திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-1-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

உபகாரகரைப் போலே இருந்து -தம் தம் காரியங்களையே
தலைக்கட்ட நினைக்கும் நம்பத் தகாதவர்களை ஒழிய
காரணம் இல்லாமலே இயல்பாகவே நம்பிக்கையை விளைக்குமவனாய்

ஆபத்திற்கு துணைவன் ஆனவனைப் பற்றுமது அன்றிப் பயன் இல்லை –

என்கிறார் –

——————————————————————————————————————————————————————

துணையும் சார்வும் ஆகுவார் போல்
சுற்றத்தவர் பிறரும்
அணையவந்த வாக்கம் உண்டேல்
அட்டைகள் போல் சுவைப்பர்
கணை யொன்றாலே யேழ் மராமும் எய்த
எம் கார் முகிலை
புணை என்று உய்யப் போகல் அல்லால்
இல்லை கண்டீர் பொருளே-

———————————————————————————————————————————————————————–

துணையும் சார்வும் –
துணையாகை யாவது -துக்கமும் சுகமும் நம் இருவருக்கும் ஒன்றே -என்கிறபடியே
த்வம் வயச்ய அஹிஹ்ருத்ய மேஹி ஏகம் துக்கம் சுகம் ச நௌ
சூக்ரீவ ராகவம் வாக்யம் இதி உவாச ப்ரஹ்ருஷ்ட வத் -கிஷ்கிந்தா -5-35
இன்ப துன்பங்களை ஒக்க அனுபவித்தல் –
சார்வு ஆகையாவது –
போக்கடி அற்ற நிலையில் தாங்களே புகலிடம் ஆதல் –
பாண்டவர்கள் உடைய வனவாசத்திலே தனிமையிலே முகம் காட்டியும் திரௌபதியை மீட்டுக் கொண்டு
போகும் போது
கிருஷ்ணன் பலராமனுடன் அந்த குயவனுடைய தொழில் சாலை க்குச் சென்றான் -என்கிறபடியே
பாண்டவர்கள் தங்கின பணிக் கொட்டிலிலே சென்று முகம் காட்டி
கூடக் கிடந்தது கதறியும் துணையாயும்

வருஷ்ணி ப்ரவீரஸ்து குருபிரவீரான் ஆசங்கமான
சஹ ரௌ ஹி னேயே
ஜகாமதாம் பார்க்கவா கர்மசாலாம் யத்ர ஆசதே தே புருஷ பிரவீரா -பாரதம் சம்பவ பர்வம் –
பகதத்தன் விட்ட வேலை அர்ஜுனனைத் தள்ளி தன் மார்பில்
ஏற்றுப் புகலாயும் போந்த கிருஷ்ணனைப் போலே இருக்கை –

ஆகுவார் போல் –
தாங்கள் உறவினர்கள் அல்லாதாரைப் போன்று கடக்க நிற்பதும் செய்யாதே
இரட்சகர் -என்று மயங்கும்படி சேர்ந்து இருப்பார்கள் –

சுற்றத்தவர் பிறரும் –
தாயாதிகளும் -மற்றும் உள்ளாறும் –

அணையவந்த வாக்கம் உண்டேல் –
கைக்கு எட்டின செல்வம் உண்டாகில் -என்றது
இவன் பக்கலில் தங்களுக்கு பிரயோஜனம் உண்டாம் என்று தோற்றி இருக்கில் -என்னுதல்-
அன்றிக்கே –
தங்கள் பக்கல் ஒரு பிரயோஜனம் இவனுக்கு உண்டு என்று தோற்றி இருக்குமாகில் -என்னுதல் -என்றபடி –

அட்டைகள் போல் சுவைப்பர் –
இரத்தத்தை அடியோடு வாங்கா நிற்கச் செய்தே இவனுக்கு நன்மை செய்தனவே அன்றோ இவை இருப்பன –
அப்படியே உபகாரம் கொண்டாராய் கொள்ளாதே
நன்மை செய்கிறார்களாய் கொண்டு பிழைப்பார்கள் -என்றது –
உன்னிடத்தில் செல்வம் கிடக்கில் வாங்கிக் கொள்வார்கள்
அவற்றை என் மேல் ஏறிட்டு வை என்று நன்மை செய்கிறார்களாய் ஆயிற்றுப் பேசுவது -என்றபடி –

கணை யொன்றாலே
ஒரு சிறந்த வில்லினாலே
ஏழு மராமரங்களையும்
அருகில் இருந்த மலையையும்
பாதாளத்தையும் பிளந்தார் -என்கிறபடியே
கைக்கு எட்டிற்று ஓர் அம்பால்

மகாராஜர் தனியருமாய் வெறுவியருமாய்-தமையன் பகையுமாய் –
மனித சஞ்சாரம் இல்லாத தனிக் காட்டில் இருக்க
பெருமாளையும் இளைய பெருமாளையும் தூரத்தில் கண்டு
வாலி வரவிட்டவர்கள் என்று அஞ்சி ஓடித் திருவடியை வரவிட்டு அறிவித்த பின்பு –
நாம் உம்முடைய கார்யம் செய்ய வல்லோம் -என்று மழு வேந்திக் கொடுத்தும் அவன் கார்யம் செய்தார் அன்றோ –
பிபேத ச புன சாலான் சப்த ஏகேன மகே ஷூ ணா
கிரிம் ரசாதலம் சைவ ஜநயன் ப்ரத்யயம் ததா -பால -1-66- –

யேழ் மராமும் எய்த-
ஓன்று இரண்டாலே மகா ராஜர் உடைய ஐயத்தை தீர்க்கலாய் இருக்க
ஏழு மராமரமும் எய்த –

எம் கார் முகிலை –
எம் -என்று
அடியார்களையும் சேர்த்துக் கொள்ளுகிறார்
அன்றிக்கே
தனித் தன்மை பன்மையாய்
மகாராஜருக்கு செய்தது தமக்கு செய்ததாக நினைத்து இருக்கிறபடி யாலே -யாதல் –
பரம உதாரன் -ஆதலின் -கார் முகில் -என்கிறார்

அவன் படி இதுவாகில் நாம் அவனுக்கு செய்ய வேண்டுவது என் என்னில் –
புணை என்று உய்யப் போகல் அல்லால் –
இட வேண்டுவது ஒரு பச்சை இல்லை –
ஒரு வார்த்தை மாதரம் அமையும் –
என் கார்யம் உனக்கே பொறுப்பு -என்ற ஒரு வார்த்தையே அவனுக்கு நேர வேண்டுவது –

இல்லை கண்டீர் பொருளே –
புறம்பு ஒருவரைப் பற்றினால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்றது –
புறம்பே சிலரை பற்றுகையிலே துக்கப்பட சிலர் உண்டு அத்தனை
பயன் தரத் தக்கது ஓன்று இல்லை -என்றபடி –

————————————————————————————————————————————————————————–

உபகாரகரை போலே வந்து
தாங்கள் பிரயோஜனம் பெற்று போவார்கள் –
நம்ப முடியாமல் இருப்பார்கள்
அவிஸ்வாசம்
நிர்கெதுக விஸ்வாசம் ஜனகன் -அவன் ஒருவனே
விஸ்வாசம் தானே ஏற்படுத்தி
அட்டைகள் போலே சுவைப்பார்கள்
துணையும் சார்வாகவும் போலே
அணைய வந்து ஆக்கம் -அட்டை -உறிஞ்சுவது போலே
கணை ஒன்றால் ஏழு மரங்கள் -எய்து -கார் முகில் -புணை
புணைவன் பிறவிக் கடல் நீந்துவார்க்கு
தெப்பம் போலே -இவன் ஒருவனே பற்றுக்கோடு
உய்யப் போகல அல்லால் வேறு பொருள் இல்லை
நம்பிக்கை இத்தால் சுக்ரீவனுக்கு கொடுத்து அருளி
அவன் கார்யம் செய்ய இவனுக்கு சக்தி இருக்கு என்று காட்டி அருளி –
விஸ்வாசம் ஜனகன் -உதாரணம் -காட்ட
சுக துக்கம் ஒக்க -சமம் அனுபவிப்பார் துணை
சார்வு -புகல் ஆவது
தனிமையில் முகம் காட்டியும் பாண்டவர்
கூடக் கிடந்தது கதறி
த்ரௌபதி அபகரிக்க கதற
பனிக் கொட்டில் குயவன் பார்க்கவன் ஸ்லோகம்
வ்ருஷ்னு வீரன் கண்ணன் -ஆசங்கமான- சங்கை கொண்டு
பார்க்கவா கர்ம சாலாம் பனிக் கொட்டிலில் -தங்கி இருக்க
கண்ணன் தங்கி
யத்ர ஆஸ்தே -அந்த இடத்தில் -தானும் அங்கே இருந்து
கூடக் கிடந்தது கதறி துணை
பகதத்தன் செலுத்திய சக்தி அஸ்தரம் தானே ஏற்று துரோண பார்வை ஸ்லோகம் -சார்வு
கிருஷ்ணன்
போலே -நடிப்பார்
அபந்துக்கள் ரஷகர் என்று பிரமிக்க பண்ணுவார்
கடக்க நிற்பதும் செய்யாமல் பிரமிக்க செய்பவர் சுற்றத்தார் பிறர்
கைக்கு எட்டின சம்பத்து இருந்தால்
பிரயோஜனம் -உண்டு என்று இருந்தால் –
அட்டைகள் போல் ரத்த ஸ்பர்சம் -தினவு சொரிவது போலே ஆனந்தம் போலே பிரமை கொடுக்கும் உறிஞ்சும் காலம்
உபகாரம் கொண்டாரே கொள்ளாதே ஹிதம் செய்வார் போலே
தனம் கிடக்கில் வாங்கி கொள்வார்கள்

கைக்கு எட்டிய ஒரு அம்பாலே
ஏழு மரங்கள்
அஸ்தரம் மந்த்ரம் பூர்வகமாக வேண்டாமே
மகாராஜர் தனியராக
அஞ்சி திருவடி மூலம்
மழு ஏந்தி கொடுத்தான் சபதம் செய்து -கார்யம்
ஏழு மராமரங்களையும் சங்கை நன்றாக போக்கா
ஆச்சா மரம் கெட்டியாக இருக்கும்
ஏழு சமுத்ரம் மலைகள் ரிஷிகள் -எல்லாரும் பயப்படு படி
எம் கார் முகில்
எம் -ஆஸ்ரிதர் கேசவன் தமர் பின்பு தனியார் இல்லை
ஆத்மனி பகு வசனம் –
மகாராஜர் -செய்தது தமக்கு செய்ததாக நினைத்து
கார் முகில் பர உதாரர்
அவன் படி இதுவாகில் நாம் செய்ய
துணை யென்ட்ரூய்யச்ப்
இட வேறு பச்சை வேண்டாம்
உக்தி நீ தான் புணை புகல் சொன்னால் போரும்
என் கார்யம் உனக்கே பரம்
புறம்பு இல்லை -வ்யதிரேகம்
கஷ்டம் ஒன்றே வந்து சேரும் –

———————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading