ஒன்பதாம் பத்து -பிரவேசம் –
முதல் பத்தால் -பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதி இட்டார் –
இரண்டாம் பத்தால் -அந்த கைங்கர்யத்தில் களை அறுத்தார் –
மூன்றாம் பத்தால் – களை அறுக்கப் பட்ட அந்த கைங்கர்யமானது
பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் -என்றார் –
நான்காம் பத்தால் -இப்படிப் பட்ட கைங்கர்யத்துக்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் -என்றார்
ஐந்தாம் பத்தால் -அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே -என்றார் –
ஆறாம் பத்தால் -விரோதிகளைப் அளிக்கும் தன்மையனான சர்வேஸ்வரன் திருவடிகளிலே சரணம் புக்கார் –
ஏழாம் பத்தால் -இப்படி பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும்
தக்தபட நியாயம் போலே சம்சாரம் தொடருகிற படியைக் கண்டு நோவு பட்டார் –
எட்டாம் பத்தால் -இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தே
தக்தபட நியாயம் போலே நம்மை விடாமல் தொடருகிறது
நம்முடைய ஆத்மாவிலும் ஆத்மா சம்பந்தப்பட்ட பொருள்களிலும்
நசை அறாத படியாலே -என்று பார்த்து -அவற்றில் ஒரு நசை இல்லை -என்றார்
இப்படி நசை அற்ற பின்பும் பாது காவாமல் ஒழிவான் -என்
என்று ஐயம் கொள்ள
நான் நாராயணன்
எல்லா ஆற்றலோடும் கூடினவன்
உம்முடைய விருப்பங்கள் அனைத்தையும் செய்து முடிக்கிறேன் –
என்று அருளிச் செய்ய
அவனுடைய சீல குணங்களிலே ஆழம் கால் படுகிறார்
இந்த ஒன்பதாம் பத்தில் –
————————————————————————————————————————————————————
கொண்ட பெண்டிர் -பிரவேசம் –
மேல் திருவாய் மொழியிலே
பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தலை எல்லையாக உடைய
தனக்கு மேல் ஓன்று இல்லாததான பேற்றினை
யாதொரு தடையும் இல்லாதபடி அவன் காட்டிக் கொடுக்க
மிக்க ப்ரீதியோடே
காட்டிக் கொடுத்த அந்த பேர் உபகாரத்தைக் கூறிக் கொண்டு
சயமே அடிமை தலை நின்றார் -என்றும்
நீக்கம் இல்லா அடியார் -என்றும் –
கோதில் அடியார் -என்றும்
பாகவதரை விரும்பினாராய் நின்றார் –
ஆப்பான் திருவழுந்தூர் அரையர் -தாம் ஆஸ்ரியராய் அடைந்ததும் திருவாய்மொழி கேட்டதும்
ஆழ்வான் உடன் அன்றோ –
சயமே அடிமை தலை நின்றார் -என்றது -ஸ்ரீ பரத ஆழ்வானை போல்வாரை –
நீக்க மில்லா அடியார் -என்றது -இளைய பெருமாளை போல்வாரை –
கோதில் அடியார் -என்றது -ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் போல்வாரை காணும்
என்று ஆழ்வான் பணித்தாராக பணிப்பர் –
இப்படிப் பட்ட -பாகவதர்களுக்கு அடிமை பட்டு இருத்தல் ஆகிற பேற்றின் எல்லையை நமக்குத் தந்த
சர்வேஸ்வரனே இயல்பாக உள்ள பந்து –
அல்லாதார் அடங்கலும் ஒரு காரணம் பற்றி வந்த பந்துக்கள்
அவனே இயல்பாகவே அமைந்த நல்ல எண்ணத்தை உடையவன் –
அல்லாதார் பக்கல் தோன்றுகிற நல்லெண்ணம் ஒரு காரணத்தைப் பற்றி
வருகிற நல்லெண்ணம் -ஆகும்
என்று
பிராப்ய ஆபாசங்களைத் தவிர்த்து
அவனே பிராப்யன் என்றும் –
பிராபக ஆபாசங்களைத் தவிர்த்து -அவனே பிராபாகன் என்றும்
அறுதி இட்டு பிறந்த லாபத்தாலே உண்டான உவகையாலே
மக்களைக் குறித்து
நீங்கள் ஒரு காரணம் பற்றி வந்த பந்துக்களான மற்றோரை விடுத்து
இயல்பாகவே உள்ள பந்துவான அவனையே பற்றி
உஜ்ஜீவிக்க பாருங்கோள்-என்று
பரோபதேசத்திலே மூளுகிறார்
சர்வேஷாம் ஏக லோகாநாம் பிதா மாதா ச மாதவ
கச்சத்வம் ஏனம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -பாரதம் –
உலகில் உள்ள எல்லா உயிர்கட்கும் திருமகள் கேள்வரே தந்தையும் தாயுமாக இருக்கிறார் -ஓர் ஆடவர் ஏறே –
காப்பவரான அவரையே சரணமாக சென்று அடைமின் –
பூதாநாம் ய அவ்யய பிதா – சஹஸ்ரநாமம் –
மற்றையோர் தாய் தமப்பன் என்ற பேரே
நாலு நாள்கள் இருந்து மணல் கொட்டகம் போலே அழிந்து போவார்கள் –
அங்கன் இன்றிக்கே -அழியாதே என்றும் ஒக்கக் காப்பாற்றும் தமப்பன் அவனே ஆயிற்று –
தனக்கு நலத்தை கூறிய விபீடணனை –
அன்யஸ்து ஏவம் விதம் ப்ரூயாத் வாக்யம் ஏதத் நிசாசர
அஸ்மின் முகூர்த்தே நபவேத் த்வாம் து திக் குலபாம்சனம் – யுத்த -16-15-
அரக்கர் குலத்துக்கு குறையை விளைவித்த உன்னை விடுகிறேன் -என்று
புறப்பட விட்டான் அன்றோ ராவணன் –
அவன் தம்பியை ஒழியச் செல்லாது என்றார் அன்றோ -பெருமாள் –
பெற்ற தமப்பன் பகையாக அவனிலும் அண்ணியனாய் வந்து உதவினான் அன்றோ பிரகலாதனுக்கு
மகாராஜர் தமையனால் நோவு பட தனிமையில் வந்து உதவினார் அன்றோ பெருமாள் –
மாதா பிதாக்கள் கை விட்ட ஜெயந்தனுக்கு ப்ரஹ்மாஸ்த்ரத்தை தொடுத்தவர் தாமே அன்றோ புகல் ஆனார் –
ஸ பித்ராச பரியக்த ஸூ ரைச்ச ஸ மகரிஷிபி
தரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத -சுந்தர -38-33-
அந்த காகாசுரன் தமப்பனாலும் முனிவர்களாலும் தேவர்களாலும்
விடப்பட்டவனாய் மூன்று லோகங்களிலும் நன்றாக திரிந்து
அந்த பெருமாளையே சரணம் அடைந்தான் -என்கிற படியே
ஸ-நீரிலே புக்கு அழுந்துவாரைப் போலே
தாரகர் ஆனவரே பாதகராய்-அம்பு தொடுக்கும் படி சூழ்த்துக் கொடு நின்ற அவன் –
மற்றைய பதங்கட்கு முன்பு கூறியது போன்று கொள்க –
த்ரௌபதி தர்மத்திலே தலை நின்றவர்களான கணவன்மார் ஐவரும் வெறும் தரையைக் கீறிக் கொண்டு இருக்க
அவர்களை ஒழிய சேயனான கிருஷ்ணனை நினைக்க –
கோவிந்தேதி யத் ஆக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூரவாசினம்
ருணம் பிரவ்ருத்தம் இவ மே ஹ்ருதயாத் ந அபசர்பதி -பாரதம் -உத்தியோக பர்வதம் -58-22-
அவள் ஆபத்தை அடைந்தவளாய் நம்மை நினைக்க நாம் உதவப் பெற்றிலோம் -என்று
த்ரௌபதி யானவள் தூரத்தில் இருக்கிற என்னை கோவிந்தா என்று அழைத்து அழுதாள் –
எனபது யாது ஓன்று உண்டோ -அது வட்டிக்கு வட்டி ஏறின கடன் போன்று
என் மனத்தின் நின்றும் நீங்க வில்லை என்று புண் பட்டான் அவன் அன்றோ –
அர்ஜுனன் என் கார்யங்களை என்னால் செய்து கோடல் அரிது
என்று சோகிக்க
உன்னைத் தொற்றி வருவது ஓன்று பேற்றுக்கு உடலாம் அன்றே அன்றோ உனக்கு சோகிக்க வேண்டுவது –
உன்னுடைய எல்லா பாரங்களையும் நம் தலையிலே போகட்டு -நாமே கடவோம் -என்று இரு –
உன்னுடைய பகைக் கூட்டத்தை எல்லாம் நாமே போக்கித் தருகிறோம் -என்றான் அன்றோ –
இப்படிகளாலே
அவனே நிருபாதிக பந்து
அவனையே பற்றப் பாருங்கோள் -என்று
தாம் அறுதி இட்ட அர்த்தத்தை
தம்மைப் பற்றினார்க்குத் தஞ்சமாக உபதேசித்து அருளுவதாக
பரோபதேசத்தில் மூளுகிறார் –
————————————————————————————————————————————————————————
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே
————————————————————————————————————————————————————————-
ஒரு காரணம் பற்றி வந்த மனைவி புத்திரர்கள் முதலானவர்களால் ஒரு பிரயோஜனம் இல்லை –
இயல்பாகவே பந்துவாய் இரா நின்ற சர்வேஸ்வரனே ஆபத்துக்கு துணைவன் –
அவனையே பற்றி உஜஜீவியுங்கோள் -வேறு துணை இல்லை -என்கிறார் —
கொண்ட பெண்டிர் –
தான் தன் மனத்திலே உறவாக நினைத்து இருக்கும் மனைவி –
அன்றிக்கே
ஒரு காரணம் இல்லாமல் வந்தவள்
அன்றிக்கே
பொருள் முதலான காரணங்களாலே கொள்ளப் பட்ட மனைவி -என்னுதல்-
அன்றிக்கே –
தாய் தந்தையர்களை செங்கற்சீரை கட்ட விட்டு
தான் ஈட்டிய செல்வம் முழுதினையும் கொடுக்கும் படி
தஞ்சமாக நெஞ்சிலே கொண்ட மனைவி -என்னுதல் –
அன்றிக்கே
ஆச்சார்யனும் பரம்பொருளும் செல்வமும் முதலானவைகள் எல்லாம்
இவளே ஆக கொண்ட பெண்டிர் -என்னுதல் -என்றது
இவள் இருப்பதனால் அல்லவா எல்லாம் -என்று இருக்கையைத் தெரிவித்த படி –
இனி -கொண்ட -என்பதனை மக்கள் முதலாயினாருக்கும் கூட்டிப் பொருள் கோடலுமாம் –
பந்துக்களாக தான் நினைத்து இருக்கும் மக்கள் முதலாயினோர் -என்றபடி
மக்கள் –
அப்படிப்பட்ட அவளுடைய இளமையை அழிய மாறி பெரும் பிள்ளைகள் –
உற்றார் –
தனக்கும் ஒத்தவர்கள் என்று ஆதரித்த சம்பந்திகள் –
சுற்றத்தவர் –
அவர்கள் மதிக்கும் படியான தாயாதிகள் –
பிறரும் –
மற்றையோரும் –
முன்பு சொன்னவர்களுக்கும் இவர்களைக் காட்டிலும் வாசி பெரிது இன்று -என்றபடி –
அன்றிக்கே
பிறரும்
நட்பினர்
பணியாள்கள்
முதலாயினோர் -என்றுமாம் –
கண்டதோடு பட்டது அல்லால் –
இவனைக் கண்ட போது சிநேகிக்கும் அது ஒழிய -என்னுதல் –
கையிலே பொருள் கண்ட போது அதனை நோக்கி ச்நேகிக்குமது ஒழிய -என்னுதல் –
காதல் மற்று யாதும் இல்லை –
பிரயோஜனம் கண்ட போது உடன்படுமது ஒழிய வேறு வகையில் சிறிதும்
சிநேகம் உடையார் அல்லர் -என்னுதல்
காணாத போது மெய்யான அன்பு சிறிதும் இல்லை -என்னுதல்
மற்று -எனபது
காணாத போதைக் காட்டுமோ -எனின்
கண்டதற்கு மறுதலை காணாத போது அன்றோ –
காதல் மற்று -அன்பும் அதற்கு மறுதலையான வெறுப்பும் இல்லை -என்னுதல்
அன்பும் அதுக்கடியான உறவும் இல்லை -என்னுதல் –
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் –
பத்துத் திக்குகளிலும் உண்டான எல்லா ஆத்துமாகளையும்
பிரிகதிர் படாமே திரு வயிற்றிலே வைத்து காப்பாற்றிய
உபகாரத்தை உடையவன் –
இவற்றின் பக்கல் ஒன்றும் இல்லாத அன்று ரஷிக்குமவன்
பிரளயம் தோன்றிய நிலையில் காப்பதற்கு சாதனமும் இல்லை
வேண்டுகோளும் இல்லை அன்றோ
பாது காப்பதற்கு தான் அறிந்த ஆபத்தும் சம்பந்தமும் அன்றோ வேண்டுவது
அப்போது விலக்குகைக்கு ஒரு சாதனம் இல்லையே
பிரான் –
உபகார சீலன் ஆனவன் –
தொண்டரோமாய் உய்யல் அல்லால் –
அவனுக்கு நம்மதாய் இருப்பது ஓன்று கொடுக்க வேண்டுவது இல்லை
அடியோமாய் பிழைத்து போமது ஒழிய
அடிமை -ஸ்வரூப மான பின்பு அதனை இழைக்கை யாவது
அழிதலே அன்றோ
விதி முகத்தால் அன்றிக்கே
மறை முகத்தாலும் இவ்வர்த்தத்தை அறுதி இடுகிறார் -மேல்
இல்லை கண்டீர் துணையே-
ஆபத்துக்கு வேறு ஒரு பற்றுக் கோடு உண்டாய் இருக்க
இவனைப் பற்றச் சொல்லுகிறேன் அல்லேன்
அவனைப் பற்றிச் ஸ்வரூபம் பெறுதல் இல்லையாகில் இல்லையாம் இத்தனை –
————————————————————————————————————————————————————————–
ஸ்ரீய பதி-அருளப் பெற்ற -ஆழ்வார்
அனுபவம் திவ்ய பிரபந்தம் –
பாகவத சேஷத்வம் அனுபவித்தார் -கீழே –
பகவத் பக்தி பூர்ணம் அப்படி இருந்தால் ஆகும் –
ஐஸ்வர்யம் கைவல்யம் -பகவத் பிராப்தி மூன்றையும் கொடுத்தாலும்
பாகவத சாமாகம் ஏற்படுத்திக் கொடுக்கும் அவனே பந்து
லோகத்தில் ஆபாச பந்து -மேல் எழுந்து பார்த்தால்
முத்து சிப்பி வெள்ளி போலே தெரிவது போலே –
உபாதி -கர்மம் பலனாக இந்த பந்துத்வம்
நிருபாதிக பந்து இயற்க்கை உறவினன்
ஆபாச பிரதீதியில் பந்துகளாக தெரியும் மற்றவர்கள்
நித்ய விரோதி-நிகில விரோதி நிரசன பூர்வகமாக காட்டிக் கொடுக்க
பாகவத சேஷத்வ பர்யந்தமாக நிரதிசய புருஷார்த்தம் -காட்டிக்கொடுக்க
மகா ப்ரீதி உடன் அனுபவித்தார்
சயமே அடிமை
நீக்கமில்லா அடிமை
கோதில் அடிமை
ஆத்தான் திரு வழுந்தார் அரையர் -ஆசார்யர் கூரத் ஆழ்வான்-பஞ்ச சம்ஸ்காரம் -திருவாய் மொழி கேட்டு அருளி
சயமே அடியார் பரத ஆழ்வான் -சுயம் புருஷார்த்தமாக -கைங்கர்யம் -பெருமாள் முக விகாசமே- ஹேது
நீக்கமில்லா அடியார் -ஜலான் மதசா -இளைய பெருமாள் –
கோதில் அடியார் -குற்றம் இல்லா அனக நித்த்ய சத்ருக்னன் ராம பக்தி குற்றம் இல்லா
பாகவத சேஷத்வம் எல்லை அருளிய சர்வேஸ்வரனே நிர்பாதுக பந்து
கர்மம் அடியாக மற்றவர்
நிர்பாதுக சூக்ருத்து
அவனே பிராப்ய பிராபகம் -அறிந்த ஹர்ஷம்
ஆ பாசம் -மேல் எழுது பார்த்தால்
பிராப்யாபாசம் -ஐஸ்வர்யம் -ஆமுஷ்கம் ஸ்வர்க்காதி
பிராபகாபாசம் -கர்ம யோகம் இத்யாதி
சேதனரைக் குறித்து உபதேசிக்கிறார் ஹர்ஷம் –
ஒரு பத்து உபதேச பதிகம் உண்டே
இதில் முதலிலே
பிதா மாதா மாதவ -கதி நாராயணா
யதா அவயய பிதா -அழியாத பிதா
நாலு நாள் இருந்து மணல் கொட்டகம் போலே அல்லாதார் அழிந்து போவார்
என்றும் ஒக்க ரஷகன் அவயய பிதா அவனே ஆயிற்று
பிரபன்ன பரித்ரானத்தில் சொன்னோம்
நம்பிள்ளை சொன்னதே -வடக்கு திரு வீதி பிள்ளை
தமையன் ரஷகன் இல்லை -வாலி ராவணன் -பக்கல் கண்டோம்
குலபாம்சன் -திக் போ தொலை சொன்னான் ராவணன்
அவன் தம்பியை விட செல்லாது பெருமாள் சொல்லி –
ஜெயெஷ்டன் வாலியால் நோவு பட
சுக்ரீவன்
தமப்பன் -நலிய பிரகலாதன்
ஜெயந்தன் -பித்ராச -ச மாதா முதலில் தகப்பனாரும் கை விட்டார் -சொல்ல சகாரம் -தாமே இ றே புகல் ஆனார்
சகா -நீரிலே புக்கு அழுந்துவாரே போலே
தண்ணீர் வாழ்விக்க ஏற்பட்டது போலே
சர்வருக்கும் தாரகன் சர்வேஸ்வரன் -அவன் இடம் குற்றம் –
பயிலும் சுடர் ஒளி-நம்பனை பாசுரம் வியாக்யானம் கண்டு கொள்வது –
த்ரௌபதி -வெறும் தரை கீறி நிற்கும் தர்ம பிரசர் -ஹா கிருஷ்ணா தூரஸ்தன் கண்ணன்
பதறி ஓடி வந்து ரசிக்க -ரிணம்
கோவிந்தா கூட்ட சொல் -இன்னும் நெஞ்சை விட்டு போகாமல் திரு உள்ளம் புண் பட்டான் எல்லாம் செய்துமுடித்ததும்
அர்ஜுனன் சோகிக்க – சர்வ பலங்களையும் நம் தலையிலே பொகட்டு-சர்வ தரமான் -மோஷயிஷ்யாமி-
இப்படிகளாலே அவனே நிர்பாதிக பந்து
மாம் என்று தொட்டுக் காட்டி அருளி –
முதல் பாட்டில் -தார புத்ராதிகளால் ஒரு பிரயோஜனம் இல்லை
ஔபாதிகம்
அவனே ஆபத்சகன் -வேறு துணை இல்லை என்கிறார் –
உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே
கைக் கொண்ட பெண்டிர் —
கண்டதோடு -பார்க்கும் பொழுது வேஷம் -பட்டது அல்லால்
மற்று காதல் யாதும் இல்லை
முற்றவும் உண்ட பிரான் -ஆபத்சகன் -பிரளய ஆபத்தில்
கேட்கவும் இல்லாத பூமியை ரஷித்து
தொண்டராக உய்யல் அல்லால் வேறு துணை இல்லை
கொண்ட பெண்டிர்
ஹிருதயத்தில் பந்துக்களாக கொண்ட -அனைத்துக்கும்
தான் நினைக்க -அவர்கள் நினைவில் இல்லை
த்ரவ்யாதி -யால் கொண்ட
பணம் கொடுத்து ஸ்திரீ கொள்வார்கள் முன்னம்
இப்பொழுது வர தஷனை முன்பு வது தஷனை
வில் ஒடித்து எருது அடக்கி கன்னிகை ச்வீகரிக்கை
தஞ்சமாக -இவளை கொண்ட என்னுமாம்
மாதா பிதா செங்கல் சீரை கட்ட விட்டு -தான் சம்பாதித்த தனம் அவள்
எல்லாம் அவளேயாக கொண்ட
அவரே இனி ஆவாரே ஆழ்வார் -சேலே ய கன்னியரும்
இவனோ எல்லாம் இவளே
சர்வ விசெஷணம் கொண்ட -பார்யாதிகள்
லோக விவகாரம் காட்டி அருளி
மக்கள் யௌவனம் அழிய மாறி பெற்ற பிள்ளைகள்
உற்றார் -தனக்கு தகுதி யாக -கிட்டிய
மதிக்கும் சுற்றத்தவர் தூர உறவினர்
கை விடும் பொழுது எல்லாம்
கண்டதோடு பட்டது அல்லால் கண் முன்னாள் சந்நிதியில்
த்ரவ்யம் கண்ட பொழுது மட்டும்
கையில் காசு கண்ட பொழுது
அத்தை பற்ற சினேகிக்கும்
காணாது பொழுது
கண்டத்துக்கு மற்று எதிர்பதம்
காதல் இல்லை மற்ற பொழுது –
காதல் மற்று சிநேகம் த்வேஷமும் இல்லை
சிநேகமும் பந்துவும் இல்லை
பத்து திக்கு சேதனர் பிரி கதிர் படாமல் -விழுங்கி –
ஒன்றும் இல்லாத பொழுதும் ரசிக்கும்
ஆபத்தே செப்பேடாக
சாதனம் இல்லை
அர்த்தித்வமும் இல்லை
ஆபத்தும் தான் அறிந்த சம்பந்தமும் கொண்டே நாம் அறியா விட்டாலும் –
விலக்க பரிகரம் இல்லை -அப்ரதிஷேதம்
பிரான் உபகார சீலன் –
தொண்டரொம்
அடியோம் -என்று சொல்வதே போதும்
நம்மதாக இருப்பது கொடுக்க வேண்டுவது இல்லை
சேஷத்வம் ஸ்வரூபம்
இல்லை என்றால் தன்னையே அழித்து கொள்வது
அன்வயத்தால் இல்லாமல்
இல்லை கண்டீர் துணை
உடன்பாடு எதிர்மறை இரண்டாலும் சொல்லி
தனியன் இது தான் சேவிக்க வேண்டும் –
வேறு யாரோ வந்து வேற சேவிக்க
அத்தை சேவிக்க கூடாது
இல்லை யானாலும் சொல்ல கூடாது -வக்கீல் பாஷை
தொண்டராக உஜ்ஜீவிக்கலாம்
அது துணை -அதுவே துணை -மற்று ஓன்று இல்லை –
இல்லை கண்டீர் துணை
ஆபத்துக்கு வேறு
அவனை பற்றி ஸ்வரூபம் பெறுதல்
இல்லையாகில் தம்மையே இழக்க நேரிடும் –
——————————————————————————————————————————————————————-
Leave a Reply