சூரணை -20-அவதாரிகை –
ஆக –ஏவ பூதோசி -என்று தொடங்கி-இவ்வளவும் வர –சரீர சமநந்தரம் பெரும் பேற்றையும்
இங்கு இருக்கும் நாள் கால ஷேபம் பண்ணும் பிரகாரத்தையும் அருளிச் செய்தாராய் நின்றார்
இனி
இவ் வதிகாரிக்கு சரீர விஸ்லேஷ தசையில் அந்திம ஸ்ம்ருதி நிரபேஷமாகத் தான் செய்யும் ஏற்றங்களை அருளிச் செய்கிறார் –
சரீர பாத சமே து கேவலம் மதீயயைவ தய்யா அதிபர புத்த
மாமேவா வலோகயன் அப்ரச்யுத
பூர்வ சம்ஸ்கார மநோரத
ஜீர்ண மிவ வஸ்த்ரம் ஸூ கேன இமாம் ப்ரக்ருதிம்
ஸ்தூல ஸூ ஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய
ததா நீமேவ மத பிரசாத லப்த
மச் சரணார விந்த யுகளை
காந்திகாத் யந்திக பரபக்தி பரஜ்ஞான பரம பக்தி க்ருத
பரி பூர்ண அநவரத நித்ய விசததம
அநந்ய பிரயோஜன அநவதிக அதிசய ப்ரிய
மத் அனுபவ ஸ்தவம்
ததாவித மத் அனுபவ ஜனித
அநவதிக அதிசய ப்ரீதி காரிதா
அசேஷ அவஸ்த உசித
சேஷ சேஷ தைக ரதி ரூபா
நித்ய கிங்கரோ பவிஷ்யசி
சரீர பாத சமே து கேவலம் மதீயயைவ தய்யா அதி பிர புத்த –
இச் சரீர விஸ்லேஷ தசையில்
உமக்கு ஒரு விசேஷம் உண்டு
அது தான் ஏது என்னில்
அதி பிரபுத்த –
ஸ்வஸ்த தசையிலும் காட்டில்
அவ்வளவில் வெளிச் செறிப்பு மிகையாம்(-ஸ்ருத ப்ரகாசகர் காட்டி அருளுகிறார்-அர்ச்சிராதிகதியில் செல்லும் ஆத்மா ஸூஷ்ம்நா நாடி மூலம் பிரயாணித்து -அனுக்ரஹித்துக் காட்டி அருளுவான் அன்றோ -தனியாக -கேவலம் -அனுக்ரஹம் இது போன்றவை)
அதுக்கடி என் என்னில்
கேவலம் மதீய யைவ தய்யா
அவ்வளவில் எங்கே போயிற்று எனலாம் என் பிரசாதத்தை
ஆனால் இது முன் பிறந்த பிரசாதம் அடியாகப் பிறந்ததோ என்னில்
கேவலம் –
இப்போது உண்டாயிற்று
கர்ம யோகம் அடியாக ஜ்ஞான யோகம் உண்டாய்
அது அடியாக பக்தி உண்டாய்
அது பரம பக்தியாமோபாதி
ஓன்று நிதானமாக (காரணமாக)வந்தது அல்ல-நிர்ஹேதுகமாக இப்போது உண்டாயிற்று
ஆனால் இவ்வளவாக கீழ் இவனுக்கு பிறந்த பாக விசேஷங்கள் அடைய
போக உபகரணமாய் கார்யம் செய்கைக்கு உருப்பாமோ என்னில்-மதீய யைவ தய்யா –
இத்தை ஒழிந்தால் வேறு அடி (காரணம்-பேற்றுக்கு உபாயம் அவன் நினைவே என் உணர்வின் உள்ளே நிறுத்தினேன் -அதுவும் அவனது இன்னருளே)இல்லை
கீழேயும் –மதீய யைவ தய்யா -என்று வைத்து
இங்கும்- மதீய யைவ தய்யா -என்கையாலே
விஷயீ கரிக்கும் தசை யோடு -விஷயீ கரித்த தசையோடு-
விரோதி போக்கும் தசையோடு -அனுகூலங்களை உண்டாக்கும் தசையோடு
வாசி அற எல்லா தசைகளிலும் இவனுக்கு பரிகரமாய் உள்ளது வெறுமை
கார்யம் செய்கைக்கு அடி அவன் பிரசாதமே என்றது ஆயிற்று –
பிரபுத்த -என்ன அமைந்து இருக்க
அதி பிரபுத்த -என்றது பூர்வ அவஸ்தை களில் காட்டில் இதுக்கு விசேஷம் உண்டு என்கைக்காக-(போதம் ஞானம் புத்த ஞானி அதி பிரபுத்த விசேஷ ஞானி)
அது தான் ஏது என்ன
மாமேவ அவலோகயன் –
இது வாயிற்று இதுக்கு உண்டான விசேஷம்
முன்புத்தை அறிவு ஒரு தலையில் சரீரத்தையும் ஒரு தலையில் பகவத் விஷயத்தையும்
இரண்டையும் அவகாஹித்து இருக்கும்
அங்கன் அன்றியே தன்னை அபேஷியாதே என் பிரசாதம் அடியாக வந்த அறிவு ஆகையாலே
என்னை ஒருவனையே விஷயீ கரித்து இருக்கும்
அதுக்கு மேலே
அப்ரச்யுத பூர்வ சம்ஸ்கார மநோரத –
பூர்வ சம்ஸ்காரத்துக்கு பிரச்யுதி இல்லாத மநோ ரதத்தை வுடையீராய்
அதாவது -பகவத் சமாஸ்ரயணம் பண்ணி வைத்து
அபசாரங்களை கனக்கப் பண்ணிப் போந்து
சாம் (சாகும்)போதாக-நாமோ சாவப் புகா நின்றோம்
நம் திறத்தில் ஈஸ்வர ஹ்ருதயம் எங்கனே இருக்கிறதோ
நமக்கு பேறு எங்கனே இருக்குமோ
நாம் அநந்தரம் என் என்பதாகப் புகுகிறோமோ-நம்மால் செய்ய அடுப்பது என் –
என்று கலங்குகை அன்றிக்கே –
தன்னை இசைவித்த பகவத் பிரசாதம் அடியாக பிறந்த ஆசார்ய விஷயீ காரத்தையும்
தத் அனுகுணமான ஆசார்ய உபதேசத்தையும்
அது அடியாக வருகிற பகவத் சமாஸ்ரயணத்தையும்
சமாஸ்ரயித்த பின்பு பிறக்கும் வ்யவசாயத்தையும்- வ்யவசாயா நந்தரம் தனக்கு
ஈஸ்வரன் பிறப்பிக்கும் பாக விசேஷங்களையும்
அனுசந்தித்துக் கொண்டு
கீழ் நின்ற நிலை இது -பின் பிறந்த பாக விசேஷம் இது
ஆன பின்பு நமக்கு இனி அவன் பேற்றைத் தருகைக்கு ஓர் குறையும் இல்லை என்னும்
சம்ஸ்காரத்துக்கு
பிரச்யுதி இல்லாத மநோ ரதத்தை வுடையீராய் -என்றபடி
அதுக்கு மேலே –
ஜீர்ண மிவ வஸ்த்ரம் ஸூ கேன இமாம் ப்ரக்ருதிம் ஸ்தூல ஸூஷ்ம ரூபாம் விஸ்ருஜ்ய –
ஸ்தூலமாயும் ஸூஷ்மமாயும் இருந்துள்ள பிரக்ருதியை
ஜீரணமான வஸ்த்ரத்தைக் கழித்து
ஜீர்ணமுமாய் மலினமுமான வஸ்த்ரத்தை பரிஹரிக்கும் போது
ஜூகுப்சை யுடன் பரிஹரிக்குமா போலே
மாம்ஸ அஸ்ருகாதி மயமான இச் சரீரத்தை விடும் போதும் ஜூகுப்சை பிறக்கும் என்று
திருஷ்டாந்த பலத்தாலே சித்திக்கிறது
வஸ்த்ரத்துக்கும் உடம்புக்கும் உள்ள சம்பந்தமே யாய்த்து
ஆத்மாவுக்கும் உடம்புக்கும்
ஆகையாலே –ஸூ கேன -என்கிறது
அன்றிக்கே சம்பந்தத்தில் வாசி யுண்டானாலும் என் பிரசாதம் அடியாக கழிகையாலே
தலையில் சுமையை பொகடுமா போலே அநாயாசேன விட்டு -என்னவுமாம் –
இப்படி சரீரத்தோடே இருக்கும் போது பிறக்கும் பாக விசேஷங்களை அருளிச் செய்தவாறே
இப் பாக விசேஷம் எல்லார்க்கும் பிறக்கும் அது ஒன்றோ
இவ்வளவு இல்லாதார் இப் பேற்றை இழக்கும் அத்தனையோ
இவ்வளவு உண்டானாலும் இன்னமும் அவஸ்ய அபேஷிதமான பாக விசேஷங்கள் சில யுண்டாம் இருக்கும்
அவை யுண்டாம்படி எங்கனே -என்ன
ததா நீமேவ -(அந்த ஷணத்திலேயே)
இச் சரீர விஸ்லேஷ சம நந்தரத்திலேயே பரம பக்தி பர்யந்தமாக முன்பு பிறவாத பாக விசேஷம் எல்லாம் உண்டாகக் கடவது
கீழ் சில உண்டாய் இருக்கையும்- இல்லாமல் இருக்கையும் -பேற்றுக்கு அப்ரயோஜகம்
உண்டான அம்சம் உண்டாகில் போகத்துக்கு உறுப்பாகிறது
இல்லை யாகில் சரீர சமநந்தரத்திலே
க்ஷண மாத்ரத்திலே எல்லாவற்றையும் உடையன் ஆகிறான் -என்கிறார்
உபாசகனுக்கு உபாசன சமாப்தியிலே ஒரு குறை வரிலும்
ப்ராப்ய புண்ய க்ருதான் லோகா நுஷித்வா சாஸ்வதீ சமா
ஸூசிநாம் ஸ்ரீ மதாம் கேஹே யோக ப்ரஷ்டோஸ்பி ஜாயதே-ஸ்ரீ கீதை -6-42-என்று கொண்டு
கீழது மேலதாகப் பலிக்கும்
(ப்ராப்ய புண்ய க்ருதாம் லோகாநுஷித்வா ஸாஸ்வதீஸ் ஸமா—
ஸூசீநாம் ஸ்ரீமதாம் கேஹே யோக ப்ரஷ்டோபி ஜாயதே–৷৷6.41৷৷–நீண்ட காலம் போகம் அனுபவிப்பதால் இவன் தொடக்க நிலை
யோக ப்ரஷ்ட–யோகத்தைத் தொடங்கியவுடன் -அதில் இருந்து நழுவியவன்
அந்த யோக மஹாத்ம்யத்தாலேயே
புண்ய க்ருதாம் -மிக புண்யம் செய்தவர்கள்
லோகான் ப்ராப்ய -அடையும் நல்ல உலகங்களை அடைந்து
ஸாஸ்வதீஸ் ஸமா—அங்குள்ள போகங்களில் திருப்தி ஏற்படும் வரையில் -நீண்ட காலம்
உஷித்வா -அவ் வுலகங்களில் வாழ்ந்து
ஸூசீநாம் –பரி ஸூத்தி யுடையவர்களாய்
ஸ்ரீமதாம் -குண நலச் செல்வம் நிறைந்தவர்கள் வாழும்
மஹதி கேஹே -சிறந்த வீட்டில்
ஜாயதே–பிறக்கிறான் –
யோகத்தைத் தொடங்கியவுடன் அதில் இருந்து நழுவியவன் -யோகத்தின் பெருமையால் –
மிக்க புண்ணியம் செய்தவர் அடையும் நல்ல உலகங்களை அடைந்து -அங்குள்ள போகங்களில்
திருப்தி ஏற்படும் வரையில் நீண்ட காலம் அவ்வுலகங்களில் வாழ்ந்து பரி சுத்தி யுடையவர்களாய்
குண நலச் செல்வம் நிறைந்தவர்கள் வாழும் சிறந்த வீட்டில் பிறக்கிறான் –
ப்ர யத்னம் பண்ணி -யோகாப்யாஸம் ஆசை உடன் ஆரம்பித்து -புண்ணியம் செய்பவர்கள் அடையும் லோகத்தில் –
ஆசை வைத்து நிறைய ஆண்டுகள் கொடுத்து -நிறைய அனுபவிக்க வைக்கிறேன் – ஸ்வர்க்கமும் உண்டு -என்கிறான் இதில் –)
நடுவே ஒரு குறை வரிலும் அதுவே குறையாக அநர்த்தம் பலிக்கும்
இங்கன் அன்றாகில் அந்திம ஸ்ம்ருதி இல்லாத போது
பழைய நிலையேயாய்த் தலைக் கட்டி விடும்(ஜடபரதர்-மானாகவே பிறந்த வ்ருத்தாந்தத்தம்)
ஆன பின்பு இது கூடுமோ என்ன –
மத் பிரசாத லப்த –
தன் தலையில் உபாய பாவம் சுமப்பானுக்கு அல்லவோ கீழ்ச் சொன்ன அநர்த்த சந்ததி எல்லாம் சம்பவிப்பது
அது தான் என் தலையிலே கிடக்குமாகில் அவனுக்கு இவ் வதிசயங்கள் எல்லாம் உண்டாகைக்கு ஒரு குறை இல்லையே
புருஷார்த்த லாபத்துக்கும் ஒரு தட்டு இல்லையே –
ஆனால் தேவர் பிரசாதம் அடியாக லபிக்குமவை தான் எவை என்ன –
மச் சரணார விந்த யுகள ஏகாந்திக ஆத்யந்திக பர பக்தி பர ஜ்ஞான பரம பக்தி –
என்னுடைய நிரதிசய போக்யமான திருவடிகளில் உண்டாய்
ஐகாந்திகமாயும் ஆத்யந்திகமாயும் இருந்துள்ள
பர பக்தி பர ஜ்ஞான பரம பக்திகள் –
க்ருத பரி பூர்ண அநவரத நித்ய விசத தம அநந்ய பிரயோஜன அநவதிக அதிசய ப்ரிய மத் அனுபவ –
முன்பு சொன்ன பர பக்த்யாதிகளால் பண்ணப் பட்டதாய்
பரி பூர்ணத்வாதி விசேஷண விசிஷ்டமாய்
அநவதிக அதிசயமான ப்ரீதியாலே அனுபவிப்பதான
என்னுடைய அனுபவத்தையும் –
ஜனித அநவதிக அதிசய ப்ரீதி காரிதா அசேஷ அவஸ்த உசித சேஷ சேஷதைக ரதி ரூபா நித்ய கிங்கரோ பவிஷ்யசி-
அவ் வனுபவத்தால் உண்டாக்கப் பட்டதாய்
அநவதிகமான அதிசயத்தை உடையதான
ப்ரீதியாலே பண்ணப் படுமதாய்
எல்லா அவஸ்தைகளிலும்
அனுகூலமான எல்லா அடிமைகளிலும் உண்டான
அபிநிவேசத்தையும் வடிவாக வுடைத்தாய்
அபுநரா வ்ருத்தி லஷணமான கைங்கர்யமும்
உமக்கு உண்டாகக் கடவது
என்று பெரிய பெருமாள் அருளிச் செய்கிறார் –
———————————————————————————-
சூரணை -21
மா தே பூத் அத்ர சம்சய
பின்பு நிரூபித்து பார்த்தவாறே
பேறு கனத்து இரா நின்றது
நேர்த்தியைப் பார்த்தால் அத்யல்பமாய் இருந்தது
சூத்திர பலங்களில் ஒன்றுக்குப் பண்ணும் பிரவ்ருத்திகளே குவாலாய் இருந்த தாகில்
இப்படிக் கனத்த பேற்றுக்கு ஓர் ஆயாசம் இன்றிக்கே இருக்க
இவை எல்லாம் கிடைப்பதாக அருளிச் செய்யக் கூடுமோ
என்று எம்பெருமானாருக்கு அபிப்ராயமாக
மா தே பூத் அத்ர சம்சய -என்று அருளிச் செய்கிறார் –
இவ் வர்த்தத்தில் உமக்கு சம்சயம் உண்டாக வேண்டா
பிறருக்கு ஆனால் உண்டாக அமையும்
தனக்கு என்ன ஒரு கைம் முதல் இன்றிக்கே என் பக்கல்
ந்யஸ்த பரரான உமக்கு சம்சயிக்க வேண்டுவது இல்லை –
இது தான் நான் சொன்ன வார்த்தை யாகையாலேயும் சம்சயம் இல்லை
(இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18-ஸ்வ யத்னத்தால் காண்பாருக்கு காணப் போகாது –என்கிறது –ந்யஸ்த பரரான உமக்கு சம்சயிக்க வேண்டுவது இல்லை -)
——————————————————————————————
சூரணை -22-
அந்ருதம் நோக்த பூர்வம் மே ந ச வஷ்யே கதாசன
ராமோ த்விர் நாபி பாஷதே
சக்ருதேவ பிரபன்னாய தவாஸ் மீதி ச யாசதே
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வரதம் மம
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மா ஸூ ச –
அந்ருதம் நோக்த பூர்வம் -மே -ந ச வஷ்யே கதாசன –
இது பொய் அன்று-
இது வரையில் நான் முன்பு சொல்லிப் போந்த வற்றில்
ஒன்றாவது பொய்யாய் இருப்பது இல்லை
அப்படிப் பொய்யாகாமை வைதமாய் வந்தது (விதி கட்டளை)அல்ல
வாசனை இல்லாமையாலே
(முன்பு சொன்னதில் பொய் இல்லை பின்பு சொல்வதிலும் பொய் இல்லை -இப் பொழுது -வர்த்தமானம் -இறந்த காலத்துக்குள்ளும் வரும் காலத்துக்குள்ளும் அடங்கும் அன்றோ)
இனி மேலாகிலும்-அந்ருத பாஷணம் சம்பவிக்கலாமோ -என்ன-ந ச வஷ்யே கதாசன —
வாசனை அடி யற்ற பின்பு இனி மேல் கூடுவது எங்கனே -என்று அருளிச் செய்ய
ஆனாலும் கோவலனாய் வெண்ணெய் வுண்ட வாயனான தேவர் உக்தி அன்றோ -என்ன -(ஏலாப் பொய்கள் உறைபவன் அன்றோ -கஸ்ய பால -கன்றுக் குட்டி பானைக்குள் தேடி இல்லை என்று கண்டு உன்னிடம் சொல்லிப் போக இருக்கிறேன் என்றவன் அன்றோ)
ராமோ த்விர் ந அபி பாஷதே –
இது நம் வார்த்தை அன்றே-
ஆன்ரு சம்சய பிரதரான ரிஷிகள் கோஷ்டியிலே பரிமாறும் வார்த்தை இறே
ராமாவதாரம் என்றால் நாக்கு புரளாது என்னும் இடம் எங்கும் பிரசித்தம் இறே
இனி நம் பக்கல் குறை இல்லையே -என்ன
ஓம் சக்ரவர்த்தி திருமகனாய் எங்கே அருளிச் செய்தீர் -என்ன
சக்ருதேவ பிரபன்னாய தவ அஸ்மீதி ச யாசதே அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வ்ரதம் மம -என்று-
ராமாவதாரத்தில் நாம் கடல் கரையில் சொன்ன வார்த்தையாக இதிஹாஸ ஸ்ரேஷ்டமான
ஸ்ரீ ராமாயணத்தில் ஸ்ரீ வால்மீகி பகவான் எழுதி வைத்த படி கண்டீரே -என்ன
ஆனாலும் இது தேவர் உக்தியோ என்ன
இன்றிக்கே ஒழிந்தாலும் இத்தோடு சக யுக்தி (கோத்ரி) யன்றோ கண்ணனாய் அவதரித்த என் உக்தியும் -என்ன
ஆகில் அது எங்கே -என்ன
சர்வ தர்மான் பரி த்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாஸூச -என்று(பிரார்த்தித்துப் பெறுவதே புருஷார்த்தம் -நாம் செய்யும் பிரபத்தியும் உபாயம் அல்லவே-அதிகாரி விசேஷணம் -விடுவித்துப் பற்றுவிக்கும் அவனே உபாயம்)
கிருஷ்ணாவதாரத்தில் திருத் தேர் தட்டிலே இருந்து நாம் சொன்னதாக
பஞ்சமா வேதமான மகாபாரதத்திலே ஸ்ரீ வேத வியாச பகவான் ஓதி வைத்தபடி பாரீர் -என்ன
ஆகிலும் அவதார பேதம் உண்டே -என்ன
உண்டானாலும் ராமாவதாரத்தில் மெய்யும்
கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும்
இரண்டும் ஒக்கும் இறே ஆஸ்ரிதர்க்கு தஞ்சமாகைக்கு –என்ன
ஆனாலும் அதுவாமோ என்ன
இரண்டும் ஒருவர் வார்த்தை யாகில் அதுவாகைக்கு தட்டு என் -என்கிறார்
(வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்;
வானமே நோக்கும் மையாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட
ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்
காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’
இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3-)
இதி மைவ ஹ்யுக்தம் -என்று
வேத முகத்தாலே யாதல்
வைதிக முகத்தாலே யாதல் -அன்றிக்கே
சரண்யனான என்னாலேயே சொல்லப் பட்டவை அல்லவோ -அவை
———————————————————————————————–
சூரணை -23-
அதஸ் த்வம் தவ தத்த்வதோ
மத் ஜ்ஞான தர்சன ப்ராப்திஷூ
நிஸ் சம்சயஸ்
ஸூக மாஸ்ஸ்வ
(நாயமாத்ம ஸ்ருதி–நாயமாத்மா ப்ரவசனேன லப்⁴யோ ந மேத⁴யா ந ப³ஹுனா ஶ்ருதேன |
யமேவைஷ வ்ருணுதே தேன லப்⁴யஸ்தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம் ||
“(இந்தப் பரமான்மாவானவர் திறமையினாலும், புத்தியினாலும், மிகு கேள்வியினாலும் அடையற்பாலரன்று; இந்தப் பரமான்மாவானவர் எவனை விரும்புகின்றாரோ, அவனால் அடையப்படுகின்றார்; அவனுக்கு இந்தப் பரமான்மாவானவர் தமது சொரூபத்தை விளக்குகின்றார்”)
அதஸ் –
ஆகையாலே
த்வம் –
இப்படிப் பட்ட நம்முடைய மெய்ம்மைப் பெரு வார்த்தையைக் கேட்டு -என்னையே விஸ்வசித்து இருக்கிற நீர்
தவ தத்த்வதோ மத் ஜ்ஞான தர்சன ப்ராப்திஷூ –
மத் -என் விஷயமாக
தவ
உமக்கு
தத்வத
மெய்யாக உண்டான
மெய்யே என்னுடைய ஜ்ஞான தர்சன ப்ராப்திகளிலே
பக்த்யா தவ நன்யயா சக்ய அஹம் ஏவம் விதோர்ஜூன
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேன ப்ரவேஷ்டும் ச பரந்தப-ஸ்ரீ கீதை -11-54-
என்கிற ஜ்ஞான தர்சன ப்ராப்திகளிலே
நிஸ் சம்சயஸ் ஸூக மாஸ் ஸ்வ
சம்சயம் இல்லாதவராய்க் கொண்டு
சுகமே வர்த்தியும்
(பக்த்யா த்வநந்யயா ஸக்ய மஹமேவஂவிதோர்ஜுந.–
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப-–৷৷11.54৷৷
அஹம் –நான்
பக்த்யா அநந்யயா து –ஸ்வயம் ப்ரயோஜன பக்தியாலேயே
ஏவம் வித –இவ் வண்ணமாக
தத்த்வேந–உள்ளபடி
ஜ்ஞாதும் –ஸாஸ்த்ரங்களால் அறிவதற்கும்
த்ருஷ்டும் ச –காண்பதற்கும்
ப்ரவேஷ்டும் ச –அடைவதற்கும்
ஸக்ய -கூடியவன் –
எதிரிகளைத் தவிக்கச் செய்யும் அர்ஜுனா நீ என்னை எப்படிக் கண்டு இருக்கிறாயோ அவ்வண்ணம் உள்ளபடி
நான் வேதங்களைக் கொண்டும் காண முடியாதவன் – தவத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
தானத்தைக் கொண்டும் காண முடியாதவன் – யாகத்தைக் கொண்டும் காண முடியாதவன் –
நான் ஸ்வயம் பிரயோஜன பக்தியாலேயே இவ்வண்ணமாக உள்ளபடி சாஸ்த்ரங்களால்
அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் கூடியவன்)
——————————————————————————————–
அந்த்ய காலே ஸ்ம்ருதிர்யா து தவ கைங்கர்ய காரிதா
தாமே நாம் பகவன் நத்ய க்ரியமாணாம் குருஷ்வ மே
அந்திம ஸ்ம்ருதி வேணும் என்று திரு உள்ளமாகில்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் -என்கிற கட்டளையிலே கொண்டு அருள வேணும் என்று
ஸ்வாமி தாம் பிரார்த்தித்து கத்யத்தை நிகமித்தாராயிற்று
இந்த வாக்யத்துக்கு
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையோ
ஸ்ரீ ஸ்ருத ப்ரகாசாச்சார்யாரோ
ஸ்ரீ தேசிகனோ
வியாக்யானம் செய்து அருள வில்லை
———–
பரம காருணிகரான பெரியவாச்சான் பிள்ளை
அருளிச் செய்த சரணாகதி கத்ய வியாக்யானம் சம்பூர்ணம் –
——–
ஆறு சொற்கள் த்வயம் -ஸ்ரீ மன் நாராயண -பிரித்து அஷ்ட பதங்கள் -விளிச்சொல் -ஸ்ரீ மானே நாராயணனே -உன்னுடைய -தவ அத்யாஹாரம் பண்ணிக் கொள்ள வேண்டும்
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -போல்
அதே போல் இங்கும் ஸ்வாமி பல விளிச் சொற்கள் மிக்கு அருளிச் செய்துள்ளார்
விட வேண்டியவற்றை விபீஷணன் வார்த்தைகளாலும் அருளிச் செய்கிறார் இதில் -புராணப் பிரிகிரியையால் அதையும் சேர்த்து அருளிச் செய்துள்ளார்
நித்ய அனுசந்தானம் -ஏவம் வக்தா சததம்
ப்ருஹத் கத்யம் இது -ஸ்ரீ ரெங்க கத்யம் லகுவாகவும் -அடுத்து ஸ்ரீ வைகுண்ட கத்யம் ஸ்ரீ பரமபத விவரணம் மேல்
——————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply