திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-3-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

தம்முடைய உபதேசம் பலித்து
இவ்விஷயத்தில் திரு உள்ளம் உருக் குலையா நின்றது –
என்று இனியர் ஆகிறார்

———————————————————————————————————————————————

அடைவதும் அணியார் மலர் மங்கை தோள்
மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவற்கே யொருங்காகவே

———————————————————————————————————————————-

அடைவதும் அணியார் மலர் மங்கை தோள் –
அணியார் மலர் மங்கை தோள் -அடைவதும்-
மிகவும் அழகியதான பெரிய பிராட்டியார் தோளோடு கலப்பதும் –
அடைவதும் தோள் -என்றதனால்
அவன் தான் உலகமே உருவமாய் இருக்கும் வடிவினை கொண்டு
இழிந்தாலும் தோளுக்கு அவ்வருகு போக மாட்டான் என்பதனைத் தெரிவித்தபடி –
அன்றிக்கே –
அணி ஆர் -என்பதனை மலர் மங்கைக்கு அடையாக்கி
மார்வத்து மாலை -திருவாய்மொழி -10-10-2-என்கிறபடியே
திரு மார்புக்கு எல்லாம் தானே ஆபரணமாய் போரும்படி இருப்பாளாய்
இனிமையாலே குறைவற்று இருக்கிறவள் தோளோடு ஆயிற்று அணைவது என்று பொருள் கூறலுமாம் –

மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே –
அசுரர்க்கு வெம்போர்களே -மிடைவதும்-
இதனால் அவள் தோளை அணைவதற்கு இடும் பச்சையை
தெரிவித்த படி –
தம் த்ருஷ்டா சத்ரு ஹந்தாரம் மஹர்ஷீனாம் ஸூகா வஹம்
பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பார்த்தாராம் பரிஷ்ச்வஜே-ஆரண்யம் -30-39-
பெருமாளை நன்றாக தழுவிக் கொண்டாள் சீதா பிராட்டி போலே

அடியார்கள் உடைய பகைவர்களுக்கு வெம்போர்களே நெருங்கச் செய்தும்
மிடைதல் -நெருங்குதல் -எண்ணுதல்
அன்றிக்கே
அவர்களை முடிக்கும் விரகினையே -எண்ணா நிற்கும் -என்னுதல்

கடைவதும் கடலுள் அமுதம் –
பிரயோஜனாந்த பரரான தேவர்களுக்கும் அமுதம் கொடுக்க கடைவதும் -என்னுதல்
பெரிய பிராட்டியாரை பெறுதல் நிமித்தம் கடையும்படியைச் சொல்லுகிறது -என்னுதல்
அழகோடு கலத்தலைச் சொல்லிற்று –
அதற்க்கு இடும் பச்சையை சொல்லிற்று –
அவளைப் பெருகைக்கு முயற்சி செய்த படி சொல்லிற்று –
இவர் திரு உள்ளம் உடைகுலைப் படுகைக்கு காரணங்கள் இவை –

என் மனம் உடைவதும் அவற்கே யொருங்காகவே –
என் மனம் ஒரு மடைப்பட
உடைகுலைப் படா நிற்பதும்
இந்தவிதமான செயல்களை உடையவனுக்கு –
அவன் பனிக் கடலை கடைய
இவர் மனக்கடல் உடையப் புக்கது
கடைவதும் கடல் –என் மனம் உடைவதும் –
விரகராய் இருப்பார் -கோழை களாய் இருப்பார் இடத்தில்
பொருளை வாங்க நினைத்தால்
முந்துற மிடுக்கராய் இருப்பாரை நெருங்கி வாங்கவே
இவர்கள் தாங்களே கொடு சென்று கொடுப்பார்கள் அன்றோ –
அப்படியே
அவனும் மிக பெரியதான கடலை
உலக்கை வீடு நகம் இட்டு நெருக்கி
அதன் நல் உயிரை வாங்க
இவருடைய திரு உள்ளம் உடையத் தொடங்கிற்று –

உபதேசம் பலித்து
திரு உள்ளம் சிதிலம் ஆகா நிற்க
ப்ரீதி அடைகிறார்
மலர் மங்கை தோள் அடைந்து -சம்ச்லேஷித்து
விஸ்வரூபம் எடுத்தாலும் இவள் தோளுக்கு ஈடு இல்லை
மார்பத்து மாலை
அணியார் மலர் மங்கை திரு மாலை நாய்ச்சியார்
தானே ஆபரணம் -அணியார்
பொக்யதையால் குறை அற்று
அசுரர்கள் -தோளை அணைக்க இடும் பச்சை
பர்த்தாரம் பரிஷச்
ஆஸ்ரித விரோதிகள் முடிக்கும் விரகை சிந்தியா நிற்கும் -மிடைவது
அமுதம் கடைந்து -கடலும் அமுதம் -பிரயொஜனாந்தர
பிராட்டி அடைய செய்த கார்யம்
மூன்றும் பிராட்டி சம்பந்த
சம்ச்லெஷம் -இவன் இடும் பச்சை -இவன் செய்த எத்தனம் மூன்றும் –
என் மனம் அவர்க்கே உடைவது
பிராட்டி இடம் வியாமோகம் கண்டு மனம் உடைய
பனிக் கடல் கடைய
இவர் மனம் கடல் உடைய
பலமான உள்ளவரை அடிக்க -தானே கோழைகள் த்ரவ்யம் கொடுப்பார்களே –
மகத்த தத்வம் கடலை கடைய -உலக்கை விடு நகம் இட்டு மத்து போல –
மனம்தானே உடைய தொடங்கிற்று -இது கண்டதும் –

————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading