திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-5-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

வந்து தோன்றாயன்றேல்
உன் வையம் தாய மலரடிக் கீழ்
முந்தி வந்து யான் நிற்ப
முகப்பே கூவிப் பணி கொள்ளாய்
செந்தண் கமலக் கண் கை கால்
சிவந்த வாயோர் கரு நாயிறு
அந்தமில்லாக் கதிர் பரப்பி
அலர்ந்தது ஒக்கும் அம்மானே

———————————————————————————————————————————————-

இங்கு வந்து தோற்றி அருளுதல்
அது திரு உள்ளம் அன்றாகில்
அங்கெ அழைத்து அடிமை கொள்ளுதல்
செய்து அருள வேண்டும் -என்கிறார் –

வந்து தோன்றாய்-
என் கண் வட்டத்திலே வந்து தோற்ற வேண்டும் –
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றலை அன்றோ வந்து தோன்றாய் – பெரிய திருமொழி -8-5-1-என்கிறது

யன்றேல்-
என் துன்பத்தைப் பார்த்து
உன்னுடைய கிருபையாலே வந்து முகம் காட்டப் பார்த்திலையாகில்
அன்றிக்கே
உன் நிறைவினையும் என் சிறுமையும் பார்த்து முகம் காட்டப் பார்த்திலை யாகில் –
திரு விருத்தம் -பாசுரம் 33 -படி -என்றுமாம் –

உன் வையம் தாய மலரடிக் –
வசிஷ்ட சண்டாள வேறுபாடு பாராத திருவடிகள் –
தாய் மலரடி –
ஒரு செவ்விப் பூவைக் கொண்டாயிற்று காட்டையும் ஓடையும் அளந்தது –

மலரடிக் கீழ் முந்தி வந்து யான் நிற்ப –
தனக்கு மேல் ஒன்றில்லாத இனிய பொருளான
திருவடிக் கீழே
முற்பாடனாய் வந்து நிற்கும்படியாக

முகப்பே –
கண் வட்டத்திலே

கூவிப் பணி கொள்ளாய் –
சோற்றை இட்டுப் பணி கொள்வாய்
திரு மிடற்றின் ஓசை இனிமையாக இருக்கையாலே கூவிப் பணி கொள்ள வேண்டும் என்கிறார்
அன்றிக்கே
பணி செய்வாய் என்று என்னை சொல்வீராக -என்னும் படி
கண் முகப்பே அடிமை கொள்ள வேண்டும் -என்னவுமாம்
குணஞானத்தால் தரித்து இருக்கும் ஸ்ரீ பரத ஆழ்வான் தன்மையன் அல்லன் –
தண்ணீரின் நின்றும் மேலே எடுக்கப் பட்ட மீன்களைப் போன்றவர் -என்னும் இளைய பெருமாள்
தன்மையனான என்னை அடிமை கொள்ள வேணும் என்பார் –
பணி கொள்ளாய் -என்கிறார் –
நச சீதா த்வயா ஹீ நா நச அஹம் அபி ராகவ
முஹூர்த்தம் அபி ஜீவாவ ஜலாத் மத்ஸ்யாவிவ உத்ரு தௌ-அயோத்யா -53-31-
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -3-3-1–என்றும்
நின்னலால் இல்லை -2-3-7- என்றும்
இட்டு வைத்த இடத்தில் கிடக்க மாட்டேன்
நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல் –8-1-9-என்னுமவர் அன்றோ –

செந்தண் கமலக் கண் கை கால் சிவந்த வாயோர் கரு நாயிறு –
சிவந்து குளிர்ந்த தாமரை போலே
கண்ணையையும் கையையும் காலையையும் உடையவனாய்
சிவந்த வாயையும் உடையவனாய்
நீலமான நிறத்தையும் உடையவனான
ஒரு சூரியன்

அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் –
ஆயிரம் என்னும் ஒரு கணக்கு இன்றிக்கே அளவிறந்த
கிரணங்களைப் பரப்பிக் கொண்டு
மலர்ந்தாப் போலே வந்து தோற்ற வேண்டும் –

அம்மானே –
உன் மேன்மையைப் பார்த்து அங்கே அழைத்து அடிமை கொள்ளுதல் –
அன்றிக்கே –
உன் உடைமை நசியாமைக்கு விரைவு உண்டாகில் இங்கே வந்து அடிமை கொள்ளுதல்
செய்து அருள வேண்டும் -என்னுதல் –

அம்மான் -பரத்வமும் ஸ்வாமித்வமும்-இரண்டையும் கொண்டு இங்கனே அருளுகிறார்

தோற்றி காட்ஷி தருதல் திரு உள்ளம் அல்லை யாகில்
கூவி பணி கொள்ளாய் அங்கே என்கிறார்
செங்கண் கமலம் போல் அவயவம்
கரு நாயிறு -திரு மேனி
வையம் தாவிய திருவடிக் கீழ் கட்டளை இட்டு கைங்கர்யம் கொள்ள வேண்டும்
தந்தை காலில் விலங்கு அற -வந்து தோன்றிய தோன்றல் -மிடுக்கை உடையவன் -தோன்றினாய்
உன் பூர்த்தி -என் சிறுமை கண்டு தோன்றாயாகில்
வசிஷ்டர் சண்டாளர் வாசி இன்றி வைத்த மலர் அடி
செவ்விப் பூ கொண்டு வையம் காடும் ஓடையும் அளந்து
நிரதிசய போக்யமான உன் திருவடிக் கீழ் நிற்கும் படி
முகப்பே
கூவுதல் நியமித்து கைங்கர்யம் செய்ய வேண்டுமே –
கிரியதாம் இதி மாம்வத-இளைய பெருமாள் -அஹம் சர்வம் கரிஷ்யாமி –
பரதந்த்ரப்பட்டவன் -பரவாஸ் அஸ்மி –
சோற்றை இட்டு பணி கொள்ளாய் –
சம்பளம் சோறு
உன் நியமனம் தான் சோறு சம்பளம் தாரகம்
அருளப்பாடு -நாத விநோத அரையர் –
தொடக்க காரர் சாதித்து அருள -நியமனம் –
கூவிப் பணி கொள்ளாய் சோறு இட்டு பணி கொள்ளாய்
ஜலான் மச்த்யே இளைய பெருமாள் போல்
பரத ஆழ்வான் குணம் அனுபவத்தால் 14 வருஷம் இருக்க வல்லேன் இல்லை
வழு இலா அடிமை செய்ய வேண்டும்
நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல் -பிரிவே நரகம் என்று இருப்பவன் நான் –
இளைய பெருமாள் பிராட்டி போல்வார்
சிவந்த குளிர்ந்த
தாமரை போலே -கண்ணையும் கையையும் காலையும் -ஆதித்யன்
அளவிறந்த கிரணங்கள்
திரு இங்கே இல்லை ஆதித்யனுக்கு சொல்லி
கரு ஞாயிறு -திருமேனிக்கு உபமானம்
அதுக்கு செங்கண் கை கால் முளைத்து இருக்க வேண்டும்
இல் பொருள் உவமை
அம்மானே
மேன்மை பார்த்து அங்கே அழைத்து அடிமை கொள்ள வேண்டும்
நீர்மை காட்ட வந்து தோற்றி அருள வேண்டும்-

—————————————————————————————————————————————————————————–

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading