திருப் பேர் நகரான் பரம பதத்தை எனக்கு
தருவானாக
என்னோடு பூணித்து
தானே இரு வினைகளையும் போக்கினான் –
என்கிறார் –
————————————————————————————————————————-
வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே
—————————————————————————————————————————–
வானே தருவான் எனக்காய் –
எனக்கு வானே தருவானாய் –
இங்கே வைத்து கார்யம் கொள்ளும் அதனையும் தவிர்ந்தான் –
இன்னம் ஒரு பிரபந்தம் இடுவித்துக் கொள்ளுகையும் தவிர்ந்தான்
வானே -ஏவகாரம்-பிரமன் முதலாயினோர்கள் குடி இருப்பும்
இவருக்குத் தரம் அன்று -என்று அதனையும் தவிர்ந்தான்
இவ் உலகுள் உழன்று திரிகின்ற எனக்கு
நித்ய சூரிகள் இருப்பை தருவானாக –
என்னோடே ஒட்டி –
என்னோடே பூணித்து –
நான் விரும்பாது இருக்க –
அஸ்மின் முகூர்த்தே ந சிரான் சத்யம் பிரதி ஸ்ருனோமி வ
அராவணம் அராமம் வா ஜகத் த்ரஷ்யத வானர -யுத்தம் -21
என்கிறபடியே -என்னோடு சூளுறவு -என்றது –
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் –2-9-1-என்ற
என்னோடு உமக்கு -எம்மா வீடே -தரக் கடவோம் என்று ஒட்டி -என்றபடி –
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று –
ஊனேய் குரம்பை இதனுள் -இன்று -புகுந்து –
இவ் உடம்போடு உம்மைக் கொடு போக வேண்டும் -என்று
விளம்பித்தேன் ஆகில் இதனை ஒழியக் கொடு
போகப் பார்த்த பின்பு
ஆறி இருப்பேனோ -என்னா நின்றான்
தசைகள் மிக்கு இருப்பதாய்
ஆத்மாவுக்கு இருப்பிடமாய் இருக்கும் சரீரத்தில்
மேல் எழக் கலக்கை அன்றிக்கே
விடாயர் மடுவிலே புகுமாறு போலே புகா நின்றான் –
எனது உடலே அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியாதே இதனுள் புகுந்து நின்றான் –
இன்று –
நேற்று ஒரு நினைவு இல்லை
தானே
கர்மங்களுக்கு கட்டுப் படாதவனான தானே –
இவர் பல காலம் தாகத்தினை விரும்பி விட மாட்டாதே போந்தார்
இப்போது இவருக்கு தன் பக்கலில் ருசி பிறந்தவாறே
இதனோடு தொற்று அல்லாத தானே
இதிலே வந்து புகுரா நின்றான் –
அவனைப் போலே முன்னடி தோற்றாது ஒழியில் அன்றோ இவர்
இச் சரீரத்தின் தண்மையைக் காணாது ஒழிவது-
இதன் தண்மையை நினைந்து -இதனுள் -என்கிறார் –
தானே
புகுகிற போது தானே யாய்
பின்னர் நானும் அவன் செய்யும் கார்யத்துக்கு அனுகூலமாக இருந்தேனோ –
தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் –
தன் பக்கல் நின்றும் என்னை பிரித்து தடுமாரும்படி
செய்ய வல்ல பாபங்களைப் போக்கினான் –
அவை யாவன
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்கள் –
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே –
தேன் மிக்க பொழிலை உடைத்தான
திருப் பேர் நகரை உடையவன் காண்
என்னுடைய சரீரத்திலே புகுந்து
கண நேரமும் விட மாட்டாதே ஒழிகிறான்-
என்ன குறை உண்டாய் இப்படிப் பட்டான் –
பரம பதம் தருவானாக
பிரதிஞ்ஞை பண்ணி
கலந்து என்னுடைய விரோதிகளை போக்கி அருளி
தானே செய்து அருளி
வானே தருவான் எனக்காய் இங்கே வைத்து கார்ய்சம் கொள்ளுவதை தவிர்த்தான்
வானே -ஏவகாரம்
ப்ரஹ்மாதிகள் குடி இருப்பு இவருக்கு தரம் இல்லை அத்தையும் தவிர்த்தான்
சம்சாரி நித்ய சூரிகள் இருப்பை
என்னுடன் கூடி
இசையாமல் இருக்க
சமயம் பண்ணி
ராவணன் இல்லாமலோ ராமன் இல்லாமலோ
கூட்டிப் போகா விடில் நானும் இல்லை
என்னுடன் சமயம்
எம்மா வீட்டு திறமும் செப்பம் என்னுடன்
கலந்து அந்த எம்மா வீடே தருவான்
என்னுடன் ஒட்டி ஊனே குரம்பை சரீரம் உடன் புகுந்து
ஒழிய கொடு போக
இனி ஆறி இருப்பேனோ
மாம்ச பிரசரமாய் தேகம்
இதன் உள் புக்கு
மேல் எழ கலக்கை அன்றிக்கே
விடயார் மடுவில் புகுமா போலே உள் புக்கான்
என் உடலே -பிரியானே
இன்று
தானே தடுமாற்ற வினைகள்
அகர்மவச்யன் தானே
ருசி பிறந்தவாறே
தேகம் விடாமல் இருக்க
முன்பு ஆழ்வார் இப்பொழுது அவன்
கரடி பிடி நான் விட்டாலும் அது விடாதே
நான் விட்டேன் இதனுள் புகுந்து
அவனை போலே
வியாமோகம் தோஷ தர்சனம் பார்க்க பண்ணாதே
இவருக்கும் தோற்றாமல் இருந்தால் தேகம் உபேஷித்து இருக்க மாட்டார்
முன்னடி பின்னடி
மேல் திருவாய்மொழி வரப் போகிற
தான் மட்டும் புகுந்து
பிரித்து தடுமாற்ற வல்ல வினைகள் போக்கி
யாவை
பொங்கு ஐம் புலன்கள் இத்யாதி தவிர்த்து
பொழில் உடைய திருப் பேர் நகர் உடையவன் கிடீர்
என்னுடைய சரீரத்தில் புகுந்து
ஷன காலமும் விட மாட்டாமல்
என்ன குறை உண்டாய் செய்கிறான் ஆச்சர்யப் படுகிறார்
————————————————————————————————————————————————
Leave a Reply