திரள இருக்கிற நாரைக் குழாங்கள்
தன்னை முடிப்பதற்கு
ஆலோசிக்கின்றனவாய்க் கொண்டு
நான் முடிந்தேன் –
இனி நீங்கள் திரண்டு பயன் என் –
என்கிறாள் –
————————————————————————————————————————————————–
எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே
————————————————————————————————————————————–
எழ நண்ணி-
போக்கிலே ஒருப்பட்டு –
நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம் –
கடலைக் குளப் படியிலே மடுத்தால் போலே
தன்னை இலக்காக்கி –
இத்தலையை வெறும் தரை ஆக்கி
தன்னைக் கொண்டு அகன்றான் –
நாமும் அயர்வறும் அமரர்கள் அதிபதியோடே ஒரு மிடறு ஆனோம் –
நித்ய சூரிகளும் அவனுமாய் இருந்து நம்மை முடிக்க எண்ணின படியே
நாமும் இசைந்தும் –
அவன் முடிக்க நினைக்க
நாம் பிழைக்க எண்ணி
இடக்கைப்புரி முறுக்குகை தவிர்ந்து -மாறுபட்ட கார்யத்தை செய்யாமல் –
நாமும் முடிகையிலே துணிந்தோம்
நித்ய சூரிகளும் அவன் நினைவினையே பின் பற்றுமவர்கள் ஆகையால்
அவன் கருத்தே தங்கட்குமாக இருப்பார்கள் அன்றோ –
பழன நல் நாரைக் குழாங்கள் காள் –
நீர் நிலங்களில் வாழ்வனவாய்
தொடங்கின கார்யம் முடிக்க வல்ல ஆற்றலை உடையவையான நாரைக் குழாங்கள் காள் –
பயின்று என் இனி –
இனி நீங்கள் திரண்டு என்ன பயன் –
நான் அவன் கருத்தை பின் செல்லாத அன்று அன்றோ
உங்கள் ஆலோசனைக்கு பயன் உள்ளது
முதலிகள் திரள் திரளாய் இருந்து
பெருமாளையும் பிராட்டியையும் சேர்ப்பதற்கு
விரகு பார்த்தாப் போலே
இவை திரள் திரளாய் இருந்து அவனையும் தன்னையும் பிரிப்பதற்கு
விரகு பார்கின்றன -என்று இருக்கிறாள் –
அவன் வேண்டுவாரைச் சேர்க்கையும்
வேண்டாத்தாரை முடிக்கையும்
திர்யக்குகளுக்கு பணி என்று இருக்கும் அன்றோ
இராமாவதாரத்தில் வாசனையாலே
வான நாடன் -நாரைக் குழாங்கள் காள் -என்கையாலே
உபய விபூதியும் வேண்டுமோ -ஓர் அபலையை முடிக்கைக்கு
என்பது தோற்றுகிறது-
இழை நல்ல ஆக்கையும் –
ஆபரணத்தாலே அழகிதான சரீரம் -என்னுதல் –
ஆபரணம் பூண்டால் போலே இருக்கிற சிறந்த சரீரம் -என்னுதல் –
பையவே புயக்கு அற்றது –
முறையாக பசை அற்றது -என்னுதல்
முறையாகவே போகத் தொடங்கிற்று -என்னுதல்
புயத்தால் -போதல் ஆதல்
புயக்கு -என்று கவர்ச்சி ஆதல் –
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே –
ஈஸ்வர விபூதி நிறை வுற்று இருக்க வேண்டும் -என்கிறாள் -இதற்கு
தாம் தாம் முடிய நினைப்பார் -நாடு வாழ்க -என்பாரைப் போலே சொல்லுகிறாள் -என்று
ஆளவந்தார் அருளிச் செய்வர்
நான் பட்ட பாடு நாடு படாது ஒழிய வேண்டும் -என்று எம்பெருமானார் அருளிச் செய்வர்
நான் முடிய என் துக்கம் கண்டு நோவு படாதே உலகம் அடங்க
பிழைக்கும் அன்றோ -என்று பட்டர் அருளிச் செய்வர்-
நாரை குழாம்
முடிக்க மந்த்ரம்
முடிக்க யோஜனை-மந்த்ராலோசனம்-செய்கின்றன
ஏற்கனவே முடிந்தேன்
நாமும் வான நாடன் உடன் ஒன்றினோம் கலந்தோம்
சரீரமும் விட்டு போனதே
இன்பம் பெருகட்டும்
மூன்று அர்த்தம் -இதுக்கு காட்டி
கடலை குளப்படி ஆக்குவது போலே கலந்தான் பின்பு
இத்தலை வெறும் தரையாக்கி அகன்றான் –
ஒரு மிடறு ஆனோம்
நித்ய சூரிகள் உடன் முடிக்க வந்தார்கள்
நாமும் இசைந்தோம்
முடிக்க புக ஜீவிக்க முயல எதிர் முறி
இடக்கை புரி முறிக்கை –
நீ செய்வதை செய்ய கொள்
நித்ய சூரி சந்தஸ் அனுசரித்து இருப்பார்
நாரை -நீர் நிலங்களில் வர்த்திக்கும்
நல்ல நாரை தொடங்கின கார்யம் முடிக்க வல்ல
நான் அவன் கருத்தை பின் செல்லாமல் அன்றோ நீங்கள் மந்திர ஆலோசனை பிரயோஜனம்
முதலிகள் திரள் திரளாக சேர்த்து வைத்தால் போலே
இவை கூட்டமாக பிரிக்க
வேண்டுவாரை சேர்க்கையும் வேண்டாதாரை பிரிக்கவும் திர்யக் கார்யம்
உபய விபூதியும் வ என்டுமோ ஒரு அபலை முடிக்க வான நாடன் இவையும்
ஆபரணம் இளை
புயக்கு ஆகர்ச்ஜ்ஹ்ஹகம் கவர்ச்சி போக
இன்பம்
பிராணன் போனதே
அனைவரும் சுகமாக இருக்கட்டும் -சொல்ல காரணம்
மூன்று
ஈஸ்வர விபூதி சம்ருதம் -ஆகட்டும் நாடாவது சுபிஷமாக ஆகட்டும் ஆளவந்தார் நிர்வாஹம்
தான் பட்ட பாடு பிறர் பட வேண்டாம் -படாமல் சுபிஷம் எம்பெருமானார்
பட்டர் -நான் முடிந்தேன்
லோகம் துன்பம் பார்க்க வேண்டாமே
சுபிஷமாக இருக்கட்டுமே –
இப்படி மூன்று நிர்வாஹங்கள்
என் ஆர்த்தி காண வேண்டாமே -பட்டர்
——————————————————————————————————————————————————
Leave a Reply