திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-7-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

திகழும் தன் திருவருள் செய்து உலகத்தார்
புகழும் புகழ் தானது காட்டித் தந்து என்னுள்
திகழும் மணிக்குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே

———————————————————————————————————————————

ஒருவர் பெரும் பேறே என்று உலகம் அடங்க கொண்டாடும்படி
என் உள்ளே வந்து நின்று அருளினான்
அதனால் வந்த புகழை அல்லது
இவனுடைய மற்று உள்ள புகழையும் ஒன்றாக மதியேன் -என்கிறார்-

திகழும் தன் திருவருள் செய்து –
பிறர் உடைய அளவுக்கு உட்பட்ட அருள் போலே அன்றிக்கே
இரண்டு தலைக்கும் நிறமாம்படியான
தன் திருவருளை என் பக்கலிலே செய்து –

உலகத்தார் புகழும் புகழ் தானது காட்டித் தந்து –
உலகத்தார் புகழும் தான் புகழ் அது காட்டித் தந்து –
நான் பெற்ற பேற்றினைக் குறித்து
உலகத்தார் செய்யும் தோத்திரத்தை தான் காட்டித் தந்தான் -என்றது
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் -1-5-11-என்று
உலகமாகக் கொண்டாடும்படி செய்கையைக் காட்டித் தந்தான்
என்றபடி-
இமௌ முனீ பார்த்திவ லஷணா ன்விதௌ
குசலீவௌ சாபி மகா தபஸ்வி நௌ
மமாபி தத் பூதிகரம் ப்ரவஷ்யதே
மகாநுபாவம் சரிதம் நிபோதாதா -பால -4-32-
இவர்கள் முநிவேடம் தரித்தவர்கள் ஆயினும்
இராஜ சின்னங்களோடு கூடி உள்ளார்கள்
பாடகர்கள் ஆனாலும் பெரும் தவம் உடையவர்களாய் இருக்கிறார்கள் -என்றாப் போலே
உலகம் முழுவதும் புகழா நின்றது -என்றபடி –

என்னுள் திகழும் மணிக்குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்
என் உள்ளே வந்து புகுந்து
பெறாப் பேறு பெற்றவனாய்
நிலை பெற்று புகர் உடையானாய்-கால் வாங்கிப் போக மாட்டாதே
விளங்கா நின்றுள்ள ஒரு ரத்ன மலை போலே நின்றான் –

புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே –
–
என் உள்ளே நின்ற இம் மகா குணத்தை அல்லது
மற்று உள்ள புகழை ஒரு புகழாக மதியேன் –
நான் இந்த்ரியங்கட்கு கட்டுப் பட்டு நிற்கும் நிலையைப் போக்கினான்
என்று நான் சொன்னதை ஒரு சரக்காக நினையேன் -என்றபடி-

ஒருவர் பெரும் பேறே-என்று இத்தை லோகத்தார் புகழ்வதை
கொல்வான் -மற்றவை புகழ் இல்லை
இதற்க்கு சமமாக
என்னுள் திகழும் மணிக்குன்றம் ஒத்து –
திகழும் தன் -திருவருள் -இரண்டு தலைக்கும் நிரமாம்படி
அபரிச்சின்னம் இல்லாமல்
தேசம் காலம் அவஸ்தை மூலம் மற்றவை அளவு பட்டும் இருக்கும்
அவரவர் -இறையவர் -லபதே தாதா காமா -கொடுப்பார் –
அந்தவது -பலம் தேசாம் -முடிவு உள்ளவை -கீதையில் -அல்பமே அவை
மேதா ஞானம் -மேதாவி
அல்பமான ஞானம் உடையவர் -அல்ப புத்தி -அல்ப பலன்களுக்கு அல்ப தேவதை ஆஸ்ரயிப்பார்
சங்கரர் -பாஷ்யம்
இரண்டுக்கும் ஒரே சரமம்
என்னை ஆஸ்ரயித்து-பெறாமல் ஐயோ பாவம் -என்கிறார்
அந்தவது து –
நாராயணன் பர தேவதை அவரும் சொல்லு
சமானம் ஆராதனம் தப்பாக சொல்லி
ஆழ்வார் அருளிச் செயல்
இவன் சுலப ஆராதனை உரியவன் அவரும் உணர வில்லை
உலகத்தார் புகழுள் புகழ் அது காட்டித் தந்து –
வந்த பின்பு தேஜஸ் அடைந்து தனது பேறு என்று தோற்றும் படி –
சர்வேஸ்வரன் ஒருவனே அழியாதவன்
அதனால் அவன் அருளும் அபரிச்சின்னம்
இரண்டு தலைக்கும் நிறமாம் தரிக்க பண்ணும்
எம்பெருமான் எப்படி கடாஷித்து இருக்கிறான்
பாலே ய் தமிழர் இசை காரர் பத்தர் பரவும் –
தமிழும் இசையையும் பண்ணார் பாடல் –
பகவத் பக்தர்
நானாவிதவாரும் புகழும் படி
இமௌ முனி-பார்த்திவ ளஷனம் பொருந்தி -நாடாக புகழா நின்றது
மமாபி தத் மகானுபாவம் -பால காண்டம் –
குசலவர் வைபவம்
மகா தபச்விகள் -இவர்களே புகழ் பெற்றார்கள்
நாடு முழுவதும் ஸ்ரீ இராமாயண பாராயணம் செய்து நன்மை பெற
சக்கரவர்த்தி திருமகனும் ஆசை கொண்டு நல்லது பெற ஸ்ரீ ராமாயணம் பராயணம் திரு மாளிகையில் நடக்க
நல்லதும் பெற்றாரே
அது போலே ஆழ்வாருக்கு பெருமை ஏற்படும்படி
நாடாக புகழா நின்றது
என்னுள்ளே வந்து புகுந்து
திகழும் மணிக் குன்றம்
கால் வாங்கி போக மாட்டாதே
நின்றான் நிலைத்து நின்றான்
இந்த மகா குணம் அல்லது வேறு ஒன்றை புகலாக மதியேன்
கீழே சொன்ன இந்த்ரிய வஸ்தை சரக்காக கொள்ள மாட்டேன்
என்னுள் திகழும் இதுவே புகழ்
லோகத்தார் புகழும் புகழும் புகழ் இல்லை என்கிறார்-

————————————————————————————————————————————————————————————-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading