பகவத் விஷயம் காலஷேபம் –61– திருவாய்மொழி – -2-7-1…2-7-6—-ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

கேசவன் தமர் பிரவேசம் –

ஆடியாடியிலே -வாடி வாடும் -என்கையாலே ஒரு நீர்ச் சாவியாய் வாடினபடி சொல்லிற்று –
அந்த ஒரு நீர்ச் சாவியானது தீர காரார் கருமுகில் கலந்து வர்ஷித்த படி சொல்லிற்று –அந்தாமத்து அன்பில் –
அப்படி வர்ஷித்த படியாலே –ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன்-என்று வெள்ளமிட்டு பெருகின படி சொல்லிற்று வைகுந்தா மணி வண்ணனில்
எமர் கீழ் மேல் ஏழேழு பிறப்பும் மா சரிது பெற்று -என்கையாலே அவ்வெள்ளம் இரு கரையும் புரண்ட படி சொல்லுகிறது கேசவன் தமரில்-

இவர் ஆடியாடியில் பட்ட ஆர்த்தி தீர வந்து கலந்த படி சொல்லிற்று அந்தாமத் தன்பு
அக்கலவியால் பிறந்த ப்ரீதி அவனதானபடி சொல்லிற்று -வைகுண்ட மணி வண்ணன் –
அந்த ப்ரீதி தான் ஆழ்வார் ஒருவர் அளவிலும் அன்றிக்கே நம்மோடு பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும்
வெள்ளமிட்டுப் பெருகின படியைச் சொல்லுகிறது இத் திருவாய் மொழியில் -(வைகுந்த மணி வண்ணா -அதி சங்கை போக்கி -இதில் -எமர் கீழ் மேல் ஏழு பிறப்பும் –அதி சங்கா நிவர்த்தகம் அங்கு-இங்கு -ஆழ்வார் சம்பந்திகள் அளவும் –
உன்னை நான் பிடித்தேன் சிக்கனவே -உன்னை எங்கனம் – விடுவேனோ -முடிவில் இதுவே லஷ்யம் அங்கு –உபக்ரமம் அப்பியாசம் உப சம்ஹாரம் –
இங்கு -முதல் – எமர் கேசவன் தமர் ஆனார்கள் –மேவும் தன்மையன் -ஆக்கினான் -பகவத் வ்யாமோஹ பரம் இங்கு)

சர்வேஸ்வரன் ஆழ்வாரோடு வந்து சம்ச்லேஷித்து அத்தாலே பிறந்த ப்ரீதி தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே தம்மோடு
பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும் பெருகின படியை –மா சதிர் இது பெற்று -கண்டு -இது இவன் என் பக்கல்
பண்ணின பஷபாத அதிசயம் இறே-என்று இனியராய் தம்மை விஷயீகரிக்கைக்கு ஈடான குண சேஷ்டிதாதிகளை அனுசந்தித்து
அவற்றுக்கு வாசகமான திருத் த்வாதச நாமத்தாலே அவனைப் பேசி அனுபவிக்கிறார்
சர்வேஸ்வரன் ஒருவனை விஷயீகரித்தால்-அது பின்னை அவன் அளவிலே நில்லாது இறே –

மரணாந்தாநி வைராணி -ருஷிகள் குடியிருப்பை அழித்து -மைதிலியைப் பிரித்து நம் உயிர் நிலையிலே நலிந்தால் போலே
ஸ்ரீ ஜடாயு மகாராஜரை நலிந்து -இவை எல்லாம் செய்ய மாட்டானே இனி இவன்
நிர்வ்ருத்தம் ந பிரயோஜனம் –இவன் ஜீவிக்கிற நாளிலே நாம் செய்யும் நன்மை இவன் விலக்காது ஒழிவது காண் என்று இருந்தோம்
-அது அந்நாளிலே பெற்றிலோம் -நாம் தேடி இருந்தது முந்துற முன்னம் சித்திக்கப் பெற்றோம் இறே
க்ரியாதாம் அஸ்ய சம்ஸ்கார -இவன் நான் செய்யும் நன்மை விலக்காதனான அளவு பிறந்த இன்றும் இழக்க வேணுமோ -வேண்டுவன செய்யப் பாரும்
மமாப்யேஷ யதா தவ —யுத்த -114-99–நீர் இறாய்த்து இருந்தீர் ஆகில் குடல் துடக்குடையாரிலே ஒருவன் செய்யும் அத்தனை அன்றோ (புதல்வரால் பொலிந்தார் உந்தை -என்று அன்றோ ஸ்ரீ விபீஷணனை பார்த்து பெருமாள் வார்த்தை -குடல் துடக்கு -சாமான்ய சம்பந்தம் -)
நாம் இவனுக்கு வேண்டுவன செய்ய நீர் பின்னைக் கடக்க நில்லீர்-என்றார் இறே
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பக்கல் ஓரம் ராவணன் அளவும் சென்றது இறே

மகாரஜர்க்கு சத்ரு என்று வாலியை நிரசித்து வைத்து மகா ராஜர் கண்ண நீர் பொறுக்க மாட்டாதே
-சஞ்ஜாத பாஷ்ப -கிஷ்கிந்தா -23-24-என்று தாமும் கண்ண நீர் விழ விட்டார் இறே
தர்மே மனச்ச தே பத்ர –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-19-27-ஸ்ரீ மாலா காரர் பக்கலிலே விஷயீ காரம் அவர் சந்தானத்து அளவும் சென்றது இறே (போகங்கள் இங்கும் ஸ்வர்க்கத்திலும் -திவ்ய லோகம் அடைவாய் -தர்மத்தில் உன் உள்ளம் நிற்கும் -சந்ததிகளுக்கு தீர்க்க ஆயுள் -ஸ்வர்க்கம் கிட்டும் -ஸூர்யன் இருக்கும் வரை இவை இவை நடக்கும் -என்று ப்ரஹ்மாதிகள் போலே அன்றோ ப்ரீதியால் கண்ணன் மாலா காரருக்கு அருளினான்  )
ஸ்ரீ கண்டா கர்ணன் பக்கல் பண்ணின விஷயீ காரம் அவன் தம்பி யளவும் சென்று -நீ அவனுக்கு நல்லையாகில் அவன்
முன்னாகப் போ -என்று அருளிச் செய்தான் இறே-(ஸ்வர்க்கமும் அடைந்து இந்திரன் போலே அனுபவித்து -சாயுஜ்யம் அடைவாய் -இவன் தம்பிக்கு இவன் போவதற்கு முன் நீயும் அடைவாய் )
குபேரன் கண்டா கர்ணனுக்கு திரு அஷ்டாஷர மந்த்ரமும் த்வாதச அஷர மந்தரத்தையும் உபதேசித்து த்வாரகை சென்று
ஸ்ரீ கிருஷ்ணனை ஆஸ்ரயிக்க உபதேசித்தார் –

எம்பார் இத் திருவாய் மொழியை அருளிச் செய்யப் புக்கால் -ஸ்ரீ வைஷ்ணவன் ஆனேன் என்கிறார் என்பாராம்
வைஷ்ணத்வ சிஹ்னம் இறே திரு த்வாதச திரு நாமம் –
ஆழ்வாருடைய நெடுமாற்கு அடிமையும் -எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமையும்- இரண்டாயிற்று நெடுமாற்கு அடிமை –
அதில் எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமை இத் திருவாய் மொழி –

————————————————————–

அவதாரிகை –

சம்பந்தி சம்பந்திகள் பக்கலிலும் எம்பெருமான் அபிநிவிஷ்டனான படியைக் கண்டு
இது எல்லாம் என் பக்கல் உண்டான விஷயீகார அதிசயம் இறே -என்று ஹ்ருஷ்டராகிறார் –

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-

நாராயணனாலே – நிரதிசய வாத்சல்யத்தால் –எமர் எல்லாம் கேசவன் தமர் -அவன் தமர் இவர் எமரானால் தான் –ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ -வாழ்வு என் என்று கொண்டாடுகிறார்
ஏழு ஏழு -நம் அளவும் வர மீண்டும் மீண்டும் இத்தையே அனுசந்தானம் செய்ய வேண்டுமே-

கேசவன் தமர்
1-பிரசஸ்த கேசனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் -என்னுதல் –
2-விரோதி நிரசன சீலதையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்
3-தஸ்மாத் கேசவ நாமவான் -என்கிறபடியே சர்வ நிர்வாஹனான நிலையில் தோற்று இருக்குமவர்கள் என்னுதல்
சர்வேஸ்வரன் உடையார் -என்றாயிற்று -ஆழ்வார் இவர்களை விரும்புகிறது-(1-ஸ்வரூபம் -ப்ரஹ்மாதிகளுக்கும் -நியாந்தா/ 2-ரூபம் -ஸுரி பெருமாள் -பிரசஸ்த கேச பாசம் உள்ளவன் / 3-குணம் -கிலேச நாசன் -கேசவா என்ன கெடும் இடராய எல்லாம் கெடுமே /4-சேஷ்டிதங்கள் கேசி ஹந்தா –நான்கையும் சொல்லும் கேசவ திரு நாமம் )
எமர் -என்று ஆழ்வாருடைய சம்பந்தம் கொண்டாயிற்று அவன் இவர்களை விரும்புகிறது
இத்தால் ஒரு வைஷ்ணவ அபிமானமே வேண்டுவது அவன் விஷயீகரிக்கைக்க் என்றபடி
கேசவன் தமர்
அவனுடைய அவயவ சௌந்த்ர்யத்திலே தோற்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
எமர் கீழ் மேல் ஏழேழு இறப்பும் கேசவன் தமரானார்கள் –
ஏகாஹம் அபி கௌந்தேய பூமிஸ் தமுதகம் குரு குலம் தாரயதே தாத சப்த சப்த ச சப்த ச –என்கிறபடியே தச பூர்வான் தசாபரான் ஆத்மா நஞ்ச —
மாசரிது பெற்று
1-விதி சூழ்ந்ததால் என்கிற ஆகஸ்மிக பகவத் கிருபை யாதல்
2-மாதவன் என்றதே கொண்டு என்கிற உக்தி மாத்ரத்தை யாதல்
3-தம் பெற்ற பேற்றை தம்மோடு சம்பந்தம் உடையாரும் பெறும்படியான பேற்றை பெற்று என்னுதல்
மா சரிது பெற்று
பெரும் சரிதுபெற்று -தடக்கை சதுரனைப் பெற்று என்றபடி
தந்தலையால் வந்ததாகில் இறே சாவதியாய் இருப்பது
இது பெற்று
காணக் காண அவன் சிரசா வஹிக்கிறபடி
நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
நம்மோடு சம்பந்தமுடையாரையும் அவன் இப்படி விஷயீ கரிக்கிறது நம்முடைய சம்பத்து இறே
நம்முடைய வாழ்வு –
ஸ்ரீ வைஷ்ணவ சம்பத்து
வாய்க்கின்றவா –
ஊற்று மாறாதே மேன்மேல் என பெருகி வருகிறபடி —ஏழ் படி கால் என்றது தான் ஓர் அளவு இல்லை –இன்று நம் அளவும் வரச் செல்லுகிறது இறே –
இப்படி விஷயீ கரிக்கைக்கு ஹேது ஹேது என் என்னில்
ஈசன்-
வகுத்த ஸ்வாமி யாகையாலே
என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் –
கண் அழகாலே என்னை அனந்யார்ஹன் ஆக்கி தன வடிவழகை என்னை அனுபவிப்பித்தவன்
விண்ணோர் நாயகன் எம்பிரான் எம்மான் –
நித்ய ஸூ ரிகளைத் தோற்ப்பிக்குமா போலே -என்னை அவ்வடிவு அழகைக் காட்டித் தோற்ப்பித்து-என்னை அவ்வடிவு அழகை அனுபவிப்பித்த உபகாரகன் –
நாராயணனாலே –
தன் மேன்மையைப் பாரதே உகவாதாரையும் விட மாட்டாதபடி வத்சலனாய் உள்ளவனாலே சமிதை பாதி சாவித்திரி பாதியாக
வன்றிக்கே-அவனுடைய நிர்ஹேதுக கிருபையாலே –
திருக் கண்கள் அழகையும் திருமேனி அழகையும் -இரண்டையும் -காட்டி அருளியது காருண்யத்தாலே -என்றபடி
நாராயணனாலே -எமர் கீழ் மேல் ஏழேழு பிறப்பும் -கேசவன் தமரானார்கள் -மா சரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா-(உபாயமாக நாராயணனை பற்றி )
நாராயணனாலே என்ற இடம் –மாசதிரினுடைய உபபாதனம் -நாராயணன் ஆகிற பெரும் பேற்றைப் பெற்று கேசவன் அடியார்கள் ஆனார்கள் என்றவாறு -(நாராயணனாலே -முதல் வேற்றுமை ஆக்கி ஆகிய – வாத்சல்யம் -மா சதிர் – கிருபை -ஆகிய பேறு)

—————————————————————————————

அவதாரிகை –

நாராயணனாலே என்று நாராயண சப்தம் பிரஸ்துதம் ஆயிற்றே -அதுக்கு அர்த்தம் அருளிச் செய்வதாக சப்தத்தை உபாதானம் பண்ணுகிறார்

நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2-

கீழ் யுக்தமான –நாராயண -அர்த்தம் சொல்லி –ஸூ விஷய பக்ஷபாதத்தை அருளிச் செய்கிறார் –
நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன்–நாரணன் -திரு நாமம் சொல்லி –எண் பெருக்கு அந்நலத்து ஒண் புகழ் ஈறிலா -வண் புகழ் நாரணன் -திண் கழல் சேரே -கீழே
வேதமயன்-அந்த நாரணன் சப்தத்தையே வேதங்கள் பிரதானமாக பிரதிபாதிக்கப்படும் —ப்ரஹ்மம் ஆத்மா சத் பொதுவான சொற்கள் –நாராயணனையே குறிக்கும் –
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை-த்ரிவித காரணமும் இவனே –
காரணம் -கிரியா ஹேது -தண்டம் சக்கரம் – கிரியை -சுழலுதல் –கருமம் -குடம் –அந்தர்யாமி -நிர்வாககன்-என்றபடி –
சீரணங்கு அமரர்-குணத்தால் உயர்ந்த திவ்யர் —ஸ்ரீ லஷ்மி -சீரணங்கு என்றுமாம் –
பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று-தேவர் முனிவர் மனுஷ்யர் -யாவரும் தொழுது ஏத்தும் படி
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே-எனக்கு பிரகாசித்த -ஸமஸ்த விபூதி நாதன் இவற்றை காட்டி பிரகாசிப்பித்து அருளிய உபகாரம் –
அமலன் ஆதி பிரான் -தானே அமலன் ஆதி என்று காட்டி அருளிய உபகாரகன் போலே
என்னை அநந்யார்ஹன் ஆக்கி அருளிய சேஷி -ஸ்ரீ யபதி-என்றவாறு –
கேசவன் நாராயணன் மாதவன் -ஸ்ரீ யபதி –மாதவன் பேர் சொல்வதே ஒத்தின் சுருக்கு –
வங்க கடல் கடைந்த –மாதவனை கேசவனை –நாராயணனே முதல் பாசுரம் -கேசவன் மூர்த்தி சொல்லி-அவனே -திருமாலே -கோதோ உபநிஷத்

நாரணன் –இதுக்கு அர்த்தம் என் என்னில்
முழு வேழ் உலகுக்கும் நாதன்
சர்வ ஸ்வாமி-
இவ்வர்த்தத்தில் பிரமாணம் என் என்னில்
வேதமயன்
நாராயண பரம் ப்ரஹ்ம இத்யாதிகளால் சர்வ ஸ்வாமி என்று ஓதப்படுகிறவன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன்
தன் விபூதியில் காரணமாயும் -கார்யமாயும் -உதகா ஹரணம் ஆகிற பலமாயும் வரக் கடவதான இவற்றுக்கு நியந்தாவாய் உள்ளான் –
க்ரியா சாதனம் -அதடியாக வரும் க்ரியை -தத் சாத்தியமான கார்யம் -இவற்றுக்கு நிர்வாஹகனாய் இருக்கும் என்றுமாம்-(காரணம் -மண் / கார்யம் -குடம் / கிரியை -தண்ணீர் கொண்டு வரும் பலன் -போலவே-பஞ்ச பூதங்கள் /அண்டாதிகள் /ஆத்மாக்கள் பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் பலனுக்காக- -)
காரணம்-செயல்பாடு -பலன் -என்றுமாம் (விசிஷ்ட ப்ரஹ்மம் -மூன்றுக்கும் -நிமித்த உபாதான சஹகாரி -ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டா ப்ரஹ்மம் -மண் மாறும் -/ சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம் -நிமித்த -குயவன் / ஸ்தூல விசிஷ்ட சித் அசித் ப்ரஹ்மம் பலன் -ஞான சக்தாதி கல்யாண குண- விசிஷ்ட ப்ரஹ்மம் சஹகாரி-அபின்ன நிமித்த காரணம் ப்ரஹ்மம் –சதேவ சோம்ய- -ஏக மேவ அத்விதீயம் /)
எந்தை
எனக்கு ஜனகன் ஆனவன்
சீரணங்கு
ஸ்ரீ யான அணங்கு -என்று தெய்வப் பெண் என்றபடி -பெரிய பிராட்டியார்
அன்றியே
சீரணங்கு அமரர்
நித்ய ஸூரிகளுக்கு விசேஷணம் ஆகவுமாம்
சேஷத்வ அனுரூபமான ஆத்மா குணங்களை தரியா நிற்பாராய்-அப்ராக்ருத ஸ்வபாவரான நித்ய ஸூரிகள்
பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று வாரணத்தை மருப்பொசித்த பிரான்
இவ்வருகு உண்டான சம்சாரிகள் -இப்படி சிறியார் பெரியார் என்ற வாசி இன்றிக்கே எல்லாரும் எழுத்து வாங்கி ஏத்தும் படி நின்று-(அங்குலி விச்சேதம் -ஏகலைவன் போலே -அக்ஷரம் எழுதுவது-உதிரத்தில் பதித்து -குழந்தைக்கு பெயர் -தாஸ்யம் சதுஷ்ட்யம் என்பர் )
குவலயா பீடத்தின் கொம்பை அநாயாசேன முறித்த உபகாரகன் –ந சமம் யுத்த மித்யாஹூ-என்னும்படியாக
என் மாதவனே —
நான் தோற்ற துறை
மாதவனான நாராயணன் எந்தை
ஸ்ரீ மன் நாராயணன் எனக்கு ஸ்வாமி என்கிறார்-

————————————————————————————————-

அவதாரிகை –

கீழே –மா சதிரிது பெற்று -என்றார் -இந் நன்மைக்கு அடி என் என்ன -நினைவு இன்றிக்கே இருக்க அந்தபுர வாசிகள் சொல்லும்
வார்த்தையைச் சொன்னேன் -என்கிறார் –ஜாமாதா-தயிதஸ்தவேதி -பவதீ சம்பந்த த்ருஷ்ட்யா ஹரிம் பச்யேம –என்றார் இ றே பட்டர் -(என் திருமகள் –சேர் மார்வன் –என்றபடி -அந்தப்புர வாசிகள் –ஸ்ரீ வைஷ்ணவ வார்த்தை அன்றோ –நாராயணன் -கேசவன்- உபாசகர்களும் சொல்வார்களே)

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3-

மாதவன் என்றதே கொண்டு –அஹ்ருதய யுக்தி
என்னை –வாசி அறியாத என்னை
இனி -உக்திக்கு அனந்தரம்
இப்பால் பட்டது-மேல் உள்ள காலங்கள் எல்லாம்
யா தவங்களும் சேர்கொடேன்-அவித்யாதிகள் சேரக் கூடாது என்று சங்கல்பித்து
என்று என்னுள் புகுந்திருந்து-என் நெஞ்சுக்குள் புகுந்து -அநன்ய பேரனாக இருந்து
தீதவம் கெடுக்கும் -தீது புத்தி பூர்வகமாக -தெரியாமல் இரண்டையும் கெடுத்து
அமுதம் செந்தாமரை கட்குன்றம்-ஸ்திரமான அழகான வடிவு
கோதவமிலன் -குற்றம் இல்லாத
கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே-கருப்புக்கட்டி –கோதும் அவமும் -இல்லாத –அபூத உவமை -ஜாலம் சேர்த்தால் தானே சக்கரை உண்டாகும் -ஜல வாசனை வருமே -வஸ்து அந்தர சம்சாரக்கம் -பாக தோஷம் –உண்டாகும் –ஈஸ்வரனுக்கு கோது அவன் -உபகார ஹேது ஸகத்வத்வமும் -அபேஷா நிரபேஷமாக செய்யும் –அவம்-ஸூ பிரயோஜன அர்த்தத்வமும் -சொத்தை ஸ்வாமி பெறுவது போலே /என் அமுதம் கறுப்புக் கட்டி கண்ணனே -தானே –

மாதவன் என்றதே கொண்டு
நான் மாதவன் என்ற உக்தி மாதரத்தைக் கொண்டு
இத்தையே திரு உள்ளத்திலே குவாலாகக் கொண்டு
என்னை-அல்லாத திரு நாமங்களுக்கும் இதுக்கும் வாசி அறிவதே என்று இத்
அல்லாத திரு நாமங்களுக்கும் இதுக்கும் வாசி அறியாத என்னை
இனி
முன்பு கழிந்த காலம் கழிந்தே விட்டது இறே
மேல் அத்யல்ப காலமாய்த் தோன்றா நின்றதாயிற்று ஈஸ்வரனுக்கு
பழுதே பல காலும் போயின என்று ஈஸ்வரனைக் கிட்டின சேதனன் இருக்கும் இருப்பைத் தான் என் பக்கலிலே இரா நின்றான்
புத்த்வா காலம் அதீ தஞ்ச முமோஹ-என்று இரா நின்றான் ஆயிற்று
இப்பால் பட்டது
அணைக்கு கிழக்குப் பட்ட நீரோ பாதி இறே போன காலம்
இனி மேல் உள்ள காலமாகிலும்
யா தவங்களும் சேர் கொடேன் என்று
உன்னை யாதொரு தபஸ்ஸிலும் புக்கு கிலேசிக்க விடேன் என்று
அம்மி துணையாக ஆறு இழிகை இறே இவனை விட்டு உபாயாந்தரத்தைப் பற்றுகை
அவங்கள் –1-நரக ஹேதுவான அவித்யாதிகள்-
2-புறம்பே சில பிரயோஜனங்களைக் கொண்டு போக விடுதல் -3–அயோக்யன் என்று அகல விடுதல்-
4–உபாயாந்தர பரிக்ரஹம் பண்ண விடுதல் செய்யேன் என்று
என்று
ஏதத் வ்ரதம் மம-என்கிறபடியே சங்கல்பித்து
என்னுள் புகுந்திருந்து
இப்படி சங்கல்பித்து நெடுங்கை நீட்டாக இருக்கை அன்றிக்கே
என் ஹிருதயத்திலே வந்து புகுந்து
புகுந்தாலும் போக்கு வரத்து உண்டாமாகில் வாலி போன வழியை அடைத்து மகா ராஜர் குறும்பு செய்தால் போலேயாம் என்று
இருந்து-ஸ்தாவர பிரதிஷ்டையாக இருந்து
புகுந்திருந்து
இவரை வர நிறுத்த ஒண்ணாதே இவருக்குமாக தான் புகுந்து இருந்தான் அத்தனை
புகுந்து செய்த கிருஷி ஏது என்னில்
தீதவம் கெடுக்கும்
தீ தாவது -பொய் நின்ற ஞானத்துக்கு முன்பு புத்தி பூர்வகமாகப் பண்ணிப் போந்த பாபம்
அவமாவது ஞானம் பிறந்த பின்பு ப்ராமாதிகமாகப் பண்ணினவை
இரண்டாலுமாக பகவத் பிராப்தி பிரதிபந்தக கர்மங்களைச் சொல்லுகிறது
அன்றிக்கே
கோக் நே சைவ ஸூ ராபே ச சோரே பக்ன வரதே ததா -நிஷ்க்ருதிர் விஹிதா சத்பி க்ருதக்னே நாஸ்தி நிஷ்க்ருதி- என்கிறபடியே
நிஷ்க்ருதி உள்ள பாபங்களையும் இல்லாத பாபங்களையும் சொல்லிற்று ஆகவுமாம்
இவற்றைக் கெடுப்பது கஷாய பானத்தை பண்ணுவித்தோ என்னில்
அமுதம்
தன்னுடைய போக்யதையை அனுபவிப்பித்தாயிற்று
செந்தாமரை கட்குன்றம்
ரச நேந்த்ரியத்துக்கே யன்றிக்கே கண்ணுக்கும் போக்யமாய் இருக்கை
குன்றம்
இத்தலையில் தீதும் அவமும் போக்கினனாய் இருக்கை அன்றிக்கே தனக்கு உண்டாய் கழிந்தது என்று தோற்றும்படி
வடிவில் பிறந்த ஔஜ்வல்யம்
வ்யசநேஷூ மனுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித -என்று இருக்குமவன் இறே

கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –
கோதாவது-த்ரவ்யாந்தர சம்சர்க்கத்தாலே வருமது
அவமாவது பாகத்தாலே வருமது
த்ர்ஷ்டாந்திகத்தில் கோதும் அவமும் ஆகிறது ஆன்ரு சம்சயத்துக்கு ஆதல் -இவனுக்கு உபகாரமாகவாதல் விஷயீகரிக்கை
தனக்கு புறம்பாய் இருப்பதொரு போக்ய வஸ்து இல்லாதபடி தான் போக்யனாய் இருக்கும்
எம்மான்
நான் வேறு ஓன்று போக்யம் என்று இராதபடி என்னைத் தோற்ப்பித்தவன்
என் கோவிந்தனே
‘கிருஷ்ணாவதாரமும் தமக்கு என்று இருக்கிறார்
ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோ -பெரியாழ்வார் திருமொழி -1-7-1-இறே

—————————————————————————————-

அவதாரிகை –

என்னோடு பரம்பரயா சம்பந்தம் உடையாரையும் கூட என்னைப் போலே யாக்கினான் ஒருவனுடைய
சாமர்த்தியம் இருக்கும் படியே -என்று விஸ்மிதர் ஆகிறார் –

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே –2-7-4-

ஸூ சம்பந்த குல சம்பந்தி பர்யந்தமாக செய்ய வல்ல சாமர்த்யன்
கோ விந்தன் -கோ ஸம்ருத்தி
குடக்கூத்தன் -தனம் விஞ்சி ப்ராஹ்மணர் -யாகாதிகள் போலே ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக
கோவலன்-ஐஸ்வர்யம் சேஷ்டிதம் அனுகூலமான ஜென்மம்
என்று என்றே குனித்து–தனி தனி கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் -ஒன்றுக்கும் ஒரு சஹஸ்ர நாமம் -சொல்லி –
பரத்வ -ஸ்ரீ யபதி ஸுலப்யம் -சொல்லி கூத்தாடி
தேவும் தன்னையும் -பரத்வத்தையும் தானான நீர்மையையும்
பாடியாடத் திருத்தி-நித்யர்களில் ஒரு கோவையாக்கி
என்னைக் கொண்டு என்-பாவம் தன்னையும் பாறக் கைத்து -பிரதிபந்தகங்களை ஒட்டி
எமர் ஏழேழு பிறப்பும்-மேவும் தன்மையம் ஆக்கினான் -தன்னை பிராபிக்கும் தன்மை
வல்லன் எம்பிரான் விட்டுவே –நினைத்ததை செய்யும் வல்லவன் -சர்வ வ்யாபி -ஒருவரை பிடிக்க ஊரை வளைப்பாரை போலே

கோவிந்தன் –
ஸ்ரீ வைகுண்டத்தில் இல்லாததொரு சம்பத்து இறே இது –
கோ சம்ருத்தியால் உண்டான ஐஸ்வர்யம் உள்ளது இங்கேயே இறே -(வாக்மி ஸ்ரீ மான் -பூமி -பசுக்கள் -பெருமாள் வராஹ கிருஷ்ணன் மூவருக்கும் கோவிந்தன் சப்தார்த்தம் உண்டே )
குடக்கூத்தன் –
ப்ராஹ்மணர் ஐஸ்வர்யம் விஞ்சினால் யாகங்கள் பண்ணுமா போலே இடையர் ஐஸ்வர்யம் மிகுத்தால் செருக்குப் போக்கு விடுவது ஒன்றாயிற்று –
குடக்கூத்தாவது –அவாக்ய அநாதர-என்று இருக்கக் கடவ வஸ்து தைர்ய பங்கம் பிறந்து செருக்குக்குத் தலைச் சாவி வெட்டி ஆடினபடி இறே
கோவலன்
இவற்றுக்கு அடியான பிறப்புடையவன்-பிறந்து படைத்த ஐஸ்வர்யம் இறே இது
என்று என்றே குனித்து
இக் குணங்களை மாறாதே சொல்லா நின்று கொண்டு -உடம்பு இருந்த இடத்தில் இராதே ஆடி –
அவனுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்தால் இவருக்கு பேசாது இருக்க ஒண்ணாது இறே –
தேவும் தன்னையும்
தேவும் -என்கிறது – ஐஸ்வர்யத்தை –தன்னை -என்கிறது- ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை -அது இ றே தானான தன்மை
ஆத்மானம் நாதி வர்த்தேதா -என்றான் இ றே -வசிஷ்டர் –ஆத்மபூதம் பரதம் நாதி வர்த்தேதா-என்கிறான் என்று சிலர் சொல்லுவார்கள் –
பட்டர் -நீரான தன்மை யாகிறது ஆஸ்ரித பரதந்த்ரனாகை-உம்முடைய தம்பி சொன்ன வார்த்தையை மறுத்து நீரான
தன்மையை இழவாதே கொள்ளும் என்கிறார் -என்றார்
உன் தன்மையை இழக்காதே பரதன் சொல் படி கேட்க வசிஷ்டர் பெருமாள் இடம் சொன்ன வார்த்தை –
பாடியாடத் திருத்தி –
என்று என்றே குனித்து என்கிற இடத்துக்கும் –பாடியாட -என்கிற இடத்துக்கும் வாசி என்-என்னில்
கீழ் சௌலப்ய பரம்-
இங்கு ஐஸ்வர்யமும் சௌலப்யமும் இரண்டும் உண்டு
விஷய பேதத்தால் சொல்லவுமாம்
அன்றிக்கே என்று- என்றே- என்கிற இடம் அஹ்ருதயமான உக்தி மாத்ரமாய் –குனிக்கையாவது – உத்தியோகத்து அளவாய்
இங்கு-பாடியாட -சஹ்ருதயமாகப் பாடுவது ஆடுவதான படியாய்
என்று என்றே குனித்துப் பாடுவது ஆடுவதாம்படி -என்றாதல் –
திருத்தி –
தரிசு கிடந்த தரையைச் செய்காலாம் படி திருத்துவாரைப் போலே நித்ய ஸூரிகள் யாத்ரையே -யாத்ரையாம் படி திருத்தி –
என்னைக் கொண்டு -என் பாவம் தன்னையும் பாறக் கைத்து
என்னைக் கைக் கொண்டு -ஓர் உபாய அனுஷ்டானத்தை பண்ணுவித்து என்னில் -இப்போது இவர்க்கு அபசித்தாந்தமாம் —
பகவத் பிரசாதத்தாலே பெற்றார்க்கும் சொல்லுமதுக்கும் சேராது
ஆனால் என் சொல்லுகிறது என்னில் -சேற்றில் விழுந்த மாணிக்கத்தை எடுத்து கழுவி விநியோகம் கொள்ளுமா போலே என்னை
சுவீகரித்து என்னால் போக்கிக் கொள்ள ஒண்ணாத பாபங்களையும் உருமாய்ந்து போம்படி ஒட்டி-
எமர் ஏழேழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன்
இது தான் என் ஒருவன் அளவன்றிக்கே என்னோடு சம்பந்தம் உடையார் ஏழேழு பிறப்பும் தன்னைக் கிட்டுகையே
ஸ்வபாவமாக யுடையோம்பாம்படி பண்ணினான் –
எம்பிரான் விட்டுவே –
எனக்கு உபகாரகனான சர்வேஸ்வரன் –
நினைத்த கார்யம் செய்து தலைக் கட்ட வல்லவன்
சர்வ சக்தி மாட்டாதது உண்டோ –வ்யாப்தியும் தமக்காக –என்று இருக்கிறார் –

———————————————————————————-

அவதாரிகை –

திருமாலை யாண்டானோடே எம்பெருமானார் திருவாய் மொழி கேட்டருளுகிற நாளில் பாட்டுக்கள் தோறும் சில வார்த்தைகள் அருளிச் செய்து-(தம்மையும் தம் உடையராயும் விஷயீ கரித்த- அவனை கொண்டாடுகிறார் -முதல் நிர்வாகம் -திருமாலை ஆண்டான் )
இது அர்த்தமானாலோ -என்றால் -இது விஸ்வாமித்ரர் சிருஷ்டி -ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டறியேன் -என்று பணிக்குமாம் ஆண்டான்
ஆண்டான் இப்பாட்டுக்கு விச்வாமித்ர சிருஷ்டி வேண்டாவாய் இருந்ததீ-என்ன -இப்பாட்டால் தன் அவயவ சௌந்தர்யத்தாலே
என்னைத் தனக்கு ஆக்கினான் -என்கிறார் -என்று அருளிச் செய்து அருளினாராம்
அதுவும் கிடக்க பட்டர் அருளிச் செய்வது ஓன்று உண்டு –ஆழ்வாரையும் ஆழ்வார் பரிகரத்தையும்-விஷயீ கரித்து அத்தாலே
திருமேனியிலே பிறந்த ஔஜ்வல்யத்தை சொல்லுகிறது -என்று
விசோதிதஜட ஸ்நாதசசித்ர மால்யாநுலேபன மகார்ஹவஸநோ ராமஸ் தஸ்தௌ தத்ர ஸ்ரீ யா ஜ்வலன் –யுத்த -131-15-என்று
பெருமாள் பிராட்டி உடன் பட்டாபிஷேக திருக் கோலத்துடன் நின்றாப் போலே என்றவாறு –

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5-

ச பரிகரமாக அங்கீ கரித்ததால் வந்த உஜ்வலம்
விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விஷ்ணு -உடைய -முதல் திரு நாமம் –பாட்டுகளில் மரியாதை குலைய கூடாதே -உகரம் குற்றியலாக கொள்வது
இலங்கு -விளங்கும் -என்றவாறு
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு-விகசிதம் -விளங்கா நிற்கும் -அழகிய வடிவு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி-அம் சாரியை -மதி சீர் சங்கு -/ மலையே திரு உடம்பு -தாமரையே பாதம் -சாமானாதி கரண்யம்-/ உபமானமே உபமேயம் -பொருந்திய படியால் –
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
மதகு திறந்தால் போலே விட்டு விளங்கா நின்றுள்ள -சிவந்த ஒளியை உடைத்தான தாமரை போலே யாயிற்று
நாம் தோற்று விழும் திருவடிகள்தம்மை அணைத்த கைகுளிர நோக்கின திருக் கண்கள்
இவை உபமேயத்துக்கு உபமானம் நேராகப் போராமையாலே அது தன்னையே சிஷித்துச் சொல்கிறார்
அன்றிக்கே –விட்டுவுக்கு இலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் -என்று அந்வயம்-
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
சோபயன் தண்ட காரண்யம் -என்னுமா போலே இரா நின்றது வடிவு அழகு
தம்மை அணைத்த போதைக் குளிர்ந்த வடிவு இருந்தபடி –
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு
விட்டிலங்குகிற பிரகாசத்தை உடைய சந்தரனைப் போலே யாயிற்று ஸ்ரீ பாஞ்ச ஜன்யம்
சீர் சங்கு –
பகவத் பிரத்யாசத்தியாலே வந்த ஐஸ்வர்யம் –உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம் கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே –
பிரசாதத்தைச் சூடி கைப்புடையிலே கிடப்பாரைப் போலே அவன் வாயாலே ஊட்ட உண்டு -வடிவை பாராத் திருக்கையிலே சாயும் அத்தனை
சீர் சங்கு
உன் செல்வம் சால அழகியது -என்னும்படி வாயது கையதான ஐஸ்வர்யம் இறே –
சக்கரம் பரிதி –
கண்டதில் மின்னிற்று ஒன்றை உபமானமாகச் சொல்லும் அத்தனை இறே -ஆதித்யனைப் போலே அன்றே திரு வாழி வாழ்வான் இருப்பது (பத்ம பர்வத சந்த்ர -உபமானம்–கீழே விசேஷித்து சொல்லி இங்கு -விசேஷணம் சொன்னாலும் திருச் சக்கரத்துக்கு நிகர் ஆகாதே -ஆக சொல்லாமல் -கண்டத்தில் மின்னும் ஒன்றை சொல்லி விட்டார் அத்தனை )
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –
இவை இத்தனையும் தன் புகராலே முட்டாக்கு இடுமாயிற்று திரு அபிஷேகம் –
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து -ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவன் ஆனவனுக்கு –(மது சூதனன் தனக்கு என்றும் –மது சூதனனான விஷ்ணுவுக்கு என்று இரண்டு அன்வயம் )
விட்டுவுக்கு இலங்கு இத்யாதி -என்று முதலாக அந்வயம் –

——————————————————————————————–

அவதாரிகை –

தன் பக்கல் நான் பிரவணன் ஆகைக்கு எம்பெருமான் வருந்திற்று எல்லாம் தன் கிருபையாலே -என்கிறார் –

மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6-

கிருபா பாரவஸ்யம் -உஜ்வல்யம் -உபகாரம் -விட்டு வல்லன் -இவற்றுக்கு ஹேது -கிருபை தானே
மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
மது கைடபர் –ஹய சிரஸ் / கண்ணன் -/ உபாயாந்தர ப்ராப்யாந்த்ர சம்பந்தம் இல்லாமல்
நம் பிரதிபந்தகங்களை போக்கி என்றபடி -/அஹங்காராதிகள்–/ காரியமே அற்று –
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
ஸ்தோத்ர பாடல்களால் சூழ்ந்து -கல்ப கல்ப காலம் -பாடுவது -கல்ப கல்ப காலமும் நாம் ஒரு கால் பாட -அவன் அனுக்ரஹம் பண்ண
அவன் குணக் கூட்டங்களை சூழ்ந்து -ஸ்வயம் பிரயோஜனமாக -நின்று பாடி ஆட -பிறப்புக்கள் தோறும் -கல்ப கல்பம் -பல் நெடும் காலமாக -திருத்த முயலுவான் -அபிமுகனாக ஈடாக
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
சூழ்ச்சி -திட்டம் வைத்து என்னை பிடிக்க -தன் சொத்தை தான் பெற -எனக்கே -அசாதாரனமான விசேஷம் -பிரதம கடாக்ஷம் தொடங்கி பர பக்தி பர்யந்தமாக –
அவன் ஆனந்தத்துக்கு கைங்கர்யம் என்று உணரும் படி –அருள்கள் –
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே
கிருபை தடுக்க ஒண்ணாத்தாதே -அதுவே விதி -/ஏலு கிற பொருந்துகிற –எனக்கு தகுதியான -தாழ்ந்த நீசனுக்கு தக்கபடி என்றபடி –கிருபை -என்னை சூழ்ந்து -திரிவிக்ரமனையும் சூழ்ந்து -என்றபடியே -என் அளவுக்கு தன்னை தாழ்த்துக் கொண்டு கிருபை செய்து அருளினான் என்றபடி-

மது சூதனை யன்றி மற்றிலேன் என்று –
விரோதி நிரசன ஸ்வபாவன் ஆனவனை ஒழிய வேறு சிலரைத் தஞ்சமாக வுடையேன் அல்லேன் என்றாயாயிற்று இவர் இருப்பது (வேதங்களை மீட்ட மதுசூதனன் -கொழுப்பு -ரஜஸ் தமஸ்- கோடரி போலே உலகத்துக்கு -இருவர் -தானவர்களில் கொடியவர் -ஹயக்ரீவர் முகத்தில் வந்து –மது சூதனை )
சத்வம் தலை எடுத்த போது ஒரு கால் இவ்வார்த்தை சொல்லுமது நமக்கும் உள்ளது ஓன்று இறே -இவர்க்கு வாசி என் என்னில்
எத்தாலும் கருமமின்றி –
அந்த உக்திக்குச் சேர்ந்த அனுஷ்டானம் உண்டாய் இருக்கும்
ப்ராப்ய ஆபாசங்களிலும் பிராபக ஆபாசங்களிலும் நெகிழ்ந்து -அவனை ஒழிந்த எல்லா வற்றாலும் ஒரு பிரயோஜனம் இன்றிக்கே இருப்பர்

துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட -நின்றூழி யூழி தொறும்
1-ஸ்தோத்ராத்மகமான பாடல் -என்னுதல்
2-ஸ்துதிய குணங்களை விளாக்குலை கொள்ளும்படியான பாடல்கள் என்னுதல்
கல்பம் தோறும் கல்பம் தோறும் துதி சூழ்ந்த பாடல்களைக் கொண்டு பாடுவது ஆடுவதாம் படி பண்ணினான் –
நின்று
தேஹி மே-ததாமி தே- என்று பிரயோஜனங்களைப் பற்றி அகலுகை யன்றிக்கே இருக்கை-
இப்படி அவன் பண்ணுகைக்கு ஹேது என் -என்னச் சொல்கிறார் –
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய -விதி சூழ்ந்ததால்
விதி சூழ்ந்ததால் -எதிர் சூழல் புக்கு –
ஒருவனைப் பிடிக்க நினைத்தவன் அவன் போம் வரம்புக்கு எதிர் வரம்பே வருமா போலே -இவர் பிறந்த ஜன்மங்கள் தோறும்
தானும் எதிரே பிறந்து வந்தான் யாயிற்று
இவர் கர்மம் அடியாக பிறக்க -அவன் அனுக்ரஹத்தால் பிறந்து வந்த இத்தனை –சூழல் என்று அவதாரத்தைச் சொல்லக் கடவது இறே –
எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய -விதி சூழ்ந்ததால் -என்கிறார்
விதி என்கிறது பகவத் கிருபையை -பகவத் கிருபையை விதி என்பான் என் என்னில் -அவனுக்குத் தப்ப ஒண்ணாத தாகையாலே
நாம் நினைத்தவை தலைக் கட்ட வொட்டாத
கர்மம் போலே ஈஸ்வரன் நினைத்த கார்யங்களும் க்ருபா பரதந்த்ரனாய்த் தலைக் கட்ட மாட்டான்
வதார்ஹம் அபி காகுத்ஸ்த க்ருபயா பர்யபாலயத் -சுந்தர -38-34-
காகுத்ஸ்த-தங்களிலும் கிருபையே விஞ்சி ரஷித்துக் கொண்டு போரும் குடியிலே பிறந்தவர்
வதார்ஹமான காகத்துக்கு விட்ட அம்புக்கு உட்படக் கண்னழிவு பண்ணுமவர் இறே
எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே-
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து -ஸ்ரீ வாமனனாய் வந்து அவதரித்து -மூன்று அடியாலே த்ரைலோக்யத்தையும் திருவடிகளின்
கீழே இட்டுக் கொண்டு எல்லாரோடும் பொருந்தின -குள்ளர்களை திரிவிக்ரமன் என்று சொல்லும் படியான குறள் மாணாய் போலே-
சௌலப்யம் தானே பரத்வம் என்னும் படி என்னை விஷயீ கரிக்கைக்கு-(எனக்கே -இரண்டு தடவை /ஸ்வாமி -எனக்கே அசாதாரணமான / உபகாரம் -பண்ண ஒரு தடவை / கிருபையால் அருள்கள் செய்ய எனக்கே / எனக்கு என்ன கிருபையும் உபகாரமும் என்றபடி -)
ஒரு விதி சூழ்ந்தது -அம்மான் திருவிக்ரமனை என்னை அருள்கள் செய்ய -எனக்கு என்னவே ஒரு விதி சூழ்ந்தது

—————————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading