திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-7-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

ஆட்டியும் தூற்றியும் நின்றுஅன்னை
மீர்!என்னை நீர்நலிந்து என்?
மாட்டுயர் கற்பகத் தின்வல்லி
யோகொழுந் தோஅறியேன்
ஈட்டிய வெண்ணெய்உண் டான்திரு
மூக்குஎன தாவியுள்ளே
மாட்டிய வல்விளக் கின்சுட
ராய்நிற்கும் வாலியதே.

பொ – ரை : தாய்மார்களே1 நீங்கள், என்னை வருத்தியும் பழி மொழிகளைக் கூறியும் நின்று நலிவதனால் பயன் யாது? திரட்டிய வெண்ணெய் உண்டவனான கிருஷ்ணனது அழகிய மூக்கானது, பக்கத்தில் உயர்ந்து விளங்குகின்ற கறபகத்தின் கொடியோ? அல்லது, கொழுந்தோ? அறியேன்; அது, என்னுடைய உயிருக்குள்ளே ஏற்றிய வலிய விளக்கினது சுடராய் நிற்கும் பெருமையையுடையது.

வி – கு : ‘திருமூக்கு வல்லியோ, கொழுந்தோ அறியேன்; திருமூக்குச் சுடராய் நிற்கும் வாலியது,’ என்க.

ஈடு : இரண்டாம் பாட்டு. 1‘இரண்டுக்கும் நடுவே நாம் இருக்க, இவை முற்படுகையாவது என்? அத்தனையோ நம் மூக்கு வலி?’ என்று திருமூக்கில் அழகு நலிகிறபடியைச் சொல்லுகிறது.

ஆட்டியும் தூற்றியும் – ஆட்டுகையாவது, தாம் தாம் பழி சொல்லி அலைக்கை. தூற்றுகையாவது, பிறரும் அறியப் பழி சொல்லுகை நின்று – 2‘அச்சம் உறுத்தி மீட்கலாமோ?ய என்று ஒருகால் அலைக்கை இயல்பே அன்றோ? அங்ஙன் அன்றிக்கே, முன்பு செய்ததற்கு ஒரு பிரயோஜனம் காணாதிருக்கச் செய்தேயும் விடாதே நின்று. அன்னைமீர் என்னை நீர் நலிந்து என் – 3ஹிதத்திலே நடக்கும் தமப்பனைப் போலே, என் பிரியத்திலே நடக்கும் நீங்கள் என்னை நலிகிறது என்?4என் உகப்பே பேறாக நினைத்திருக்கக்கூடிய நீங்கள் நலிகிறது என்? 5அந்த உருவு வெளிப்பாட்டைத் தடைசெய்யலாம் என்றோ, என்னை மீட்கலாம் என்றோ? ஒரு பிரயோஜனம் இல்லாததிலேயும் முயற்சி செய்யக் கடவதோ?’ என்பாள், ‘நலிந்து என்’ என்கிறாள். என்றது, 1‘அவனுடைய மூக்கு வலி இருக்கிறபடியையும் அறிந்து நீங்கள் என் செய்யப்படுகிறீர்கோள்?’ என்றபடி.

2‘நாங்கள் சொல்லுகிற ஹித வசனத்துக்கு ஒரு பிரயோஜனம் இல்லையாகில், என் செய்தால் பிரயோஜனம் உண்டு?’ என்ன, மாடு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் – வல்லீர்கோளாகில் இந்தச் சந்தேகத்தை அறுத்துத் தாருங்கோள். ஒரு கடல் அருகே அக்கடல் ஊற்றே தாரகமாக வளருகிறது ஒரு கொடி போலே ஆயிற்று. திருக்கண்களுக்கு அருகே திருமூக்கு இருக்கிறபடி. மாடு – அருகு. 3‘உந்நஸம் – உயர்ந்த மூக்கையுடைய’ என்கிறபடியே‘உயர்’ என்கிறது. ‘

ஸூசி ஸ்மிதம் கோமள கண்டம் உந்நஸம்   லலாட பர்யந்த விலம்பிதாலகம்’-என்பது, தோத்திரரத்தினம், 32.

4ஒழுகு நீட்சியாலே கொடி என்னவுமாய், ஊக்கம் மாறாமையாலே கொழுந்து என்னவுமாய் இராநின்றதாதலின், ‘வல்லியோ கொழுந்தோ’ என்கிறது. ‘இன்னது’ என்று நிச்சயிக்க அரிதாக இருக்கையாலே‘அறியேன்’ என்கிறது. ‘முற்றுவமை இருக்கிறபடி, எங்களுக்கு அறியப்போமோ? இதிலே உட்புகநின்று அனுபவிக்கிற நீ பின்னைச் சொல்லாய்’ என்ன, சொல்லுகிறாள் மேல்:

ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு – 5அநுகூலர்களுடைய சம்பந்தமுடைய திரவியத்தால் அல்லது தரிக்க மாட்டதே வெண்ணெய் களவு காணப் புக்குக் கொண்டியிலே பிடி உண்டு, பின்பு அதனை இல்லை செய்கைக்காக முகத்திலே தடவிக்கொள்ளுமே;அவ்வெண்ணெயிலே முடை நாற்றமும் உருவு வெளிப்பாட்டிலே தோற்றுகிறதாயிற்று இவளுக்கு. 1அப்போதை முடைநாற்றம் தோற்றும்படியாயிற்று உருவு வெளிப்பாட்டில் மெய். ‘நீ காண்பதாகச் சொல்லுகிற இது எங்களுக்குத் தெரிகிறது இல்லையே!’ என, எனது ஆவியுள்ளே – என் மனதிற்குள்ளே. மாட்டிய – ‘சுடர்வெட்டிய’ என்னுதல்: ‘ஏற்றிய’ என்னுதல், வல் விளக்கின் சுடராய்-விரக தாபத்தாலே அவியாத விளாக்காயிற்று. 2‘‘ஏற்றிய பெருவிளக்கு’ என்று ஒருதமிழ்புலவன் இட்டு வைத்தான்’ என்று அருளிச்செய்வர். நிற்கும் வாலியதே – வலிதாய் நின்று நலியாநிற்கும்.3‘விளக்காகிறது தான் சிறிது நேரம் இருப்பதுமாய் ஓர் இடத்திலே இருப்பதுமாய் அன்றோ இருப்பது? இது அங்ஙன் அன்றிக்கே, எப்போதுமாய் எங்கும் உண்டாய் இராநின்றது: பாதகத்துவத்தில் உறைப்பை நினைத்துச் சொல்லுகிற வார்த்தை அன்றோ இது?

திரு மூக்கின் அழகில்
இரண்டுக்கும் நடுவே நாம் இருக்க
மூக்கு வலி பலம் அர்த்தம்
வாளியது கொடியது
ஹிம்சை செய்தும் வைத்தும் என்ன பயன்
மாட்டுயர்
மாடு பக்கம்
உயர்ந்த கல்ப மரத்தில் வல்லியோ கொழுந்தோ
வெண்ணெய் உண்டவன் திரு மூக்கு
தான் பழி நேராக சொல்வது ஆட்டுகை தூற்றுகை வெளியில் வைத்து -பிறர் அறிய
அச்சம் உறுத்தி மீட்க -அங்கன் இன்றிக்கே
விடாதே -நின்றும் -தொடர்ந்து வைத்து
நலிந்து என்ன பலன்
தாய் பிரியம்
தமப்பன் ஹிதம்
உகப்பே பேறாக கொள்ள வேண்டிய தாயார் நலிவதால் என்ன பயன்
அவனுடைய மூக்கு வலி அறிந்தும்
பலம் அறிந்தும்
ஹிதம் பிரயோஜனம் இல்லை
சம்சயம் அறுத்து
கற்பகத்தின் கொடியா கொழுந்தா சொல்லும்
மாடு பக்கம்
கண்ணுக்கு அருகில்
கடல் அருகில் கடல் முத்தே தாரகமாக உள்ள கொடி போலே
உன்மதம் -ஆளவந்தார் ஸ்தோத்ரம்
கோமள கண்டம் உன்மதம் எடுப்பான மூக்கு உயர்
ஒழுகு நீட்சியால் கொடி
செவ்வை மாறாமல் கொழுந்து
அறியேன்
உட் புகா நின்ற நீயே சொல்லு என்ன
ஈட்டிய வெண்ணெய்
அனுகூலர் கர ஸ்பர்சம் பட்ட வெண்ணெய் உத்தேச்யம்
ஈட்டிய திரட்டிய
கர ஸ்பர்சம் வெண்ணெய் க்கு தானே உண்டு
கையாலே தான் எடுக்க வேண்டும்
அகன்று எடுத்து நீர குறைய
சந்தனம் வச்த்ரத்தால் புழிந்து போலே வெண்ணெய் பண்ண முடியாதே
கையை ஆட்டி -ஈரப் பதம் குறைந்து
தரிக்க மாட்டாமல் களவு காண புக்கு
கையும் களவாக பிட் பட்டு
இல்லை செய்கைக்காக முகத்தில் தடவிக் கொண்டான்
முகம் தனக்கு தெரியாதே
எனக்கே தெரியாமல் காவலுக்கு தெரியுமா
வெண்ணெய் உண்டான் திரு மூக்கு
உரு வெளிப்பாட்டில் வாசனையும் பாவனா பிரகர்ஷம் முடை நாற்றம் இடை பேச்சு போலே
முடை நாற்றமும் கிடைத்தது இவளுக்கு
உரு வெளிப்பாட்டில் மெய்மை
எனது ஆவி உள்ளே -ஹிருதயதுக்கு
மாட்டிய -ஏற்றிய
விரகத்தாலும் அணையா விளக்கு திரு மூக்கு
ஏற்றிய பெரு விளக்கு மாட்டிய பெரு விளக்கு போலே
வலிதாய் நின்று நலியா நிற்கும்
தீபம் ஷணிகமாய்-பௌததன் -சுடர் புதியதாக திரி தீர சுடர் போகுமே
தொடர்ச்சியாக எரிவதால் ஒரே சுடர் ஆக தெரியும்
ப்ராதேசிகம் -ஒரே இடத்தில் இருக்கும் தீபம்
திரு மூக்கோ -எப்போதுமே எங்கும் உண்டாய் இரா நின்றது
பாதகத்தின் உறைப்பை உறுதி பட சொல்லுகிறாள்
மாட்டிய -சுடர் வெட்டிய வலிய வன்மை பெருமை சுடர் போலே இருக்கும்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading