பகவத் விஷயம் காலஷேபம் -147- திருவாய்மொழி – -7-3-1….7-3-5–ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்–

மேல் திருவாய்மொழியில், ‘இட்ட கால் இட்ட கை’ என்கிறபடியே, இவள் மோகித்துக் கிடக்க,
இவளுக்கு முன்னே தோழிமாரும் தரைப்பட, திருத் தாயார் ஒருத்தியும் இவள் நிலையை நினைந்து
அருகே இருந்து கூப்பிட்டுப் போருமதும் தவிர இப் பெண்பிள்ளை தானே எழுந்திருந்து கால் நடை தந்து போமளவாய் விழுந்தது.

அதற்கு அடி:
‘பற்றிலார் பற்ற நின்றானே’ என்று பெரிய பெருமாளுடைய பற்றிலார் பற்ற நிற்கும் தன்மை தொடக்கமான,
இவளுக்குப் பற்றாசான குணங்களையும் அழகு முதலான விக்கிரஹ குணங்களையும்
இவள் தான் வாய் வெருவியும் திருத்தாயார் சொல்லவும் கேட்டு அதனாலே தரித்தாள்.
போன உயிரை மீட்கவற்றாயன்றோ குணங்களின் தன்மை இருப்பது?

இவ்விடத்திலே,
‘இத: பரம் மிருத ஸஞ்ஜீவநீம் ராம வ்ருத்தாந்த கதம் ஆஹ’-என்ற
ஸஹஸ்ரநாம பாஷ்ய வாக்கியத்தை நினைப்பது.

‘அவித்த ஜம்புலத்தவ ராதியாயுள
புவித்தலை யுயிரெலாம் இராமன் பொன் முடி
கவிக்கும் என்றுரைக்கவே களித்த தாலது
செவிப்புலம் நுகர்வதோர் தெய்வத் தேன்கொலாம்!’-என்பது, கம்பராமாயணம், அயோத்தியாகாண்டம், ஆற்றுப்படலம், 23.

மேல் திருவாய்மொழியில் பிறந்த மோகமுந்தெளிந்து பிரிவின் வியசனமும் நினைக்க வல்லளாய்,
பின்பு, ‘அவனைக் கிட்டியல்லது நில்லேன்’ என்னும்படியான ஆற்றாமையும் பிறந்து, அது பெறாமையாலே துக்கமுடையவளாக,
இவள் விடாய்கு ஈடாகும்படி அணித்தாகத் தென்திருப்பேரெயில் வீற்றிருந்த மகர நெடுங்குழைக்காதனுடைய புன்சிரிப்பு
கடைக்கண் நோக்கம் முதலியவைகளாலே கவரப்பட்ட மனத்தை யுடையவளாய்,
அவன் இருந்து இடத்து ஏறப்போக வேணும்,’ என்று ஒருப்பட,

பழையபடியே தோழிமாரும் தாய்மாரும் அவளைச் சூழப்போந்து,
உனக்கு இத்துணை அளவு கடந்த ஈடுபாடு ஆகாது: நமக்கு இது பழியாய் விளையும்,’ என்ன,

நீங்கள் சொல்லுகிறவற்றால் பிரயோஜனம் உண்டாக மாட்டாது. நான் அவன் பக்கலிலே சென்ற மனத்தை யுடையவள் ஆனேன்;
ஆன பின்பு நானே போனேன் ஆகாமே நீங்கள் என்னோடு உடன்பட்டு அங்கே கொடு போய்ச் சேர்க்கப் பாருங்கோள்,’
என்று தனக்குப் பிறந்த துணிவை அவர்களுக்கு அறிவித்துச் சொல்லுகிறாளாய் இருக்கிறது.

அங்ஙன் அன்றிக்கே,
பிள்ளான் சாஷாத் அனுபவம் பெற்றாள் என்று கொண்டு நிர்வாகம் –
‘முகில் வண்ணன் அடியே இவள் அணுகி அடைந்தனள்,’ என்றது ஆகையாலே,
‘நான் அங்கும் இராகவனுடைய வீட்டில் பன்னிரண்டு வருடங்கள் முடிய மனிதர்களுக்குரிய போகத்தை அனுபவித்தேன்,’ என்கிறபடியே,
ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேஸநே
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வ காம ஸம்ருத்திநீ’-என்பது, ஸ்ரீராமா. சுந். 33.17.

பெரிய பெருமாளோடே நெடுங்காலம் பூர்ண ரசமான கலவி உண்டாக,
பிரிந்து கூடா விடில் இரண்டு தலைக்கும் அழிவு வருமளவு ஆயிற்றது.

இனி, எல்லா அளவிலும் ஒரு நீராகக் கலக்கிறது தர்மிகள் இரண்டும் கூடி அன்றோ?
ஆகையாலே, பிரியா விடில் தர்மியே அழியும் அளவாகப் புக, இவ்வளவில். நாயகனான இவன் இரண்டு தலையும்
ஜீவிக்கப் பார்ப்பான் ஒருவன் ஆகையாலே பிரிவைப் பற்றிப் பேசினான்;

பேச, இவளும் பிரிவில் வாசனை இல்லாதாள் ஒருத்தி ஆகையாலே,
‘கலவியிலே ஒரு வகையோ’ என்று கொண்ட, இவளும் அதற்கு இசைந்தாள்;
இசைய அவனும் வேட்டை நிமித்தமாகப் புறப்பட, இவளும் திரு அணுக்கன் திருவாசல் அளவும் ஒருப்படுத்தி மீண்டாள்:

எல்லா அளவிலும் பிரிவு தன் காரியம் செய்தன்றி நில்லாதே அன்றோ?
பின் இவள் நோவு படப்புக. இதனைக் கண்ட தோழிமாரும் தாய்மாரும், ‘உனக்கு ஒடுகிறது என்?’ என்று கேட்க,
ஸ்ரீஜனகராஜன் திருமகள் காட்டிலே கூடப் போய் அவர் இருந்த இடம் நின்ற இடம் உலாவின இடந்தோறும்
கூட இருந்து அனுபவித்தாற்போலே, நானும் அவன் இருந்த இடத்தே போய்ப் புக்கு அல்லது நில்லேன்,’ என்றாள்;

அதனைக் கேட்ட அவர்கள், ‘உன் தலைமைக்கு இது போராது: நீ சொல்லுகிறது வார்த்தை அன்று,’ என்ன,
அவர்கள், ‘அதற்கு நாங்கள் வழிப்படோம்’ என்ன, ‘ஆகில், நானேயாகிலும் போகை தவிரேன்,’ என்கிறாள் என்று பிள்ளான் பணிப்பர்.

சம்ஸ்லேஷம் -இருந்தால் வேறு சேர்ந்து அனுபவித்த திருவாய்மொழி இருக்க வேண்டுமே –
அதனால் இந்த நிர்வாகம் கொஞ்சம் அஸ்வாரஸ்யம் –

ஸமா த்வாதச தத்ர அஹம்-
இப்போது ஒருவேளை தரிசனமுங்கூட அரிதாம்படி இருக்கிற நான், முன்பு பல காலம் அவரோடே அனுபவிக்கப் பெற்றேன் காண்!
ராகவஸ்ய நிவேசநே-
எங்கள் மாமனாருடைய மாளிகையிலே அவர் தண்ணீர்த் துரும்பு அறுத்துத் தர, நெடுங்காலம் அனுபவித்தேன்
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வ காம ஸம்ருத்திநீ- ‘எல்லாக் காமங்களையும்’ என்கிறபடியே,
‘சோஸ்னுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா’ என்றது, தைத்.- எல்லாம் அனுபவிக்கப் பெற்றேன்.
அப்படியும் அன்றே இங்கு:
‘அரசனே! கல்யாண குணங்கள் பல’ என்கிறபடியே, குணங்கள் இரட்டித்த இடம் அன்றோ இது?
‘பஸவோ ந்ருப கல்யாண குணா:’ என்பது, ஸ்ரீராமா, அயோத். 2:26.

‘ஆக, இதனால் என் சொல்லியவாறோ?’ எனின்,
‘நமக்கு ஐம்புல இன்பங்களினின்றும் இந்திரியங்களை மீட்க ஒண்ணாதவாறு போலே அன்றோ
இவரைப் பகவத் விஷயத்தினின்றும் மீட்க ஒண்ணாதபடி?’ என்பதனைக் கூறியவாறு.
அது கருமம் அடியாக வருகிறது: இது பகவானுடைய திருவருள் அடியாக வருகிறது.

‘திருத் தாயார் பேச்சாக வருமவை, ஆழ்வாருக்குப் பிறந்த நிலை விசேடம்:
தலை மகளாய்ப் பேசுகிறதும், இவர்க்குப் பிறந்தது ஓர் அவஸ்தா விசேடம்:
அங்ஙனம் இருக்க, விலக்குவதும் போவதாகக் கூறுவதும் ஒருவர்க்கே கூடுமோ?’ எனின்,

அவற்றுள், விலகுகின்ற திருத் தாயார் முகத்தாற் சொல்லுகிறது,
ஸ்வரூபமான பிராவண்யம் உபாயத்திற் சேர்ந்தால் செய்வது என்?’என்னுமதற்குச் சொல்லுகிறது;

பெண்பிள்ளை கருத்தாற் சொல்லுகிறது. ‘உபாயம் அவனே யாகில் பிராவண்யம் ஸ்வரூபமாமத்தனை அன்றோ?’ என்று சொல்லுகிறது.

ஆக, இவ்விரண்டு அர்த்தத்தையும் -உபாய அத்யாவ சாயத்தையும் பிராப்ய த்வரையும் இரண்டு முகத்தாலே
ஆழ்வார் தாம் அநுசந்தித்தபடியைச் சொல்லுகிறது.
மோகமும் தெளிந்து தானே கூப்பிட வல்லளான இதுவே, இத் திருவாய்மொழிக்கு ஏற்றம்.-

ஸ்ரீ பேரி-தென் திரு பேரியில்-மஹா லஷ்மி இடத்தை எடுத்துக் கொண்டு பூமா தேவி -தபஸ் -அரவாகி சுமத்தியால் —எயிற்றில் ஏந்தி –
வாயில் விழுங்கி —விராட ஸ்தோத்ரம் -பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால் –
துர்வாசர் -சாபம் -செய்யாளாக-மாறி -ஸ்ரீ பேரம் -திருமேனி கிடைத்தது -தாமிர பரணி தென் கரை
மஸ்த்ய மகர தீர்த்தம் -மகர குண்டலங்கள் -கிடைக்க –
மகர பூஷணரோ-சாபம் தீர்ந்து கரும் பச்சை நிறம் பெற்றாள் -தென் திருப்பேரை
ஸுந்தர்யம் மா நகரில் கோஷிக்கும் -சென்று சேர்வார்க்கு உசாத் துணை அறுத்து -நெஞ்சினாரும் அங்கே ஒழிந்து-
மகர நெடும் குழைக் காதர் –கோஷிக்கும் தொனிகள்- நெஞ்சில் -புள்ளைக் கடாவும் -வேத ஒலியும்-விளையாட்டு ஒலி-

தென் திருப்பேரையில் என்ற திவ்ய தேச திரு நாமம் – தென் திருப்பேரை மருவி உள்ளது
நிகரில் முகில் வண்ணன் பெருமாள் திரு நாமம் –

————————————————————————————————–

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித்
தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!
என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த
வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும்
அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-

முதல் பாட்டில் -அநு பாவ்யமான திவ்ய ஆயுதங்களோடும் திவ்ய அவயவங்களோடும் தன் நெஞ்சிலே பெரிய திருவடியை நடத்தி
பிரகாசிக்கிற ஆகாரத்தாலே ஈடுபட்டு -அவன் இருந்த தென் திருப் பேரையிலே செல்லுகையில்
யுண்டான துணிவைத் தாயாரைக் குறித்துச் சொல்லுகிறாள்-தன் நெஞ்சுக்குள் ஏசல்

அன்னைமீர்காள்!–வாசா மகோசரமான அகவாயில் விகாரம் அறியாதே பெற்றவர்கள் இறே நாம் என்றே
விலக்கத் தேடுகிறவர்களே -நான் ஆசைப்பட்ட படியே –
வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித்–வெளுத்த நிறத்தையும் சுரியையும் யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடு திரு வாழியையும் ஏந்தி
தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!–நான் தளரும்படி அநன்யார்ஹை யாக்கின
தாமரைக் கண்ணை யுடையவன் -தானும் தன் விபூதியும் புகுந்தாலும் இடமுடைத்தான என் நெஞ்சின் உள்ளே
பெரிய திருவடியை தன் அபிநிவேச அநு ரூபமாக நடத்துகிற பிரகாரத்தை நீங்கள் அறிகிறிலிகோள்
என் சொல்லிச் சொல்லுகேன் -இவ்வனுபவத்துக்கு என்ன பாசுரம் இட்டு நான் சொல்லுகேன்
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த-இவ்வளவில் பகவத் அனுபவத்தால் அபரிமித ஸூக ஆர்ணவத்தை யுடைத்தாய்-
என் நெஞ்சுக்குள்ளே பிரகாசிக்கிறவன் தன் மேன்மை தோன்ற இருக்குமிடமாய்
வேத ஒலியும் விழாவொலியும்–அந்த ஆசன சோபையை அனுபவிக்கிறவர்களுடைய வேத கோஷமும்
நிரந்தர உத்சவத்தால் யுண்டான வாத்யாதி கோஷமும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும்–அவனுடைய குண சேஷ்டிதாதிகளைப் போற்றி இட்டுக் கொண்டு
பிள்ளைகள் திரள் விளையாடும் கோஷமும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .அவிச்சின்னமாய் நடக்கும் –
திருப் பேரெயிலே நான் சேருவேன் –

தாய்மார்களே! வெண்ணிறத்தையும் உள் சுரிந்திருத்தலைமை யுடைய ஸ்ரீபாஞ்சசன்யம் என்னும் சங்கோடு
சுதரிசனம் என்னும் சக்கரத்தையும் ஏந்திக் கொண்டு தாமரைக் கண்ணனான எம்பெருமான் என் மனத்திற்குள்ளே
கருடப் பறவைச் செலுத்துகின்ற விதத்தைக் காணுங்கோள்; அவன் தன்மையை என்ன வார்த்தைகளைக் கொண்டு உங்களுக்குச் சொல்லுவேன்!
பேரின்ப வெள்ளத்தை யுடைய எம்பெருமான் எழுந்தருளி யிருக்கின்ற, வேதங்களின் ஒலியும் திருவிழாக்களின் ஒலியும் குழந்தைக் கூட்டங்கள்
விளையாடுகிற விளையாட்டின் ஒலியும் நீங்காமல் இருக்கின்ற திருப்பேரெயில் என்ற திவ்விய தேசத்தை நான் அடைவேன் என்கிறாள்.
சுரிதல் – உள்ளே சுழித்திருத்தல், கடாவுதல்-ஏறிச் செலுத்தல். காணீர் -காண்கின்றிலீர் என்னலுமாம். வீற்றிருந்த திருப்பேரெயில் என்க.
‘ஒலியும் ஒலியும் விளையாட்டு ஒலியும் அறாத் திருப்பேரெயில்’ என்க.
இத்திருவாய்மொழியில் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

இந்தப் பிராட்டி, சொற்களால் சொல்ல முடியாதபடி தனக்கு உண்டான வியசனத்தாலே,
தென்திருப்பேரெயில் போக வேணும் என்று தனக்குப் பிறந்த நிலையை வினவுகிற திருத் தாய்மார்க்குச் சொல்லுகிறாள்.

வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தி –
‘தவள ஒண் சங்கு சக்கரம்’ -திருவாய். 6. 5:1.-என்றும்,
‘கூரார் ஆழி வெண் சங்கு’ திருவாய். 6. 9:1.-என்றும்,
‘சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்’ -7. 2:1.-என்றும் கையும் திருவாழியுமான அழகு
கைவிடாதே இவரைத் தொடருகிறபடி.
முகில் வண்ணன் அன்றோ? அந்த நிறத்துக்குப் பரபாகமான வெளுப்பையும் சுரியையுமுடைத்தான ஸ்ரீபாஞ்சஜன்யத்தையும்,
அங்ஙனம் ஒரு விசேடணம் இட்டுச் சொல்ல வேண்டாதபடியான அழகையுடைத்தான திருவாழியையும் ஏந்தி,

தாமரைக் கண்ணன்-
‘தாமரைக் கண் என்றே தளரும்’ என்றது. பின் நாட்டுகிறபடி.
திருமேனிக்குத் திவ்விய ஆயுதங்கள் பிரகாசகமாய் இருக்குமாறு போலே,
ஆத்ம குணங்களுக்குத் திருக் கண்கள் பிரகாசகமாய் இருக்கிறபடி. என்றது,
‘அக வாயில் தண்ணளி எல்லாம் கண் வழியே அன்றோ தோற்றுவது?’ என்றபடி.

பகைவார்களுக்குத் திவ்விய ஆயுதங்களோடு ஒக்கத் திருக் கண்களும்
விரோதியாய்த் தோற்றுமாறு போலே அன்றோ,-அழல விழித்தான் அச்சோ அச்சோ
அனுகூலர்க்குத் திருக் கண்களைப் போன்று திவ்விய ஆயுதங்களும் அழகுக்கு உடலாகத் தோற்றுகிறபடி?

திருக் கண்களோடே திவ்விய ஆயுதங்களையும் திவ்விய ஆயுதங்களோடே திருக் கண்களையும் சேர்த்து அனுபவிப்பர்கள்.
தாமரை சூரிய சந்திரன் பார்த்து -சேர்ந்தே அருளிச் செய்வார் -நாடு பிடிக்க பார்க்க ஆழ்வார்கள் தடை -என்றுமாம் –
ஆயுதங்களோடே திருக் கண்களைக் கூட்டுகிறது, தோற்பித்தபடிக்கு;
‘உனக்குத் தோற்றோம்’ என்னப் பண்ணுமன்றோ? கண்களோடு திவ்விய ஆயுதங்களைக் கூட்டுகிறது அழகுக்கு.
ஜிதந்தே புண்டரீகாஷா –
செய்ய கண்ணா செஞ்சுடர் ஆழி-திருக் கண்களை சொல்லியும் ஆழ்வார்களை சொல்லுவதும் உண்டே

இவ் விடத்தே நிலாத்துக் குறிப் பகவர் வார்த்தையை அருளிச் செய்வர் சீயர். –
ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு இரண்டு தோள்களா நான்கு தோள்களா —
கைக்கு ஆழ்வார்கள் ஆபரணமாய் இருக்குமாறு போலே ஆயிற்று, முகத்துக்கு திருக் கண்கள் ஆபரணமாய் இருக்கும்படியும்.

‘திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன்-செருக்கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன்,
என் ஆழி வண்ணன் பால் இன்று’-என்று
வடிவழகைப் போன்று திவ்விய ஆயுதங்களும் ஆபரணமாய் அழகியனவாயன்றோ இருப்பன?
ஆழ்வார்கள் தாம் அவனைக் கை செய்திருக்கையாலே ஆபரண கோடியிலே இருப்பார்கள்.
கை செய்தல் –- அலங்கரித்தல்.-சகாயம் செய்தல் -யுத்தம் செய்தல்

என் நெஞ்சினூடே-
தங்கள் நெஞ்சல் இல்லாமையாலே இது கூடாது என்று இருப்பார்கள் அன்றோ?
ஆதலின், ‘என் நெஞ்சினூடே’ என்கிறாள்.

என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்-
‘இவர்க்கு மயர்வு அற மதிநலம் அருளி
‘நெஞ்சமே நீள் நகர்’ திருவாய்மொழி-3. 8:2. -என்னும்படி யன்றோ திருத்திற்று?’
ஒரு திரிபாத் விபூதியிலும் இடம் உடைத்தாயிருக்கை. -விசுவஸ்ய ஆய தனம் மஹத் –
திருவடி திருத் தோளில் ஏறி அங்கு உள்ளார்க்கு உஜ்ஜீவனமாகச் சாரிகை வந்து காட்டுமாறு போலே,
இவர் நெஞ்சினுள்ளே தடை இல்லாமல் அழகு செண்டு -விளையாட்டு வையாளி -ஏறுகிறபடி.
நெஞ்சினூடே-‘அகவாயில் உள்ளது கண்களுக்குத் தெரியாதோ?’ என்று இருக்கிறார்கள் ஆயிற்று இவர்கள்.

‘குற்றம் அற்றவனான அந்தப் பரமாத்துமாவானவன் உன்னுடைய உடலில் நிறைந்து நிற்கின்றான்,’ என்னுமாறு போலே.
நிர்குண: பரமாத்மாஸென தேஹம் தே வ்யாப்ய திஷ்ட்டதி’-என்பது, பாரதம், ஆரண்
‘நெஞ்சில் இல்லையாகில் நானும் இல்லை என்று நினைத்து இருக்கலாயிற்றுக் காண்’ என்று இருக்கிறாள் இவள்.

ஒரு வாசத் தடத்தில் அன்னங்கள் சக்கர வாகங்களை போன்ற ஆழ்வார்களும்,
காடு பட அலர்ந்த தாமரை போலே இருக்கிற திவ்விய அவயவங்களும்,
அத் தடாகத்தில் நீரும் இலையும் போலே இருக்கிற திருமேனியுமாய்,
அதனைக் கினிய -கபளீகரிக்க.-ஒரு மேரு தாங்கினாற்போலே இருக்கிற பெரிய திருவடியோடே கூட
இவர் திருவுள்ளத்தே உலாவுகிறபடி.
இப்படியே அன்றோ அநுகூலரோடு பரிமாறும்படி?

‘மாயக் கூத்தா! வாமனா! வினையேன் கண்ணா! கண்கைகால்
தூய செய்ய மலர்களாச் சோதிச் செவ்வாய் முகிழதாகச்
சாயல் சாமத் திருமேனித் தண்பா சடையா தாமரைநீள்
வாசத் தடம் போல் வருவானே ! ஒருநாள் காண வாராயே.’என்பது, திருவாய். 8. 5;1.

கரு முகில் தாமரைக் காடு பூத்து நீடு
இரு சுடர் இரு புறத் தேந்தி ஏடலர்த்
திரு வொடும் பொலிய வொர் செம் பொற் குன்றின் மேல்
வருவ போற் கழலுன் மேல் வந்து தோன்றினான்.-என்பது, கம்பராமா. திருவவதாரப். 13.

நஞ்சீயர் கோயிலுக்கு எழுந்தருளா நிற்க, வழியிலே திருக் குருகைப் பிரான் பிள்ளானைக் கண்டு
‘‘ஈஸ்வரனுக்கு ஸ்வரூப வியாப்தியேயோ, விக்கிரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க,
பாஷ்யகாரர் தோற்ற அருளிச் செய்து கொண்டு போந்தது, ஸ்வரூப வியாப்தியாய் இருக்கும்;
ஆகிலும், எம்பார் ஒரு நாள் ‘உபாசகர்கட்கு அநுக்கிரஹம் செய்தற்பொருட்டு அடியார்களுடைய நெஞ்சிலே
விக்கிரஹத்தோட வியாபித்திருக்கும்’ என்று அருளிச் செய்யக் கேட்டேன்’ என்று பணித்தான்;’
‘மனமாகிய குகையில் வசிப்பவர்’ என்றும்,
‘மனத்தில் இருப்பவரும் புராண புருஷரும்’ என்றும்
,குஹாயம்’ தைத். ஆரண். கஹ்வரேஷ்டம் புராணம்’, கடோபநிஷத்.

‘அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி
வந்து புகுந்து’ பெரியாழ்வார் திருமொழி, 5. 2:10.-என்றும்,
‘எவர்களுடைய மனத்தில் கரு நெய்தல் போன்ற நிறத்தை யுடைய பகவான் நன்கு எழுந்தருளி இருக்கிறாரோ’ என்றும்,
‘ஏஷாம் இந்தீவர ஸ்யாம: ஹ்ருதயே ஸூப்ரதிஷ்டித;’என்பது, ஸ்ரீராமா.-
‘என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற’ என்றும் வருவனவற்றைக் காண்க.

தியானத்திற்குப் பற்றுக்கோடு தெரிவிக்கும் இடங்களிலும் ‘தன்னால் விரும்பப்படுகிறவனுக்கு
இந்தப் பரமாத்துமா தன் ஸ்வரூபத்தைக் காட்டுகிறான்’ என்கிறபடியே
தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்’-என்பது, முண்டகோபிநிடதம்.. 3. 2:3.
அவ்வடிவே ஆயிற்றுத் தியானிக்கத் தக்கதாகச் சொல்லுகிறது;
பின்பு ‘இந்த ஆலிங்கமானது எல்லாப் பொருளுக்கும் சமானமாகக் கடவது,’ என்று கொடுப்பது அவ்வடிவே யாயிற்று
ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத:’-என்பது, ஸ்ரீராமா.யுத். 1:13.

புறம்புள்ளார் சொன்னபடி சொல்லுகிறார்கள்; நம் ஆழ்வார்கள் போன வழி இதற்கு மேற்பட இல்லை:
‘இதற்கும் உள்ளே ஒன்று உண்டு’ என்று சொல்லுகிறவர்கள்,
ஸ்வரூபத்தின் உண்மை சொல்லுகிறார்களித்தனை;
விக்கிரஹம் இல்லை என்று அன்று.

புள்ளைக் கடா நின்ற-
‘அகவாயில் நின்று சுழிக்கு மத்தனையோ?’ என்று அவன் விரைந்து வடிம்பு இட்டுத் தாக்க
‘ஓம் காண்! நீ அறிந்தாயோ?’ என்று தூண்டி மீளா நிற்கும்;
‘அறிவுள்ளவனுடைய’ என்கிறபடியே, பக்ஷபாதத்தோடே சேர்க்கையிலே அன்றோ அவனுக்கும் பணி? –
ஆழ்வார் கட்சியில் சேர்ந்து -ஸ்வ தந்த்ரன் கட்சியில் இல்லை என்றபடி

கடாகின்ற –
நடந்து போனதாய் மறக்கிறீர்கள் அன்று; இனி வருவதனை உபதேசிக்கிறது அன்று;
இப்பொழுது நடப்பதற்கு உபதேசம் வேணுமோ? -பூத பவ்ய இல்லை வர்த்தமானம் –

காணீர் –
காண்கின்றிலீர். இப்பொழுது நடக்கிறதும் காணாமலே ஒழிகிறது தடுக்கின்ற நிர்பந்தத்தாலே அன்றோ?
உங்களுக்குக் குர கோஷம் கேட்கிறது இல்லையோ? பிரசித்தமான பொருளை உபதேசிக்க வேண்டுவதே.

காணீர்-
உங்களுக்குக் கண்களும் செவிகளும் இன்றிக்கே இருந்தோ தடுக்கிறது?
என்னைப் போலே உட் கண்ணாலே காணீர்கோள்!

‘நாங்கள் கண்டிலோம்; கண்ட நீ சொல்லிக் காணாய்!’ என்றார்கள்; என்ன, சொல்லுகிறாள் மேல்:

என் சொல்லிச் சொல்லுகேன் –
எனக்குச் சொல்லலாவது இல்லை! என்ன பாசுரமிட்டு எதனைச் சொல்லுவது?
உங்கள் கண்களுக்கு விஷயம் ஆகாதவாறு போலே என் வாக்கிற்கும் விஷயம் ஆகிறது இல்லை.
இவர்க்கு நெஞ்சு நிறைந்தது வாய் கொள்ளுகிறது இல்லை காணும்!

என் சொல்லிச் சொல்லுகேன் –
நான் வலிமை குன்றியவளாக இருப்பதனாலே சொல்ல மாட்டேன்.
விஷயம் இவ்வளவு என்று சொல்ல முடியாமையாலே சொல்லி முடிக்கப் போகாது;
எண்ணிப் பார்த்தற்கு உங்களுக்குப் பரிகரம் இல்லாமையாலே சொல்லத் தான் வேண்டா.

அன்னைமீர்காள்-
அறிந்த விஷயங்கொண்டு ஒருவருக்கு ஒருவர் அறிவித்துக் கொள்ளல் செய்யலாம் அன்றோ
எனக்கு ஒத்தவர்கள் ஆனிர்கோளாகில்?

என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள் –
எனக்கு ஓடுகிற வியசனத்துக்குப் பாசுரம் இல்லை;
நிலையை அறியும் ஞானம் இன்றிக்கே பழமை கொண்டாடுகின்றீர்கோள் இத்தனை யன்றோ?
விலக்குவதற்கு என்னைப் பின்பற்றி வருகின்றவர்களாமத்தனையோ வேண்டுவது?

‘எங்களுக்குக் காணவும் கேட்கவும் கண்ணும் செவியும் இல்லையாகில், நீதான் செய்யப் பார்த்தது என்?’ என்ன,

‘ஹிதம் சொல்லி மீட்க நினைப்பர் இல்லாத ஊரிலே போய்ப் புகுமித்தனை அன்றோ?’ என்கிறாள் –
பிரியம் சொல்லுவார் தேசம் புகப் போகிறேன் –
‘முத்தன் ஜனங்களின் மத்தியில் உள்ள இந்தச் சரீரத்தை நினைப்பது இல்லை,’ என்கிறபடியே,
நோபஜனம் ஸ்மரந் இதம் சரீரம்’-சாந்தோக்யம். 8. 12:3. பிரிந்தவர்கள் நினைக்க ஒட்டாத தேசம் அன்றோ?

வெள்ளம் சுகமவன்-
இன்ப வெள்ளத்தை யுடையவன். என்றது,
‘பிரிந்திருக்கும் நிலையிலும் கலந்திருக்கும் காலத்தில் உண்டாகிற பேரின்பம் மாறாதவன்’ என்றபடி.
‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின்,
‘பிரிவிலும் அரையாறு படாதபடி காணும் கலவியில்
அவன் தேக்கின பேரின்பம் இருந்தபடி’ என்பதனைச் சொல்லியபடி.
‘வெள்ளை’ என்பது பாடமான போது, மறுவற்ற இன்பம் என்று பொருள் கொள்க.

அவன் வீற்றிருந்த –
‘இட்ட கால் இட்ட கையளாய் இருக்கிற இருப்புக்கு எதிர்த் தட்டாயிருக்கிற இருப்பு அன்றோ அது?’ என்றது,
இத் தலையைத் துடிக்க விட்டுத் தன் ஐஸ்வரியம் தோற்ற மேலான சுகத்தோடு இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.
அன்றிக்கே,
இத் தலையைத் தோற்பித்த தன் வெற்றி எல்லாம் அவ் விருப்பிலே தோற்றும்படி இருக்கிறபடி என்னுதல்.

அவன் மெய் மறந்து அப்படி இருந்தால் நாமும் மெய் மறந்திருக்கவோ?-மெய் -வை லக்ஷண்யம் –
நிறைவாளனாய் அவன் செருக்காலே இருந்தால், குறைவாளராய் நோவுபடுகிற நாமும் இருக்கவோ?
அவன் முறை தப்ப நின்றால் நாமும் முறை தப்புமித்தனை அன்றோ?

அவன் வந்து ரஷித்து இருக்க வேண்டும் -தத் தஸ்ய பவேத் -என்று இருப்பது நம் முறை –

பிரிந்தால் முறை பார்த்திருக்கலாம்; விஷயத்துடனே கலந்தோமாகில் அன்றோ நாம் ஆறி இருக்கலாவது?
முறையை அழித்தாகிலும் மடலை எடுத்துக் கொண்டு போமித்தனை அன்றோ?
‘நமக்கே நலம் ஆதலின்’ என்னக் கடவதன்றோ?-பெரிய திருமொழி. 9. 3 : 9.
திருப்புல்லாணி -பாசுரம் அடைய போவது அவனாகில் வழி அல்ல வழியிலும் அடைவோமே –

வேத ஒலியும் –
அவன் நெஞ்சு ஒழிந்து பழம் புணர்ப்புக் கேளா நின்றான் காணும். என்றது,
பண்டு தான் வென்ற வெற்றி மாலைகள் கேட்கையைத் தெரிவித்தபடி.
அதாவது, ‘புண்டரீகாக்ஷனே! உனக்கு வெற்றி’ என்கிற வெற்றி மாலைகளைத் தெரிவித்தபடி.

விழா ஒலியும் –
இவளைத் தோற்பித்ததற்கு நெய்யாடல் போற்றுகிறபடி.

அறா-
தீர்த்தம் கொடுத்த பிற்றை நாளே திருமுளைச் சாத்தா நிற்குமத்தனை.
சமந்தகமணி கைப்பட்ட பின்பு அக்குரூரன் அடுத்து அடுத்து அஸ்வமேதம் செய்தாற் போலே,
அவர்க்கும் அடுத்து அடுத்துத் திருவிழாவாகச் சொல்லுகிறதித்தனை; -ஸ்த்ரீ ரத்னம் -பெண்மணி அன்றோ இவள்?
இவள் இருக்கிற இடம் அன்றோ மங்கள ஒலிகள் மாறிக் கிடக்கிறது?

பிள்ளைக் குழா விளையாட்டு ஒலியும் அறா-
பருவம் நிரம்பி இருக்கச் செய்தே விலகுகிறவர்கள் இருக்கிற ஊரை விட்டு, பருவம் நிரம்புவதற்கு முன்னே
பகவானுடைய அனுபவமே யாத்திரையாகச் செல்லுவார் இருக்கிற ஊரில் போய்ப் புகுமித்தனை என்கிறாள்.
அவ்வூரில் பருவம் நிரம்பாத பிள்ளைகளும் அகப்பட மகர நெடுங்குழைக் காதனுடைய வடிவழகிலே தோற்று, வாய் வெருவா நிற்பர்கள்.

தம்பி வார்த்தை கேட்க்கும் கோஷ்ட்டியில் புகுந்து ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தம்பி வார்த்தை கேட்க்காத தேசம் விலகினால் போலே
‘விளையாடும் இளம் பிள்ளைகளும் வீடுகளின் வாசல்களில் கூட்டங்கூடி ஒருவர்க்கு ஒருவர்
இராம தோத்திர விஷயமான கதைகளையே செய்தார்கள்’ என்கிறபடியே.
‘பாலா அபி க்ரீடமாநா க்ருஹ த்வாரேஷூ ஸங்கஸ:
ராமாபிஷடவ ஸம்யுக்தா: ச க்ருரேவ மித: கதா:-என்பது, ஸ்ரீராமா. அயோத். 6:16.

‘ராமோ ராமோ ராம இதி-சோறு சோறு சோறு என்பாரைப் போலே.
ப்ரஜாநாம பவந் கதா:- -ஜனி தர்ம -பிறந்தவர்களுக்கு எல்லாம் பாசுரம் இதுவே.
ராம பூதம் ஜகத் அபூத்-நாடு அடங்க இராமன் ஒருவன் ஆனபடி.

‘நித்திய விபூதியில் பரிமாறக் கடவது இங்கே பரிமாறுகைக்குக் காரணம் என்?’ என்னில்,
ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி-நாடு அடங்கலும் தந்தாமுடைய கர்மங்களின் பலன்களை
அனுபவிக்கப் பெற்றார்கள் இல்லை; இராம பாக்யமே அனுபவித்து விட்டது.’

‘ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவந் கதா:
ராமபூதம் ஜகத்அபூத் ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி’-என்பது, உத்தர ராமாயணம்.

‘நசாக்நிஜம் பயம் கிஞ்சித்-நெருப்பும் சோறு வேக வேண்டிய உஷ்ணத்துக்கு மேற்பட உடைத்தாவது இல்லை.

‘நசாக்நிஜம் பயம் கிஞ்சித் நாப்ஸூ மஜ்ஜந்தி ஜந்தவ:-என்பது, சங்க்ஷேப ராமாயணம், 1:92.

நாப்ஸூ மஜ்ஜந்தி ஜந்தவ:- கொண்டு ஆழக்கடவ தண்ணீர் தானே கொண்டு மிதக்கப் புக்கது இராம சரத்துக்கு அஞ்சி.
பண்டே கை கண்டு இருப்பது ஒன்றே தண்ணீர் தான்.
வேலை வேவ வில் வளைத்தவனை அன்றோ?

திருப்பேரெயில் சேர்வன் நானே-
வென்றார் இருந்த இடத்தே தோற்றார் சென்று விழுமத்தனை அன்றோ?

தாமரைக் கண்ணன் என் நெஞ்சுனூடே அன்றோ?
ஆகையாலே ‘உனக்கு வெற்றி’ என்று சென்று விழுமத்தனையேயாம்.

———————————————————————————————–

நானக் கருங்குழல் தோழிமீர் காள்!
அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்!
நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன்
என் வசம் அன்று இது இராப்பகல் போய்த்
தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ்
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன்
செங்கனி வாயின் திறத்ததுவே.–7-3-2-

அநந்தரம் -நிரவதிகமான பரத்வ ஸுலப்யங்களை யுடையவன் பக்கலிலே சக்தமாய்ப் போன என் நெஞ்சைத்
தகைய மாட்டுகிறிலேன் -என்று தோழிமாரையும் தாய்மாரையும் அயலாரையும் குறித்துச் சொல்லுகிறாள் –

நானக் கருங்குழல் தோழிமீர் காள்! அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்!–பரிமள உத்தரமான கந்த த்ரவ்யத்தாலே-
நானம்–மயிர்க்கு இடும் கந்த த்ரவ்யம் -புனுகு ஆகவுமாம் –
வாசிதமாய் கறுத்த குழலை யுடையவரான தோழிமீர்காள் –
அவர்களோடு என்னோடு வாசியற நியந்திரிகளான அன்னைமீர்காள் –
செய்தி வினவ வந்த அயல் சேரியீர்காள்
நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன்–அதி பிரவணையான நான் என்னிலும் அதிசயித ப்ராவண்யத்தை யுடைத்தாய்
ஸ்வ தந்திரமான இந்த நெஞ்சை என்னை விட்டுப் போகாமல் தகைய மாட்டேன்-இ சுட்டு தனி நெஞ்சம்
வேறே நெஞ்சு இருந்தால் -நியமிக்கலாம்
என் வசம் அன்று இது இராப்பகல் போய்த்–எனக்கு விதேயம் அல்ல -இது இரவோடு புகழோடு வாசியற
தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ் தென் திருப் பேரெயில் வீற்றிருந்த–வண்டுகள் மொய்த்த பூம் பொழிலை யுடைத்தாய் –
குளிர்ந்த நீர் நிலங்கள் சூழ்ந்து இருக்கிற கட்டளைப்பட்ட திருப் பேரெயிலிலே தண் பெருமை தோன்றும் படி இருக்கிற
வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன் செங்கனி வாயின் திறத்ததுவே.– பரம பாத நிலயனான மேன்மை யுடையனாய்
உஜ்ஜவலமான மாணிக்கம் போலே இருக்கிற வடிவை யுடையனாய் ஆஸ்ரித பவ்யனான
ஸ்ரீ கிருஷ்ணனுடைய சிவந்த கனி போலே இருக்கிற அதர சோபையிலே சக்தமாயிற்று

மாலே மணி வண்ணா ஆலின் இலையாய் -மணியை வானவர் கண்ணன் -தன்னதோர் அணியை –
வடிவின் அழகு -ஸ்வரூபத்தின் மேன்மை ஆஸ்ரித பவ்யன் -அதர சோபை
பரத்வ ஸுந்தர்ய ஸுலப்யம் மூன்றும்
பிராட்டிக்கு இற் பிறப்பு இரும் பொறை கற்பு மூன்றும் களி நடம் புரியும் –

நறுநாற்றத்தையுடைய கரிய கூந்தலையுடைய தோழிமீர்காள்! தாய்மார்காள்! அருகில் உள்ள சேரியில் உள்ளவர்காள்!
இந்தத் தனித்த நெஞ்சத்தினைக் காக்கமாட்டேன்; என் வசத்தில் இருப்பது அன்று; இந்நெஞ்சமானது, இரவும் பகலும் சென்று.
வண்டுகள் மொய்த்திருக்கின்ற பூக்கள் நிறைந்த சோலைகளும் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்திருக்கின்ற தெற்குத்திசையிலேயுள்ள
திருப்பேரெயில்என்ற திவ்வியதேசத்தில் எழுந்திருளியிருக்கின்ற வானப்பிரானும் மணிவண்ணனும் கண்ணனுமான
எம்பெருமானது சிவந்த கொவ்வைக்கனி போன்ற திருவதரத்தினிடத்தது’ என்கிறாள்.
நானம் – கத்தூரியுமாம். சேரி – தெரு; அல்லது, ஊர். வானப்பிரான் -நித்தியசூரிகளுக்குத் தலைவன்;
வானம் – இடவாகு பெயர். வாயின் திறத்து-வாயினிடத்தது.

தாய்மார் முகம் பார்த்துச் சொன்னாளாய் அன்றோ மேற்பாசுரத்தில் நின்றது?
‘இவள் இவ்வளவிலே மீளுமவள் அன்றிக்கே இருந்தாள்’ என்று தாய்மாரோடு தோழிமாரோடு அயற்சேரியுள்ளாரோடு வாசி அற
வந்து திரண்டு ஹிதம் சொல்லப் புக்கார்கள். -அந்தர்யாமித்வத்தில் ஆழ்ந்த அயல் சேரி –
‘உங்களுடைய நல் வார்த்தையைக் கேளாதபடி நிரவதிகமான பரத்துவ ஸௌலப்பியங்களை யுடையவன் பக்கலிலே
சென்ற சேர்ந்த என் நெஞ்சினைத் தகைய மாட்டுகின்றிலேன்; என் நெஞ்சினைக் கடல் கொண்டது காணுங்கோள்!’ என்கிறாள்.

நானம் கருங்குழல் தோழிமீர்காள் –
அவர்களுக்கு ஒரு பழி சொல்லுமாறு போலே சொல்லுகிறாள்,
அவர்கள் தலையான நறு நாற்றத்தை யுடையவர்கள் வந்து நிற்கையாலே, நானம் – நறு நாற்றம்.
மயிர்பட மாந்தும்படி அன்றோ இவள்படி? -இவர்கள் மயிர் அவன் மயிருக்கு ஸ்மாரகமாய் -கவரி மான் போலே
உங்கள் சந்நிதி இல்லையாகில் நான் இங்கே இரேனோ?
மை வண்ண நறுங்குஞ்சியினை நினைப்பு ஊட்டுகிறதாய் இரா நின்றாதே இவர்கள் குழல்.
நானம் கருங்குழல்-மை வண்ணம் அங்கு -இவளுக்கு வாசனை சொல்லி வண்ணம் -அவனுக்கு வண்ணமும் வாசனையும்
‘நம் இருவர்க்கும் இன்பமும் துன்பமும் ஒன்றே’ என்று
ஏகம் துக்கம் ஸூகஞ்ச நௌ’–என்பது, ஸ்ரீராமா. கிஷ். 5:18.
இவளுடைய இன்ப துன்பங்களையே தங்களுக்கும் இன்ப துன்பங்களாக இருக்கை அன்றோ தோழிமாராவது?

இவள் மயிர்முடி பேணாதே நறுநாற்றங்காணில் முடியும்படியாக இருக்க,
இவர்கள் கூந்தலைப் பேணி நறு நாற்றங்கொண்டு காரியங்கொள்ளப் போருமோ?’ என்னில்,
கலவியில் இவளோடு அவன் நெருங்க நெருங்கச் சாத்திக் கழித்தபடியே எல்லாவற்றையும் கொடுப்பது இவர்களுக்கே;
அப்போது அவன் செய்த மிகுந்த திருவருளாலே, அது சருகு ஆனாலும் அவர்கள் மாறாதே வைத்துக் கொண்டு இருப்பார்களே!
அது இவளுக்கு நினைப்பு ஊட்டுவதாய் நலிகிறபடி.
பெருமாள் சர்வ ஸ்வதானம் -மாலை -ஆச்சார்யர் சர்வ ஸ்வதானம் அர்த்த விசேஷங்கள் –
வாசல் காப்பார் -பெருமாள் -தத்ர காஷாயணோ வ்ருத்தர்கள் அந்தப்புரம் -வெள்ளை வேஷ்ட்டி காவி -ஸூ அலங்கருதான் –
பெருமாள் ஆலிங்கனம் -மங்களா சாசனம் பண்ணுவார்கள் -சந்தனம் புஷபம் ஒட்டிக்குமே –
மலரிட்டு யாம் முடியோம் -அவன் சூட்ட சூடுவோம்

சத்ருச சம்பந்த பதார்த்தங்கள் பார்த்து -மண்ணை துழாவி -போலே இந்த இரண்டும்
சத்ருசம் -முதலில்
சம்பந்தம் -அடுத்து
மூன்றாவதாக -இவள் தளராமல் இருக்க ஒப்பித்து இருப்பார்கள்

அன்றிக்கே,
‘இவர்கள் தாம் நறுநாற்றங்கொண்டு காரியங்கொள்ளவும் வல்லர்கள்’ என்னுதல். என்றது,
‘தாங்கள் தளரந்து காட்டில் இவள் மிகவும் தளரும் என்று ஒப்பித்துக் கொண்டு இருப்பர்கள்’ என்றபடி.
தங்கள் தங்களுடைய பொறாமையும்–பொருக்காமையும் – பாரார்களாயிற்று, இவளைப் பிழைப்பிக்கைக்காக.

அகாரத்தின் பொருளான அவனும் ஜீவித்து மகாரத்தின் பொருளான இவனும் ஜீவித்துப் பல காலம் போகச் செய்தேயும்,
உஜ்ஜீவிக்கப் பெறாதே நடுவே கிடந்து போயிற்றே.
இனி, சேர்க்கின்றவர்களுடைய காரியம் அன்றோ உஜ்ஜீவிப்பிக்கை? அப்படியே இவளை இசைவித்து உஜ்ஜீவிப்பக்க வேணுமே.
ஆய-சேஷத்வம் / உ காரம் -அநந்யார்ஹத்வம் /நடுவில் உள்ளவை
ஆச்சார்யர்கள் -ஆடும் மாட்டை ஆடிக் கறக்க வேண்டுமே -எளிமைப் படுத்தி -விஷயம் குறைக்காமல் அருளிச் செய்வார்கள் என்றவாறு –
‘சேஷிக்கு அதிசயம் வேணும்’ என்றிருப்பர், தங்கள் தங்களுடைய துக்கத்தைப் பாரார்களே அன்றோ?

பெருமாளிலும் துக்கம் விஞ்சி இருக்கச் செய்தே பெருமாளுடைய இரட்சணத்துக்காக இளைய பெருமாள்
தம்மைப் பேணிக் கொண்டு தரித்து இருக்குமாறு போலே. இளைய பெருமாள் தாம் பரம் போகி அன்றோ?
‘ஸௌமித்ரே பஸ்ய பம்பாயா:- அங்குத்தை இனிமை நெஞ்சிலே படச் செய்தேயும்,
பெருமாளுக்கு வேற் ஒன்றிலே நோக்கை விளைக்கைக்காக முகத்தை மாற வைத்துக் கொண்டு நின்றார்;
ஸௌமித்ரே பஸ்ய பம்பாயா: சித்ராஸூ வந ராஜிஷூ
கிந்நரா நர ஸார்த்தூல விசரந்தி ததஸ்தத;’–இது. ஸ்ரீராமா. கிஷ்கிந். 1:60
‘பிள்ளாய், பாராய் இது இருந்தபடி!’ என்கிறார்.-(பம்பா சரஸ் இது- கேரளாவில் உள்ள நதி அல்ல )

நானம் கருங்குழல் –
ஒரு புலவன் ‘நானம் என்பது குழலுக்கு விசேஷணம் ஆகையாலே,
நாவி போன்ற குழல்’ என்றான். அதனால் நினைக்கிறதும் நறு நாற்றத்தை.

தோழிமீர்காள் –
பிரியம் சொல்லுவாரும் ஹிதம் சொல்லுவார் கோடியிலே புகுவதே!

தோழிமீர்காள்! அன்னையர்காள்! அயற்சேரியீர்காள்!-
தான் அறிந்து தோழிமார்க்குச் சொல்லாதே இருப்பது ஒரு நிலையும்,
தோழிமாரும் தானும் அறிந்து தாய் அறியாதே இருப்பது ஒரு நிலையும்,
தானும் தோழியும் தாயும் அறிந்து பிறர் அறியாதே இருப்பது ஒரு நிலையுமாயிற்று இருப்பது;
அந்நிலை குலைந்து எல்லாரையும் ஒக்க விளிக்கும்படி ஆயிற்று உலகப் பிரசித்தமானபடி.
பிறர்க்குச் சொல்ல வேண்டுவது இல்லை அன்றோ?
ஆயிருக்க, பிரதி கூலர்க்குங்கூட அருள் பண்ண வேண்டும்படி காணும் இவளுடைய துன்ப நிலை.
‘மாம் ஸமாநய துக்கிதாம்-துக்கத்தை அடைந்திருக்க என்னை ஸ்ரீராகவனோடு சேர்ப்பாயாக’ என்கிறபடியே,
ஸாது ராவண ராமேண மாம் ஸமாநய துக்கிதாம்
வநே வாஹிதயா ஸார்த்தம் கரேண் வேவ கஜாதிபம்’-என்பது, ஸ்ரீராமா. சுந். 21:18.
கரேண் வேவ கஜாதிபம்’–களிறு உடன் பிடியைப் சேர்ப்பாரைப் போல்

‘என்னை நீ பெருமாளுடனே கூட்ட வல்லையே’ என்றாளன்றோ இராவணனை?
‘அப்படியே என் விஷயத்தில் அருள் செய்’ என்றும்,
‘வாக்கினால் தருமத்தை அடையக் கடவாய்’ என்றும்,
‘ததா குரு தயாம் மயி’ என்பது, ஸ்ரீராமா. சுந்.
‘வாசா தர்ம மவாப்நுஹி’ என்பது, ஸ்ரீராமா, சுந். 39:10.
ஒரு திருவடி போல்வார்க்குச் சொல்லக் கடவ வார்த்தையை அன்றோ, பிரித்தவனைப் பார்த்துச் சொல்லிற்று?

எங்ஙனே நான் உகந்தது உகந்தீர்கோள்! என்பாள், ‘தோழிமீர்காள்!’ என்கிறாள்.
‘எங்ஙனே எனக்குப் பிரியமான ஹிதத்தைப் பார்த்தீர்கோள்!’ என்பாள், ‘அன்னையர்காள்!’ என்கிறாள்.
‘எங்ஙனே நொதுமலாளர்களாய்-உதாசீனர்களாய் – இருந்தீர்கோள்!’ என்பாள், ‘அயற்சேரியீர்காள்!’ என்கிறாள்.

‘எங்கள் பக்கல் குறை உண்டோ? நீ மரியாதை தப்பினவாறே நாங்களும் முறை தப்பினோமித்தனை அன்றோ?’ என்ன,

‘நான் இத்தனி நெஞ்சம் காக்க மாட்டேன்-
‘உங்களுக்கும் இங்ஙனே ஏதேனும் இருப்பது ஒரு காரணம் உண்டோ முறை தப்புகைக்கு நான்?
நீங்களும் ஏதேனும் நெஞ்சு இழந்தீர்களோ? உங்கள் அளவு அன்று’ என்றபடி.

இத் தனி நெஞ்சம்-
உங்களில் நான் வேறுபட்டவள் ஆனாற்போலே யாயிற்று, என்னிலும் என் நெஞ்சு வேறுபட்டபடி. என்றது,
‘சொல்லிற்றுக் கேளாத ஸ்வதந்திரமான நெஞ்சம்’ என்றபடி.

இ -சுட்டுக்கு
‘அச்செயல் அவருக்குத் தக்கதாம்’ என்று இருப்பார் நெஞ்சமும் இதற்கு ஒப்பு அன்று. காக்க மாட்டேன்-
‘தத் தஸ்ய ஸத்ருஸம் பவேத்’ என்பது, ஸ்ரீராமா.சுந், 39:30. ‘என்றிருப்பர்’ என்றது, -அவளது அத் தனி நெஞ்சம்
‘முந்துற்ற நெஞ்சே, இயற்றுவாய் எம்மோடு நீ கூடி’ பெரிய திருவந்.1.-என்று இருக்குமித்தனை ஒழிய,
இவளால் தடுத்து வைக்கப் போகாதே.

‘தாய் தந்தையர்கள் என்ன செய்வார்கள்?’ ‘குரவ: கிம் கரிஷ்யந்தி தக்தாநாம் விரஹாக்நிநா’என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5.18:22.
என்கிறபடியே, ஒருவரையும் பாராதே போகா நின்றது; ஒன்று கேட்டு மீளும் அளவு அன்று;

காவேன்-சொல்லாமல் காக்க மாட்டேன் -முயன்றேன் -கை வாங்கினேன் என்றபடி –
மீட்கலாம் அளவும் காற்கட்டிப் பார்த்து, முடியாமையாலே கை வாங்கினமை தோற்றுகிறது காணும், ‘மாட்டேன்’ என்ற உறைப்பாலே.
சம்சாரிகள் ஐம்புல இன்பங்களினின்றும் மீளமாட்டாதவாறு போலே அன்றோ, இவர் பகவத் விஷயத்தினின்றும் மீளாமாட்டதபடி?

‘மாட்டேன்’ என்று சொல்லுகிற இது வார்த்தையோ?
எல்லா அளவிலும் தங்கள் தங்கள் மனம் தங்கள் தங்களுக்கு அடங்கியதாக இருக்க வேண்டாவோ?’ என்ன,

என் வசம் அன்று இது-
என் செய்வோம், தாய் வேறு கன்று ஆக்கும் விஷயமானால்?
கைகேயி சொற்கேட்டு ஸ்ரீபரதாழ்வான் அரசினைச் செலுத்தும் அன்று ஆயிற்று, இவளும் இத் தாயார் வார்த்தை கேட்டு மீளுவது.
‘இப்போது நான் உங்கள் மகள் அன்றோ? என்னைப் போலும் அன்றே என் நெஞ்சு?’ என்றது,
எனக்குத் தான் என்று இருக்கும் நிலை குலைந்து, தன் வழியே நான் ஒழுகும்படியாயிற்று என்றபடி.
‘தங்கள் தங்களுடைய மனம் அடங்கியிராது போயினும், அடங்கியிருப்பது ஒரு போது பார்த்து ஹிதம் சொல்ல வேண்டாவோ?’ என்ன,

இராப் பகல் போய் –
படைக்கப்பட்ட காலத்திலே இதற்கு ஹிதம் சொல்லலாவது, ஒரு போது காண்கின்றிலேன்;
ஒரு போது பகவத் விஷயத்திலும் கை வைத்து, ஒரு போது சம்சார யாத்திரையிலும் கை வைக்கும் அளவு அன்றே, இவளுடைய ஈடுபாடு.
இங்கே இருப்பது ஒரு போது உண்டாகில் அன்றோ ஒன்று சொல்லி மீட்கலாவது?

தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ் திருப்பேரெயில் –
இது மீட்கலாம் விஷயத்திலோ அகப்பட்டது? அவ்வூரில் இனிமையிலே படிந்தாரையும் மீட்கப் போமோ?
தேன் – வண்டு.பூத்த பொழிலையும் குளிர்ந்த நீர் நிலங்களையுமுடைய தென்திருப்பேரெயில்.

வீற்றிருந்த-
பரமபதத்தில் இருப்பு அடங்கலும் தோற்றும்படி இருக்கை.
அவ்விடம் போன்றது அன்றே இவ்விடம்? ஒருவர் கூறை எழுவர் உடுக்கிற இடம் அன்றோ?
அவ்விடத்தைப் போன்று இவ்விடத்தையும் திருத்திக் கொண்டிருக்கிற இடம் அன்றோ?

வானப் பிரான் –
இதனால் கண்ணழிவற்ற மேன்மையைச் சொல்லுகிறது.

தென்திருப்பேரெயில் வீற்றிருந்த வானப்பிரான் –
ஸ்ரீவைகுண்டத்தில் இருப்பை நமக்காக இங்கே இருக்கிற உபகாரன்.

மணி வண்ணன்-
மேன்மை இல்லையாகிலும் விட ஒண்ணாத வடிவில் பசை இருக்கிறபடி.

கண்ணன் –
அங்குள்ளார்க்குப் படி விடும் உடம்பை இங்குள்ளார்க்கு வரையாதே கொடுத்துக் கொண்டு இருக்கிறவன்.

ஆக,
‘மேன்மை அளவிடவோ?
வடிவழகு அளவிடவோ?
நீர்மை அளவிடவோ?’ என்பதனைத் தெரிவித்தபடி.

செங்கனி வாயின் திறத்ததுவே –
கிண்ணகத்தில் ஒரு சுழியிலே அகப்படுவாரைப் போலே, வாய்க் கரையிலே அகப்பட்டது; -வாயின் மேலே அதரத்திலே-என்றவாறு –
ஆசைப்பட்ட விஷயத்தைக் கரை கண்டது ஆகில் அன்றோ மீளுவது?
சிவந்து கனிந்து திருப் பவளத்தின் இடையாட்டத்தது;
இது மீள நினைக்கில் அன்றோ உங்கள் வார்த்தை கேட்கைக்கு அவகாசம் உள்ளது?

————————————————————————————–

செங்கனி வாயின் திறத்ததாயும்
செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ!
நாணும் நிறையும் இழந்ததுவே.–7-3-3-

அநந்தரம் அவனுடைய திவ்ய அவயவாதி சோபையில் அகப்பட்ட நெஞ்சு நாணும் நிறையும் இழந்தது
என்று அந்தரங்கையான தோழிக்குச் சொல்லுகிறாள் –

செங்கனி வாயின் திறத்ததாயும்-சிவந்த கனி போலே போக்யமாய் சாந்த்வவாதிகளாலே ஆகர்ஷகமான திருப் பவளத்திலே அபி நிவிஷ்டமாயும்
செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்–ஆதி ராஜ்ய ஸூ சகமாய் சிவந்த ஒளியை யுடைத்தாய்
உத்துங்க மான திரு அபிஷேகத்தில் அம் மேன்மைக்கு ஈடாகாது தாழ்ந்து வர்த்திப்பதாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்–அந்த பரத்வத்தை நிர்வஹித்துக் கொடுக்கும் திவ்ய ஆயுதங்களை கண்டு ஹர்ஷ யுக்தமாயும்
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்–அதிசயித போக்யமான தாமரை போன்ற திருக் கண்களுக்கு
புறம்பு தோற்று அற்று அநந்யார்ஹமுமாய் இருக்கிற
என் நெஞ்சம் தோழீ!–என் நெஞ்சானது முன்பு ஸம்ஸ்லேஷிக்கைக்கு சஹகாரியான தோழீ
திங்களும் நாளும் விழா வறாத–மாஸங்கள் தோறும் திவசங்கள் தோறும் உத்சவங்கள் இடைவிடாமல் செல்லுகிற
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த நங்கள் பிரானுக்கு நாணும் நிறையும் இழந்ததுவே.–திருப் பேரையிலே தன் வாசி தோன்ற
எழுந்து அருளி இருந்தவனாய் நம் போல்வார்க்கு முகம் தருகிற அர்ச்சாவதார ஸூலபனான உபகாரகனுக்கு
ஸ்வ பாவிகமான லஜ்ஜையும் அடக்கத்தையும் இழந்தது –
நிறை -ஒழுக்கம் -காப்பான காத்து கடிவன கழிந்து ஒழுகும் ஒழுக்கம் நிகண்டு

‘தோழீ! எனது நெஞ்சம், சிவந்த கொவ்வைக்கனி போன்ற திருவதரத்திலே ஈடுபட்டதாயும், சிவந்த பிரகாசம் பொருந்திய நீண்ட திருமுடியிலே
தங்கினதாயும், சங்கையும் சக்கரத்தையும் பார்த்து மகிழ்ந்தாயும், தாமரை போன்ற திருக்கண்களுக்கு அற்றுத் தீர்ந்ததாயும், மாதந்தோறும்
நாள்தோறும் திருவிழாக்கள் நடந்து கொண்டேயிருக்கின்ற தென்திருப்பேரெயில் எழுந்தருளியிருக்கின்ற நங்கள் பிரானுக்கு,
நாணத்தையும் நிறையையும் இழந்துவிட்டது,’ என்கிறாள் தலைவி.
‘தோழீ! என் நெஞ்சம், திறத்ததாயும் தாழ்ந்ததாயும், உகந்தும் தீர்ந்தும் நாணும் நிறையும் இழந்தது’ என்க. அற்றுத் தீர்தல் – அவனுக்கேயாதல்,
நிறை – காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம். ‘நிறைஎனப் படுவது மறைபிறர் அறியாமை’ என்பது, கலித்தொகை.

சேர்க்குமவள் ஒருத்தியுமேயாக, அல்லாத பங்களம் அடங்கலும் ‘நமக்கு நிலம் அன்று’ என்று கை வாங்கின;
தோழியானவள், ‘இது நமக்குப் போராது காண்; நெஞ்சை ஒருங்கப் பிடித்துத் தரித்து இருக்க வேண்டாவோ?’ என்ன,
‘அந் நெஞ்சு தான் இனிச் செய்வது என்? அவயவம் முதலியவற்றின் சோபைகளிலே அகப்பட்டு
அதுவும் தனக்குள்ளது அடங்கலும் இழந்தது காண்!’ என்கிறாள்.

‘செங்கனி வாயின் திறத்ததாயும், செஞ்சுடர் நீண்முடி தாழ்ந்ததாயும், சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்,
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும், நெஞ்சும் நாணும் நிறையும் இழந்தது காண்!’ என்கிறாள்.
சௌபரி என்பான் ஒருவன் ஒரு நல்வினை அடியாக ஐம்பது வடிவு கொண்டான் அன்றோ?
அவ்வளவு அன்றே, இவள் கலந்த விஷயம் செய்ய வல்லது?

அன்றிக்கே,
‘‘ஒரு பிரகாரமாக ஆகிறான், மூன்று பிரகாரமாக ஆகிறான்’ என்கிறபடியே,
ஸ ஏகதா பவதி த்ரிதா பவதி’ என்பது, சாந்தோக்யம்,-7:26.
அனுபவியா நின்றால் பிறக்கும் நாநா பாவம், பிரிவிலே நெஞ்சுக்கு உண்டாகா நின்றது,’ என்னுதல்.

‘திருப்பாற்கடல் கடைகிற காலத்தில் தான் எட்டு வடிவு கொண்டாற்போலே காணும்,
இப் பாசுரத்திற் கூறப்பட்ட ஐந்து வடிவோடு, வாசுகி மந்தரம் இவற்றுக்கு அந்தரியாமியாய் நின்ற வடிவு இரண்டு;
உபேந்ரனாய் நின்ற வடிவு ஒன்று: ஆக, மூன்றதனையும் கூட்டிக் காண்க.

ஓருரு வேற்பைத் தரித்தது தானவர் உம்பர் உள்ளாய்
ஈருரு நின்று கடைந்தது வேலை யிதனிடையோர்
பேருரு இன்னமு தோடே பிறந்தது பெண்மை கொண்டோர்
நாருரு நின்ற தரங்கா! இது என்ன நற்றவமே?’-என்பது, திருவரங்கத்து மாலை.

இதுவும் விஷயத்திற்குத் தகுதியாகப் பல வடிவு கொள்ளுகிறபடி,’ என்னுதல்.
அவனுடைய ஐஸ்வர்யமடைய இதற்கு உண்டாகக் கடவதன்றோ?

அன்றிக்கே,
‘அவன் உருவந்தோறும் நிறைந்து வசிக்குமாறு போலேயாயிற்று, இதுவும்
அவயந்தோறும் தனித்தனி அகப்பட வல்லபடி’என்னுதல்.

செங்கனி வாயின் திறத்ததாயும் –
‘பிரிந்து கடக்க இருக்கில் என்? உன் கண் வட்டத்திலே கிடக்கில் என்? இது உன் சரக்கு அன்றோ?’ என்று
சொல்லத் தொடங்கி, தழுதழுத்து வருகிற திருவதரத்திலே அகப்பட்டபடி.
அதிலும், அதரத்தில் பழுப்புக்குள் இழிய மாட்டுகிறது இல்லை.

வாயின் திறத்ததாயும் –
அதுதான் ஒரு மஹா பாரதத்துக்குப் போரும் ஆகாதே? (நென்னலே வாய் நேரந்தான் போல் )

செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும் –
பிரிவினைப் பற்றிப் பேசிப் பேர நின்ற போது, ஆதி ராஜ்ய ஸூசகமாய்‘உபய விபூதி நாதன்’ என்று தோற்றும்படி
இருக்கிற திருமுடியைக் கண்டு தரைப் பட்டுக் காலைப் பிடித்தது.

சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் –
பிரிந்தால் விரோதியைப் போக்குகைக்குக் கருவியாய்,
வைத்த கண் மாற ஒண்ணாத அழகை யுடைய ஆழ்வார்களைக் கண்டு உகந்தது.

தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும் –
தவாஸ்மி–‘உனக்கு ஆகிறேன்’ என்று சொல்லப் புக்கு மாட்டாது ஒழிந்தால், குறையும் தலைக் கட்டின திருக் கண்களுக்கு ஆயிற்று
அநந்யார்ஹமாக எழுதிக் கொடுத்தது. என்றது,
‘பிரிகிற போது நோக்கின நோக்கிலே பிறர்க்கு ஆகாதபடி உஜ்ஜீவிக்கச் செய்தான்’ என்றபடி.

திங்களும் நாளும் விழா அறாத –
உத்தேஸ்யமான பூமியிலே நித்யோத்ஸவம் செல்லா நிற்க, அது இங்கே நம் கண் வட்டத்தே
துக்கத்துக்கு இலக்காய் இருக்குமோ!
மாதத் திருநாளும் நாள் திருநாளும் ஓவாத. தென்திருப்பேரெயில் வீற்றிருந்த நங்கள் பிரானுக்கு-
இவ் விருப்பு நமக்கு ஆக்கிக் கொண்டிருக்கிற உபகாரகனுக்கு. என்றது,
‘பரத்துவம், நித்திய முத்தர்கட்கு; வியூகம், முத்தரைப் போன்றவர்கட்கு; விபவம், புண்ணியம் செய்தார்க்கு’
இவ்விருப்பு,பாபம் செய்த சம்சாரிகளுக்காக அன்றோ?’ என்றபடி.

என் நெஞ்சம்-
அவனுடைய உபகாரமும் அழகு முதலானவைகளும் வயிர உருக்கு ஆகை.
நெஞ்சினுடைய வன்மை அறிதி அன்றோ?
நெஞ்சம் அவனும் ஒரு கோவையிலே அடைப்பு உண்டபடி.
(அவன் ஆஸ்ரித விஷயத்தில் இருக்குமா போல் நெஞ்சும் பகவத் விஷயத்தில் ஸ்நக்தனாய் இருக்குமே )

நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் –
‘ஸ்ரீராகவனுக்குத் தகுந்தவள் ஸ்ரீஜனகராஜன் திருமகள்’ என்னுமாறு போலே.
‘ராகவோர்ஹதி வைதேஹீம்’ என்பது, ஸ்ரீராமா. சுந். 16:5.

என் நெஞ்சம் தோழீ –
நெஞ்சினைத் திருத்திக் கலப்பிக்கப்பட்ட வருத்தம் அறிதி அன்றோ’
இப்போது நீயுங்கூட எதிர்த் தலையாம்படி யன்றோ வாய்த்தது?

நாணும் நிறையும் இழந்ததுவே –
இது இழவாதது உண்டோ!
அரைக்கணம் அவன் பேர நின்று படுத்தின பாடு எல்லாம் என் தான்!
நான், தன்னை இழந்தேன்:
தாய்மார் தோழிமார்கள், என்னை இழந்தார்கள்:
நெஞ்சு, நாணும் நிறையும் இழத்தது.

——————————————————————————————————

இழந்த எம்மாமைத் திறத்துப் போன
என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ!
ஓதக் கடல் ஓலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன்
அன்னையர்காள்! என்னை என் முனிந்தே.–7-3-4-

அநந்தரம்-அவனுடைய குண சேஷ்டிதங்களிலே அகப்பட்ட என் நெஞ்சம் அங்கே போயிற்று –
இனி யாரைக் கொண்டு போது போக்குவது என்று
நியமிக்கிற தாயாரைக் குறித்துச் சொல்லுகிறாள் –

இழந்த எம்மாமைத் திறத்துப் போன–முன்பே இழந்த என் நிறத்துக்காக போன
என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்–என் நெஞ்சினாரும் அங்கே யாசன்னராய் ராஜ குலத்தாலே என்னை ஒழிந்து நின்றார்
உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ!–அந்தரங்கமான நெஞ்சு போன பின்பு அலமந்து இவ்வனுபவ சிரையில் தாரையிலே –
அநபிஜ்ஞரானாரைக் கொண்டு அவர்களுக்கு நிலம் அல்லாத எந்த அர்த்தத்தை உசாவுவேன்
ஓதக் கடல் ஓலி போல எங்கும்–உஸாவ இருந்த நான் காணும் திரைக் கிளப்பத்தையுடைத்தான கடல் ஒலி போலே சர்வ பிரதேசத்திலும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு–கிளர்ந்த சாம வேத கோஷமானது எக்காலத்திலும் நின்று கிளர்ந்து வருகிற
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த–தென் திருப்பேரையிலே எழுந்து அருளி இருப்பானாய்
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன்–அந்த வேத கோஷ பிரதி த்வனியாலே முழங்குகிற ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
திருக் கையிலே யுடையவனுடைய ஆச்சர்யமான சீல ஸுலப்யாதி ப்ரகாசக சேஷ்டிதங்களிலே அவகாஹித்தேன்
அன்னையர்காள்! என்னை என் முனிந்தே.– மூப்பும் முறையும் யுடையோம் என்று இருக்கிற அன்னைமீர் –
துணை யற்று ஈடுபட்டு இருக்கிற என்னை முனிந்து என்ன பிரயோஜனம் யுண்டு –

‘முன்னரே இழந்த என்னுடைய மாமை நிறத்தை மீட்டு வருவதற்காகச் சென்ற என்னுடைய நெஞ்சினரும் அங்கேயே தங்கிவிட்டார்;
இனி வருந்த யாரைக்கொண்டு எதனை உசாவுவேன்? அலைகளையுடைய கடல் ஒலி போன்று, எல்லா இடங்களிலும் உண்டான
சிறந்த வேதங்களின் ஒலியானது நின்று உயர்கின்ற தென்திருப்பேரெயில் எழுந்தருளியிருக்கின்ற. ஒலிக்கின்ற ஸ்ரீபாஞ்சஜன்யம் என்ற
சங்கைக் கையிலே தரித்த எம்பெருமானது மாயத்திலே ஆழ்ந்தேன்; அன்னையர்காள்! என்னைக் கோபிப்பதனால் பயன் யாது?’ என்கிறாள்.
நெஞ்சினார்-உயர்வுப் பொருளது. உசாவுதல்-ஆராய்தல். ‘என்னை முனிந்து என்?’ என்க. மாயம்-ஆச்சரியமான குணங்களும் செயல்களும்.

‘ஏதேனும் ஒன்றைக் கொண்டு வருந்தியாகிலும் போது போக்காதே இங்ஙனே செய்யலாமோ?’ என்று
பொடிகிற தாய்மாரைக் குறித்து, ‘என் நெஞ்சம் அவனாலே அபஹ்ருதம் ஆயிற்று (கொள்ளை கொள்ளப்பட்டது)
நான் எதனைக் கொண்டு போது போக்குவது?’ என்கிறாள்.

இழந்த எம் மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினரும் அங்கே ஒழிந்தார் –
‘நாணும் நிறையும் இழந்தது என்ற இடம், நிறத்திற்கும் உபலக்ஷண மன்றோ?
ஆதலால், அநுபாஷணத்திலே நிறம் இழந்ததையும் தோற்றச் சொல்லா நின்றாள்.
‘அத்தலையில் உள்ளனவற்றை முழுவதையும் நாம் நமக்கு உரித்தாகச் செய்கை போய்.
நமக்கு உள்ளனவற்றிலே ஒன்றினைச் சிலர் கொடு போகையாவது என்?’ என்று செருக்குக் கொண்டு
‘இப்போதே மீட்டுக் கொடு வருகிறேன்’ என்று விரைந்து சென்ற மனமும் அங்கே படையற்றது-(கிட்டிற்று )

என் நெஞ்சினரும் அங்கே ஒழிந்தார் –
அங்கே புக்காரையும் தம்படி யாக்கிக் கொண்டார்.
‘பிரியேன்’ என்று சொன்னவர் அன்றோ இத் தலையைப் பிரிந்து நினையாது இருக்கிறார்?
அவன் சொன்னதாகவும் -நெஞ்சு சொன்னதாகவும் கொள்ளலாம் -பூஜ்ய வாசி நெஞ்சை சொன்னபடி –

‘நெஞ்சினார்’
அலைந்த பரிவட்டமும் தாமுமாய் அணுக்கடித்துத் திரியா நின்றாராயிற்று. -இதுவும் அவனுக்கும் நெஞ்சுக்கும் –
‘தூசித் தலையில் வியாபரிப்பேன் நான்’ என்றான் அன்றோ ஸ்ரீவிபீஷணாழ்வான்?
‘ப்ரவேஷ்யாமி ச வாஹிநீம்’ என்பது, ஸ்ரீராமா. யுத். 19:23.-தூசித்தலை – படையின் முன்னிடம்.

இழந்த எம் மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினரும் அங்கே ஒழிந்தார் –
நிறம் தொடக்கமாக இழந்தவை அடைய மீட்பதாகச் சொல்லிப் போன நெஞ்சினரும் அங்கே கால் தாழ்ந்தார்.
சல்ய சாரத்யம் -போலே -வினைத்தலையிலே படை அறுக்குமாறு போலே,
வரிசையும் கொடுத்துத் தம்மோடு ஒப்புமையையும் கொடுத்தார்.
‘இந்த விபீஷணன் இராஜாவன்றோ?’ என்னுமாறு போலே, வரிசை பெற்றுத் திரியா நின்றார்.

‘ராஜஹ்யேஷவிபீஷண;’ என்பது ஸ்ரீராமா. யுத். 28:27. இது, இராவணனைப் பார்த்துச் சாரன் கூறியது.

‘தாரு லாமணி மார்ப!நின் தம்பியே
தேரு லாவு கதிருந் திருந்துதன்
பேரு லாவு மளவினும் பெற்றனன்
நீரு லாவு மிலங்கை நெடுந்திரு.’–என்பது, கம்பராமாயணம், ஒற்றுக் கேள்விப் படலம், 60.

‘இராவணன் முன்னே, அவன் சோற்றை உண்ட சுக சாரணர்கள் ஸ்ரீவிபீஷணாழ்வானை ‘ராஜா’ என்பான் என்?’ என்னில்
எழுத்து உரு அழியாதே கிடந்தாலும், புள்ளி குத்தினால் அத்தைக் கழித்து மேலே போமாறு போலே,
பிராப்தர் சக்தர்-முடி கொடுக்குமவர் கையாலே வைக்கையாலே ‘ராஜா’ என்றார்கள்.
உயிர் மெய் எழுத்தின் தலையில் புள்ளி வைத்தால் மெய் எழுத்து ஆகுமே –
கிரீடம் ராவணன் தலை மேல் இருந்தாலும் பிரயோஜனம் இல்லையே –
‘ஒன்றாலும் இராவணனுடைய கொடுமையை அறிந்து வைத்துக் கூசாதே இங்ஙன் சொல்லுவான் என்?’ என்னில்,
‘சித்திரம் குத்துமோ’ என்று இருந்தார்கள்.
‘நிலவரைக் கொண்டு வினை செய்யலாம்’ என்று தரம் கொடுப்பர் அன்றோ? என் நெஞ்சினரும் அங்கே ஒழிந்தார் –
நிலவர்-பண்ணுவதற்கு சக்தர் -ஸ்த்ரீத்வத்வம் அழிக்க நெஞ்சுக்கு இப்பட்டம் –
விபீஷணன் கொண்டு ராவணனை அழித்தால் போலே –

நிறம் மீட்கப் போனாரும் நிறம் கொடு போனாரோடு ஒத்தார்.
இத்தலையில் வெறுமை கண்டு போனதுவும் -புஷ்கலம் -நிறைவினைக் கண்டு போனவனோடு ஒத்தது.
போவார் போவார் எல்லாரும் இத்தலைக்குக் காரியமாகக் காணும் போம் போது சொல்லிப் போவது!
அவன் தானே ‘இத்தலையில் ஊற்று-அபிநிவேசம் அதிசயிக்க — இருக்க வேணும்’ என்று போனான் ஆனான்’
இது இத்தலையில் வெறுமை கண்டு, நோக்குகைக்காகப் போயிற்று. –
உன்மஸ்த்தக ப்ரீதி விஸ்லேஷித்து குறைக்க –
நாம் தாம் அவர்களை வெறுக்கிறது என்?’நோ பஜனம் ஸ்மரன் முத்தன் இந்தச் சரீரத்தை நினைப்பது இல்லை,’ என்கிறபடியே,
புக்கார் மீளாத தேசமான பின்பு. அங்கே ஒழிந்தார் – ‘கடலுக்குக் குறை நிரப்ப வேணும்’ என்று திரியா நின்றார்.

‘பண்டு நெஞ்சு இழந்தவர்களும் வருந்தித் தரித்துச் சிலரோடே அவனுடைய செயல்களைச் சொல்லிக் கொண்டு இருந்திலர்களோ?
நீயும் அப்படியே வருந்தியாகிலும் சிலரோடே காலம் கழிக்க வேண்டாவோ?’ என்ன,

இனி உழ்ந்து ஆரைக் கொண்டு என் உசாகோ –
என் நெஞ்சினை இழந்த பின்பு இனி, துக்கப்பட்டு ஆரோடே கூட எதனைச் சொல்லி நான் காலம்.

போக்குவது?
உழந்து – வருந்தி. இலங்கையிலே இருந்தவளுக்கு ஒருவனாதல் ஒருவன் குடியாதல் உண்டு; அதுவும் இல்லையே எனக்கு!
(த்ரிஜடை உடன் சீதா பிராட்டி இருந்தது போல் இருக்க எனது நெஞ்சே எனக்கு இல்லையே )

ஜ்யேஷ்டா கந்யாநலா நாம விபீஷண ஸூதா – இங்கே இருந்தே அங்குத்தைக்கு ஆவாள் ஒருத்தி காண்!
கபே – ஒரோ நிலைகளிலே நீ உதவுமாறு போலே காண் இவளும் ஒரோ நிலைகளிலே உதவ வல்லபடி.

ஜ்யேஷ்டா கந்யா அநலாநாம விபீஷண ஸூதா கபே
தயா மம இதம் ஆக்யாதம் மாத்ரா ப்ரேஷிதயா ஸ்வயம்’-என்பது, ஸ்ரீராமா. சுந். 37:11. இது, திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
அங்குத்தைக்கு-பெருமாளுக்கு.
அனலா விபீஷணன் பெண் கூடி இருந்தாள்-இவள் நெஞ்சும் கூடவே இருந்து அவன் இடம் உதவப் போந்ததே –

‘அன்ன சாவ முளதென ஆண்மையான்
மின்னு மௌலியன் வீடணன் மெய்ம்மையான்
கன்னி என்வயின் வைத்த கருணையாள்
சொன்ன துண்டு துணுக்கம் அகற்றுவாள்.’-என்பது, கம்பராமாயணம்,. சூடாமணிப்பட. 22.

பல சொல்லி என்? உன்னோடு ஒப்பாள் ஒருத்தி.
(அனலா உம்மைப் போல் உதவினாள் என்கிறாள் பிராட்டி திருவடியிடம் )

ஆரைக் கொண்டு என் உசாகோ –
சரீரத்தையே ஆத்துமாவாக அபிமானித்து இருக்கிற சம்சாரிகளைக் கொண்டு போது போக்கவோ?
ஈஸ்வரோஹம் என்று இருக்கிற பிரமன் சிவன் முதலாயினோர்களைக் கொண்டு போதுபோக்கவோ?
பகவானுடைய அனுபவித்திலே நோக்காக இருக்கிற நித்திய ஸூரிகளைக் கொண்டு போது போக்கவோ?
இத்தலையை உரிசூறை கொண்டு போனவனைக் கொண்டு போது போக்கவோ?

யாரைக் கொண்டு எதனை உசாவுவது? என் உசாகோ –
‘நான் அங்கே பன்னிரண்டு வருடங்கள்’ என்று சொல்லலாமன்றோ பிராட்டிக்கு?
அப்படியே நமக்கும் ஏதேனும் உண்டோ?
கலவியில் நிறைவு பெறாமை இருக்கிறபடி.

ஆரைக் கொண்டு –
நெஞ்சு போலே நமக்குப் பாங்காய் இருப்பார் உளரோ? ‘ஆனால், செய்ய அடுப்பது என்?’ என்னில்,

ஓதம் கடல் ஒலி போல எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென்திருப்பேரெயில் வீற்றிருந்த –
அங்குத்தையது இங்கே நடையாடா நின்ற பின்பு, நாமும் அங்கே போய்ப்புகுமத்தனை ஓதம் கிளர்ந்த கடல் போலே
இருந்துள்ள வேத ஒலியானது எங்கும் பரம்பா நின்ற தென்திருப்பேரெயில் வீற்றிருந்த.

நல் வேதம் –
‘‘வேதங்களுக்குள்ளே சாம வேதம் நானாகிறேன்’ என்கிற சாமத்தின் ஒலியாய்க் கிடக்குமத்தனை,
பார்த்த பார்த்த இடம் எங்கும்,வேதாநாம் ஸாமவேதோஸ்மி’ என்பது, ஸ்ரீ கீதை, 10 : 22.
அவ் விருப்பைக் கண்டு முத்தர் சாமகானம் பண்ணிப் பிரீதிக்குப் போக்கு விடுமாறு போலே.

முழங்கு சங்கக் கையன் –
வேத ஒலியானது ஸ்ரீபாஞ்ச ஜன்யத்தைக் கிட்டி எதிர் ஒலி எழா நிற்கும்.

மாயத்து ஆழ்ந்தேன் –
அவனுடைய புன்முறுவல் கடைக் கண் நோக்கம் முதலியவைகளிலே மீள ஒண்ணாதபடி அகப்பட்டேன்.

அன்னையர்காள் என்னை என் முனிந்தே –
சம்பந்தம் உண்டு என்னாச் சீறுமத்தனையோ?
சீற்றத்துக்கு எதிர்த் தலையும் வேண்டாவோ? தர்மி உண்டாய் முனிய வேணுமே!

மாயத்து ஆழ்ந்தேன் என்னை என் முனிந்தே –
ஸ்வாதீனமுள்ளவரை அன்றோ முனிந்தால் பிரயோஜனமுள்ளது!

————————————————————————————–

முனிந்து சகடம் உதைத்து மாயப்
பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த
கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள்!
முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே
காலம் பெற என்னைக் காட்டுமினே.–7-3-5-

அநந்தரம் -அநிஷ்ட நிரசன சீலனான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு என்னுடைய ஸ்த்ரீத்வத்தை இழந்தேன் –
நிரர்த்தமாக நியமிக்கத் தேடாதே -விளம்பியாதே அவன் இருக்கிற தேசத்திலே கொடு போய்க் காட்டுங்கோள் -என்கிறாள் –

முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய் முலை உண்டு மருதிடை போய்க்–முலை வரவு தாழ்த்துச் சீறி -அத்தாலே
திருவடிகளை நிமிர்த்து சகடத்தை உதைத்து -தாய் வடிவு கொண்டு வந்த பேய் முடியும்படி முலை யுண்டு –
த்வந்த்வமான மருதிடையே வழி கண்டு போய்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்-பழுத்த விளவாய் நின்ற அசுரனைக் குறித்து
கன்றாய் வந்த அசுரனை எறிந்த ஸ்ரீ கிருஷ்ணனாகிற மஹா உபகாரகனுக்கு என்னுடைய ஸ்த்ரீத்வத்தை இழந்தேன்
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள்! முன்னி அவன் வந்து வீற்றிருந்த-இவ்வளவிலும் -இவ்வவஸ்தை அறிந்தே
தாய் மாரே என்னை நியமித்து என் இஷ்டம் செய்தி கோளல்லீர்-உங்கள் இஷ்டம் தலைக் கட்டிற்று இல்லை –
என்ன காரியம் செய்தீராய் நின்றீர் -என் அபிமதம் கேட்க்கில் அவன் முற்கோலி வந்து எழுந்து அருளி இருக்கிற
கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே காலம் பெற என்னைக் காட்டுமினே.–பக்குவ பல பூரணமான பொழிலையுடைய
திருப் பேரெயிற்கே க்ரம பிராப்தி பற்றாத என்னை விளம்பியாதபடி கொடு போய் காட்டுங்கோள்

‘சீறிச் சகடாசுரனை உதைத்து, வஞ்சனை பொருந்திய பேயின் முலையை உண்டு, மருத மரங்களின் நடுவே சென்று, பழுத்திருந்த விளாமரத்தினை
நோக்கிக் கன்றினை வீசி அடித்த கண்ணபிரானுக்கு என்னுடைய பெண்மையைத் தோற்றேன்; அன்னைமீர்காள்! இப்பொழுது என்னைக் கோபித்து
என்ன காரியத்தைச் செய்யாநின்றீர்கள்? அவன் முற்பட்டு வந்து எழுந்தருளியிருக்கின்ற, பழங்கள் நிறைந்திருக்கின்ற சோலைகள் சூழ்ந்த
திருப்பேரெயில் என்னும் திவ்விய தேசத்தைக் காலம் நீட்டிக்காமல் என்னை அழைத்துக் கொண்டு சென்று காட்டுங்கோள்’ என்கிறாள்.
‘முனிந்து உதைத்து உண்டு எறிந்த கண்ணபிரான் என்க. ‘வீற்றிருந்த திருப்பேரெயிற்கே காட்டுமின்’ என்க. பேரெயிற்கு – வேற்றுமை மயக்கம்.

‘இங்ஙனம் விரைதல் பெண் தன்மைக்குப் போராது காண்,’ என்று தாய்மார் அலைக்க,
‘அதுவும் பண்டே போயிற்று; பிரயோஜனம் இல்லாத நிலையிலே கொடு போக நில்லாதே.
என்னை முன்னரே கொடு சென்று தென் திருப்பேரெயிலிலே விடுங்கோள்,’ என்கிறாள்.
‘முனிகிறது தான் என்னுடைய நலத்தைப் பார்த்தே யானால் என் நலத்திலே செல்லப் பாருங்கோள் என்கிறாள்.’
கண் கெட்ட பின்போ ஸூர்ய நமஸ்காரம் –

முனிந்து சகடம் . . . . . . . . . . தோற்றேன் –
என்னுடைய நினைவு தன்னைப் புத்தி பண்ணுங்கோள்;
அவன் முனிவிலே அகப்பட்ட நான் இனி உங்கள் முனிவிற்கு மீளுவேனோ?
ஹிதமுமாய்ப் பிரியமுமான முனிவிலே அகப்பட்ட நான்,
ஹிதம் இல்லாததுமாய்ப் பிரியம் இல்லாததுமான உங்கள் முனிவிற்கு மீளுவேனோ?
உங்கள் கோபம் சேஷி இடம் போகாமல் இருக்க -அஹிதம் -ஸ்வரூப விரோதம் -அப்ரியம்
அவன் கோபமோ
ஆஸ்ரித வாத்சல்யம் -பிரியம் –
ஆஸ்ரித விரோதி நிரஸனம் -ஹிதம் –

முனிந்து சகடம் உதைத்து –
முலை வரவு தாழ்த்தது என்று சீறி நீட்டின திருவடிகளுக்கு இலக்காய்ப் பொடி பட்டதாயிற்றுச் சகடம்.
‘முலைப் பாலை விரும்பினவராய்த் திருவடிகளை மேலே நிமிர்த்தார் அழுதார்’ என்கிறதன்றோ?
‘சிக்ஷேப் பரணா வூர்த்வம் ஸ்தந்யார்த்தீ ப்ரருரோத ஹ’–என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 6 : 1.

மாயப் பேய் முலை உண்டு –
‘முலையை நினைத்துச் சீறினான்’ என்று முலை கொடுக்கத் தாய் வடிவு கொண்டு வந்த
வஞ்சனை யுடையவளான பேய்ச்சியை முடித்து.

மருதிடை போய் –
‘முலை உண்டால் தவழுமத்தனை அன்றோ?
புறம்பு நின்றும் வந்து.நலிகை அன்றிக்கே, நின்ற இடத்தே நின்று தப்பாமல் கொல்ல நினைத்த
யமளார்ஜுனங்களை -மருத மரங்கள் இரண்டனையும் பொடி படுத்தி.

கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த –
அசுர ஆவேசத்தாலே ஒன்று கனிந்த விளவாய், ஒன்று கன்றாய் நின்றது;
அதிலே ஒன்றை இட்டு ஒன்றை எறிந்து இரண்டையும் முடித்த.

கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் –
அழியுமற்றையும் அழித்தான்: அழியாததனையும் -ஸ்த்ரீத்வம் -அழித்தான்.
வன்மையாலே அழித்தான் அவற்றை; மேன்மையாலே அழித்தான் இவளை.
அவற்றின் கையிலே தான் அகப்படாமல் தப்பித் தன்னைத் தந்த உபகாரத்துக்கு எழுதிக் கொடுக்கிறாள் காணும் ‘பிரானுக்கு’ என்று,
சேஷியான தன்னை உண்டாக்கி, என்னைச் சேஷத்துவத்தினுடைய எல்லையிலே நிறுத்தினான்.
‘என்னுடைய பல பிறவிகள் கடந்தன’ என்கிற அவதாரங்களைப் போன்று பரப்புப் போருங்காணும்

‘பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி’-என்பது, ஸ்ரீகீதை, 4 : 5.

இவ் வவதாரத்தில் இவளைப் பெறுகைக்குச் செய்த செயல்களும் அவனுக்கு.
அடியார்களிடத்துள்ள வாத்சல்யத்தின் காரியமான முனிவே அன்றோ?

கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் –
‘ஆகையால் ‘அதோஸ்மி லோகே வேதேச ப்ரதித: புருஷோத்தம:’ என்பது, ஸ்ரீ கீதை, 15 : 18.
‘ஜாநாதி புருஷோத்தமம்’ என்பது, ஸ்ரீ கீதை, 15 : 19.

வேதத்திலும் ஸ்ம்ருதியிலும் புருஷோத்தமன் என்று சொல்லப்படுகிறேன்’ என்றும்,
‘என்னைப் புருஷோத்தமன் என்று எவன் தெரிந்து கொள்ளுகின்றானோ’ என்றும் சொல்லுகிற
தன்னுடைய ஆண் தன்மையைக் காட்டிக் காணும் இவளுடைய பெண்மையைக் கொள்ளை கொண்டது.

பெண்மை தோற்றேன் –
தோலாதது தோற்றேன்.

முனிந்து இனி-
இனி மீட்கலாம் என்றே நினைக்கிறது?
மீட்க நினைக்கிற நீங்கள் அவனுடைய வெற்றிச் செயல்கட்கு முன்னே அன்றோ மீட்கப் பார்ப்பது?

என் செய்தீர் –
எனக்கு அநுகூலர்கள் ஆனீர் அல்லீர்;
மீட்கத் தொடங்கினது தலைக் கட்டிற்று அன்று.

அன்னைமீர்காள் –
பிறந்தது முதற்கொண்டு என் இயல்பினை அறிந்து போருகிற நீங்கள் மீட்கப் பார்ப்பதே!
அவன் செய்த உபகாரங்களை அறியாமல் அன்றோ நீங்கள் பொடிகிறது?
‘அவன் செய்த உபகாரங்கள் மறக்க ஒண்ணாதாகில் நினைக்கிறாய்;
பெற்று வளர்த்த எங்களுடைய உபகாரமும் நினைக்க வேணுங்காண்!’ என்ன,

முன்னி அவன் வந்து வீற்றிருந்த –
உபகாரத்தில் முற்பாடன் அவன் காணுங்கோள்.
முன்னி – முற்பாடனாய் நின்று;
‘பூர்வஜ-முன்னே உண்டாவனவனே’ என்னும்படியே, என்னைப் பெறுகைக்குக் காலத்தை
எதிர் நோக்கினவனாய்க் கொண்டு தன் வேறுபாடு தோற்ற இருக்கிற.

கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே –
கொண்டு புக்குக் காட்டுவார் தாழ்வே; அங்குள்ளன எல்லாம் பக்குவ பலமாக இருக்கும்.
கனிந்த மரம் கண்டால், ‘அசுர ஆவேசம் உண்டு’ என்று அஞ்ச வேண்டாத சோலை.

காலம் பெற என்னைக் காட்டுமினே –
இக் குடிக்கும் எனக்கும் பரிஹாரம் ஒன்றே அன்றோ?
பின்னையும் என்னை அங்கே கொண்டு போய் விடுதலைத் தவிரீர்கோள்;
நான் உளேனான போதே அதனைச் செய்யப் பாருங்கோள்.
பின்பு கதே ஜலே சேது பந்தம் -தண்ணீர் சென்ற பிறகு அணை கட்டப் பாராமல்,
நான் ஜீவிக்கும் எல்லையிலே காட்டுங்கோள்

—————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading