திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-5-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

கேட்டும் உணரந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ?
வாட்டமி லாவண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க்கிடர் நீக்கிய
கோட்டங்கை வாமன னாய்ச்செய்த கூத்துகள் கண்டுமே.

பொ-ரை : ‘கொடுப்பதில் குறைவு இல்லாத கையையுடையமாவலி வருத்த வருந்தி, கூட்டம் கூட்டமாகச் சென்று இரந்தவர்களாகிய தேவர்களுக்குத் துன்பத்தை நீக்கும்பொருட்டுக் கோட்டம் பொருந்திய கையையுடைய ஸ்ரீ வாமனனாகிச் செய்த செயல்களைக் கண்டும் கேட்டும் உணர்ந்தவர்கள், கேசவனுக்கு ஆள் ஆவரே அன்றி வேறு ஒருவர்க்கு ஆள் ஆவரோ?’ என்றபடி.

வி-கு : ‘வண் (மையில்) வாட்டம் இல்லாத கை’ என்க. ‘கோட்டம் கை’ என்றது, வாங்கும்போது கை வளைந்திருத்தலைக் குறித்தபடி. நீக்கிய ‘செய்யிய’ என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்; நீக்கும் பொருட்டு வாமனன் ஆனான்.

ஈடு : ஆறாம் பாட்டு. 1‘மேலே  கூறிய குணங்கள் தாம் ஓர் ஏற்றமோ, அலம் புரிந்த நெடுந்தடக்கையைக் கொண்டு திருநெடுந்தாண்டகம், 6. -கோட்டம் கை வாமனனாய் இந்தப் பூமியைக் காப்பாற்றிய மஹா குணத்துக்கு?’ என்கிறார்.

கேட்டும் உணர்ந்தவர் – ஓர் ஆசாரியன் ஓர் அர்த்தத்தை உபதேசித்தால் அதனைக் கேட்டு, 2‘அறிந்து இதன்படி ஆகக்கடவன்’ என்கிறபடியே, பின்னை அந்த அர்த்தத்தைத் தெளிந்திருக்குமவர்கள். கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ –3புறம்பே அடையத்தக்கவர் இல்லாதபடி தானே அடையத் தக்கவனானவனுக்கு ஒழிய ஆள் ஆவரோ? ‘கேசவன்’ என்ற பெயர் 4‘பிரமனும் ஈசனுமாகிய நாங்கள் இருவரும் தேவரீருடைய திருமேனியில் உண்டானோம்; ஆதலால், கேசவன் என்ற பெயரையுடையரானீர்,’ என்கிறபடியேயாதல் அடர்ந்து நீண்ட மயிர்முடியையுடையவன் என்ற காரணத்தாலாதல் வந்தது. வாட்டம் இலா வண் கை

இதி ப்ரஹ்மணோநாம ஈஸோஹம் ஸர்வ தேஹிநாம்
ஆவாம் தவ அங்கே ஸம்பூதௌ தஸ்மாத் கேஸவ நாமவாந்’-என்பது, பாரதம், ஹரிவம்ஸம், கைலாச யாத்திரை. 

 வெள்ளியை யாதல் விளம்பினை மேலோர்
வள்ளிய ராக வழங்குவ தல்லால்
எள்ளுவ என்சில? இன்னுயி ரேனும்
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால்.’-என்பது, கம்பராமாயணம்.

– 5கொடுத்து மாறக்கடவது அன்றியே, எப்போதும் கொடுக்கையிலே ஒருப்பட்ட கை.6இராவணன் முதலாயினோரைப் போன்று தலை அறுத்துப் போகட ஒண்ணாமைக்குக் காரணம் உண்டாகையாலே அழியச் செய்திலன்.

மாவலி வாதிக்க வாதிப்புண்டு-இது பற்றாசாக அவன் நெருக்க நெருக்குண்டு. ஈட்டம் கொள் தேவர்கள் – 1கிராமணிகளைப் போலே, ஒருவர் உயர்வு ஒருவர் பொறாதே, தலை அறுப்பாரும் தலை அறுப்பு உண்பாருமாய்த் திரியக் கடவ சாதி அன்றோ? 2இப்படிச் சேராச் சேர்த்தியாய் இருக்கிறவர்கள் ஆபத்து மிக்கவாறே தங்கள் தங்கள் செருக்கினைப் போகட்டு. எல்லாரும் ஒரு மிடறாய் வந்து விழுந்தார்கள். ஈட்டம் – திரள். சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய – 3கூறு செய்வானும் அம்பலத்தே இருந்தால் ‘ஈஸ்வரனும் நம்பக்கல் வரத் தட்டு என்?’ என்று இருக்குமாறு போலே, ‘எல்லாரும் நம்பக்கல் வரவேணும்’ என்று இருந்தவர்கள் தங்கள் ஆபத்தின் மிகுதியினால் அன்றோ செருக்கு உற்றவர்களாய் இருக்கிறவர்கள் திரள வந்து இரந்தது?’ என்று திருவுள்ளத்தே கொண்டு அவர்கள் இடரைப் போக்கினபடி. (‘பெரியவர் யார்?’ என்ற ஐயத்தினால் விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் போரை மூட்டிவிட விஷ்ணு ஜயித்ததனால் ) 4‘விஷ்ணுவை அதிகனாக எண்ணினார்கள்’  என்கிறபடியே, ‘அதிகம் மேநிரே விஷ்ணும்’-என்பது, ஸ்ரீராமா. பால. 75 : 19.

ஒரு சொத்தை வில்லை முரித்தபோதாக எம்பெருமான் அறப்பெரியன் என்பது; அல்லாது போது ‘ஈஸ்வரோஹம்’ என்பதான தேவசாதி பற்களைக் காட்ட, அவர்கள் இடரை நீக்கினபடி.

கோட்டம் கை வாமனனாய் – நீர் ஏற்கக் குவித்த அழகிய கையையுடையவனாய்; 5‘பொல்லாக் குறள்  உருவாய்ப் பொன்கையில் நீர் ஏற்று’–நாய்ச்சியார் திருமொழி, 11 : 5.-என்கிறபடியே, 1தேவர்களை நெருக்குகையாலே அழியச் செய்ய வேணும்; குண விசேடத்தாலே அழியச்செய்யமாட்டான்; இனி, இரண்டற்கும் தக்கதாக ஒரு வழி இரட்சகனான தான் பார்க்குமித்தனை அன்றோ? பொற்கை – பொலிவு எய்தின கை; ‘அழகிய கை’ என்றபடி. கொடுத்து வளர்ந்த கை; 2‘ஆயிரக்கணக்கான பசுக்களைத் தானம் செய்ததான பருத்து நீண்ட கை’ என்றும், ‘சத்திய பராக்கிரமத்தையுடையவரான பெருமாள் கொடுப்பார்; வாங்கமாட்டார்’ என்றும் சொல்லுகிறபடியே.

கோ ஸஹஸ்ர ப்ராதாதாரம் உபதாய புஜம் மஹத்’-என்பது, ஸ்ரீராமா. யுத். 21:7.

‘தத்யாத் ந ப்ரதிக்ருஹ்ணீயாத்’-
என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 25.

செய்த கூத்துகள் கண்டுமே – 3அன்றே பிறந்து அன்றே வளர்ந்து அன்றே இரப்பிலே மூண்டு, மஹாபலி வேள்வி செய்யும் இடத்தளவும் செல்ல, பூமி நெளியும்படி பதறி நடந்து சென்று புக்கு, மான் தோலும் பூணு நூலும் தருப்பைப் புல்லுமான வணக்கமுள்ள வடிவத்தோடு நின்று ‘கொள்வன் நான்’ திருவாய். 3. 8 : 9.-என்றாற் போலே சொன்ன பிள்ளைப்பேச்சுக்களும் சிறுகாலைக் காட்டிப் பெரிய காலாலே அளந்ததும் ஆகிற இச்செயல்கள் அடங்கலும் இவர்க்கு வல்லார் ஆடினாற்போலே இருக்கிறபடி.

4‘இறைமைத் தன்மைக்குரிய மேன்மையும் கிடக்கச் செய்தே, திருமகள் கேள்வனான தான் இரந்து தன்னை அடைந்தாரைக் காத்த நீர்மைக்குப் பிரளயங்கொண்ட பூமியை எடுத்துக் காத்தது ஒரு குணமாயிற்றதோ?’ என்கிறார்.

கோட்டம் கை வாமனனாய்
கேசன் -ப்ரஹ்மா ருத்ரனுக்கும் தலைவன்
வாட்டமிலா வண் கை
மா பலி வாதிக்க பாதிக்க -அவனாலே பாதிப்பு உண்ட
தேவர்கள் இரக்க
இடர் நீக்கிய
கோட்டு கை வாமனன்
கண்டும் கேட்டும் உணர்ந்தவர் –
ஸ்ரவணம் கேட்டு
பின்னை தெளிந்து -சிந்தித்து நிர்ரோபனம் -உணர்ந்தும் தெளிவு
தானே ஆஸ்ரய ணீயன் ஆனவன் கேசவன்
புறம்பு ஆஸ்ரய ணீ யன் ஆனால் கூட்டி வந்து -மார்கண்டேயர்
ஹரி வம்ச பிரமாணம் –
வரம் கேட்கணும் என்ற வரம்
கள்வா-ருத்ரன் -உன்னிடத்தில் உண்டாக்கி தஸ்மாத் கேசவ நாமவான்
க்கா ப்ரஹ்மா ஈச ருத்ரன்
கம்ச ஈச்ச பவதி கேசவா
பிரசச்த கேசம் உள்ளவன்
வாட்டம் இல் கை -மகா பலிக்கு விசெஷணம்-
இதனால் தான் விட்டு
கொடுக்கையிலே ஒருப்பட்ட கை
ஔ தார்யம்
மகா பலி வாதிக்க -இது பற்றாசாக நெருக்க தேவர்கள் நெருக்குண்டார்கள் இதுவே அஹங்கார காரணம்
ஈட்டம் கொள் தேவர்கள் கூட்டமாக
தலை அருப்பாரும் தலை அருப்புண்டாருமாக -கிராமணிகள் போலே அரசியல்வாதிகள் -கிராம நிர்வாகம் செய்பவர் கிராமணிகள்
ஒருவர் மேன்மை ஒருவர் பொறாமல்
சேரா செர்தியாக இருக்கும் தேவர்கள்
ஆபத்து மிக்க துர் அபிமானம் விட்டு சேர்ந்து கூட்டணி
ஈட்டம் கொள் தேவர்கள் -ஒரு மிடரே வந்து திருவடியில் விழ
எல்லாரும் தம் பக்கல் வர வேண்டும் என்று இருப்பவர்கள்
கூறு செய்வானும் அம்பலத்தில் இருந்தால் ஈஸ்வரனும் நம் பக்கல் வர கடவன் என்று இருப்பாரைப் போலே -இருக்குமவர்கள் –
திரள வந்தது -சென்று -இரந்து-
திருப் பாற் கடலில் இவன் இருக்க சென்று இரக்க –
வராதவர் வந்தார்கள்
இடரை போக்கி விட்டான்
சொத்தை வில்லை முறித்தாய் என்று சர்வாதிகன் எம்பெருமான் என்று இருந்த தேவ ஜாதி
ஈச்வரோஹம் தேவ ஜாதி பல்லை காட்ட
மயன் இரண்டு வில் -சிவ தனுஸ் விஷ்ணு தனுஸ் –
இடர் நீக்கி –
கோட்டம் கை வாமனனாய்
குவித்த கை கோடு அழகிய
பொல்லா குறள் உருவாய் பொன் கையில் நீரேற்று
அடியவர்களை நெருக்க தண்டிக்க வேண்டும்
ஔதார்யம் உண்டே
இரண்டுக்கும் அனுரூபமாக
பாதாளம் சிறை வைக்க
house arrest
ஏற்று -செய்த கூத்துக்கள்
அன்றே பிறந்து
அன்றே வளர்ந்து
அன்றே இரந்து
எங்கும் அதிரப் புகுத்த கனாக் கண்டான்
பூமி அதிரும்படி
சர்வேஸ்வரன் நடப்பதால் பூர்வர் -பட்டர் அப்படி இல்லை
இரப்பில் பதற்றத்தால் பூமி நடுங்க
விநீத வேஷம்
கிருஷ்ணா
யஞ்ஞாபவதீமம்
நிலம் வாங்க
கொள்வன் நா மாவலி மூவடி தா -முக்த ஜல்பிதன்கள்
சிறிய காலை காட்டி பெரிய காலால் அளந்த
வியாபாரங்கள் வல்லார் ஆடினாப் போலே இருக்க
ஸ்ரீ ய பதி தான் இரந்து ரஷித்தது
வராக அவதாரம் விட ஏற்றம்

 

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading