பகவத் விஷயம் காலஷேபம் -24–மஹா பிரவேசம்-முதல் ஸ்ரீ யபதிப்படி -மூன்றாம் பகுதி –ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள்-

ஸ்ரீ நாத முனிகள் அருளிச் செய்த தனியன் –

பக்தாம்ருதம் விஸ்வ ஜன அநு மோதனம்
சர்வார்த்தம் ஸ்ரீ சடகோப வாங்மயம்
சஹச்ர சாக உபநிஷத் சமாகமம்
நமாம் யஹம் திராவிட வேத சாகரம் –

ஸ்ரீ ஈஸ்வர முனிகள் அருளிச் செய்த தனியன்

திருவழுதி நாடென்றும் தென் குருகூர் என்றும்
மருவினிய வண் பொருநல் என்றும் அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே தெளிந்து

ஸ்ரீ சொட்டை நம்பிகள் அருளிச் செய்த தனியன் –

மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும் இனத்தாரை யல்லாது இறைஞ்சேன் –
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன் பாதங்கள் யாமுடைய பற்று –

ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்த தனியன்

ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனிதன்
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்த பெரும்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும்
பேராத வுள்ளம் பெற

ஸ்ரீ பட்டர் அருளிச் செய்த தனியன் –

வான் திகழும் சோலை மதில் அரங்கர் வண் புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற
முதல் தாய் சடகோபன் மொய்ம்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமானுசன்

மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ் வினையும் வாழ் வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழினிசை வேதத்தியல்

——-

ஸ்ரீ நம்பிள்ளை தனியன்

வேதாந்த வேத்யாம்ருத வாரிராசேர்
வேதார்த்த சாராம்ருத பூரமர்க்யம்
ஆதாய வர்ஷந்தமஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலிவரி தாசம்-

ஸ்ரீ வடக்குத் திரு வீதிப் பிள்ளை அருளிச் செய்த தனியன்

ஸ்ரீ கிருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி சிரஸா சதா
யத் பிரசாத ப்ரபாவேன சர்வ சித்திர பூந்மம-

———————————————————————-

1- ப்ரதிபாத்யனான எம்பெருமானுடைய மகாத்ம்யத்தாலும்
2–எம்பெருமானை ஸூ ஸ் பஷ்டமாக பிரதிபாதிக்கையாலும் –
பகவத் பிரபாவம் -குண-அவதார சேஷ்டிதங்களை பேச பாபங்கள் போகும் -உஜ்ஜீவிக்கும் –பக்தி வைராக்கியம் சோபனங்கள் பிறக்கும் முக்தி கிட்டும் —
3-பக்திக்கு உத்பாதகங்கள் ஆகையாலும்-இப்பத்தால் பத்தர் ஆவார்-
4- உத்பன்னையான பக்திக்கு வர்த்தகங்கள் ஆகையாலும் -கேட்டவர்கள் நெஞ்சு அழிய -மாலுக்கும் ஏரார் விசும்பில் இருப்பு அரிதாம்
5–ஸ்ரவணாதிகளிலே -ஆதி கீர்த்தனம் போல்வன அப்போதே நிரதிசய ப்ரீதி ஜனகங்கள் ஆகையாலும்
6- இவற்றில் சொல்லுகிற அர்த்தங்களுக்கு வேதத்தில் பல இடங்களில் சாஷியாகச் சொல்லுகையாலும்-முழு வேத முதல்வன் -வேத விளக்கு -மறையாய விளக்கு -சுடர் மிகு சுருதி -இத்யாதிகள் –
7–ப்ரஹ்ம காரண வாதத்தாலும் -வேர் முதல் வித்தாய் –தானே ஒரு முதல் தனி வித்தாய் -இத்யாதிகள் –
8- ப்ரஹ்ம ஜ்ஞானான் மோஷத்தைச் சொல்லுகையாலும்-சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் -திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினே –
புருஷார்த்த விஷயமான பிரபந்தங்கள் எல்லா வற்றிலும் இப் பிரபந்தங்களை த்ருடதர பிரமாணங்களாக உப பாதித்து
வைதிக கோஷ்டியில் அபியுக்தர் ஆனவர்கள் பரிஹரித்தார்கள்

பகவத் பிரசாதத்தாலே அவனை அனுபவித்து பரி பூரணராய் இருக்கிற இவருக்கு எம்பெருமானை பிரிகையும்
-பிரிவாலே நோவு பட்டுக் கூப்பிடுகையும் கூடின படி எங்கனே என்னில்
ஒரோ குணத்தை அனுபவித்தால் அநு பூத குணங்களில் உண்டான ப்ரியத்வ பிரகர்ஷம் -ஷூத்ர விஷயங்களிலே
வைராக்யத்தைப் பிறப்பித்து குணாந்தரங்களிலே ச்ப்ருஹையைப் பிறப்பிக்கும் –அனுபவத்துக்கு துடித்து –
மாம்பழங்கள் நிறைந்து உள்ளில் குழந்தை ஓன்று எடுக்க -விட்டது பல என்று சோகிக்குமே-கிடைத்த ஒன்றாலும் ஆனந்திக்காமல் -அதே போலே
பரமாத்மாநி யோ ரக்தோ விரக்தோ பரமாத்மநி-என்றும் -வைராக்கியம் பின்னே பகவத் பிராவண்யம் முன்னே –
-மாற் பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட்டு –மூன்றாம் திருவந்தாதி -14–என்றும் சொல்லுகிறபடியே
பின்னை அக்குணங்களிலே க்ரம ப்ராப்தி பற்றாது -யாதொருபோது ஆசை மிக்கது –அப்போது ஆசைப் பட்ட பொருள் கிடையாமையாலும்
-பகவத் அனுபவ விரோதியான பிரகிருதி சம்பந்த ஸ்மரணாதி களிலுமாக பகவத் விஷயத்தில் அனுபவித்த அம்சத்தையும் இழந்து-
இரண்டு மாம்பழங்களும் இழந்தது போலே -எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் -3-2-1–என்றும் –
பல நீ காட்டிப் படுப்பாயோ -6-9-9–என்றும் –
போர வைத்தாய் புறமே -5-1-5–என்றும் –
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -6-9-9–என்றும் கூப்பிடா நிற்பார் –
நான் உன்னை வந்து கிட்டுவது எந்நாள்-பல நீ காட்டி திருப்பாதே – போர வைத்தாய் புறம்பே– விஸ்லேஷ —
அவனை அனுபவிக்கப் புக்கால் -அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே -2-3-6–என்றும்-பருகிக் களித்தேன் -2-3-9–என்றும்
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை -10-8-7–என்றும்
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-என்னில் முன்னம் பருகினான் -த்ரவமாக்கி – –
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும் -5-2-2–என்றும் –
எமர் கீழ் மேல் ஏழு பிறப்பும் மாசதிர் இது பெற்று நம்முடைய வாழ்வு வாய்க்கின்றவா -2-6-7–என்றும் –
வீடு மா வீடு எம்மா வீடு -போலே மூன்றும் இங்கே -சதிர் -மா சதிர் -மா சதிர் வாழ்வு -பாகவத அனுபவம் –
தாமும் நம்முடைய சம்பந்தி சம்பந்திக்களுமாய் கூடக் களிப்பர் -சம்ச்லேஷ-
கூவிக் கொள்ளும் காலம் குறுகாதோ -அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே –பிர பிரதமே – இரண்டுமே –
இப்படி பஹூ குணனான எம்பெருமான் பக்கலிலே நிரதிசய பக்திமான்களாய்-தத் சம்ச்லேஷ விஸ்லேஷ ஏக ஸூக துக்கராய்-

அவனை அல்லது அறியாதபடியாய்–இருக்கும் இவர் –பகவத் அனுபவ ஸூ கம மிக்க போது இதர பதார்த்தங்களும் எல்லாம்
நம்மைப் போலவே எம்பெருமானைப் பெற்று ஸூகிக்கின்றனவாகவும்-
விச்லேஷம் என்று ஒரு வகை உண்டு என்றும் அறியாத லோக யாத்ரையோடு ஒக்க மறந்து
விஸ்லேஷ வியசனம் மிக்கால்-சம்ச்லேஷ ரசம் உண்டு என்றும் அறியாத இதர பதார்த்தங்களும் எல்லாம்
நம்மைப் போலவே எம்பெருமானைப் பிரிந்து நோவு படுகின்றனவாகக் கொண்டு –
நீயும் திரு மாலால் நெஞ்சம் கோட்பட்டாயே-2-1-1-இத்யாதியாலே அவற்றுக்குமாக தாமும் நோவு படா நிற்பார் –
-வஞ்சகனே வந்தாலும் மிதுனம் என்று இருப்பவர் –
காற்றும் கழியும் கட்டி அழ பத்திமை நூல் வரம்பு இல்லையே -ஓன்று ஒன்றின் செயல் உள்ளது எல்லாம் தாம் விரும்ப –
மாயக் கூத்தா பதிகம் –நன்னாடு -பிள்ளான் நிர்வாஹம் -எம்பெருமானை பெற்று அனுபவிக்கும் நாடு -கூடச் சேர்ந்து அனுபவிக்கும் –சாப்த பிரமாணம்
பகவத் சம்ச்லேஷம் -வேறே சில துக்கித்து இருக்கும் வஸ்துக்கள் உண்டே இவர் சுகப்படலாமோ-சம்ச்லேஷம் அநித்தியம் ஆகையாலும் இவர் சுகப் படக் கூடாதே -என்னும் சங்கை வர-சம்ச்லேஷம் போது -விச்லேஷம் என்று ஓன்று உண்டு என்று அறிய மாட்டார் -அறிவு முழுவதும் அவனே என்று மூழ்கி இருப்பாரே –

இவருக்கு பிரிய அப்ரியங்கள் ஒரு காலும் முடியாதே பர்யாயேண உண்டாய் இருக்கையாலே இவருக்கு
சிந்தயந்தி படி நித்யமாகச் செல்லுகையாலே இவரை தீர்க்க சிந்தயந்தி என்றாயிற்று நம் முதலிகள் அருளிச் செய்வது –
சிந்தயந்தி ஸ்ரீ கிருஷ்ண பக்திக்கு புதியவள் என்பவர் -என்பர் -மாமியார் போல்வார் கண்ணிலே பட்டதே –
ஆனால் சேதனர்க்கு ஸ்திரீ அன்ன பாநாதிகளே தாரக போஷக போக்யங்களாகச் செல்லா நிற்க –இவரை பகவத் குண ஏக தாரகர்
என்னக் கூடுமோ என்னில் -திரு அயோத்யையிலும் -கோசல ஜன பதத்திலும் உள்ள ஸ்தாவர ஜங்கமங்கள் அடைய
ராக குண ஏக தாரகங்களாய் இருக்கும் படியை அனுசந்தித்து இதுவும் கூடும் என்று கொள்வது
அபி வ்ருஷா பரிமலதா -தண்ணீர் நிறைந்த மரங்களும் வாடின உயிர் பிரிந்து போனதே -இப்படி இருக்கிற இவருக்கு எம்பெருமானோடு சம்ச்லேஷமாவது ப்ரத்யஷ சாமாநா காரமான ஜ்ஞான சாஷாத்காரம் -மானஸ அனுபவம்-
உருவ வெளிப்பாடு -பார்த்தாராம் சம்ப்ராப்தம் இவ -கணையாழி கண்டு பெருமாளைக் கண்டாலே போலே –
-நெடு வீணை முலை மேல் தாங்கி மென் கிளி போல்-பரகால நாயகி திருக்கோலம்
விச்லேஷமாவது -பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பண்ணி அது பெறாமையாலே மானஸ அனுபவத்துக்கு வந்த கலக்கம்
சர்வஜ்ஞனாய் -சர்வ சக்தனாய் சர்வ நியந்தாவாய் நிரவதிக கிருபாவானாய் இருந்த எம்பெருமான் இவருடைய அனுபவத்தை
முடிய நடத்தாதே –இவ்வனுபவத்தை விச்சேதித்தத்துக்கு பிரயோஜனம் என் என்னில்
திரு அயோத்யையிலும் திரு குரவையிலும் பிரிந்தால் போலே -இவருக்கு அனுபூத குணங்கள்
சாத்மிக்கைக்காகவும் –மேன்மேல் என திருஷ்ணை பிறக்கைக்காகவும்–எம்பெருமான் பக்கலிலே பிறந்த ஆசை முதிர்ந்து
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மான் -காதல் கடல் புரைய வளர வைக்க – ஹித புத்யா செய்தான்-
-நினைந்தபடி பெறா விட்டவாறே சோக மோஹங்கள் பிறக்கும் -இப்படியுள்ள கலவியாலும் பிரிவாலும் ஆழ்வாருக்கு-வந்த தசை அந்யாபதேச பேச்சைப் பேசுவிக்கும்-
கலவியில் அன்யாபதேசம் -கருமாணிக்க -தோழி பதிகம் —வேய் மரு தோளிணை-காலைப் பூசல் -தலைமகள் பதிகம் –
அஞ்சிறை -போல்வன பிரிவில் அன்யாபதேசம்
ஞானத்தில் தன் பேச்சு பிரேமத்தில் பெண் பேச்சு -மகள்-தாய் – தோழி மூன்றும் உண்டே

மேலே விஷய வை லஷண்யம் அருளிச் செய்கிறார் –பிரபந்த விஷயம் அர்த்த பஞ்சகம் -பிரதிபாத்ய விஷய வை லஷண்யம் –
இப்பிரபந்தங்களில் -ஸூக்திகள் பிராப்யனான எம்பெருமானுடைய ஸ்வரூப பிரதிபாதன பரமாய் இருக்கும் -சில
-ஸ்வரூபம் –உயர்வற- திண்ணன் வீடு -அணைவது-ஒன்றும் தேவும் –
ப்ராப்தாவான பிரத்யகாத்ம விஷயமாய் இருக்கும் சில — —பயிலும் சுடர் ஒளி-ஏறாளும் இறையோன் -கண்கள் சிவந்து -கரு மாணிக்க மலை
-ப்ராத்யுபாயத்தைச் சொல்லும் சிலநோற்ற நோன்பு -ஆராவமுது –மானேய் நோக்கு -பிறந்தவாறும் –
பலன் சொல்லும் திருவாய்மொழிகள் –எம்மா வீடு -ஒழிவில் காலம் எல்லாம் -நெடுமாற்கு அடிமை -வேய் மரு தோள் இணை –
இதற்குத் தடைகள் –வீடுமின் முற்றவும் -சொன்னால் விரோதம் -ஒரு நாயகமாய் -கொண்ட பெண்டிர் –
அவசிஷ்டமானவை- இவற்றுக்கு உபபாதகங்களாய் இருக்கும் –இவற்றில் உத்தேச்யம் பலம் –பிராப்யமே பிரதானம்
ததார்த்தமாக மற்றுள்ள திருவாய் மொழிகளும் -நாலர்த்தமும் சொல்லுகிறது –
கைங்கர்யத்துக்கும் -செய்யும் ஆத்மா ஸ்வரூபமும் விஷயதயா பர ஸ்வரூபம் -வழியும் விரோதியும் சொல்ல வேண்டும்
அர்த்த பஞ்சகத்தில் உத்தேச்ய பலம் கைங்கர்யமே -அதன் பொருட்டே மற்ற நான்கும் கூறப்படுகின்றன –

இவற்றில் பிரதம பிரபந்தமான திரு விருத்தத்தில் -த்வத் அனுபவ விரோதியான சம்சார சம்பந்தத்தை
அறுத்துத் தந்து அருள வேணும் எம்பெருமானை அர்த்திக்கிறார்
-இனி யாம் உறாமை உபக்ரமித்து -வன் சேற்று அள்ளல் அழுந்தார் –என்று -1-உப சம்ஹார -அப்யாசம் -2-நடுவிலும் சொல்லி-
-3-அபூர்வதா –4-பலம் -5-அர்த்தவாத –6-பொருத்தம் உடைய- லிங்கம் அடையாளம்
திருவாசிரியத்தில் -நிவ்ருத்த சம்சாரருக்கு போக்யமான தன்னுடைய வடிவு அழகை–அவயவ ஆபரண சோபையை–கலம்பகன் மாலையைப்
பணியாக எடுத்துக் காட்டுமா போலே -காட்டிக் கொடுக்க கண்டு அனுபவித்தார் பூரணமாக –
பெரிய திருவந்தாதியில் நிரதிசய போக்யனான-எம்பெருமானை அனுபவிக்கையாலே தத் அநு குணமாக
நல் பூவை பூ வீன்ற வண்ணன் – –மிக அன்பே பெருக -அனுபவித்து பிரிகையாலே –
திருஷ்ணை பிறந்து த்ருஷ்ண அநு குணமாக–ஏத்த முயல் –நீ கதியாய் நெஞ்சே நினை -பேசியும் நினைத்தும் தரிக்கிறார் –

திருவாய்மொழி யிலே –
இவருடைய த்ருஷ்ண அநு குணமாக –ஸ்ரீ யபதியாய் -சமஸ்த கல்யாண குணாத்மகனாய் –
தனக்குத் தகுதியான திவ்ய தேஹத்தை உடையானுமாய் -திவ்ய பூஷண பூஷிதனுமாய் -சங்க சகராதி திவ்யாயுதரனுமாய் –
பரமவ்யோமத்திலே -ஆனந்தமயமான திவ்ய ஆஸ்தான ரத்ன மண்டபத்திலே பெரிய பிராட்டியாரும் தானுமாய்
திவ்ய சிம்ஹாசனத்திலே ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து அருளி –அஸ்தானே பய சங்கிகளான அயர்வறும் அமரர்களாலே
அநவரத பரிசர்யமான சரண நளினனாய்க் கொண்டு -அங்கு அங்கனே செல்லா நிற்க –
-ஸ்வ சங்கல்பாயத்த -ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி
நிவ்ருத்திகமான ஸ்வ இதர சமஸ்தத்தையும் தனக்கு சரீரதயா சேஷமாக உடையனாய்
ஆமவை ஆயவையாய் நின்ற அவர் ஸ்வரூபம் -அடைய நின்றனர் ஸ்திதி -நின்றனர் பாசுரம் பிரவ்ருத்தி நிவ்ருத்தி இவன் அதீனம்
அந்தராத்மதயா-சேதன அசேதனங்களை வியாபித்து —தத் கத தோஷைரசம்ச்ப்ருஷ்டனாய் -வ்யாப்த கத -புலனொடு புலன் அலன் –
நாராயணாதி நாமங்களை தனக்கு வாசகமாய் உடையனாய் –ஏவம்விதனாக-உளன் சுடர் மிகு சுருதியுள்-1-1-7- -என்கிறபடியே உபநிஷத் சித்தனுமாய்
இப்படி விசாஜாதீயனுமாய் இருந்து வைத்து -அளி பொறையாய் நின்ற பரன் –
முதல் பதிகம் அர்த்தங்கள் -தொகுத்து –உளன் சுடர் மிகு சுருதியுள் –ஸ்ரீ யபதியாய் –
நலம் உடையவன் -சமஸ்த கல்யாண -சுடர் அடி –திவ்ய சுந்தர திருமேனி
அந்தாமத்து –ஆரம் உள –பூஷணங்கள்
ஒண் சங்கை –திவ்ய ஆயுதங்கள்
மாக வைகுந்தம் –காண ஏகம் என்னும் —பர ஸ்வரூபம் இத்தாலே சொல்லி அருளி -மேலே-விபவ சௌலப்யம்

ஆஸ்ரித வாத்சல்யத்தாலே -தேவ மனுஷ்யாதி சஜாதீயனாய் வந்து தன்னுடைய
பரம கிருபையாலே திருவவதாரம் பண்ணும் ஸ்வபாவனுமாய் -1-3-
தன்னுடைய ஆதாரங்களிலும் உதவப் பெறாத கர்ப்ப நிர்பாக்கியரும் இழக்க வேண்டாதபடி சர்வ அபராத சஹனாய் -1-4-
பத்ர புஷ்பாதிகளாலே ஸ்வ ஆராதனாய்க் கொண்டு ஆஸ்ரிதற்கு அத்யந்த பரதந்த்ரனாய் -1-6-
அவர்களுடைய இச்சா அநு குணமான போஜன சயநாதிகளை உடையனுமாய் -1-7-
சமஸ்த கல்யாண குண பரிபூர்ணனான தானே ஆஸ்ரித ஸூலபத்வார்த்தமாக கோயில்களிலே வந்து நின்று அருளியும்
இப்படியுள்ள சர்வேச்வரத்துக்கும் ஆஸ்ரித அநுக்ரஹத்துக்கும் ஏகாந்தமான படிகளால் பரிபூர்ணனான எம்பெருமான்
தன்னை நிர் ஹேதுகமாகக் காட்டி அருளக் கண்டு அனுபவித்து -தம்முடைய பிரகிருதி சம்பந்தம் ஆகிற பிரதிபந்தகம் அற்று
எம்பெருமானைப் பெற்று முடிக்கிறார்-அவா அற்று வீடு பெற்ற –குருகூர்ச் சடகோபன்
-இனி சொல்ல வேண்டுமவை எல்லாம் -அவ்வவ திருவாய் மொழிகள் தோறும் சொல்லக் கண்டு கொள்வது –

முதல் திருவாய்மொழியில் சொல்லிற்றாவது –
நாநா ரத்ன பரிபூரணமாய் -அபரிச்சேத்யமான கடலை முந்துற திரளக் கண்டால் போலே
ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே பரிபூர்ணனாய் -எல்லாப்படியாலே எல்லாரிலும் மேம்பட்டு -சர்வேஸ்வரனாய்
ஸ்ரீ யபதியாய் அபௌருஷேயமான ஸூ த்ருடமான ஸ்ருதிகளாலே பிரதிபாதிக்கப் பட்டுள்ள எம்பெருமானை
பாஹ்ய குத்ருஷ்டிகளாலே அவிசால்யமாம் படி அவன் பிரசாதத்தாலே சாஷாத் கரித்து -அனுபவித்து
அவ்வனுபவ ஜனித ப்ரீதி உள்ளடங்காமை -அனுபவித்தபடியே சவிபூதிகனான
எம்பெருமானைப் பேசி –எவன் என்று ஸ்வரூபமும் -சுடர் அடி -ரூபமும் -உயர்வற உயர் நலம் உடையவன் -குணங்கள்
எவன் -என்று ஸ்வரூபம் -சுடர் அடி -ரூபம் -உயர்வற உயர் நலம் குணம் –அமரர்கள் அதிபதி விபூதியும் சொல்லிற்று -மிகுநரை இலன் -மேற்பட்டவன் –
ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி இவன் ஆதீனம் -1-3/4/5/6/-சர்வேஸ்வரன் -பூத பவ்ய பத பிரபு ஆமவை ஆயவை –
சுடர் மிகு சுருதியுள் உளன் -ஸ்ரீ யபதியாய் -மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு –ஏவம் விதனானவன் திருவடிகளிலே -அடிமை செய்து உஜ்ஜீவி என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்
தொழுது எழு என் மனனே -கிரியா பதம் எல்லா பாசுரங்களிலும் அந்வயித்து பொருள் கொள்ளலாமே

கடலைத் திரளக் கண்டான் ஒருவன் அதிலுண்டான முத்து மாணிக்காதிகளையும் தனித் தனியே காணுமா போலே
முதல் திருவாய் மொழியிலே திரள அனுபவிக்கப்பட்ட எம்பெருமானுடைய குணங்களை ஒரோ வகைகளிலே
ஒரோ திருவாய் மொழியாகச் செல்லுகிறது இரண்டாம் திருவாய்மொழி தொடங்கி மேல் எல்லாம் –
பரத்வம் பஜநீயத்வம் சௌலப்யம் -முதல் மூன்று திருவாய்மொழி களுக்கும் -முத்து மாணிக்கம் போலே -இப்படிச் செய்தார் இவரே அல்லர் -பாரத ராமாயணாதிகளைப் பண்ணின வ்யாசாதிகளும்
சங்ஷேப விஸ்தரங்களாலே தங்கள் பிரபந்தங்களை ப்ரபந்தீ கரித்தார்கள் –

பர ஸ்வரூபம் -அகில ஹேய ப்ரத்ய நீகத்வத்தாலும் கல்யாணைகதா நத்வத்தாலும் –ஸ்வ இதர சமஸ்த வஸ்து விலஷணமாய்-
விபுத்வாத் தேசத பரிச்சேத ரஹிதமாய்நித்யத்வாத் காலத பரிச்சேத ரஹிதமாய் –சர்வமும் தனக்கு பிரகாரமாய்
தான் பிரகாரியுமாய் -தனக்கு ஒரு ப்ரகார்யந்தரம் இல்லாமையாலே வஸ்து பரிச்சேத ரஹிதமாய் –
–பிரகாரங்கள் உடன் கூடிய –பிரகாரி அத்வைதம் -நம் சம்ப்ரதாயம் -உனக்கு இரண்டாவதே இல்லை அரசே -ஆளவந்தார் –
ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன் -மிகுநரை இலன் –விசிஷ்ட பிரகாரத்துக்கும் அத்வைதம் -ஒண் பொருள் ஈறில –
சேஷத்வ ஞானானந்த ஆகாரத்தால் ஒரே ஆகாரம் –இதுவே ஸ்வரூபம் -ஒரே போல்வர் –என்றபடி -ஒரு ஜாதி நெல் போலே –
விசிஷ்ட யோக அத்வைதம் – விசிஷ்ட அஸ்ய அத்வைதம் -விசிஷ்டாத்வைதம்
-எம்பெருமானார் தரிசனம் என்றே பேரிட்டு–வளர்த்த அந்த செயல் அறிக்கைக்காக
ஜ்ஞானா நந்த மயமாய் –ஆனந்த ரூப ஞான ஸ்வரூபன் —அனுகூல ரூப ஞானமே ஆனந்தம் -பிரதிகூல ரூப ஞானம் துக்கம்
அனந்யாதீன பிரகாசமான ஞானம் -ஆஹ்லாத கரத்தவ ரூப ஞானம் -கல்யாணை கைதேக -போலே ஆனந்தமே –
ஜ்ஞான பல ஐஸ்வர்ய சீலாத்ய அனந்த கல்யாண குண கண மஹோததியாய் –
ஸ்ரீ யபதியாய் -ஸ்வ இதர சமஸ்தத்தையும் வியாபிக்கும் இடத்தில் அப்ராக்ருதமாய் -ஸூத்த சத்வ மயமாய் –
ஸ்வ அசாதாரணமாய் -புஷ்ப ஹாச ஸூ குமாரமுமாய் –புண்ய கந்த வாஸிதா நந்ததி கந்தராளமாய்-
புஷ்பத்தின் விகாசம் -புஷ்பம் விட அதி ஸூ குமாரமாய் -இருக்குமே -சர்வ கந்த -இத்யாதி -புண்ய கந்த -மணங்கள் கொடுப்பவன் –
சர்வ அபாஸ்ரயமாய் இருந்துள்ள -மனம் குணம் மங்களம் அனைத்துக்கும் -ஆஸ்ரயம்
திவ்ய விக்ரஹம் போலே வியாபித்து தரித்து நியமித்து –இப்படி சர்வ பிரகாரத்தாலும் ரஷகமாய்க் கொண்டு சேஷியாய் இருக்கும் –

பிரகிருதி ஸ்வரூபம் -மஹதாதி விகாரங்களை யுடையதாய் -நித்தியமாய் -த்ரிகுணத்மிகையாய் -சுக்ல கிருஷ்ண ரக்த வர்ணையாய்-
அநேக பிரஜைகளுக்கு பிரஜநந பூதையாய் -எம்பெருமானுக்கு சரீரதயா சேஷமாய் -சேதனர் கர்ம அநு குணமாக இச்சிக்க
சாபேஷ்த்வாத்--இந்த இச்ச அநு குணமாக -பராத் து-பகவத் சங்கல்ப்பத்தாலே சதுர் விம்சதி தத்வமாய்க் கொண்டு விகரிக்கக் கடவதாய்-
முக்குணங்களில் ஏறிட்டு -கடிவாளம் -நாம் குதிரைகள் -கட்டுப்படுத்துபவன் சர்வேஸ்வரன் சாரதி -மூன்றாவது அத்யாயம் –
இப்படி எம்பெருமானுக்கு இஷ்ட விநியோக அர்ஹமாய் இருக்கும் -வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் –

ஆத்ம ஸ்வரூபம் -அணு பரிமாணமாய் -அணுவாய் -லஷணையில்-இங்கே அணு பரிமாணமாய் -அணுவின் அளவினதாய் -அங்கே அணுவாய் –
ஹேது த்வயம் -நெல்லை -நூறு நூறு – ஆயுதாக்ராம் -அளவுடன் சேர்த்து -காரணங்கள் உடன் —ச சப்த உன்மான்ச -சூத்ரம் –
தேஜோ த்ரவ்யமாய் -ஜ்ஞாதாவாய் –தானே பிரகாசித்து -தர்மி ஞானம் -பிறவற்றையும் காட்டும் –தர்ம பூத ஞானம்
-ஸ்வரூபம் ஸ்வ பாவ ஞானம் இரண்டும் ஞானமே ஆத்மா ஸ்வரூபம் -ஞானம் உடையது -ஸ்வ பாவம்
ஜ்ஞாநானந்த குணகமாய் -ஆனந்தம் -அனுகூல ரூப ஞானம்
நித்யமாகையாலே -கால பரிச்சேத ரஹிதமாய் -ஜ்ஞான த்ரவ்யம் ஆகையாலே வஸ்து பரிச்சேத ரஹிதமாய் –
அநந்த கோடி பிறவிகள் இருந்து உள்ளோமே -என்பதால் -வஸ்து பரிச்சேதம் என்கிறார் -அப்ருதக் சித்த்யர்ஹ-ப்ருதங் நிர்தேசாநர்ஹ-அனந்யார்ஹ சேஷமுமாய் –பிரணவ-அர்த்தம் –பரசேஷதைகரஸமுமாய்-நாராயணாய அர்த்தம்
அத்யந்த பரதந்த்ரமுமாய் –நமஸ் அர்த்தம் —-இருக்கும் எம்பெருமானுக்கு-
-இத்தை-தத்வ த்ரயம் – உள்ளபடி அறிவாரில் தலைவர் ஆயிற்று இவர்

இவ்வாழ்வார் திருவாய் மொழி பிரபந்தத்தால் செய்ததாயற்ற அர்த்தம் ஏது என்னில் –
முதல் திருவாய்மொழியில் -உயர்வற உயர்நலம் உடையவன் –1-1-1-என்று தொடங்கி –உணர் முழு நலம் –மிகுநரையிலன் -1-1-2-என்றும்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் -1-1-3–என்றும்
ஆமவை ஆயவையாய் நின்ற அவர் –1-1-4-என்றும் சொல்லிக் கொடு போந்து
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை வரனவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற பரன்-1-1-11- -என்று தலைக் கட்டுகையாலே
சூஷ்மம் -ஆகையாலே-கர விசும்பு –அக்னி -வரன் -ஸ்ரேஷ்டம் -சப்த ரூப கந்தம் போலே –நின்ற பரன்-
நாராயணனே பரத்வம் என்கைக்காக நாராயண சப்தார்த்தத்தை அருளிச் செய்தார் –சப்தார்த்தம் -முதல் பதிகம் -சப்தம் –வண் புகழ் நாரணன் அடுத்த பத்தில்
சர்வாதிகத்வமும் –மிகுநரையிலன் —சமஸ்த கல்யாண குணாத் மகத்வமும்
-ஆமவை ஆயவையாய் –கர விசும்-அயர்வறு அமரர்கள் அதிபதி –-உபய விபூதி நாதத்வமும் இ றே-நாராயண சப்தார்த்தம்-
இதனுடைய சேஷம் இ றே ஒன்றும் தேவும் –4-10-திண்ணன் வீடும் -2-2-அணைவது அரவணை மேல் உப லஷணம்-
பர -பரத்வம் –விபவ பரத்வம் -அர்ச்சை பரத்வம் –

அனந்தரத் திருவாய் மொழியிலே –இவ்வர்த்தத்துக்கு வாசகமான திரு நாமம் தன்னை -வண் புகழ் நாரணன் -1-2-10–என்று அருளிச் செய்தார் –
வ்யாபகாந்தரங்களிலும் இவ்வர்த்தத்தை அறியலாய் இருக்கும் இ றே -விஷ்ணு -வாசுதேவ நாராயண வ்யாபக மந்த்ரங்கள் –
அங்கன் அன்றிக்கே -இதுவே வாசகம் என்று தம் திரு உள்ளத்தில் அறுதியிட்ட ஆகாரம் தோற்ற –
நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் ஆரம்பித்து அவரும் பிரபந்தங்கள் முழுவதும் அருளிச் செய்தார் –
செல்வ நாரணன் –1-10-8-என்றும்
திரு நாரணன் -4-1-1–என்றும் –
நாரணன் முழு ஏழ் உலகுக்கு நாதன் –2-7-2-என்றும் –
காராயின காள நன் மேனியினன் நாராயணன் –-9-3-1-என்றும்
திண்ணன் நாரணன் -10-5-1–என்றும் -ஆதரித்திக் கொண்டு போந்து
வாழ் புகழ் நாரணன் –10-9-7-என்று வழிப் போக்கில் -அர்ச்சிராதி மார்க்கத்தை அருளிச் செய்யும் இடத்திலும் –
-வார்த்தையும் இதுவேயாய்த் தலைக் கட்டுகையாலே –இதுவே வாசகம் என்கிற நிர்பந்தத்தை அருளிச் செய்கிறார் –
–பாற்கடல் அடி பாடி -பொற்றாமை அடியே -நிகமித்து ஆண்டாள் அருளி -திருவடி 2/29 அதே போலே இவரும் 1-2/10-9/

இனி மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள் -1-3-1- என்று தொடங்கி
திருவுடை யடிகள் -1-3-8- என்றும்
மைய கண்ணாள் மலர் மேல் உறை வாழ் மார்பினன் -4-5-2- என்றும்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கு இன்பன் -4-5-8- என்றும்
கோலத் திரு மா மகளோடு என்னைக் கூடாதே –6-9-3- என்றும் -சொல்லிக் கொண்டு போந்து
திருவாணை-10-10-7- என்றும்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -10-10-7- என்றும் தலைக் கட்டுகையாலே
ஸ்ரீ மானான நாராயணனே பரதத்வம் என்றும் சொல்லிற்று –
இத்தால் நம் ஆச்சார்யர்கள் ரஹச்யத்தில் பத த்வயத்தாலும் அருளிச் செய்து கொண்டு போரும் அர்த்தத்துக்கு
அடி இவ்வாழ்வாராய் இருக்கும் என்றது ஆயிற்று –
ஆச்ரயண வேளையிலே -மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள் -1-3-1- என்று தொடங்கி
போக வேளையிலே -கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -10-10-7- என்று சொல்லுகையாலே
ஆச்ரயண வேளையோடு போக வேளையோடு வாசி யற ஒரு மிதுனமே உத்தேச்யம் என்று சொல்லிற்று ஆயிற்று –

இப்படி பர ஸ்வரூபம் நிர்ணீதம் ஆயிற்று-பர ஸ்வரூப பிரதி சம்பந்தியான ஸ்வ ஸ்வரூபம் இருக்கும் படி என் என்னில்
உடன்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து –1-1-7-என்று சரீராத்ம பாவத்தை தாம் அனுசந்தித்து பிறருக்கு உபதேசிக்கிற இடத்தில்
உம்முயிர் வீடுடை யானிடை –1-2-1-என்று –உயிர் வீடு -ஆத்மாவையும் சரீரத்தையும் யுடையான்
-உயிரை வீடாக சரீரமாக யுடையவன் -இரண்டு அர்த்தங்கள் – அந்த சரீராத்ம பாவம் தன்னையே உபதேசித்து
இந்த சரீராத்ம பாவத்தால் பலிக்கிறது அனந்யார்ஹ சேஷத்வம் என்னும் இடத்தை –
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே –2-9-4-என்றும்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -8-8-2- என்றும் சொல்லி
இது தத் சேஷத்வ அளவிலே நிற்பது ஓன்று அல்ல –
ததீய சேஷத்வ பர்யந்தம் ஆனால் ஆயிற்று தத் சேஷத்வ சித்தி என்னும் இடத்தை
பயிலும் சுடர் ஒளி -3-7- நெடுமாற்கு அடிமை -8-10-யிலே பரக்க அருளிச் செய்து –
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-3-10-என்று பிரார்த்தித்து
பிரார்த்தித்த படியே -அடியாரோடு இருந்தமை -10-9-1-என்று தலைக் கட்டுகையாலே
பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் சேஷத்வமே ஸ்வரூபம் என்னும் இடம் சொல்லிற்று –

ஸ்வ ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தம் இருக்கும் படி என் என்னில்
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே —2-9-4-என்று தொடங்கி
வழு விலா வடிமை செய்ய வேண்டும் நாம் –3-3-1-என்றும்
பணிமானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -4-8-2-என்றும் –
முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -8-5-7- -என்றும் -இப்படிகளாலே அடிமையே புருஷார்த்தம் என்னும் இடத்தை நிர்ணயித்து
இது சாஸ்திர விஹிதம் என்று செய்யும் அளவு அல்ல –நரகம் புகும் பயங்களால் அல்ல -அகிஞ்ச்கரத்வ சேஷத்வம் அனுபபத்தி -ஸ்வரூப பிராப்தம் என்று செய்யும் அளவல்ல -ராக பிராப்தம் -என்று சொல்லுகைக்காக
அடியிலே உயர்வற உயர்நலம் உடையவன் -1-1-1-என்று கொண்டு பிராப்யமான குணங்களைச் சொல்லி
சுவையன் திருவின் மணாளன் -1-9-1–என்றும்
தூய அமுதைப் பருகிப் பருகி -1-7-3–என்றும் குண விசிஷ்ட வஸ்துவினுடைய போக்யதையும் சொல்லி
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே -2-5-4-என்றும்
ஆராவமுதம் –5-8-1-என்றும்
ஆராவமுதம் ஆனாயே -10-10-5–என்றும் இந்த போகத்தினுடைய நித்ய அபூர்வதையைச் சொல்லி
உகந்து பணி செய்து உணபாதம் பெற்றேன் –10-8-10-என்று குண அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யமே-புருஷார்த்தம் என்னும் இடத்தைச் சொல்லி –இது தான் யாவதாத்மபாவியான புருஷார்த்தம் என்கைக்காக
ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் –10-8-10-என்று தலைக் கட்டுகையாலே
பகவத் குண அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யமே -புருஷார்த்தம் என்று அருளிச் செய்தார்

இப்புருஷார்த்ததுக்கு இடைச் சுவரான விரோதி வேஷத்தை இரண்டாம் திருவாய் மொழியிலே –வீடுமின் முற்றவும் -1-2-என்று கட்டடங்க சொல்லி
அது தன்னையே மேல் மூன்று திருவாய் மொழியாலே விஸ்தரித்து அருளிச் செய்தார் -அவை எவை என்னில்
அசேவ்ய சேவை த்யாஜ்யம் என்றார் –சொன்னால் விரோதத்திலே –3-9-
ஐஸ்வர்ய கைவல்யங்கள் த்யாஜ்யம் என்றார் ஒரு நாயகத்திலே -4-1-
சரீர சம்பந்த நிபந்தனமாக வரும் பரிக்ரஹங்கள் த்யாஜ்யம் என்றார் கொண்ட பெண்டிரிலே –9-1-
சாஸ்திர சித்தமான ஐஸ்வர்ய கைவல்யங்கள் புருஷார்த்தமாகத் தட்டு என் என்னில் -பரம புருஷார்த்த லஷண மோஷத்திலே அதிகரித்தவனுக்கு
ஐம்கருவி கண்ட இன்பம்-4-9-10- ஆகையாலும் -தெரிவரிதாய் -4-9-10-அளவிரந்ததே யாகிலும் பகவத் அனுபவத்தைப் பற்ற
சிற்றின்பம் ஆகையாலும் முமுஷூவுக்கு இவை த்யாஜ்யம் என்றார் –ஆக த்யாஜ்ய வேஷத்தை அருளிச் செய்கிறார் –

விடுவதின் முறை -சர்வ தர்மான்-விடுவைதைகளைச் சொல்லி – பரித்யஜ்ய -வாசனையுடன் -த்யாக பிரகாரம் அங்கே சொல்வது போலே
த்யாகப் பிரகாரம் இருக்கும் படி எங்கனே என்னில் -த்யாஜ்யம் என்றால் விடும் அத்தனை அன்றோ -த்யாகப் பிரகாரம்
இருக்கும் படி அறிய வேணுமோ என்னில் -வேணும் –
விஷயங்களில் நின்றும் தான் கடக்க வர்த்திக்கவோ -அன்றியே விஷயங்களை நசிப்பித்து வர்த்திக்கவோ என்றால் -இரண்டும் ஒண்ணாது –
கொசு தொல்லைக்கு -கடக்க வர்த்திக்க முடியாது அவற்றை ஒழிக்கவும் முடியாதே -அதே போலே –
கடக்க வர்த்திக்க என்று நினைத்தால் லீலா விபூதிக்கு அவ்வருகே போக வேணும்
நசிப்பித்து வர்த்திக்கவோ என்றால் பகவத் விபூதியை அழிக்கையாய் விடும்
இரண்டும் ஒழிய விஷய சந்நிதியில் நின்றும் நிர்மானுஷ்யமான காட்டிலே வர்த்தித்தாலோ என்னில்
சர்வத்தையும் விட்டுக் காட்டிலே இருந்த ஆதிபரதனுக்கு மானின் பக்கலிலே சங்கம் உண்டாய் ஜ்ஞான பிரசம்சம் பிறந்தது
அந்திம ஸ்ம்ருதி பக்தி யோகனுக்கு வேணும் –பொறுப்பை பகவான் கொண்டு பிரபன்னனுக்கு அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம்
சௌபரி நீருக்கு உள்ளே முழுகிக் கிடக்கச் செய்தே அங்கே சில மத்ஸ்ய சஞ்சாரத்தைக் கண்டு விஷய பிரவணன் ஆனான் –
மாந்தாதா ஐம்பது பெண்களை கல்யாணம் செய்து கொண்டானே –
ஆகையாலே த்யாக பிரகாரம் இவை யல்ல –ஆனால் ஏது ஆவது என்னில்
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -இறை சேர்மின் -1-2-3–என்று –தேஹத்தில் ஆத்ம புத்தியையும் –
தேக அநு பந்திகளான பதார்த்தங்களில் மமதா புத்தியையும் தவிருகை த்யாக பிரகாரம் என்று பிறருக்கு உபதேசித்தார் —
யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன் -2-9-9—என்று தாமும் அனுசந்தித்தார்
நிவ்ருத்த ராகச்ய க்ருஹம் தபோவனம் -என்று-பற்று அற்றவனுக்கு – நிவ்ருத்த ராகனாய் இருக்குமவனுக்கு தான் இருந்த தேசமே தபஸ் ஸூ க்கு
ஏகாந்த ஸ்தலம் என்றதாயிற்று –சாண்டில்யி -பெரிய திருவடி விருத்தாந்தம் -இப்படி எங்கே கண்டோம் என்னில்
-ஸ்ரீ ஜனக ராஜன் பக்கலிலும் ஸ்ரீ குலசேகரப் பெருமாள் பக்கலிலும் கண்டு கொள்வது –ஆகையாலே புத்தி த்யாகமே த்யாகம் என்றபடி –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -எல்லா தர்மங்களையும் விட்டு விடு -நாமே விட்டோம் -உபாயம் என்கிற எண்ணம் விட சொல்கிறான் –
உபாய புத்தியை தியாகம் விட சொல்லி அருளுகிறான்
ஜனகர் -யாஜ்ஞ்க்ன வர்க்கர் -சுகாச்சார்யர் இருவர் இடம் கேட்ட ஐதிகம் என்பர் -நாட்டிலே இருந்து துரந்தானே
மமகாரம் விட்டவனுடைய மமகாரம் -இயம் சீதா மம சுதா –-சொல்ல வேண்டும் படி குலப்பெருமை நம் முதலியாண்டான் தவிரே
திரு மருகா தாசரதி -தயரதன் தன் குல முதலா -முன்னாக அருளிச் செய்தாரே

இவ் விரோதி நிவ்ருத்திக்கும் புருஷார்த்த சித்திக்கும் உபாயம் ஏது என்னில்
த்ரை வர்ணிக அதிகாரமான பக்தி -அகிஞ்சன அதிகாரமான பிரபத்தியும் என்று இரண்டும் இ றே வேதாந்த சித்தமான உபாயம்
விசிஷ்ட வேஷத்தே உபாயம் பக்தி -நிஷ்க்ருஷ்ட வேஷ -ஆத்மா ஸ்வரூபம் பிரபத்தி
கைங்கர்யம் ஆசை கொண்டவர் -ந அந்யதா -வேறு வழியால் இன்றிக்கே -பக்தி பிரபத்தியால் மட்டுமே அடைகிறார்கள் –
உபாயமாக எதுவும் வேண்டாம் -அகிஞ்சனன் -கைங்கர்யமாக அனைத்தையும் செய்ய வேண்டும் –கத்யந்த ஸூ ந்யத்வம் -அநந்ய கதித்வம் –
நோற்ற நோன்பில் -ஆகிஞ்சன்யம் –உன்னால் அல்லால் -களை  கண் மற்று இலேன் —ஆராவமுதே -அநந்ய கதித்வம்
பிரயத்த பாணி -சேர்த்த கை -உபாயாந்தரங்கள் கலசாத புத்தி -கால்கள் சேர்த்து அநந்ய கதித்வம் –
இதில் பிரபத்தியே உபாயம் என்று நமக்கு சித்தாந்தம் என்னும் ஆகாரம் தோற்ற உபாய வேஷத்தை அருளிச் செய்கிறார்
நோற்ற நோன்பிலேன் –5-7-1-என்று தொடங்கி
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-5-7-10–என்றும்
உழலை என்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான் கழல்கள் அவையே சரணாகக் கொண்ட –5-8-11-என்றும்
நாமங்கள் ஆயிரமுடைய நம்பெருமான் அடிமேல் சேமம் கொள் தென் குருகூர்ச் சடகோபன் -5-9-11-என்றும் -சேமம் -ஷேமம் -புத்தியில் உறுதி என்றவாறு –
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு –5-10-11-என்றும் சொல்லிக் கொண்டு போந்து
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் -10-10-3-என்று தலைக் கட்டுகையாலே திருவடிகளே உபாயம் என்று அருளிச் செய்தார்

இத்தை பிறருக்கு உபதேசிக்கிற விடத்திலும்
கீதா பாஷ்யம் ஸ்ரீ பாஷ்யம் -பக்தியே உபாயம் -உபநிஷத் பரமான சாஸ்திரங்கள்
அனுஷ்டித்து அந்தரங்கருக்கு பிரபத்தி -ஸ்வரூப ஞானம் மலர்ந்தவர்களுக்கு -அச்சித்வத் பாரதந்த்ரம் வந்தவர்களுக்கு
ஆனால் ஆழ்வார்–சக்தி இருந்தாலும் -உகந்த உபாயம் -எளிய உபாயம்–திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ -4-1-1-என்றார்
ஆறு எனக்கு நின் பாதமே -5-7-10-என்றும் –
கழல்கள் அவையே -5-8-11–என்றும்
சரணே சரண் –5-10-11-என்று அவதரிக்கையாலே –அவதாரணம் -ஏவகாரம் –-உபாய பூர்த்தியை அருளிச் செய்தார் –
உபாய நைரபெஷ்யம் -சகாயாந்தர அசஹயத்வம் -வேறே வேண்டியது இல்லை மட்டும் இல்லை -அவற்றை அவனுக்கு பிடிக்கவே பிடிக்காதே
ஈஸ்வரன் தன்னை பொறுக்கும் —பக்தி தன்னையும் பிறரையும் பொறுக்கும் -பிரபத்தி -தன்னையும் பெறாது பிறரைரும் பொறாது –
தன்னையே பொறுக்காது என்றால் உபாயாந்தரங்களைப் பொறுக்காது சொல்லவும் வேண்டுமோ
ச்வீகாரம் அதிகார விசேஷணம்–நாராயணனே நமக்கே பறை தருவான் –
இவ்வுபாயத்துக்கு அதிகாரிகள் யாவார் யார் என்னில் -மயர்வற மதி நலம் அருளினன் -என்ற இடத்திலே –
எனக்கு அருளினான் என்கைக்கு தம்மைக் காணாமையாலே ஆகிஞ்சன்யத்தையே புரச்கரித்து
அருளப் பெற்றேன் என்றால் எனக்கு சொல்ல வேண்டாம் –தான் என்ற தனி வஸ்துவைக் காணாமையாலே-
1-உபாய நிர்ணய வேளையிலே -நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் -5-7-1-என்று தரை வர்ணிக அதிகாரமான
உபாயாந்தரங்களிலே அநந்வய முகத்தாலே ஆகிஞ்சன்யத்தைப் பேசி
2-ஆசரயண வேளையில் -புகல் ஒன்று இல்லா அடியேன் -6-10-10-என்று சொல்லி
3-போக வேளையில் தமக்கு உண்டானது அடங்க பகவத் பிரசாத லப்த லப்தம் என்கைக்காக –
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் –3-3-4-என்று கரும் தரையைப் பேசி -இத்தாலே என் கண் பாசம் வைத்து அதனால் பரஞ்சுடர் சோதி அவன்
ஒப்பிலாத தீவினை எனை உய்யக் கொண்டு –7-9-4-என்று –
சாபராத ஜந்துக்களுக்கும் புகுரலாம் என்று தோற்றுகையாலே-சர்வாதிகாரம் -என்றது ஆயிற்று –

அதிகாரியைப் பெற்றாலும் -உபாயம் சித்தமானாலும் -ச்வீகாரம் இல்லாத போது ஜீவிக்கை யாகாமையாலே அந்த ச்வீகார வேஷத்தை
சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக -சித்த அன்னம் -அதிகாரி இருந்தாலும் பசி வேண்டுமே உண்ண –
சர்வஜ்ஞ்ஞன் -சர்வ நியந்த -காருணிகனாய் இருந்தாலும் சம்சாரம் நன்கு நடத்த ரஷா பேஷை -எதிர் பார்த்து இருக்கிறான்
உபாயத்தை பொறுக்க மாட்டான் -எதையும் எதிர்பார்க்க மாட்டான் என்றது இல்லையே –உண்ண ஷூத்து-பசி – போலே
அவனை அனுபவிக்க ருசி –ரஷிக்க வேண்டும் என்று வேண்டுவதே –இது -சைதன்ய கார்யம் -ராகம்
-போஜனத்து ஷூத்து போலே -பசி உணவு பெற உபாயம் இல்லை -அனுபவிக்க தகுதி கிடைக்கும் –
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட –5-8-11- என்றும் –
இதனுடைய சாங்க அனுஷ்டான வேளையிலே -சாங்க -அங்கத்துடன் கூடிய சரணாகதி -புகல் அற்ற அடியேன் —
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன் –6-10-10-என்று அருளிச் செய்தார் –

நிர்ஹேதுகமாக -ச்வீகார சித்தியும் அவனாலே -பாதமே -நின் சரணாக தந்து ஒழிந்தாய் -நீயாக -பரகத ச்வீகாரமே ஆழ்வார்
மார்பு காம்பை தாய் குழந்தை வாயிலே கொடுத்து பாலூட்டுமா போலே –
பிரசாத பலத்தாலே சரணம் அபி வசனம் பிறந்தது கூரத் ஆழ்வான்
திருக் கமல பாதம் வந்து -பின்பு சென்றதாம் –புகுந்தான் பின் பின் வணங்கும் என் சிந்தைனைக்கு இனியான்
சர்வ முக்தி பிரசங்கம் மீண்டும் வாராதோ -துளி அனுகூல்யம் –அத்வேஷம் மாத்ரம்-இத்தைக் கொடுத்தது யார் –
அதிகாரி விசேஷணம் -ருசி இருக்கு என்பது -அனுபவிக்க தகுதி கொடுக்கும் –

இந்த ச்வீகார சித்தி தானும் அவனாலே என்னும் இடத்தை -நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய்-5-7-10-
என் உணர்வின் உள்ளே நிறுத்தினேன் –அதுவும் அவனது இன்னருளே – 8-8-3–என்றும் அருளிச் செய்தார் –
இந்த ச்வீகர்த்தாவினுடைய அத்யவசாய வேஷத்தை -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் –5-8-8-என்றும்
நாடொறும் ஏக சிந்தையனாய் -5-10-11–என்றும் அருளிச் செய்து
இவ்வுபாயத்தை பிறருக்கு உபதேசிக்கிற இடத்தில் -சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் -என்று உபாய சௌகர்யத்தை அருளிச் செய்து
இது தன்னை சபிரகாரமாக அருளிச் செய்கிற இடத்தில் –இது பக்த்யங்கம் அன்று -ஸ்வதந்திர உபாயம் -என்கைக்காக –
அங்க பிரபத்தி -பக்திக்கு அங்கம் -இதுவே ஸ்ரீ கீதாச்சார்யன் அருளி -பக்திக்கு ஆரம்ப விரோதிகளைப் போக்க பிரபத்தி
ஸ்வ தந்திர பிரபத்தி -பிரபன்னர்
சரணமாகும் -9-10-5–என்று தொடங்கி-மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –9-10-5-என்று பிராப்தி பர்யந்தமாக
முடிய நடத்தும் -என்று அருளிச் செய்தார்
இவ்வுபாய அத்யவசாயம் பண்ணி இருக்குமவனுக்கு கால ஷேப பிரகாரம் இருக்கும் படி என் என்னில்
தொண்டர்க்கு அமுது உண்ண சொன்மாலைகள் சொன்னேன் –9-4-9-என்று திருவாய்மொழி தானே கால ஷேப பிரகாரம் என்று அருளிச் செய்தார்

இப்படி உபாயத்தை சுவீகரித்து -இதுவே போது போக்காக திரியும் அதிகாரிக்கு பல வேஷம் இருக்கும் படி என் என்னில்
ஜிதேந்த்ரியத்வம் -பிரதமமாய் -கைங்கர்ய சித்தி சரமமாய் இருக்கும் இத்தனையும் உபாய பலம் என்னும் இடத்தை அருளிச் செய்தார் –
பிரதமத்திலே இழியும் போது ஜிதேந்த்ரியனாய் கொண்டு இழிய வேண்டும் உபாசகனுக்கு –
ஜிதேந்த்ரியத்வமும் உபாயபலம் இவ்வதிகாரிக்கு எங்கனே என்னில் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -2-7-8-என்றும்
மருவித் தொழும் மனமே தந்தாய் –2-7-7-என்றும் -ஜிதேந்த்ரியத்வம் அவனாலே என்னும் இடத்தைச் சொல்லி
ஜிதந்த்ரியன் ஆனவாறே பகவத் அனுபவத்துக்கு உபகரணமான பக்த்யாதிகள் தனக்குத் தானே உண்டாகிறதோ என்னில் –
பக்தி கொண்டு அனுபவிக்க -பிராப்யமாக இது பிரபன்னனுக்கும் வேண்டுமே கைங்கர்யம் அனுபவிக்க
மயர்வற மதி நலம் அருளினான் -என்றும் -பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தையும் தானே தந்தான் என்கையாலே
பக்தியுத்பத்தியும் அவனாலே என்னும் இடம் சொல்லி நின்றது
காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் –5-3-4-என்று அவனே வர்த்தகன் என்னும் இடம் சொல்லி
வ்ருத்திக்கு எல்லை ஏது என்னில் -அதனில் பெரிய அவா -10-10-10-என்று தத்வ த்ரயங்களையும் விளாக்குலை-விளாக்குலை -அந்த்ர்பாவம் ஆகும் படி –
கொள்ளும்படி பெருகின படியைச் சொல்லி
என் அவா அறச் சூழ்ந்தாய் -10-10-10-என்று தம் திரு வாயாலே அருளிச் செய்கையாலே
சரீர சம்பந்தத்தை அறுத்து -தேச விசேஷத்தில் கொண்டு போய் சம்ச்லேஷித்து தலைக் கட்டினான் என்றது ஆயிற்று

ஆக –-இவ்வைந்து அர்த்தமுமே திருவாய் மொழியாலே பிரதிபாதிக்கிறது -அல்லாதவை ஆநு ஷங்கிக சித்தமாய் வந்தது இத்தனை -எங்கனே என்னில்
பரதத்வம் ஸ்ரீ மன் நாராயணன் -என்றும்
அனந்யார்ஹ சேஷத்வமே ஸ்வரூபம் -என்றும்
குண அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யமே புருஷார்த்தம் -என்றும் –
அஹங்கார மமகாரங்கள் தத் விரோதி என்றும்
தந் நிவ்ருத்திக்கும் கைங்கர்ய சித்திக்கும் சர்வ ஸூ லபனான சர்வேஸ்வரன் திருவடிகளே உபாயம் என்றும்
ஜிதேந்த்ரியம் தொடக்கமாக கைங்கர்ய பர்யந்தமாக உபாய பலம் -என்றும் -சொல்லி நின்றது

ப்ராப்யச்ய ப்ரஹ்மணோ ரூபம் –ப்ராப்துச்ச பிரத்யகாத்மன -ப்ராப்த்யுபாயம் பலம் ப்ராப்தேஸ் ததா பிராப்தி விரோதி
ச வதந்தி சகலா வேதாஸ் ஹேதிஹாச புராணகா முனயச்ய மஹாத்மாநோ வேத வேதார்த்த வேதின –ஹாரித சம்ஹிதை-
பறவை சொன்ன வார்த்தை இதுவும் -என்று சகல வேத தாத்பர்யம் இவ்வர்த்த பஞ்சகம் என்னும் இடத்தை
பெரிய வங்கி புரத்து நம்பி திருவாய் மொழிக்கு வாக்யார்த்தமாக அருளிச் செய்தார் –

————————————————————————–ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ. வே.வேளுக்குடி சுவாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading