திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-5-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

ஒக்கும் அம்மான் உருவம் என்று
உள்ளம் குழைந்து நாணாளும்
தொக்கமே கப்பல் குழாங்கள்
காணும் தோறும் தொலைவன் நான்
தக்க வைவர் தமக்காயன்று
ஈரைம்பதின்மர் தாள் சாய
புக்க நல் தேர்ப் தனிப் பாகா
வாராயிதுவோ பொருத்தமே-

—————————————————————————————————————————————————————

உனக்குப் போலியான மேகத்தின் காட்சியாலே
நோவு படா நிற்க
வந்து முகம் காட்டுகின்றிலை
இதுவோ உன் சார்வின் தன்மை -என்கிறார்-

ஒக்கும் அம்மான் உருவம் என்று –
சர்வேஸ்வரன் வடிவு மற்ற பொருள்கள் எல்லா வற்றிலும் வேறு பட்டது –
என்று எண்ணா நிற்கச் செய்தே
புகையும் ஒளியும் தண்ணீரும் காற்றும் ஆகிய இவற்றின்
கூட்டமான மேகத்தை ஒப்பு என்று மயங்குவர் –
தூம ஜ்யோதி சலில மருதாம் சந்நிபாத கவ மேக -மேக சந்தேகம் -1-5-

உள்ளம் குழைந்து –
இது -மேக கூட்டத்தை கண்டதுக்கம் -தோற் புரையே அன்றி மனமும் அழிந்தது –

நாணாளும்-
நாள் நாளும்
இந்த அழிவு ஒரு நேரத்தில் வருதல் இன்றிக்கே
இடைவிடாமல் செல்லுகை –

தொக்கமே கப்பல் குழாங்கள் –
தொக்க மேகம் பல் குழாங்கள்
மேகங்களின் துண்டங்களுக்கு இடையார்
திரண்ட மேகக் கூட்டங்களை காணும் தோறும்
நாள் நாளும் தொலைவன் –
தர்மிலோபம்-ஆத்மாவுக்கு நஷ்டம் மரணம் – பிறக்கிறதும் இல்லை
வாழ்ந்து இருக்கவும் பெறுகின்றிலேன் –

நான் –
மேகத்தை காணுதல் உலகத்தாருக்கு தளர்ச்சி நீங்குவதற்கு காரணம் அன்றோ –
உலகத்தாரோடு வேறு பட்ட நான் –

தக்க வைவர் –
எந்த மேகத்தை காண்பதற்கு இடைந்தார்கள் –
அதற்காக பாண்டவர்களை நோக்கிற்று
பந்துக்கள் ஜீவிக்க வேண்டும்
எங்களுக்கும் ஐந்து குடிக்காடு -குப்பம் -கிராமம் -அமையும்
என்னும் தக்கோர்மையை உடைய ஐவர்

தமக்காயன்று
தமக்காய்
இரண்டு சேனைகளுக்கு நடுவில் என் தேரைக் கொடு போய் நிறுத்து -என்னும்படி கையாளாய்
சேனையோ உபயோ மத்யே ரதம் ஸ்தாபாய மே அச்யுத – ஸ்ரீ கீதை -1-21-
அன்று
அவர்கள் தனியரான அன்று –

ஈரைம்பதின்மர் தாள் சாய –
பந்துக்கள் ஜீவியில் ஜீவியோம் -என்று நூற்றுவரும் கால் அறும்படியாக-

புக்க –
தூசித் தலையிலே புக்க –

நல் தேர்ப் –
இவனை சாரதியாக உடையது ஆகையாலே மிக்க மேம்பட்ட தேர் –

தனிப் பாகா –
தனியே நிர்வாஹகன் ஆனவனே –
இரதியைக் காண்கின்றிலர்
கிருஷ்ணா வெற்றியை யாவது
இராச்சியத்தை யாவது
சுகத்தை யாவது
நான் விரும்ப வில்லை -என்றவனை சேமம் சாத்தி வைத்து தானே செயலை செய்கையாலே

ந கான்க்ஷே விஜயம் கிருஷ்ண நச ராஜ்ஜியம் ஸூகா நிச
கிம் ந ராஜ்யென கோவிந்த கிம் போகை ஜீவே தேன வா -ஸ்ரீ கீதை – 1-32-
சாரதியை யாயிற்று இவர் காண்கிறது –

வாராய் –
இரண்டு சேனைகளின் நடுவே தேரைக் கொடு போய் நிறுத்து -என்ன
இரண்டு சேனைகளின் நடுவே தேரை நிறுத்தின நீ
அந்த தேரை இந்த மேகங்களின் நடுவே நிறுத்தினால் ஆகாதோ –
ஐவருமாய் எதிரிகளின் அளவுக்கு உட்பட்டவர்களும் ஆனாலோ உதவலாவது
தனியனுமாய் மேகக் கூட்டங்களின் அளவுக்கு உட்படாதவை யானால் உதவலாகாதோ
இதுவோ பொருத்தம் –
அடியார்களோடு முன்பு நீ பொருந்திப் போந்த படி இதுவோ -என்றது
அடியார்களுக்காக தூது சென்றும்
தூது சென்றும்
சாரதியாய் நின்றும்
ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுத்தும்
பகலை இரவு ஆக்கியும்
ஒரு சார்வாகக் கார்யங்களைச் செய்தது பொய்யோ -என்றபடி
நான் இந்த நாராயணன் சரிதையைச் சொல்லப் போகிறேன் -என்றவனும்
நமோ பகவதே தஸ்மை வ்யாசாய அமித தேஜஸே
யஸ்ய பிரசாதாத் வஹ்யாமி நாராயணா கதாமிமாம் –
கைக் கூலி கொண்டு புலமை பாடினான் ஆகாதே என்கிறார் -என்றது
இப்போது தமக்கு உதவில் அவை மெய்யாவன என்று இருப்பர் -என்றபடி
வாராய்
எனக்கு இவை எல்லாம் வேண்டுமோ
முகம் காட்ட அமையாதோ –

போலியான மேக தர்சனத்தால் நலிந்து இருக்க
முகம் காட்டாமல் இருப்பதா உன் ஸ்வபாவம் –
தனிப்பாகா இதுவோ பொருத்தமோ
ஐவர் தமக்கே
ஈர் ஐம்பதின்மர் – நூற்றுவர் -சாயும் படி -நல தேர் தனிப்பாகா
ஓன்று இரண்டு அக்ரிணைக்கு
ஆழ்வார்கள் இரண்டு தப்பு இருவர் சொல்ல வேண்டும்
மூவாயிரவர்
ஒருவர் இருவர் ஓன்று இரண்டு இல்லை –
காணும் தோறும் அம்மான் ரூபம் ஒக்கும் உள்ளம் குழைந்து உருகிப் போக
இதர விசாஜீதயன் என்று புத்தி பண்ணாமல்
பிரமித்து -தோமஸ் ஜோதி -மேக சந்தேகம்
மேகங்கள் காணில் கண்ணன் என்று
உள்ளம் -தோல்புரையே இல்லை அகவாயும்
திரண்ட மேகங்கள் காணும் தோறும் நாளும் நாளும் -முடிய வில்லை
தரமி லோபம் பிறக்கவும் இல்லை -நாள் நாளும் -ஜீவித்து இருக்கவும் முடியாமல்
நாட்டார் ஆசுவாச ஹேது எனக்கு துக்க ஹேது
பாண்டவர் -சொல்லி நீ காத்தாயா
தக்க ஐவர் இவர்க ள் -அவனும் வாழட்டும் -எங்களுக்கு ஐந்து இடம் போதும்
கொடிய நூற்றுவர் -பந்துக்கள் ஜீவிக்கில் ஜீவியோம் -என்றவர்
என்னுடைய தேரை நிறுத்து-கையாளாய்
நல தேர் -இவன் சாரதி யானதால்
தனிப் பாகா -ரதி காணாமல்
இவன் தான் யுத்தம் ஜெயிக்க பண்ணினவன்
சேமம் சாத்தி வைத்து உபதேசித்து
வாராய் –
உபய சேனை நடுவில் நிறுத்தின நீ
மேகம் நடுவில் நிறுத்த கூடாதா
ஐவருமே மாய் எதிரிகள் நூற்றுவராய் இருந்தால் தான் வருவாயா
தனியனாய் பல் குழாம் மேகம் இருந்தால் உதவலாகாதோ
இதுவோ ஆஸ்ரிதர் உடன் பொருந்திய நிலையோ
நாராயண கதாமிம்- கைக்கூலி வாங்கி எழுதி வைத்த்தாரா
முகம் காட்டினால் போதுமே வேறு ஒன்றும் வேண்டாமே

 

———————————————————————————————————————————————————————————————————-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading