சில மயில்களைப் பார்த்து
நீங்கள் உச்சக் குரலிலே கூவி
என்னை நலியா நின்றீர் கோள்
என்கிறாள் –
—————————————————————————————————
கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேற் கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே
——————————————————————————————————-
கூக்குரல் கேட்டும்-
நீங்கள் கூவுகிற கூக்குரலைக் கேட்டு வைத்தும்
இவற்றின் ஒலி செல்லாத இடம் இல்லை -என்று இருக்கிறான் –
– நம் கண்ணன் –
ஆல மரத்தில் பேய் உண்டு என்னும் பிரசித்தி போலே காணும்
அடியார்க்கு -எளியவன் -என்னும் இது –
மாயன் –
ஆச்சர்யமான குணத்தை உடையவன் -என்றது
கலக்கும் சமயத்தில் மெய் போலே கார்யங்களைச் செய்ய வல்லவன் -என்றபடி –
வெளிப்படான் –
இவள் பிழையாள் -இந்த ஒலி துன்பம் தரும் என்று ஓடி வர வேண்டி இருக்க -தோற்றுகின்றிலன் –
அந்த ஆயர் பெண்களுக்கு மத்தியில் வந்து தோன்றினான் -என்னப் படுமவன் காண் –
ருஷியும் தோன்றினான் -என்றான் –
இவளும் வெளிப்படான் -என்கிறாள் –
அண்மையில் இருந்தும் –
மேற் கிளை கொள்ளேன் மின்-
மேல் கிளை -உச்சமான குரல்
உங்கள் இனத்துக்கு பொருத்தமாய்
காதலால் உண்டாகின்ற உச்சமான ஒலியை செய்யாதீர்கள்
இவள் ஈடுபட பட
ஒரு தானம் எழ வைத்து கூவா நின்றன
ஆதலின் -மேல் -என்கிறாள் –
நீரும் சேவலும் –
ஓன்று தொடங்கின கார்யத்தை துணையானதும் தொடக்கி
குறையும் கூட முடியா நின்றது –
கோழி காள்-
பெண் கொலை புரிதற்கு ஒரு கூட்டமாக
ஒருப்பட வேண்டுமோ
கோழி -என்கிறது மயிலை
நீங்கள் நலியாதே கொள்ளும் கோள் -என்னும் அளவும்
பார்த்து அன்றே நாங்கள் இருக்கிறது
எல்லா உறுப்புகளையும் கொள்ளை கொள்ள வந்த நாங்கள் தவிருவோமோ
தொடங்கின கார்யம் தலைக் கட்ட வேண்டுமே எங்களுக்கு
என்பது கருத்தாக –
அங்கனமாயின் பின்னே அங்கே சொல்லும் கோள் என்கிறாள் -மேல்
நமக்கு வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே –
என்னுடைய எல்லா உறுப்புகளும் அவன் பக்கலின-
அங்கே சென்று இவை கூவ –
அவனுக்கு தரிப்பு அரியதாய்
வந்து முகம் காட்டும் -என்னும் நினைவாலே சொல்லுகிறாள் –
அங்கே ஆகில் இப்பேச்சும் செயல்களும் கூடின படி என் -என்ன
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே –
துக்கத்தின் வாசனையாலே
ஆக்கையும் ஆவியும் நடுவே நின்று கிலேசப் படுகின்றன -இத்தனை
பிடித்து விட்ட கொம்பு போலே வாசனையே உள்ளது
நோவு பட வேண்டுவதற்கு உண்டு
நலியப் படுவதற்கு பொருள் இல்லை-
மயில்களை -குறித்து ‘உச்ச மாக கூவி நலிய
கண்ணன் மாயன் வெளிப்படான்
கூக்குரல் கேட்டும்
ஒ கத்தாதீர்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு அவன்
சர்வ அவயவங்களும் அவன் இடம்
நம் கண்ணன் -பவ்யன் என்ற பெயர் கொண்ட
வட யஷ பிரசித்தி -ஆலமரத்தில் பேய் உண்டு -சொல்வார்
இத்தால் பேர் மட்டும் கண்ணன் -பவ்யன்
பிரசித்தியெ
கள்ளிச் செடிக்கு மகா வருசம் பேர் வைத்தால் போலே
விபரீத லஷனை
அனுஷ்டானம் இல்லை -பேர் மட்டும் தான்
மாயன்
ஆச்சர்ய சீலன்
கலக்கும் பொழுது மெய் போலே பிரியில் தரியேன்
இப்பொழுது வெளிப்படான்
ஆவிர்பூதம் தாசாம் மத்யே சௌரி வந்து சேர்ந்தான்
அது போலே வெளிப்படுதல் ஆவிர்பவிக்க மாட்டான்
மேலான த்வனி உச்ச சப்தம்
ஈடு பட பட தானம் கூட்டி ஸ்தானம் கட்டை கூட்டி உச்ச ஸ்தானம்
நீரும் சேவலும் -ஓன்று தொடங்கி-அடுத்து மேலே கத்தி –
மாற்றி கத்தி
ஸ்திரீ வதம் பண்ண ஜாதியாக ஒருப்பட
நலியாதே
சர்வ அவயவங்களும் அபஹரித்து போக வந்தோம்
ஹிம்சை பண்ணா தி சொன்னாலும்
தொடங்கின கார்யம் தலைக் கட்ட வேண்டும்
அதுக்காகில் அங்கெ போக வேண்டும்
பிராணன் இங்கே இல்லை
வாக்கும் மனமும் கர்மமுனம் நமக்கு ஆங்கு
அங்கே த்வனிக்க
அவன் வந்து முகம் காட்டும் என்ற நினைவால் சொல்கிறாள்
த்வனிக்க அவனுக்கு தரிப்பு அரியதாகும்
ஆக்கியும் ஆவியும்
வியசனம்
பிடித்து விட்ட கொம்பு போலே ஆஸ்ரயம் மட்டும் இங்கே
வாசனை தொடர்பு மட்டும் நலிக இங்கே இல்லை
——————————————————————————————————————————————–
Leave a Reply