திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-5-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

தன் உடைமையாய் இருந்து
நலிகிற பூவைகளைக் குறித்து
அவன் தான் முடிக்கைக்கு நல்ல விரகு பார்த்தான் –
இனி உங்களுக்கு இங்கு விஷயம் இல்லை –
என்கிறாள் –

—————————————————————————————————————–

அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏ ழ் உலகும் கொண்ட
நம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்

——————————————————————————————————————–

அந்தரம் நின்று உழல்கின்ற –
உங்களுக்கு இங்கு நலிய பொருள் இன்றிக்கே இருக்க
நடுவே நின்று பயன் இல்லாமலே வருந்து கின்றீர்கள் -அத்தனை –

யானுடைப் பூவைகாள் –
என்னுடைய பூவைகாள் –
எல்லாருக்கும் பொதுவாய் இருப்பார் செய்வனவற்றை -குயில் அன்றில் – மயில் -நம் கண்ணன் -போல்வார்
சிலருக்கு உடைமையாய் இருப்பார் செய்யலாமோ –
நான் என் உடைமை என்று நினைக்க அமையுமே அன்றோ துன்புறுத்துகைக்கு -நம் திரு மார்பன் –
அவனும் என் உடையவன் ஆதலால் அன்றோ நலிந்தான் –

நும் திறத்து ஏதும் இடை இல்லை –
உங்களுக்கு என்னை நலிகைக்கு ஓர் இடம் இல்லை –
அன்றிக்கே
உங்கள் பாரிப்புக்கு என் பக்கல் ஓர் இடம் இல்லை -என்றுமாம்

குழறேன்மினோ –
எழுத்துக்கள் இன்றிக்கே இருக்கும் ரசமான சொற்களைக் காட்டி முடியாதே கொள்ளுங்கோள் –

அவன் தான் செய்வதற்கு ஒருப்பட்ட கார்யத்தில் நெகிழ நின்றான் ஆகில் அன்றோ
நீங்கள் இப்படி முதிர நிற்க வேண்டுவது –
அதற்கு உங்களுக்கு இடம் வைத்தானோ அவன் -என்கிறாள் மேல் –

இந்திர ஞாலங்கள் காட்டி –
கண்டார்க்கு விட ஒண்ணாத வடிவையும்
சீலத்தையும்
செயலையும் –
காட்டி
அன்றிக்கே –
இவை நிலை நில்லாமையாலே -பொய்கள் என்கிறாள் -என்னுதல் –
இந்திர ஞாலம் என்பதும் -பொய் -என்பதும் ஒரு பொருள் சொற்கள் –

இவ் ஏ ழ் உலகும் கொண்ட –
பிறர் உடைய பொருளைக் கவரப் புக்கால்
அவர்கட்கு ஒன்றும் இல்லாதபடி கவர்கின்றவன் –

நம் திரு மார்வன் –
காதலை உடையவன் என்பதால்-வந்த ஒரு பிரசித்தி யை எனக்குக் காட்டி -என்பார் -நம் -என்கிறார் –
பிராட்டியோடு பழகிற்றும் காதலை உடையவனாய் அன்று
அதனைக் காட்டி கண்டாரை அகப்படுத்திக் கொள்ளுகைக்காக
என்பார் -திரு மார்வன் -என்கிறார் –

நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான் –
சில பொய்களைப் பேசி பூமியைக் கொண்டால் போலே
நம்மோடு கலவியைச் செய்கிறான் என்று தோற்றும்படி
சில பொய்யான கார்யங்களை செய்து
பிரிதல் இவளை முடிக்கைக்கு உபாயம் என்று
நம்மை முடித்தற்கு நல் விரகு பார்த்தான் -என்னுதல் –
அன்றிக்கே –
உங்களுக்கு இங்கு இடம் இல்லை
நம்மை முடிக்கப் பார்த்த பார்வை அழகிதாகப் பார்த்தான்
என்று தன்னிலே நொந்து கொள்ளுகிறாள் -என்னுதல்
சர்வ சக்தி செய்வதாக ஒருப்பட்ட கார்யத்தில்
குறை கிடப்பதாய்
அதிலே நீங்களும் துணை புரிகின்றீர்களோ-

பூவைகளை குறித்து -அடுத்து -ஒரு வகை பறவை –

பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பிறந்தும் பேறு கிட்டாமையால்
ஆர்த்தி பெருக்க நினைத்து –
லௌகிக பதார்த்தங்கள் பாதகம் ஆக –
அவனை நினைவு ஊட்ட –
பூவைகள் -அவன் என்னை முடிக்க விரகு
தன்னுடைய பூவைகள் -கிளி -பந்து –
இவள் வளர்க்க – இருந்த இவற்றையே -இவளை முடிக்க -விரகு
குருகு குயில் இவை தோட்டத்தில் இருந்தவை –
உங்களுக்கு இங்கு விஷயம் இல்லை -என்கிறாள் –
இந்திர ஞாலம் -ஜாலம் –
சுதந்தரம் -ஸ்வா தந்த்ரம் பிரத்யம் சேர்த்து சுந்தர பாவன் -சமஸ்க்ருதம்
ஐநதிரிக்க –
இந்திர தனுஸ் வானவில் -வில் போலே தெரியும் –
பொய்யான வஸ்துக்கள் இந்திர ஞாலம்
ரஷிக்கும் போலே பாவனை
ஆவி உன்ன உபாயம்
அந்தரம் -நடுவே நின்று -விஷயம் நலிய இல்லை
இடை இல்லை
குழறுவது மழலை சொல்
சர்வ சாதாரணமாய் உள்ளார் செய்வதை
சொத்தான நீங்களே பண்ண லாமா
யானுடை பூவைகள்
யான் எனக்கு -என்று வைப்பதே பாதகம்
அவனை ஏன் கண்ணன் எம் பெருமான் சொல்வதால் ஹிம்சை
நீங்களும் யானுடை பூ நினைத்ததால் ஹிம்சிக்கிறீர்கள்
இடையாட்டம் -உங்கள் இடத்தில் -நலிய அவகாசம் இல்லை
இலை அகல -ஊன் அத்யாயம் –பாரிப்புக்கு -வார்த்தைகள்

உங்கள் பாரிப்புக்கு இங்கு விஷயம் இல்லை
பேச்சு காட்டி முடிக்க
அவன் தான் அதிகரிக்கும் கார்யம்
என் உயிர் கொள்ளை கொள்ள
தயக்கம் இருந்தால் உங்களுக்கு வேலை -உண்டு -அவகாசம் வைக்க வில்லை
கண்டாருக்கு -விட ஒண்ணாத வடிவு சீலம் செஷ்டிதம் காட்டி
ஏழு உலகம் கொண்ட
கொண்ட கோலம் -யாசகனாய் நின்ற சீலம்
நிலம் மாவலி மூவடி சேஷ்டிதம்
அடுத்த -ஷணம் வாமன வடிவு மாறி திரி விக்ரமன் வடிவு காட்டி
இந்திர ஞாலம் போலே
ஒன்றும் சேஷியாமல் அபகரிப்பான் ஏழு உலகும் கொண்டவன்
நம் திரு மார்பன் -பிராணியி ரசம் காட்டி
இதுவும் இந்திர ஞாலம் ஊடல் வார்த்தை
கண்டாரை அகப்படுத்திக் கொள்ள இப்படி ப்ரீதி பிராட்டி இடம் பழகி
உன்னை விட்டு பிரியேன் பிரிந்தால் தரியேன் சொல்லி -பிரிந்தான்
நம்மை முடிக்க வழி
சர்வ சக்தன் கார்யம் குறை இருந்தால் நீங்கள் சஹ கரிக்கலாம்
துவி பிரவர்த்த -நமக்கு வேலை இல்லையே
அழகால் பார்த்தான்
தன்னிலே நொந்து சொல்கிறாள்

———————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading