திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-5-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

தேனைக் குடித்து மயங்கிப் பாடுகின்ற
சில வண்டுகளையும் தும்பிகளையும் குறித்து
உங்கள் இசை எனக்கு பொறுக்க ஒண்ணாததாய் இருந்தது
நீங்கள் பாடாதே கொள்ளுங்கோள் –
என்கிறாள்

——————————————————————————————————————————————

பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்

——————————————————————————————————————————————-

பண்புடை வண்டொடு தும்பிகாள்-
நீர்மை உடைய வண்டொடு கூடின தும்பிகாள் –

பண் மிழற்றேன்மின் –
பண் மிக்க -ஆளத்தி வையாதே கொள்ளுங்கோள் -ஆளத்தி -ஆலாபம்
பண்புரை -என்ற பாடமான போது
பண்பான உரையாய் -முரலுதலைச் சொல்லுகிறது –
அன்றிக்கே
பண்ணை முரலா நின்ற -என்றுமாம் –

புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல் –
முன்னரே மற்றயவற்றின் குரல்களாலே புண் பட்டு அன்றோ இருக்கிறது
அதிலே வேலைக் கொடு குத்தினாப் போலே இரா நின்றது உங்கள் குரல் –
எண்ணிலா அரும் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தில் எறி வேல் பாய்ந்த
புண்ணிலாம் பெரும் புழையில் கனல் நுழைந்தால் எனச் செவியில் புகுதலோடும் -கம்பர் -பால -கையடைப் படலம்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெரும் கண்ணன் –
குளிர்ந்து பெரிய நீரை உடைய பொய்கையிலே
தாமரைப் பூ மலர்ந்தால் போலேயாய்
அவ்வளவு அன்றிக்கே
பெரிய கண்களை உடைய கிருஷ்ணன் –

நம் ஆவி உண்டு எழ நண்ணினான் –
அவ்வடிவு அழகைக் காட்டி
என்னை முடித்து
பிரிந்து போனான் –

மது பான -வண்டுகள் தும்பிகள்
த்வனி சகிக்க முடியாமல்
தண் பெரும் நீர் தடம் தாமரை கம்பீர நாள
இன் குரல்
நீர்மை உடைய வண்டு உடன் கூடிய தும்பி
பான் மிக்க ஆலத்தி வையாமல்
பண்புடை -வண்டு -பண்பான உரையாய் முரளுகை
பண்பு உடை
பண்பு உரை
பண புரை
மூன்றும்
பண்புரை
ஆசார்ய பண்புரை வேதம் –
மா முனிகள் இப்படியும் கொள்ளலாம்
நாயனார் -அருளியது இத்தை கொண்டு
பண்புரைந்த வேதம் சாம வேதம்
வெந்த புண் -மற்றவை த்வனியால் புண் பட்ட நெஞ்சு
வேலை கொண்டு உங்கள் த்வனி
பொய்கை -பெரிய கண்ணன் -தாமரை விட
ஆவி உண்டு வடிவு அழகை காட்டி பிரிந்தான் –

———————————————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading