைத்த உந்தி
மாய கடவுள் மா முதல் அடியே -4-
——————
போற்றி-ஆறு தடவை–ஆறு விருத்தாந்தம்-உலகம் அளந்த அடிக்கு பல்லாண்டு இதில்–
நெடியோய்-உனக்கு அல்லது அடியதோ உலகே —இவர் தோற்ற துறை இது–
மா முதல் அடி போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி
மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது
ஓன்று விண் செலீ இ நான் முகப்பு தேன்
நாடு வியந்து உவப்ப வானவர் முறை முறை
வழி பட நெறீ இ தாமரை காடு
மலர்க் கண்ணொடு கனி வாய் உடையது
மாய் இரு நாயிறு ஆயிரம் மலர்ந்தன்ன
கற்பகக காவு பற்பல வன்ன
முடி தோள் ஆயிரம் தழைத்த
நெடியோய் கல்லது அடியதோ வுலகே ?–5-
—————————————————-
பர துக்கம் -ஆழ்வார் பொறுக்க மாட்டாதே ஒ !ஒ! என்று கூப்பிடுகிறார் —காலம்பெற – சீக்கிரம்
கண்ணன் என் ஓக்கலையில் ஆனானே –அந்த தேச வார்த்தை ஆழ்வார் – –
ஒ! ஒ! உலகினது இயலவே ஈன்றோள் இருக்க
மணை நீர் ஆட்டி படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து
அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும்
கடவுள் நிற்ப புடை பல தானறி
தெய்வம் பேணுதல் தனாது
புல் அறிவாண்மை பொருந்தக் காட்டி
கொல்வன முதலா அல்லன முயலும்
இனைய செய்கை இன்பு துன்பு அளி
தொல் மா மாயப் பிறவி யுள் நீங்கா
பல் மா மாயத்து அழுந்து மா நளிர்ந்தே –6-
————————
ரிக் வேத சமம் திரு விருத்தம் /யஜுர் வேத திரு வாசிரியம் /திருவாய் மொழி -சாம வேதம் /
பெரிய திரு அந்தாதி -அதர்வண வேதம்
அங்கம் -இரும் தமிழ் நூல்புலவன் பனுவல் ஆறும் –உப அங்கம் மற்ற எண்மர் நல மாலைகளும்-
திரு மேனி மேன்மை எளிமை முதல் பாசுரம்
திரு அடி பக்தியே பிராப்தி இரண்டாம் பாசுரம்
ததீய சேஷத்வம் மூன்றாம் பாசுரம்
அடியார் யாத்ரை மங்களாசாசனம் நான்காம் பாசுரம்
திரு விக்ரமன் அடிக்கே மங்களா சாசனம் ஐந்தாம் பாசுரம்
உலோகர் இயற்கை நொந்து ஆறாம் பாசுரம்
தம்மை இப்படி விலஷணம் ஆக்கிய பேற்றை அருளுகிறார் இதில்-
நளிர் மதி சடையனும் நான் முக கடவுளும்
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை வுலகமும் யாவரும் அகப்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும்
மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒரு பொருள் புறப் பாடின்றி முழுவதும்
அகப் படக் கரந்து ஓர் ஆல் இலை சேர்ந்த எம்
பெரு மா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே ?–7
——————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply