திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-4-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை
அது பொருளாகிலும் அவனை
யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது
ஆதலால் அவனுறைகின்ற
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த
நறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே-

————————————————————————————————————————————————————–

அல்லாத உகந்தருளின தேசங்களும் உண்டாய் இருக்க
திருச் செங்குன்றூரில் நீர் மிக்க விருப்பத்தைச் செலுத்தி
வற்புறுத்துவதற்கு காரணம் என் -என்ன –
அது அங்கனே இருக்கச் செய்தேயும் திருச் செங்குன்றூரில்
அல்லது என் மனம் சேர்ந்து அணையாது -என்கிறார் –

அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை –
அல்லாத இடங்களும் அவனுக்கு புறம்பாக இருப்பது இல்லை –

அது பொருளாகிலும் –
பொருள் அது -பொருளின் உண்மை அது –
ஆகிலும் –
இங்கனே இருந்தது ஆகிலும் –

அவனை யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது –
திருச் செங்குன்றூரில் நின்று அருளினவனை அல்லது
என் மனமானது சேர்ந்து அணையாது –
ஸ்ரீ வைகுண்டநாதன் ஈஸ்வரன் அல்லாமையும் சம்பந்தம் இல்லாமையுமோ
திருவடி -வேறு ஒன்றினை என் மனம் விரும்புகிறது இல்லை -என்றது –
பாவோ நாந்யாத்ர கச்சதி -உத்தர -40-15-
அப்படியே இவரும்
அமர்ந்து அணைகை –
உள் வெதுப்பு அற்று பொருந்துகை

ஆதலால் –
இப்படி ஆகையால்

அவனுறைகின்ற-
அவன் நித்ய வாசம் செய்கிற –
உறைகின்ற என்பதனை பின் வருகின்ற திருச் செங்குன்றூர் -என்றதனோடு கூட்டுக –

நல்ல நான் மறையோர்-
அவனை அல்லது வேறு பிரயோஜனத்தை கருதாத பிராமணர் –

வேள்வியுள் மடுத்த நறும் புகை –
யாகங்களில் உண்டான அவிர்பாகத்தின் வாசனையோடு கூடிய தூமம் –
அவனை அல்லது வேறு ஒரு பிரயோஜனங்களில் விரும்பாதவர்கள் ஆகில் இவர்கள்
செய்யும் யாகத்துக்கு பயன் என் என்னில்
யாகம் செய்வதே பிரயோஜனம் ஆதல் –
பகவானுக்கு விரோதிகளாக உள்ளவர்கள் அழியச் செய்யும் அபசாரம் பலமாதல்
எம்பெருமானாரைப் போலே ஆயிற்று அவ் ஊரில் பிராமணர்களும் –
விசும்பொளி மறைக்கும் –
ஆகாசத்தில் ஒளி உள்ள சூர்யா சந்த்ரர்களை மறைக்கும் என்னுதல்
விசும்பு தன்னில் ஒளியை மறைக்கும் என்னுதல் –

நல்ல நீள் மாடத் –
ஓர் கர்மமும் வேண்டா
ஊர் அரண் தானே பகைவர்களுக்கு அடைய முடியாததாய் இருக்கும்

திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு –
மாட மா மயிலை திருவல்லிக்கேணி -என்னுமாறு போலே –

எனக்கு நல் அரணே-
அஸ்த்தானே பய சங்கை பண்ணும் எனக்கு அச்சம் நீங்குகின்ற தேசம் அது அல்லது இல்லை-
திருச் சிற்றாறு என்று திருப் பதிக்கும் பேர் -ஆற்றுக்கும் பேர் –

அல்லாத உகந்து அருளின தேசங்கள் இருக்க
இதை சொல்வது
எனது ஹிருதயம் இங்கே கிடக்கிறதே
அல்லாதோர் அரணும் அவனில் வேறு இல்லை
அது பொருளாகிலும்
இவன் மேலே கிடக்குமே என்னுடைய ஆவி
ஆதலால் இதுவே நல்ல அரண்
ஹோம புகை ஆகாசம் சூழ்ந்து ஒளி மறைக்கும்
அல்லாத இடங்களும் அவனுக்கு புறம்பான இடம் இல்லையே இதுவே பொருள் -ஆகிலும்
ஸ்ரீ வைகுண்ட நாதன் -ஈஸ்வரன்ஆக இருந்தும் பிராப்தம் ஆக இருந்தாலும்
பாவோ நாந்யாத்ர கச்சதி திருவடி அருளியது போலே
கன்னி நுண் சிறு தாம்பு வியாக்யானம்
திரி தந்தாகிலும் தேவ பிரான் உடை கரிய கோல திரு உரு காண்பான் நான்
ஆழ்வார் தான்
நஞ்சீயர் வியாக்யானம்
உத்தேச்யம் இல்லாமல்
கரிய
கோல
திரு -பிராட்டி உண்டே
உரு சப்த விசெஷணங்கள்
இல்லை சொல்ல வில்லையே
காண்பான் -கண்ணாலே பார்ப்பேன் நோக்கம் இல்லை மனச் செல்லாது
திருஷ்டாந்தம்
முறைப்படுவாரும் தருனௌ ரூப சம்பன்னௌ சொல்வார்களே
பால் பிடிக்காது என்பாரும் அது கைக்கும் என்று சொல்ல முடியாதே
இனிமை இல்லை சொன்னனே
எனக்கு பிடிக்காதே
பிடிக்காத வஸ்துவுக்கு உள்ள பெருமை மறைக்க முடியாதே
நெஞ்சு செல்ல வில்லை உசத்தியாக இருந்தாலும்
ஆழ்வார் ஆவி வேறு இடம் போகாது
அமர்ந்து -உள் வெதுப்பு அற்று பொருந்துகை
இப்படி ஆகையால்
அவன் நித்ய வாசம் செய்கிற
நல்ல நான்மறையோர் -அநந்ய பிரயோஜனர் –
வேதம் உஜீவிக்க தான் -ஜீவனமும் கொடுக்கும்
வேள்வியில் மடுத்த நறு புகை
யாகம் -ஸுயம் பிரயோஜனம்
பகவத் பிரதிபந்தகங்கள் அழிய செய்யும் அவிசார கர்மம்
அதர்வண வேதம் தான்த்ரிகர்கள் நிறைந்த பூமி
எம்பெருமானாரை போலே
கிருமி கண்டனுக்காக மேல் நாட்டிலே
புழுவன்-கழுத்திலில் cancer வரும் படி யாகம் செய்து
யதா சக்தி –தேவதா குரு நிந்தித்தா -பிரமாணம்
கொயில்கலைஇடிது
கோவிந்தராஜரை சமுத்ரத்தில் எறிந்து
மேலே மேலே அபசாரம் செய்ய ஆத்மா நாசமாக போகுமே
பாப கார்யம் மேலே பண்ண ஒட்டாமல் தடுக்க சரீரம் போக வேண்டுமே
ஹித புத்தியாலே செய்தார் –
சிசுபாலனை திருவடியில் சேர்த்து கொண்டது போலே
விசும்பு ஒளி மறைக்கும்
ஆதித்ய ஒளி மறைக்கும்
பரம பதம் ஒளி மறைக்கும்

மாடங்களே அரண்
திரு செங்குன்றூரில் இதில் மட்டும் அருளி
வேற்றுமை தொகை
மாட மாயிலைத் திரு வல்லிக் கேணி
அதற்குள் உள்ள திருச் சிற்றாறு
பன்றூட்டி சேலம் –
புரிசை -நிலம் உள்ள இடம்
காஞ்சி புரிசை
திருநெல்வேலி புரிசை போலே
நகரம் இட்டு கிராமம் அடையாளம் காட்டுவது போலே
அச்தானே பய சங்கை பண்ணும் எனக்கு பய நிவ்ருத்தி செய்யும் இடம்
திவ்ய தேசமும் ஆற்றுக்கும் இதே திருநாமம்

—————————————————————————————————————————————————————————————

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading