பகவத் விஷயம் காலஷேபம் -48– திருவாய்மொழி – -1-10-1 ….1-10-5-ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

பிரவேசம் –

கீழில் திருவாய் மொழியில் பிறந்த சர்வாங்க சம்ச்லேஷத்தை அனுசந்தித்து நிர்வ்ருத்தராகிறார் –என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும் படி
அதாவது நிர்வ்ருத்தி என்று ஸூகமாய் -ஸூகிக்கிறார் -என்றபடி
கீழ்ப் பிறந்த சர்வாங்க சம்ச்லேஷத்தை அனுசந்தித்து (கீழ் -90-பாசுரங்களில் அருளிச் செய்தவற்றை அனுசந்தித்து )-
பட்டர் அருளிச் செய்வதோர் ஏற்றம் உண்டு -அதாவது -உச்சியுள்ளே நிற்கும் என்று இறே கீழே நின்றது-
பேற்றில் இனி இதுக்கு இவ்வருகு ஏற்றமாகச் செய்து கொடுக்கலாவது ஒன்றும் இல்லை
இனி இதினுடைய அவிச்சேதத்தையே பண்ணிக் கொடுக்கையே உள்ளது
பேறு கனத்து இருந்தது -இது வந்த வழி என்ன என்று ஆராய்ந்தார் –

சாதனத்வம் எதுவும் இல்லையே -காரணம் இல்லாமல் கார்யம் இல்லையே -அனுமானித்து -பேற்றுக்கு ஒத்த சாதனம் இல்லை
சாத்தியம் உள்ளதே -சர்வ முக்தி பிரசங்கம் வருமே -சாதன சத்பாவம் -அதனால் இருப்பது என்று கொண்டு வாதம் –

இப் பேற்றின் கனத்துக்கு ஈடாய் இருப்பதொரு நன்மை தம் தலையிலே இன்றிக்கே இருந்தது-
இத்தலையிலும் ஏதேனும் உண்டாகப் பார்த்தாலும் அத்வேஷம் ஆதல் ஆபிமுக்யம் ஆதல் இறே உள்ளது
அத்தை சாதனமாகச் சொல்லப் போராதே
இத்தலையில் பரம பக்தி பர்யந்தமாகப் பிறந்தாலும் பேற்றின் கனத்துக்கு இத்தை ஒரு சாதனமாகச் சொல்லப் போராதே
ஒருவன் ஒரு எலுமிச்சம் பழம் கொடுத்து ராஜ்யத்தைப் பெற்றால் அது விலையாய் இராதே -பரம பக்தியே எலுமிச்சம் பழ ஸ்தாநீயம் என்ற படி –
சர்வேஸ்வரன் அடியாக வரும் பேற்றுக்கு இத்தலையால் ஓர் அடி நிரூபிக்கலாய் இராதே
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் –பெரிய திருவந்தாதி -56-என்னும் படி இறே இருப்பது

இவனை முதலிலே சிருஷ்டிக்கிற போது-இவன் தீய வழியைத் தப்பி நல்ல வழியே போக வேணும் என்று
உபகரணங்களைக் கொடுத்து விடுகையாலே இவன் தலையிலே பிறந்த நன்மைக்கு அடி அவனாய் இருக்கும் இறே
இனி புத்த்யாதி சகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகன் ஆகையாலே -அத்வேஷம் தொடக்கமாக– பரிகணநை நடுவாக — பரமபக்தி பர்யந்தமாக–
தானே பிறப்பிப்பான் ஒருவன் -நித்ய ஸூரிகள் பேற்றை அநாதி காலம் சம்சரித்துப் போந்த நமக்குத் தந்தான் -ஒரு விஷயீ காரம்
இருக்கும் படி என் -என்று –கீழில் திருவாய் மொழியில் உன்மஸ்தகமாகப் பிறந்த சம்ச்லேஷ ரசத்தை அனுசந்தித்து நிர்வ்ருத்தராகிறார் -என்று

அதுவும் அவனது இன்னருளே -இசைவித்து என்னை உன் தாளிணை கீழ் இருத்தி –கரண களேபர பரத்தவ த்வாரா ஸ்தானம் அவனே –
புத்தி ஞானம் -அசம்மோஹம் ஷமா சத்யம் சமம் தமம் –சுகம் –தபோ தானம் —கீர்த்தி –மத்த ஏவ -என்னிடம் இருந்தே உண்டாகின்றன –நிர்வாஹகன் அவனே-

சர்வ பிரகார சம்ச்லேஷம் -கலந்தான் –நினைத்து ஹர்ஷிக்கிறார் -முன்னோர்
நிர் ஹேதுக-நிஷ்காரணமாக-கலந்தான் என்று நிர் ஹேதுக விஷயீ காரத்தை நினைத்து ஹர்ஷிக்கிறார் -பட்டர் –
1-வடிவை தன்னுடைய கண்ணுக்கு இலக்காக்கின உபகாரகம் –
2–கணணா மாத்ரத்தில்- எண்ணிலும் சுலபன் -மநோ ரதம் -26 சொன்னாலும்
3-அனுபாவ்ய ஸ்வ பாவத்தாலும்
4-நிரந்தர அனுபாவ்யத்தாலும்
5-அர்த்தித்வமும் வேண்டாத -அதிசயித்த உபகாரத்வத்தையும்
6-அதுக்கு அடியான பந்த விசேஷத்தையும் –
7-இதுக்கு ஸூரி போக்யத்வத்தையும்
8-உபகாரத்வ உப யுக்தமான பூர்ணத்வத்தையும்
9-உபகார க்ரமம் மறக்க அரிது
10-மறவாமைக்கு அவன் பண்ணின யதன விசேஷசத்தையும் -மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னுடைய தாமரைக் கண்கள் உடன்
மகோ உபாகரத்தை அனுசந்தித்து ஹர்ஷிகிறார் -முன்னோர்
அது நிர்ஹேதுகம் என்றும் அனுசந்தித்து ஹ்ருஷ்டர் ஆகிறார் -பட்டர் நிர்வாஹம் -(சர்வாங்க சம்ச்லேஷமும் நிர் ஹேதுகத்வமும் –இரண்டும் ஆழ்வார் ஹர்ஷத்துக்கு ஹேது என்றவாறு)

——————————————————

அவதாரிகை

இத் திருவாய் மொழியில் சொல்லுகிற அர்த்தத்தை திரள அருளிச் செய்கிறார் –முதல் பாட்டில்
மஹா பலி தன் வரவை நினையாதே இருக்க அவன் பக்கலிலே தானே இரப்பாளனாக சென்று தன்னுடைமையை தன்னது
ஆக்கினால் போலே எனக்கு நினைவு இன்றிக்கே இருக்க தானே வந்து தன் வடிவு அழகை என் கண்ணுக்கு இலக்கு ஆக்கினான்
-என்று அவன் படியை அனுசந்தித்து இனியராகிறார் –

பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –1-10-1-

த்ரி விக்கிரம அபதானத்தால் சர்வ லோகத்தையும் உபகரித்தால் போலே -அத்தைக் காட்டி எனக்கு உபகரித்தான்
பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு-ஆழி எழ -இவையும் எழுந்து ஆர்பரிக்க -விரோதி நிரசன சீலமாய்-ஹர்ஷத்தால் வளருமே நிரசனதுக்கு பின்பு -அதிசய உத்க்ருஷ்டம் –மா பெருத்து —நீள் -மனத்தால் வளர்ந்து –
திரு விக்ரஹமும் வளர்ந்து -சிருஷ்டி பிரயோஜனம் பெற்றோமே –
திருமா நீள் கழல்-திரிவிக்ரமன் திருவடிகள் -ஸ்ரீ யபத்வ சிஹ்னங்கள் -கதா புனா -வஜ்ர லாஞ்சனம்
மா உத்கர்ஷ உக்தமாய் -நீள் -ஆஸ்ரிதர் அளவும் வரும் படி நீண்டு இருக்கும்
ஏழ் உலகும் தொழ-ஞான அஞ்ஞான வாசி இல்லாமல் -லஷணையால் உலகத்தோர் -சேஷத்வ அநுரூப வ்ருத்தி செய்து அனுபவிக்கும் படி
தொழ-நமஸ்காரம் -மட்டும் இல்லாமை கைங்கர்யம் செய்து ஆனந்திப்பித்து ஆனந்திக்க வேண்டுமே
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த-அத்விதீயமான –கார்ய சித்தி யானதும் வளர்ந்து அருளின
அக் கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே -உளன் ஆவான் -கரு மாணிக்கம் அக்றிணை என்பதால்-(ஸூ காந்த்யா வாமானி சுகானி நயனாதி -திருமேனியை சேவித்தார்க்கு சுகம் கொடுப்பவன் வாமனன் -பட்டர் )
நீல ரத்னம் போலே -தர்ச நீய விக்ரமன் -சுவ காந்த்யா-சுகம் வாம நயதி -வாமனன் -கண்ணுக்கு விஷயம் -ஆகிறது
-என்றும் கண் -இடத்து என்றுமாம்

பொரு-
1–திரு உலகு அளந்து அருளுகிற போது -திவ்ய ஆயுதங்கள் நமுசி பிரப்ருதிகள் மேலே பொருத படியைச் சொல்லுதல்
2–திவ்ய ஆயுதங்கள் தான் ஒருவரை ஒருவர் அதி சங்கை பண்ணி பொருத படியைச் சொல்லுதல் -நமுசி பிரக்ருதிகளோடே பொரும் என்றது சேரும் இறே
இடங்கை வலம்புரி நின்றார்ப்ப -இரண்டாம் திருவந்தாதி -71-இடது திருக் கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யமானது அப்போதப்போது-direct commentary –
பிறந்த விஜயத்தை அனுசந்தித்து ஆர்த்துக் கொண்டது
அங்கன் ஆர்த்துக் கொள்ள அவசரம் இன்றிக்கே திரு வாழி நெருப்பை உமிழ்ந்து விரோதிகளை வாய் வாய் என்று ஒடுங்கப் பண்ணிற்று–வாய் வாய் -கபோல தாடனம் -கன்னத்தில் அடிப்பது –
விடம் காலும் தீ வாய் அரவணை
திரு வநந்த ஆழ்வான் உகவாதார் மேலே கிடந்த இடத்தே கிடந்தது நெருப்பை உமிழ்ந்தான்
விரோதி பூயிஷ்டமான இத்தேசத்திலே அவன் இப்படிச் செய்ய சொல்ல வேணுமோ
அங்கே உட்பட இப்படி செய்ய கடவ அவன் –ஆங்காரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்கார் அரவணை இ றே
ஆங்கு -தேசம் அது
ஆரவாரம் அது -அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத -என்கிற ஆரவாரம்
அங்கே இது கேட்டு அப்படி படுகிறவர்கள் இங்கே இது கண்டால் இப்படிப் படச் சொல்ல வேணுமோ -இவர்கள் இப்படி அலமருகைக்கு அடி என் என்னில்
அரவணை மேல் தோன்றல் -அரசன் -சுகுமாரன் –
திரு வநந்த ஆழ்வானைப் படுக்கையாக உடைய சர்வேஸ்வரன் காடு மேடையும் அளக்கைக்காக புஷ்ப ஹாச ஸூகுமாரமான திருவடிகளை
நிமிர்த்த போது எல்லாம் பட வேண்டாவோ
அவன் இப்படி வ்யாபரியா நின்றால் –தன்னில் தான் பொருது என்ற போது அஸ்த்தானே பய சங்கையாலே ஒருவரை ஒருவர் அதிசங்கை பண்ணிப் பொருகை
ராகவம் சரணம் கத -என்றவனை இறே வத்த்யதாம் -என்றது
பரதச்ய வதே தோஷம் நாஹம் பச்யாமி -என்றார் இறே இளைய பெருமாள்

மா
1-அவற்றின் வடிவின் பெருமையைச் சொல்லவுமாம்-
அன்றியே
2-ஆஸ்ரித விஷயத்தில் அவனில் காட்டில் இவர்களுக்கு உண்டான பஷபாதத்தைச் சொல்லவுமாம்
அவ்யாஹதாதி கிருஷ்ணச்ய -சக்ர அதீன்ய ஆயுதானி தம் ரஷந்தி சகலா பத்ப்யோ யேன விஷ்ணு ருபாசித -ஸ்ரீ விஷ்ணு தர்மம் ஸ்லோகம் –
இஷீ காஸ்த்ரம்-சக்ராயுதமும் –துர்வாசரையும் -காகாசுரனையும் மெள்ள மெள்ள பின் தொடர்ந்ததே –
அத்தாலே யாயிற்று அவர்களுக்கு சரணாகதிக்கு அவகாசம் கிட்டிற்று –
சரணா கதி பண்ணுவானே என்னும் நசையாலே ரஷிக்க சரணா கதனை ரஷிக்க சொல்ல வேண்டாமே-
கவிகள் ஆசைப்படும் எல்லா லஷணங்களும் இதில் உள்ள படி பண்ணி அருள வேண்டும் -தபஸ் பண்ணி பெற்ற ஆற்றல் இல்லை -பாதுகை
தலையில் சூடி பெற்ற சக்தி என்கிறபடியே சர்வேஸ்வரன் எதிரியானாலும் அவன் கையிலே காட்டிக் கொடாதே நோக்கும் மஹத்தையைச் சொல்கிறது
நீள் படை –
ஆயிரம் காதம் பறப்பதின் குட்டி ஐந்நூறு காதம் சிறகடிக் கொள்ளும் -என்னுமா போலே சர்வேஸ்வரன் அதிகரித்த கார்யத்திலே –
அவன் தன்னிலும் முற்பட்டு இருக்கை
நீள் படையான ஆழி சங்கத்தொடு கூட-திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
கதா புன -என்று நான் ஆசைப் பட்டுக் கிடக்கும் திருவடிகளைக் கொண்டு கிடீர் ஆசையில்லாதார் தலையிலே வைத்தது
ஆதி –அங்குசம் சுதாகும்பம் -போல்வன –
திரு -ஐஸ்வர்ய ஸூசகமான த்விஜாராவிந்தாதிகளை யுடைத்தாய் இருக்கை
மா -பரம பூஜ்யமாய் இருக்கை
நீள் கழல் -ஆசாலேசம் உடையார் இருந்த விடம் எல்லையாக வளரும் திருவடிகள் –
நாராயணா உக்தி மாத்ரத்தால் -வஸ்தம்-தாய் பசுவாக பின் தொடருகிறான்
நிஷாதார் -வேடர் -க்கும் -இருக்கும் இடத்தில் பெருமாள் வந்தார் -/ஆசாலேசம் உள்ளவர் இடம் -சபரி -தர்ம நிபுராணாம் -/
ஏழ் உலகும் தொழ
ஒரு சாதனா அனுஷ்டானம் பண்ணாதாரும் தொழ
ஒரு
இவன் தானே இவ்வடிவை இன்னும் ஒரு கால் கொள்ள வேணும் -என்னிலும் வாயாதபடி அத்விதீயமாய் இருக்கை
மாணிக்
ஸ்ரீ யபதி என்று தோற்றாத படி இரப்பிலே தழும்பு ஏறுகை
குறளாகி
கோடியைக் காணி ஆக்கினால் போலே பெரிய வடிவைக் கண்ணாலே முகக்கலாம் படி சுருக்கின படி
நீண்ட அப்பெரிய வாய கண்கள் -அனைவரையும் ரஷித்து ஏக தேசத்தில் அங்கே அடக்கின படி -அவனை நம் கண்ணுக்குள் அடக்கின படி
நிமிர்ந்த
அடியிலே நீர் வார்த்துக் கொடுத்தவாறே நிமிர்ந்த படி
வாஸூதேவ தரு விறே–
நெய்தல் காடு அலர்ந்தால் போலே ஆகாச அவகாசம் அடைய தன் வடிவு அழகாலே பாரித்தபடி
அக் கரு மாணிக்கம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற தம்மாலும் பரிச்சேதிக்கப் போகிறது இல்லை காணும்
என் கண் உளதாகுமே –
ஏழ் உலகத்தில் உள்ளார் வாசி அறிந்திலர்கள் இறே -மனசு அறிந்து தொழ வில்லையே
அவ்வாசி அறியுமவர் ஆகையாலே –என் கண் உளதாகுமே-என்கிறார்
கண் -என்று இடமாய் –என்னிடத்தாகும் என்னவுமாம்
கரு மாணிக்கம் -என்கையாலே கண் உளதாகும் -என்கிறது –

பிரார்த்தித்து உலகை அளக்க வில்லையே -நன்றியும் சொல்ல வில்லையே – நிர்ஹேதுக உபகாரத்துக்கு திஷ்டாந்தம் –
பட்டர் தமது சாமர்த்தியம் தோற்ற இப்படி நிர்வஹித்து அருளினார் –

——————————————————————————————

அவதாரிகை –

பரம பக்திக்கும் பரி கணைனைக்கும்-எண்ணுதலுக்கும் — ஒக்க முகம் காட்டும் –என்கிறார் –
-சாதன – சாத்ய பக்தி இரண்டுக்கும் -த்வித பக்தி பரம் -பிரபத்தி மூன்றுக்கும்

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2-

பரம பக்தி-பக்தனுக்கும் பரி கணைனைக்கும்- பிரபத்திக்கும் வரும் -சர்வ காரண பூதன் -சர்வேஸ்வரன் -சர்வாத்மாக பஜநீயன்
-சத்பாவ அபிசந்தியோடும் -வாசி அற சந்நிஹிதனாம்
கண்ணுள்ளே நிற்கும்-கண் வட்டத்தை விடாமல் நிற்கும் -அவர்கள் விரும்பிய படியே சேவை சாதிப்பான்
காதன்மையால் தொழில் -அபிநிவேசாத்மகமான பரம பக்தியால் -தொழுதால் -பிரணாம அர்ச்சனாதிகளைப் பண்ணில்
எண்ணிலும் வரும்-சத்பாவ சிந்தா மாத்ரத்தாலும் -அஸ்தி ப்ரஹ்மேதி சேத வேத அசந்நேவ பவதி -வசப்பட்டு வருவான்
என்னினி வேண்டுவம் -உபாய த்வத்தாலும்-இனி என்ன வேண்டுவம் -ஒன்றுமே வேண்டாமே -ஒக்க பரிமாறுகிறான் –
அநந்ய கதிகளுக்கு-நமக்கு -இனி செய்ய வேண்டுவது இல்லை
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் விண்ணுமாய் விரியும்
பிருத்வ்யாதி -பூதங்களையும் பிரகாரங்களாக கொண்டு -சரீரம் திரு மேனியில் இருந்து ஜகதா காரணனான விச்த்ருதனாய்க் கொண்டு
காரணத்வம் உபய உபாய சாதாரண்த்வம் -உபயத்துக்கும் உபேயத்துக்கும்
வாயு-நல் விசேஷணம்-தாரகத்வ வை லஷண்யம் -என்பதால் -அவனை இத்தால் சொல்வதால்
சிந்திப்பே அமையும்-சிற்ற வேண்டாம் – பிரபத்தி -த்வமேவ உபாய பூதி இதி -மானச சரணாகதி
எம் பிரானையே-என் ஸ்வாமி

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
பரம பக்தி உக்தராய்க் கொண்டு தொழில் -அவர்கள் கண் வட்டத்துக்கு அவ்வருகு போக மாட்டாதே நிற்கும்
தன்னை ஒழியச் செல்லாமையை உடையராய்க் கொண்டு தொழில் -தானும் அவர்கள் ஒழியச் செல்லாமையை உடையனாய் அவர்கள்
கண் வட்டத்தின் நின்றும் கால் வாங்க மாட்டாதே நிற்கும்
நானாக இருந்து கொள்கிறேன் -என்றால் குழந்தை போலே தானும் திரும்பி நானாக இருந்து கொள்கிறேன்-
நான் உன்னை அன்றி இலேன் -என்றால் அத்தையும் திரும்பி -நான் உன்னை அன்றி இலேன்-சொல்வானே
மின்னிடை மடவார் -போ போ என்றால் வருவானே –
எண்ணிலும் வரும் –
1-கடம் படம் ஈஸ்வரன் என்றால் -நம்மை இல்லை என்னாதே-இவற்றோடு ஒக்க பரிகணித்தான் இறே -என்று வரும்
2-சதுர் விம்சதி தத்துவமாய் இருக்கும் அசித்து -பஞ்ச விம்சகன் ஆத்மா -ஷட் விம்சகன் ஈஸ்வரன் -என்றால்
நம்முடைய உண்மையையும் இவற்றோபாதி இசைந்தான் இறே என்று வந்து முகம் காட்டும் வரும்
வரும் -நிற்குமது இல்லை -போகாமல் நிற்பதும் மட்டும் இல்லை -உடனே வருவானே
இவன் போ என்ற போதும் அதுக்கு உடலாக வரும் அத்தனை
அன்றியே
3–எண்ணிலும் வரும் -எண் இன்றிக்கே -எண் இலும் -நினைவே இல்லாமல் போனாலும் வரும் –
-இருபத்தொன்று -இருபத்திரண்டு ,இருபத்து மூன்று ,இருபத்து நான்கு ,இருபத்து அஞ்சு ,இருபத்தாறு -என்று எண்ணினால்
இருபத்தாறு நானே என்று வரும் -என்றுமாம் –
இத்தை அறிவதே அதிகாரி விசேஷணம் ஆகும் —

என்னினி வேண்டுவம்
பரம பக்திக்கும் பரிகணநைக்கும் ஒக்க முகம் காட்டுவானான பின்பு எனக்கு ஒரு குறை யுண்டோ –
அவன் இவன் பக்கல் அப்ரதிஷேதததுக்கு அவசரம் பார்த்து இருந்து முகம் காட்டுவானான பின்பு இவனுக்கு ஹித அம்சத்தில்
செய்ய வேண்டுவது உண்டோ -இப்படி இருக்கிற பகவத் ஸ்வரூபத்தை புத்தி பண்ணுகை இறே இவன் பிரபன்னன் ஆகையாவது
அவன் தன் ஸ்வரூப உபதேசத்தைப் பண்ணி -உன்னால் வரும் இழவுக்கு அஞ்ச வேண்டா மாசுச –என்றால் போலே
இவரும் அவன் ஸ்வரூபத்தை அனுசந்தித்து –என் இனி வேண்டுவம் -என்கிறார் –

அத்வேஷமும் ஆத்ம ஞானமும் தானே வேண்டுவது -சம்பந்தம் இசைத்தாலே போதுமே -இந்த எண்ணமே வேண்டுவது -(அத்வேஷமும் ஆத்ம ஞானமுமே வேண்டுவது -விலக்காமை தூங்கும் போதும் மயங்கி இருந்த போதும் உண்டே )
எண்ணிலும் வரும் -சர்வ ரஷகத்வ அவன் ஸ்வரூபம் -பாரதந்த்ர்ய ஜீவ ஸ்வரூபம் நினைப்பதே வேண்டுவது
மா ஸுசா –என் இனி வேண்டுவம் -அஹம் த்வா -இருவர் ஸ்வரூபம் பார்த்தாலும் கலங்க வேண்டாமே –
தயா சிந்தோ பந்தோ –இந்த நினைவை வளர்ப்பதே ஆச்சார்ய க்ருத்யம் –குருவான -பரம பக்தி -பல்குவான -எளிதான -அதிகாரி விசேஷணம் பிரபத்தி –
தேவாசனே முக்தித்வாத் -தேவ பெருமாள் ஆறு வார்த்தைகளில் ஓன்று -அவன் அருள் -அபரிமித சக்தி அன்றோ –

அப்ரதிஷேதமே பேற்றுக்கு வேண்டுவது -அதுக்குப் புறம்பான யோக்யதை அயோக்யதைகள் அகிஞ்சித்கரம்
வேல் வெட்டி நம்பியார் நம்பிள்ளையை -பெருமாள் கடலை சரணம் புகுகிற இடத்தில்
ப்ராங்முகத்வாதி நியமங்களோடே சரணம் புக்காராய் இருந்தது -இவ்வுபாயம் இதர சாதனங்கள் போலே சில நியமங்கள் வேண்டி இருக்கிறதோ
என்று கேட்க -பெருமாள் தமக்கு –சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்து மர்ஹதி –என்று உபதேசித்தான் ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-
அவன் தான் பெருமாளை சரணம் புகுகிற இடத்தில் -கடலிலே ஒரு முழுக்கு இட்டு வந்தான் என்று இல்லை-
ஆக இத்தால் சொல்லிற்று யாயிற்று என் என்னில் –பெருமாள் இஷ்வாகு வம்சராய் ஆசார ப்ரதானர் ஆகையாலே சில நியமங்களோடே சரணம் புக்கார் –
ராஜச ஜாதியன் ஆகையாலே அவன் நின்ற நிலையிலே சரணம் புக்கான் -ஆகையாலே யோக்யனுக்கு அயோக்யதை சம்பாதிக்க வேண்டா
-அயோக்யனுக்கு யோக்யதை சம்பாதிக்க வேண்டா -ஆகையால் சர்வாதிகாரம் இவ்வுபாயம் -என்று அருளிச் செய்தார்
அன்று ஈன்ற கன்றிடம் -கேட்க -அவன் -எருது கெடுத்தார்க்கும் ஏழே கடுக்காய் -ஈனாப் பெண்ணுக்கும் ஏழே கடுக்காய்–படை எடுத்த மன்னார்க்கும் ஏழே கடுக்காய் -என்றானே –
சீதை புடவை நுனி பட்டது என்ற சங்கைக்கும் நூறு தடவை முழுக்கு போடுவாரே பெருமாள் -ஆச்சார்ய சீலர் -பழக்கம் என்பதால் பண்ணினார் –
பகவத் பிரபாவ ஜ்ஞானம் உடையாருக்கு -நம்மை அடைய அவன் இடம் உள்ள அபிநிவேசம் -கௌஸ்துபம் போலே நினைக்குமவன் என்று உணர்ந்து –
இதுவே அர்த்தம் என்று தோற்றி இருக்கும்
கேவல கிரியா மாத்ரத்துக்கே பலப்ரதான சக்தி உள்ளது என்று இருப்பார்க்கு இவ்வர்த்தம் அனுபபந்தம் என்று தோற்றி இருக்கும்

மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் விண்ணுமாய் விரியும் எம் பிரானையே —
காரணமான பூத பஞ்சகத்துக்கும் உள்ளீடாய் -பஹூச்யாம் -என்கிறபடியே தன் விகாசமேயாம் படி இருக்கிற உபகாரகன்
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழும்–எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்
தன்னை ஒழிந்த சகல பதார்த்தங்களும் தன் சங்கல்பத்தை பற்றி உளவாம்படி இருக்கிற சர்வேஸ்வரன் தன் பக்கல் ஆசாலேசம் உடையார்
சங்கல்பத்தைப் பற்றி தான் உளனாம் படி இருப்பானான பின்பு இவ்வாத்மாவுக்கு ஒரு குறை யுண்டோ –என்கிறார் –
எப்படி இருப்பவன் எப்படி இருக்கிறான் என்பதை உணர வேண்டுமே -என்பதால் இப்பொழுது இத்தை சொல்லுகிறார் –
பக்தன் சங்கல்பம் படி அவன் சத்பாவமாக உள்ளானே -என்ன நீர்மை
நல் வாயுவும் -என்றது -தாரகத்வத்தைப் பற்ற
விண்ணுமாய் -இவற்றுக்கு அந்தராத்மாவாய் நிற்கும் என்றபடி
விரியும் -பஹூச்யாம் என்றபடி விஸ்த்ருதனாகா நிற்கும்
எம்பிரான் -எனக்கு உபகாரகன் -பிரதமையை த்வதீயமாக்கி எம்பிரானை -என்று கிடக்கிறது

மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –காதன்மையால் தொழும்-கண்ணுள்ளே நிற்கும்-எண்ணிலும் வரும் -என் இனி வேண்டுவம் -என்று அந்வயம்-(மா ஸூ ச என்றபடி -)

——————————————————————————————-

அவதாரிகை –

கண்டாயே -அவன் ஸ்வரூபம் இருந்தபடி –நீயும் உன் ஸ்வரூபத்துக்குச் சேர நிற்கப் பாராய் நெஞ்சே –என்கிறார்
பரிகணனைக்கும் பரபக்திக்கும் ஒக்க வருபவன் -அவன் ஸ்வரூபம் -பாரதந்த்ர்யம் நம் ஸ்வரூபம் –

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –1-10-3-

ஸ்ரீ யபதி -அனுபாவ்யமான -ஸ்வ பாவங்களை உடைய அனுபவி என்று நெஞ்சை தொழாய்-
எம்பிரானை
எந்தை தந்தை தந்தைக்கும் -குலத்துக்கு எல்லாம்
தம்பிரானைத் -நாதன்
தண் தாமரைக் கண்ணனை -ஆழ்வார் சம்பந்தம் அடியாக குளிர நோக்கும் -பிரபன்ன ஜன கூடஸ்தர் -அன்பன் தன்னை —அன்பனாய் ஒட்டிக் கொண்டார் மதுர கவிகள்
வெருவ நோக்குவார் அல்லாதார் இடம்
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை -வஞ்சிக் கொம்பு -பாம்பு போன்ற மெலிந்த இடை –அரவு -அராவு நீண்டு -நச்சராவு நீண்டது போலே
அராவுதல் குறைத்தல் -அரவி அரவி -மெலிதாக ஆக்கினால் தான் வஞ்சிக் கொம்புக்கு ஒப்பாகும் –
பிராட்டி திரு நாமமே இல்லாமல் -நம் பரம்பரைக்கே இவள் சந்நிதியால் பேறு
எம்பிரானைத்-மீண்டும் எம்பிரான் -தம் பக்கல் அத்வேஷம் ஆபிமுக்யம் தரும் உபகாரகன்
தொழாய் மட நெஞ்சமே -மடப்பம் -சொல்வதை கேட்கும் -பவ்யத்தை –
ஸ்ரீ யபதித்வம் இதில் சொன்ன உபகாரங்களுக்கு மூலம்

எம்பிரானை –
கீழில் பாட்டில் அவன் நீர்மையை அனுசந்தித்து –என் நாயகனானவனை என்கிறார்
எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானைத் –
தம் அளவிலேயாய் அடி அற்று இருக்கை
அன்றிக்கே –
என் குடிக்கு நாயகன் ஆனவனை -என்கிறார்
சம்ப்ரதாயமே -சம்பந்தி சம்ப்ரதாயம் -ராமானுஜ அடியார்கள் அன்றோ –
இவர் இப்படி ஏத்தின வாறே -பிரயோஜனாந்தர பரருடைய அநந்ய பிரயோஜன பரருடைய பாசுரத்துக்கும் வாசி அறியுமவன் ஆகையாலே
-இப்படி ஏத்துகிறவன் ஆர் -என்று குளிரக் கடாஷித்தான் –
தண் தாமரைக் கண்ணனை -அநந்ய பிரயோஜனருக்கு -இப்பொழுது வந்த தண்மை-
தாநஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷூ நராதமான் ஷிபாமி -என்னுமவன் இப்படி கடாஷிக்கைக்கு ஹேது வென்-என்று பார்த்தார்
அருகே கடாஷிப்பிக்கிறார் உண்டாய் இருந்தது
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
கொம்பு போலவும் அரவு போலவும் இருப்பதாய் -அது தானும் நுண்ணியதாய் இருந்துள்ள இடையை உடைய
பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே உடையவனை
அரவு -என்கிற இத்தை அராவு என்று நீட்டிக் கிடக்கிறது –நச்சராவணை -திருச்சந்த விருத்தம் -85- என்னக் கடவது இ றே
அன்றியே
கொம்பை லகூ கரிக்கிற-இடை என்றுமாம் – நுண் நேர் -மீ மிசைச் சொற்கள்
எம்பிரானைத் –
அச் சேர்த்திக்கு ஒரு கால் –எம்பிரானை -என்கிறார் –என் திருமகள் சேர் மார்பனே என்னும் என்னுடைய ஆவியே என்னும் –
தொழாய்
தொழப் படும் விஷயம் ஒரு மிதுனமாயிற்று இருப்பது
மட நெஞ்சமே
தொழுது எழு என்னலாம் படி பாங்கான நெஞ்சு அன்றோ -நீ –

———————————————————————————-

அவதாரிகை –

தாம் சொன்ன போதே மேல் விழுந்து தொழுதவாறே நெஞ்சைக் கொண்டாடிநிகர்ஷ அனுசந்தானம் பண்ணி
நான் விச்லேஷித்த சமயத்திலும் நீ விடாதே கொள் -என்கிறார் –

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4-

நியோகத்துக்கு ஈடாக இசைந்த -வந்ததே காட்சியாக உவந்து -மன ஏவ காரணம் பந்த மோஷாயா -ஒரு காலும் விடாதே அனுபவிக்க பாராய் என்கிறார் –
நெஞ்சமே நல்லை நல்லை-உன்னைப் பெற்றால் என் செய்யோம்-எந்த கார்யம் செய்து என்னால் சாதிக்க முடியாது
இனி என்ன குறைவினம் -உன் இசைவு பெற்ற பின்பு அசாத்தியமான குறை உண்டோ
மைந்தனை மலராள் மணவாளனைத் -மிடுக்கு -நித்ய யௌவனம் -யுவா குமாரன் -நிரதிசய போக்யனான  -அவளுக்கு போக்தாவான
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்-நைச்யானுசந்தானம் பண்ணி விலகினாலும் -நிகர்ஷ அனுசந்தானத்தால் வந்த விச்லேஷமே –

நெஞ்சமே நல்லை நல்லை –
சொன்ன கார்யத்தை சடக்கென செய்த சத்புத்ரர்களை மடியிலே வைத்துக் கொண்டாடும் மாதா பிதாக்களைப் போலே
இவரும் மார்விலே அணைத்துக் கொண்டாடுகிறார் -நெஞ்சை –
அணைத்த நெஞ்சு ஏது -அணைத்துக் கொண்ட நெஞ்சு ஏது -உருவகப்படுத்தி -ராதா கிருஷ்ணன் -கிருஷ்ண பக்தி உருவகப்படுத்தி -ரசோக்தி
-நெஞ்சமே நல்லை நல்லை —
நல்லை -என்ன அமையாதோ –நல்லை நல்லை என்கிற வீப்சைக்கு கருத்து என் -என்னில்
இவர் தாம் அவன் பக்கல் தூது விடுமா போலே தனக்கு-நெஞ்சுக்கு – இவர் தூது விடும்படி இவர் தம்மை விட்டு அவன் பக்கலிலே நிற்க வல்ல
நெஞ்சு ஆகையாலே -என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி அவருடை நீர் இன்னம் செல்லீரோ -திரு விருத்தம் -30—என்னும் படி
என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் இனி யாரைக் கொண்டு உசாவ -என்றாரே
முந்துற்ற நெஞ்சு -பெரிய திருவந்தாதி -1–ஆகையாலே –நல்லை நல்லை -என்கிற மீமிசை –
நம்மிடம் இருந்தால் பகவத் சிந்தனம் எப்போது தானே -அவன் இடம் சேர்ந்து நிரந்தர பகவத் அனுபவம் சிந்தனை –எப்போதும் -என்றபடி –
என்னை இப்படி ச்லாகிக்கிறது தான் என்ன

உன்னைப் பெற்றால் என் செய்யோம் –
நீ என்னோடு ஒரு மிடறான பின்பு எனக்குச் செய்ய முடியாதது உண்டோ -நெஞ்சு -ஹிதத்துக்கு -ஒத்த பின்பு முடியாதது உண்டோ –
கரண கரணி சம்பந்தம் -ஆழ்வாருக்கும் நெஞ்சுக்கும் -மட்டும் இல்லை -ஆகந்துகத்வம் -அலப்யத்வம்-அனுகூல சம்பந்தம் -கிடைப்பது துர்லபம் –பெற்றால்-
பலம் தருகைக்கு ஈஸ்வரன் உண்டு -விலக்காமைக்கு நீ உண்டு –இனிச் செய்ய முடியாதது உண்டோ –
இனி என்ன குறைவினம் –
உன்னைப் பற்றால் என் செய்யோம் -என்று சாத்யாம்சம் உண்டாகச் சொன்ன விடம் தப்பச் சொன்னோம் -வாய் வார்த்தையாகச் சொன்னோம் –
உன் பக்கல் விலக்காமையே பற்றாசாக அவன் கார்யம் செய்வானாக இருந்தால் சாத்யாம்சம் தான் உண்டோ
அவனையும் உன்னையும் -எப்படி பார்த்தாலும் சாத்யாம்சம் இல்லை –
அவன் உபாய பாவம் நித்ய நிரபேஷம் ஆனால் சாத்யாம்சம் தான் உண்டோ-
பிரச்னம் இல்லை ஷேபம்-கேட்கவில்லை -செய்வதற்கு ஒன்றும் இல்லை என்கிறார்
ஆனால் பின்னை க்ருத்யாம்சம் என் என்ன -சாத்யாம்சம் உண்டு கிடாய் என்கிறார்
மைந்தனை மலராள் மணவாளனைத் துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –
நான் அவனைக் கிட்டக் கொள்ள -வளவேழுலகு -தலை எடுத்து அகலப் பார்ப்பது ஓன்று உண்டு -நீ அப்போது அவனை விடாதே கிடாய்

மைந்தனை
இவ்விஷயத்தை -கெடுவாய் -சிலராலே விடப் போமோ –
மைந்து -இனிமை -அழகு -மிடுக்கு -பிடிக்கையில் இருக்கும் மிடுக்கு –
மூன்று காரணங்களாலும் விடப் போகாதே -நினைவே நீ தானே -ஆத்மா மனசின் மூலம் தானே இவற்றை அனுபவிக்க வேண்டும் (-ஆகவே இந்த பொறுப்பு உன்னிடம் கொடுக்கிறேன் )

மலராள் மணவாளனைத்
பெரிய பிராட்டியார் அகலகில்லேன் இறையும் -என்னும் விஷயத்தை யன்றோ நான் உன்னை விடாதே கிடாய் என்கிறது
துஞ்சும் போதும்
அயோக்யன் -என்று அகலும் போதும் -விச்லேஷம் விநாச பர்யாயம் -என்கை
முஹூர்த்தம் அபி ஜீவாவ -என்னும் அது இறே-இவர்க்கு துஞ்சுகை யாகிறது
பிரியில் இலேனுக்கு இளங்கோவும் அக்குளத்தில் மீன் இ றே-ஆச்சார்யஹிருதயம் -சூர்ணிகை -126
நான் அவனை அகன்று முடியும் அன்றும் -நீ அவனை விடாதே தொடரப் பார் கிடாய்
இவ்வேப்பங்குடி நீரை யன்றோ நான் உன்னைக் குடிக்கச் சொல்கிறது –அக்காரவடிசிலை அன்றோ சொல்கிறேன்-
பிராட்டி -அகலகில்லேன் இறையும் -என்கிற விஷயத்தை அன்றோ நான் உன்னை அனுபவிக்கச் சொல்கிறது –
விடாது தொடர் கண்டாய் –

———————————————————————————

அவதாரிகை –

கீழ் எண்ணிலும் வரும் என்ற- எண் தானும் மிகையானபடி கண்டாயே -என்று அவன் படியை நெஞ்சுக்கு மூதலிக்கிறார் –

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5-

நினைவு அற நடக்கின்றனவே -நீயும் அவனைக் கிட்டுபடி வாய்க்கின்றதே –அவன் சங்கல்பம் அடியாக -அவன் நினைவும் ஆழ்வார் நினைவும் ஒன்றே –
கண்டாய் நெஞ்சே-நீயும் கிட்டும்படி ஆயிற்றே -இதுவே பெரிய கர்மம் -நெஞ்சு பண்பாட்டால் ஒழிய கார்யகரம் ஆகாதே-மறக்க வேண்டியதை மறக்க வேண்டுமே –
கருமங்கள் வாய்க்கின்றோர் -அத்வேஷம் ஆபிமுக்யம் ஆஸ்ரயணம் அறிவு பக்தி
எண் தானும் இன்றியே-நினைவு இல்லாமல்
வந்தியலுமாறு-வந்து சேர்ந்த வழி
உண்டானை உலகேழுமோர் மூவடி கொண்டானைக்-ரஷித்து -அனன்யார்ஹம் ஆக்கி -உலகு ஏழும்– கீழும் மேலும்-உலகு ஏழும் உண்டானை -உலகு ஏழும் ஓர் மூவடி கொண்டானை –
கண்டு கொண்டனை நீயுமே -ஆபிமுக்ய பிரசங்கமே இல்லாத நீயும் லபிக்கப் பெற்றாயே –

கண்டாய் நெஞ்சே –
நான் சொன்ன படியே பலத்தோடு வ்யாப்தமான படி கண்டாயே (எண்ணிலும் வரும் கண்டாயே -வந்திட்டான் -பலத்துடன் தலைக் காட்டியதை கூறுகிறார் -/ எண் தானும் இன்றியே  -என்றுமாம் -)
நெஞ்சே
ஜ்ஞான பிரசார த்வாரமான உனக்குச் சொல்ல வேண்டா விறே
கருமங்கள் வாய்க்கின்று
கார்யங்கள் பலிக்கும் இடத்தில்
ஓர் எண் தானும் இன்றியே வந்தியலுமாறு கண்டாயே
எண்ணிலும் வரும் -என்றது தான் மிகையாம்படி வந்து பலித்துக் கொண்டு நிற்கிறபடி கண்டாயே

எண்ணை விஞ்சி வரும் -எண் இல்லாமல் வரும்
பலத்துடன் வியாப்தம் -நினைவே பலத்துடன் வரும் என்றார் -அனைத்தும் பெற்றார் -நெஞ்சுக்கு காட்டுகிறார் –
அந்வய முகத்தால் -கருமங்கள் வாய்க்கின்றது இப்போது கண்டாயே எண்ணம் இல்லாமல் -இரண்டு நிர்வாகங்கள்

இயலுகை -பலிக்கை
பகவத் பிரபாவம் சொல்லுவார் சொல்லும் அளவல்ல காண்-
இத்தலையில் எண் இன்றிக்கே இருக்க பலிக்கும் என்னும் இடத்துக்கு உதாஹரணம் காட்டுகிறார் மேல்
சர்வேஸ்வர ஈஸ்வர -கிருஷ்ணன் -பண்டிதர் பேச -கொஞ்சமே பேச முடியும் பிரபாவம் -சொல்லும் அளவில்லையே -இத்தைக் கண்டாயே -பேச முடியாதே
உண்டானை உலகேழுமோர் மூவடி கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே —
பிரளயம் கொண்ட ஜகத்துக்கு -அவன் நம்மை வயிற்றிலே வைத்து நோக்கும் -என்னும் நினைவு உண்டோ
உலகு ஏழும் என்கிற இடம் இரண்டு இடத்திலும் கூட்டிக் கொள்வது
அவன் ஜகத்தை அடைய அளக்கிற போது-நம் தலையிலே திருவடிகளை வைக்கப் புகா நின்றான் -என்னும் நினைவு உண்டோ
இதுக்கு உதாஹரணம் தேடித் போக வேணுமோ ஓன்று
கண்டு கொண்டனை நீயுமே
விலக்குகைக்கு பரிகரம் உடைய நீயே யன்றோ கண்டு கொண்டாயே
பிரளய ஆபத்தில் அவற்றுக்கு ப்ரதிகூலிக்க பரிகரம் இல்லையே -இங்கு-அளக்கும் பொழுது- அவசரம் இல்லை
அறியில் விலக்குவர்கள் இறே -அசங்கிதமாக-அதி சீக்கிரமாக – வளருகையாலே /வருகையாலே–பேசாது இருந்தார்கள் அத்தனை –

பிரளய ஆபத்தில் விலக்க பரிகரம் இல்லை -அளக்கும் பொழுதும் பரிகரம் இல்லை -இப்பொழுது உண்டே -சிருஷ்டிக்கு பின்பு –
ஜீவ ஸ்வாதந்த்ரம் கொடுத்து உள்ளானே -விஷய பிராவண்யம் இப்பொழுது தானே –இத்தைக் கண்டாயே நெஞ்சே –

———————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading