என்னமர் பெருமான் இமையவர் பெருமான்
இருநிலம் இடந்த வெம்பெருமான்
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள
என்னை யாள்கின்ற வெம்பெருமான்
தென் திசைக்கணிகொள் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாங்கரைமீ பால்
நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும்
பிறிதில்லை எனக்கே
——————————————————————————————————————————————————
ஸ்ரீ வராஹமாய் பிரளயம் கொண்ட பூமியை எடுத்தருளி
திருச் செங்குன்றூரிலே நின்றவனுடைய திருவடிகள் அல்லது
வேறு புகலிடம் எண்ணத்திலும் கூட எனக்கு இல்லை
என்னமர் பெருமான் இமையவர் பெருமான்
இமையவர் பெருமான் என்னமர் பெருமான் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்
எனக்கு அமர்ந்த ஸ்வாமியாய் உள்ளான் – என்றது
நித்ய சூரிகள் தனக்கு பரிவராய் இருக்கும் இருப்பைக் காட்டி
நான் அஞ்சாதபடி செய்து
என்னுடைய அடிமையாம் தன்மையை நிர்வஹித்தவன் -என்றபடி-
இருநிலம் இடந்த வெம்பெருமான் –
பிரளயம் கொண்ட பெரிய பூமியை எடுத்த தன் ஆற்றலைக் காட்டி என்னை அடிமை கொண்டவன் -என்றது
பிரளயம் கொண்ட பூமியைப் போன்று எல்லாரும் தனக்கு
குழைச் சரக்காய் இருக்கிற படியைக் காட்டி
தம் அச்சத்தைக் கெடுத்தான் என்கை-
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாளஎன்னை யாள்கின்ற வெம்பெருமான் –
பழையனவான பிரபலமான கர்மங்களை
வாசனையோடே போக்கி என்னை அடிமை கொள்ளுகிற ஸ்வாமி
அன்றிக்கே
சூரம் வீரம் முதலியனவற்றைக் காட்டி
மேல் எனக்கு பிறந்த அச்சம் எல்லாம் போம்படி
என்னை அடிமை கொண்டவன் -என்னுதல் –
வல்வினை -என்கிறது பக்தியினால் பரவசப் பட்டு இருக்கும் தன்மையை
அதுவே அன்றோ -வரம்பில் ஆற்றலை உடைய இறைவனுக்கு என் வருகிறதோ என்னும் அச்சத்தைப் பிறப்பித்தது
தென் திசைக்கணிகொள் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாங்கரை-
ஆரியர்கள் இகழ்ந்த பூமியான தெற்கு திக்குக்கு ஆபரணமான ஊர் –
மீ பால் நின்ற வெம்பெருமான் –
மேலைத் திக்கில் நிலையும் உயர்வுக்கு காரணமாய்
இவருக்கு அச்சம் நீங்குவதற்கு உடலாய் இருக்கிறது
திசைகளைப் பற்றி அன்றோ பரத்வம் இருப்பது –
அடியல்லால் சரண் நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே
அவன் திருவடிகளை ஒழிய மற்று புகலிடமாய் இருப்பது
ஒரு பொருள் எண்ணத்திலும் இல்லை
ஸ்ரீ வராகமாய் -காட்டி அருளி
என் அமர் பெருமான்
இரு நிலம் இடந்த பெருமான்
முன்னை தொல்லை
அனுபவித்து கழிக்க முடியாத
சஞ்சித பாபம் முன்னை வல் வினை
அணி திலகம் போலே உள்ள திவ்ய தேசம்
ஆற்றங்கரை மேல் நின்ற
அடி அல்லால் நினைப்பிலும் வேறு இல்லை
மனசிலும் வேறு இல்லை
எனக்கு அமர்ந்த சுவாமி அயர்வறும் அதிபதி
பரிவர் உள்ளதை காட்டி -என் அமர் பெருமான் ஆனான் –
நித்யர் உண்டு காட்டி எனக்கு சத்தை உண்டாக்கி
இரு நிலம் -சாமர்த்தியம் காட்டி
எம் பெருமான் -காணும் பாரும் -சாமர்த்தியம் பாரும் -சத்தை உண்டானது
சர்வரும் தனக்கு குழை சரக்கு என்று காட்டி அருளி
தான் ரஷிக்கா விடில் குழைந்து போம்
கர்மங்கள் பிராக் தனம் -பிரபலம் -வாசனை உடன் போக்கி
பயம் நீக்கி -பாப்பம் ஆழ்வாருக்கு இங்கே பயம் வந்ததே -அத்தை போக்கி என்னை அடிமை கொண்டவன்
வல்வினை இங்கே பக்தி பாரவச்யத்தை
அதுவே சர்வ சக்திக்கு என்ன வருகிறதோ என்ற அச்சம் விளைவித்தது
ஆர்யர்கள் இகழ்ந்த பூமி தெற்கு திக்கு –
மிலேச்ச பூமி என்றார்
வேண்டாம் என்று போனார்கள் –
மீ பால் -மேலைத் திக்கு
திருச் சிற்றாரின் மேல் திக்கில்
பய நிவ்ருத்தி
திக் அபேஷை-திக்கு தத்வமே இல்லையே -தர்க்க ரீதியாக –
வஸ்து இடம் மாறினால் திக்கு மாறுமே –
எல்லா திக்கிலும் அவன் மேன்மை உண்டே
பரத்வம் பரவி இருக்க
மேலைத் திக்கில் நின்ற நிலை பயம் போக்கிற்று இங்கே ஆழ்வாருக்கு
மனசில் கூட வேறு ரஷகம் இல்லை என்கிறார்
——————————————————————————————————————————————————————————————————-
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply