திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-4-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

பிறிதில்லை எனக்குப் பெரிய மூ வுலகும் நிறையப்
பேருருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த
கோல மாணிக்கம் என்னம்மான்
செறி குலை வாழை கமுகு தெங்கணி சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய மெய்ம்மையே நின்ற வெம்பெருமான்
அடி இணைய யல்லதோர் அரணே-

——————————————————————————————————————————————————————

மகா பலியை வென்றும் கடலைக் கடைந்தும் அடியார்கள் உடைய ஆபத்தைப் போக்கி
திருச் செங்குன்றூரிலே நின்றருளினவன் திருவ்வடிகள் அல்லது
வேறு அரண் இல்லை -என்கிறார்

பிறிதில்லை எனக்குப் –
எனக்கு பிறிது இல்லை –
அவனை ஒழிய வேறு ரட்ஷகர் எனக்கு வேறு இல்லை –

பெரிய மூ வுலகும் நிறையப் பேருருவமாய் நிமிர்ந்த –
பிரமலோகம் முடிய ஆகாசத்தில் இடம் முழுதும் விம்ம வளர்ந்து -என்றது
தொடங்கின கார்யம் வென்ற பிரீதியால் வளர்ந்த படி

குறிய மாண் எம்மான் –
வளருகுகைக்கு உடலாகக் கொண்ட வாமன வேடத்தையும் -இரப்புத் தன்மையும் காட்டி -என்னை அடிமை கொண்டான்
மகா பலியைக் வெல்லுக்கைக்கு கொண்ட வடிவைக் காட்டி
அச்சத்தைக் கெடுத்தபடி –

குரை கடல் கடைந்த –
பெரிய ஒலி எழும்படி கடலைக் கடைந்தவன்

கோல மாணிக்கம் –
பெரிய விலையதான இரத்தினம் போலே இருக்கின்ற அழகிய வடிவைக் கொண்டாயிற்று கடலைக் கடைந்தது –

என்னம்மான் –
கடல் கடைந்த ஆற்றலையும் அழகையும் காட்டி என்னை அடிமை கொண்டவன் –

செறி குலை வாழை கமுகு தெங்கணி சூழ் திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு –
செறிந்த குலையை உடைத்தான வாழை
அப்படிப் பட்ட தெங்கு கமுகு
இவற்றின் திரளாலே சூழப் பட்ட ஊர்
ஊரின் சிறப்பு என்றும் அரண் என்றும் இரண்டு இல்லை –
செறிந்த குலைகளாலும் திரண்டு சூழ்ந்து இருக்கையாலும்
உகாதாவருக்கு புகுர ஒண்ணாதபடி இருக்கை
திருச்சிற்றாறு -அறிய –
திருச் சிற்றாறில் உள்ளார் சர்வேஸ்வரன் என்று அறியும் படியாக –
மஞ்சா க்ரோசித்த -கட்டில்கள் கூப்புடிகின்றன -போலே ஆகு பெயர்
ஆத்மாநாம் மாநுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்
யோஹம் யஸ்ய யதாஸ் சாஹம் பகவான் தத் ப்ரவீது மே-யுத்த -120-11-
ந அஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச தானவ
அஹம்வோ பாந்தவோ ஜாதோ ந ஏதத் சிந்த்யம் இத அந்யதா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-12-

மெய்ம்மையே நின்ற வெம்பெருமான் –
நான் என்னை மனிதனாகவே நினைக்கின்றேன் -என்றும்
உங்களுக்கு உறவினனாகவே பிறந்து இருக்கிறேன் -என்றும்
மறைக்க வேண்டாதபடி
பத்தம் பத்துமாக நின்ற என் ஸ்வாமி-

அடி இணைய யல்லதோர் அரணே-
அவன் திருவடிகள் அல்லது ஒரு பாதுகாவல் இல்லை –
அடி இணை அல்லது ஓர் அரண் பிறிது இல்லை எனக்கு —

அடி இணை அல்லது வேறு ஒரு அரண் பிறிது இல்லை எனக்கு
குரிய மாண் -குள்ளமான பிரமச்சாரி
கடல் கடைந்த மாணிக்கம்
எல்லாரும் அறியும் படி இங்கே எழுந்தருளி
ஆகாச அவகாசம் அளவும் பிரம லோக பர்யந்தம் விம்ம வளர்ந்த
லீலா விபூதி முழுவதும் அளந்து
ஹர்ஷத்தால் -இந்த்ரன் குறை தீர்த்த -வளர்ந்து
வாமன -அர்த்தித்வ –
வளர உடலாக வாமன இரப்புக்கும்
இதுவே பயம் போக்கி
குரை ஓசை -கோஷம் எழுப்பும் கடல்
கடையும் பொழுது உண்டான ஓசை
மாணிக்கமே கடலை கடைய இங்கே
ரத்னாகரம் சமுத்ரம் ரத்னம் உள்ளே இருக்கும்
என் அம்மான் -அடிமை கொண்டவன்
வாழை
கமுகு -தெங்கு
ஊர் சிறப்பு அரண்
உகவாதார் நுழைய முடியாத படி செறிந்து
உள்ளார் அறிய
சிற்றாறு அறிய -ஆகு பெயர்
மஞ்சம் சப்திக்கும் போலே மஞ்சா க்ரோசந்தி நியாயம்
ஊர் சிரிக்கும் ஊரில் உள்ளார் சிரிப்பார் -இட ஆகு பெயர்
மெய்ம்மையே நின்ற
பரத்வம் மறைக்க வேண்டாத படி பத்தும் பத்துமாக
ராமன் கிருஷ்ணன் போலே அன்றி
தான் தான் பரத்வம் அனைவரும் அறியும் படி பூர்த்தியாக நின்ற ஸ்வாமி
திருவடிகளே ரஷகம்

——————————————————————————————————————————————————————————————————–

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading