திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-5-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

தனது நிலையை அறியாதே
திருப் பெயரைச் சொல்லுகிற
கிளிப் பிள்ளையை குறித்து
என்னால் பொறுக்கக் கூடாத நிலையில் சொல்லவோ
உன்னை வளர்த்தது -என்று
திருப் பெயரை இப்பொழுது சொல்ல வேண்டா –
என்கிறாள் –

—————————————————————————————————————————-

நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்

——————————————————————————————————————————–

நன்கு எண்ணி –
திருப் பெயரைச் சொன்னால் பொறுக்கும் நிலை அறிந்து சொல்வதற்கும்
பொறுக்க முடியாத நிலையில் திருப் பெயரைச் சொல்லாது
இருத்தற்கும் அன்றோ உன்னை வளர்த்தது —

நான் வளர்த்த –
ஒரே மகளை உடையவளைப் போலே ஆயிற்று வளர்த்தது -கிளிப் பைதலே -என்கையாலே
நான் ஒன்றனை ஆதரித்தாலே போதியதாம் அன்றோ வேறுபடுகைக்கு
அவனும் கிளியைப் போன்று பவ்யனாய் அன்றோ இருந்தது –

சிறு கிளிப் பைதலே –
சிறுமை -பருவம்
பைதல் -வயதுக்கு தக்க பருவம் அன்றிக்கே இருத்தல்
உன் இளமைப் பருவம் அன்றோ நலிகைக்கு அடி –

இன் குரல்-
கூரிய வேல் -என்னுமா போலே கொடுமையிலே நோக்கு –

நீ மிழற்றேல் –
நிரம்பா மென் சொற்களால் என்னை முடிக்காதே
தாயைக் கொலை செய்வதற்கும் முயல்வார் உளரோ –

என் ஆர் உயிர்க் காகுத்தன் –
பிரிவில் தரித்து இருத்தல் அரிதாம் படி அன்றோ
கிட்டின போது கலந்தது
தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -என்றே அன்றோ இவர் இருப்பது –

நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் –
உன்னுடைய வாய் போலே இருக்கும் திரு வாயினை உடையவன் –
உபமானத்தை சொல்லி சேர்த்து விடும் அத்தனை ஒழிய
உபமேயத்தை பேச முடியாது –
கண்ணன் கை காலினன் –
உன் வாயினைப் போலே சிவந்த திருக் கண்களையும்
திருக் கைகளையும் திருவடிகளையும் -உடையவன் –

நின் பசுஞ்சாம நிறத்தன் –
உன்னுடைய குளிர்ந்த நீல நிறத்தை உடையவன் –
நீல நிறத்தை உடையதாய்
எரித்து இருக்கை அன்றிக்கே
குளிர்ந்து இருத்தலின் -பசுஞ்சாமம் -என்கிறாள் –
ஓர் உடம்பில் இத்தனை பகை தேடி வைக்கலாமா –

கூட்டு உண்டு நீங்கினான்-

கலந்து -என் தன்மையை அறிந்து வைத்து பிரிந்தான் –

அவன் கூட இருந்தால் அன்றோ உடன்படிகள் அனுகூலமாக இருப்பன –
தனி இருப்பில் நலிவார் -இராவணன் -முதலியோர் அல்லரோ –
அனுகூலரும் நலிவாரோ –

நான் வளர்த்த பைதல் கிளி பிள்ளை
அசஹ்யமான தசையில் திரு நாமம் சொல்லி
தன தசை அறியாமல் சொல்லவோ நான் உன்னை வளர்த்தது -கூட்டு உண்டு நீங்கினான்
ஆர் உயிர் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும்
கண்ணன் கண்களை உடையவன்
கை காலினன் உன்னுடையவை போலே
நின் பசும் சாமம் நிறத்தான் பச்சை மா மலை போல் மேனி
ஆனந்தம் கொடுக்கும் தசையில் சொல்ல
ஏக புத்திரன் போலே ப்ரீதி உடன் வளர்த்து
ஆதரித்து -அமையும் பிரிய
அவனும் ஹிம்சை
ப்ரீதி போலே அவன் இடம்
கிளி போலே பவ்யனாக
சிறு பைதல் -சின்ன -அதிப்ரசங்கிகமாக பசல் தனம் -அறிவில்லா பேச்சு -நலிக்கைக்கு அடி
இன் குரல் கூரிய வேல் போலே
நீ மிலற்றெல் நிரம்பா மென் சொல்
மாத்ரு வாதத்திலும் பிரவர்த்திப்பார் உண்டோ
வ்யதிரேகத்தில் தரிக்க முடியாமல்
வா போகு இன்னம் ஒரு கால் கண்டு போ –
எனக்கும் இப்படி இருப்பான் என்று நினைத்து
தயரதர்க்காகவெ ஆக்கி வைத்த -நான்காம் வேற்றுமை
செஷச்த்வே சதுர்த்தி -தாதர்த்தெ சதுர்த்தி
தயரதற்கு மகன் அன்றி மற்று இலேன் தஞ்சம் -காகுஸ்தன் –
வ்யதிரேகத்தில் சக்கரவர்த்தி தரிக்க வில்லையே
உன்னுடைய சிவந்த வாய்
உபமானம் சொல்லலாம்
கண்ணன் கை கால் சிவந்த அவயவங்கள்
குளிர்ந்த ஆகர்ஷமான நிறம்
பசும் சாமம் -குளிர்ந்து
ஓர் உடம்பிலே இத்தனை பகை தேடி வைக்கலாமோ
பகை contrast விரோதம் –
கூட்டுண்டு கலந்து
பிரகிருதி அறிந்து வைத்து பிரிந்தான்
அவன் தனி இருப்பில் நலிவார் ராவணன்
நீயும் ராவணன் கோஷ்டியா –

————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading