அவனை ஒழிந்தவர்கள்-பயன் உள்ள போது -பந்துக்களாய் கொண்டாடுவார்கள் –
ஆபத்து வந்த காலத்தில் ஏன் என்று கூடப் பார்க்க மாட்டார்கள் –
ஆனபின்பு
காரணம் இல்லாமலே ஆபத்துக்கு துணைவனாய் இருக்கிற
ஸ்ரீ கிருஷ்ணனுடைய திருவருளுக்கு பாத்திரம் ஆகுங்கோள்
அவனை ஒழிய காப்பவர் வேறு இல்லை –
என்கிறார் –
——————————————————————————————————————————————————————
பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில்
போற்றி என்று ஏற்றி எழுவர்
இருள் கொள் துன்பத்தின்மை காணில்
என்னே என்பாருமில்லை
மருள் கொள் செய்கை யசுரர் மங்க
வடமதுரைப் பிறந்தார்க்கு
அருள் கொள் ஆளாய் யுள்ளால் அல்லால்
இல்லை கண்டீர் அரணே-
————————————————————————————————————————————————————————–
பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில்-
இவன் தான் சிலவற்றை அவிழ்ப்பது முடிவது சேமிப்பதாக போரா நிற்கும் அன்றோ –
பொருளானது கையில் உண்டாய் போரக் காணில்
போற்றி என்று –
பிறருடைய நலத்தை விரும்புகின்றவர்களை போன்று வார்த்தை சொல்லுவர் -என்றது –
உனக்கு இன்னமும் கிழிச்சீரை பெருக வேண்டும் -என்பார்கள் என்றபடி –
நமுடைய நலத்தையே தனக்கு பிரயோஜனமாக கொண்டு இருப்பான் ஒருவன் உண்டாவதே –
என்று குளிர நோக்குவானே
இனி இவன் நமக்கு கண்ணற மாட்டான் -என்று அறிந்தவாறே -கண் -அருள் -கிருபை –
ஏற்றி எழுவர் –
இடல் ஆகாதோ போக -என்று ஏற்றுக் கொண்டு எழுந்திருப்பார்கள் –
இருள் கொள் துன்பத்தின்மை காணில் –
அறிவின்மையை விளைப்பதாய்
துக்கத்துக்கு காரணமாய் இருக்கிற வறுமையைக் காணில் –
என்னே என்பாருமில்லை –
ஐயோ என்பாரும் இல்லை –
பிள்ளை திரு நறையூர் அரையர்
ஒருவனுக்கு இட்டு ஒருவன் வெறுவியன் ஆவது
அவனால் பொருளைப் பெற்றவன் இவனை -என் -என்னுதல் –
இவனுடைய வீட்டிலே வந்து ஒரு நாள் கால் கழுவிப் போதல் செய்ய -அவ்வளவாலே
இன்னான் இன்னானுக்கு உறவினன் ஆவான் அன்றோ -என்று
இவ்வளவு கொண்டு ஜீவிக்க இருந்தால்
அவ்வளவும் செய்வார் இலர் -என்று பணிப்பர் –
மருள் கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு –
பொருள் கை உண்டாய்ச் செல்லக் காணாத அன்றும் அடியார்களுடைய ஆபத்தை போக்குகைக்காக
கருமங்கட்கு கட்டுப் படாதவனான தான் வந்து அவதரித்து
உதவுவான் ஒருவன் உளன் -என்கிறார் –
மக்கள் மனத்தில் இருள் குடி புகுரும்படியான செயல்களை உடைய அசுரர் கூட்டம் முடியும்படி
ஒருவர் விரும்பாது இருக்கவும் தானே வந்து அவதரித்து
காப்பாற்றுமவனுக்கு –
அவனுக்கு நாம் செய்ய வேண்டுவது என் என்னில் –
அருள் கொள் ஆளாய் யுள்ளால் அல்லால் –
திருவருளைப் பெறுவதற்கு பாத்திரமான அடியவர்களாய் கொண்டு உஜ்ஜீவிக்கல் அல்லது –
அவன் செய்யும் அருளை விலக்காது ஒழியும் அத்தனையே வேண்டுவது –
தன் அருள் கொள்வாரை -உதாரர் -என்னும் அவன் அன்றோ அவன் –
இவன் பக்கல் இதற்கு மேற்பட கொள்ளலாவது இல்லை –
அவனுக்கும் இதுக்கு மேலே செய்ய வேண்டுவது இல்லை –
அவாப்த சமஸ்த காமன் ஆகையாலே
சம்பந்தமோ இயல்பாகவே அமைந்ததே இருந்தது –
இவன் புகுர நின்ற இடம் உண்டாகில் தன் பேறாக நினைத்து இருக்குமவனாய் இருந்தான் –
இனி விலக்காமை அன்றோ வேண்டுவது –
இல்லை கண்டீர் அரணே-
பாதுகாவல் ஆவது -இது ஒன்றுமே –
அல்லாதன எல்லாம் கேட்டோடே தலைக் கட்டும் அத்தனை –
சிறு குழந்தை -குன்றிச் சூடு -குன்று மணியின் உச்சி -என்று
நெருப்பிலே கை வைக்குமாறு போலே இருப்பது ஒன்றே அன்றோ –
புறம்பு இவன் பாதுகாவலாக நினைத்து இருக்கும் இவை –
ஆதரேண யதாஸ் தௌதி தனவந்தம் தன இச்ச்சயா
ததாசேத் விஸ்வ கர்த்தானாம் கோ ந முச்யதே பந்தநாத் -பிரமாணம்
செல்வம் உள்ளவனை செல்வத்தில் விருப்பத்தால் விருப்பத்தோடு எங்கனம் புகழ்கிறானோ -அங்கனமே
உலகத்தைப் படைத்தவனை புகழ்ந்தால் எவன் பிறவிக் கட்டின் நின்றும் விடுபடமாட்டான் -என்கிறபடியே
செல்வத்தின் மேல் உள்ள ஆசையாலே செல்வம் உள்ளவனைத் துதித்து போந்த வாசனையாலே மிக உயர்வாகத் துதியா நிற்கும்
இப்படி துதிக்கிறது உதாரனையோ -என்னில்
தநவந்தம் -ஓர் பற்றையை -என்றபடி –
அவன் பக்கல் நெகிழ்ச்சி இல்லை -ஆகில் அவனை துதிக்கும்படி தூண்டியவர்கள் யார் -என்னில்
தன இச்ச்சயா -செல்வத்தின் மேலே உள்ள ஆசையே –
எல்லா வற்றையும் உடையவனாய்
இவன் அளவு அன்றிக்கே இருக்கிற அவன் பக்கலிலே
இந்த ஆசையைச் செலுத்தினால்
பிறர் கீழே இருந்து துதிக்க வேண்டும்படி இவனை வையான் –
————————————————————————————————————————————————————————–
ஆபத்து வந்தால் கண்ணால் காணாமல்
கண்ணன் ஒருவனே ரஷகன்
வடமதுரை பிறந்தான்
பொருள் கை உண்டாய் செல்ல காணில் போற்றி -கண்ணா தோடு பட்டது அல்லால் காதல் மற்று இல்லை
இருள் கொள் துன்பத்தில் காணில் என்னே என்பாரும் இல்லை
அசுரர் மங்க -வடமதுரை பிறந்தவன் அருள் கொண்டு ஆளாக உய்யல் அல்லால்
பொருள் -அவிழ்ப்பது -முடிகிறது -சேமிப்பது
கையில் உண்டாக
போற்றி -பர சம்ருத்தி வேண்டுவாராய் போலே
இன்னமும் கிளிச் சீரை பெருக வேண்டும் -பணம் வைக்கும் பட்டு துணி
குளிரப் பார்க்குமே
ஏற்று எழுவார் –
ஸ்தோத்ரம் மயங்கி
அஞ்ஞான துக்க ஹேது வெறுமை என்னே ஐயோ என்பாரும் இல்லை
நம் ஜீயர் -ஐயோ என்பாரும் இல்லை
பிள்ளை திரு நறையூர் அரையர் -பிச்சை வாங்கினவன் பணம் படைத்தவனாக
கொடுத்தவன் ஏழையாக
கண் எடுத்துப் பார்க்காமல் கௌரவம் பார்த்து –
இட்டே வேருவியன் ஆனாலும்
அவனாலே சம்ருத்தன்
என் எண்ணுதல்
கால் கழுவி போதல்
இன்னான் இன்னானுக்கு பந்து -இது கொண்டு ஜீவிக்கலாய் இருக்க
அவ்வளவும் செய்வார் இல்லை
மருள் கொள் செய் அசுரர் –அபேஷியாமல் தானே வந்து ரஷிக்க
அகர்ம வச்யன் தான் வந்து அவதரித்து
பாத்ரபூதனாய் அருளை விலக்காமல்
தன அருள் கொள்வாரை உதாரர் என்பான் அவன்
இதுக்கு மேல்பட செய்ய வேண்டுவது இல்லை பூரணன்
லஷ்மி தவ பத்னி ரத்னாகாரம் புத்திரன் ப்ரஹ்மா
நெஞ்சை தான் கொடுக்க முடியும்
குறை ஒன்றும் இல்லா கோவிந்தன்
சம்பந்தம் ஸ்வாபாவிகம்
புகுர நின்ற அம்சம் -தன பேறாக நினைப்பான்
இது ஒன்றே அரண்
மற்றவை பஷகம் ரஷகம் இல்லை
கோயில் வராமல்
கேட்டது எல்லாம் கிடைக்க வில்லை
வேற இடம் போகிறேன் -தேவதாந்தரம்
கொடுப்பது போல் கொடுக்கும்
எல்லாம் பறித்து போகும்
புது வெள்ளம் பழைய வெள்ளம் அடித்து போகும்
அநர்த்தம்
நல்லது அல்லாதது கேட்டாலும் கொடுக்காத தாய் பிதா போலே இவன்
நெருப்பிலே கை வைப்பது குந்துமணி சிகப்பு குழந்தை நினைக்க
புறம்பு இவை
ஆதரேனா யதா தனவந்தம் -ஸ்தோத்ரம் தனம் இச்சையாக
அது போலே -விச்வகர்த்தா -பகவான் இடம் செய்தால் -பந்தனம் யார் தான் விடு பட மாட்டான்
சுபாஷிதம்
ஆதாரம் உரக்க வழக்கம் -கண்டவா பாடி பழக்கம்
தனவந்தம் -உதாரன் -இல்லை -பாரில் ஓர் பற்றையை
இடிச்ச புலி போலே இருக்க
தனம் இச்சையால் தூண்ட பட்டு
விட்டு விட்டு எம்பெருமான் இடம்-சர்வத்தையும்
கருணை மிக்கு ஆனுகூல்யம் பண்ண பெறில்
தான் தாளின் கீழ் சேர்த்து அவன் செய்யும் சேமம் –
————————————————————————————————————————————————————–
Leave a Reply