திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-4-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்

   நான்றில ஏழ்மண்ணுந் தானத்த வேபின்னும்
நான்றில ஏழ்மலை தானத்த வேபின்னும்
நான்றில ஏழ்கடல் தானத்த வேஅப்பன்
ஊன்றி இடந்துஎயிற் றில்கொண்ட நாளே.

பொ-ரை: ‘என் அப்பன் வராக அவதாரத்தைச் செய்து பூமியைக் குத்தி இடந்து தன் கொம்பிலே கொண்ட காலத்தில் ஏழு தீவுகளும் நழுவாமல் அந்த அந்த இடங்களிலே உள்ளவாயின; அதற்கு மேல், ஏழு மலை சலித்தல் இல்லாதனவாய்க்கொண்டு அந்த அந்த இடங்களிலே இருப்பனவாயின; அதற்குமேல், ஏழு கடல்களும் உடைந்து ஓடாமல் அந்த அந்த இடங்களிலே இருப்பனவாயின,’ என்றபடி.

வி-கு : ‘ஏழ் மண்ணும்’ என்றது, ஏழு தீவுகளைக் குறித்தபடி, நாலுதல் -தொங்குதல். ‘நான்றில’ என்றது, ‘ஒவ்வொன்றும் தனது தனது நிலையினின்றும் மாறிற்று இல்லை’ என்றபடி.

ஈடு : மூன்றாம் பாட்டு. 1மஹாவராஹ அவதாரத்தின் செயலை அருளிச்செய்கிறார்.

நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே-ஏழு பூமியும் நாலாதபடி எடுக்கை. என்றது, ‘ஏழு தீவுகளாய் இருக்கின்ற பூமியை எடுக்கச் செய்தே, ஒன்றும் நாலாதே முன்பு போலே தன்தன் இடத்திலே கிடக்கும்படி. இவன் பெரிய 2யானைத் தொழிலைச் செய்யாநிற்கச் செய்தேயும், முன்பு போலே ஒரு குறை அற, உண்பார் உடுப்பாராய்ச் செல்லுகிறபடி.3ஆதாரமானவன் கூட நிற்கையாலே இவற்றுக்குஒரு குறை வாராதே. ஏழு தீவுகளும் சலித்தன இல்லை: தனது தனது இடத்தில் இருந்தன ஆயின. பின்னும் – அதற்கு மேலே, நான்றில ஏழ்மலை தானத்தவே – 1பூமிக்கு ஆணி அடித்தாற்போலே இருக்கிற ஏழு குல மலைகளும் ஒன்றும் குலையாமல் தன்தன் இடத்தில் நிற்கும்படி. என்றது, 2‘ஒரு கோத்ர ஸ்கலனம் பிறந்தது இல்லை’ என்றபடி. ‘பின்னும் பின்னும்’ என்று வருவதற்குக் கருத்து, ‘இவற்றிலே ஒரு செயலே அமையுங்கண்டீர்! அதற்கு மேலே இவையும் செய்தான்’ என்கைக்காக. நான்றில ஏழ்கடல் தானத்தவே – 3அவைதாம் கடினத்தன்மையாலே குலையாதே ஒழிந்தன என்னவுமாம் அன்றோ? அதுவும் இல்லை அன்றோ இதற்கு? நீர்ப்பண்டம் அன்றோ தண்ணீர்? அதுவும் தன் இடத்திலே கிடக்கும்படியாக. 4அவற்றின் கடினத்தன்மையும் இதனுடைய நெகிழ்ச்சித் தன்மையும் பயன் அற்றவை; ‘அவன் திருவுள்ளக் கருத்து யாது ஒன்று? அதுவே காரியமாக முடிவது,’ என்கை.

‘இவை இப்படிக் கிடத்தல் அவன் குறிக்கோளுடையவனாய்க் கொண்டு காப்பாற்றும் போதோ?’ என்னில், ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே-மாறுபடுருவத்தைக்கும்படியாகக் குத்தி. அண்டபித்தியினின்றும் ஒட்டு விடிவித்து எடுத்து ஏறட்டு, எயிற்றிலே எற்றிக்கொண்டு செயல் செய்தபோது: 5‘மண்ணெலாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து’ பெரிய திருமொழி, 3. 4 : 3. என்கிறபடியே. 6அவன் இப்படி முக்கியமாகக் காக்கப் புக்கால் அவை சலிக்கமோ?அசையாத பொருள்களோடு அசையும் பொருள்களோடு வாசியறத்தத்தம் இடத்திலே நின்றன

மகா வராக விருத்தாந்தம்
இடந்து எய்ற்றினில் கொண்ட நாள்
நான்றில தொங்க -வில்லை
நால் வாய் தொங்குகின்ற வாய் -யானை
குத்தி எடுத்த பொழுது அனைத்தும்
ஏழு மண்ணும் ஏழு மலையும் ஏழு கடலும்
அந்த ஸ்தானத்திலே இருக்க
அதிர்ச்சியிலும் ஸ்தானம் மாறாமல் தானத்திலே இருக்க
நாளாத படி எடுக்கை
நாலுதல் அசைத்தல் தொங்குதல்
ஸு ஸ்தானத்தில்
ஆனைத் தொழில் செய்தாலும் முன்பு போலே ஒரு குறை இன்றி உண்பார் உடுப்பார் செய்யும் கார்யம் மாறாமல்
ஆதாரம் ஆனவன் கூட நிற்கையாலே
சப்த தீபமும் அசையாமல்
சப்த குல பர்வன்தைகள் குலையாமல்
கோத்ரம் சலனம் இன்றி
பின்னும் பின்னும்
இவற்றில் ஒரு வியாபாரமே போதுமே
அதுக்கு மேலே
கடல் -காடின்யத்தால் பூமி மலை ஸ்தானம் மாறாமல் இருக்க
ஜலம் தழும்பே அதுவும் இல்லை இங்கே
காடின்யமும் த்ரவ்யத்வமும் அப்ரயோஜனம்
அவன் திரு உள்ளமே கார்யகரம்
கல் மலை பொழிந்து கல்லை குடையாக
ஜலம் வர்ஷம் ஆனால் கடலை கொண்டு
குத்தி -மாறுபாடு உருவும் படி
அண்ட பித்தி ஓட்டும் இடுவித்து எடுத்து
ஜாகரதையாக எடுத்து
குயவன் பானை எடுப்பது போலே

பச்சை மண் தானே
பானை செய்வது சுலபம் எடுப்பது தான் கஷ்டம்
ஒட்டு இடுவித்து எடுப்பது ஸ்ரமம்
சேதம் இல்லாமல்
வளைந்து உள்ள கொம்பு வராகதுக்கு
எடுத்து
எய்ற்றிலே ஏற்றி கொண்டு
நானில -ஏழு மண்ணும் மலை கடல் ஸ்தானத்திலே
ரசிக்கப் புக்கால் அவை சலிக்குமோ
அசலங்கள் சலனங்கள் வாசி இன்றி ஸு ஸ்தானத்தில் நின்றன

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading