திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-5-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

அவன் வடிவிற்கு போலியான
மேகங்களின் வரிசையைக் கண்டு
உங்கள் வடிவினைக் காட்டி -என்னை முடிக்காதீர்கள் –
என்கிறாள்

——————————————————————————————————————————–

கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே

———————————————————————————————————————————-

கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய் கண்ணன் —
ஒரே பொருள் என்னும்படி கலந்து
பிரிந்த பின்பு அவனுடைய உறுப்புக்களின் வனப்பு இருந்தபடி –
அன்றிக்கே
இவளுடைய கல்வியால் வந்த வனப்பு -என்னுதல் –
கோலத் தாமரைக் கண் செவ்வாய் –
அழகிய தாமரை போலே இருக்கிற திருக் கண்களையும்
சிவந்த அதரத்தையும் உடையவனாய் –

வாட்டமில் என் கரு மாணிக்கம்-
கலந்த பொழுது உண்டான செவ்வி
பிரிந்த காலத்திலும் தலைச் சாவி வெட்டி விடப் போகிறது
இல்லை காணும் –
அன்றிக்கே
இத்தலையை வெறும் தரை ஆக்கின பின்பு இரட்டித்த படி என்னுதல் –
பிரிந்த பின்பும் மறக்க ஒண்ணாதபடி
நலிகிற நீல ரத்னம் போலே இருக்கிற திரு நிறத்தை உடையவனாய்

நைவதம் சரன் நமசகரன் ந கீடான் ந சரீச்ரூபான் -சுந்தர -36-12-
மேலே தங்கி இருக்கிற காட்டு ஈக்கள் கொசுக்கள் முதலான வற்றையும் ஓட்ட மாட்டார் -என்கிறபடியே
அவன் இருக்க
அரைக்கணம் தாழ்த்தான் என்று இவ்வார்த்தையைச் சொல்லுகிறாளே ஐயகோ –

கண்ணன் மாயன் போல்-
ஆச்சர்யத்தை உடையனான கிருஷ்ணனைப் போலே –
கலக்கிற போது காலைக் கையைப் பிடித்து
கலந்து பவ்யனாய் இருந்தான் -ஆதலின் -மாயன் கண்ணன் -என்கிறாள் –

கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் –
வளைத்த வில்லோடு கூடி மின்னுகின்ற மேகக் கூட்டங்காள்
கௌஸ்துபம் திரு மேனிக்கு ஒளியை உண்டாக்குமாறு போலே இரா நின்றது -மின்னல்

காட்டேன்மின் நும் உரு –
கூற்றுவனை ஒத்ததான உங்கள் வடிவைக் காட்டாதீர்கள் –
அவ்வடிவைக் கொண்டு அகல இருந்தவனோடே
உங்களோட்டு வேற்றுமை இல்லாது இருந்தது –

அது ஏன் என்னில்
என் உயிர்க்கு அது காலனே-
விரஹம் தின்று பண்டே
தற்பு -வலி -அற்ற என் உயிர்க்கு அது கூற்றுவனாக இருக்கின்றது –
குழாங்கள்காள் நும் உரு -என்று முன்னிலை ஆக்கினவள்
பின் அது என்று படர்க்கையிலே கூறுவது என் என்னில்
காண மாட்டாமையாலே
முகத்தை மாற வைத்து சொல்லுகிறாள்

போலியான மேக தொடர் கண்டு வடிவைக் காட்டி என்னை முடியாதே
கூட்டுண்டான் நீங்கினான்
கோல உருவு மாயம் போலே
காட்டேல் மின் உம உரு
என் உயிர் க்கு காலன் போலியாய் இருப்பதால்
ஏக தத்வம் என்று கலந்து
கோல தாமரைக் கண் செவ்வாய்
பிரிந்த பின்பு ஹிம்சை பண்ணினால் பிரகாசம்
இவள் ஓட்டை கல்வியால் வந்த சோபை
கலந்த போதை சொல்லி
விரகத்திலும் தலைச் சாவி வெட்டப் போவது இல்லை
எழுச்சி
பயிர் நுனிகள் அறுத்து பொகடுகை –
கலந்த ப்ரீதி -வளர்ந்தான் –செவ்வி மிக்கு –
இத்ததலையை வெறும் தரை ஆக்கின பின்பு இரட்டித்த படி இருந்தான் –
என் கரு மாணிக்கம் –
பிரிந்த பின்பும் மறக்க ஒண்ணாத படி நீல ரத்னம் போலே
அவன் அதிகம் துக்கம்
நைவ -உஊர்வதும் கடிப்பதும் அறியாத பெருமாள் நிலை
அரை ஷணம் தாழ்த்த இவ்வார்த்தை சொல்ல
கண்ணன் -ஆச்சர்ய பூதன்
கலந்த பொழுது கை கால் பிடித்து
மாயம் போல்
வளைத்த வில் போலே
கௌஸ்துபம் போலே மின்னல் பிரகாசிக்க
மின்னல் கூடிய மேகக் கூட்டங்கள்
மிருத்யு சத்ருசம்
அவன் வடிவைக் கொண்டு அகல நின்றவன் போலே நீங்களும்
அதே ஹிம்சை காட்ட
உயிர் க்கு காலன்
விரஹம் தின்று பண்டே
நும் உரு முன்னிலை
என் உயிர் க்கு அது காலன் -இது காலன் சொல்லாமல் படர்க்கை
காண மாட்டாமல் முகத்தை மாற வைத்து சொல்கிறாள்
அந்த ஷனத்திலும் மேகம் காண மாட்டாமையாலே
அப் பாஞ்ச ஜன்யம்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே போலே

———————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading