கொண்டல்வண்ணா குடக்கூத்தா
வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன்மேல் தான் மண் மேல்தான்
விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண
ஒரு நாள் வந்து தோன்றாயே-
——————————————————————————————————————————————————————-
உன் வனப்பு முதலானவற்றை நினைத்து –
காண வேண்டும் என்று கூப்பிடுகிற நான் காணும்படி ஏதேனும்
ஓர் இடத்திலே வந்து தோற்றி அருள வேண்டும் –
என்கிறார் –
கொண்டல்வண்ணா –
காணவே விடாய் ஆறும்படியான வடிவை உடையவனே –
குடக்கூத்தா –
மனத்தினை கொள்ளை கொள்ளும்படியான செயல்களை உடையவனே –
வினையேன் கண்ணா கண்ணா –
எனக்கு கண்களாய் இருக்கிறவனே -கிருஷ்ணனே –
கண்ணை இழந்து இருக்கும்படியான பாவத்தைச் செய்தவன் -என்பார் -தம்மை -வினையேன் -என்கிறார் –
என் அண்ட வாணா வென்று –
என்னை இலக்கு ஆக்கிக் கொள்ளுவதற்க்காக
அண்டத்துக்கு அதிபதி ஆனவனே -என்று
கல்யாண குணங்களை உடைத்தாய் இருத்தல் –
அடியார்களுக்காக இருக்குமாறு போன்று
விபூதியை உடைத்தாய் இருக்கிற இருப்பும் தமக்காக என்று இருக்கிறார் –
என்னை ஆளக் –
வேறு பிரயோஜனதுக்காக அழைக்கிறேனோ
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி என்னை வழுவிலா
அடிமை கொள்ள வேண்டும் -என்று அன்றோ அழைக்கிறது
கூப்பிட்டு அழைத்தக்கால்-
கிரமப் பிராப்தி பொறுக்க வல்லேனாய் தான் தாழ்க்கிறாயோ –
என் துயர ஒலி கேட்டால் -கிரமத்தில் வருகிறோம் -என்று ஆறி இருக்கலாய் இருந்ததோ –
விண் தன்மேல் தான் –
மா நீர்க் கொண்டல் சஞ்சரிக்கும் ஆகாசத்தில் தோற்றவும் அமையும்
அன்றிக்கே
பரமபதத்தில் இருக்கிற இருப்போடே வந்து தோற்றவும் அமையும் –
மண் மேல்தான் –
அவதரித்துத் தோற்றவுமாம்-
விரி நீர்க் கடல் தான் –
திருப் பாற்கடலிலே திருக் கண் வளர்ந்து அருளுகிறபடி வந்து தோற்றவுமாம் –
மற்றுத் தான் –
தூணிலே வந்து தோன்றினால் போதே யாதல்
யானைக்கு வந்து தோற்றினால் போதே யாதல் தோற்றவுமாம் –
தொண்டனேன் –
உன் திருவடிகளில் கைங்கர்யத்தில் ஆசை கொண்ட யான்
உன் கழல் காண –
எனக்கு உய்விடமான திருவடிகளைக் காண –
ஒரு நாள் வந்து தோன்றாயே –
பல நாள் வேண்டும் -என்று நிர்பந்திக்கிறேனோ
என் ஆத்துமா கிடக்கைக்கு ஒரு நாள் வந்து தோற்றி அருள வேண்டும்-
காணும் படி ஏதேனும் ஓர் இடத்தில் தோன்றி அருள வேண்டும்
விண்ணிலேயோ மண்ணிலேயோ தூணிலேயோ –
கொண்டால் வண்ணா -காணவே விடாய் ஆறும் படி இருக்குமே –
குடக் கூத்தா -மநோஹாரி சேஷ்டிதம் செய்து அருளிணவனே
வினையேன் கண்ணா கண்ணா -திருஷ்டி பூதனான கிருஷ்ணா
கண்ணால் காணும் படி ஆஸ்ரித பௌயனான
கண்ணாய் இருப்பவன் -கண்ணா
பார்க்க முடியாத பாவம் செய்த வினையேன் –
கண்ணை இழந்த பாபம் செய்தேனே –
என் அண்ட வாணா என்னை விஷயீகரிக்க அண்டங்களுக்கு அதிபதி
எல்லாம் பக்தாநாம் -விபூதி யோகமும் தமக்காக -என்கிறார்
என்னை ஆள -நித்ய கைங்கர்யம் கொள்ள
முகப்பே கூவிப் பண்ணி கொள்ள வேண்டும்
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்-பிரயோஜனாந்த பரர் போல் இன்றி
கிரமம் பிராப்தி சகிக்க முடியாதே –
ஆர்த்த நாதம் கேட்டும் கிரமத்தில் வருவதற்கு உன்னால் ஆறி இருக்க முடியுமா
ஆகாசத்தில் தோற்றவுமாம்
பரமபதம்
மண் -அவதாரம் -அர்ச்சை இரண்டும்
விரி நீர் -வியூகம்
மற்று -அந்தர்யாமி
இருக்கிறபடியே வந்தால் போதுமே
யானைக்கு வந்து தோற்றினால் போதும்
தொண்டனேன்
ஜீவனம் உன் கழல்
ஒரு நாள்
சத்தை கிடைக்கக்கு ஒரு நாள் வந்தால் போதுமே-
————————————————————————————————————————————————————————————–
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply