சில அன்றில் பேடைகளைக் குறித்து
உங்கள் சேவல்களும் நீங்களுமாய்
காதல் குரலாலே நலிகிறது என் –
என்கிறாள்
—————————————————————————————————————
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ
அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் உன் சேவலும்
கரைந்து ஏங்குதீர்
வித்தகன் கோவிந்தன் மெய்யன்
அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர்
அவன் கையதே
————————————————————————————————————————-
இத்தனை வேண்டுவது அன்று-
என்னை முடிப்பதற்கு இத்தனை வேண்டுவது இல்லை –
குயில்களைப் பார்த்து -இத்தனை வேண்டுமோ -என்னா நிற்கச் செய்தே
இடையில் அன்றிலின் உடைய ஒலி நலிய
அப்பாசுரமே இவற்றுக்கும் சொல்ல வேண்டும்படி அன்றோ பிறந்த நிலை -என்றது
மகா ராஜரும் வாலியும் பொரா நிற்க -நடுவே ஒளி அம்பாக
பெருமாள் விட்டால் போலே
குயிலுகளும் இவளுமாக -கூவாதே கொள்ளும் கோள் -என்பது
அவை உயரக் கூவுவது ஆகா நிற்கச் செய்தே
நடுவே அன்றில் ஆனது -செவி வழியே நெருப்பை உருக்கி வார்த்தைப் போலே ஒலி செய்ய
புரிந்து பார்த்து
இவையே அமையாவோ நீங்களும் வேண்டுமோ -என்கிறாள் -என்றபடி
இவள் இப்படி சொல்லச் செய்தேயும் கூவத் தொடங்கிற்று –
அந்தோ –
அடைக்கலம் -என்ற வாயினை அம்பாலே நிறைப்பாரைப் போலே
உங்கள் படி இருந்தபடி -என் -ஐயகோ -என்கிறாள் –
அன்றில் பேடைகாள் –
குயில் பேடைகளைக் காட்டில் உங்கள் இடத்தில்
ஒரு வேற்றுமை கண்டிலோம் –
உங்கள் சேவலைக் காட்டில் ஒரு வேற்றுமையும் கண்டிலோம் –
நலிகைக்கு -சஜாதீயரிலும் விஜாதீயரிலும் அவ்வருகாய் இருந்தீர் கோள் –
நாங்கள் என்ன செய்தோம் -என்ன –
எத்தனை –
மிகவும்
நீரும் உன் சேவலும் –
சேவலின் கருத்து அறிந்து நடத்துகிற நீரும்
உங்கள் கருத்து அறிந்து கார்யங்களைச் செய்கிற சேவலும்
தஸ்யா ச ராமோ த்விகுணம் ஹ்ருதயே பரிவர்த்ததே
அந்தர் ஜாதம் அபிவ்யந்தம் ஆக்யாதி ஹ்ருதயம் ஹ்ருதா -பால -77-2-
அந்த பிராட்டி உடைய மனத்தில் ஸ்ரீ ராம பிரான் விருப்பத்தோடு வீற்று இருக்கிறார்
ஆதாலால் பிராட்டியின் மனத்தின் எண்ணங்களை எல்லாம் நன்றாக அறிகிறார்
என்னுமா போலே
பேடையின் கருத்து அறிந்து கார்யங்களைச் செய்யா நின்றது ஆயிற்று சேவலும் –
கரைந்து ஏங்குதீர் –
பிறரை நலிகைக்கா தம் தாமை அழித்துக் கொள்வார் உளரே அன்றோ –
கலவியிலே தாம் அழிந்தமை தோற்ற பேசுகின்றன -என்றது
இருவர் கூடக் கலக்கும் சமயமோ இது –
கலந்தால் தான் உங்கள் நிலை தோற்ற வாய் விட வேண்டுமோ -என்றபடி –
வித்தகன் –
பரம காதலனாய் -எல்லாரையும் காக்கின்றவனான அவன்
ஒரு கணம் தாழ்க்கும் அளவில்
எங்களை விட்டு நலிகிறானாகச் சொல்ல வேண்டுமோ -என்ன
அவன் படிகளை உட்புக என் பக்கலிலே கேளும் கோள்
ஆச்சர்யப் படத் தக்கவன்
இப்போது அனுகூலருக்கு அரிய வித்தகன் –
பிறர்கட்கு அரிய வித்தகன் -1-3-1-முன்பு
கோவிந்தன்-
எல்லாப் பொருள்களையும் காப்பவன் –
இதனால்-எல்லாப் பொருள்களையும் காப்பவன் போலே இருந்து
தீங்கு இழைப்பவன் -என்ற படி
பாதுகாப்பவன் -என்று பற்றப் போகாது
தீங்கு இழைப்பவன் -என்று விடப் போகாது –
மெய்யன் அல்லன் ஒருவர்க்கும் –
பரம காதலன் எல்லாரையும் காப்பவன் -என்று நினைத்து அவன் கார்யம் செய்யப் போந்த
உங்களுக்கும் பொய்யே பலித்தது –
தத் ப்ருஹீ வசனம் தேவி ராஜ்ஞ்ஞோ யதபி காங்ஷிதம்
கரிஷ்யே பிரதிஜானசே ராமோ த்வி நாபி பாஷதே -அயோத்யா -18-30
ஸ்ரீ ராமபிரான் கைகேயியைப் பார்த்து அருளியது
இராமன் இரண்டு விதமாக பேசுகிறவன் அல்லன் என்றும் –
மித்ர பாவேன சம்ப்ராப்த்தம் நத்யஜேயம் கதஞ்சன
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் சதாமேதத் அகர்ஹிதம் -யுத்தம்-18-3-
அவனை நான் விட மாட்டேன் -என்றும்
சக்ருதேவ பிரபன்னாய தவாஸ் மீதி ச யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வரதம் மம -அயோத்யா -18-38-
அவ்வாறு செய்தல் எனக்கு விரதம் -என்றும்
கூறிய இராமாவதாரம் போலே அன்றோ
நீங்கள் நினைத்து இருப்பது –
பகலை இரவு ஆக்குவது –
ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுப்பது -என்பவை போன்ற அன்றோ இவ்வவதாரத்தின் செயல் –
இராமாவதாரத்தில் மெய்யும்
கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும்
அன்றோ அடியார்கட்கு தஞ்சம் –
ஆகையாலே அவன் பொய்யன் ஆகில் என் -மெய்யன் ஆகில் என் –
இருந்தபடியே உகப்போம் இத்தனை அன்றோ நாங்கள்
என்று தொடர்ந்த கார்யத்தில் முதிர நின்றன –
அத்தனை ஆம் -இனி என் உயிர் அவன் கையதே –
இனி அவ்வளவே அன்றோ –
இவற்றின் ஒருப்பாடு இருந்தபடியால் அவன் நினைவே தலைக் கட்டி விட்டதே அன்றோ -என்கிறாள் –
என் உயிர் அவன் கைப்பட்ட பின்பு
என்னைப் பாது காப்பதற்கு உங்கள் கால் பிடிக்க வேண்டாவே –
அன்றில் பெடைகளை குறித்து இதில்
சக்ரவாக பறவை
பிரியாமலே இருக்கும் இரண்டும்
கண் தெரியாது என்பார்
என் உயிர் அவன் கையில்
வித்தகன் கெட்டிக்காரன்
கோவிந்தன் ஏமாற்ற ரஷகன் பெயர் கொண்டவன்
மெய்யன் அல்லன்
இத்தனை வேண்டுவது இல்லை அந்தோ
அன்றில் த்வனி கேட்டு
மகா ராஜர் வாலி -சண்டை
நடுவில் பெருமாள் சரம் ஒளி அம்பு வர
குயில் இவளும் -அன்றில் த்வனி
நெருப்பை வார்த்து காதில் விட்டால் போலே
இவையே அமையாதோ நீங்களும் வேண்டுமோ -என்கிறாள்
சொல்ல செய்தேயும் த்வனிக்க
அந்தோ
சரணம் அடைந்தார் வாயை அம்பை போடுடாரை போலே
நலிக்கைக்கு சஜாதீயர் விஜாதீயர் சேவலும் குயிலும் அன்றிலும் வாசி இல்லாமல்
நாங்கள் என் செய்தோம்
நீரும் சேவலும் கரைந்து -கருத்து அறிந்து பரிமாறும்
பெருமாள் சீதை -போலே
கரைந்து ஏங்குதல்
பிறரை அழிக்க தன்னை அழித்து கொள்வாரைப் போலே
கூடி கலக்கும் சமயமோ
வாயும் விட வேண்டுமோ
ஷணம் அவன் தாழ எங்களை விட்டு நலிக்றான் சொல்ல வேணுமோ
வித்தகன் -சாமர்த்தியசாலி
அவன் படிகளை என் பக்கல் கேள் –
அனுகூலன் எனக்கே வித்தகன்
கோ விந்தன் சர்வ ரஷகன்
போலே இருந்து பாதகன் ஆனான்
ரஷகன் என்று பற்ற போகாது
பாதகன் என்று விட போகாது
அவன் கார்யம் செய்ய போந்த உங்களுக்கும் மெய்யன் இல்லை
அவளுக்கும் மெய்யன் அல்லை –
ராமக தவிர் ந பாஷையே ராம அவதாரம் இல்லை இவன்
சக்கரவர்த்தி -திருமகன் வார்த்தை இது -ஜகத் பிரசித்தம் –
நத்யஜேயம் ஏதத் வ்ரதம் மம –
கண்ணன் அப்படி இல்லை கோவிந்தன்
ஏலாப் பொய்கள்
ஆயுதம் எடுத்து -பீஷ்மர் -பகலை இரவாக்கி ஜயத்திர வதம்
ராமவதாரத்தில் மெய்யும் கிரிஷ்ணாவதாரத்தில் பொய்யும் ஆஸ்ரிதர்க்கு தஞ்சம் –
ரஷனத்துகு பரிகாரம் இவன் பொய்கள்
ரஷனம் உறுதி
இருந்தபடி உகக்கும் நாங்கள் -பறவைகள் சொல்ல
தொடங்கின கார்யம் உரக்க த்வனி
இனி அத்தனை ஆகாதே
அவன் நினைவு தலைக் கட்டி விட்டதே
என் உயிர் அவன் கை பட்ட பின்பு
என் ரஷணம் உங்கள் கால் பிடிக்க வேண்டாவே
எம்பெருமானார் -உகந்த திருவாய் மொழி –
ஆழ்வார் ப்ரீதி வெளிப்பட
திருவரங்க பெருமாள் அரையர் கதையை பிரசாதிப்பார்
எம்பெருமான் நினைவு கண்டு ஐவரும்
வல்லார் வாய் கேட்டு உணர வேண்டும் –
————————————————————————————————————————————————–
Leave a Reply