இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய்
ஏறு மிருஞ் சிறைப்புள்
அதுவே கொடியா வுயர்த்தானே
என்று என்று ஏங்கி யழுதக்கால்
எதுவேயாகக் கருதுங்கொல்
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான்
மதுவார் சோலை
உத்தர மதுரைப் பிறந்த மாயனே-
————————————————————————————————————————————————————–
இறுதிக் காலத்தில் ஸ்வர்க்கத்து ஏறப் போன இவர்கள் நிற்க –
திருவாழி யாழ்வான் முதலான நித்யரோடும் பொருத்தம் இதுவோ –
என்று தமக்குள்ளே விசாரிக்கிறார் –
அன்றிக்கே –
இருந்ததே குடியாக காப்பாற்ற வந்த ஸ்ரீ கிருஷ்ணன் தன்னை
காண்கையே தேட்டமான
எனக்கு என் செய்ய நினைக்கிறான் -என்கிறார் ஆகவுமாம் –
இதுவோ பொருத்தம் –
இப்படிக் கூப்பிடச் செய்தேயும் வரக் காணாமையாலே
கண்ணாஞ் சுழலை இட்டு
மீண்டும் இதுவோ பொருத்தம் -என்கிறார் –
மின்னாழிப் படையாய் –
மேகத்திலே மின்னினாப் போலே அடியார்கள் உடைய
விரோதிகளை அழித்தலையே இயல்பாக உடைய
திரு ஆழியைப் படையாக உடையவனே -என்றது
அத் திரு ஆழியைக் கொண்டு என்னுடைய தடைகளின் மேலே
செலுத்தினால் ஆகாதோ -என்றபடி –
ஏறு மிருஞ் சிறைப்புள் அதுவே கொடியா வுயர்த்தானே –
ஏறக் கடவ பெரிய சிறகை உடைய கருடப் பறவை தன்னையே
கொடியாக உடையவனே
அடியார்களை எல்லா அடிமைகளையும் கொள்ளுமவன்
அன்றோ -என்று என்று ஏங்கி யழுதக்கால் –
இப்பாசுரம் மாறாதே பொருமி பொருமி அழா நின்றால் –
எதுவேயாகக் கருதுங்கொல் –
இக் கூப்பீட்டுக்கு முகம் காட்ட நினைக்கிறானோ
கூப்பிட்டே போவான் என்று இருக்கிறானோ
அன்றிக்கே
இக் கூப்பீட்டுக்கு அவன் திரு உள்ளம் எங்கனே புண் படுகிறதோ -என்னுதல் –
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான் –
இந்த பெரிய பூமியினுடைய பாரதத்தைப் போக்குகைக்காக –
மதுவார் சோலை –
தேன் பெருக்கு எடுக்கின்ற சோலையை உடைய –
உத்தர மதுரைப் –
வடமதுரையில் –
பிறந்த மாயனே –
பகைவர்களான கஞ்சன் முதலியோர் நடுவே பிறந்த மாயோனே –
தோன்றுதல் அன்றிக்கே –
அதன்பின் பன்னிரண்டாம் மாதத்தில் -என்கிறபடியே
ததஸ்த த்வாதஸ மாஸே சைத்ரே நவாமிகே திதௌ-பால -18-10
கர்ப்ப வாசம் செய்து பிறந்த ஆச்சர்யத்தை உடையவன்
ஆதலின் -பிறந்த மாயனே -என்கிறார் –
பூமியின் பாரத்தை போக்குதல் என்னும் வ்யாஜ்யத்தாலே
தனக்கு வேறுபட்ட சாதியினை உடையவனாய்
வந்து அவதரித்து அடியார்கள் உடைய விரோதிகளைப்
போக்கும் தன்மையானவன்
நம் கூப்பீட்டுக்கு என் நினைத்து இருக்கிறான் -என்கை-
அந்திம தசையில் ஸ்வர்க்கம் போனவர்கள் பாண்டவர்கள்
நித்யர் உடன் பொருந்தி உள்ளதில் சங்கை
கொண்டு
நெஞ்சுக்கு -கேட்கிறார்
என்ன செய்வான் இதுவோ பொருத்தம்
ஞாலம் பொறை தீர்ப்பான் -வடமதுரை பிறந்த மாயனே
இதுவோ பொருத்தம்
மின் ஆழி உடன் கூடி -ஆஸ்ரித விரோதி நிரசன சீலன்
எனது பிரதி பந்தகம் மேலே செலுத்த வேண்டாமா
வாகனம் கொடியாக திருவடியை கொண்டவன் –
ஆஸ்ரிதரை எல்லா அடிமை கொண்டவன்
சென்றால் குடையாம் இத்யாதி
என்னை கொள்ள வில்லையே
ஏங்கி ஏங்கி
மயங்கி இதுவோ பொருத்தம் என்று என்று –
பொருமி பொருமி அழ
முகம் காட்ட நினைக்கிறானா
கதறி கதறி முடியட்டும்
திரு உள்ளம் எங்கனே புண் படும் -என்னவுமாம் ஆஸ்ரித வாத்சல்யம்
மதுவார் சோலை உத்தரமதுரை
சம்சாரிகள் நடுவில் பிறந்த -கர்ப்ப வாசம் பண்ணி
இதர சஜாதீயனாய் வந்து அவதரித்து
ஆஸ்ரித விரோதி போக்கும் ஸ்வ பாவன்
நம் கூப்பிட்டுக்கு என்ன நினைந்து இருக்கிறான்-
———————————————————————————————————————————————————————
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply