சில குயில்களைக் குறித்து
திருப் பெயர்களைச் சொல்ல வேண்டா -என்று நான் இரக்க
அதனையே சொல்லி நலிந்தீர் கோள்-
உங்களை வளர்த்த தனால் வந்த பயன் பெற்றேன் –
என்கிறாள் –
———————————————————————————————————————————
உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –
————————————————————————————————————————————
உயிர்க்கு அது –
தோல் புரையே போமது அன்று -அது -என்கிறாள் –
தன வாயாலே சொல்ல மாட்டாமையாலே –
காலன் என்று –
நாளிகை அன்றிக்கே முடிக்கும் என்று –
உம்மை –
என் கார்யத்தை இரந்து செய்கின்ற உங்களை –
யான் –
மறுக்க ஒண்ணா தவாறு –
உங்களுக்கு தாயான நான் –
இரந்தேற்கு-
என் செல்லாமையாலே புகல் புகுந்த எனக்கு –
தாயாக இருந்தும் உங்களை நியமிக்க வில்லை -என்கிறாள் –
நீர் –
என்னால் ஏவப்படுகின்ற நீங்கள் –
புகல் புகுந்தவர்களை கொன்றவர்கள் ஆனீர் கோள் –
குயிற் பைதல் காள் –
உங்கள் இளமைப் பருவம் என் உயிரோடே போயிற்று
அன்றிக்கே
பருவம் நிரம்பா விட்டாலும் தாய் என்ற வேறுபாட்டை அறிய வேண்டாவோ -என்னுதல்
நாங்கள் செய்தது என் -என்ன –
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் –
மாற்றாலே தீராதபடி நெஞ்சினைப் புண் படுத்தி வைக்கும்
கிருஷ்ணன் திருப் பெயர்களையே
விளன்காதவாறு சொல்லி முடித்தீர் கோள்
மிருத சஞ்சீவனமான இராம குணங்களையும் ஒரு கால்
சொன்னால் ஆகாதோ என்பாள் -கண்ணன் நாமமே -என்கிறாள் –
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல் பயிற்றிய நல் வளம் ஊட்டினீர்-
தயிரும் பழம் சோறும்
பாலும் சுடு சோறும்
அவ்வவ காலங்களிலே தந்து –
திருப் பெயர்களைக் கற்ப்பித்த அதற்கு
கைம்மாறு செய்தீர் கோள் –
நல் வளம் ஊட்டினீர் –
நல்ல சம்பத்தை அனுபவித்தீர் கோள் -என்றது
நான் காலம் தோறும் உங்களுக்கு வேண்டிய உணவு வகைகளைக் கொடுத்துப் போந்தேன்
நீங்களும் இவ்விடங்களிலே வந்து நலிந்து போந்தீர்கள் -என்றபடி –
இக் குயில் களுக்கு அன்ன தோஷம் பலித்து விட்டதோ -என்கிறாள் –
பண்பு உடையீரே –
சம்பந்தமும் அடக்கமும் கிடக்க
சால நீர்மை உடையீராய் இருந்தீர் கோள்
காப்பாற்றுவார்கள் விஷயத்தில்
அருள் இல்லாதவர்களாய் இருந்தீர் கோள்
குயில்கள் திரு நாமம் சொல்லி நலிய
வளர்த்த பிரயோஜனம் பெற்றேனே –
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் தந்து வளர்த்தேன்
அது -தோல் புரையே போம் -உயிர் க்கு அது காலன் –
தன வாயால் சொல்ல மாட்டாமையால் அது -கண்ணன் நாமம் சொல்ல
வாயில் நுழையாத வார்த்தை சொல்ல தெரியாத மாணவன் -பூ புஷ்பம் அது போலவும் சொல்லலாம் -அது காலன் -என்கிறாள்
காலன் நலிகை அன்றிக்கே பிராணம் கொண்டு மேலும் ஹிம்சிப்பான்
நியமித்தேனோ
சரணம் புகுந்தேன் பிரார்த்தித்தேன்
நீர் நியாம்யர் சரணாகத காதுகர் ஆனீர்கள்
தாயார் குழந்தை ப்ரீதி கூட இல்லையே
பைதலாக இருந்தும் தாய் வாசி அறிய வேண்டாமா
கண்ணன் திருநாமம் அவ்யக்தமாக
தீரா மாற்றம் –
பருவம் நிரம்பாமை தாய் வாசி அறியாத
தாய்க்கும் பேய்க்கும் வாசி அறிந்த கிருஷ்ணன் போலே இல்லையே
மாற்றாதே தீராத பிரத்யு ஔஷதம் இல்லாத
மிருத்யு சஞ்சீவனமான ராம நாமம் சொல்ல கூடாதோ
பரா ரீதி பரார்த்தி ராம
ராமாவதார திரு நாமங்கள் மிருத சஞ்சீவனம் ராம நாமம் பட்டர்
சீதை -வேணி ராம நாமம் காத்தது
பரதன் அக்னி பிரவேசம் -அங்கும் காக்க
நம் ஆழ்வார் உயிர் க்கு காலன் என்கிறார்
குயில் மாற்றி சொல்ல
தயிர் பழம் சோறு
அவ்வவ காலங்களில் தந்து
திரு நாமம் கற்பித்து
நல்ல சம்பத்து கொடுத்தீர்களே
காலம் பார்த்து வளர்த்தேன்
அன்ன தோஷம் பலித்ததோ
காக்கைக்கு வைத்த பலி தோஷம் உண்டதாம்
கயில் காக்கை ஒரே கூட்டு வளர
கூக்குரல் வைத்தே காக்காய் அறியும்
ஸ்வா பதேசம்
முட்டாள் பண்டிதர் -வசந்த காலம் அறிய முடியும்
அன்ன தோஷம் –
நான் இட்ட சோறு விஷமாக விட்டதோ
பண்பு உடையீர்
பிராப்தி ஜனனி பவ்யத்தை யாகவும் இருந்தேன்
சால நீர்மை
பண்பு தானா –
————————————————————————————————————————————————–
Leave a Reply