திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-8-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

தனக்கு இருப்பிடமான கோயில்கள்
பல உளவாக இருக்க –
ஓர் இடம் இல்லாதாரைப் போலே
என் மனத்திலே ஒரு காரணமும் இல்லாமல்
வேண்டிக் கொண்டு வந்து புகுந்தான்
என்று பிரீதர் ஆகிறார்

————————————————————————————————————————————————–

திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –

———————————————————————————————————————————————-

திருப் பேர் நகரான் –
திரு அயோத்தியை போலே ஆயிற்று –

திருமால் இரும் சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான்-
ஊரையையும் மலையையும் சொல்லி
பொருப்பே – ஏவகாரத்தால் திருமலை இருப்பை விரும்பிகின்றதையும் சொல்லி –
சித்ர கூடத்தில் வசிப்பது -அயோத்தியில் வாசிப்பதைக் காட்டிலும் மேலாக விரும்பிய பெருமாளைப்போலே
ஸூ ரம்யம் ஆசாத்யது சித்ரகூடம் நதீஞ்ச தாம் மால்யவதீம் ஸூ தீர்த்தாம்
நநந்த ராம ம்ருகபஷி ஜூஷ்டாம் ஜஹௌ ச துக்கம் ப்ரவிப்ரவாசாத் -அயோத்யா -57-38-
மால்யவதி என்னும் நதியைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த பெருமாள் போலே யும் –
ஸூ பக சித்ரகூட அயம் கிரிராஜோபமோ கிரி
யஸ்மின் வசதி காகுத்ச்த குபேர இவ நந்ததே -அயோத்யா -99-12-
குபேரன் போலே மகிழ்ந்தார் பெருமாள்
குறைவு அற்றவன் நந்தவனத்திலே வசிக்குமாறு போல ஆயிற்று
எல்லா வகையாலும் குறைவு அற்றவனுக்கு அன்றோ லீலா ரசத்தில் தொடர்பு உள்ளது –

இன்று வந்து –
இவ்வத்மாவுக்கு நேற்று ஒரு நினைவு இன்றிக்கே இருக்க
வந்து கொடு நிற்கக் கண்ட இத்தனை –

இருப்பேன் என்று –
இருப்பேன் இருப்பேன் -என்னா நின்றான் ஆயிற்று
யதீஹ சரத அநேக த்வயா சார்த்தம் அநிந்திதே
லஷ்மனேந ச வத்ச்யாமி ந மாம் சோக பிரதர்ஷயதி -அயோத்யா -94-15
இதம் புண்யம் இதம் மேத்யம் இதம் பஹூ ம்ருகத்விஜம்
இஹ வத்ச்யாமி சௌமித்ரே சார்த்தம் ஏதேன பஷிணா – ஆரண்ய -15-19-
ஐயர் கோல் கீழே வசிக்க வேண்டும் -என்று நினைத்து இருந்தோம் \
நடுவில் ஆய்ச்சிக்கு பிரியம் இல்லாமையாலே போந்தோம்
இனி மேல் உள்ள காலம் எல்லாம் இவர் சிறகின் கீழே வசிக்கப் பாரா நின்றோம் -என்றான் அன்றோ –

என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –
இருந்திடுவானுக்கு -என்று இராத என் நெஞ்சிலே நிறையப் புகுந்தான் –

விருப்பே பெற்று –
ஆணையைப் பின் பற்றாமையாலே உண்டான வெறுப்பு
கார்யமாக அன்றிக்கே –
தான் அஹம் த்விஷத க்ரூரான் சம்சாரேஷூ நராதமான்
ஷிபாமி அஜஸ்த்ரம் அசூபான் ஆசூரீஷ் வேவ யோநிஷ-ஸ்ரீ கீதை -18-19
அந்தப் பகைவர்களான கொடியவர்களை அசுரப் பிறவியில் தள்ளுகிறேன்
என்று இருப்பதும் ஒரு இருப்பு உண்டு அன்றோ –
அங்கன் அன்றிக்கே –
அவனுடைய விருப்பத்தை உடையவனாய் –

அமுதம் உண்டு களித்தேனே –
விஷ உணவினை உண்டு நரகத்துக்குப் போகா நிற்க
நடுவே நின்று களிக்கை அன்றிக்கே -அமுதம் உண்டு களித்தேனே —
அவனுடைய கொண்டாட்டம் ஆகிற அமுதத்தை உண்டு களித்தேனே –

என்னுதல் –
அவனுடைய குணங்கள் ஆகிற அமுதத்தை உண்டு களித்தேன்
என்னுதல்
ஐம் புல இன்பங்களில் ஆசை உள்ளவனாய்
நரகத்துக்கு கிருஷி யைப் பண்ணி வைத்து களிக்குமது அன்றோ அது
அதாவது
அணி மென் குழலார் இன்பக் கலவி அமுது உண்டார் -4-1-5-என்றபடி –
களித்தேனே –
நாவல் இட்டு உழி தருகின்றோம் -என்கிறபடியே
செருக்காலே களிக்கிற களிப்பே அன்றோ இது
நமன் முதலானோர் தலைகளிலே அடி இட்டுக் களிக்கப் பெற்றேன்-

இருப்பிடம் கோயில்கள் அநேகம் இருக்க
ஹிருதயம் வந்து
இடவகைகள் இகழ்ந்திட்டு என் பால் இடவகை கொண்டனையே
இடம் இல்லாதவன் போலே புகுந்து
திருபேர் நகரான் -திரு அயோதியை போலே
திருமால் இரும்சோலை-காடு போலே தண்டகாரண்யம்
அதிக ஆசை பெருமாள் வைத்தார்
பொருப்பு உறைகின்ற பிரான்
திருச்சித்திர கூடம் போலே
துக்கம் தீர பெற்றார்  பெருமாள்
குறைவற்றவன் உத்யானத்தில் வர்திப்பது போலே
லீலா ரசம் அனுபவிக்க

அரண்மனை விட்டு தோட்டத்தில் சென்று அனுபவிப்பது போலே
உழைக்க வேண்டியது இல்லை -குறைவற்றவன் –
திருமால் இரும் சோலை வர்த்திக்க
இன்று வந்து
வெரி நினைவு ஓன்று இன்றிகே இருக்க பிகுந்ததை கண்டு கொண்டு
இங்கே தான் இருப்பேன் சொல்லிக் கொண்டு
ஜடாயு மகா ராஜர் சிறகுகின் கீழ் இருக்க ஆசை
தண்ட காரண்யம் இங்கேயே இருந்து -பெருமாள்
ஐயர் தோள் கீழே வர்த்திக்க ஆசை கொண்டோம்
நடுவில் ஆய்ச்சி பிரியம் இலாமையாலே போந்தோம்
இவர் சிறகுகின் கீழே வசிக்க ஆசைப் பட்டது போலே
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறைய
என் நெஞ்சு அனுமதி கூட கொடுக்காதே என் நெஞ்சு
விருப்பே பெற்று
ஆஞ்ஞை அனுவர்தனம் பண்ணும்படி
சாஸ்திரம் அனுவர்த்திகா விடில்  தாமச -ஆசூர -மம துரோகி -பக்தன் இல்லை –
அமுதம் உண்டு களித்தேன்
புலி துரத்த -பாம்பு -தேன் நக்கி அது போலே இல்லை
குண அனுபவம் அமுதம்

குழலார் இன்பக் கலவி அமுது உண்டால்
இன்பக் கலவி -நரக அனுபவம்
விவித விஷய நிவ்ருத்தி தன்னேற்றம்
அப்படி இல்லாமல் கைங்கர்யம் அமுதம் உண்டு களித்தேன்
சர்வே புன்யச்ய பலம் -லோகத்தில் புண்ய பலம் சுகம் ஆசை பட்டு புண்ய கார்யம்
பாபம் பலம் அனுபவிக்க ஆசை இல்லாமல் பாபமே செய்து போவார்
அன்தைன்பக் கலவி இல்லை
நாவலிட்டு உழி தருகின்றோம் செருக்கால
யமாதிகள் தலையிலே அடி இட்டு கழிக்கப் பெற்றேன்

————————————————————————————————————————————————–

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading