இச் சரீர சம்பந்தம் அற்றால் சென்று அனுபவிக்கு
பரம பதம் வேண்டுமோ
இச் சரீரத்தோடு இருந்து கொண்டே அனுபவிக்கத் தகுந்த
திருமலை இம் மண் உலகிலே உள்ளது அன்றோ –
ஆனாலும் நமக்கு திருமலையோடு பரம பதத்தோடு
வாசி அற்றதே அன்றோ –
என்கிறார்
———————————————————————————————————————–
இன்றிப் போக இருவினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான்
நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளத்து
சென்று தேவர்கள் கை தொழுவார்களே
————————————————————————————————————————
இன்றிப் போக இருவினையும் கெடுத்து –
இருவினையும்-இன்றிப் போக -கெடுத்து –
நல்வினை தீ வினைகளான-கருமங்களானவை
வாசனையோடு போகும்படி செய்து –
தானே போக்கிக் கொள்ளப் பார்க்கும் அன்றே அன்றோ
சிறிது கிடக்கப் போவது –
ஒன்றி யாக்கை புகாமை –
பின்னையும் ருசி வாசனைகள் கிடக்குமாகில்
அசித் தத்வத்தொடு சென்று கலசி
வேறு ஒரு சரீரத்தை அடைந்து
அதனால் வரும் துயரங்களை அனுபவிக்க வேண்டி வரும் அன்றோ –
அது செய்யாமை –
உய்யக் கொள்வான் -நின்ற வேங்கடம் –
உயிர் அளிப்பான் -திரு விருத்தம் -1- என்கிறபடி
எல்லாரையும் காப்பாற்றுவதற்காக காலத்தை
எதிர் நோக்கினவனாய்க் கொண்டு
நிற்கிற திருமலை –
நீணிலத் துள்ளத்து –
நீள் நிலத்து உள்ளது –
சிறப்பு பொருந்திய பூமியில் உள்ளது
திருமலையை உடைத்தது ஆகையாலே உளதாய
பெருமையை நோக்கி -நீள் நிலம் -என்கிறார் –
அத்தால் பெற்றது என் –
சென்று தேவர்கள் கை தொழுவார்களே-
சென்று கை தொழுவார்கள் தேவர்கள் –
அவ்வளவு தூரம் கால் நடை தந்து போக வல்லார்
புண்யம் மிக்கவர் அன்றோ
நதே மனுஷ்யா தேவா தேய சாரு சுப குண்டலம்
முகம் த்ருஷ்யந்தி ராமஸ்ய வர்ஷே பஞ்ச தசே புன -அயோத்யா -64-69-
ஸ்ரீராமபிரான் உடைய அழகு பொருந்திய குண்டலங்களோடு கூடின
திரு முகத்தை பதினைந்தாம் ஆண்டில் மீண்டும் எவர்கள் பார்ப்பார்களோ
அவர்கள் மனிதர்கள் அல்லர் -அவர்கள் தேவர்கள் -என்று சக்கரவர்த்தி கூறினால் போலே
அவனுடைய சீலம் முதலான குணங்களை நினைத்து சொல்கிறார்
அன்பினாலே மூடப் பட்டார்க்கு
இவ் உலகத்தோடு இவ் உலகத்தோடு
வாசி அற்றதே அன்றோ -எட்டாமைக்கு –
சரீரத்துடன் அனுபவிக்கும் திருமலை
நீள் நிலத்து உள்ளதே
வாசி அற்று -பரம பதம் போலே போக முடியாமல் இருக்க
பாக்ய சாலிகள் கை தொழுவார்கள்
வேம் கடதீதி -இரு வினையும் கெடுக்கும் திருமலை
இன்றி போக ஒன்றும் இல்லாமல்
ஆக்கை புகாமல்
உய்யக் கொள்வதற்காக நிற்கிற
சென்று தொழுவார்கள் தேவர்கள்
சவாசனமாக போகும் படி பண்ணி
தானே போக்கி கொள்ள பார்க்கும் பொழுது கொஞ்சம் இருக்கும்
ஒன்றி ஆக்கை புகாமை -சரீரம் புகாமல்
பிறவி தீர்த்து உய்யக் கொள்வான்
உயிர் அளிப்பான் அவசர ப்ரதீஷனாய்
நின்ற திருவேம்கடத்தான்
நீள் நிலம் உயர்ந்த பூமி திரு மழை இருப்பதால் உயர்த்தி
கால் நடை -சென்று கை தொழுவார் பாக்ய சாலி
தேவர் போலே தான்
சீலாதி குணம் அனுசந்தித்து
பிரேமம் அதிகரிக்க இதும் அது போலே செல்ல முடியாமல் இருக்க
ஆழ்வார் -உடை குலை பட்டு உருக சென்று தொழுவார் பாக்யசாலிகள் என்கிறார்
——————————————————————————————————————————————-
Leave a Reply