திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-5-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

  சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல்அன்றிச் சூழ்வரோ?
ஆழப் பெரும்புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன்பால்ஒரு கோட்டிடைத் தான்கொண்ட
கேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே.

பொ-ரை : ‘பிரளய வெள்ளத்திலே ஆழ அழுந்திய பூமியைக் காலம் நீட்டிக்காமல், தன் திருமேனியில் ஒரு கொம்பிலே தானே கொண்ட வராகத்தின் அழகிய வடிவான இதனைக் கேட்டும்உணர்ந்தும், தான் உய்வதற்குரிய உபாயங்களைச் சிந்தித்தால், ஆச்சரியமான செயலைச் செய்த எம்பெருமானுடைய திருவடிகளை அல்லாமல் வேறு ஒன்றனைப் பற்றுவரோ?’ என்கிறார்.

வி-கு : சூழல் – உபாயம். சூழ்தல் – பற்றுதல். ‘ஆழ அழுந்திய ஞாலம்’ என்க. ஆற்றொழுக்காகப் பொருள் கூறலுமாம், தாழப்படாமல் – காலம் நீட்டிக்காமல். கேழல் -பன்றி. ‘உணர்ந்தும் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?’ என்க.

ஈடு : ஐந்தாம் பாட்டு. 1‘உலகத்தைப் படைத்தது ஓர் ஏற்றமோ, படைக்கப்பட்ட உலகத்தைப் பிரளயம் கொள்ள மஹாவராகமாய் எடுத்துக் காத்த குணத்துக்கு?’ என்கிறார்.

சூழல்கள் சிந்திக்கில் – 2தான் தன்னோடு உறவு அற ஜீவிக்கைக்கு உறுப்பான விரகு பார்க்கில். 3தாங்கள் தாங்கள் விரும்பிய பொருள்கள் சித்திப்பதற்கு விரகுகள் பார்க்கில். மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ – 4பாதுகாக்கப்படுகின்ற பொருள்களைப் பாதுகாத்தல் ஒரு தலையானால் தான் தன்னைப் பேணாத நோக்கும் ஆச்சரியத்தையுடைய இறைவனது திருவடிகளை அல்லது பற்றுவரோ? ஆழப் பெரும்புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தை – 5‘ஆழத்தையுடைத்தான மிக்க தண்ணீரிலே அழுந்தின பூமி’ என்னுதல். ‘பெரும்புனல் தன்னுள் ஆழ அழுந்திய பூமி’ என்னுதல். அழுந்திய ஞாலம் – அண்டப்பித்தியில் சென்று ஒட்டின பூமி. தாழப்படாமல் – தரைப்படாமல்; மங்காமல். என்றது, 6‘உள்ளது கரைந்து போனபின்பு இனிச் சத்தையுங்கூட அழிந்து போக ஒண்ணாது என்று பார்த்து’ என்றபடி. தன்பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட – பெரிய பூமியைத் தன் எயற்றிலே 1நீலமணி போலே கொண்ட; 2தன் திரு எயிற்றிலே ஒரு கூற்றிலே கொண்ட.3உதாரராய் இருப்பார் நாற்பது பேருக்குச் சோறு இட நினைத்து நூறு பேருக்குச் சோறு சமைக்குமாறு போலே, பாதுகாக்கப்படுகிற பொருள்களின் அளவு அன்று காணும் கொண்ட எயிற்றின் பெருமை; 4வேறு முகத்தாலே காத்தல் அன்றியே, தன் முகத்தாலே எடுத்துக் காத்தபடி கரைந்து போன பூமி வேண்டிக்கொள்ளச் செய்தது அன்று ஆதலின், ‘தான் கொண்ட’ என்கிறார்.

கேழல் திரு உரு ஆயிற்று – 5அழிவுக்கு இட்ட வடிவிற்கே ஆலத்தி வழிக்க வேண்டி இருந்தபடி. அடியார்களைப் பாதுகாக்க வந்து தன்னைப் பேணாதே ஒழிய ஒழிய அதுதானே நிறம் பெறும்படியாய்க் காணும் இருப்பது; 6‘மானம் இலாப் பன்றியாம் தேசு’நாச்சியார் திருமொழி, 11 : 8. என்னும்படியே. ‘மாசு உடம்பில் நீர் வாரா – எங்கேனும் உண்டான அழுக்கும் வந்து சேரும்படி இருப்பது ஒரு வடிவைக்கொண்டு. மானம் இலாப் பன்றியாம்-ஈஸ்வரனாந்தன்மை பின்னாட்டாதபடி இருக்கை. தன் இனங்கள் மோந்து பார்த்துத் ‘தன்னினம்’ என்றுநம்பும்படி அகவாயில் புரை அற்று இருக்கை. 1மாரீசனாகிய மாயமானை மோந்து பார்த்து ‘இராக்கத வாசனை உண்டு’ என்று போயின அன்றோ மற்றைய மான்கள்? பன்றியாம் தேசுடை தேவர் – இவ்வடிவு கொண்டிலனாகில் அருமந்த ஒளியை எல்லாம் இழக்குமத்தனையன்றோ. நித்தியசூரிகளுக்கு ஓலக்கம் கொடுத்து அங்கே இருப்பதைக்காட்டிலும் தாழ விட்டதால் வந்த ஏற்றம்?’ கேட்டும் உணர்ந்துமே-கேட்டும் மனனம் செய்தும், அதனாலே தம் முயற்சியை விட்டவர்கள் சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?

தான் உலகத்திற்குக் காரணனாய் இருத்தல் முதலிய குணங்களுள் ஒன்றும் குறையாதபடி சங்கற்பத்தாலே உலகத்தைப் படைத்தான் என்னுமது ஓர் ஏற்றமோ, பிரளயம் கொண்ட பூமியைத் தன்னுருக் கெடுத்து வேற்றுருக்கொண்டு எடுத்த இந்த உபகாரத்துக்கு?

ரெங்கராஜ ஸ்தவம்
ஆளவந்தார் ஸ்லோகம் எடுத்துக் காட்டவில்லை
சிசுபாலன் -காகாசுரன் –
எனக்கு மோஷம் கொடுக்க என்ன கஷ்டம் -அவர்களை விட என்ன செய்தேன் -படி அதிகமாக உள்ள ஸ்லோஹம் எடுத்து
அங்கெ குண லவமாவது இருந்ததே –
அனைத்து உலகும் திரிந்தோடி -வித்தகனே ராமோவோ நின் அபயம் என்று இளைத்து விழுந்தானே –
திரு விருத்தம்
கிருபைக்கு தண்ணீர் திரும்பு கூட இல்லையே
காழியன் அனுக்ரகம் -விஷம் கக்கின பொழுதும்
அந்தம ஸ்ம்ருதி இருந்ததே சிசுபாலனுக்கு -சாதனம் கேட்க்காமலே கொடுத்தான்
கொண்டு பொய் தள்ளினான் –
சிசுபாலன் முன் அவதாரம் ராவணன்
அவனுக்கும் கொடுத்து
கொடுமையில் கடு விசை அரக்கன் திரு வினைப் பிரித்தாலும்
இந்த பாசுரமும் சாமை குணம் ராமாவதாரம் வைத்து அந்வயம் செய்யலாம்
சிசுபாலன் போல்வாரை சிருஷ்டித்து ரசித்தான் நான்காவது பாசுரம்
ஸ்ருஷ்டமான ஜகத்தை பிரளயத்தை
நினைவு அன்றிக்கே இருக்க செய்தே ரஷித்தான்

சூழல்கள் உபாயங்கள் சிந்திக்கில்
கேழல் திரு உருவுருவாய் கேட்டும் உணர்ந்தும்
ஆழமான புனலில் அழுந்திய லோகத்தை
கோட்டிடை வைத்து
வராக திரு உருவம் கொண்டு
விரகு-தன்னோடு உறவு அற பிரகிருதி விட்டு அவனை அடைவதே ஜீவனம் -இதற்க்கு வழி சிந்தித்தால்
அடியேனுக்கே அடியே இ றே உபாயம்
மாயன் கழல் அன்றி –
தன்னை பேணாதே நோக்கும் ஆச்சர்ய பூதன் -மாயன்
தன்னை அழித்து கொண்டு -இத்தலையை ரஷிக்கும்-குணம் –
சர்வேஸ்வரன் கேழல் வராகம் ஆக்கிக் கொண்டானே
ரஷ்ய வர்க்கம் ரஷணம் ஒரு தலை
ஆழம் உடைய ஜலத்தில்
ஆழ அழுந்தின என்னவுமாம்
ஞாலத்தை -அண்ட பித்தியில் ஒட்டிய பூமியை –
தரைப்படாமல் மங்காமல் ஞாலம் தாழ்ந்து போகாமல்
தன்பால் ஒரு கோட்டிடை தான் கொண்ட
தன திரு வயிற்றில் ஏக தேசத்தில் கொண்ட
கோட்டில் புள்ளி போலே இருந்ததே –
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய்
நீல வரை போலே இருந்தான் –
கோரை பற்கள் பிறை சந்தரன் இரண்டு போலே
இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப -லோகம் -உபமானம் -இல்லையே
நிலத்துக்கு திருஷ்டாந்தம் இல்லையே –
பிறையில் மறுவோபாதி இ றே பூமி -நம்பிள்ளை வியாக்யானம்
பிறை சொன்னாலே இதையும் சொன்னதாகுமே
பெரிய மேரு -கண கணா-பாடகம் -சிலம்பு பெண்கள் -வீரக் கழல் –
பறல் மேரு இருக்க –
திரு விக்ரமன் -அளந்தவன் -திருவடி வியாபிக்க
கோரை பற்களில் கொஞ்சம் ஒட்டி இருக்க
வராகம் திரு விக்ரமன் விட பெரியதே
ஏனமாய் -உன் கோட்டின் மேல் கிடந்தது அன்றே -சேவடியை நீட்டி மா வடிவில் நீ அளந்த மண் –

சிலம்பினிடை சிறு பறல் பெரிய மேரு –கண கணப்ப இட மடந்தை தனை புல்கி
உதாரர் 40 பேருக்கு சோறிட நினைத்து 100 பேருக்கு சமைப்பது போலே
ரஷணத்தில் பாரிப்பு -மிக்கு –
கொண்ட எயிற்றின் பெருமை
முகாந்தரத்தால் ரஷிக்காமல் தன முகேன ரஷித்து
இன்னொருவரை இட்டு செய்யாமல் -வராக முகத்தால் ரஷித்து
தன் பால் தான் கொண்ட தானே பரார்த்திகாமல் கொண்ட
வாஸ்து புருஷன் அங்கூரார்ப்பணம்
படம் ஆச்சர்யமாக எழுதி -அது போலே
அழிவுக்கு செய்யும் வடிவுக்கு ஆலத்தி வழிவிக்கும்படி- கோல வராகம்
கொண்ட -வடிவு
கொண்ட கோலக் குறள் உருவு –
தன்னைப் பேணாதே -அதுவே பெருமையாக போனதே
மானமிலா பன்றியாய் தேசு
எங்கும் உண்டான அழுக்கும் ஒட்டிக் கொண்டு இருக்கும்
வந்து சேரும் வடிவைக் கொண்டு –
மானம் -உபமானம் அபிமானம் -சம்ஸ்கிருத மரியாதை கொண்டு இப்பச்டி வியாக்யானம்
உப சர்க்கம் சேர்த்து அர்த்தம் –
ஒப்பற்ற பன்றி -அபிமானம் ஈச்வரத்வம் பின்னாட்டாது இருக்கை
ஆத்மாநாம் மானுஷ்யம் –
அஹம் வோ பாந்தவ ஜாத
பன்றியாகவே மாறி –
சஜாதீயங்கள் மோந்து பார்த்து நம் ஜாதி என்று கிட்டே வருகின்றன இங்கு
வ்யதிரேக திருஷ்டாந்தம் மாயா மிருகம் -ராஷச கந்தம் வீச
அவதாரத்தில் மெய்ப்பாடு –
சர்வ கந்தா ஈச்வரத்வம் இல்லாமல் மான மிலா பன்றியாய் தேசம் உடைய தேவர் –
இவ்வடிவு கொன்றிலன் ஆகில் தேஜஸ் வராதே
சௌசீல்யம் வெளிப்பட
உன் சுடர் சோதி மறையாதே -நஞ்சீயர்
அவதாரத்தில் மெய்ப்பாடு
கோரை கிழங்கு அமுது செயப் பண்ணி -ஸ்ரீ மூஷணம்-
த்வாதசி -கந்த மூலாதி நிவேதயாதி
இது என்ன மெய்ப்பாடு போர வித்தராய் நஞ்சீயர் –
தாழ விட்டதால் வந்த தேஜஸ் ஏற்றம்
இதை எல்லாம் கேட்டும் சரவணம்
உணர்ந்தும் மனனம் –
தோற்றியது கீழே சொல்லி ஸ்வரூபம் மாறாமல் சங்கல்ப்பத்தால் செய்து அருளி
இதில் தன் உரு கெடுத்து வேற்று உரு கொண்டு ரஷித்த இது மிக ஏற்றம் தானே
இத்தை கேட்டும் உணர்ந்தும்
மாயனுக்கு அன்றி ஆளாவோரா

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading