தீ வினைகள் போகைக்கு சொன்ன
திருப் பெயர் தானே -கேசவா என்ன –
ஆயிரம் வகைகளாய் பாது காவலாய் இருக்கும்
என்கிறார் –
————————————————————————————————————–
இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே
———————————————————————————————————————
இன்று போய்ப் புகுதிராகில் –
போவோம் என்ற இச்சை பிறந்த இன்றே சென்று சேர்வீர்களே யாகில் –
அதிகாரி ஆவதற்கு மற்றைய விஷயங்களில் வைராக்கியம் தொடக்கமானவை வேண்டாவோ –
இச்சை மாத்ரம் போதியதாமோ -என்னில் –
யதஹரேவ விரஜேத் ததஹரேவ பிரவ்ரஜென்-ஜாபாலி ஸ்ம்ருதி –
எவன்வைராக்யம் உள்ளவன் ஆகிறானோ அன்றே துறவறத்தை மேற்கொள்ள வேண்டும் -என்கிறபடியே
அவை வேண்டுவன ஒரு சிலர் மேற்கொள்ள கூடியவையான
விஷயங்களுக்கு –
எல்லாரும் மேற்கொள்ளக் கூடியதாய்
சம்பந்தமும் உள்ளதுமாய்
முன்பே இவனை விரும்பி இவனது விருப்பத்தை பார்த்து இருக்கும் விஷயத்துக்கு தகுதியாக
அதிகாரி யாகும் தன்மையை இவனால் சம்பாதிக்க முடியாமையாலும்
ஆள் பார்த்து உழி தருமவன் -நான் முகன் திருவந்தாதி -60 ஆகையாலும்
ஆனய ஏனம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்ய அபயம் மயா
விபீஷநோவா சுக்ரீவ யதிவா ராவண ஸ்வயம் -யுத்தம் -18–84
யதிவா -விபீஷணன் என்ற பெயராய் ராவணனே இருந்தான் என்று மீளாதேயுங்கோள் என்றான் இறே –
ஸ்வயம் –
அது என்-அங்கு நின்றும் வந்தான் ஒருவனைக் கைக் கொண்டதாக அமையாதோ -என்ன வேண்டா
குறைவாளர்க்கு அன்றோ நம்மால் கார்யம் உள்ளது –
அது உள்ளது இராவனனுக்கே அன்றோ –
விபீஷணச்து தர்மாத்மா ததுராஷச சேஷ்டிதர் – ஆரண்யம் -17-24-என்கிறபடியே
தனக்கு என்ன ஒரு கைம்முதலும் உள்ளவன் ஆகையாலே
நாளை வரவும் ஆம் –
அரைக்கணம் கிட்டா விடில் நாசமாக இருக்கிறது அந்த இராவணனுக்கே அன்றோ
ஆனபின்பு அவனை அன்றோ முற்பட கைக் கொள்ள வேண்டுவது
இனித் தான் இவனைக் கைக் கொண்டால் இவனும் இவன் தன்னோடு வந்த நால்வரும் ஆகப் போம்
இராவணனைக் கைக் கொண்டால் துறுப்புக் கூடாக கைக் கொண்டது ஆகலாம்
மகா ராஜர் ஒருவரையும் அங்கீ கரிக்க வானர சாதியாக வாழ்ந்து போனால் போலே
எழுமையும் ஏதம் சாரா-
ஒரு காலமும் பொல்லாங்கு வந்து கிட்டாது –
சாரா -என்றதனால்
அதற்கு அவனும் தானும் நினைப்பிட வேண்டா -என்றபடி –
சும்மெனாதே கை விட்டு ஓடி தூறுகள் பாய்ந்தனவே -பெரியாழ்வார் திருமொழி -5-4-3-என்கிறபடியே
நாம் இவ்விடத்தில் இருப்பதற்கு உரியோம் அல்லோம் -என்று தன்னடையே வந்து கிட்டாது –
இராஜ குல சம்பந்தத்தாலே விட்டு ஓடிப் போம் –
வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால் -ஆன் ஈன்ற
கன்று உயரத் தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வான் துயரை ஆ ஆ மருங்கி -பெரிய திருவந்தாதி -54
என்ற திருப் பாசுரம் நினைவு கூர்க
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை-
ஏதம் சார்ந்தாலும்
சென்று சேர வேண்டும்படி காணும் ஊரின் செல்வமும் இனிமையும் –
மலைகளைப் புடைபடத் தொளைத்து நெருங்க வைத்தால் போலே இருக்கிற மாடங்களும்
அதன் அருகே அம்மாடங்களுக்கு நிழல் செய்தால் போலே இருக்கிற குருந்து
அதனோடு சேர்ந்த செருந்தி புன்னை –
அன்றிக்கே
சேர் -என்பதற்கு அம் மரங்கள் ஒன்றோடு ஓன்று சேர்ந்து இருக்கின்றன என்றும் பொருள் கொள்ளலாம்
மன்றலர் பொழில் –
ஊர் சுற்றிலே அலர்ந்து கிடக்கும் ஆயிற்று பொழில்கள்
அன்றிக்கே
மன்று -என்று மன்றலாய்
அலர்தல் -என்று பரம்புகையாய்
வாசனை பரம்பா நின்றுள்ள சோலை -என்னுதலுமாம்-
இப்பொருளில் மன்றல் -என்னும் சொல் மன்று -என்று விகாரப் பட்டு கிடக்கின்றது –
குன்று சேர் மாடம் –
பிள்ளை திரு நறையூர் அரையரும் பட்டரும் உள்ளே புக்கு
வலம் வரா நிற்க
நான் சேவித்துப் போந்தேன் –
அல்லாதார் எல்லாரும் விரைந்து சடக்கென வாரா நிற்க
இவர்கள் திரு மாளிகைகளையும் திரு கோபுரங்களையும்
கண்களாலே பருகுவாரைப் போலே பார்த்துக் கொண்டு வருகிறபடியைக் கண்டு
அல்லாதார்க்கும் இவர்களுக்கும் செயல் ஒத்து இருக்கச் செய்தே இவர்களான வாசி இருந்தபடி என் -என்று இருந்தேன் -என்று நஞ்சீயர் அருளிச் செய்வர் –
இனி -சேர் செருந்தி -என்பதற்கு
மரங்கள் ஒன்றோடு ஓன்று ஒத்து இருக்கின்றன -என்னலுமாம் –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் துல்ய அபிஜன லஷணாம்
ராகவ அர்ஹதி வைதேஹிம் தம் ச இயம் அஸி தேஷணா-சுந்தர -16-5-
என்னுமாறு போலே ஆயிற்று -என்றபடி –
மேல் நித்ய சூரிகளை சொல்லக் கடவதாய் இருக்க
இங்கே தாவரங்களைச் சொல்லுகிறது என் -என்ன
உகந்து அருளின நிலங்களிலே மேன் மக்களோடு தாவரங்களோடு வாசி இல்லை என்று இருக்கும் உத்தேச்ய புத்தியாலே
நித்ய சூரிகளுக்கு ஆனால் அவ்வருகு போக நினைவு உண்டாகைக்கு தகுதி உண்டு -நினையார்கள் இத்தனை –
ஞானத்தின் கார்யமான அன்பின் மிகுதியாலே நினைக்கைக்கும் தகுதி உண்டே அன்றோ
வேறு ஒரு இடத்தில் போக நினைக்கைக்கு தகுதி இல்லை அன்றோ இவற்றுக்கு –
பிள்ளை ஜனநாத ப்ரஹ்மராயர் திரு முடிக் குறையிலே மரம் வெட்டுவியா நிற்க
எம்பார் அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது –
தாயார் பெருமாள் கடாஷத்துக்கு உரியவை ஆகையாலே -நீரால் இன்றி -அவர்கள் திருவருளாலே வளர்ந்தவை
சுரவன் பாக்குகளை -உயர்ந்த பாக்குகளை -சிலவற்றை பட்டருக்கு கொடு வந்து கொடுக்க
அவற்றைக் கண்டு இவை இருந்தபடி என்
திருவருள் கமுகினின்றும் வந்தவையோ -என்று அருளிச் செய்தாராம்
நீரால் வளர்ந்தவை அன்றே
அவனுடைய திருவருள் பார்வையாலே வளர்ந்தவை அன்றோ –
அனந்த புர நகர் மாயன் –
ஸ்ரீ வைகுண்டத்தை விட்டு
தாழ்ந்தார்க்கு முகம் கொடுக்கலாம் என்னும் அதனாலே திரு வனந்த புரத்தை விட மாட்டாதே நிற்கிற
சீல குணத்தின் மிகுதியைச் சொல்லுகிறது –
நாமம்ஒன்றும் ஓர் ஆயிரமாம் –
ஒரு திருப் பெயர் தானே விரோதிகளைப் போக்கி காப்பாற்றும் என்னும் இடம் முன் பாசுரத்தில் சொல்லிற்றே அன்றோ
அப்படியே ஆயிரம் படி பாதுகாவலாய் இருக்கிற ஆயிரம் திருப் பெயர்களை உடையவன் –
உள்ளுவார்க்கும் –
உத்தேச்யமான பொருள் குறைவற்று இருந்தது –
இனி நினைப்பாரே அன்றோ தேட்டம்
உள்ளுவாருக்கு
ஸ்ரீ வைகுண்டத்திலே நித்ய சூரிகள் ஓலக்கம் கொடுக்க
அவர்கள் நடுவே இருக்கக் கூடிய சர்வேஸ்வரன்
தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்கலாம் என்று -இந்நகரை விரும்பி
வசிக்கிற நீர்மையின் ஏற்றத்தை நினைக்க வல்லவருக்கு –
உம்பரூரே-
திருப் பெயர்களை நினைப்பார்க்கு
அவ்விடம் தானே உம்பரூர் ஆகும்
அன்றிக்கே
உள்ளுவார் பெருமிடம் உம்பர் ஊர் -என்னவுமாம் –
அவ் உம்பர் ஊர் தானும் நம்பால் விரும்பப் படுவதும் அவன் விடாதே வசிப்பதனால் அன்றோ
அவனே தான் இவ்விடத்தே வசியா நின்றால்
பின்னை இவ்விடமே உத்தேச்யமாக தட்டு இல்லை அன்றோ –
ஆயிரம் பிரகாரமாக
நாமம் ஓன்று ஓர் ஆயிரமாம்
உள்ளுவாருக்கு உம்பர் ஊரே
எழுமையும் ஏதம் சாரா
உடனே போக வேண்டும்
இச்சை பிறந்த இன்றே
அதி கார சம்பத் இதர விரக்தி
மால் பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட்டு
பக்தி யோக நிஷ்டர்
சர்வாதிகாரமம் முன்பே இச்சித்து இசைவு மாதரம் கொண்டு அருளுவான்
ஆநு கூல்யச்ய சங்கல்பம் -செய்கிறேன் நினைக்கவே போதுமே
உயர்ந்த விஷயம் -அநு ரூபமாக தகுதி சம்பாதிக்க முடியாதே
தகுதி இவனால் சம்பாதிக்க முடியாதே
ஆள் பார்த்து உழி தருகின்றான்
எதி வா ராவனச்ய
விபீஷணன் பெயராய் ராவணன் தானே வந்தாலும்
ஒருவனைக் கை கொண்டால்
குறைவாளர் இடம் நம் பக்கல் அபேஷை
ராவணன் தான் தோஷம் உள்ளவன்
விபீஷணன் தர்மாத்மா
இச்சை உடையவனாய் வந்து இருந்தான் ஆகில்
கை முதல் இல்லாதவன்
வாளேறு தேளேறு
கைவல்யார்த்தி ஆபத்து அதிகம் திருப்பல்லாண்டு
இனி இவனைக் கை கொண்டால் நால்வர்
அவனைக் கொண்டால் துருப்புக் கூடாக கை கொண்டது
மகா ராஜர் ஒருவனை அங்கீ கரிக்க வானர ஜாதி வாழ்ந்தே
இன்று புகுந்தால் சாரா
அவன் நினைப்பும் வேண்டாம் தானே
சும்மனாதே கை விட்டு ஓடி
தாங்களே ஓடி போகும்
ராஜ குல சம்பந்தத்தால்
வானோ கானோ ஒருன்கிற்றோ கண்டிலமால்
ஏதம் சார்ந்தாலும் ஐஸ்வர்யம்
மாடங்கள் மலை ஓட்டை போட்டு
நிழல் செய்தால் போலே குருந்தி செருந்தி புன்னை
அலர்ந்த பொழில்
மன்று பரிமளம்
மாடங்கள் -வர்ணிப்பது
அவன் விபூதி
ஐதிகம்
சேவித்து போனேன்
பட்டர் பிள்ளை திரு நறையூர் அரையர்
அல்லாதார் கடும் குதிரை போலே கடனுக்கு
திரு மாளிகை திரு கோபுரம் கண்ணாலே பருகி
வாசி
நஞ்சீயர் அருளிச் செய்வர்
செர்செருந்தி ராகவன் வைதேகி
நித்ய சூரி
அமரர் கோன் அர்ச்சிக்கின்று மேலே
மரம் செடி கொடிகள் நித்யர் விட உயர்ந்தவை
ஸ்தாவரங்கள் வாசி இல்லை
நித்யர் -யோக்யதை உண்டு
வேறு ஓன்று நினைக்க பிராப்தி இல்லை
சைதின்யம் உண்டே
போகலாம்
அந்தரங்கமான தோட்டங்கள் எம்பார் வார்த்தை நினைப்பது
மானே நோக்கிலே கண்டு கொள்வது
மது மல்லிகை கமழும் 5-7-
ஆச்சான் திரு வாலி நாடு தாசர்
பாக்கு பட்டர் இடம் கொடுக்க
திருவருள் கமுகு -பிராட்டி எம்பெருமான் வளர்த்த கமுகு
நீராலே வளர்ந்தவை இல்லை
மாயன் -சீலன்
தாழ்ந்தாருக்கு முகம் கொடுக்க
ஒன்றே விரோதியை போக்கும்
ஆயிரம் பிரகாரம் ஆயிரம் நாமம் உடையவன்
அனுசந்திக்க
உள்ளுவாருக்கு
அவர்கள் நடுவே இருப்பவன்
நமக்காக
உம்பர் உஊர்
அவ்விடம்
வைகுந்தம் ஆகும் தம்மூர்
பெரும் இடம்
அவ்விடம் உத்தேச்யம் விடாதே வர்த்திப்பதால்
தரமி ஐக்கியம் உண்டே
——————————————————————————————————————————————————
48
Leave a Reply