அவ் அன்றில் பேடைகளைப் பார்த்து
மீண்டும்
தன் செயல் அறுதியாலே
இரக்கிறாள்
————————————————————————————————————-
அவன் கையதே என் ஆர் உயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே
————————————————————————————————————————
அவன் கையதே என் ஆர் உயிர் –
என் உயிர் அவன் கையதே –
நாயகன் நாயகி இருவரும் கூடி இருந்தால் உயிர்கள் மாறாடி அன்றோ இருப்பது –
உங்களுக்கு இது அறியப் படாததோ-
அன்றில் பேடைகாள் –
கலவியின் ரசம் அறிவார்
பிரிந்தும் படுவதும் அறிய வேண்டாவோ –
எவன் சொல்லி –
எவையேனும் சிலவற்றைச் சொல்லி
அவை சொல்லுகிற வார்த்தைகளைச் சொல்லில்
தம் வாய் வேம் போலே காணும் –
ஆதலின் -எவன் சொல்லி -என்கிறாள் –
நீர் குடைந்து –
ஒன்றிலே ஓன்று மூழ்கி –
ஆடுதிர் –
கலந்து விளையாடு கின்றீர் கோள் –
புடை சூழவே –
சுற்றிலும் திரியா நின்றீர் கோள்
அடை மதிள் படுத்துவார் -முற்றுகை இடுவார் -சுற்றிலே விட்டுக் கொண்டு இருக்குமாறு போலே
செவியைப் புதைத்துப் பிழைப்பேனோ
கண்களைப் புதைத்துப் பிழைப்பேனோ
பெருமாளும் சேனைகளும் இலங்கையை அழிக்கைக்கு
சூழப் போந்தாப் போலே காணும்
இவளுக்கு இவை இருக்கின்றன –
பாவியேன் உங்கள் பாரிப்புக்கு இங்கு விஷயம் உண்டாகப் பெற்றது இல்லை
தவம் செய்தில்லா வினையாட்டியேன்-
உயிரை இங்கே வைத்து உங்களுக்கு உதவி செய்ய புண்ணியம் செய்யப் பற்றிலேன்
அன்றிக்கே -அவனைப் போலே பிரிவுக்கு சிளையாதபடி புண்ணியம் செய்யப் பற்றிலேன் -என்று பிள்ளான் பணிக்கும்
உயிர் இங்கு உண்டோ –
வல்லடிக்காரர்க்கு விளக்கு ஏற்றிக் காட்டுமாறு போலே காணும்
இங்கு உண்டோ -என்று என்று காட்டுகிறபடி –
எவன் சொல்லி நிற்றும் –
எதனைச் சொல்லித் தரிப்பது
நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே
காதல் வசப்பட்டு இருக்கிற உங்களுடைய கூக்குரலைக் கேட்டும்
பிரிவுக்கு தரித்து இருக்கலும்
உங்கள் கூக்குரலுக்கு பிழைத்து இருக்க வல்லோமோ
உங்கள் கூக்குரல் கேட்டாரை முடிக்குமது அன்றோ ‘
உங்கள் செவியை புதைத்தோ நீங்கள் கூப்பிடுகிறது
ஆண்களோடு கூடத் திரிகின்ற சக்கரவாகப் பேடுகளின்
இனிய குரலைக் கேட்டு நீண்ட கண்களை உடைய இந்த சீதை
எப்படி இருப்பாளோ -என்றார் இ றே பெருமாள்
நிஸ்வனம் சக்கரவாகானாம் நிசம்ய சஹாசாரினாம்
புண்டரீக விசாலாஷி கதம் ஏஷா பூவிஷ்யதி -கிஷ்கிந்தா -80-10
மீண்டும் அன்றில் பேடைகளையே
திரியவும் மறுபடியும் ‘
செயல் அறுதியாலே
இரக்கிறாள்
பிராணன் இங்கே இல்லையே
அவன் கையதே ‘
மிதுனம் ஆனால் பிராணன் மாறாடி தானே இருக்கும்
நீர் அறியாததோ
இன்றியாமை
ஏறு செவகனாருக்கு என்னையும் உளள் –
அந்வய ரசம் அறிவார் -அன்றில்
பிரிந்தால் வரும் துக்கம் தெரிய வேண்டாவோ
ஏவம் சொல்லி ஏதோ வார்த்தைகள் சொல்லி
மீண்டும் சொல்ல முடியாமல் ஏவம் என்கிறாள்
நீர் குடைந்து அவஹாகித்து
ஆடுதீர் -பரிமாற்ற வேண்டுமோ
புடை சூழ கண் வட்டத்திலே
அடை மதிள் படுத்து -முற்றுகை
செவியை புதைத்து -கண்ணை புதைத்து -பிழைப்பேனா
பெருமாள் முதலிகளும் இலங்கை முற்றுகை இட்டால் போலே
பாவியேன் உங்கள் பாரிப்புக்கு விஷயம் இல்லை
தவம் செய்து இல்லேன்
பாக்கியம் இல்லை உயிர் கொடுக்க முடியாதே
அவனைப் போலே பிரிவுக்கு சளையாத படி -அந்த பாக்கியம் எனக்கு இல்லையே
அவன் கொட்டாம் புளி போலே இருந்து என் உயிர் வேற கையில் கொண்டு -பிள்ளான் பணிக்கும்
இங்கு உண்டோ -விளக்கு வைத்து காட்டி –
வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
ஏவம் சொல்லி எத்தை சொல்லி தரிப்பது
ஏங்கும் த்வனி
பிரிவுக்கு தரித்தாலும் உங்கள் த்வனி கேட்டாரை முடிக்கும்
உங்கள் செவையை புதைத்து கூவுகிறீர்களா
பெருமாள் -கதம் ஏஷா பவிஷ்யதி பிராட்டி ஹிம்சை எப்படி படுவாளோ-
பாதகம் நினைத்த பேர் உண்டோ -பிரமாணம் –
—————————————————————————————————————————————
Leave a Reply