ஸ்ரீ பெரிய திருமொழி-3-2–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் —

(நிவ்ருத்தி மார்க்கம் விவரித்து -பிரவிருத்தி மார்க்கம் சுருக்கமாக அருளிச் செயல்களில்
வேதம் மாற்றிச் சொல்லும் –
பலன் இரண்டுக்கும் ஒன்றே என்பது மனசுக்கு புரிவது கஷ்டம்
நம்முடைய முயற்சி இல்லை -அவன் தானே பக்தி உழவன் -அவன் அருள் அனுக்ரஹம் கொண்டு அடைகிறோம்
நம்முடைய முயற்சி ஸ்தானத்தில் அவன் அருள்
அனுபவிக்க நம்மைத் தயாராக வைத்துக் கொள்வதே அதிகாரி லக்ஷணம்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே விதி அவன் அனுக்ரஹம் தான்-
மித்ர பாவேந-என்னுமவன் இருக்க என்ன கவலை -ஆபத்தில் புடவை சுரந்தது திருநாமம் அன்றோ –
திரு நாமம் நாராயண –கோவிந்த புண்டரீகாக்ஷன்
பெருமை -கோவிந்த நாமமே அருளும் நாராயணன் அருளுவான் சொல்ல வேண்டுமோ
சீதாபிராட்டி ஸூ வ சக்தியை விட்டாள் -திரௌபதி லஜ்ஜையை விட்டாள் –
கோவிந்த பெருமாளை -அருகில் கோவிந்தராஜன் -ஆனந்த தாண்டவம் கண்டு களித்து கிடக்கும் –
எளிய வியாக்யானம்
புண்டரீக வல்லித்தாயார்
செல்வன் வேங்கடத்து வித்தகன் -சேர்த்து பெரிய திருமடலில்
கோவிந்தராஜன் பிரதிஷ்டை உடையவர்
கோவிந்த கோஷம் செய்தே திருமலை ஏறுகிறோம் –
இதில் பர உபதேசம் நமக்கு –
அகிஞ்சன அகதி -என்று கொண்டு ஆச்சார்ய அபிமானம் ஒன்றே உத்தாரகம் )

ஊன் வாட பிரவேசம்
அடியவர்க்கு மெய்யனாகிய தெய்வ நாயகன் -என்று
ஆஸ்ரிதர்க்கு சுலபனாகைக்காக் திருவயிந்திர புரத்திலே
சந்நிஹிதன் ஆனான் என்றார் கீழ் –

அவன் படி இதுவான பின்பு
விரோதியான தேஹத்தைக் கழித்து
பகவத் பிராப்தி பண்ண வேண்டி இருப்பார்க்கு
சரீரத்தை ஒறுத்து சாதன அனுஷ்டானம் பண்ண வேண்டா
அவன் உகந்து வர்த்திக்கிற திருச் சித்ர கூடத்தை ஆஸ்ரயியுங்கோள் -என்கிறார் –

மன்னு மழல் நுகர்ந்தும் வண் தடத்தின் உட் கிடந்தும் -பெரிய திரு மடல் -என்கிறபடியே
கோடைக் காலம் பஞ்சாக்னி மத்யஸ்தராயும்
சீதகாலம் தடாகங்களிலே அகமகர்ஷகம் பண்ணியும்
அதிலே பாசி ஏறக் கிடந்தும்
இப்படி சரீரத்தை ஒறுத்து
அப்பஷராயும் வாயு பஷராயும் சால மூல பலாதிகளை புஜித்தும்
தபஸு பண்ணி கிலேசிக்க வேண்டா

பிரளயாதி ஆபத்துக்களில் அபேஷா நிரபேஷனாய் ரஷிக்கும் ஸ்வ பாவனாய்
ராவண ஹிரண்யாதிகள் உடன் நலிவு வந்த காலத்தில்
ராம கிருஷ்ணாதி அவதாரங்களைப் பண்ணி ரஷித்தும்
இப்படி சர்வ பிரகாரமாக
சர்வ ரஷகனான
சர்வேஸ்வரன்
ஸ்ரீயபதி
திருச் சித்திர கூடத்தில் சந்நிஹிதன் ஆனான்

அத் தேசத்தைச் சென்று சேரவே
சகல விரோதிகளும் போய் அவனைப் பெறலாம்
சடக்கென அத் தேசத்தில் சென்று சேருங்கோள் என்று
பர உபதேசம் பண்ணுகிறார்-

——————————————

ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாள கிற்பீர்
கானாட மஞ்சைக் கண மாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய்
தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–3-2-1-

மஞ்சைக் கணம் – மயில் திரள்கள்
மாடே – சோலைக்கு அருகில்

ஊன் வாட-இத்யாதி
மாம்சமானது குறைய-( இடை சிறுத்து வைராக்யம் மிக்கு )
அசன வசநாதிகளைக் குறைத்து
பிராணங்களைப் போகாதபடி அப்பஷண வாயு பஷணங்களாலே கால் கட்டி
சரீரத்தை விட்டுப் போகாத இந்திரியங்கள் ஐந்தும்
ஸ்வ ஸ்வ விஷயங்களைப் பெறாமையாலே நொந்து ஈடுபடும் படி
தாங்கள் மேன்மேலும் கிலேசிக்கும்படி தபஸு பண்ண வேண்டா

தமதா- இத்யாதி
பரம பதத்தை தங்களதாக ஆள வேண்டி இருப்பீர்

கானாட -இத்யாதி
சோலை அசையும்படியாக
மயில் இனங்கள் ஆட -அத்தாலே சோலையில் நின்றும் கிளம்பின
வண்டுகள் ஆனவை அச் சோலை அருகே கால்கள் களித்து
பாயா நின்றுள்ள
நீரோடு காலை உடைத்தாய் இருக்கிற நீர் நிலங்கள்
அருகிட்டுப போய்
தேன் உண்டு வண்டுகள் ஆனவை மேல் எழப் பறக்க
அக்காற்றாலே மாடத்தில் உண்டான கொடிகள் ஆனவை
அசையா நிற்கும் ஆயிற்று

————————————————–

இத்தை விளக்கி
உயிரைக் காவல் இடுவது எங்கனம் என்கிறார்
பரமபதம் சென்று அத்தை ஆள்வதற்கு ஸ்ரீ யபதியை நெஞ்சில் வைக்க வேண்டுமே –

காயோடு நீடு கனி யுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
வாயோது வேதம் மலிகின்ற தொல் சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீயோங்க வோங்கப் புகழ் ஓங்கு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-2-

தில்லை மூவாயிரவர் பிரசித்தம்
அங்கு உள்ளவர் சாதனாந்தர நிஷ்டர் என்றும் கர்மமும் கைங்கர்யத்தில் புகும் என்றபடி
அனன்ய ப்ரயோஜனர் என்றுமாம்

பருவம் இளைதான காய்களையும்
வெய்யிலிலும் காற்றிலும் உலர்ந்து பசையற்ற கனிகளையும் புஜித்து வீசின வெட்டிய காற்றைப் பருகி
நெடும் காலம் பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸு
பண்ண வேண்டா
ஸ்ரீயபதியை ஹிருதயத்தில் பிரியாதபடி வைத்துக் கொள்வோம் என்பீர்
(வைப்பவர்கள் இல்லை -வைக்க நினைத்தாலே போதும் அவன் உள்ளே புக தான்
காத்துக் கொண்டு இருக்கிறானே விலக்காமையே வேண்டுவது )

வாயோது இத்யாதி –
வாயாலே ஓதுகிற வேதம் குறைவறுகையாலே வந்த
ஸ்வ பாவிக சம்பத்தை உடைய
பிராமணர் என்றும் ஒக்க முறையாலே அனுஷ்டித்த அக்னி வளர வளர
புகழ் ஓங்கா நின்று உள்ள -தில்லை

(முறையாலே-சாஸ்த்ரா நியமம் படி
சேஷபூதன் என்று அறிந்து கைங்கர்ய புத்தியாக என்றுமாம்- )

—————————————————-

இது முதல் ஒவ் ஒரு அவதாரங்களை அருளிச் செய்கிறார் –
சம்சார பிரளயத்தில் அழுந்தி இருக்க உத்தரிப்பானோ
தங்களையும் மறந்து கைங்கர்யமும் இழந்து -இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே இருக்க உத்தரிப்பனோ
மானமிலா பன்றி உவமானம் இல்லா தன்னிகர் இல்லா அபிமானம் இல்லா – மகா வராகம் ஒன்றாய்-

வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள் புக்கு அழுந்த
வம்புண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர்
பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர் கோன் பணிந்த
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே—3-2-3-

விருப்போடு இருப்பீர்-பாரிப்பே வேண்டுவது –

மிக்க சினத்தை உடைத்தாய்
புனத்திலே வர்த்திக்கும் மகா வராகம் ஒன்றாய்
பரந்து இருந்துள்ள கடலிலே பூமி அழுந்த
அப்போது
பல மூலங்களை உடைத்தான பொழில் சூழ்ந்த
பூமியை எடுத்தவனுடைய திருவடித் தாமரையை
அணைய வேணும் என்னும் விருப்பத்தோடு வர்த்திப்பீர் –

ரத்னங்களைக் கொண்டு பரிகரத்தோடும்
பல்லவர் கோன்
பணிவதும் செய்து
செம் பொன்னாலும் மணியாலும் செய்த
மாடங்கள் சூழா நின்றுள்ள தில்லை-

—————————————————————–

பூமிப்பிராட்டிக்கு உதவினவன்
நமக்குச் செய்வானோ
அர்த்தித்தவனுக்கு அர்த்தியாகவே சென்று உதவினான்

அருமா நிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த
பெருமான் திரு நாமம் பிதற்றி நுந்தம் பிறவித் துயர் நீங்குதும் என்ன கிற்பீர்
கருமா கடலுள் கிடந்தான் உவந்து கவை நா அரவின் அணைப் பள்ளியின் மேல்
திருமால் திரு மங்கையோடாடு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-4-

கவை நா-இரட்டை நாக்கு –
ஏழு தலை ஆதி சேஷன் இங்கே சேவை பிரசித்தம்
ஆடு -நித்ய வாசம் செய்யும்

அளக்க அரிதான மகா பிருதிவியை
அளைக்கைக்காக வாமனனாய் அசுரனுடைய
மகா யாகத்திலே சென்று அர்த்தித்த
சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தை
அடைவு கெட பேசி உங்களுடைய
ஜன்ம துக்கத்தை போக்குவோம் என்று சொல்லி இருப்பீர்
இரண்டு நா உடைய திரு அநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே
கறுத்துப் பெருத்த கடலிலே உகந்து
கண் வளர்ந்து அருளின
ஸ்ரீயபதி பெரிய பிராட்டியாரோடே
கூட விடாதே சஞ்சரிக்கிற தில்லை –

(அமர்ந்த பார்த்தசாரதி
கிடந்த கோவிந்தராஜன்
கன்வர் மஹரிஷிக்காக
புண்டரீக வனம்-புண்டரீக ரிஷிக்காக புண்டரீக வல்லித் தாயார் வெள்ளாற்றுக்குத் தெற்கே ஸ்ரீ முஷ்ணம் வடக்கு
தில்லி தஞ்சகன் கஜமுகன் தண்டகாசுரன் -தஞ்சை மா மணி
பூ வராஹர் ஸ்ரீ முஷ்ணம் –
தில்லி காவல் தெய்வம்
காந்தார வ்ருக்ஷம் -தில்லை
நந்தி வர்மா பல்லவன்
சித்ர கூடம் அழகான கூடம்
விஸ்வகர்மா -ரத்னசபை கனகசபை -நாட்டியம் -காலைத்தூக்கி ஆட பார்வதி தூக்க முடியாமல்
சங்கு சக்கரம் ஏந்தி சயனம்
தேவாதி தேவன் அபய பிரதானம்
நின்ற பெருமாள் சித்ர கூடத்துள்ளான்
காம் விந்தத்தி கோவிந்தன்
பசு நிரை
கோ வாக்கு வாக்கீஸன்
16 நூற்றாண்டில் ஸ்வாமி தொட்டாச்சார்யார்-பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாள் )

———————————————————————–

வராஹ
வாமன
சரித்திரங்கள் கீழே
பரசுராம அவதாரம் இதில் –
கர்ம ஜென்ம வாசனா பிரபல விரோதிகள்
மகா பலி போல் சின்ன விரோதி இல்லையே
விரோதி நிரசன சீலனான பரசுராம சரித்திரம் அருளிச் செய்கிறார் இதில்

கோ மங்க வங்கக் கடல் வையம் உய்யக் குல மன்னரங்கம் மழுவில் துணிய
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித் தவ மா முனியைத் தமக்காக கிற்பீர்
பூ மங்கை தங்கிப் புல மங்கை மன்னிப் புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர்
சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-5-

சேமம் கொள்-அரண் உடைய -ரக்ஷணம் காப்பு

ராஜாக்கள் என்ற பேர் பெற்றார் அடங்கலும் மங்க
கடல் சூழ்ந்த பூமி உய்ய
ராஜாக்கள் உடைய சரீரம் மழுவிலே துணித்த விடத்திலும்
கோபம் மாறாதே ஆயுதம் தொட்ட அதிமாத்ரமான
மகா வீர்யத்தை உடையனான
ஸ்ரீ பரசுராம ஆழ்வானை தம்தாமுக்கு
ஆக்கிக் கொள்ள வேண்டி இருப்பீர்
பெரிய பிராட்டியாரும் ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும்
நித்யவாசம் பண்ணி
புகழ் மங்கை எங்கும் உஜ்ஜ்வலமாய் வர்த்திப்பதும் செய்து
புகழையும் காப்பையும் உடைய
பொழில் சூழ்ந்த தில்லை –

———————————————————————

எதிரிட்ட ராஜாக்களை வென்றாலும்
எங்களுடைய சம்சார சாகரம்
அனந்த அவதாரம் கடலை அடைத்த சரித்திரம் இதில்

நெய் வாயழ்லம்பு துரந்து முந்நீர் துணியப் பணி கொண்டு அணி யார்ந்து இலங்கு
மையார் மணி வண்ணன் எண்ணி நுந்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர்
அவ்வாய்  இள மங்கையர் பேசவும் தான் அருமா மறை யந்தணர் சிந்தை புக
செவ்வாய்க் கிளி நான் மறை பாடு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-6-

இள மங்கையர் பேசவும்-வேதங்களை தந்தைமார் சொல்ல இவர்களும் பேச –

நெய் வாய் அழல் அம்பு இத்யாதி –
கடைந்து நெயிட்ட வாயை உடைத்தாய்
நெருப்பை உமிழுகிற அம்பை ஏவி-( அம்பைக் காட்டி அச்சுறுத்தி )
கடலைத் துணித்து அத்தைப் பணி கொண்டு
உஜ்ஜ்வலமாய் கருமை மிக்கு இருந்துள்ள
மணி போலே இருக்கிற திரு நிறத்தோடு கூடின விக்ரஹத்தை உடையவனை
உங்கள் ஹிருதயத்தில் நித்யவாசம் பண்ணும்படி வாழ வல்லீர்-
(எல்லார் உள்ளத்திலும் இருந்தாலும் உள்ளுவார் உள்ளத்தே உகந்து இருப்பான் அன்றோ )

அவ்வாய் இத்யாதி
தன் வாயில் பழுப்பு போலே இருக்கிற பாலைகளான பெண்கள்
ஒத்துக் கேட்ட செவி ஏற்றாலே சொல்லவும்
பிராமணர் உடைய ஹிருதயத்துக்கு ஏற்ற –
சிவந்த வாயை உடைத்தான கிளியானது
நல்ல ஸ்வரத்தோடே நாலு வேதத்தையும்
பாடா நின்றுள்ள தில்லை-

——————————————————————–

எங்களால் கிட்டப்போமோ
புருஷகார பூதை அருகில் இருக்க கவலை ஏன்

மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த
தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
கௌவைக் களிற்றின் மருப்பும் பொறுப்பில் கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்
தெய்வப் புனல் சூழ்ந்து அழகாய தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-7-

நிவா-வெள்ளாறு

மௌவலோடு-இத்யாதி-
முல்லை -உடன் கூடின திருக் குழலை உடைய
நப்பின்னை பிராட்டி யினுடைய
மிருதுவான திருத் தோளிலே கலந்து
அங்குண்டான மத்ஸ்யங்கள் சுழலும்படி
சுழன்று வருகிற கடல் பெற்ற பெரிய பிராட்டியார்
தங்கும் திரு மார்பை உடையவனை
ஹிருதயத்தில் வைத்துக் கொள்ளும் என்பீர்

கௌவை -இத்யாதி –
சிம்ஹத்தோடு பிணங்கி
பிளிறுகிற ஆனையின் உடைய கொம்பும்
மலையில் பரிமளிதமான சந்தனத்தையும் தள்ளி
நிவா -என்கிற ஆறு வலம் கொள்ளா நிற்கிற
விலஷணமான புனல் சூழ்ந்து
தர்சநீயமான -தில்லை –

—————————————————–

கீழே சொன்ன புருஷகார பூதரை முன்னிட்டு ஆஸ்ரயிக்க
விரோதியைப் போக்கி துக்க வர்ஷத்தைப் போக்கி -இஷ்டம் பிரதானம் பண்ணும் அவதாரங்கள்
கேசி நிரசனம்
கோவர்த்தன உத்தாரணம்
ஆ நிரை மேய்த்து
உலகு உண்ட வ்ருத்தாந்தங்கள்

மா வாயின் அங்கம் மதியாது கீறி மழை மா முதுகுன்று எடுத்து ஆயர் தங்கள்
கோவாய் நிரை மேய்த்து உலகுண்ட மாயன் குரை மா கழல் கூடும் குறிப்புடையீர்
மூவாயிரம் நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்காய சோதி
தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-8-

முது -பழையதான
அணங்காய சோதி -அப்ராக்ருதமான தேஜஸ்-

கேசி உடைய வாயோடு கூட உடம்பை
அநாயாசேன இரண்டாகக் கிழித்து
இந்த்ரனால் வந்த மழையிலே
பெருத்துப் பழையதான கோவர்த்தனத்தை எடுத்து
ஆயர் தலைவனாய் பசு மேய்த்து
லோகத்தை திரு வயிற்றில் வைத்த
ஆச்சர்ய பூதனுடைய ஆபரண ஒலியை
உடைத்தாய் போக்யதை மிக்க திருவடிகளை
கூட வேணும் என்னும் குறிப்பு உடையீர்
சாஸ்த்ரங்களில் சொல்லுகிறபடியே
ஆஸ்ரயிக்க
அவர்களுக்கு ஆஸ்ரயணீயனாய்
தேஜசை உடைய சர்வேஸ்வரன்-

————————————————————-

உபதேசித்த ஆஸ்ரயநீயத்துக்கு பலம் பிராப்யாந்தரங்களை நிவ்ருத்தி பூர்வக
பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யமே பலன் என்கிறார்

செரு நீல வேல் கண் மடவார் திறத்துச் சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்
அரு நீல பாவம் அகலப் புகழ் சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்
பெரு நீர் நிவா வுந்தி முத்தம் கொணர்ந்து எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள
திரு நீலம் நின்று திகழ்கின்ற தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-9-

யுத்தத்துக்கு பரிகரமாய்
நீலமான நிறத்தை உடைய வேல் போலே இருக்கிற
கண்ணை உடைய ஸ்திரீகள் திறத்தில்
அதுக்கு பிரதிபந்தகர் பக்கல் சினத்தோடு
நெஞ்சில் ஆசையால்
வளர்ந்து பரிஹரிக்க ஒண்ணாதே
தண்ணிதான பகவத் பிரதிபந்தகமான
பாபம் போக-

பிரதிசித்தரான ப்ரஹ்மாதிகளுக்கும் கிட்ட அரிய
பரம பதத்தில் இருக்க வேண்டி இருப்பீர்

மிக்க நீரை உடைய நிவா என்கிற ஆறு
முத்தை கொடு வந்து வித்துகிற வயலிலே
விக்ருதமான கயல்கள் பாய்ந்து
தாவித் திரிய தர்சநீயமான நீலம் நின்று
திகழா நின்றுள்ள -தில்லை –

————————————————————

சீரார் பொழில் சூழ்ந்து அழகாய தில்லைத் திருச் சித்ரகூடத்துறை செங்கண் மாலுக்கு
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும்
காரார் புயல் கைக் கலிகன்றி குன்றா வொலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்
பாரார் உலகம் அளந்தான் அடிக் கீழ்ப் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே–3-2-10-

செங்கண் மாலுக்கு-சர்வேஸ்வரனுக்கு
ஆராத உள்ளத்தவர்-ஆராத ஸ்நேஹத்தை உடைய ஸ்ரீ வைஷ்ணவர்கள்

அழகு மிக்க பொழில் சூழ்ந்த
தர்சநீயமான தில்லையில்
நித்யவாசம் பண்ணுகிற சர்வேஸ்வரனுக்கு
ஒரு நாளும் ஆராத ஸ்நேஹத்தை உடைய
ஸ்ரீ வைஷ்ணவர்கள் கேட்டு சந்தோஷிக்க
கடல் சூழ்ந்த பூமிக்கு பிரசாதத்தைப் பண்ணும்
ஸ்வபாவராய் –

கார் காலத்து மேகம் போலே
பரம உதாரரான திரு மங்கை ஆழ்வார்
குறையாத ஓசை உடைத்தாக
அருளிச் செய்த திரு மொழி பத்தும் வல்லார்
ப்ருதீவி பிரசுரமான லோகத்தை அளந்த
திருவடிகளில் கீழே காலம் எல்லாம் வர்த்திக்கும்படி
வாழ்வாராகப் பெறுவர்-
கைங்கர்ய ஸ்ரீ விச்சேதம் இல்லாமல் பெரும் தாளுடை பெருமான் அடிக்கீழ் பிரியாது இருப்பாரே –

—-

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

ஊன் ஒறுத்து உண்ணாது நீர் நெருப்பு ஊடு நின்று
வானடைய நீர் வருந்த வேண்டா நம் -கோனமரும்
சித்திர கூடம் சேர் என்னும் கலியன் தாள் அடையும்
பத்தர்க்கு இங்கு இல்லை வாடல் –22-

மூவாயிரம் மறையாளர் நாளும் வணங்கும் –தில்லை மூவாயிரம் நாங்கை நாலாயிரம் –

———————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading