கண்டு தெளிந்தும்கற் றார்கண்ணற்கு
ஆளன்றி ஆவரோ?
வண்டுண் மலர்த்தொங்கல் மார்க்கண்
டேயனுக்கு வாழுநாள்
இண்டைச் சடைமுடி ஈசன்
உடன்கொண்டு உசாச்செல்லக்
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டுஉடன்
சென்றது உணர்ந்துமே.
பொ-ரை : ‘வண்டுகள் தேனை உண்ணுகின்ற மலர்களால் கட்டப்பட்ட மாலையைத் தரித்த மார்க்கண்டேயனுக்கு வாழ்நாள் அளித்தல் சம்பந்தமாக, பூமாலையைத் தரித்த சடைமுடியையுடைய சிவபெருமான், அவனைத் தன்னோடு அழைத்துக்கொண்டு, அறப் பெரியனான சர்வேஸ்வரன் பக்கல் உசாவ வேண்டும் என்று செல்ல, அந்த நிலையிலேயே அவனைக் காக்க வேண்டும் என்று திருவுள்ளத்தே கொண்டு தன்னோடே ஒத்த தன்மையையும் கொடுத்துப் பின் ஒரு நாளும் பிரியாதே சென்றபடியை உணர்ந்தமு கண்டும் தெளிந்தும் கற்றவர்கள் கண்ணபிரானுக்கு ஆள் ஆவரே அன்றி, மற்று ஒருவர்க்கு ஆவரோ? ஆகார்,’ என்றபடி.
வி-கு : ஈசன் மார்க்கண்டேயனுக்கு வாழுநாளை உசாச்செல்ல. அங்குக் கொண்டு தன்னொடுங் கொண்டு உடன் சென்றதை உணர்ந்தும் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?’ எனக. இண்டை – மாலை.
ஈடு : ஏழாம் பாட்டு. 1‘திருமகள் கேள்வனான தன்னைத் தாழவிட்டு இரந்து பாதுகாத்து ஒரு பெரிய ஏற்றமோ, வேறு தெய்வத்தைத் துதித்து வணங்கிய மார்க்கண்டேயனை அங்கீகரித்த இம்மஹாகுணத்துக்கு?’ என்கிறார்.
கண்டும் தெளிந்தும் கற்றார் – கற்றுத் தெளிந்து கண்டார்; ஒருவன் பக்கலிலே ஓர் அர்த்தத்தைக் கேட்டு, அதிலே தெளிய வாசனை பண்ணி. பின்பு நேரே அறிதல் பரியந்தமாக்கி வைப்பார். 3கேட்டல் தெளிதல்கள்தாம், நேரே பார்ப்பதற்குச் சமானமான ஆகாரத்தளவும் சென்று நிற்கும் அன்றோ? கண்ணற்கு ஆள் அன்றி ஆவரோ – 3தியானிக்கின்றவர்கள். தியானிக்கப்படுகின்றபொருளை விட்டுப் புறம்பே போவாரோ? வண்டு உண் மலர்த்தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள் – ‘வண்டுகள் தேனைக் குடிக்கின்ற பூமாலையையுடைய ஸ்ரீ மார்க்கண்டேயனுக்கு வாழ்நாள் உண்டாகைக்காக’ என்னுதல்; அன்றிக்கே. 1‘வாழுநாள்’ என்பதனை, மேலே வருகின்ற ‘உசாச்செல்ல’ என்றதனோடு கூட்டலுமாம்.2தாய்தந்தையர்கள் மார்க்கண்டேயனை ஒப்பித்து விளையாட விட, அங்கே ஓர் அசரீரி வாக்கியம் ‘இவனுக்குச் சாக்காடு குறுகிற்று’ என்று சொல்ல, அதனைக் கேட்டத் தாய்தந்தையர்கள் வெறுக்க, ‘இதற்கு நீங்கள் அஞ்ச வேண்டா; நான் போக்கிக்கொள்ளுகிறேன்,’ என்று இவன் சென்று சிவனை அடைய, அவனும் பச்சை இடும் நாள் எல்லாம் இடுவித்துக்கொண்டு, ஒருநாளிலே வந்தவாறே தலைக்கடையையும் புழைக்கடையையும் அடைத்துச் சடையை விரித்துக் காட்டி, ‘உன் காரியத்தைப் போன்றே ஆறல் பீறல்காண் என் காரியமும்: அருகில் மாலையைப் பாராதே என் தலையில் சடையைப் புத்தி பண்ணாய்’ என்று காட்டி, 3‘ஆனாலும் நெடுநாள் பச்சை இட்டு என்னைத் துதித்த நீ பேசாதே போக ஒண்ணாதே அன்றோ? உனக்கு ஒரு பற்றுக்கோடு காட்டக் காணாய்!’ என்று, சர்வேஸ்வரனுடைய சௌலப்யம் முதலிய குணங்களையும் மோட்சத்தைக் கொடுத்தல் முதலான குணங்களையும் சொல்லிக்கொண்டு சர்வேஸ்வரன் பக்கல் ஏறச்சென்றான்.
அங்குக் கொண்டு – 4‘ஐயோ! மரண பயத்தையுடையனாய்க் கொண்டு வந்தாய் அன்றோ!’ என்று திருவுள்ளத்திலே கொண்டு: ‘நெஞ்சிற்கொண்டு’ என்னும்படியே. அன்றிக்கே, ‘செருக்கனானசிவன் கொண்டு வந்தான்’ என்று பாராமல், ஒரு பிராட்டி புருஷகாரமாக வருவாரைக் கைக்கொள்ளுமாறு போலே கைக்கொண்டு என்னுதல். தன்னொடும் கொண்டு-பெரிய திருமொழி, 5. 8 : 4.-இவன் வந்த காரியத்தை முடித்து, பின்பு தன்னுடன் ஒத்த தன்மையையும் கொடுத்து. உடன் சென்றது உணர்ந்தும் – 1ஒரு ‘கள்வன்கொல்’ பெரிய திருமொழி, 3 : 7.-என்ற திருமொழியில் பிராட்டியைக் கொடுபோமாறு போலே கொடுபோனான்காணும். 2‘பின்னை என்றும் நின் திருவடிப் பிரியாவண்ணம் எண்ணிய’ பெரிய திருமொழி. 5. 8. 6.-என்கிறபடியே 3‘ஒரு வேறுபட்ட பொருள்’ என்று தோற்றாதபடி தன்னோடு விளைகிற ரசத்தை உண்பித்தபடியை நினைத்து, கண்டும் தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆள் அன்றி ஆவரோ?
4தன்னை அடைந்த இந்திரனுக்காத் தன்னைத் தாழவிட்டது ஓர் ஏற்றமோ? ‘என்னையே எவர்கள் சரணம் அடைகின்றார்களோ அவர்கள் இந்த மாயையினைத் தாண்டுகின்றார்கள்’ என்னக் கடவ அவன்,‘
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரத்தி தே’-என்பது, ஸ்ரீ கீதை, 7 : 14.
வேறு தேவதையைத் துதிக்க, அதற்கு மேலே அவன் புருஷகாரமாகக் கொண்டு வந்து காட்டிக் கொடுக்க, ‘என்செய்வான், தன்னை அடைந்தவனை அழிய விடாதே புறம்பேயாகிலும் கொண்டு போய் இரட்சிப்பித்தான்’ என்னும் குணம் சிவனுக்கு உண்டாக,
மார்க்கண்டேயனைக் காத்த நீர்மைக்கு. 1தாமத புருஷர்களுடைய சினேகம் சர்வேஸ்வரன் விடுகைக்குக் காரணம்; சத்துவநிஷ்டருடைய சினேகம் அவன் அங்கீகரி்ப்பதற்குக் காரணம்; இங்ஙனே இருக்கச் செய்தே அன்றோ சிவன் முன்னிலையாக வந்த மார்க்கண்டேயனுக்கும் காரியம் செய்தது!
தேவதாந்தர பஜனம் செய்த மார்கண்டேயனுக்கும் அனுக்ரகம் செய்து அருளிய குணம் ஏற்றம் இதில் சொல்லுகிறது –
கொண்டு உடன் சென்றது -ருத்ரன் –
கண்டும் தெளிந்தும் கற்றார்
பிரமாணம் பிரத்யஷ சமானம்
இண்டை= மாலை
இண்டை சடை முடி ருத்ரன் உடன் கொண்டு உசா செல்ல
உடன் சென்றது உணர்ந்தும்
கண்ணனுக்கு ஆள் அன்று ஆவரோ
கற்று –கண்டது போலே -தெளிந்து கண்டார்
ஸ்ரவணம் மனனம் நிதித்யாச்யம் தர்சன சமானம்
த்யானிக்க காரண வஸ்து
வண்டுகள் -மது பானம் பண்ணும் பூ மாலைகள்
வாழ் நாள்
மாதா பிதாக்கள் இவனை ஒப்பித்து விளையாட விட
அசரீரி வாக்கியம் மிர்த்யு குறுகிற்று சொல்ல
துக்கப்பட
தேவரை ஆஸ்ரயிக்க
அவனும் பச்சை இடும் நாள் எல்லாம்ஏற்றுக் கொண்டு
ஒரு நாளிலே வந்த வாறே
இண்டை -வாசக்கள் புழக்கடை அடைத்து ரகஸ்யமாக
ஜடையை விரித்து காட்டி பூவை சாத்தி வெளியில் தெரியாமல் இருக்க –
இண்டை சடை முடி
உன்னோ பாதி ஆறல் பீறல் -ஆறி போனது கிழிந்த வஸ்த்ரம் போலே
சாதக வேஷம் தானும் கொண்டானே –
அருகில் மாலை பாராதே ஜடையை புத்தி பண்ணு
நெடு நாள் பச்சை இட்ட உனக்கு
ஆஸ்ரயம் காட்டுவேன்
சர்வேஸ்வரன் பக்கல்
சௌலப்யம் மோஷ பரத்வம் குணங்களை உசாவிக் கொண்டு போக
ஐயோ பாவம் -துர்மானி இவன் கொண்டு வந்தான் பாராதே
பிராட்டி புருஷகாரமாக
நெஞ்சில் கொண்டு நின் அஞ்சிறைப் பறவைக்கு
கொண்டு அர்த்தம்
தன்னுடன் கொண்டு
வந்த கார்யம் தலைக் கட்டி
சாமா பத்தியும்
கள்வன் கொல் பிராட்டியை கொண்டு போனது போலே
பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம்
மைந்தனை -தன்னுடன் வைத்துக் கொண்டு –
மூலவர் சந்நிதி ப்ருகு மார்கண்டேயர் பல இடங்களில்
தைல காப்பு நீக்கி சதாபிஷேக ஸ்வாமி-கைங்கர்யம்
புராசீன திரு மேனி –
சிலா திருமேனி யாக இருக்க –
விக்ரஹம் சேதம் இல்லாமல் –
மார்கண்டேயர் மூக்கு உடைய
இப்படியே இருந்தது முன்பே –
ருத்ரன் இடம் பேர்த்து வந்த மூக்கு என்றாராம் சதாபிஷேகம் ஸ்வாமி –
தன்னுடன் சேர்த்து கொண்டாரே
தன்னை ஆஸ்ரயித்த இந்தரனுக்கு தாழ விட்டது ஏற்றமோ
என்னை பற்றி மாயை கடக்க
மாயா மேதாம் -தன்னோடு ஒக்க
தேவதாந்த்ரம் பஜனம் செய்து
அதுக்கும் மேலே அவனை புருஷகாரமாக கூட்டி வந்தான்
ரஷிக்க முயன்ற ருத்ரனை மன்னித்து
தாமசர் -ஓட்டை சகவாசம் த்யாஜ்ய ஹேது
சதவர் சகவாசம் அங்கீகரீக்க ஹேது
இருக்கவும் இப்படி செய்து அருளிய மகா குணம் –
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply