திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-5-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

இன்னுயிர் -பிரவேசம் –

தொண்டர்க்கு அமுது உண்ண சொன்மாலைகள் சொன்னேன் -என்று களித்தவர்
தம்முடைய உயிரைப் பாது காப்பதற்காக
பறவைகளின் காலிலே விழும்படி ஆயிற்று –
தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே -என்னும்படி தெளிவு பிறந்த போதே
புரத்திலே காண வேண்டும் என்னும் ஆசை பிறந்தது
இவர்க்கு இன்னம் விடாயைப் பிறப்பித்து முகம் காட்ட வேண்டும் -என்று
இவர் விருப்பத்தை சடக்கென முடித்திலன் -இறைவன் –
நினைத்த போதே விரும்பியது பெறாமையாலே தளர்ந்தார்
தளர்ந்தவர் உலகப் பொருள்களில் கண் வைத்தார் –
பரம விரக்தராய் இருக்கிற இவர் உலகப் பொருள்களில் கண் வைப்பான் -என் என்னில் –
உலகப் பொருள்களை நினைக்கும் நினைவாலே மனத்தினை வேறு ஒன்றினில்
செலுத்து தரிப்போம் -என்று கண் வைத்தார் –
அன்றிக்கே
அவனுக்கு போலியான பொருள்களைக் கண்டாகிலும் தரிப்போம் என்று கண் வைத்தார் -என்னுதல்
அவை தரிப்புக்கு காரணம் ஆகாமல்
அவனுடைய நினைவினை ஊட்டுவனவாய் துன்பினைத் தரப் புக்கன –
யாதானும் ஒரு பொருள் தோற்றிலும்-அப்பொருளின் உளதாம் தன்மை
அவனை ஒழிய இல்லாமையாலே
அவனைக் காட்டிக் கொண்டே அன்றோ தோற்றுவது –
ஆக
உலகப் பொருள்கள் அவனை நினைப்பு ஊட்டுவனவாய் நலிய
அவற்றால் நோவு படுகிறபடியை
அன்யாபதேசத்தால் பேசுகிறார் –
எம்பெருமானோடே கலந்து பிரிந்தாள் ஒரு பிராட்டி -தன் ஆற்றாமையாலே
அவனுக்கு போலியான பொருள்களைக் கண்டாகிலும் தரிப்போம் என்று
அவ்வாற்றாமை கை கொடுக்க
உபவனமாகிய பூம் சோலைக்கு புறப்பட –
அங்கு உண்டான குயில் மயில் தொடக்கமானவை
அவனுடைய பேச்சினையும் வடிவினையும் நினைப்பு ஊட்டுவனவாய் நலிய
இவை நலிகைக்கு இவற்றோடு நமக்கு ஒரு பகை இல்லை
இவை நலிகைக்கு ஒரு காரணம் உண்டாக வேண்டும்
அது -அவன் -நம்மை முடிக்க வேண்டும் என்று பார்த்தான் –
அதற்கு தக்க வழி நம்மை பிரிவதே -என்று நினைந்து
பிரிவு கலவியை ஒழியக் கூடாமையாலே நம்மோடு கலந்தான் –
கலந்து நம்மைப் பிரிந்தான் –
பிரிந்த இடத்திலும் நாம் முடியாது இருந்தோம் –
பிரிந்து நோவு பட்டு இருக்கும் சமயத்தில்
நம்மோடு போலியாக இருக்கிற பொருளைக் காட்டி முடிப்போம் -என்று
பார்த்து வர விட்டான் இத்தனையே யாம் என்று கொண்டு
உங்களுக்கு நினைவு இதுவாகில் இப்பாரிப்பு எல்லாம் வேண்டுமோ
என்று அவற்றைப் பார்த்து கூறி
நம்மைப் பார்த்தால் அன்றோ இப்படி நோவு பட வேண்டுவது
அவனைப் பார்த்தால் நோவு பட வேண்டா அன்றோ -என்று
அவனுடைய கல்யாண குணங்களை ஏத்துகையாலே
வருந்தி தரித்து தலைக் கட்டுகிறதாய்
இருக்கிறது –
இது எம்பெருமானார் உகந்த திருவாய் மொழி என்று
ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர்
அருளிச் செய்வர்

—————————————————————————————————————————————-

இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு
இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின்
குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ணபிரானை
நீர் வரக் கூவகிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும்
இத்தனை வேண்டுமோ

———————————————————————————————————————————————-

சில குயில் பேடைகளைக் குறித்து
என்னை முடிகைக்கு இத்தனை பாரிப்பு வேண்டுமோ
என்கிறாள்

இன்னுயிர்ச் சேவலும் –
நல் உயிரான சேவலும் -என்றது
புறத்தே உலாவு கின்ற உயிரைப் போலே
கண் வட்டத்திலே திரிந்து கொண்டு இருக்கிற சேவலும் -என்றபடி –
பிரிந்து படு கொலை அடிக்கும் சேவலைப் போல் அன்றிக்கே
பேடைக்கு தாரகமாய் இருக்கும் சேவலும் உண்டாய் இருப்பதே
என்பது அவளுடைய உட்கோள்-
அன்றிக்கே –
பேடைக்கு இனியதுமாய் உயிருமாய -சேவலே -என்றலுமாம் –

நீரும் –
சேவலுக்கு இனிய உயிரான நீரும் –

கூவிக் கொண்டு –
சேர்த்தியை காட்டி -நலிவதற்கு மேலே –
கலவி காரணமாக ஒன்றுக்கு ஓன்று அழைத்துக் கொண்டு
பேச்சாலும் நலிய வேண்டுமோ –

இங்கு எத்தனை –
இங்கு அத்தனைக்கு விஷயம் உண்டோ -என்றது –
இங்கு பிரிவாலே என் உயிர் சென்று அற்றது
உங்கள் பாரிப்பு விஷயம் உண்டோ -என்றபடி
அத்தனை -சேர்த்திக்கும்-கலவி காரணமாக கூவுவதற்கும்
எத்தனை – -சிறிதும் – என்னிடம் விஷம் இல்லையே –
அதிகம் சோபதேபம்பா விகூஜத்பி விஹங்கமை
தீபயந்தீவ மே காமம் விவிதா முதித த்விஜா -கிஷ்கிந்தா –
பம்பா நதியானது இனிமையாய் பாடுகின்ற பறவைகளால் மிகவும் அழகாக விளங்குகின்றது –
பலவிதமான பறவைகளும் களிப்புடன் இருந்துகொண்டு
என்னுடைய காமத்தை அதிகப் படுத்துகின்றன போலும் –
என்னுமாறு போலே நலியா நின்றது –
அன்றிக்கே
எத்தனை -என்பதனை -மிழற்றேல் மின் -என்பதனோடு கூட்டி
என் உயிர் நோவ எத்தனை மிழற்றேல் மின்-என்று கொண்டு
பிரிவினால் தளர்ந்து இருக்கிற என் உயிர் நோவ
காதலைத் தெரிவிக்கிற ஒலியை பண்ணாதே யுங்கள் –
என்று பொருள் கூறலுமாம் –
உயிர் நோவ -என்கையாலே
உயிர் பண்டே சென்று அற்றது -என்கை –
அன்றிக்கே –
இராம பாணம் போலே உயிரிலே புக்கு வருத்தவும் வற்றாயிற்று இந்த ஒழி -என்னுதல்
இவற்றின் பேச்சைக் கேட்டு தளிர்க்கும் அவனின் நின்றும் வேறு படுத்து
என் உயிர் -என்கிறாள் –
மிழற்றுதல் ஆவது -நிரம்பா மென்சொல் -என்றது
புணர்ச்சிக் காலத்தில் சொல்லத் தொடக்கி தலைக் கட்டாத பேச்சுக்கள் -என்றபடி –

இப்பேச்சு இவள் செவிப்படில் முடியும் -என்று அறிந்து
பேசாது இருக்க வேண்டாவோ –
நோவ மிழற்றேல்மின் -என்கிறாள் -என்றது
பெண் கொலை என்று அறிந்தால் மீள வேண்டாவோ -என்றபடி –

குயில் பேடைகாள் –
ஆண்கள் செய்வதை நீங்களும் செய்ய வேண்டுமோ –
சேவலைக் கொண்டு கார்யம் கொள்ள நினைத்தாலும்
பேடியின் காலை அன்றோ பிடிப்பது –

என்னுயிர்க் கண்ணபிரானை நீர் வரக் கூவகிலீர்-
எங்களை கொலைஞரைச் சொல்லுமாறு போலே சொல்லுகிறது என் -என்றனவாகக் கொண்டு
எனக்குத் தாரகனான கண்ணபிரானை வரக் கூவு கின்றி லீர்கோள்-என்கிறாள் –
தாரகங்கள் பொருள்கள் தோறும் வேறு பட்டவைகளாய் அன்றோ இருப்பன –
விலங்கினங்களுக்கு தாரகம் புல் பூண்டு முதலானவைகள் –
மனிதர்களுக்கு தாரகம் சோறு
தேவர்களுக்கு தாரகம் அமுதம்
இவளுக்கு தாரகம் கிருஷ்ணன்
இவளுக்கு உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் –
எம்பெருமான் என்றே தளரும் -6-7-1-
பிறர் நலத்துக்காக தன்னை ஓக்கி வைப்பவன் ஆதலால் -பிரான் -என்கிறார் –
நீர் –
கலவியின் சுகத்தை அறியும் நீங்கள்
பிரிவின் நோவும் அறிய வேண்டாவோ –
வரக் கூவகிலீர்–
நீங்கள் அவன்முன்னே சென்று கூவினீர்கள் ஆகில்
தானே செல்லாமையை நினைத்து வாரானோ
அது செய்கின்றி லீர்கோள்-என்றது
என்னை நலிய வேண்டுவன செய்கின்றீர் கோள் இத்தனை
நானும் அவனும் சேருகைக்கு வேண்டுவன செய்திலீர் கோள்
-என்றபடி
அழிக்க வல்லவை சேர்க்கவும் வல்லவை -என்று இருக்கிறாள் -என்றது –
இவற்றின் வாயது வாணாள் என்று இருக்கிறாள் -என்றபடி –

என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ –
என்னையும் அவனையும் சேர்க்கின்றிலீர் கோள்
அல்லாத பின்பு இனி என்னை முடிக்கையாய் இருந்ததே அன்றோ உங்கள் கருத்து
அதற்க்கு இப்பாரிப்பு எல்லாம் வேண்டுமோ
பண்டே செண்டற்ற என் உயிரை வாங்கி அவன் கையிலே கொடுக்கை அன்றோ கருத்து
அதற்கு இவை எல்லாம் வேண்டுமோ என்றது
நீங்கள் சேர இருக்கையும் -கலக்கையும் -ஒன்றை ஓன்று அழைத்தலும்-
காதலை புலப்படுத்துகிற மழலை ஒளியும் –
இவை எல்லாம் வேண்டுமோ -என்றபடி
நொந்தாரை பிழைப்பிப்பது அன்றோ அரிது –
முடிக்கையில் பணி உண்டோ –

கண்டு கொண்டதும் மானச அனுபவம் தான் –
குண அனுபவம்
கையால் அணைக்க முடியவில்லையே
வெளியில் பார்க்க
போலி கண்டும் வருந்துகிறார்
இன் உயிர் சேவலும் நீரும் கூவிக் கொண்டு திரிகிறீர்களே –
அவசன்னராய் பிராட்டி பாசுரத்தால் பேசுகிறார் –

எம்பெருமானை கண்டு கொண்டு
கண்கள் ஆரக் களித்து
தொண்டர்க்கு அமுது உன்ன திருவாய்மொழி அருள செய்த உபகாரத்வம்
வீற்று இருந்து -ஆனந்தம் உடன் -சூழ் விசும்புக்கு அப்புறம் -இருந்து இருக்க வேண்டியது
அடுத்து தீர்ப்பாரை யாம் இனி மோகித்து விழுந்தார்
தோழி பாசுரம்
எல்லை இல்லாத துக்கம் –
எல்லை அற்ற ஆனந்தம் அப்புறம் -சங்கதி -தொடர்பு
அசங்கதி எ சங்கதி -என்பதே எம்பார்
அசங்கதி -கூடாததால் காஞ்சி சுவாமி காட்டி
அது போலே இங்கும்
கழித்தவர் தம் பிராணன் ரஷகம் திர்யக் காலில் விழ வேண்டு
கெஞ்சி -இரந்து
தேவர்களுக்கு கருவாகிய கண்ணனை கண்டு கொண்டேன் -என்னும் படி ஞான வைசத்யம்
பாஹ்ய சம்ச்லேஷம் அபேஷை பிறந்து
திருவடி தலை மேல் வைக்க வேணும் -உசாவி பேச வேண்டும்-
இவர்க்கு இன்னம்விடாய் பிறப்பித்து முகம்
மாச உபவாசிக்கு புறப்பூசல் போலே
தீர்த்தம்
அன்னம் ரசம் கொடுத்து drips அன்ன ரசம் –
கஞ்சி வயிற்றில் தடவி மயிர் கால் வழியே உள்ளே போகுமந்த காலம்
ஆர்த்தி -கூட்டிய பின்பு
அனுபவம் இருவருக்கும் ரசிக்கும் -அத்தாலே தான்
நினைத்த போதே பெறாமல் ஆழ்வார் தளர்ந்து போக
லௌகிக பதார்த்தம் -அனுசந்தானம் -தர்சனம் -செய்து
ஹிருதயம் அந்ய பரமாக்கி
போலியான பதார்த்தம் கண்டு தரிக்கவும்
குயில் நிறம் குரல் போலி -மயில் வடிவுக்கு போலே
இவை ஆஸ்வா ஹேதுவாகம் இல்லாமல்
இன்னம் பாதகம் உண்டாக்க
துக்கம் அதிகம் படுத்த
ஏதேனும் ஒரு பதார்த்தம் தோற்றினாலும்
அதன் சத் பாவம் அவனாலே வேதாந்தந்த ஞானம் உடையவர் அதனாலே –
எல்லாம் அவனாகவே தோன்றுமே
சரீரம் ஆத்மா இரண்டையும் தரிக்கும் பரமாத்மா -வேதாந்த ஞானம் உப்டே இவருக்கு
சத் பாவம் இருப்பு அவனை ஒழிய இல்லையே
எல்லாம் அவனை காட்டுமே
பகவத் விபூதி இல்லாமல் இல்லையே
குருகை காவல் அப்பன் -இடம் ஒருவன் அவன் இருக்கும் இடம் காட்ட சொல்ல
நீ இல்லாத இடம் காட்டு -ஐதீகம்
துக்கம் உடன் இந்த திருவாய்மொழி –
அந்யா பதேசம் –நாயகி வார்த்தை –
ஸவா பதேசம் -தன்னுடைய அர்த்தம் –
ஆற்றாமை கை கொடுக்க உத்யானம் பிராட்டி புறப்பட
கலந்து பிரிந்த ஆற்றாமை –
உட்யானம் போக பலம் -ஆற்றாமையே கை கொடுக்க
திண்ணம் என் இள மான் புகுமூர் திருக் கோளூர்
will power
89 திரு நஷத்ரம் காஞ்சி சுவாமி 103 ஜுரம் அடிக்க –
புறப்பாடு போக –
எழுந்தாலே தலை சுத்தும் -டாக்டர் சொல்ல –
உத்வேகம் -will power –
குயில் மயில் பேச்சுக்கும் வடிவுக்கும் ஸ்மாகரமாக இருக்க

அலங்கார சாஸ்திரம் –
எல்லாம் ஓன்று போலே
சந்த்ராலொகம் -கிரந்தம் சாத்ருச லஷ்மி -திருஷ்டாந்தம் தார்ஷ்டாந்தம்
இவை நலிய இவற்றோடு பகை இல்லையே
இதுக்கு ஒரு அடி உண்டாக வேணும்
அவன் நம்மை முடிக்க பார்த்தான்
முடிக்க துக்கம் வர வேண்டுமே
சம்ச்லேஷித்து பிரிந்தான்
இன்னம் முடியாமல் -இவற்றை அனுப்பி –
போலியான பதார்த்தங்கள் வர விட்டான்
இவ்வளவு பாரிப்பு வேண்டுமா என்னை முடிக்க -என்கிறார் –
நம்மை பார்த்தால் இ றே நோவு பட வேண்டும்
அவனைப் பார்த்தால் -கருணா மூர்த்தி -பேரு கிட்டாமல் போகாதே
குண ஜ்ஞானத்தாலே வருந்தி தரித்து தலைக் கட்டுகிறார் –
லௌகிக பதார்த்தங்கள் பாதகம் -மயர்வற மதி நலம் அருளப் பற்றதும்
நாயகி -வார்த்தையால் அருளிச் செய்கிறார் –

இத்தனை வேண்டுமோ –
குயில் பேடைகாள்
சேவலும் நீரும் -மிதுனம் -பெண் பேடை பார்த்து பேச
சேவல் ஆண் பறவை
கருடன் -சேவல் கொடியோன் –
இன்னுயிர் -பிராணன் போல சேவல்
இங்கு எத்தனை –
என் உயிர் நோவ மிழற்றாதீர் –
ராமஸ்ய ஆத்மசக குகன் ராமன்
ஈர் உயிர் ஓர் உடல்
பஹி சர பிராணன் -வெளியில் நடமாடும் பிராணன்
கண் வட்டத்திலே -நடமாடும் சேவல்
தாரகம் -அருகில் இருந்து
பிரிந்து படு கொலை அடிக்கும் இவள் சேவல் போலே இல்லை
இப்படியும் சேவல் உண்டு இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்
சாத்துமது இப்படி பண்ணுவார்களா இன்று தான் அறிந்தேன் சொல்வது போலே
போக்யமுமாய் தாரகமுமாய் உள்ள சேவல் -இருப்பது ஆச்சர்யம்
நீரும் -கௌரவ வார்த்தை கடக கிருத்தியம்
பேச்சாலும் நலிய வேண்டுமா சேர்ந்து இருப்பதே கஷ்டம்
சம்ச்லேஷம் பரஸ்பர நாம கிரகணம் பண்ணிக் கொண்டு
இங்கு எத்தனை
இங்கே தன்னை காட்டி
இந்த தசையில்
பிரிவிலே பிராணன் போய் கொண்டு
பாரிப்புக்கு விஷயம் இல்லையே
அதிகம் சோபிதே பம்பா நதி கண்டு பெருமாள்

என் உயிர் நோவ மிழற்றாதீர் –
உயிர் மட்டும் தான் உள்ளது
ராம சரம் போலே உயிர் புக்கு வியாபாரிக்கும் இந்த த்வனி
உயிர் நிலையில் வருத்தும்
என் உயிர் –
அவன் உயிர் போலே இல்லை
துக்கம் சமம் இல்லையே
குரல் கேட்டு அவன் உயிர் தளிர்க்கும்
மிழற்றும் மழலை சொல் இன்னும் ஆனந்தம் கொடுக்கும்
நிரம்பா மென் சொல்
சம்ச்லெஷ தசையில் சொல்ல தொடக்கி தலைக் கட்டாமல்
ஸ்திரீ வதம் என்றால் மீள வேண்டாவோ
விஜாதீயர் செய்வதை நீங்கள் செய்ய வேண்டுமோ
இவள் குயில் போலே
சேவலை கொண்டு கார்யம் செய்ய நினைத்தாலும் பேடை காலில் விழ
புருஷகாரம்
என் உயிர் கண்ண பிரான் -உனக்கு சேவல் போலே
காதுகன் போலே ஹிம்சிப்பவர் போலே எதற்கு நீ சொல்ல -என்ன
தாரகம் -சேவல்
எனக்கு தாரகம் கண்ணன்
வ்யக்தி தோறும் மாறும்
திர்யக் புல் மனுஷ்யர் அன்னம் தேவர் அமிர்தம் இவருக்கு எல்லாம் கண்ணன்
பிறர்க்கு ஆகவே தன்னை ஆக்கி பிரான்
நீர் -வ்யதிரேக நோவு அறிய வேண்டாமோ
வர கூவ
முன்னால் கூவினால் வந்து விடுவான்
நலிய தான் இங்கே கூவி
அழிக்க முடிந்தால் ஆக்கவும் முடியுமே
இவற்றின் வாயது வாழ் நாள் என்று இருக்கிறாள் –
ஒன்றும் செய்ய வேண்டாம் வார்த்தை ஒன்றே போதும்
கூவினால் போதுமே அவன் முன்னால்
என் உயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனையும் வேண்டுமோ –
என் உயிர் எடுத்து அவன் இடம் கொடுக்க நினைத்தால் இத்தனை வேண்டுமோ
சேர்க்காமல் இருந்தாலும்
முடிக்க உங்கள் கருத்து
முன்னே உயிர் போனதே
சேர மேலே –கலந்து —மேலே அன்யோன்ய நாமம் சொல்லி -[ப்ரணய கதகத தோனி இது எல்லாம் வேண்டுமோ
நொந்தாரை ஜீவிப்பது தான் அரிது
முடிக்க இத்தனையும் வேண்டுமோ –

————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading