கண்ணி நுண் சிறுத் தாம்பு -3- திரி தந்தாகிலும் தேவபிரானுடை — ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ நம்பிள்ளை / ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் /-அருளிச் செய்த வியாக்யானங்கள் –

ஸ்ரீ நஞ்சீயர் -அருளிச் செய்த வியாக்யானம் –

ஆழ்வார் உகந்த விஷயம் என்று உகக்கிறார்

திரி தந்தாகிலும் தேவபிரானுடைக்
கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே -3-

 

திரி தந்தாகிலும்-
ந ச புநா வர்த்ததே -என்கிறது பகவத் விஷயத்தை இ றே
அத்தை முதல் அடியாகக் கொண்டு முடிந்த நிலத்தளவே போனால்
போன வழி எல்லாம் மீள வேண்டும் படி இ றே ஆழ்வார் திருவடிகளில் தமக்கு உண்டான பாரதந்த்ர்யம் இருக்கும் படி

தேவபிரானுடைக்கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
நித்ய ஸூ ரிகளுக்குப் படி விடும் வடிவு காணும் இவர் வேண்டா என்கிற விஷயம் இருக்கும் படி
இவ்வளவும் இவர்க்கு உத்தேச்யராகப் பெற்றிலோம் ஆகிலும் உத்தேச்யருக்கு உத்தேச்யராய்ப் பெற்றோம் இ றே (என்று எம்பெருமான் திரு உள்ளம் )
பானௌ க்ருஹீத்வா விதுரம் சாத்திய கிஞ்ச மஹாயசா-ஜ்யோதீம்ஷ் யதித்யவத் ராஜன் குருன் ப்ரச்சாதயன் ஸ்ரியா -என்கிறபடியே (விதுரர் சாத்விகி கைகளை பிடித்து போனானே கண்ணன் – -அவர்களுக்கு நெஞ்சால் விரோதம்- கண்டார்கள் -)-நெஞ்சால் பொருந்தாமை அன்றிக்கே கண்ணால் காண்கையும் மிகையாய் இருக்கிற படி-
த்ருனௌ ரூப சம்பன்னௌ என்று இறே முறைப்படுவார் வார்த்தையும் -விஷயம் இருந்தபடி பேச வேணும் இறே

பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு –
சர்வ நிரபேஷரான ஆழ்வாருக்கு –
ஆழ்வார் ஒருவருக்கும் இ றே ஈஸ்வரன் மயர்வற மதி நலம் அருளிற்று
இவர் ஜகத்துக்காக மயர்வற மதி நலம் அருளினார் இ றே
இவரையும் கட்டித் தருமூர் ஆகையாலே வண்மையின் மிகுதி சொல்லுகிறது
விசேஷஜ்ஞர் அடங்கத் திரண்டவூர் இ றே-( பெரிய வண்மை இரண்டு விசேஷணங்கள் )
அங்குத்தைக்கு நிர்வாஹகரான பூர்த்தியும் உண்டு இ றே இவர்க்கு –
தாம் சொல்லும் போதும் பெரிய வண் குருகூர் வண் சடகோபன் -8-1-11–என்று இ றே சொல்லுவது-இவருடைய நாராயணத்வம் இருக்கிறபடி –

ஆள்-உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே-
அடியேன் என்கையாலே இவருடைய சதுர்த்தியில் அர்த்தத்தைக் காட்டுகிறது
அதாவது சேஷி உகந்தத்தை உகக்குமது இ றே கைங்கர்யத்தின் எல்லை நிலமாகிறது

————————————————————————–

ஸ்ரீ நம்பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம்-

தேவு மற்று அறியேன் என்றார் கீழ் –
ஆழ்வார் பற்றின விஷயம் என்று அவ்வழியாலே பற்றுகிறார்
கிடந்தானை கண்டு ஏறுமா போலே தந்தலையாலே வருமது இ றே தவிர்த்துக் கொண்டது
தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல்-என்று அத்தலையாலே வருமது தவிர்த்துக் கொண்டு இலரே –
ஸூர்ப்பணகை போலே வழி எல்லா வழியே வருமத்தை இ றே தவிர்த்தது -ஆழ்வார் தலையாலே வருமது தவிர்ந்திலரே
பவத பரமோ மத -என்று கேட்க -தர்மோதிகதாமோ மக என்று ஆச்சார்யா ருசி பரிக்ருஹீதமாய் வருமது ஏதேனும் ஆகிலும் அமையும் இவர்க்கு –

குண மலைப் பாடியுடையார் காங்கேயர் தெற்கே எடுத்து விடுகிற வளவிலே கோயிலாச்சான் இவருக்குச் சில அரிசியும் பச்சையும் வரக் காட்டினான் –
அப்போது சங்குசிதமாய் இருக்கையாலே அபேஷிதமாய் இருக்கும் இ றே
இவ்வளவிலே உபகரித்தவனுக்கு பிரத்யுபகாரம் பண்ண வேணும் என்று நினைத்து இருந்து பின்பு ஒரு நாளிலே கண்டு
எங்கள் பக்கலிலேயும் ஓர் உபகாரம் கொள்ள வேண்டும் -என்ன நான் முன்பே கொண்டேன் என்ன
என்னை அறியாமல் எங்கனே கொண்டபடி என்ன
எங்கள் ஆச்சார்யர் கோயில் அளவிலே நீர் அனுகூலித்த படியை நினைத்து அவ்வேளாளனாலே இம்மண் பெற்றோம் என்று
பலகாலும் அருளிச் செய்யக் கேட்டேன் -இனிக் கொள்ள வேண்டுவதொரு உபகாரம் இல்லை என்றான் –
திரிபுரா தேவியார் வடகீழ் மூளை தத்வத்தையும் ஆஸ்ரயணீய வஸ்து என்று நினைத்து இரஏனோ எம்பெருமானார் அங்கீ கரித்தாராகில் –
அவர் அங்கீ கரியாமை அன்றோ அவரதேவதையாக நினைத்து இருக்கிறது என்றார் –

திரி தந்தாகிலும் –
திரிகை யாவது மீளுகை -மீண்டாகிலும் –
தரவென்று அடையாளச் சொல்லாய் திரிதந்தாகிலும் என்றது போன வழி எல்லாம் மீண்டாகிலும்
அதாவது ஆழ்வார் புணர்ப்பை விட்டு -ஆழ்வார் தம்மை விட்டு -இவ்வளவும் வந்து

தேவபிரானுடைக் கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்-
இவர் தாம் நின்ற நிலை குலைந்து பகவத் விஷயத்திலே நிற்கும் போதும் நித்ய ஸூ ரிகளுடைய யாத்ரையே யாய்த்து இருப்பது
தேவ பிரான்
நித்ய ஸூ ரிகளுக்குத் தன்னை முற்றூட்டாக அனுபவிக்கக் கொடுத்துக் கொண்டு இருக்கும் உபகாரகன் –
தேவபிரானுடைக் கரிய கோலத் திரு உரு-
யோகப்ரஷ்டர் ஊர்வசியினுடைய வடிவழகை வர்நிக்குமா போலே சொல்லுகிறார்
கோலமே தாமரைக் கண்ணன் ஓர் அஞ்சன நீலமே -என்று ஆழ்வார் சொல்லக் கேட்டிருக்கும் செவி ஏற்றாலே சொல்லுகிறார்
காண்பன் –
யோகப்ரஷ்டனுக்கு விஷயம் கண்ணுக்கு இலக்காமா போலே ஆழ்வாரை விட்டால் பகவத் விஷயமாய்த்து இவர் காண்பது
யான்
இப்படி சந்யசித்துப் போந்த நான்-

பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு –
நான் ஒன்றைப் பற்றினேன் -ஒன்றை விட்டேன் -என்று சொல்லலாம் படியோ ஆழ்வாருடைய பூர்த்தி இருப்பது

ஆள்உரியனாய்-
உரிய அடியனாய்-
உரிய அடியார்க்குத் தந்தாமுக்கு என்ன ஒரு பிரியாபிரியங்கள் இன்றிக்கே ஸ்வாமி பற்றினதைப் பற்றி
அவன் காற்கடைக் கொண்டதை காற்கடைக் கொள்ளும் அத்தனை யாய்த்து இருப்பது
ஒரு காலத்திலேயே எம்பெருமானார் சம்பந்தம் உடையாரை உள்ளுப்புக வேண்டா என்று தகைந்தார்களாய்-அவ்வளவிலே ஆழ்வான் அங்கே செல்ல
இவருக்கு ஒருவருடன் விரோதம் இல்லை நீர் புகலாகாதோ என்ன
ஆத்மகுணங்கள் மோஷ ஹேதுவாகவும் அநாத்ம குணங்கள் பந்த ஹேதுவாகவும் நினைத்து இருந்தோம் -ஆத்ம குணங்கள்
பந்த ஹேதுவாய்த்தே -என்று உம் பெருமானாரோட்டை சம்பந்தத்தை அறுத்துக் கொண்டு உள்ளுப் புக வேண்டா என்று போந்தான்

அடியேன் -ஆழ்வாருடைய நீர்மையிலே தோற்று அடியேன் என்கிறார்

பெற்ற நன்மையே
முன்பு விட்ட சப்தாதி விஷயங்களோபாதி ஆழ்வார் நன்று என்று பற்றின பகவத் விஷயத்தைத் தீது என்ன மாட்டாரே
ஆகையால் பெற்ற நன்மையே என்கிறார்
ஆழ்வார் என்னை உகவா நிற்க நான் அவர் உகந்த விஷயத்தை உகவாது ஒழிவனோ –

—————————————–

ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம் –

தேவு மற்று அறியேன் என்றார் கீழில் பாட்டில்
இங்கு ஈஸ்வரன் தான் இவர் பக்கலிலே மண்டினபடியைச் சொல்லுகிறார்
பகவத் விஷய ப்ரீணநமாக ஆச்சார்ய விஷயத்தில் ப்ரவணனாகக் கடவன்
ஆச்சார்ய ப்ரீணநமாக பகவத் விஷயத்தில் ப்ரவணனாகக் கடவன்
ப்ரியோ ஹி ஜ்ஞானி நோத்யர்த்தமஹம் ச ச மம ப்ரிய-என்கிறபடியே ஒருவருக்கு ஒருவர் ப்ரிய விஷயமாய் இருக்கும் இ றே
ஒருவனை ஒருவன் உகந்தானாவது அவன் உகந்தாரையும் உகக்கை யாய்த்து –
இவர் கீழ் தேவு மற்று அறியேன் என்று நம்மையும் மறந்து ஆழ்வார் பக்கல் ப்ரவணர் ஆனாரே
எல்லாம் கூட நம்மை அறிவித்தவர் என்று இ றே ஆழ்வார் பக்கல் இவர்க்கு ஆதாரம்
இப்படி நம்மை யுகந்தாருக்கு இவர் ப்ரீதராம் இடத்தில் -மம மத்பக்தபக்தேஷூ ப்ரீதிரப்யதிகா பவேத் -அன்றோ
ஆகையாலே நாம் கொடுக்கும் பாரிஸில் எது என்று பார்த்து ஆழ்வார் பக்கல் பக்தி பூரணமான இவர் திரு உள்ளத்திலே
நீர் வெள்ளத்திலே நெய்தல் பாரித்தாப் போலே தன்னுடைய வடிவைக் கொடுவந்து பாரிக்க
இதைக் கண்டு ப்ரீதரான இவர் இதுக்கு நிமித்தம் என் என்று ஆராய்ந்து பார்த்து அது பகவச் சேஷத்வ ஜ்ஞானத்தாலும் வந்தது அன்று
-பாகவத சேஷத்வ மாத்ரத்தாலும் வந்தது அல்ல -பகவத் ஆஸ்ரயணத்தாலும் வந்தது அல்ல
எல்லாம் கூட நான் ஆழ்வாருக்கு அனன்யார்ஹ சேஷ பூதனாய் பெற்ற பேறு இ றே இது என்று ஸ்வ கதமாக ப்ரீதர் ஆகிறார்
ஆச்சார்ய விஷயத்தைப் பற்றி இருப்பான் ஒருவனை பகவத் விஷயம் தானே மேல் விழும் என்னும் இடத்துக்கு உதாஹரணம் இது வி றே
பிராட்டியைப் பற்றினாலும் அவள் அவனோடு சேர்க்கையாலே அவன் கை பார்த்து இருக்க வேணும்
-இங்கு அவன் தானே மேல் விழுந்து தன்னை இவனுக்குக் கொடுக்கும் –

திரி தந்தாகிலும் –
திரியா நிற்கச் செய்தேயும் இங்கனே சஞ்சரியா நிற்கச் செய்தேயும் -மெய்ம்மையே தேவு மற்று அறியேன் என்று ப்ரத்யயம்
பண்ணலாம் படி பகவத் விஷயத்தோடு ஒட்டு அற்றுக் திரியா நிற்கச் செய்தேயும் இப்பேற்றைப் பெற்றேன்

தேவபிரானுடைக்
இவர் திரு உள்ளத்திலே ஈஸ்வரன் கொடு வந்து பாரித்துக் காட்டின வடிவு நித்ய ஸூ ரிகளுக்குப் படிவிடும் வடிவாய்த்து –
அவர்களையும் இவரையும் பார்த்தால் அவர்கள் நமக்கே நல்லவர்கள் -இவர் ஆழ்வாருக்கே நல்லவர்-இவருக்கு அன்றோ இவ்வடிவை நாம் பிரகாசிப்பது என்று இவருக்குக் கொடு வந்து அனுபவிப்பித்தான் -பக்தாநாம் த்வம் பிரகாசசே -என்கிற இடத்தில் பக்தர் ஆகிறார் இவர் ஆய்த்து-(பக்த பக்தர் என்றபடி -நம்மாழ்வார் காண வாராய் என்று கதறுகிறார் )

கரிய –
இவ்வளவு நித்ய ஸூ ரிகள் அனுபவிக்கிற போதும் கண்கள் சிவந்து என்று தொடங்கி அடியேன் உள்ளான் என்று
ஆழ்வார் தாம் அனுபவிக்கிற போதும் வெளிறாய் இருந்தது –
இவர் அனுபவித்தவாறே தன்னிறம் இட்டதாயிற்று-
என்னாவி சேர் அம்மானுக்கு செம்பொன் திருவுடம்பு என்று ஆழ்வார் அநுபவித்தபோதும் பொன் என்ற அளவத்தனை போக்கிக் கறுத்தது இல்லையே

கோலத்
ஆனைக்கு உதவ வந்தாப் போலே இருந்தபடியே வருகை அன்றிக்கே இங்கு அனுபாவ்யனாய்
வருகிறவன் ஆகையாலே சாத்தின திரு ஆபரணமும் தானுமாய்த்து வந்தது
அபிமத விஷயத்தின் பாடு போவார் ஆபரணம் பூண்டு இ றே போவது –

திரு உருக் –
கழற்ற ஒண்ணாது இருப்பதோர் ஆபரணத்தையும் கொண்டு வந்தார்
அவ்விருண்ட வடிவுக்கு மின் போலே ப்ரகாசிகையாய் இருக்குமவள் யாய்த்து
இவளைக் கண்டாலாய்த்து அவ்வடிவையும் காணலாவது
திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் என்கிறபடியே ஸ்வரூபத்தாலே ஸ்வரூபத்துக்கு பிரகாசிகையாய் இருக்கும்(புருஷகார பூதை-ஸ்வரூபம் -அவன் ஸ்வரூபம் உபாயம் -பிரகாசப்படுத்தும் -)
விக்ரஹத்தாலே விக்ரஹத்துக்கு பிரகாசிகையாய் இருக்கும் அவள் தான் –

காண்பன் நான்
இவ்வடிவை ஸ்ரவண மாத்ரத்திலே யாதல் -மனன மாத்ரத்தாலே யாதல் -நிதித்யாசன மாத்ரத்திலே யாதல் அன்றிக்கே-ப்ரத்யஷ சமாநாகாரமாம் படி அனுபவிக்கப் பெற்றேன் -அவை வேண்டுவது இவன் காண ஆசைப்படும் போது இ றே
இங்கு அப்படி அன்றிக்கே அவன் தானே ஆதரித்து மேல் விழுகையாலே எனக்குக் கண்ணாலே காணுமா போலே காணலாய்த்து
தேவபிரானுடைக் கரிய கோலத் திருவுருக் காண்பன்
அமரர்கள் ஆதி முதல்வன் கருகிய நீல நன் மேனி வண்ணன் பூ மகளார் தனிக் கேள்வன் ஒரு கதியின் சுவை தந்திட்டு
ஒழிவிலன் என்னோடுடனே என்று ஆழ்வாரை அனுபவிப்பித்தால் போலே என்னையும் அனுபவிப்பித்தான்
நான் காண்பன்-
தேவு மற்று அறியேன் என்று காணாமைக்கு கண்களைத் தெரிய வைத்த நான் கிடீர் கண்டேன்
தேவபிரானுடைக் கரிய கோலத் திருவுருக் காண்பன்
பிராட்டிக்கு நித்ய அனுபாவ்யமாய் ஸூ ரிகளுக்கு சதா தர்சநீயமுமான விக்ரஹத்தைக் கிடீர் விமுகனான நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன்
தேவபிரானுடைக் கரிய கோலத் திருவுருக் காண்பன்
அவன் நேருவது எல்லாம் நேரந்தான்
நானும் ஒரு பார்வை விசேஷம் பார்ப்பாரைப் போலே பார்த்தேன் என்னவுமாம்
நவநீத சௌர்யத்தில் உட்பட நாக்கு நீட்டாதவர் பர தசையைக் கண்டால் பார்த்து விடச் சொல்ல வேண்டாவே-

திரி தந்தாகிலும் தேவபிரானுடைக்-கரிய கோலத் திரு உருக் காண்பன் நான்
பார்த்தேனே யாகிலும் ஆழ்வார் திரு நிறம் போலே பொன்னிறமாய் இருக்கிறது அன்றே
அது வேற்று நிறம் ஆகையாலே கண்டு விட்டேன் இத்தனை
இது போலே வகுள கந்தியாய் இராதே துளசி கந்தியாய் இருக்கையாலே வேற்று மணம் உண்டாய் இருக்குமே-(பார்த்து வைத்தேன் -ஜிகுப்பிசையால் அருளியபடி -கண்டு விட்டேன் -விட்டு விட்டேன் -மணமும் நிறமும் வேறே –தெய்வம் என்று விட்டேன் –இருவராய் வந்தார் –அவர் நாம் தேவர் என்று அஞ்சினோம் போலே -)

பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே-
நான் ஆழ்வாருக்கு அனன்யார்ஹ சேஷ பூதனாய்ப் பெற்ற பேறு என் -என்கிறார் மேல்
இப்பேறு எந்நாளும் வந்தது அல்ல -பிறராலும் வந்தது அல்ல -அவன் தன்னாலும் வந்தது அல்ல –ஆழ்வார் அடியாக வந்தது என்கிறார்

ஆள் உரியனாய் –
ஆளாகப் பிராப்தனாய் –
பகவச் சேஷத்வம் தனக்கு ஆளற்று இருக்க ஆழ்வாருக்கு சேஷபூதராகை பெறாப் பேறு இறே
அன்றிக்கே
உரிய அடியனாய் -தேவு மற்று அறியேன் -என்னும்படி சர்வ சேஷி பாடும் போகாத படி ஆழ்வாருக்கு அனன்யார்ஹனாய் -என்றபடி –

நம்பிக்கு –
வேறு பகவத் விஷயம் தேடித் போக வேண்டும் படியோ ஆழ்வாருடைய பூர்த்தி இருப்பது-
அந்த சர்வ ரஷகனானவனுக்கும் ஆளாகாத என்னையும் ரஷித்து ஆளாக்கிக் கொண்ட பூர்த்தி யன்றோ ஆழ்வாரது

நம்பிக்கு ஆள் உரியனாய்
இவருடைய குணைர்த் தாஸ்யம் உபாகத -இருக்கிறபடி

நம்பிக்கு ஆள் உரியனாய்
இவருடைய பிரணவ அர்த்த அனுசந்தானம் இருக்கிறபடி

குருகூர் நம்பி
இந்த நம்பி வாஸூ தேவோசி பூர்ண -என்கிற பரமபத நிலயன் ஆதல் -அவர் தாம் அனுசந்தித்த திருக் குறுங்குடி நம்பி யாதல் யன்றிக்கே
திரு நகரியிலே வர்த்திக்கிற நம்பி
இவருக்குப் பூர்த்திக்கு ஊற்று வாய் இத்தேச வாசம் என்று இருக்கிறார்

வண் குருகூர் –
வண்மையை யுதைத்தான திரு நகரி
ஆழ்வார் என்னைத் தந்தாப் போலே ஆழ்வார் தம்மைத் தந்த திரு நகரி -சர்வ காம துக்கான தேசம் –

பெரிய வண் குருகூர் –
பரமபதம் ஒரு சிறாங்கை என்னும்படி உபய விபூதியும் ஒதுங்கலாம் படி பெருமையை உடைத்தான வூர்
அன்றிக்கே
புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய் -என்கிறபடியே-விபூதிமானையையும் விபூதியையும் தமக்குள்ளே அடக்கி இருக்கிற ஆழ்வாரைத் தனக்குள்ளே அடக்கும்படியான பெரிய தேசம்

நகர்
விலஷண வஸ்துக்கள் வந்து சேரும் தேசம்
தேவபிரானுடைக் கரிய கோலத் திருவுருக் காண்பன் நான் -என்று அக்கரையார் அடங்கலும் வந்து பாரிக்கும் படியான பட்டணம் ஆயிற்று –

நகர்
முக்தஆகாரம் பாரிக்கும் தேசம் -சொன்ன சொல் நம்புவார் பத்தி வைகுந்தம் இ றே
குரவை கோத்த குழகனை மணி வண்ணனை ஏத்துதல் மனம் வைம்மினோ
தென்னிலங்கை எரி எழச் செற்ற வில்லியை பரவுமினோ என்று தேவகி புத்ர ரத்னமும் அது தன்னிலும் வில்பிடி மாணிக்கமும் விலை செல்லும் தேசம்

அடியேன் பெற்ற நன்மையே
இங்கு அடியேன் என்கிறது நான் என்றபடி
ஆள் உரியனான பின்பு நான் இருக்கும் படி இது இ றே

பெற்ற நன்மையே
ஆழ்வார் தமக்கு இன்னும் பெற வேண்டுவன நன்மை யுண்டே யாகிலும் நமக்கு இனிப் பெற வேண்டும் நன்மை ஒன்றும் இல்லை
ஆழ்வார் தாம் அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ என்றும்
மல்கு நீலச் சுடர் தலைப்ப -என்று தொடங்கி என் திரு மார்வனை வந்து எய்தும் ஆறு அறியேன் என்றும் மநோரதம் நடவா நிற்க-இன்று நான் இப்பேறு பெரும்படியானபடி என்

நம்பிக்கு ஆள் உரியனாய் யடியேன் பெற்ற நன்மையே
அவனுக்கு சேஷபூதராய் இருந்து வைத்தே அவர் அலமாரா நிற்க
நான் ஆழ்வார் தமக்கே சேஷபூதனாய் இருந்து வைத்து இன்னன்மையைப் பெறுவதே
வைஷ்ணவ சம்ஸ்ரயரானால் பராஸ்யந்தி என்று போய்ப் பெற வேண்டாதே- இருந்த இடத்திலே வந்து திருக் குதிப்பதே-
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தி இருப்பார் தவம் என்ற வார்த்தை என்னளவிலே பலித்தது என்று-ஸ்வ அனுசந்தானத்தாலே சந்துஷ்டராகிறார் –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading