வாலிய தோர்கனி கொல்?வினை
யாட்டியேன் வல்வினைகொல்?
கோலம் திரள்பவ ளக்கொழுந்
துண்டங்கொ லோஅறியேன்
நீல நெடுமுகில் போல்திரு
மேனியம் மான்தொண்டைவாய்
ஏலும் திசையுள்எல் லாம்வந்து
தோன்றும்என் இன்உயிர்க்கே.
பொ-ரை : நீல நிறம் பொருந்திய பெரிய முகில் போன்ற திருமேனியையுடைய அம்மானது கொவ்வைக்கனி போன்ற திரு அதரமானது, தூய்மையையுடையதான ஒப்பற்ற பழநீதானோ? தீவினையேனாகிய என்னுடைய கொடிய தீவினைதானோ? அழகிய திரண்ட பவளத்தினது கொழுவிய துண்டுதானோ? அறியேன்; தப்புவதற்குத் தகுதியான திக்குகளில் எல்லாம் எனது இனிய உயிரைக் கொள்ளை கொள்ளுவதற்கு வந்து தோன்றாநின்றது.
வி – கு : ‘அம்மான் தொண்டைவாய் கனிகொல்? வினைகொல்? கொழுந்துண்டங்கொலோ? அறியேன்; திசையுள் எல்லாம் வந்து தோன்றும்’ என்க.
ஈடு : மூன்றாம் பாட்டு. 1அது தன் மூக்கு வலி காட்ட நாம் பேசாதே இருந்தால், ‘அத்தனையோ இதன் வாய் வலி’ என்று நம்மை ஏசுவர்கள் என்று திருப்பவளத்தின் அழகு வந்து நலிகிறபடியை அருளிச்செய்கிறார்.
வாலியது ஓர் கனிகொல் – 2முன்பு பிஞ்சாய், பின்பு பக்குவமாய், பின்பு அனுபவயோக்கியம் அன்றிக்கே போவன சில பழங்கள் உளவே அன்றோ? அங்ஙன் அன்றிக்கே, என்றும் ஒக்க ஒரே தன்மையாய் இருப்பது ஒருகனியோ?3அத்தலையில் இனிமை போது செய்யாமையாலே இத்தலையில் ஆற்றாமையும் போது செய்யாதே! வினையாட்டியேன் வல்வினைகொல் – 4இனிய பொருள் தீயது ஆயிற்று. அனுபவிக்கின்ற வர்கள் செய்த பாபத்தாலே அன்றோ? அமிருதமே விஷமாம்படியான பாவத்தைச் செய்தேன்.
கொஞ்சுகிளி அன்னமொழி குமுதஇதழ் அமுதால்
எஞ்சினன் நராதிபதி ஈதொரு வியப்போ!
அஞ்சுதரு தீவினையின் ஆரமுதும் நஞ்சாம்;
நஞ்சும்அமு தாம்உரிய நல்வினையின் மாதோ,’-என்பது, வில்லி பாரதம்.
5பாவத்தைச்செய்த என்னுடைய பாபமானது பலத்தைக் கொடுப்பதாய்க் கொண்டு அங்கே குடி ஏறிற்றோ? 1அங்கே கிடந்தே அன்றோ இங்கே அனுபவிப்பிப்பது? என்றது, ‘பகவத் விஷயத்தில் தண்டனை உருவமாகக் கிடந்தே அன்றோ இங்கு அனுபவிப்பிப்பது?’ என்றபடி. 2செய்த செயலாகையாலே செய்த போதே நசித்துப் போமே? 3இவன் செய்த பாபத்துக்கு, தானே சுவதந்தரமாய் நின்ற பலத்தைக் கொடுப்பதற்குத் தகுதி இல்லையே! 4அனுபவித்தாலும் அழியாத பாவம்’ என்பாள், ‘வல்வினை’ என்கிறாள்.
கோலம் திரள் பவளம் கொழுந்துண்டங்கொலோ அறியேன்-அழகு திரண்டிருந்துள்ள பவளத்தினுடைய அன்பினையுடைத்தான முறியோ? அறிகிலேன். புழுதி புடைத்திராமைக்கு ‘முறியோ’ என்கிறது; 5முறித்த வாயானது ஒளி உண்டாய் நெய்த்திருக்கும் அன்றோ? நீல நெடுமுகில் போல் திருமேனி அம்மான் – 6இதுதான் என்றும் உண்டாய் இருக்கச் செய்தே, இதற்கு முன்பு பாதகமாயிற்று இல்லை அன்றோ? கூட்டுப்படை நின்றவாறே வலியாநின்றதாயிற்று. நீலமாய் இனிமை அளவு இறந்துள்ள முகில் போன்ற வடிவையுடைய சர்வேஸ்வரனுடைய. தொண்டை வாய்-கோவ்வைப்பழம் போலே கனிந்து நெய்த்து அன்றோ திருப்பவளந்தான் இருப்பது?தொண்டை-கொவ்வை. 1தன்னில்தான் உண்டான பகை பார்த்திருக்கிறது இல்லையாயிற்று, இவளை நலிகிறவிடத்தில். 2‘இரண்டுக்கும் சேர வன்னியம் இல்லை அன்றோ? 3அவை நலிந்துகொடு தோற்றா நின்றதாகில் தப்பப் பார்த்தாலோ?’ என்ன, ‘வாய்வலி தப்பலாயோ இருக்கிறது?’ என்கிறாள் மேல்: ஏலும் திசையுள் எல்லாம்4-நானும் இவை நலியாத இடம் தேடித் தப்ப விரகு பாராநின்றேன்: அவ்வவ்விடங்களிலே வந்து தோன்றாநின்றது. என்றது, ‘பாரத்த இடமெல்லாம் தானேயாய் இராநின்றது,’ என்றபடி. ‘தோன்றுகிறதற்குக் கருத்து என்?’ என்னில், என் இன் உயிர்க்கே-என்னுடைய நற்சீவனை முடிக்கைக்காக.
மூக்கு வலி காட்ட நாம் பேசாமல் இருந்தால் அத்தனை தான் வாய் வலி என்பாரே
திருப் பவளம் அனுபவம்
தொண்டைவாய் -தொண்டை கனி போன்ற வாய்
திசைகள் எல்லாம் தோன்றி இன் உயிர் க்கு பாதகம்
பழுத்த பழம் போலே
அழகு திரண்ட பவள துண்டம் போலே
நீலே நெடு முகில் -பரபாக சோபை
முன்பு பிஞ்சாய் -காயாய் பின்பு கனி போலே இன்றி
என்றும் ஒக்க ஏக ரூபமாய் உள்ள கனி போலே
போக்யதை -சுருங்கினால் ஆற்றாமை சுருங்கும் –
ஈடுபாடு விஸ்தாரமாய்
போகய வஸ்து பாதகமாய் இருப்பது -நம் வினை காரணம்
வினையாட்டியேன்
அமிருதமே விஷம் போலே இருக்கும்படி
பாபம் பக்வமாய் பாப பலன் இந்த தொண்டை அம கனி
அங்கே கிடந்தது இ றே இங்கே அனுபவிக்கிறது
பாபம் பலன் அனுபவம் -திரு உள்ளம் நிக்ரஹம் காரணத்தால் துக்கம்
சுக துக்கம் காரணம் நமது கர்ம காரணம் இல்லை
அவன் அனுக்ரஹம் நிக்ரஹம்
சாஸ்திரம் விதித்ததை செயாமலும் விட வேண்டியதை செய்தும்
புன் சிரிப்பும் உதட்டை கடிப்பதும் அனுக்ரகம் நிக்ரகம்
கிரியைக்கு பிராப்தி இல்லையே சுகம் துக்கம் கொடுக்க –
அதரம் சுளிப்பே நம் கர்மம்
படியாய்க் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே அனுக்ரகம் பெற வேண்டும்
வால் வினைகள் -அனுபவித்தும் தீராத பாபங்கள்
அழகு திரண்ட கோலம்
பவளத் துண்டு
நடுவில் புழுதி படாமல் இருக்க துண்டு
செவ்வியதாய் இருக்கும்
நீல நெடு முகில் போலே திரு மேனி யில் உள்ள பவளம்
சேர்ந்து கூட்டுப் படை
தொண்டை கோவை
கோவை பழம் போலே கனிந்து நைந்து
நலிய சேர்ந்து வந்ததாம் திரு மேனியும் வாயும்
இருவரும் ஒரு மிடறாய் நலிய
தப்ப பார்த்தால் என்ன –
வாய்வலி தப்ப முடியுமா வாய் வலி -பலம்
திசையெல்லாம் வர
பார்த்த பார்த்த இடம் எல்லாம் தானேயாய்
ஜீவனை முடிக்க அழிக்க நோக்கு
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply