பிரவேசம் –
கீழில் திருவாய் மொழியில் –பருகிக் களித்தேனே -என்று ஹ்ருஷ்டராய் -அது தன்னை பாகவதர்களோடே உசாவி தரிக்க வேணும் என்று பாரித்து
அதுக்கு இவ்விபூதியில் ஆள் இல்லாமையாலே நித்ய விபூதியிலே நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு போதயந்த பரஸ்பரம் பண்ணி அனுபவிக்கக் கோலி-
நினைத்த போதே அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறாமையாலே மிகவும் அவசன்னராய் தம்முடைய தசையை ஸ்வகீயரான
ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமானுக்கு அறிவிக்கிறபடியை அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –
மகள் -17 திருவாய்மொழி /தாய் -7 திருவாய்மொழி /தோழி -3 திருவாய்மொழி -தானான திருவாய்மொழி -73-
தாய் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்வாபதேசம் -சங்கதி -இங்கே –
உபாய அத்யாவசேயம்–நமஸ் அர்த்தம் -பேறு தப்பாது என்று துணிந்து இருக்கை –
சம்பந்த உணர்த்தி –தோழி பாசுரம் -பிரணவம்
உபாய துணிவு -தாய் பாசுரம்
பலங்களில் பதற்றம் -த்வரை -மகள் பாசுரம் -பேற்றுக்கு த்வரை வேண்டுமே -நாராயணாய அனுபவம் –
பிரஜ்ஞா அவஸ்தைகள் –
உபாய அத்யாவசாயமா –ஸ்ரீ வைஷ்ணவர்கள் அறிவிக்கும் படி -இதுவும் ஓரு ஸ்வாபதேசம்-
முன் அஞ்சிறைய மட நாரையில்-தூது விட ஷமரானார்
வாயும் திரையுகளில் கண்ணால் கண்ட பதார்த்தங்கள் அடைய பகவத் அலாபத்தாலே நோவு படுகிறவாகக் கொண்டு அவற்றுக்குமாக நோவு பட ஷமரானார்
அவ்வளவு அன்றிக்கே –ஆற்றாமை கரை புரண்டு –தாமான தன்மை இழந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய்
அது தன்னிலும் தன் தசை தான் வாய் விட்டுப் பேச மாட்டாதே பார்ச்வஸ்தர் அறிவிக்க வேண்டும்படியாய்-ஸ்திதி கமன சயநாதிகளிலே
ஒரு நியதி இன்றியிலே அரதியாய் -விச்லேஷத்தில் துக்கத்தில் நோவு பட –இப்பெண் பிள்ளை தசையை அனுசந்தித்த தாயார்
-ராம கிருஷ்ண்யாத் யவதாரங்களைப் பண்ணி -ஆர்த்தரானார் ஆர்த்தி எல்லாம் பரிஹரிக்கக் கடவ ஸ்வபாவரான நீர் உம்மை ஆசைப்பட்ட இவள்
நோவு படப் பார்த்து இருப்பதே -என்று எல்லா அளவிலும் அவனையிட்டு பரிஹரித்து கொள்ளும் குடி யாகையாலே
அவன் திருவடிகளிலே பொகட்டு-இவளிடை யாட்டத்தில் நீர் செய்ய இருக்கிறது என் என்று கேட்கிற பாசுரத்தாலே தம்முடைய தசையை அருளிச் செய்கிறார்
காசை இழந்தவனுக்கும் -பொன்னை இழந்தவனுக்கும் -ரத்னத்தை இழந்தவனுக்கும் ஒத்து இராது இறே கிலேசம் –
காசு -விபவம் —காசினை மணியைச் சென்று நாடி -பெரிய திருமொழி –7-10-4-
தங்கம் -அர்ச்சாவதாரம் –செம்பொனே திகழும் -நம்பியை -1-10-7-
இரத்தினம் – அடியவர்கள் குழாம் —செழு மா மணிகள் சேரும் -5-8-9-
1-அவதாரத்திலே பெரு நிலம் நல்லடிப்போதை -1-3-10-அனுபவிக்க ஆசைப்பட்டு கிடையாமையாலே வந்த ஆற்றாமை –அஞ்சிறைய மடநாரையிலே-
2-நம்பியத் தென் குறுங்குடி நின்ற –1-10-9-என்று அர்ச்சாவதாரத்திலே அனுபவிக்க ஆசைப்பட்டு கிடையாமையாலே வந்த ஆற்றாமை –வாயும் திரைகளில்-2-1-
3-இதில் -2-4–அவன் தனக்கும் பிராண பூதரான-அறிவார் உயிரான – நித்ய ஸூரிகளை -அனுபவிக்க ஆசைப்பட்டு கிடையாமையாலே வந்த ஆற்றாமையாலே
அவற்றிலும் அதுக்கு ஆற்றாமை விஞ்சி இருக்கும் –அறிவார் ஆத்மாவில் அவன் மதம் தோற்றும் -ஞானி து ஆத்மைவ மே மதம்
நந்தன் தோல் காசு வழங்கினால் போலே -பிரசித்தம் –அத்யல்ப காலீயத்வம் -காசு –காசானாம் கால பேதாநாம்-சாமான்யம் –
அந்ய கால உபாதேய யோக்யதை அர்ஹம் இல்லையே -திருவிக்கிரம அவதாரம் -காலாந்தரம்
சர்வ கால அனுபவத்யம் -ஸ்வர்ண ஸ்தானம் – திருக்குறுங்குடி நம்பி அச் செம்பொன்னே திகழும்
செழு மா மணிகள்- ஸ்ரீ வைஷ்ணவர்கள் ரத்னங்கள் -திரு மழிசை ஆழ்வார் போல்வார் -சக்ராம்சம் -நித்ய சூரி தானே
நித்ய ஸூரிகள் திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறாமையாலே நோவு படுகிறதாகில்-பின்னை அவர்களைச் சொல்லிக் கூப்பிடாதே
அவனைச் சொல்லிக் கூப்பிடுவான் என் என்னில் -எங்கேனும் ஒரு காட்டில் ரத்னங்கள் பறி யுண்டாலும் நாட்டில் ராஜாவின் வாசலில்
அவன் பேர் சொல்லி இறே கூப்பிடுவது -அவர்களோட்டை சம்ச்லேஷத்துக்கும் கடவன் அவனாகையாலே அவனைச் சொல்லிக் கூப்பிடுகிறது
பகவத் விச்லேஷத்தில் உட்புக நின்றால் இறே பாகவத விச்லேஷம் தான் தெரிவது
பாகவத விஸ்லேஷ அதிசயம் -தெரிவது பெற்ற பகவத் சம்ச்லேஷம் –பூமா -வேறு ஒன்றும் கண்ணில் காட்டாதே -மற்று ஒன்றை காணா நிலை அன்றோ –
அது இழந்து பிரார்த்திக்கும் பொழுது தானே கண்ணில் படும் –
பகவத் சம்ச்லேஷம் இருக்கும் வரை பாகவத விச்லேஷத்தில் நெஞ்சு போகாதே –
பாகவத விச்லேஷத்தில் உள்ளே நின்றால் பகவத் விச்லேஷம் தெரிய வரும் -அவர்கள் இருந்தால் தான் புருஷகாரம் பெறுவோம் –
கதான்வஹம் சமேஷ்யாமி பரதேன மஹாத்மநா சத்ருநேன ச வீரேண த்வயா ச ரகு நந்தன -ஸ்ரீ பரத ஆழ்வானோடும் -ஸ்ரீ சத்ருகன ஆழ்வானோடும்
கூடப் பெறாத கிழிக் குறையாலே-மனக்குறையாலே -கூட நிற்கிற இளைய பெருமாளோடும் கூடிற்றாய் தோற்றிற்று இல்லை இறே பெருமாளுக்கு
பணப்பை -கிழி-
குஹேன சஹிதோ ராம லஷ்மணேந ச சீதயா -கூடப் போன இளைய பெருமாளோடும் பிராட்டியோடும் கூடிற்றாய் தோற்றிற்று
ஸ்ரீ குஹப் பெருமாள் உடன் கூடின பின்பு இறே
இப்படி இறே அவன் தனக்கும் அந்வய வ்யதிரேகங்கள் இருக்கும் படி
ததீய சம்ச்லேஷத்தை ஆசைப்பட்டு பெறாமையாலே வந்த இழவு-பெற்ற பகவத் சம்ச்லேஷம் இழந்து அடியே பிடித்து
பிரார்த்திக்க வேண்டும்படியாய் வந்து விழுந்தது
வாயும் திரையுகளில் ஆர்த்தி தீர வந்து சம்ச்லேஷித்த சம்ச்லேஷம் முற்றுவதற்கு முன்னே வந்த பிரிவாகையாலும் ஆற்ற ஒண்ணாது இறே –
—————————————————————
அவதாரிகை –
முதல் பாட்டில் ஆபத்தே செப்பேடாக -ஆஸ்ரிதன் பிரதிஜ்ஞா சமகாலத்திலேயே வந்து உதவும் ஸ்வபாவனானவனை
சொல்லிக் கூப்பிடா நின்றால் என்கிறாள்-அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய -புன்மையாக கருதினதே செப்பெடாக ஆழ்வார் கைக் கொண்டாரே
ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே –2-4-1-
ஆடியாடி -ஆற்றாமையால் நின்ற இடத்தில் நிற்க முடியாமல் தள்ளாடி -கிலேசம் -வல்லார் ஆடும் படி தர்ச நீயமான
யகம் கரைந்து-மனஸ் சைதில்யம் பிறந்து –இசை பாடிப்பாடி -கிலேசம் வெளியிலே
கண்ணீர் மல்கி -கரைந்த நீர் -வாய் கண் த்வாரம் வெளியே வர —எங்கும் -சர்வ தேசத்திலும் -10 திக்குகளிலும்
நாடி நாடி நரசிங்கா வென்று -எங்கும் தோற்ற வல்ல நரசிம்க மூர்த்தி
வாடிவாடும்-தளரா நிற்கும் -வாட்டத்தின் மேல் வாட்டம் -வாட்டம் வாழ்ந்தது போலே அடுத்த வட்டம் -இப்படியே தளரா நிற்கும்
இவ்வாணுதலே -தண்ணீர் தண்ணீர் நீர் புலம்ப வேண்டிய இவள் -ஒளி விடும் நெற்றி
அழகு -ஞான பக்தி வைராக்யங்கள்
ஆடியாடி –
ஸ்திதி கமன சய நாதிகளில் ஒரு நியதி இன்றிக்கே அரதியாலே படுகிற பாடு தான் திருத் தாயாருக்கு ஆகர்ஷகமாய் இரா நின்றதாயிற்று
ஹர்ஷ கார்யமான ந்ருத்தம் -துக்க தசையில் -நம் பெண்ணுக்கு அன்றோ இத்தசை என்று ஆகர்ஷமாக இருக்குமே –
ஸ்ரீ கௌசல்யையார் பெருமாளை பிரிந்து துடிக்கிற துடிப்பை –ந்ருத் யந்தீமிவ மாதரம் –அயோத்யா -40-25-என்றான் இறே
ஸூ ஸுவரம்-அழுதாலும் இனிமையான ஸ்வரம் என்றால் போலே-
வடிவு அழகியார் வியாபாரங்கள் எல்லாம் இனிதாய் இருக்கும் இறே -பிரிந்து அழகு அழிந்து இருக்கிற சமயத்திலே இறே –சுபாம் -சுந்தர -29-1–என்றது –
உயிர் தியாகம் -சமயத்தில் ஸூ பாம் -பரிதீன மனசாம் -பரம அழகியார் எது செய்தாலும் அழகாம் –
முதல் ஆடி -என்றதுக்கு அவ்வருகே ஒரு நிலை இறே இரண்டாம் ஆடி –
முதலிலே சஞ்சாரம் அரிதாம் படி இருக்கச் செய்தே ஆற்றாமை பிரேரிக்க சஞ்சரியா நிற்கும்
குணாதிக விஷயம் ஆகையாலே முடிந்து பிழைக்கவும் ஒட்டாதே –ராம கமன காங்ஷயா–பால -1-39-இன்னும் ஒரு கால் அவர் முகத்தில் விழிக்கலாம் ஆகில் அருமந்த பிராணனை பாழே போக்குகிறது என் -என்று ராஜ்யத்தையும் தொட்டுக் கொண்டு கிடந்தான் இறே -ஸ்ரீ பரத ஆழ்வான் நந்திக்ராமத்தில்
நகை இழந்த முகந்தானை -நம்பியும் நாயகனை ஒக்கின்றான் –
முதல் ஆடி -என்கிறதில் காட்டில் இருகால் மட்டு ஆடி என்றதில் அவசாதத்தின் மிகுதி -தாளம் கொண்டு அறியும் அத்தனை -வெங்கலத் தொனி போலே —
யகம் கரைந்து
சஞ்சாரம் செல்லா நிற்கச் செய்தே சஞ்சாரம் அடி அற்று இருக்கும் –
இவள் வியாபாரம் கண்ணுக்கு இலக்கானால் போலே அகவாயும் இவள் நெஞ்சுக்கு இலக்கை இருக்கிறபடி
மனஸ் தத்வம் நீராய் உருகிப் போயிற்று என்கிறாள்
மனசால் நினைத்து -கரைந்து -வாயால் பாடி –அப்புறம் ஆடி –க்ரமம் -மாறி -போக்கு வரத்து நடக்க -துக்கம் தூண்ட –
மனஸ் அற்றுப் போனதே அடி அற்றது –கரைந்தது அனுமானத்தால் அறியும் அத்தனை –
இசை பாடிப்பாடி –
மநோ பூர்வோ வாக் உத்தர -என்கிற க்ரம நியமம் இல்லை
ஆற்றாமையால் கூப்பிடுகிற கூப்பீடு தான் பாட்டாய் தலைக் கட்டுகிறது அத்தனை
பண்ணை வென்ற இன் சொல் மங்கை இறே இவள் தான்
மதுரா மதுரா லாபா
ஆற்றாமையாலே துடித்த துடிப்பு ஆடல் ஆனால் போலே -ஆற்றாமையாலே கூப்பிடுகிற கூப்பீடு தான் பாட்டாய் விழா நின்றது
முதல் கூப்பீடு போல் அன்றிக்கே இரண்டாம் கூப்பீடு தளர்ந்து இருக்கும் இறே
கண்ணீர் மல்கி
உருகின மனஸ் தத்வம் -இசையாய் ப்ரவஹித்து -மிக்கது கண்ணீராய் பிரவஹிக்கிற படி -நெஞ்சு ஒழியப் பாய்கிற கண்ண நீர் இறே
முடியானேயில் கரணங்கள் அவையாக -பையரவணைப் பள்ளியினாய் –சஷூர் ஸ்ரவக -கட்செவி –
மல்கி –மிக்கு
கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரிஸ்ரவதி சோகஜம் -சுந்தர -33-4-
ஆனந்த ஸ்ருவுக்கு யோக்யமான கண்களாலே சோகஸ்ரு பிரவஹிக்கிறது– ஆர்குடி வேர் அற –என்று பட்டர் அருளிச் செய்யும் படி
-இராவணனுடைய குலம் என்றவாறு
அன்றிக்கே –பிள்ளான் -ஆரைச் சேதனராகக் கொண்டு -என்று பணிக்கும் -இந்த எழிலை அனுபவிக்க பெருமாள் இல்லாத போது
இத்தால் என்ன பயன் -என்றவாறே –
பாவியேன் இந்த வரவை பரம சேதனன் அன்றோ பார்க்க வேணும் –கண்ணீர் மல்கி -அதி ஆகர்ஷகமாக இருக்கிறதே பிராப்த சேஷி அன்றோ பார்க்க வேண்டும்
இவ்வரவு உடையவனான-இந்த கண்ணநீர் இவள் ஸ்வாமியான அவன் – பெருமாள் பார்க்காமல் யாரோ பார்ப்பதா-இத்தையே விவரிக்கும் ஸ்லோகம் —புண்டரீக பலாசாப்யாம் விபர கீர்ண மிவோதகம் –
பாவியேன் இவ்வரவு உடைய பெருமாள் வரவாய்க் காணப் பெற்றது இல்லை – என்றார் இறே திருவடியும்
எங்கும் நாடி நாடி
தன ஆபத்தே செப்பேடாக வர சம்பாவனை இல்லாத திக்கையும் பார்க்கும் –
சா திர்யக் ஊர்த்த்வஞ்ச ததாப்ய தஸ்தாத்–சுந்தர -31-19-நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே வாராத் திரு நாமம் செவிப் பட்டவாறே-
விலங்கப் பார்ப்பது -மேலே பார்ப்பது கீழே பார்ப்பது ஆனாள்
கீழ் பார்த்ததுக்கு கருத்து என் என்னில் -பூமியைப் பிளந்து கொண்டு புறப்பட்ட ஒருவன் திரு நாமம் சொல்ல சம்பாவனை உண்டாகில்
அல்லாத திக்குகளிலும் உள்ளது என்று பார்த்தாள்
அன்றிக்கே மாச உபவாசீகள் சோறு -என்றவாறே அலமாக்குமா போலே பார்த்தாள் என்னுதல்
அங்கன் இன்றிக்கே சிம்சுபா வருஷத்தை எங்கும் ஒக்கப் பார்த்தாள் -என்னுதல் –
தமசிந்தய புத்திம் ததர்ச-சுந்தர -31-19- அவன் வடிவு காண்பதற்கு முன்னே அகவாயை யாயிற்று பரிச்சேதித்தது-
இந்நிலத்திலே புகுந்து இடம் கொண்ட நாம் இருந்தவிடம் துருவி நிலை குத்த வல்ல நெஞ்சை உடையவன் அன்றோ என்று
பிங்காதிபதே ராமாத்யம் -சுந்தர -32-7-இவன் ஸ்வதந்த்ரன் அல்லன் -ராஜ கார்யம் இவன் கையிலே உண்டு என்று அறிந்தாள்
வாதாத் மஜம் -சுந்த -32-7–பெருமாளுக்கு பிராண ஹேதுவான பிராட்டிக்கு பிராணங்களை கொடுக்கையாலே –
இவன் சர்வர்க்கும் பிராண ஹேதுவான வாயு புத்திரன் -என்று தோற்ற இருந்தான்
ஸூர்யம் இவ உதயஸ்தம்-சுந்தர -31-19- -இலங்கையிலும் கிழக்கு வெளுக்க அடியிட்டது
பெருமாள் ஆகிற ஆதித்ய உதயத்துக்கு அருணோதயம் -என்னலாம் படி இருந்தான்
ஆகை இறே இலங்கை நாலு மதிளுக்கு நடுவே ஹரி ஹரி -என்கிறபடியே இருக்கிறது
இப்படி வருகைக்கு சம்பாவனை இல்லாத திக்கிலும் தேடுவான் என் என்னில் சம்பாவனை இல்லாத இடத்தேயும் வந்து தோற்றுமவன் ஆகையாலே –
பத்துடை அடியவர்க்கு பின்பு அவதாரத்துக்கு அவ்வருகு இவர் போக மாட்டார் –
பரத்வத்தை விட்டு அவதாரத்திலே இழிகிறார் –கஜேந்திர ஆழ்வானுக்கு உதவியவனைத் தேடாமல் நரசிம்ஹனை தேடுகிறாள்
எங்கும் நாடி நாடி –
தன் கொய்சகம் உட்பட பாரா நின்றாள் என்று பட்டர் அருளிச் செய்யும் படி -அதுக்குக் கருத்து –கண்ணன் என் ஒக்கலையானே-என்று
அவன் இருந்த பிரதேசம் ஆகையாலே
நரசிங்கா வென்று
பிரகலாதனைப் போலே ஒரு தம்பம்-ஆலம்பனம் -(பற்றுக் கொம்பு /ஸ்தம்பம் )- இல்லாதபடி இருக்கையாலே வாடும்
1-மத்தஸ் சர்வமஹம் சத்யம் -என்னும் தெளிவு உடையவனுக்கு தோற்றினவன்-கலங்கின அபலைக்குத் தோற்றானோ என்னுமத்தாலே
2-தமப்பன் பகையானாலோ உதவலாவது -நீர் பகையானாலும் உதவலாகாதோ
3-ஜ்ஞான நிஷ்டர்க்கோ உதவலாவது -பக்தி நிஷ்டர்க்கு உதவலாகாதோ
4-ஆண்களுக்கோ உதவலாவது பெண்களுக்கு உதவலாகாதோ
5-சேராத வடிவு சேர்த்து உதவிலோ உதவலாவது இருந்தபடி உதவலாவார்க்கு உதவலாகாதோ
6-ஒரு அதிகாரி நியதி கால நியதி ஒரு அங்க நியதி என்கிற நிர்பந்தம் வேணுமோ இவளுக்கு
7-இவளுடைய ரஷணத்துக்கும் ஏதேனும் முகம் பண்ண வேணுமோ
வாடிவாடும்
கொம்பை இழந்த தளிர் போலே வாடும்
முதல் வாட்டம் தளிர் என்னும் படி இறே அனந்தரத்தில் வாட்டம்
வாடும்
தர்மிலோபம் பிறந்தது இல்லை –வரும் என்னும் ஆசையாலே முடியப் பெறுகிறிலள்
இவ்வாணுதலே
ஒளியுடன் கூடிய நுதலை உடைய இவள் -இவ் வழகுக்கு இலக்கானார் படுமத்தை இவள் படுவதே
இவள் முடிந்தால் உம்முடைய மேன்மையாலே இன்னம் இப்படி ஒரு வ்யக்தியை உண்டாக்கலாம் என்று இருக்கிறீரோ
தாதா யதா பூர்வம் கல்பயத் -என்கிறபடி சிருஷ்டிக்கலாம் என்று இருக்கிறீரோ
ஊனில் வாழ் உயிரிலே கல்வியால் உண்டான புகர் இன்னமும் அழிந்தது இல்லை காணும்
அம்பு பட்டு முடிந்தாரையும் நீரிலே புக்கு முடிந்தாரையும் முகத்திலே தெரியும் இறே
குணாதிக விஷய விரஹத்தாலே வந்த இழவு என்னும் இடம் முகத்தின் எழிலிலே தெரியாது நின்றது காணும்
———————————————————————————
அவதாரிகை –
நடுவே வாடும் இத்தனையோ வேண்டுவது -விரோதி கிடக்கச் செய்தே என்ன –பாணனுடைய பாஹூ வனத்திலும்
பிரபலமோ இவள் விரோதி -என்கிறாள் –
வாணுதல் இம்மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கமிலீரே–2-4-2-
இவளுக்கு இரங்க-மாட்டீரோ -அநிருத்தனை நிரோதித்த வாணனை- தோள் துணித்தீர்–பேரனுக்கு உதவி செய்தீரே
வாணுதல் இம்மடவரல் -மடப்பத்தால் விஞ்சிய -பவ்யத்தை –
உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் -தர்ச நீயமான உன்னை –சிதிலை ஆகா நின்றாள்
விறல் வாணன் ஆயிரம் தோள் துணித்தீர்-உம்மைக் காண நீர் இரக்கமிலீரே-
இரக்கமே உபாயம் -காட்சியே பிராப்யம் -திட அத்யாவசாயம் –இச்சையே அதிகாரம் -கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்டு -/ (இச்சை அதிகாரம் -இரக்கம் உபாயம் / இனிமை முக மலர்ச்சி புருஷார்த்தம் -இதுவே பிரபத்தி சாஸ்திரம்- த்ரயம் இதுவும் )
வாணுதல்
இவ்வவயவ சோபை போக ஹேதுவாகை யன்றிக்கே -நைகைக்கு உறுப்பாவதே-பெற்ற எனக்கு ஆகர்ஷண ஹேதுவான இது –
கைப்பிடித்த உமக்கு அநாதர ஹேதுவாவதே-
அகலகில்லேன் என்று இருக்க வேண்டியவன் -இவள் நுதலைப் பார்த்து -நித்ய சமலேஷத்துக்கு பிராப்தமாக இருக்க
அழ உறுப்பானது
–இயம் சீதா மம ஸூதா சஹ தர்ம சரீதவ ப்ரதீச்ச சைநாம் – பத்ரம் -தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா –
ஆகர்ஷகத்வே பிரமாணம் -மாதாவுக்கு -மமகாரம் இல்லாதவன் உடைய மமகாரம்
பத்ரம் –தே மங்களா சாசனம்-வடிவில் –மங்கையும் பல்லாண்டு -மிதுனத்துக்கு
இம்மடவரல்
மடப்பம் வந்து இருக்கையாவது -மென்மையை உடையவளாகை-பிரிந்து கலக்கப் பொறாத சௌகுமார்யத்தை உடையவள்
துன்பம் பின்பு இன்பம் என்று குகனை நம்ப வைத்து பிரிந்தீர் -பிரிந்த பின்பு சேர இவள் இருக்க வேண்டுமே -மடவரல் –
பிராட்டி தசையைக் கண்ட திருவடியைப் போலே இருக்கிறது காணும் -இப் பெண் பிள்ளை தசையைக் கண்ட திருத் தாயாருக்கு –
துஷ்கரம் க்ருதவான் ராம -இவளைப் பிரிந்து சமாதானம் பண்ணி இருந்த பெருமாள் சால அரிதாகச் செய்தார் -வெளித் தோற்றத்தில் அழகன் –
ராமன் -இப்படிப்பட்ட தசையிலும் ரமியப்பண்ணும்-தானும் ஆனந்தப்பட்டு -வாயு குமாரன் திருப்தி பட்டர் -தமப்பன் பண்ணின உபாகாரத்தை ஸ்மரிப்பித்து
-பிராணன் இவளுக்கு இருக்கும் படி செய்த உபகாரம்
ஹீநோ யதநயா பிரபு -இவளைப் பிரிந்து தேஹத்தை தரித்து இருந்தார் என்பது யாதொன்று அது சால அரிதாக செய்தார் –
சோகம் என்னும் அக்னி சுடாதே சொல்ல வில்லையே -விரஹ அக்னி யால் முடிந்து இருக்க வேண்டாமோ -தாசோஹம் சொல்ல வைத்த கடாஷம்
பிரபு –ஆனை குதிரை ஏறவும் நாடாளவும் கற்றார் இத்தனை -ப்ரணய தாரையில் புதியது உண்டிலர்
மால்யவானில் பெருமாள் இருந்த போது மேக தர்சனத்திலே பட்ட பாட்டைக் கண்டு -வசிஷ்ட சிஷ்யன் ஒரு ஸ்திரீ நிமித்தமாக
இப்படிப் படுவதே என்று கர்ஹித்து சிரித்து இருந்தான் விரக்தன் ஆகையாலே
இப்போது இவளைப் பிரிந்து தேஹத்தை தரித்துக் கொண்டு இருப்பதே என்கிறான் ஆயிற்று விசேஷ்ஜ்ஞ்ஞன் ஆகையாலே
தாரயத்யாத்மநோ தேஹம் -இது ஏதேனும் இரவல் உடம்போ சுமந்து கொண்டு இருக்கைக்கு -பரதந்த்ரன் அல்லனே –
பெண் பிறந்தார் தானே முடிந்து பிழைக்க முடியாது –போகாய தனம் அன்றோ -துக்காய தனமோ இது –ஆயதனம் -வாசஸ் ஸ்தானம்
தேஹம் -வளரும் -சரீரம் தேயும் -பிரிந்தால் க்ரமத்திலே கூடுகிறோம் -என்று தரித்து இருக்க வல்லல் அள்ளலே இவள்-பவன சம்பவ த்ருஷ்ட்வா -வாயு குமாரன் திருப்தி -நல்ல வேளை இவள் உடம்பில் இருந்து பிரியாமல் இருந்ததால் -வாயுவை -உபகாரகன் என்கிறார்
உம்மைக்
இவள் படி யன்றோ உமக்கு உபதேசிக்க வேண்டுவது -உம்மை நீர் அறியாமை அல்லையே-
நம்மைப் பிரிந்தார் பிழையார்கள்-என்று இருக்க வேண்டாவோ
வாணுதல் இம்மடவரல் உம்மை –
அவயவ சோபை -மனசால் பெருமாள் சீதை -பொருத்தி பார்க்கிறார் –துல்ய சீல வயோ வ்ருத்தாம் -என்னும்படி காணும் இருக்கிறது
உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள்
விஷய அனுபவ ரூபமாய் இறே ஆசையும் இருப்பது
காணும் ஆசையுள்
உம்மோடு அணைய ஆசைப் பட்டாளோ-காட்சியிலும் அருமைப் படுத்துவீரோ
நைகின்றாள்
இவளை தரிப்பிக்க வேண்டா –
அடியில் நிலையிலே நிறுத்த அமையும் –
தர்மி லோபம் ஏற்பட வில்லை –வாடி வாடி நிலை யிலாவது வைக்க கூடாதா
உம்மை காணும் ஆசையால் இல்லை —ஆசையுள் -நைகின்றாள் -சிக்கிக் கொண்டாள் வலையுள் பட்டு அழுந்துவேன் -கடலுக்குள்
உம்மை காணும் ஆசையுள் நைகின்றாள்
கடலிலே அழுந்தா நின்றாள்
ஆசை என்னும் கடல்—பெரிய திரு மொழி-4-9-3– இறே
வாடுகை தான் தேட்டமாம் படி யாயிற்று —முதல் பாட்டு நிலையே தேட்டம் –
விறல் வாணன் ஆயிரம் தோள் துணித்தீர்
நையும் இதுவேயோ வேண்டுவது பிரதிபந்தகம் கிடக்க -என்றே நீர் சொல்லுவது
பாணனுடைய பஹூ வனத்தில் பரப்புண்டோ இவளுடைய விரோதி வர்க்கம்
உஷா அநிருத்த கடகர் அன்றோ நீர்
பேரனுமாய் ஆணுமாகிலோ உதவலாவது -உம்மோடு கலந்த அபலைக்கு உதவலாகாதோ
உம்மைக் காண
எதற்காக காண வேண்டும் -கேட்டதும் திகைக்கிறாள் பராங்குச நாயகி –
இது உபாயம் -இல்லையே -ப்ரயோஜனாந்தர பரர்கள் தானே வேற பலனுக்கு –
கருமுகை மாலை தேடுவார் சூட விறே தேடுவது -சும்மாட்டைக் கொள்ள வல்ல இறே
இவ்வஸ்துவை ஆசைப்படுவார் படுவது காட்சிக்காக யாயிற்று
துருவன் ஆண் பிள்ளைக்கு காட்சி கொடுத்தீரே -பெண்ணானால் கொடுக்க மாட்டீரோ -ஸ்துதிக்க அறியேன் என்றதும் திரு வாழி ஸ்பர்சம் அளித்தீரே –
அழைப்பன் திரு வேங்கடத்தானைக் காண -நான்முகன் -39
காரார் திருமேனி காணும் அளவும் -சிறிய திருமடல்
இவர் தாமும் –கண்களால் காண வரும் கொல் -3-8-8-என்று
நீர் இரக்கமிலீரே–
உம்மை இவள் காண்கைக்கு ஈடாக நீர் இரக்கத்தை உடையீர் ஆகிறிலீர்
நைவ தம்சான் என்கிற படியே நீர் நோவு படுக்கை தவிர்ந்தால் சாமான்யமான இரக்கமும் போக வேணுமோ
நைதல் பக்தியின் வகை அன்றோ -சாதனம் ஆகாதோ என்னில் -நைந்தவர் பேரில் தானே இரக்கம் பட முடியும்
-சர்வ முக்தி பிரசங்கம் வராமல் இருக்க -வேறுபடுத்த இது வேண்டுமே —அதிகாரி விசேஷணம்-
இவள் நைவு பேற்றுக்கு உபாயம் அல்ல -அவன் இரக்கம் பேற்றுக்கு சாதனம் -என்று காணும் திருத் தாயார் இருக்கிறது
இவள் நைவு அவன் இரக்கத்துக்கு பரிகரம்-அவன் இரக்கம் பேற்றுக்கு சாதனம் –என்று இருக்கிறாள்
தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் – -என்று தானே காட்டக் காணும் இத்தனை இறே –
————————————————————————————-
அவதாரிகை –
இன்று இச் செயலை செய்யக் கடவதாக நினைத்த நீர் அன்று உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து-
உண்ணாது -ந மாம்சம் ராகவோ புங்க்தே ந சாபி சேவதே -சுந்தர -36-42-
உறங்காது -அநித்ரஸ் சததம் ராம -சுந்தர -36-44-அச்செயலை என்றிய செய்தீர் என்கிறாள் –
ந மாம்சம் -ந மது சேவதே கள்ளும் குடிக்க வில்லை -சர்வ சாகா பிரத்யயார்த்தம் -ஷத்ரியருக்கு கூடும் -பிரிவாற்றாமை தணித்துக் கொள்ள
செய்வார் வேறே பலர் -விவேகம் இழந்து செய்ய வில்லை என்றே பொருள் –
எதையுமே உண்ண வில்லை -பட்டினி இருக்கிறான் என்றால் இவள் மனம் மேலே புண்படுமே
மா மலர் மங்கை மண நோக்கம் உண்டான் -அதுவே ஆகாரம்
இரக்க மனத்தோடு எரியணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே –2-4-3–
பிராட்டிக்காக இலங்கை ராவணனை அழித்தீர்-இரக்கம் கூட இவள் இடம் இல்லையே
இரக்க மனத்தோடு -கிலேசத்துடன்
எரியணைஅரக்கும் மெழுகும் ஒக்கும் இவள் -இரண்டும் உருகும் -மெழுகு மென்மை–அரக்கும் உருக -கற்பும் மடப்பும் கட்டுக் குலைகிறாள்
இரக்கம் எழீர் -இரக்கம் தோற்ற இல்லாமல்
இதற்கு என் செய்கேன் அரக்கன் இலங்கை செற்றீருக்கே -எத்தை செய்வேன் –
இரக்க மனத்தோடு எரியணை அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் -1–நெஞ்சில் நெகிழ்ச்சியாதல்–2–ஈடுபாடாதல் -3–ஈரிப்பாதல் -ச்நேஹம்
இரங்கின நெஞ்சை உடைய இவள் -எரியை அணைந்த அரக்கும் மெழுகும் போலே உருகா நின்றாள்
அரக்கும் மெழுகும் -என்கிற இரண்டையும் -நெஞ்சுக்கு ஒன்றும் இவள் தனக்கும் ஒன்றுமாக்கி நிர்வஹிப்பர் பிள்ளை திருநறையூர் அரையர்
நெஞ்சம் இவள் தனக்கு கையடைப்பாகையாலே இவள் தனக்கே இரண்டையும் ஆக்கி அருளிச் செய்வர் பட்டர்
விஷ்ணு நா சத்ருசோ வீர்ய -என்கிறபடியே -பார்ப்பதில் சந்தரன் -பூமா தேவி போலே பொறுமை -பல திருஷ்டாந்தம் –
எல்லாம் இவள் தன் படிக்கு திருஷ்டாந்தமாக வேண்டும்படி இறே இவள் தன் நிலை -கற்பு மடப்பு இரண்டுக்கும் இவை திருஷ்டாந்தம் –
நெஞ்சு -அரக்கையும் இவள் மெழுகையும் -அரக்கு உருகும் அளவல்ல மெழுகு உருகுவது -இரண்டு அவஸ்தையும் இவளுக்கு மாறி மாறி வரும்
வியசனம் மெழுகு போலே உருக்க –குண அனுசந்தானம் -சபல புத்தியால் முடிய மாட்டாளே -நப்பாசை கெட்டியாக இழுத்துப் பிடிக்கும் –
அக்னிக்கு உள்ளே புகில் கரிந்து போம் –கடக்க விருக்கில் வலிக்கும் -அக்னி சகாசத்தில் உருகா நிற்கும் இறே –
முடிந்து பிழைக்கவும் பெறாதே -தரித்து இருக்கவும் பெறாதே நோவுபடும் படி பண்ணுவீரே-இவள் தசை இது –
இரக்கம் எழீர் –
நீரும் இவளைப் போலே உருக வேணும் என்று வளைக்கிறோமோ-
நொந்தார் பக்கல் பண்ணும் கிருபையும் பண்ணி கிறிலீர்
இரக்க மனத்தை உடையாளாக நின்றாள் இவள்
நீர் இரக்கம் எழு கிறிலீர்
நீர் இரங்கா விடில் உம்மைப் போலே-வலிய – இருப்பதொரு நெஞ்சை இவளுக்கு கொடுத்தால் ஆகாதோ
இதற்கு என் செய்கேன்
உம்முடைய இரக்கம் ஒழிய ஏதேனும் உபாயாந்தர சாத்தியமோ இப்பேறு
என் செய்கேன்
உம்மை இரங்கப் பண்ணவோ -இவளை இரங்காமல் பண்ணவோ
அரக்கன் இலங்கை செற்றீருக்கே –
உமக்கு இரக்கம் இன்றிக்கே ஒழிந்தால் -இவள் இரங்குவது ஒரு செயலைச் செய்து வைக்க வேணுமோ
ஒரு பிரணயிநிக்கு உதவினவன் நமக்கு உதவானோ -என்று ஈடுபடா நின்றாள்
புழுக் குறித்து எழுத்தானால் போலே ஓன்று வாய்த்தத்தைக் கொண்டு -அது அன்யார்த்தம் -என்று இராதே நோவு படா நின்றாள் –
குணாஷர நியாயம் -தேவர் சகாயம் செய்த கார்யம் -சீதைக்கு வாய்த்தது -அன்யார்த்தம் -ராவண வதத்துக்காக செய்தது –
பட்டு படவை வாங்க போன இடத்தில் வரதர் கருட சேவை கிடைத்தால் போலே -வந்ததே அன்யார்த்தம் –
அது ஒருத்திக்கு உதவினது -அபலைகளை நோவு படுத்துவதற்காக செய்த செயல் -பட்டர் நிர்வாஹம் –
இத்தை நம்பி ஆர்த்தி பராங்குச நாயகிக்கு வளர்க்க செய்த செயல் என்று நினையாமல் ரஷிக்க செய்த கார்யம் என்று நம்புகிறாளே-
அரக்கன் இலங்கை செற்றீருக்கே-இரக்க மனத்தோடு- இவள் -எரியணை அரக்கும் மெழுகும் ஒக்கும்-
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன் -என்று அந்வயம்
————————————————————————————
அவதாரிகை –
அரக்கன் இலங்கை செற்றீர் என்கிற இது நியத ஸ்வபாவம் அன்று காண்-காதா சித்கம் காண் -என்றாள் திருத் தாயார் –
அது பொறுக்க மாட்டாமை அது தன்னையே சொல்கிறாள்-
இலங்கை செற்றவனே யென்னும் பின்னும்
வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கை தொழும் நின்றிவளே –2-4-4-
தனக்காகவே பண்ணினான் -அன்யார்த்தம் இல்லை -என்கிறாள் –
பின்னும் -முன்புத்தை கிலேசத்து அளவு இல்லாமல் -தாயார் தப்பாக சொன்னதால்
இலங்கை செற்றவனே யென்னும்-மாலி பிரப்ருதிகள்
வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும்-வாகனம் த்வஜம்
உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும் -சேவை சாதிக்காமல் -மூச்சு விடும்
கண்ணீர் மிகக் கலங்கிக் கை தொழும் நின்றிவளே-அறிவு கலங்கி வருகிறான் நினைத்து அஞ்சலி பண்ணா நிற்கும்
இலங்கை செற்றவனே யென்னும்
அவதாரணத்தால்–எனக்குப் பண்டே உதவி உபகரித்தவனே -என்னா நின்றாள் –
முன்பு தனக்கு உதவினவன் இப்போது தனக்கு உதவாது ஒழிந்தால் போலே கூப்பிடா நின்றாள் –
இலங்கை செற்றது எனக்காக தான் -என்கிறாள் -சீதைக்காக மட்டும் இல்லை —நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் -முதலில் தம்மைச் சொல்லி
இவளே சீதை -என்பதை -அஞ்சிறைய மட நாரையிலே சொல்லிக் கொண்டார் –
கடல் அடைத்தல்-மலை எடுத்தல் -அம்பு ஏற்றல் செய்ய வேணுமோ –என் பக்கல் வரும் போது என்ன பிரதிபந்தகம் உண்டு –
திருத் தாயார் இவள் விடுகைக்குச் சொன்னது தானே அவளுக்கு பற்றுகைக்கு உடலாய் விட்டது –
பின்னும் வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம் மலங்க வெவ்வுயிர்க்கும்
அதுக்கு மேலே -விடாய் இருந்த விடத்தே சாய்கரம் போலே உயர வைத்துக் கொண்டு வந்து காட்டும் பரிகரம் உடையவனே -என்னா நின்றாள்
சமைத்த மடுவும் சாய் கரமும் -மான மேய சரமம் -பிரமாண பிரமேய -சரம தசைகள் -திருவாய் மொழியும் -அர்ச்சாவதாரமும் –
வலம் கொள்-மிடுக்கை உடைய புள்ளை த்வஜமாக உடையவன் என்னுதல்
அன்றியே -புள்ளால் வஹிக்கப் பட்டவன் -என்னுதல்
கொண்டு வருகைக்கு பரிகரம் உண்டாய் இருக்கச் செய்தே வரக் காணாமையாலே -மனஸ் தத்வம் வேர் பறியும் படி நெடு மூச்சு எறியா நிற்கும்
தஹந்தீவமிவ நிச்வாசைர் வ்ருஷான் பல்லவ தாரிண -என்னுமா போலே –விரஹ தாபம் -மரங்களும் பட்டுப் போகும் படி –
கண்ணீர் மிகக்
நெடு மூச்சாய்ப் புறப்பட்டு -புறப்படாதது கண்ணீராய் புறப்படா நின்றது
உருகின மனஸ் -தண்ணீராக கண்ணீராக -வெப்ப மூச்சாக வெளியே வந்தது
கலங்கிக் கை தொழும் –
தெளிந்து இருந்து தொழுமது இல்லை இறே பிரணயிநி-உபாயமாக தொழும் பிரகிருதி அல்லள் இ றே இவள் –
நின்றிவளே —
அவன் தொழும் படியான வேண்டற்பாடுடைய தான் தொழா நின்றாள் –இவளே –ஸ்வரம் தொனி -தாத்பர்யம்
தொழுவது உபாயம் இல்லை -காதலால் வசப்பட்டு தொழுகிறாள் -கலங்கி இருப்பதால் கை தொழுகிறாள்-கலங்காமல் இருந்தால் கை தொழ மாட்டாளே
அணைக்க நினைக்காமல் கை தொழுகிறாள் -பக்தன் போலே -காதலி என்பதையும் மறந்து –
———————————————————————————
அவதாரிகை –
அவள் இப்படி கிலேசிக்கிற இடத்திலும் வரக் காணாமையாலே நிர்த்தயர் என்கிறார் –
இவள் இராப்பகல் வாய் வெரீஇத்தன
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் என
தவள வண்ணர் தகவுகளே –2-4-5-
சுத்த ஸ்வபாவர் உன்னுடைய ஸ்வபாவம் இருந்த படி என்
இவள் இராப்பகல் வாய் வெரீஇத்-இவள் -விலஷண குணசாலி -திருத் துழாய் என்றே வாயில் சொல்லிக் கொண்டு
தன குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் -நெய்தல் புஷ்பம் போல் -சோக கண்ணீர்
வண்டு திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் -மது பானம் பண்ணி ரசாயன சேவை பண்ணினாரைப் போலே படிந்து ஒளிவிடும் வண்டுகள்
தவள வண்ணர் தகவுகளே-என -ஆஸ்ரித விஷயத்தில் -சுத்த ஸ்வபாவம் -இல்லையே -கிருபாவான் என்ன -இல்லையே
தத்துவம் -புருஷகாரம் –தகவு கிருபை -இவளுக்கு இரக்கம் இல்லாமல் வண்டுகளுக்கு கொடுத்தது என்ன ஸ்வபாவம்
இவள் இராப்பகல் வாய் வெரீஇ
சீதேதி மதுராம் வாணீம் வ்யாஹரன் பிரதிபுத்யதே –என்று வாய் வெருவுவான் அவன் கிடீர்
அநித்ரஸ் சததம் ராம -நித்ரையோடே கால ஷேபம் பண்ண வேண்டும் செல்வுடையார் -செல்வம் -சம்பத் –சததம் அநித்ரராய் இருப்பர்-
ஸூப்தோபி ச – சததம் அனித்ர-என்று வைத்து –ஸூப்தோபி ச -என்கிறது
பராகர்த்த அனுசந்தான அபாவத்தைப் பற்ற –
ராமயதிதி ராம -ஸுவ வியதிரக்தரை ஆனந்திப்பிக்க -தான் தூங்கி ஆனந்தம் -அடைய விரோதம் -சிநேகத்துக்கு கொத்தை -தூங்குகிறார் –
வியத்திரிக்த பதார்த்தங்களில் கண் வைக்காமல் பிராட்டியையே நினைத்து இருப்பார் –சததம் அனித்ர -எப்போதும் தூக்கம் இல்லாமல் –
கால விசேஷ நிர்த்தேசம் இல்லை -தூக்கமே தெரியாது என்பதால் –சததம் –இப்பொழுது தூங்காமல் இருப்பதால் -நித்ரா அயோக்யதா –
காலை சந்த்யாவந்தனம் பண்ண வில்லை -காலையில் பண்ண வில்லை -என்பதே அர்த்தம் போலே
மகா ராஜர் இளைய பெருமாள் இடம் பிராட்டி நிமித்தமாக உசாவி -விசாரித்து துக்கம் மிக்கு மயங்கி தூங்கி -என்றவாறு
காதல் இன்மை என்பதும் இல்லையே –
நரோத்தம -அபிமத விச்லேஷத்தில் இங்கனே இருக்கையாலே புருஷோத்தவத்மம் ஆவது
இராப்பகல் –
பொய் நின்ற ஞானம் தொடங்கி -இவ்வளவு வாய் வெருவின வித்தை காணும்
வாய் வெரீஇ -வாய் வெருவி –
அவாதானம் பண்ணி சொல்லுகிறது ஒன்றும் இல்லை -வாசனையே உபாயாத்யராகச் சொல்லுகிறது இத்தனை –
தன குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள்
ஆனந்த ச்ரு பிரவஹிக்கக் கடவ -கண் -சோக ச்ரு பிரவஹியா நின்றது
இக் கண்ணுக்கு இலக்கானார் கண்ணிலே காணக் கடவ கண்ணீரைத் தன் கண்ணிலே கொண்டாள்
தன்னுடையவாய்-குவளைப் பூ போலே இருக்கிற அழகிய கண்களிலே கொண்டாள்
நம்மைச் செய்யச் சொல்கிறது என் –
வண்டு திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் –
விரஹ ஜ்வரத்தாலே வாடின இவள் மார்வில் மாலையை வாங்கி உம்முடைய மார்வில் செவ்வி மாறாத மாலையைக் கொடுக்கிறிலீர்
மாலை மாற்றவே வேண்டியது-
அவ்வண்டுகளுக்கு என்ன கண்ண நீரைக் கண்டு கொடுக்கிறீர்
திவளுகை -படுகை-அசைகை -ஒளி விடுகை – இவை இத்தனையும் சொல்லக் கடவது
என
இவை என் என்பின –என்ன ஆயின
தவள வண்ணர் தகவுகளே —
ஸூத்த ஸ்வபாவரான உம்முடைய தகவுகள் எங்கே போயிற்றன -என்று எம்பார் அருளிச் செய்யும் படி
அன்றிக்கே –பட்டர் -உம்மைப் போல் நாலு சிஷ்டர்கள் அமையும் இறே அபலைகள் குடி கெட -என்றார் –
அசாதாரண பரிஜன விஷயம் -அழாத வண்டுகளுக்கு கிருபை -இவளுக்கு அடி -இது என்னே –
கிரமமாக பாடும் வண்டுகள் -அக்ரமாமக பாடும் இவளுக்கு -இது என்னே-
தகவுகள் -பன்மை –சாமான்ய -ஆஸ்ரித ஆன்ரு சம்சயம் -இரண்டையும் சொல்லிற்று
————————————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply