திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-4-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்

ஆறு மலைக்குஎதிர்ந்து ஒடும் ஒலிஅர
வூறு சுலாய்மலை தேய்க்கும் ஒலிகடல்
மாறு சுழன்று அழைக் கின்ற ஒலிஅப்பன்
சாறு படஅமு தம்கொண்ட நான்றே.

    பொ – ரை : ‘தேவர்களுக்குத் திருவிழா உண்டாகும்படி எம்பெருமான் திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் கொண்ட காலத்தில் ஆறுகள் எல்லாம் தாம் பிறந்து வந்த மலைகளை நோக்கி எதிர்த்து ஒடுகின்ற ஒலியும், வாசுகி என்னும் பாம்பினது உடலைச் சுற்றி மந்தரம் என்னும் மலையானது தேய்கின்ற ஒலியும், திருப்பாற்கடலானது இடம் வலமாக மாறிச் சுழன்று அழைக்கின்ற ஒலியும் உண்டாயின,’ என்றவாறு.

வி – கு : ‘கொண்ட நான்று ஒலி ஒலி ஒலி உண்டாயின’ என்க. ‘உண்டாயின’ என்னும் வினைச்சொல் ஒன்றைக் கொணர்ந்து முடிக்க. நான்று – காலம். அரவு – ஈண்டு வாசுகி, ஊறு – உடல். சுலாய் – சுற்றி.

ஈடு : இரண்டாம் பாட்டு. 3திருப்பாற்கடலைக் கடைந்த ஆச்சரியமான காரியத்தைச் சொல்லுகிறார்.

ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி- 1கடலிலே மந்தர மலையை நட்டவாறே கடல் கொந்தளித்து, மலை போய்த் தாழ்ந்து கொடுத்தது; 2நீரானது தாழ்ந்தவிடத்தே ஓடக் கடவதன்றோ? ஆறுகளானவை மலையைக் குறித்து எதிரிட்டு ஓடுகிற போதை ஒலியானது இவர்க்குச் செவியிலே படுகிறபடி. 3இவர்க்கு முக்காலத்திலும் உள்ளன எல்லாம் தெரியும்படி அன்றோ அவன் வெளிச்சிறப்பித்தது? அரவு ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி – வாசுகியினுடைய உடலைச் சுற்றிக் கடைகிற போதைச் சரசரவென்கிற ஒலியும். ஊறு – உடம்பு. சுலாய் – சுற்றி. கடல் மாறுசுழன்று அழைக்கின்ற ஒலி – மந்தர மலைய்க் கொடுபுக்கு நட்டுத் திரித்த போது, 4கீழ்க்கடல் மேற்கடலாய்க் கிடாய்ப் பாய்ச்சல் போலே திரையோடு திரை தாக்கிக் கிளருகிற ஒலியும், அப்பன் – உபகாரகன். 5சாறு பட – கடலிலே நீர் கோதாம்படி பிரயோஜனமான அமிருதம் உண்டாக. என்றது, ‘நீரிலே ரசமான பசை பட’என்றபடி. அன்றிக்கே, சாறு என்று திருவிழாவாய், ‘தேவசாதிக்குத் திருவிழா உண்டாம்படியாக’ என்னுதல்; சாறு பட – என்றபடி. அமுதம் கொண்ட நான்றே -திருப்பாற்கடல் கடைந்து அமுதம் கொண்ட காலத்தில் இவை எல்லாம் உண்டாயின.

சமுத்ரம் அளந்து கொண்ட விசித்ரம்
கடல் கடைந்த விருத்தாந்தம்
அப்பன் சாறு பட
சாரமான அமுதம் கொண்ட அன்று
ஆறு மலைக்கு எதிர்ந்து போக ஒலி
வாசுகி மலையை தேய்க்கும் ஒலி
கடல் மாறி சுழன்று அழைக்கும் ஒலி
அப்பன் அமுதம் கொண்ட அன்று
மலையை வைத்ததும் கடல் கொந்தளித்து சக்யம் தாள ஆறு எதிரிட்டு போக

வெளிச்ச எறிப்பு நல்ல ஞானம்
சம காலத்தில் நடப்பது போலே
மலை எதிர்த்து
அரவு வாசுகி ஊரு உடம்பு சுற்றி கடிக்கிற பொழுது சற சற தொனி
மந்தரம் கொண்டு புக்கு கீழ் நீர் மேலே வர கிடாய் பாய்ச்சல் போலே
திரை திரை தாகி ஒலி
அப்பன் சாறு பட
சாரமான விஷயம்
சாறு உத்சவம் மகிழ்ச்சி உண்டாகும் பட விழவு விழா
நீரிலே ரசமான பசை
அமிர்தம் கொண்ட காலம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading