நிகமத்தில்
இத் திருவாய்மொழி பாசுரங்கள் நெஞ்சில் படில்
ஆரேனுமாகிலும் தரியார்
என்கிறார்
—————————————————————————————————————————————————–
இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே
——————————————————————————————————————————-
இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த –
எங்கும் தழைத்த -இன்பம் தலைப் பெய்து-
உலகம் எல்லாம் வெள்ளம் இட்ட எல்லை இல்லாத ப்ரீதியை
உடையராய்க் கொண்டு –
பல் ஊழிக்குத்தன் புகழ் ஏத்தத் –
காலம் உள்ளதனையும் குணங்களை ஏத்தும்படி –
தனக்கு அருள் செய்த-
உலக மக்களில் வேறு பட்டவரான தமக்கு
மயர்வற மதிநலம் அருளிச் செய்தபடி –
மாயனைத் –
இவ் உலக மக்கள் நடுவே என்னை ஒருவனையும்
விசேட கடாஷம் செய்த
ஆச்சர்யத்தை உடையவனை –
அங்கன் அன்றிக்கே –
இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த
தன் புகழ் ஏத்த பல ஊழிக்கு தன்னை அருள் செய்த மாறனை
என்று கொண்டு கூட்டி
அனுபவிப்பார்க்கு எல்லை இல்லாத ஆனந்தத்தை விளைப்பதாய்
எங்கும் ஒக்க பரம்பின தன் கல்யாண குணங்களை
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும்
நான் அனுபவிக்கும்படி செய்த மாயன் –
என்று பொருள் கூறலுமாம் –
இவர் குணங்களை அனுபவிக்கும் அனுபவத்தால் தரித்தார் என்கிறது
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த -என்ற இதனைக் கொண்டே அன்றோ –
நித்ய சூரிகள் அனுபவத்தையும்
தமக்கு அவர்களோடு ஒத்த சம்பந்தத்தையும்
நினைத்து நோவு பட்டார் என்றும்
ஒக்க இழந்து இருக்கிற இவ் உலக மக்கள் படியைப் பார்த்தவாறே
இன் நோவு தான் பேறாய்த் தோற்றிற்று –
தென் குருகூர் சடகோபன் சொல் -ஆயிரத்துள் இவை –
சடகோபன் சொல் என்று படர்க்கையில் கூறுகையாலே
தனக்கு அருள் செய்த -என்று படர்க்கையில் கூறலாம் அன்றோ
பகவானாகிய வால்மீகி ருஷி -என்னுமாறு போலே –
ஒன்பதோடு ஒன்றுக்கும்-
மேல் ஒன்பது பாசுரங்களில் உண்டான துக்கம் சுகம் என்னும்படி
துக்கம் மிக்க பத்தாம் பாசுரத்தை உடைய இவை —
நினைப்பு ஊட்டுகிற பொருள்களாலே
பிழைப்பில் நசை யோடு நோவு பட்ட ஒன்பது பாசுரங்களோடு
பிழைப்பில் நசை அற்ற ஒரு பாசுரத்துக்கும் –
மூ வுலகும் உருகுமே –
ஆரேனும் ஆகிலும் தரியார்
என்னுடைய துக்க ஒலியைக் கேட்டு நாடு அழியலாகாது
என்றவர்க்கு
பின்னையும் நாட்டில் உள்ளார்க்கு நலிந்து வருந்துவதே பலித்து விட்டது
எங்கும் தழைத்த இன்பம் தலைப் பெய்து
பல் ஊழிக்கு தன் புகழ் ஏத்த
தென் குருகூர் சடகோபன்
தனக்கு அருள் செய்த மாயனை
சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும்
மூ வுலகும் உருகும் –
நிகமத்தில் –
ஆரேனும் ஆகிலும் தரியார் ஹிருதயத்தில் இந்த பாசுரார்தம் பதிந்தால்
இன்பம் தலைபெய்த்து
காலம் உள்ள அளவும் கல்யாண குணங்கள் ஏத்தும் படி
அருள் செய்தான்
தனக்கு -தேர்ந்து எடுத்து
மாயன்
விசேஷ கடாஷம் செய்த ஆசார்ய பூதன்
புகழுக்கு விசேஷணம்
எங்கும் ஒக்க பரவின
கால தத்வம்
குணா ஜ்ஞானத்தாலே தரித்தார் -ஆழ்வார்
தன் புகழ் ஏத்த தன்னைக் கொண்டு
நித்ய சூரிகள் அனுபவம் -பிராப்தி உண்டே துக்கம்
சம்சாரி கண்டதும் -தன் ஏற்றம் அறிந்து -ப்ரீதி ஆனார் தரித்தார்
சடகோபன் சொல் -தாம் மூன்றாம் மனுஷ்யர் போலே சொல்ல வைத்தான்
வாழ் மிக்கி பகவான் ரிஷி -அவரும் சொல்லும் படி விசேஷ கடாஷம்
பகவான் ரிஷி தானே சொல்லும் படி
ஒன்பதோடு ஒன்றும்
உண்டான வியசனம் சுகம் என்னும் படி பத்தாவது பாசுரத்தில்
பத்தாம் பாட்டில் துக்கம் அதிகம் –
மூ உலகும் உருகுமே
ஜீவனத்தில் -நசை -கொண்டு ஒன்பதிலும் ஹிம்சிக்காதீர் –
ஜீவனத்தில் நசை அற்ற பத்தாம் பாட்டு
யாரேனும் கேட்டால் தரியார்
ஆர்த்த நாதம் லோகம் அழிய வேண்டாம் -லோகம் சுபிஷமாக இருக்கட்டும்
நாட்டாருக்கு -சைதில்யமே பலிக்க
மூ உலகும் உருகுமே –
——————————————————————————————————————————————-
இன் உயர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று கண்ணால்
அன்று அவனைக் காண எண்ணி ஆன் பெண்ணாய்ப் -பின்னை அவன்
தன்னை நினைவிப்பவற்றால் தான் தளர்ந்த மாறன் அருள்
உன்னுமவர்க்கு உள்ளம் உருகும்
சாரம்
மா முனிகள்
நெஞ்சில் தோற்றி -மையார் கரும் கண்ணி மானச அனுபவம்
கண்ணால் காண எண்ணி
ஆண் பெண்ணாகி
அவன் தன்னை நினைவிப்பவை
தான் தளர்ந்த மாறன்
அருள் கொள்ளுவார்
உள்ளம் உருகும் –
———————————————————————————————————————————————
Leave a Reply