கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -1
——————————————
ஸ்ரீ நஞ்சீயர் -அருளிச் செய்த வியாக்யானங்கம்-
கண்ணித்தாம்பு –
அபலைகளாய் இருப்பார் கட்டிவிய்ய தாம்பாகையாலே பல பிணையலாய் இருக்கை –
புஷ்ப ஹாச ஸூ குமாரமான கையாகையாலே அவிழ்க்க மாட்டான் இ றே
இப்பிணையல் திரு மேனியிலே உறுத்தும் என்று அஞ்சுகிறார் –
நுண் தம்பு
பருத்து மேல் முதவாதே அழுந்தும் என்று அஞ்சுகிறார் –
சிறுத்தாம்பு
அளவில்லாமையாலே உறுத்தித் திருமேனி நோம் என்று அஞ்சுகிறார் –
கட்டுண்ணப் பண்ணிய
உரலிடம் காண ஒண்ணாது –
கயிற்றில் இடம் காண ஒண்ணாது
விடில் கண்ணன் ஆகையாலே ஓடிப்போம்
கட்டினோம் ஆக வல்லமோ என்ற தாயார் முகத்தில் பயிர்ப்பு தீர ஒரு சுற்றுக்குப் போராத தாம்பு இரண்டு சுற்றுக்குப் போரும்படி
திருமேனியில் இடம் கொடுத்தபடி
ஆஸ்ரிதர் கையாலே கட்டுண்ணா விடில் சீலத்துக்குப் போராது
அநாஸ்ரிதரைக் கட்டா விடில் ப்ரபாவத்துக்குப் போராது
ராஜாவானவன் எதிரிகளைக் கட்டி வைக்கவும் பும்ஸ்த்வம்
தன மகிஷியின் கையில் பூ மாலையாலே கட்டுண்டு கிடக்கையும் பும்ஸ்த்வம்
பெரு மாயன் –
இவருடைய எத்திறம் இருக்கும் படி
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை இதர சஜாதீயம் ஆக்குகையும்
அவனுக்கு ஷூத்து நலிகையும்
நவ நீதத்திலே ஸ்ரத்தை யுண்டாகையும்
அத்தை இடுவார் இல்லாத போது களவு காண்கையும்
அத்தைத் தலைக் கட்ட மாட்டாதே வாயது கியதாக அகப்படுகையும்
ஸ்ருஜ்யர் கையிலே கட்டுண்கையும்
சம்சார பந்தத்தை தவிர்க்க வல்லதான இத்தை விட்டுக் கொள்ள மாட்டாது ஒழிகையும்
இது என்ன ஆச்சர்யமோ என்கிறார்
இவனுடைய மேன்மை எல்லை காணலாம் -நீர்மை தரை காண ஒண்ணாது –
என்னப்பனில் –
கீழ் ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமான அர்த்தம் ஆகையாலே ஸ்ரீ கிருஷ்ண வ்ருத்தாந்தம் சொல்லிற்று
மேல் உத்தேச்யமான விஷயத்தைச் சொல்லாதே அவனை என்னப்பன் என்பான் என் என்னில்
ஆழ்வார் அங்கீ கரிக்கைக்காக அங்கே தமக்கொரு சம்பந்தம் சொல்கிறார்
ஒன்றைக் குறித்துப் போம்போது நீரும் நிழலும் நன்றாய் இருந்தது என்று ஒதுங்கினால் உத்தேச்யம் ஆகவேணுமோ –
நண்ணி –
இப்படு குழியைத் தப்பினால் இ றே என்கிறார்
படு குழி என்பான் என் என்னில் பகவத் பிராப்திக்கு சப்தாதி விஷயங்கள் விரோதியானால் போலே
ஆழ்வாரைப் பற்றுகிற இவர்க்கு பகவத் விஷயம் விரோதி என்றபடி
அவற்றுக்கு அல்ப அஸ்த்ரத்வாதி தோஷம் உண்டாகையாலே விடலாம்
இங்கு அங்கன் அன்று —நிலை நின்ற ப்ரதிபந்தகம்-
தென் குருகூர் நம்பி
சர்வேஸ்வரன் ப்ராப்தியில் பிரதம அவதி ஆகையாலே அரை வயிறாகப் பேசி ஆழ்வார் சரம அவதி யாகையாலே பூர்ணராகப் பேசுகிறார்
என்றக்கால்
பகவத் விஷயத்தில் மநோ-வாக் -காயங்கள் -மூன்றிலும் அன்வயிக்க வேணும்
அது எல்லாம் வேண்டா
உக்தி மாத்ரமே அமையும் இங்குத்தைக்கு என்கிறார்
அண்ணிக்கும் அமுதூரும்
ரச பதார்த்தங்களில் காட்டில் இதுக்கு வ்யாவ்ருத்தி
எல்லா பதார்த்தங்களும் நாக்கில் இட்டால் இட்ட பதார்த்தம் உண்ட வாறே ரசமும் மாளும்
இது அங்கனம் அன்றிக்கே ஒருகால் இட்டால் உள்ளதனையும் அமுது ஊற்று மாறாது என்கிறார்
என் நாவுக்கே –
அவர்கள் எங்களுக்கு இங்கன் இருக்கிறது இல்லையீ என்றார்கள்
பகவத் விஷயமும் ரசித்து அதுக்கு எல்லை நிலமான பாகவத விஷயத்தவும் ரசித்த என் நாவுக்கு அல்லது
அதவா
எது ரசித்துப் போந்த நாவுக்கு எது ரசிக்கியது தான்
இத்தால் சொல்லிற்று ஆயத்து
பிரதம அவதியோடு சரம அவதியோடு வாசியற இவர் ஆழ்வாருக்கு அனன்யார்ஹர் ஆனபடி
——————————————————–
ஸ்ரீ நம்பிள்ளை -அருளிச் செய்த வியாக்யானம் –
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் -என்றும் பிறந்தவாறும் -பையவே நிலையம் -என்றும்
அவர் உத்தேச்யமாய்ப் பற்றுகிற விஷயம் இ றே இவருக்கு இப்போது வெளிறாய்க் கழியுண்கிறது
நவநீத சௌர்ய நகர ஷோபத்தை அனுசந்தித்து அவர் மோஹித்துக் கிடக்கும் துறையில் இறே இவர் இவர் இப்போது தெளிந்து இருந்து வார்த்தை சொல்லுகிறது –
ஆழ்வார் பக்கலிலே நயச்தபரராரான படி
அவருடைய உத்தேச்ய வஸ்துவைக் கட்டின கயிற்றினுடைய உள்மானம் புரமானம் ஆராயும்படி இறே இவர் கை ஒழிந்த படி பகவத் விஷயத்திலே –
கண்ணித்தாம்பு
உடம்பிலே கட்டப்புக்கால் உறுத்தும் படி பல பிணையலை உடைத்தாய் இருக்கை –
நுண் தாம்பு
உடம்பிலே அழுந்தும்படி நேரிதாய் இருக்கை
சிறுத்தாம்பு
குறுகி இருக்கை
உரலைச் சுருக்க ஒண்ணாது
கையிற்றை நெடுக்க ஒண்ணாது
சதைக ரூப ரூபாய -என்கிற இவனுடைய உடம்பை நெருக்கி இடம் கண்டு கட்டும் இத்தனை இ றே செய்யலாவது
கண்ணியார் குறும் கையிற்றால் கட்டவெட்டு என்று இருந்தான் -என்றும்
கண்ணிக்குறும் கயிற்றால் கட்டுண்டான் காணேடி -என்றும் எல்லாரும் ஈடுபடும் துறை இ றே இது தானே –
கட்டுண்ணப் பண்ணிய
சம்சார பந்த ஸ்திதி மோஷ ஹேது -என்று ஸ்வ வ்யதிரிக்தரைக் கட்டுகைக்கும் விடுகைக்கும் ஹேதுவானவன் கிடீர்
இப்போது ஓர் அபலை கட்டின கட்டை அவிழ்த்துக் கொள்ள சக்தன் அன்றிக்கே இருக்கிறான் –
யதி சக் நோஷி கச்ச த்வ மதி சஞ்சல சேஷ்டித-என்றாள் இ றே
சார்வ பௌ மனான ராஜ குமாரன் தன மகிஷி கையிலே அகப்பட்டு ஒரு மாலையாலே கட்டுண்டு -அதுக்கு ஒரு பிரதிக்ரியை பண்ண மாட்டாதே
இருக்குமா போலே இ றே இவள் கட்டின இதுக்கு பிரதிக்ரியை பண்ண மாட்டாதே இருக்கிற இருப்பும் –
பிறருடைய கர்ம நிபந்தனமான கட்டை அவிழ்க்கும் அத்தனை அல்லது தன் அனுக்ரஹத்தால் வரும் கட்டு தன்னாலும் அவிழ்க்கப் போகாது
இனி சக்தனாகில் போய்க்கானும் -என்று அவள் சொல்லும் படி இ றே இவனுடைய அச்சக்தி
தொழுகையும்-பெருமாள் திருமொழி -7-8–என்று கொண்டு போக்கு அற்றவாறே தொழத் தொடங்கும் அத்தனை இறே
எல்லாரையும் தொழுவித்துக் கொள்ளுமவன் இறே தொழுகிறான்
போக்கற்ற தசையிலே அஞ்சலியே அபிமத சித்திக்கு சாதனம் என்று அறியும் அவன்இ றே
அதி சஞ்சல சேஷ்டித என்று துருதுருக்கையாய் ஊரைப் பூசல் விளைத்துத் திரிந்த நீ வல்லை யாகில் போய்க்காண் என்கிறாள் –
இத்யுக்த்வா -ஒரு சொல்லாலே விலங்கிட்டு வைத்து அத நிஜம் கர்ம சா சகாரா -அவள் தான் கரைப்பது கடைவதாகப் புக்காள்-
குடும்பி நீ-இவனைப் போலே நியமிக்க வேண்டுவன எத்தனை கிடக்கின்றன –
பெரு மாயன் –
நிரதிசய ஆச்சர்ய யுக்தன் -அவாப்த சமஸ்த காமனுக்கு ஒரு குறை யுண்டாய்
அது தன்னை எளியாரைப் போலே வழி எல்லா வழியே களவிலே ஒருப்பட்டு
அது தன்னையும் சர்வ சக்தியான தான் தலைக் கட்ட மாட்டாதே வாயது கியதாக அகப்பட்டுக் கட்டுண்டு
அதுக்கு ஒரு பிரதிக்ரியை பண்ண மாட்டாதே பையவே நிலையும்-திருவாய்மொழி -5-10-8-என்று உடம்பு வெளுத்துப் பேகணித்து
நின்ற நிலை அளவும் செல்ல நினைக்கிறார் –
என்னப்பனில் –
என்னாயனில் –
ஆழ்வார் உத்தேச்யமாய்ப் போகா நிற்கச் செய்தேயும்
பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரியான விஷயம் ஆகையாலே அவ்வருகு போவாரையும் துவக்க வல்ல விஷயம் ஆகையாலே சொல்லுகிறார் –
பகவத் விஷயத்தில் அடியர வார்த்தை சொன்னாராகில் ஆழ்வாரோட்டை சம்பந்தத்தை அறுத்துக் கொண்டாராவர் இ றே
என்னப்பனில் நண்ணி
பகவத் விஷயத்தில் நின்றும் ஆழ்வார் பக்கலிலே கிட்டி –
விஷய பிரவணன் சப்தாதி விஷயங்களை விட்டு பகவத் விஷயத்தைக் கிட்டுகையில் உண்டான அருமை போரும் இவருக்கு பகவத் விஷயத்தை விட்டு ஆழ்வார் அளவும் வருகைக்கு
சப்தாதி விஷயங்களை விடலாம் -அவற்றின் தோஷ தர்சனத்தாலே
அங்கன் ஒரு தோஷம் காண விரகு இல்லாமையாலே அதிலும் அரிது இது
ஆனால் இத்தை விட வேண்டுவான் என் என்னில் சரம அவதியில் போவார்க்கு பிரதம அவதியில் நிர்கையும் குறை என்னும் அதினாலே –
தென் குருகூர் நம்பி
ஆழ்வார் தாம் உத்தேச்யமாகப் பற்றின விஷயத்துக்கு உள்ள குறையும் இல்லை இ றே இவர் பற்றுகிற விஷயத்துக்கு -எங்கனே என்னில்
பகவத் விஷயத்தைப் பற்றினால் அதில் எல்லையான ஆழ்வார் அளவும் வர வேண்டி இருக்கும்
ஆழ்வாரைப் பற்றினால் அவ்வருகு கந்தவ்ய பூமி இல்லை இ றே
என்றக்கால் –
வாங் மன காயங்கள் மூன்றும் வேண்டி இருக்கும் -பகவத் விஷயத்துக்கு
உக்தி மாத்ரமே அமையும் இவ்விஷயத்துக்கு
அண்ணிக்கும்
தித்திக்கும் -பகவத் விஷயத்தை அனுபவித்தால் ஆழ்வாருக்குப் பிறக்கும் ஆனந்தம் எல்லாம் இவ்விஷயத்திலே ஓர் உக்தி மாத்ரத்தாலே பெற்றேன் என்கிறார்
அமுதூறும்-
அமுது தான் உஊற்று மாறாதே செல்லா நிற்கும்
ந ஸ புனராவர்த்ததே -என்று அவ்விஷயம் நித்ய அபூர்வமாய் ஆல்வாருக்குச் செல்லுமா போலே எனக்கு இவ்விஷயம் நித்ய அபூர்வமாய்ச் செல்லப் பெற்றேன்
என் நாவுக்கே –
பின்னை எங்களுக்கு ரசிக்கிறது இல்லையீ என்னில் முதல் அடியான பகவத் விஷயமும் கூட ரசியாதே இருக்கிற உங்களுக்கு
அதினுடைய எல்லையான ஆழ்வார் அளவும் ரசிக்கும் படியான எனக்கு ரசிக்குமா போலே ரசிக்குமோ
என் நாவுக்கே
அநாதி காலம் எது ரசித்துப் போந்த நாவுக்கு எது ரசிக்கிறது என்றுமாம்
இப்பாட்டால் ஆழ்வார் என்றால் தமக்கு ரசித்து இருக்கும் படி சொன்னார்
—————————————————————————————
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம் –
அவதாரிகை –
ஆத்மாஸ்து காமாய சர்வம் ப்ரியம் பவதி -என்கிறபடியே தனக்கு அபிமதம் என்றாய்த்து இவன் சர்வத்தையும் ஆதரிக்கிறது –
அதில் சாத்யமாய்-அபிமதமாதல் -அதுக்கு உறுப்பாக சாதனமாய் அபிமதம் ஆதலாய் இரண்டு வகையாய்த்து இருப்பது –
அதில் பகவத் விஷயம் -ரசோவை ஸ ரசம் ஹ்யேவாயம் லப்த்வா நந்தீ பவதி -என்றும் –
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனம் மேவியே -என்கிறபடியே -என்றும் சொல்லுகிறபடியே
சாஷாத் அபிமதமாய் தன்னைப் பெறுகிற இவனுக்கு புறம்பு போக்கடி இல்லாமையினாலே தானே சாதனமாய் இருக்கும்
இப்படி சரச வஸ்து வாகையாலே ஸ்மரித்தல் சங்கீர்த்தனம் பண்ணுதல் செய்யுமவர்களுக்கு –
வைகுண்ட சரணாம் போஜ ஸ்மரணாம் ருதசேவின-என்றும்
பாதேயம் புண்டரீகாஷா நாம சங்கீர்த்த நாம்ருதம் -என்றும் சொல்லுகிறபடியே ரசிக்கக் கடவதாய் இருக்கும் –
அப்படியே ஆழ்வாருடைய போக்யதையை இப்பாட்டாலே வெளியிடுகிறார்
சப்தாதி விஷயங்களின் உடைய போக்யதையும் ஆழ்வாருடைய போக்யதையும் பார்த்தவாறே விசத்ருசமாய் இருந்தது
இனி பகவத் போக்யதை இ றே கூட்டுதல் கழித்தல் செய்யலாவது -அந்த பகவத் போக்யதையிலும் விஞ்சி இருந்தது ஆழ்வாருடைய போக்யதை –
அதுக்குத் தானும் உட்பட -உருவமும் ஆர் உயிரும் உடனே யுண்டான் -9-6-5-என்னும்படி போக்ய பூதரானவர் இ றே இவர் –
இனி அந்தப் பகவத் விஷயத்துக்கு -வாஸூ தேவோ சி பூர்ண -என்கிறபடியே ஷாட் குண்ய பூர்நையாய் இருப்பதொரு பர அவஸ்தை யுண்டு –
அது ஒழிய சௌசீல்யாதி குண பூர்நையாய் இருப்பதொரு அவதார அவஸ்தை யுண்டு –
அந்த பரத்வம் பாற் கடலினுடைய ஸ்தானத்திலே யாய் அதில் அம்ருத கலசம் போலே யாய்த்து அந்த அவதார அவஸ்தை இருப்பது –
அவ்வதாரங்கள் தன்னிலும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் அந்த அவதாரங்கள் தன்னைப் பர அவஸ்தா நீயமாக்கும் படி அத்யந்த போக்யமாய் இருக்கும்
க்ருஷிர்ப் பூவாசகச் சப்தோ ணச்ச நிர்வ்ருத்தி வாசக -என்கிற வ்யுத்பத்தியாலே ஸூ கரமான வ்யக்தி இ றே
அதிலும் பக்வ கிருஷ்ணனிலும் காட்டில்
தந்தை காலில் விளங்கர வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன் தன் சிந்தை போயிற்று -பெரிய திருமொழி -8-5-1-என்கிறபடி
முக்த கிருஷ்ண அபதானம் த்ருஷ்டி சித்த அபஹாரியாய் இருக்கும் -நவ நீத சௌர்யமும் நகர ஷோபமும் பண்ணின அபவதானம் இ றே
உறிகளில் வெண்ணெயோடு அறைகளில் பெண்களோடு வாசியற இரண்டையும் களவு கண்டு போந்த அபதானம் இ றே –
-இதுவாய்த்து அபதா நாந்தரங்களில் போக்யதமமாய் இருப்பது –
குணங்கள் உண்டு இ றே ராம விஷயத்தில் நல்குவார் நல்கிற்று
இங்கு அப்படி அன்றிக்கே -வெண்ணெய் யுண்டு உரலினிடை யாப்புண்ட தீங்கரும்பினைத் தேனை நன்பாலினை -பெரிய திருமொழி -7-3-5-என்னும் படி
தீம்பு போக்யமாம்படி யாய்த்து இவ்வ்யக்தி இருப்பது -அதாவது
அகண்ட பரிபூர்ண வஸ்து ப்ராக்ருத பதார்த்தமாய் இருப்பதொரு வெண்ணெயை யாசைப்படவும் -அத்தைக் களவு காண்கையும் –
சர்வஜ்ஞமான வஸ்து அத்தை மறைக்கவும் மாட்டாமல் வாயது கையதாக அகப்படுகையும்
சர்வ சக்தியானது ஒரிடைச்சி கையிலே கட்டுண்டு கட்டை அவிழ்க்க மாட்டாதே இருந்து அழுகையுமான இந்நிலை அத்யந்த அனுபாவ்யமாய்த்து இருப்பது
தறியார்ந்த கரும் களிறே போலே நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை -பெரிய திருமொழி -2-10-6-என்று
இவ்வபதாநத்திலே இ றே அனுபோக்தாக்கள் ஆழம் கால் படுவது –
இவ்வபதானத்தின் போக்யதையை இவர் வ்யுத்பத்தி பண்ணிற்று ஆழ்வார் தம்முடைய பாடே யாய்த்து
-முதல் திருவாய்மொழி யிலே சர்வ காரணத்வாதி லஷணமாக ஒரு வஸ்துவைச் சொல்லி
அப்படிப்பட்ட வஸ்து ஏது என்னும் அபேஷையிலே அநந்தரம் திருவாய் மொழி யிலே –
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே -1-2-10-என்று நாராயண சப்த வாச்யமாகச் சொல்லி
இவ்வஸ்துவுக்கு அடையாளம் ஏது என்னும் அபேஷையிலே -மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் -1-3-1-என்று
திரு மார்பில் பிராட்டியை அடையாளமாகச் சொல்லி இப்படி ஸ்ரீ யபதித்வத்தால் வந்த சர்வ உத்கர்ஷத்தை யுடைய வஸ்து
அநாஸ்ரிதர்க்கு அரியதாய் ஆஸ்ரிதர்க்கு எளியதாம் இடத்தில் -மத்துறு கடை வெண்ணெயை
-நெடு நாள் மலடு நின்று பிள்ளை பெற்றவள் ஆகையாலே துர்ப்பலையாய் இவன் தான் மருங்கில் இருந்து மருங்கு தேய்ப்புண்கையாலும்
மத்தாரப் பற்றிக் கொண்டு என்னும்படி மதத்திலே உடலைச் சாய்த்து யாய்த்து கடைவது
இப்படி கடையா நிற்கச் செய்தே வெண்ணெய் படப் படக் களவு காண அவளும் இதுக்கு அடி என்
-தெய்வம் கொண்டு போகிறதா என்று விசாரித்து இவனுடைய வாயையும் கையையும் பார்க்கும் –
கண்ணன் என்னும் கரும் தெய்வம் இ றே களவு கண்டு கொண்டு போகிறது –
இவன் கள்ளன் என்று வாயது கையதாகப் பிடித்து கிடந்ததொரு கயிற்றாலே பண்டும் இவன் களவுக்கு பெரு நிலை நிற்கும்
உரலோடு அணைத்துக் கட்ட -இவனும் கட்டுண்டு இருந்து அழப் புக்கவாறே வாய் வாய் என்று
கையிலே கயிற்றைக் கொள்ள ஏறிட்ட குரலை இறக்க மாட்டாதே இருந்து அழுது ஏங்கும் யாய்த்து –
இப்பிரகாரம் ஏதாய் இருக்கிறது -இது பெருமையிலே முதலிடுமதோ-எளிமையிலே முதலிடுமதோ -என்று மோஹங்கதரானார் இறே
இத்தை அனுசந்தித்து போந்த இவரும் ஆழ்வார் ஈடுபட்டுப் போந்த அபதானம் இதுவாய் இருந்தது -என்று பார்த்து
இதிலும் காட்டில் முதலடியிலே இமையோர் தலைவா -என்று ப்ராப்யத்திலே கண் வைத்த இவரை அவா வற்று வீடு பெற்ற -என்னும் அளவும்
லோக உபகார அர்த்தமாக ஈஸ்வரன் இவர் அழுவது அலற்றுவது ஆண் பெண்ணாக மடல் எடுப்பது -தூது விடுவதாம் படி
தன் சங்கல்ப பாசத்திலே கட்ட இவரும் அதை அவிழ்க்க மாட்டாதே அறியா மா மாயத்து அடியேனை வைத்தையால் -2-3-3-என்னும் படி
கட்டுண்டு இருந்த இருப்பு தமக்கு போக்யமாய் இருக்கிறபடியை இப்பாட்டாலே அருளிச் செய்கிறார் –
அவன் கட்டுண்ட இடத்தில் -பற்றி உரலிடை யாப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ -என்று
பிறருக்கு ஏசுகைக்கு உறுப்பாய் விட்டது இவர் கட்டுண்டது இறே நாட்டாருடைய கட்டை அவிழ்கைக்கு
உறுப்பாய் பரம சாத்விக வர்க்கத்துக்கு போக்யமாய்த்து –
———————-
வியாக்யானம் —
அவன் கட்டுண்டு இருந்த அபதானத்திப் பேசி தாமும் அதில் கால் தாழ்ந்த படி சொல்லுகிறார் -கட்டின கயிற்றைக் கொண்டாடுகிறார்
-தத் சம்பந்தியான தொன்றைக் கொண்டாடுகை இவர்க்குள்ள தொன்று இ றே –
கண்ணித் தாம்பு –
பல பல இடங்களிலும் அற்றுப் பிணையுண்டு கிடப்பதொரு கயிற்றைக் இட்டாயிற்று இவனைக் கட்டிற்று-
கட்டுவது விடுவது கறப்பது கடைவதாகப் பணி போரும் இத்தனை போக்கி அத்தைத் தரம் இட்டுக் கொள்ள அவசரம் இல்லையே –
உருவுள்ளவை உண்டாகில் கன்றுகளும் பசுக்களும் கட்டப் போரும்
-ஒழிஞ்சானமுட்டாய் -ஒன்றுக்கும் உறுப்பு இன்றிக்கே இருக்கை -இருப்பதொரு கயிற்றைக் இட்டாயிற்று இவனைக் கட்டுவது
வேறு ஒருவரைக் கட்டுமதிட்டு இவனைக் கட்டப் போகாதே -பசு ப்ராயரைக் கட்டுமது ஒன்றுக்கு இவன் அகப்படானே –
பல கண்ணிகளையும் யுடைத்தாய் அனந்யமாய் இருப்பதொரு பாசத்துக்கு இ றே இவன் அகப்படுவது –
அசித் ப்ராயராய் தான் கால் வைக்கலாம் படி இருப்பாரோடு அணைதல் -அனந்யமான பாசத்துக்கு அகப்படுதல் செய்யுமவனாய்த்து
இவன் அகப்பட்டாய்த்து உரலோடு சேர்த்துக் கயிற்றை இட்டுக் கட்டிற்று
அது தான் பொத்த யுரலாய் ஸூ ஷிரமும் உண்டான பின்பாய்த்து அனந்யார்ஹம் ஆயிற்று
இப்படி அனந்யார்ஹர்க்கு இ றே அவன் உடம்பு கொடுப்பது
பொத்த யுரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறி -என்கையாலே இது தான் இஷ்ட விநியோக அர்ஹமுமாயிற்றே-
நுண் தாம்பு –
நுண்ணிய தாம்பு -அது தான் அற நேரியதாய் இருப்பதொரு கயிறு ஆய்த்து-ஆகையால் இ றே இவன் மேலே அழுந்துவது –
இன்றும் அழுந்திக் கிடக்கிறது இ றே இவனைக் கட்டுகிற பாசம் சௌஷ்ம்யவத்தாய் இருக்க வேணும் இ றே
சிறுத் தாம்பு
எட்டாம் பொறாமல் இவன் திருமேனியிலே இடம் கண்டு கட்ட வேண்டும்படியான சிறுமையை யுடைய கயிறு
கட்டுண்ணப் பண்ணிய –
அனந்யமாய் ஸூ ஷ்மமாய் இருந்ததே யாகிலும் திரு மார்பில் இருக்கிற அவளையும் அவனையும் சேர ஒரு உரலோடு சேர்த்துக் கட்ட
உரலுக்கும் தனக்கும் ஒரு வைஷம்யம் அற இருந்து பின்னையும் சைதன்யம் கிடக்கையாலே விம்மல் பொருமலாய் அழுது இருந்த
இந்த சௌசீல்யம் ஏதாய் இருக்கிறது என்று அவர் சோகித்தார் யாய்த்து
இவர் அத்தை அனுசந்தித்துப் போந்தவர் ஆகையாலே இவ்வாழ்வார் பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும்
அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று பிரகிருதி சம்பந்தத்தை அறுக்க வேணும் என்று
அபேஷியா நிற்கச் செய்தேயும் பகவத் சங்கல்ப பாசத்தாலே இவர் கட்டுண்டு இருந்த படியைக் கண்டு ஈடுபடுகிறார் –
அவன் இவளுடைய த்ரவ்யத்தைக் களவு காண்கையாலே கட்டுண்டான் -இவர் பிறர் பணத்தை அவர்களுக்குக் கொடுத்து
இருக்கச் செய்தேயும் கட்டுண்டவராய்த்து
அவன் தான் இவரைக் கட்டுகைக்கு அடி என் என்னில் இவரைக் கட்ட நாட்டில் உள்ளார் களவு போம் என்னும் நினைவாலே
ஊரும் நாடும் உலகும் தன்னைப் போலவும் அவ்வளவன்றிக்கே அறிவுக்கு அவகாசம் இல்லாத ஸ்தாவர ஜாதீயங்களையும்
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ வென்று கூவுமவராகையாலே இவரைக் கட்டி வைத்தான் –
இவருக்குத் தன் களவு வெளிப்பட்டுப் பிறர் களவு போமாய்த்து –
கண்ணி நுண் சிறுத் தாம்பு
போக்யதா காஷ்டை யுள்ளது -இவ்வபதானம் ஆகையாலே அத்தை முற்படச் சொல்லி அதில் காட்டில்
ஆழ்வார் தமக்கு போக்யரான படியை இப்பாட்டாலே வெளியிடுகிறார்
அதில் அவன் கட்டுண்ட தாம்பை முற்படக் கொண்டாடுகிறார்
கண்ணித் தாம்பாயும் நுண் தாம்பாயும் சிறுத் தாம்புமாயும் இருக்கும்
ஜ்ஞான பக்தி வைராக்யங்களைக் கொண்டாடுமா போலே இங்கு மூன்று விசேஷணங்களைச் சொல்லுகிறார்
திரு மேனிக்கு உறுத்தும் படி பல கண்ணிகளை உடைத்தாய் இருக்கும்
பிரதமத்திலே ருசி சங்கம் பக்தி பர பக்தி பர ஜ்ஞானம் பரம பக்திகள் என்று அநேக பர்வையாய் இ றே அந்த பக்தி இருப்பது
பக்தி க்ராஹ்வோ ஹாய் கேசவ -என்றும் -அபங்குர பக்தி பவ்ய -என்று பக்தி பவ்யனாய் இ றே அவன் இருப்பது –
நுண் தாம்பு –
நுண்ணிதான தாம்பு -திருமேனியிலே அழுந்தும்படி நுண்ணியதாய் இருக்கும்
அந்த பக்தி தான் ஜ்ஞான சிரஸ்கம் ஆகையாலே அந்த ஜ்ஞானம் தான் நுண்ணறி வாய்த்து இருப்பது –
பகவத் ஸ்வரூப ரூபாதிகளை யதாவாக சாஷாத் கரிக்கிறது இ றே
பக்த்யா மாமபிஜா நாதி யாவான் யச்சாச்மி தத்வத -என்கிறபடியே
சிறுத் தாம்பு –
உள்ள கயிறுகள் கன்று கட்டுகைக்கும் பசு கட்டுகைக்கும் கடை கயிருமாய்ப் போயிற்றன
இனி வேறு ஓன்று கட்டுகைக்கு உருப்பல்லாத கயிற்றாலே யாய்த்து இவனைக் கட்டுவது
அனந்யார்ஹமாய் இருப்பது ஒன்றுக்கு இ றே இவன் கட்டுண்பது
பக்த்யா த்வ நன்யயா சக்ய -என்றும் பக்த்யா லப்யஸ் த்வ நன்யயா -என்று அனந்யையான பக்தியாக வேணுமே
அல்லாதவற்றுக்கு விநியோகம் கன்று காலிகளைக் கட்டுகை இ றே –
கட்டுண்ணப் பண்ணிய
தாம்பு சிறுத் தாம்பு ஆகையாலே அதை நீளப் பண்ணப் போகாது –
அடுத்து கட்டுகிற உரலை இளைக்கப் பண்ணப் போகாது
இனி இடம் காணலாவது இவன் பாடே யாகையாலே
வயிற்றை எக்கச் சொல்லி இடம் கண்டு கட்டினாள் யாய்த்து
தன்னுடைய சங்கல்ப்பத்தாலே இடம் கொடுக்கை அன்றிக்கே தாயாருடைய சீற்றத்துக்கு அஞ்சி மௌக்யப் பிரயுக்தமாய் கட்டுண்ணப் பண்ணினான் ஆய்த்து –
கட்டுண்ணப் பண்ணிய
பக்தி யுண்டே யாகிலும் அவன் தானே தன்னை அமைத்துத் தர வேண்டும் படியாய் இது பின்னையும் சிறிதாய் இருக்குமாய்த்து
நாயமாத்மா -இத்யாதி
இனி இந்த பக்தி இவன் நெஞ்சில் அந்ய பரதையை அறுக்கும் இத்தனை
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக் கட்டி -என்கிறபடியே எட்டும் இரண்டும் பத்தாய் பக்தியைச் சொன்னபடி
எட்டு என்று திரு அஷ்டாஷரமாய் அத்தாலே யாதல் -இரண்டு என்று வாக்ய த்வயமாய் அத்தாலே யாதல் வசீகரித்து என்னவுமாம்
அல்லது எட்டும் இரண்டும் அறியாதார்க்குக் கட்டப் போகாதே-
பெரு மாயன்
அவன் நினைக்க ஒண்ணாத ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடையவன் -அதாவது
அழுகையும் அஞ்சி நோக்கும் அனநோக்கும் தொழுகையுமான இச் சேஷ்டிதங்கள்
அழுகையும்
உரலோடு கட்டி வைத்தவாறே அழ -அவள் வாய் வாய் என்றவாறே அஞ்சி பேதைத் தனம் தோற்ற அவளைப் பார்க்கும்
அந்நோக்கும்-
தொடுவே செய்த்தில வாய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் -என்கிறபடியே பெண்கள் அடையத் திரண்டு வருகைக்காக
களவாகிற சாதனத்தை அனுஷ்டித்து கள்ளனைக் காண்கை எல்லாருக்கும் சாதாரணம் ஆகையாலே ஒத்த பருவத்தில்
பெண்கள் எல்லாரும் வந்து திரள அவர்கள் முகத்திலே தௌர்த்த்யகர்ப்பமான கடாஷத்தைப் பண்ணா நிற்கும்
-இசையாதவர்களை இசையும் படி பார்த்தும் -இசைந்தவர்களை அறவிலை செய்து தரும்படி பார்த்தும்
தான் பண்டு செய்த மறத்தாலே மாலின்யம் யுடையவர்களை அமலங்களாக விழித்தும் இப்படி நோக்கேயாய்ச் செல்லும் –
தொழுகையும்
மக்கள் மனம் மாதர்க்குச் தெரியும் ஆகையாலே இவனுடைய தௌர்த்த்யத்தைத் தெரிந்து அவள் அச்சம் உறுத்த
தொழுகையும்
அவளைப் பார்த்து அஞ்சலி பண்ணும்
பொடிந்தவர்களுக்கு ப்ரசாதகம் ஆவது அஞ்சலியே என்று இருக்கும்
ஷிப்ரம் தேவ பிரசாதி நீ -என்றும்
அந்த ரேணாஅஞ்சலிம் பத்வா லஷ்மணச்ய பிரசாத நாத் -என்கிறபடியே
இவை கண்ட வசொதை தொல்லையின்பத்து இறுதி கண்டாளே-
ஆத்மானுபந்தியான ஸூ கத்தினுடைய எல்லையைக் கண்டாள்
நித்ய முக்தர் ஜ்ஞான சக்த்யாதிகளைக் கண்டு அனுபவித்தவர்கள்
இவள் சௌசீல்யாதிகளைக் கண்டு அனுபவித்தவள் –
என்னப்பனில்
என்னாயனில்
பெருமாயன் என்னப்பனில்
இப்போதை இவருடைய தாஸ்யம் -குணைர் தாஸ்யம் உபாகத -என்கிறபடியே அத்தலையில் குண சேஷ்டிதங்களுக்கு தோற்றாயிற்று
இவரையும் உட்பட தோற்றிக்கிறது இ றே இவ்வபதானம்
இனி ஆழ்வாரைப் போலே இள நெஞ்சு இல்லாமையாலே மீண்டார் இத்தனை
என்னப்பனில் நண்ணி
அவனில் காட்டில் ஆழ்வார் பக்கலில் நெஞ்சை வைத்து
சப்தாதி விஷயங்களின் போக்யதையை அறுத்துத் தன் பக்கலிலே யாக்கிக் கொள்ளும் பகவத் வைலஷண்யம்
பகவத் விஷய போக்யதையிலே நின்றும் மீட்டுத் தன் பக்கலிலே யாக்கிக் கொண்டது ஆழ்வார் வைலஷண்யம்
தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும்
குறுங்குடி நம்பியைக் காட்டில் குருகூர் நம்பியை வ்யாவர்த்திக்கிறது
அவனுக்குப் பூர்த்தி ஜ்ஞான சக்த்யாதிகளாலே
இவருக்குப் பூர்த்தி ஜ்ஞான பக்த்யாதிகளாலே
ஜகத்தை தனக்கு ஆக்கும் படியான குணங்கள் அவனது
அவன் தன்னைத் தனக்காக்கும் படியான குணங்கள் இவரது
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
ஆழ்வார் பக்கலிலே நெஞ்சை வைத்து ஆழ்வார் திரு நாமத்தைச் சொன்னால்
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே
நினைத்த நெஞ்சம் தித்தித்தது
சொன்ன நாக்கும் தித்தித்து வாரா நின்றது
சாரச்யம் சதா கால வர்த்தியாகா நின்றது
இனி பகவத் விஷயத்தை நினைக்கைக்கு நெஞ்சம் இல்லை –சொல்லுகைக்கு நாக்கும் இல்லை
இந்த சாரச்யம் எங்களுக்குப் பிறக்க காண்கிறிலோமீ என்னில்
என் நாவுக்கு
உங்களைப் போலே பகவத் விஷயமும் ரசித்து ஆழ்வாரும் ரசிக்கும் ணா வன்றே என்னது
அடியே பிடித்து ஆழ்வார் உடைய சாரச்யத்திலே பழகின நா வன்றோ
என் நாவுக்கே
இவ்வம்சத்தில் கரணியான என்னோடு கரணங்களோடு வாசி இல்லை
என் நாவுக்கே
அவர் தாம் என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்றால் போலே இவரும் என் நாவுக்கே -என்கிறார் –
—————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply