மனமே அவனை விடாதே காண் -என்றார் மேல்
அவ்வார்த்தையை ஒலக்க வார்த்தையாக
நினைத்திராதே காண்
என்கிறார் இப்பாசுரத்தில்
———————————————————————————————————————————
மனமே யுன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்
புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல்
இனமேதும் இலானை அடைவதுமே
————————————————————————————————————————————–
மனமே யுன்னை-
மோஷத்துக்கு காரணமாய் முற்பட நிற்கிற உன்னை அன்றோ –
பிற்பாடரைச் சொல்லுமாறு போலே இருக்க
நான் சொல்லுகிறது –
பகவான் இடத்தில் பக்தி உனக்கு இயல்பாக இருக்க
என் செல்லாமையாலே சொல்லுகிறேன் அத்தனை அன்றோ -என்றது –
உன்னை இரக்க வேண்டும் என்று இரக்கிறேன் அல்லேன் –
என் ஆசை மிகுதியினால் இரக்கிறேன் அத்தனை -என்றபடி –
முந்துற்ற நெஞ்சே இயற்றுவாய் எம்மோடு நீ கூடி -பெரிய திருவந்தாதி -1-என்று
நானும் காற்கட்ட வேண்டும்படி அனுபவத்திலே முற்பட்டு நிற்கிற உன்னை –
வல்வினையேன்-
பகவானை அடைவதை முறையாலே அடைவோம் என்று
இராதபடி பாவத்தைச் செய்தேன் –
உன்னை இரக்க வேண்டி இரக்கிறேன் அல்லேன் –
என் ஆசை மிகுதியினால் இரக்கிறேன் இத்தனை –
இரந்து கனமே சொல்லினேன் –
உன்னை கால் பிடித்து உறுதியாகச் சொன்னேன் –
இரந்து சொல்லுகைக்கு -மணக்கால் நம்பியோடு ஒப்பார் காணும் –
கனம் -பொன் -சீரிய பொருளைச் சொன்னேன் -என்றபடி –
உனக்கு மிக மேலான பொருளைச் சொன்னேன் என்க –
இது சோரேல் கண்டாய் –
இனி நானே -பகவான் இடத்தில் பக்தி கூடாது -இதனைத் தவிர வேண்டும் –
என்று சொன்னாலும் நீ நெகிழ விடாதே காண்
சாயல் கரியானை -பெரிய திருவந்தாதி -14-
எதனை தான் நீர் இப்படி சோரேல் என்று சொல்லுகிறது -என்ன
புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல் –
எல்லை இல்லாத இனியனாவனை பற்றுதலை சோரேல் என்கிறேன் -என்கிறார் –
புனத்தில் மேவி இருப்பதான அழகை உடைய திருத் துழாய் மாலையை
உடையவன் ஆகையாலே ஒப்பு இன்றிக்கே இருக்கிறவனை
அத் தோள் மாலையை உடையனாகை அன்றோ அறப் பெரியன் ஆகையாவது
ஒரு திரு முளைத் திரு நாளிலே -ப்ரஹ்மோஸ்தவம் – இப்பாட்டை அருளிச் செய்தது
முன்னாள் -கையார் சக்கரத்துக்கு -ஆழ்வார் திருநாள் –புறப்பட்டு அருளினபடி திரு உள்ளத்தில் கிடக்க
புனம் மேவிய பூந்தண் துழாய் அலங்கல் இனம் ஏதும் இல்லான் ஆகையாவது
நேற்றுப் புறப்பட்டு அருளின படி அன்றோ -என்று அருளிச் செய்தார் –
அடைவது சொல்லினேன் -இது சோரேல் கண்டாய் -என்று கூட்டி வினை முடிக்க –
அன்றிக்கே –
எதனை நீர் சொல்லுகிறது -என்ன
இனம் ஏதும் இலானை அடைவது -என்று முற்றாக முடிக்கவுமாம் –
இனமேதும் இலானை அடைவதுமே-
நெஞ்சே அவனை விடாதே கிடாய்
ஒலக்க வார்த்தை -சபை நடுவில்
ஏகாந்தமான வார்த்தை உண்மையான வார்த்தை என்கிறார்
வல்வினையேன் உன்னை இரந்து கனமே உறுதியாக சொன்னேன்
தோட்டம் புனம்
அலங்கல் மாலை மேவிய
இனம் ஏதும் இலான் ஒப்பற்றவன்
மோஷ ஹேதுவாக உன்னை
முன்புற்ற நெஞ்சே உனக்கு நான் சொல்ல வேண்டி உள்ளதே
ஸ்வாபாவிகமாக பகவத் பிராவண்யம் உனக்கு இருக்க
எனது செல்லாமையால் சொன்னேன்
தரித்து இருக்க சொன்னேன்
எனக்கும் கால் கட்ட வேண்டும்படி –
கிராம பிராப்தி பொறுக்காத வல்வினையேன்
ஆக்க பொறுத்தவன் ஆற்ற முடியாமல் துடிக்க
சாபலாதிசயத்தால் இரக்கிறேன் அத்தனை
கனம் திடமே சொன்னேன்
இரந்து -மணக்கால் நம்பி போலே
ஆச்சார்யன் தானே சென்று அருளி -சிஷ்யனை கெஞ்சி
மனசை ஆழ்வார் கெஞ்ச இங்கு மாறி உள்ளது
திரு உள்ளம் -ஆளவந்தார் போலே
சோரேல் கண்டாய்
நானே விட பிராட்டி சீதை குறைக்கும் போலே சொன்னாலும் கேட்க்காதே கொள்ள வேண்டும்
கனம் -பொன் -பரமார்த்தம் பொன் போலே வார்த்தை சொன்னேன்
இது சோரேல் –
கரியானை -தீ வினை -பெரிய திரு வந்தாதி பாசுரம் -பெயார் முலை கொடுக்க
ஊன் அறிந்து அறிந்தும் தீ வினையாம்-பாம்பார் வாய் கை விட -வேண்டும்
விடாதே சொன்னது –
நிரதிசய போக்கியம் ஆனவன்
ஒப்பு இல்லாமல் திருத் துழாய் மாலை உடைய சர்வாதிகன்
நேற்று புறப்பட்டு -அருளிய
தோளும் தோள் மாலையும் -அழகை கண்ட
ஏகாந்த சேவை அழகு போலே –
சாத்து முறை பக்தி உலா எம்பெருமானார் திரு மேனி அழகு
திரு முளை திரு விழா -இப்பாட்டை அருளி செய்து
கையார் சக்கரத்து அன்று –
இதுக்கு ஒரு ஐதிகம்
சேனை முதலியார் புறப்பாடு
ஒப்பு இல்லா அழகுடன் எழுந்து அருளி -நஞ்சீயர் வார்த்தை காட்டி –
அடைவதை பற்றி சொன்னேன் -இனம் ஏதும் இலானை -சோரேல் கண்டாய் –
——————————————————————————————————————————————————-
Leave a Reply