திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -10-2-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

கெடும் இடர் -பிரவேசம் —

ஒரு நல் சுற்றம் -என்ற -10-1-பெரிய திரு மொழியிலே
பல திருப்பதிகளையும் அருளிச் செய்த -இதற்கு கருத்து என் –
என்று சீயர் பட்டரைக் கேட்க –
பிறந்தகத்தின் நின்றும் புக்ககத்துக்கு போகும் பெண் பிள்ளைகள்
பந்துக்கள் இருந்த இடம் எங்கும் கண்டு
வினவப் போமாறு போலே
அடையத் தக்க பரமபதம் அணித்தான வாறே
திருப்பதிகள் தோறும் புகுகிறார் -என்று அருளிச் செய்தார் –
பண்டை நாளாலே தொடங்கி இவரும்-திருப்பதிகள் மங்களா சாசனம் செய்து அருளுகிறார் –
திருப் புளிங்குடியிலே புகுவது
திரு காட் கரையிலே புகுவது
திரு மூழிக் களத்திலே புகுவது
திரு நாவாயிலே புகுவது
திருக் கண்ணபுரத்திலே புகுவது
திரு மோகூரிலே புகுவது
திரு வநந்த புரத்திலே புகுவதாகிறார் –
அடையத் தக்க பரமபதம் ஏறப் போவதாக ஒருப்பட்டு
நடுவிலே உண்டான தடைகளைப் போக்கி
வழி கொடு போய் விடுகைக்கு
காளமேகத்தை துணையாகப் பற்றினாராய் நின்றார் மேல் –
அவ்வளவு தான் நமக்கு போக வேண்டுமோ
இங்கே உள்ள திரு வநந்த புரமே அடையத் தக்க பரம பதமாக இருக்க
என்று திரு வநந்த புரத்தை பரம பதமாக அறுதி இட்டார் –
அங்கனம் அறுதி இட்டு
அந் நகரமாகிற இது தான்
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்தபுரம் ஆகையாலே
அவன் விரும்பி வசிக்க வேண்டும்படி எல்லை இல்லாத இனியதுமாய் -தேசம் செய்து –
அவன் வந்து வசிக்கையாலே சம்சார துக்கமும் தட்டாத இடமுமாய் -தீரும் வினை நோய்கள் எல்லாம் தீரும் –
இச் சரீர சம்பந்தம் அற்று அவ்வாறுக் போனால் செய்யும் அடிமையை
ருசி பிறந்த போதே இங்கேயே செய்யலாம் படியாய் -கடைத் தலை சீய்க்கப் பெற்றால் –
இனித்தான் –
அமரர்கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர் -10-2-6-என்கிறபடியே
நித்ய சூரிகளும் வந்து அடிமை செய்யும் நகரம் ஆகையாலே
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-8-10-என்று
ஆசைப் பட்டபடி அவர்களோடு கூடவுமாய்
அவ்வருகு போக வேண்டினாரே ஆகிலும்
பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன் -பெரிய திருமொழி -7-4-4-என்கிறபடியே
அவர்களோடு போகவுமாய் இருக்கும் அன்றோ –

உகந்து அருளின நிலங்களில் நிலை இது தான் –
முதலிலே பகவான் இடத்தில் ருசியைப் பிறப்பிக்கைக்கு உடலுமாய் –
ருசி பிறந்தால் –
யே யதா மாம் ப்ரபத்யந்தே தான் ததைவ பஜாமி அஹம்
மம வர்த்ம அனுவர்த்தந்தே மனுஷ்யா பார்த்த சர்வச -ஸ்ரீ கீதை -4-11-
எவர்கள் என்னை இந்த விதமாக வணங்குகிறார்களோ
அவர்களுக்கு அந்த விதமாகவே
நான் அருள் செய்கிறேன் -என்கிறபடியே
சுலபனாய் இருக்கும் தன்மைக்கு எல்லை நிலமும் ஆகையால் –
உபாயத்துக்கு உரிய தன்மைகளும் நிறைந்ததாய்
பரம பதத்துக்கு கொடுபோம் இடத்தில்
ஆதி வாஹிக கணத்தில் முதல்வனான தானே
ஹார்த்த அனுக்ருஹீத சதாதிகயா -உத்தர மீமாம்சம் -4-அத்யாயம் -2-பாதம்
உள்ளத்தில் உறையும் இறைவனால் அருளப் பட்டவன் ஆகிறான் -என்கிறபடியே
வழியில் உண்டாகும் தடைகளையும் போக்கி கொடு போகைக்கும்
முற்பாடானாகைக்கும் உடலாய் –
பிறப்பு இறப்புகளின் தளை நீங்கி அவ்வருகே போனால் செய்யும் அடிமையை
இவ் உடலோடு கிடக்கச் செய்தேயும்
யாதாயினும் ஒரு காலத்தில் செய்கைக்கும் உடலாய் இருக்கும் அன்றோ
ஆகையால் -கூடும் என்க –

ஆக –
ருசியைப் பிறப்பிக்கைக்கும் உடலாய் –
ருசி பிறந்தவாறே உபாயம் ஆகைக்கும் உடலாய் –
ஞானத்தையும் பக்தியையும் வளர்க்கக் கூடியதுமாய் –
இச் சரீரத்தோடு இருக்கச் செய்தே அடிமை செய்கைக்கும் உடலாய் இருக்கையாலே
திருவனந்த புரமே -அடையத் தக்க மேலான பரமபதம் -என்று
அறுதி இட்ட படியே -நடமினோ நமர்கள் உள்ளீர்-

நம்மோடு சம்பந்தம் உடையவர்கள் எல்லாரும் அங்கே போய் திரளுங்கோள் -என்கிறார்

இதுதான்
மற்ற திவ்ய தேசங்களுக்கும் ஒவ்வாதோ
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலம் செய்து கை தொழக் கூடும் கொல் எண்ணும் என் சிந்தனையே -7-10-9-
என்பது போன்றவைகளும் உண்டே -என்னில்
எல்லாவற்றுக்கும் எல்லாம் உண்டாய் இருந்தாலும்
ஒவ்வோர் இடங்களிலே ஒவ்வொரு வகையான
நினைவின் விசேடங்கள் ஓடினால் -அவற்றுக்குச் சேர வார்த்தை சொல்லும் இத்தனை

————————————————————————————————————————————————-

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே

———————————————————————————————————————————————–

பிரீதியாலே திரு நாமத்தைச் சொல்ல
திருவனந்த புரத்துக்கு செல்ல தடையாக உள்ளவை
அனைத்தும் அழியும்
அங்கே புக வாருங்கோள் -என்று
அனுகூலரை அழைக்கிறார்-

கெடும் இடராய வெல்லாம் –
இடராய -எல்லாம் -கெடும் –
இடர் என்று பேர் பட்டவை எல்லாம் கெடும் -என்றது
பார்பார்த் தப்பிய கொடுமைக்கு கழுவாயாக பன்னிரண்டு ஆண்டுகள் செய்யும் வேள்வியைச் சரித்தால்
மற்று ஒரு பாவத்திற்கு மற்று ஒரு கழுவாய் செய்ய வேண்டி இருக்கும் அன்றோ –
இங்கு அது வேண்டா
பாபேந்தனாக்னி சசதைவ நிர்மல மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி -விஷ்ணு தர்மம் –
பாவங்கள் ஆகிற விறகுக்கு நெருப்பு போன்றவர் -என்கிறபடியே
எல்லா துன்பங்களும் ஒரு முறையிலேயே அழியும் -என்கிறார் -என்றபடி –

கழுவாயும் பலபலவாய் இருக்குமோ -என்ன
கேசவா வென்ன –
அவன் ஒரு விரோதியை போக்கின படியைச் சொல்ல
விரோதி என்ற பேர் பெற்றவை எல்லாம் நசிக்கும்
இராவணன் ஒருவனும் தீ வினை செய்ய
இராக்கச சாதியாக அழிந்தால் போலே –
இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர் -பெரிய திருமொழி –
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் -என்கிறபடியே

அனுபவிக்க கடவனவும்
முன்பே தொடங்கி அனுபவிக்கிறவையும்
எல்லாம் நசிக்கும் ஆதலால் -எல்லாம் -என்கிறார்
கார்யத்தில் வந்தால் அதன் பயனைக் கொடுத்தே தீரும் ஆதலின் வார்த்தை மாத்ரமே அமையும் என்பார் -என்னக் கெடும் -என்கிறார் –
இனி கேசவா என்னக் இடராய எல்லாம் கெடும் -என்பதற்கு
நரகே பஸ்யமா நஸ்து யமேன பரி பாஷித
கிம் த்வயா நார்ச்சிதோ தேவ கேசவ கிலேச நாசன -பாரதம் -என்கிறபடியே
நீண்ட மயிர் முடியை உடையவனாய் இருக்கும் இருப்பைச் சொல்ல
பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும்

க இதி ப்ரஹ்மனொ நாம ஈசோஹம்சர்வ தேஹிநாம்
ஆவாம் தவ அங்கே சம்பூதௌ தாஸ்மான் கேசவ நாமவான் -என்கிறபடியே
பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவனே என்ன
பிறவியாலாய துன்பங்கள் அனைத்தும் போம் -என்றும் பொருள் கூறலுமாம் –
ஆயினும் சொல்லிப் போருமது முன்னர் கூறிய பொருளே

நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார் –
நாள் தோறும் கொடிய செயலைச் செய்யக் கூடிய
எமனுடைய தூதுவர்களும் வந்து கிட்டப்
பெறார்கள்
எமனுடைய தூதுவர்கள் என்னா சர்வேஸ்வரன் உடையார் பக்கலிலே வந்து கிட்டவோ -என்பார் -தமர்களும் -என்கிறார் –
ஸ்வ புருஷம் அபி வீஷ்ய பாச ஹஸ்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிகர மது சூதன பிரபன்னான் பிரபு அஹம் அத்யன் ருணாம் ந வைஷ்ணவானாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-13-

தஸ்ய யஞ்ஞா வராஹச்ய விஷ்ணோ அமித தேஜச
ப்ரணாமம் யேயி குர்வந்தி தேஷாமபி நமோ நம-ஸ்ரீ விஷ்ணு தர்மம் –
அளவற்ற ஆற்றலை உடைய அந்த யஞ்ஞா வராக பெருமாளை எவர்கள் வணங்கு கின்றார்களோ
அவர்களை நான் பல முறை வணங்குகிறான் -என்பதே அன்றோ அக் கூற்றுவன் வார்த்தையும் -என்றது
இறைஞ்சியும் சாதுவராய் போதுமின்கள் என்றான் -நான்முகன் திருவந்தாதி -68 -என்கிறபடியே
அவர்களைக் கண்டால் -நாம் கடவோம் அல்லோம் என்று போராதே
அவர்களை அணுகி வணக்கத்தைச் செய்து விட்டு செல்லுங்கள் என்கிறான் என்றபடி

ஸ்வபுருஷம் என்கிற ஸ்லோகத்தில்
எமன் தன் பரிகரம் கையும் சூலமும் நாயுமாகப் போகிற படியை பார்த்து
பாகவதர்களும் அல்லாதாரும் கலந்து இருப்பர்கள்
பாகவதர்கள் முன்னே இவன் கிட்டில் செய்வது என்-என்று பயந்து சொல்லுகிறான்
ஸ்வ புருஷம் –
தனக்கு அந்தரங்கனாய் இருக்கையாலே தன் மேன்மை சொல்ல வேண்டும் இடத்தில் தாழ்வு சொல்கிறானாய்ஆயிற்று தவிர ஒண்ணாமை யாலே
அபிவீஷ்யே –
அபி வி என்ற இரண்டு உபசர்க்கத்துக்கு -இவன் தான் நாலு இரண்டு ஓலை மறுக்க தர முடையனாய் இருக்கும் ஆயிற்று –
சொல் செல்லுகைக்காக இப்படி இருக்கிறவனை பார்க்கிற பார்வையிலே கார்யத்தின் கௌரவம் எல்லாம்
தோற்றும்படி பார்த்தான் ஆயிற்று –
மது சூதன பிரபன்னான் –
இவர்களை நலிந்தால் அவனுக்கு என் என்ன
இவர்கள் அவன் பக்கலிலே பாரங்களை எல்லாம் போட்டவர்களாய் இருப்பர்கள் –
இவர்களுக்கு வந்தது ஒன்றுக்கு -அவன் மார்வு தட்டிக் கொண்டு வரும் -மோஷ யிஷ்யாமி -என்பானே
நன்று உனக்கு உடையோமாய் போகிற நாங்கள் வேறு
சிலர்க்கு அஞ்ச வேண்டும்படி இருந்ததாகில்
நீ பின்னை யாராய் இவ்விருப்பு இருந்து ஏவுகிறது -என்ன
பிரபு அஹம் அந்ய ந்ருனாம்
எனக்கு அடைந்த விஷயத்தில் என் சொல் செல்லாதாகில்
அன்றோ எனக்கு குறையாவது
நாம் கடவோம் அல்லாதவர்கள் இடத்தில் நாம் ஆராயா நிற்கவோ -என்றான் –
இது தன்னை திரு மழிசைப் பிரானும் அருளிச் செய்தாரே அன்றோ
திறம்பேன்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தர் -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு –என்று

அவன் தமர் எவ்வினையர் ஆகிலும் எம் கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் -நமன் தமரால் ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயர்க்குஆட்பட்டார் பேர் -முதல் திருவந்தாதி –
என்று அவர் தங்களிலே சொல்லி இருக்கும் வார்த்தை அன்றோ இது
மாறு செய்த வாள் அரக்கன் நாள் உலப்ப அன்று இலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்
வேறு செய்து தம்முள் என்னை வைத்திடாமையால் நமன்
கூறு செய்து கொண்டு இறந்த குற்றம் என்ன வல்லனே -திருச் சந்த விருத்தம் -116
என்கிறபடியே சக்கரவர்த்தி திருமகனார் பெயரை இவன் ஆராயவோ -என்கை

ஒரு திருவேட்டையிலே பட்டர் திரு ஊற்றம் கரையிலே பேர் ஒலக்கமாய் இருக்க
மாலைப் பொழுது ஆயிற்று என்று சிலர் விண்ணப்பம் செய்ய
நான் பெருமாள் அழகிலே துவக்குண்டு இன்று ஒருநாளும் செய்ய வேண்டிய கார்யத்திலே
சிறிது தாழ நின்றோம் என்றால்
இது குற்றமாக யமன் கேட்கவோ
ஒரு அரசன் இருந்து நாட்டுக் கணக்கு கேட்டுக் கொடு வாரா நின்றால்
அரசனுக்கு அந்தரங்கனாய் இருப்பான் ஒருவன் பெயரை வாசித்தால் -ஓம் காண் அது கிடக்க மேல் செல் -என்றால்
பின்னை ஒரு நாளும் அப் பெயரை எடுத்து வாசிக்கப் பெறான் காண் -என்றாராம்
இந்த விஷயத்திலே
உனக்கு ஆகித் தொண்டு பட்ட நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ-பெரிய திருமொழி -6-8-9-என்று அருளிச் செய்தார் –
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல் -பெரிய திருமொழி -8-10-7-என்கிறபடியே
இருவர் ஒரு வழி போகப் பெறார்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா-என்றார் பட்டர் பிரான்
விழுக்காடு அறியாதே வந்து கிட்டில் செய்வது என் என்னில்
தடா வரைத் தோள் சக்கர பாணீ –சாரங்க வில் சேவகனே -என்கிறபடியே
திரு ஆழி இட்டு தோளைக் கழித்தல்
ஓர் அம்பாலே தலையை உருட்டுதல் -செய்யும் அத்தனை –
வாணன் பட்டது படுதல் -இராவணன் பட்டது படுதல் -செய்யும் அத்தனை –

வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று உலகு ஏழ் ஆண்டான் -பெரிய திரு மொழி -10-6-5-
என்கிறபடியே
யம தூதுவர்கள் நம்முடையாரை வினவப் பெறார்கள்-அதற்கு அடி என் எனில்
வேண்டாமை –
ஊர்க் கணக்கனோ கோயில் கட்டணத்திலே-அந்தப்புரத்திலே –
புக்கு படுக்கைப் பற்று -பெண்கள் இருக்கும் இடம் -ஆராய்வான்
செய்தாரேல் நன்று செய்தார் -பெரியாழ்வார் திருமொழி -4-9-2-
என்கிறவன் இவர்கள் கையில் காட்டிக் கொடானே
நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை நமன் தமர் தலைகள் மீதே
நாவல் இட்டு உழி தருகின்றோம் -எனபது திருமாலை -1-
அஹம் அமரவரார்சிதென தாத்ரா
யம இதி லோக ஹிதா ஹிதே நியுக்த
ஹரிகுரு வசக அஸ்மி ன் ஸ்வ தந்திர
ப்ரபவதி சம்யமனே மமாபி விஷ்ணு -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-14-
உலக குருவான பகவானுக்கு நான் அடங்கினவனாய் இருக்கிறேன்
நான் ஸ்வ தந்த்ரன் அல்லன்
என்னைத் தண்டிப்பதற்கும் விஷ்ணுவுக்கு ஆற்றல் உண்டு
என்கிறபடியே
உங்களை நியமிக்கப் போந்த என்னைப் போலே அல்லன் காண் என்னை நியமிக்குமவன்
இவ் ஓலக்கத்தில் வந்தால் அன்றோ நான் ஆராய்வது
அவன் -விஷ்ணு -எங்கும் உள்ளவன் அன்றோ –

நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார் –
பழையதாக நலிந்து போந்த வாசனை கொண்டு பகவத் விஷயத்தில்
முதலடி இட்ட இன்றும் -கிட்டவோ -கேசவா -என்றது வார்த்தை மாதரம் என்பதால் முதலடி –
துராசாரோபி சர்வாசீ க்ருதக்னோ நாஸ்திக புரா
சமாசரயேத் ஆதிதேவம் ஸ்ரத்தயா சரணம் யதி
நிர்த்தோஷம் வித்தி தம் ஜந்தும் ப்ரபாவாத் பரமாத்மன -பாரதம் –
நிர்தொஷம் வித்தி –
சாவது பிறப்பதாய் போந்தவனாவது –
கழுவாய் இல்லாத தீ வினைகளை உடையவன் ஆவது
ஆனாலும் அவனைக் குற்றம் அற்றவன் ஆகவே புத்தி பண்ண வேணும்
குற்றங்கள் இருக்க இப்படி நினைக்க வேண்டுவான் என் -என்ன –
பிரபாவாத் –
இவனையோ பார்ப்பது
இவன் பற்றினவனைப் பார்க்க வேண்டாவோ –
இவனை ஆராய்கை யாவது -பகவானுடைய பெருமையை அளவிட்டு அறிதலாம் அன்றோ
குறுகார் எண்ணாதே குறுக -கில்லார் -என்றது
எரிகிற நெருப்பில் கிட்டுவார் உளரோ -என்றது –
ஏவுகின்ற தலைவனுடைய ஏவலை மேற்கொண்டு கிட்டாமை அன்று
தந்தாமை வேண்டாதார் உளரோ -என்றபடி –

மேலே பெறக் கூடிய பேற்றினை சொல்கிறார்
விடம் உடை –
செந் தெங்கிற்கு -செவ்விளநீர்க்கு-முள் கட்டினால் போலே
ஒருவருக்கும் முகம் கொள்ளாது இருக்கை
வாய்ந்த மது கைடபரும் வயிறு உருகி மாண்டார் -மூன்றாம் திருவந்தாதி -66-என்கிறபடியே
பகைவர்களாய் கிட்டினாரும் முடிந்து போம்படியாய் – இருக்கும்

அரவு –
சாதிக்கு உரியதான மென்மை நாற்றம் குளிர்த்தி -என்னும் இவற்றை உடைத்தாய் இருக்கும்

பள்ளி விரும்பினான் –
பர்யங்க வித்தையில் சொல்லுகிறபடியே ஆயிற்று
அங்கு கண் வளர்ந்து அருளுகிறது

பாதே நாத்யா ரோஹாதி-என்று துகைத்து ஏறலாய்த்து இருப்பது

சுரும்பு அலறும்
ஏதத் சாம காயான் நாஸ்தே -என்று முக்தர் செய்யுமவற்றை வண்டுகள் செய்யா நிற்கும்

தடமுடை வயல்
விரஜை மற்றையவற்றுக்குப் போலியாய் இருக்கும் தடாகங்கள்

அனந்த புரநகர்
கலங்காப் பெரு நகருக்குப் போலியாய் இருக்கும்

புகுதும் இன்றே
க்ரமத்தில் புகுகிறோம் -என்று ஆறி இருக்குமது அன்று -இச்சை பிறந்த இன்றே போய்ப் புகுவோம்

———————————-

திவ்ய தேசங்கள் வரிசையாக
ஒரு நல் சுற்றம் 10-1 பெரிய திருமொழி
18 திவ்ய தேசங்கள் அருளி
ஒரே திவ்ய தேசம் 100 பாசுரங்கள் பாடி
நஞ்சீயர் பட்டர் இடம் கேட்க
சீயர் சீரியர்
கட்டுமரம் -இங்கிலீஷ்
கொல் கில்
சீயம் -சிங்கம் பெருமை
மனுஷ்யர் சிங்கம் சீயம் சீயர்
புக்ககம் போகும் பெண் பிள்ளைகள் பந்துக்கள் உள்ள இடம் எல்லாம் சொல்லிப் போவது போலே
திருப்பதிகள் தோறும் புகுகிறார்
திருவனந்தபுரம் பிராப்யமாய் உண்டாய் இருக்க
அத்யவசித்து –
சோலை வாய்ப்பு பரம பதம் போலே
விரும்பி வர்த்திக்குக்ம் படி நிரதிசய போக்கியம்
அவனே வர்த்திக்கும் –
சம்சார துரிதம்
தேசோயம் சர்வ காமம் அளிக்கும்
திருநாராயணபுரம் குடில் கட்டி வசிக்க எம்பெருமானார்
கதா கதா கதற வேண்டி இருக்கும்
திவ்ய தேசம் ருசி பிறந்த அன்றே கைங்கர்யம் இங்கே செய்யலாம்
தேகாந்தர தேசாந்தர காலாந்தர அடிமை இங்கேயே செய்யலாம்
உபன்யாசம் மற்றவரை திருத்த
தானே செய்து இத்தை பார்த்து கைங்கர்யம் செய்ய வரட்டுமே
அத்யாந்த கிரந்த நிர்மாணம் அவபோதனம் தெரிவித்து
அர்ச்சாவதார சேவை மகான்களுக்கு பலம் இந்த மூன்றும்
அமரர் கோன் அர்ச்சிக்கின்ற்றது நித்யர் வந்து அடிமை செய்து
முப்பத்து முக்கோடி தேவர்கள்
அமரர் கோன் நித்ய சூரிகள்
அர்ச்சிக்கின்று -தேச பாஷை
அங்கு அகப்படி செய்வர் அந்தரங்க கைங்கர்யம்
ஆழ்வார் ஆசைப்பட்டது அடியார் குழாம் உடன் கூடுவது என்று கொலோ
உடன் கூடலாம் இங்கே
பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரியானே
சேர்ந்து இருக்க
பரம பிராப்தமான திவ்ய தேசம்
உகந்து அருளின நிலம் -திவ்ய தேசம் சப்தம்
எம்பெருமான் தானே உகந்து எழுந்து அருளி
ஆழ்வார்கள் திரு உள்ளம் இடம் பெற
ஆழ்வார்கள் இவற்றை உகந்து அருளின நிலங்கள்
ருசி பிறப்பிக்கை முதலில்
ருசி பிறந்தால் உபாய பாவமும் பூரணமாய்
மாம் பிரபத்யந்தெ தமர்  உகந்த எவ்வுருவம் அவ்வுருவம் தானே
சுமதி திருவேம்கடம் உடையான் கண்ணன் சேர்த்து சேவை ப்ருந்தாரன்ய ஷேத்ரம் வேங்கட கிருஷ்ணன்
எ யதா மாம் பிரபத்யந்தெ ததேக அஹம் சௌலப்யத்துக்கு எல்லை நிலம்
ஆயர் தேவு
வண் புகழ் பெருமாள்
சதங்கை அழகியார்
தமர் உகந்த பெயர்
ரூபம் பெயர் -அடியவர்
சர்வ தரமான் பரித்யஜ்ய -பக்தி தடை போகும் வியாக்யானம் கீதை
பிரபதிக்கு சரம ஸ்லோகம்
ஆதி வாஹிகர் பிரதானன் தானே கூட்டிப் போவான்
தடைகளை போக்கி
சரணாகதி செய்த பின்பு உள்ள பிரதி பந்தகங்கள் போக்கி
முற்பாடனாய்
அஹம் ஸ்மராமி
ஸ்ரீ பாஷ்யம்
அருளிச் செயல் அர்த்தங்கள்
அருளிச் செயல்
கைங்கர்யம்
ஸ்ரீ வைஷ்ணவர் அபிமானம் ஒதுங்கி
திருக்குடில்
ஓன்று மேலுக்கு கூட்டிப் போகும்
சமுத்ரம் துரும்பு அலைகள் கூட்டி போவது போலே
பகவத் விஷயத்தில் ஓர் அடி வைத்தால்
ருசி உபாய பாவம் -கைங்கர்யம் செய்து -தானே கூட்டிப் போவான்
இதுவே பரம பிராப்யம்
ருசி பிறந்த போதே பிரகிருதி இருக்க செய்தே செய்யலாம்
காதா சித்தமாக -முடிந்த பொழுது
ஞான பக்தி வர்த்தகங்கள்
பரம பிராப்யம் என்று அறுதி இட்டு
அங்கு போனால் முதுகு வலிக்காதே

மணவாள மாமுனி காஞ்சி சாத்து முறை 11 மணி ஆரம்பம் காலை 4 மணிக்குமுடியும்
காதா சித்தமாக கைங்கர்யம்
அங்கு நிரந்தர கைங்கர்யம்
பிரமேய ரத்னம் -ஐதிகம் சொல்லி
அனுகூலர் அடைய -நடமினோ நமர்கள் உள்ளீர்
கைங்கர்யம் செய்ய சொல்லி
நம் பிள்ளை -திருவனந்தபுரம் –
திரு வாரன்விளையே பிராப்யம் முன்பு சொல்லி மேவி வலம் செய்து கை தொழக் கூடும் கொல்
ஒரோ இடங்களில் ஓர் விசேஷம்
பர்வத பரம அணு ஓர் ஆண்டாள்
மதுரகவி பத்து பேரை சிரித்து இருப்பார்
ஸ்துதிக்க விஷயம் நிந்திதா விஷயம் இல்லை
திரு நாமம் சொல்லவே தடைகள் நீங்குமே
இடர் ஆயவெல்லாம் கேசவா என்ன போகும்

விரோதி எல்லாம் போகும் திவ்ய தேசம் திரு நாமம் சொல்லி –
கெடும் இடர் ஆய  எல்லாம் கேசவா என்ன –
இடர் என்று பேர் பெற்றவை எல்லாம்
பிரயாசித்தம் ஒவ் ஒன்றுக்கும் ஓன்று உண்டு
த்வாதச -பிரம்ஹமத்தி பாப்பம் போகும் -வேறு ஒன்றுக்கு தனியாக செய்ய வேண்டும்
இடர் ஆய எல்லாம் போகும் நாம சந்கீரதனம்
பாப -இந்தனம் அக்னி போலே -விஷ்ணு தர்மம் ஸ்லோகம்
கேசி ஒருவனை வதம் பண்ணினான் சொல்லி அனைத்தையும்
ராவணன் ஒருவன் பிரதி கூல்யம் செய்ய ராசாச ஜாதி எல்லாம்
அனுபவிக்க கடவையும் -சஞ்சிதம் பிராப்தம் ஆகமாமி எல்லாம்
உக்தி மாதரம்
போகும்
வாய் வார்த்தைக்கே பலம்
மேகம் -புகழ கர்ணன் புகழ ஸ்தோத்ரம் செய்ய சந்தோசம் உண்டாக
வார்த்தை சொல்லு வார்த்தை பதில்
இங்கே வார்த்தை சொல்லி -அனைத்தையும் -கார்யம் தலைக்கட்டும்

கேச பாசம் உடையவன்
ப்ரஹ்ம ருத்ராதி நிர்வாககன்
முதலில் சொல்லியதே சொல்லிப் போவார்கள்
யஞ்ஞா வராகனை வணங்கிய அடியவரை வணங்கி போவார்
நமன் தமர் -விட்டு போகாமல் இறைஞ்சியும்  சாதுவராய் போதுவீர்
விஷ்ணு தர்மம் எளிய ஸ்லோகம்
விசேஷ அர்த்தங்கள் உள்ளவை
பிரணாமம்-செய்து போக நமன் சொல்லி –
திறம்பேன்மின்-
அஸி தீஷை -பார்வையால் சொல்லி
மீறாமல்

சு புருஷம் இத்யாதி
கண்டால் கடவோம் அல்லோம் கிட்டி அனுவர்தித்து போக
கையும் பாசமும் சூலமும் நாயும் கொண்டு
பிராணன் போகும் சமயம் நாய் குலைக்கும்
யமன் -நாய் -தர்ம ராஜன் நாயாக வந்த கதை உண்டே
தனக்கு அந்தரங்கர் இடம் மேன்மை சொல்லாமல் தாழ்மை சொல்கிறான் தவிர ஒண்ணாமை யாலே

அபி வீஷயே -நாலு இரண்டு ஓலை கொடுத்து பார்த்த பார்வையாலே -உப சர்க்கம் வியாக்யானம் அருளி
தான் சொல்வதை மீறும்  உரிமை அதிகாரம் அந்தரங்கருக்கு உண்டே

உறைக்கப் பார்த்தான்  -சொல்லுவது கார்ய கரமாக பார்த்து
திறம்பேன்மின் கண்டீர் -மீறாமல் -ஆழ்வார்
யமனோ அன்றோ சொல்கிறான் –
இவர்களுக்கு அவன் மார்வு தட்டி வருவான் –
வேறு சிலருக்கு அஞ்ச வேண்டி -இருக்க நீர் ஏவுவது என்ன
பிரபு -எனக்கு அடைத்த விஷயத்தில் குறை இல்லை

கூவிச்  செவிக்கு கர்ண மூலே
ராஜ மகிஷி -அர்த்தம்
அவன் தமர் –நமன் தமரால் ஆராயப்படார்
அரவணை மேல் பேராயர் ஆட்பட்டார் அவர் பேர் வைத்த -அதுக்கு பயந்து -ஆராயப்பட்டு அறியார்
அவர்கள் தங்கள் -இடம் சொல்லிக் கொள்ளும் வார்த்தைகண்டீர் –
எம் கோன்-
யமன் சொன்ன வார்த்தை முதலில்
மாறு செய்த வாள் அரக்கர் –வீரனார் -நமன் கூறு செய்து -குற்றம் என்ன வல்லனே
ஐதிகம் -பட்டர் -ஒரு திரு வேட்டையில் பார் வேட்டை -பரி வேட்டை உத்சவம்
விஜய தசமி
திரு ஊற்றம் கரை ஊரல் உத்சவம்
ஈக்காடு தாங்கல் முன்பு தோண்டி நீர் -உள்ளே இறக்கி நீரில் ஏழப் பண்ணி
பேரோலக்கமாய் இருக்க பகவத் அனுபவம் யார் குற்றம் ஆராய்வார்
கர்த்தவ்யம் தாமதித்து பண்ணினால் தண்டிக்க மாட்டான்
நாட்டு கணக்கு -அரசன் செய்யா நின்றாள்
அந்தரங்கன் பெயரை வாசிக்க அது கிடக்க அடுத்தவனை வர சொல்லி
பின்னை  அந்த பேர் எடுத்து வாசிக்க மாட்டாரே கணக்கன்
உனக்காகி தொண்டு பட்ட அடியேனை வினைகள் நலியாமை நம்பி –

வள்ளலே உன் தமக்கு நமன் தமர் கள்ளர் போலே விழுக்க
இருவர் ஒரு வழி போக மாட்டார்
கோலாடி குறுகப் பெறாதடவரை தோள்  சாரங்க வில் சேவகனே
வாணன் பட்டது படுதல் -சக்கர பாணி
ராவணன் பட்ட படுதல் -சாரங்க வில் சேவகனே
நீண்டான் குறளாய்-வேண்டாமை -வினவப் பெறுவார் -அவசியம் இல்லை
கோயில் கட்டணம் படுக்கை பற்று அந்தரங்கர் பார்க்க மாட்டார்கள்

ராஜ பத்னி இடம் ஊர் கணக்கன் ஆராய மாட்டார்
செய்தாரேல் நன்று செய்தார் என்பவன்
ஆவலிப்புடைமை கண்டாய்
உங்களை நியமிக்கப் புகுந்த என்னை போலே இல்லை என்னை நியமிப்பவன்
மமாபி விஷ்ணு -என்னையும் நியமிப்பவன் எங்கும் வியாபித்து
உங்களை நான் நியமிக்க இந்த ஓலக்கத்தில்
அவன் எங்கும் உளன்
கேசவா சொல்லி இடரஎல்லாம் கெடும்
அந்தரங்கர் ஆவதால்
நாயகன் -அவத்த பேர் இடும் -கேசவன் பேர் இட்டு -கேசவன் தாய் தந்தை  நரகம் புக
முதல் அடி இன்று கிட்டவோ
தோஷம் ஒன்றும் இல்லாமல் -பாரத பிரமாணம் துராச்சாரமாக இருந்தாலும்
ஊன காரகர்கள் ஏலும்
சாவது பிறப்பது முன்பு எல்லாம்
தோஷங்கள் உண்டாக இருக்க
ஜந்தும் -பரமாத்மாவா பிரபாவம் இவன்பற்றியவரை ஆராய்ந்து

கில்லார் -மாட்டார்கள்
குறுக மாட்டார்கள்
ஏறிய நெருப்பில் கிட்டுவார் உண்டோ
நியாமகன் வார்த்தை
தம் தாம் வார்த்தை உண்டே
சாள கிராமம் யாத்ரை முதலில் ஸ்வாமி
போனி குதிரை சவாரி ஒத்தை அடி பாதை
தனது உயிர் பற்றி அதுக்கு விசாரம் உண்டே ஜாக்கிரதையாக இருக்கும்

விட முடை அரவு பிராப்யம்
முகம் கொள்ள
செடியில் முல்லை கட்டி -அபகரிக்க முடியாமல்
அற்புதமான வஸ்து இருக்க
விரோதி கிட்டினால் விஷ அக்னி கக்கி தாழாமல் மாய்வார்
மது கைடபர்
அரவு மென்மை குளிர்த்தி நாற்றம்
பர்யங்க விதியை
பாதேனே-துகைத்து ஏறலாம் படி

சுரும்பு அலற்றும் வண்டு
சாம கான முக்தர்
தடமுடை வயல் விரஜை உத்யானங்கள் அங்கு போலே
கலங்கா பெரு நகர்
அனந்தபுர நகர்
இன்றே புகுதும்

———————————————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading