நான்காந்திருவாய்மொழி – ‘ஆழி எழ’
முன்னுரை
ஈடு : 1மேல் திருவாய்மொழியிலே, பகவத் விஷயத்திலே இவர் கவரப்பட்ட மனத்தினையுடையரானபடி சொல்லிற்று:2மேல் திருவாய்மொழியில் இவர்க்குப் பிறந்த துக்கம், ஒன்றைக் கொடுத்து மாற்றுதல், ஒருவராலே நீக்குதல் செய்யுமது ஒன்று அன்றே அன்றோ? 3‘இனி இவர்க்குச் செய்யலாவது என்?’ என்று பார்த்தருளி, ‘ஒன்று கொடுக்கலாவது இதற்குமேல் இல்லை அன்றோ?ய என்று பார்த்துத் தன்னுடைய விஜய பரம்பரைகளைப் பத்தும் பத்தாகக் காட்டிக் கொடுக்கக் கண்டு அனுபவித்து உவகை அடைகிறார். 4அவனுக்கு உறுப்பாம் அன்று தம்மையும் வேண்டி. அவனுக்கு உறுப்பு ஆகாத அன்று தம்மையும் வேண்டாத ‘வளவேழ் உலகின்’ என்ற திருவாய்மொழியைப் பாடிய ஆழ்வார் அன்றோ இவர்தாம்! தம்மை அழிய மாறியும் அத்தலைக்கு நன்மை தேடுமவர் அன்றோ? இப்படி இவர் தன்மையினை அறியுமவனாகையாலே, தன்னுடைய வெற்றிச் செயல்களைக் காட்டி இவருடைய இழவு எல்லாம் தீரும்படி சமாதானம் செய்ய அனுபவித்துத் தலைக்கட்டுகிறார். 5இறந்த காலத்தில் உள்ளவை அடங்கலும் சம காலத்திற்போலே கண்கூடாகக் காணலாம்படி செய்து கொடுத்தான். 1அடியிலே இவர்தாம் எல்லாவற்றையும் கண்கூடாகக் காணவல்லராம்படி செய்து கொடுத்தான் அன்றோ? 2மயர்வற மதிநலம் அருளின பின்பும் இவ்வளவும் வர வாசனை பண்ணுவித்தானே! ஆகையாலே, இவர்க்கு ஒரு குறையும் இல்லையே!
3அன்றிக்கே, மேலே, ‘பேரெயில் சூழ்கடல் தென் இலங்கை செற்றபிரான்’ என்று இராமாவதாரத்திற்செய்த வெற்றிச்செயல் சொல்லப்பட்டமையாலே, அவ்வழியாலும் எல்லா அவதாரங்களிலும் உண்டான வெற்றிச் செயல்களை நினைந்து, இராமாவதாரத்தில் நடத்திய வெற்றிச் செயல்களைக் கண்டு உகக்கும் சக்கரவர்த்தியைப் போலவும், கிருஷ்ணாவதாரத்தில் நடத்திய வெற்றிச் செயல்களைக் கண்டு உகக்கும் ஸ்ரீவசுதேவரைப் போலவும் இவரும் உகந்து பேசுகிறார் என்னுதல். 4‘அஹம் புந;- ‘அஹம்புந: தேவகுமார ரூபம் அலங்க்ருதம் தம் ஸூதம் ஆவ்ரஜந்தம்
நந்தாமி பஸ்யந்நபி தர்ஸநேந பவாமி த்ருஷ்ட்வா ச புநர்யுவேவ’
என்பது, ஸ்ரீராமா. அயோத். 12 : 105. இது, கைகேகியைப் பார்த்துத் தசரத சக்கரவர்த்தி புலம்பிக் கூறுவது.
என் தன்மையை அறிந்து என் வழியே போந்த நீ, ‘பெருமாள் காடு ஏறப்போக’ என்றால் நான் உயிர் வாழ்வேன் என்று சொன்னாயே! தேவ குமார ரூபம் – 5அது கிடக்க; இவரையே நீ தான் ‘காடு ஏறப்போக’ என்கிறது? ‘இவர்க்கும் அவ்வளவேயோ?’ என்று சிறியத்தான் கேட்க, ‘கண்ணெச்சில் ஆம்’ என்று தரம் போராதாரை ஒப்பாகச் சொல்லி இருடிகரிபூசுகிறான் என்றார். அலங்க்ருதம் – 1அதனாலும் வெறும் புறங்காண் ஒரு போலிச் சொல்லலாவது! ஒப்பித்தால் ஒக்கச் சொல்லலாவார் இல்லை. தம் ஸூதம் – 2இவனுக்கு இரண்டு படியும் உத்தேசியமாய் இருக்கிறபடி. ஆ வ்ரஜந்தம் – 3மலர் மலரும்போது எங்கும் ஒக்கப் பிறக்கும் மலர்ச்சி போலே. 4அதுவும் வண்டினை நோக்கி அன்றோ மலர்வது? இவரும் அனுபவிக்கின்றவர்களைக் குறித்தே அன்றோ? நந்தாமி பஸ்யந்நபி – 5கண்டபடியே இருக்கச் செய்தே, காணாது கண்டாரைப் போலேயாயிற்று, நாடோறும் நாடோறும் கணந்தோறும் கணந்தோறும் உகக்கும்படி. 6தர்ஸநேந – அணைத்தல், வார்த்தை சொல்லுதல் செய்ய வேண்டா; காட்சியே அமையும். 7கரை புரண்ட அனுபவம் உள்ள இடத்திற்போலேகாணும் பிரயோஜனம், 1‘ஸதாபஸ்யந்தி’ அன்றோ? பவாமி த்ருஷ்ட்வாச புந: யுவேவ-அறுபதினாயிரம் ஆண்டு வயது நிறைந்து கிழவனான சக்கரவர்த்தி, பெருமாளைக் கண்ட பின்பு, பெருமாளுக்கும் தனக்கும் வாசி தெரியாதபடியானான்.’2‘காமனைப் பயந்த காளை’ என்னுமாறு போலே 3தன்னை அனுபவிப்பாரையும் தன்னைப் போலே ஆக்கி உஜ்ஜீவிப்பிக்கும் விஷயம் போலேகாணும். 4‘ஸ்ரீவசுதேவர்’ பெரிய திருவிழாவை அடைந்தாற்போலே பிள்ளைகளின் திருமுகங்களைப் பார்ப்பதை அடைந்து, தமக்கு உண்டாய் இருந்த முதுமை நீங்கி யௌவனம் உடையவரானார்’ என்னும்படி ஆனாரே அன்றோ ஸ்ரீவசுதேவரும்?
‘மஹோத்ஸவமிவ ஆஸாத்ய புத்ராநந விலோகநம்
யுவேவ வஸூதேவ: அபூத் விஹாய அப்யாகதாம் ஜராம்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5. 20 : 52.
3அன்றிக்கே, ‘மேலே, ‘கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன்’ என்று கொண்டு இத்தலையில் தோல்விக்கு எதிர்த்தலையான அத்தலையில் வெற்றிச் செயல்களை அநுசந்திக்கிறார்’ என்று பிள்ளை திருநறையூர் அறையர் பணிக்கும்படி
ஆழி எழச்சங்கும் வில்லும் எழத்திசை
வாழி எழத்தண்டும் வாளும் எழஅண்டம்
மோழை எழமுடி பாதம் எழஅப்பன்
ஊழி எழஉல கங்கொண்ட வாறே.
பொ – ரை : திருஉலகு அளந்தருள வளருகிற போது. திருவாழியாழ்வான் முன்னே தோன்றவும், பின் ஸ்ரீபாஞ்சஜன்யம் ஸ்ரீகோதண்டம் ஆகிய இவைகள் தோன்றவும், எல்லாத் திசைகளினின்றும் மங்களாசாசனம் செய்கின்ற ஒலி தோன்றவும், கதை என்ன, வாள் என்ன, ஆகிய இவைகள் தோன்றவும், அண்ட முகடு பிளந்து நீர்க்குமிழி தோன்றவும், திருமுடியும் திருவடியும் ஒருசேர எழும்படியாகவும், நல்லகாலம் தோன்றும்படி ஆயின; அதலால், என்னப்பன் உலகத்தை அளந்துகொண்ட விதம் என்னே!
வி – கு : ‘தண்டும் வாளும் எழத் திசையும் வாழி எழ’ என மாற்றுக, ஏகாரம், ஆச்சரியப்பொருளில் வந்தது.
இத்திருவாய்மொழி, கலி விருத்தம்.
ஈடு : முதற்பாட்டு. 1அவை எல்லாவற்றுக்கும் அடியாக, திருவுலகு அளந்தருளின பெரிய வெற்றிச்செயலை அருளிச்செய்கிறார்.
2‘தேவர்கள் தங்கள் தங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுகிறார்கள்; அசுரர்கள் கொல்லப்பட்டார்கள்; அச்சம் என்பது சிறிதும் இல்லை; பகவானால் இவ்வுலகமானது வெல்லப்பட்டது,’ என்கிறபடியே,‘தேவா: ஸ்வஸ்தாநம் ஆயாந்தி நிஹதா தைத்யதாநவா:
நபயம் வித்யதே கிஞ்சித் ஜிதம் பகவதா ஜகத்’-இது, திருவுலகு அளந்தருளின போது ஜாம்பவான் மஹாராஜர் பறையறைந்தபடியாம்.
தனக்கு ஆக்கிக்கொண்ட செயல் அன்றோ?இராவணனைப்போலே எதிரி ஆக்கிக் கொல்லாதே குணங்கள் சில உண்டாகையாலே நின்ற நிலையிலே தோற்பித்துக் கொண்டபடி. 2நாயகனுக்கு அடியார் அன்றோ வென்று கொடுப்பார்? ஆழி எழ – 3‘மூன்று உலகங்களையும் காற்கீழே இட்டுக்கொள்ள வேணும்’ என்னும் கறுவுதல் உள்ளது சர்வேஸ்வரனுக்கே அன்றோ? அந்த எண்ணம் இன்றிக்கே இருக்கச்செய்தேயும் அவனுக்கு முன்பே பரிகரம் முற்பட்டபடி. 4‘காட்டுக்குப் போம்’ என்று நியமித்தது பெருமாளையேயாயிருக்க. இளையபெருமாள் முற்பட்டாற்போலே. ‘ப்ராகேவ து மஹாபாக: ஸௌமித்ரி: மித்ராந்தந:
பூர்வஜஸ்ய அநுயாத்ரார்த்தே த்ருமசீரை: அலங்க்ருத:’- என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 28. இது, திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
‘புண்ணியசீலரும் சிநேகிதர்களுக்குச் சந்தோஷத்தைச் செய்கிறவரும் சுமித்தரையின் புத்திரருமான இளையபெருமாள், தமையனாருக்குப் பின்னே செல்லும்பொருட்டு முன்னரே மரவுரியினால் தம்மை அலங்கரித்துக்கொண்டார்’ என்கிறபடியே, போக்குக்குத் தகுதியாக முற்கோலி அலங்கரித்துக்கொண்டு நின்றார் அன்றோ?ஆழி எழ – 5தோற்றத்திலே அரசு போராயிற்று; 1ஹேதி ராஜன் அன்றோ? திவ்விய ஆயுதங்களுக்கெல்லாம் பிரதானம் அன்றோ திருவாழி? 2பரிகரம் நிற்க மஹாராஜர் இராவணன் மேலே பாய்ந்தாற்போலே; 3‘பையல் முடியுந்தானுமாய்ப் பெருமாள் திருமுன்பே நிற்பதே! ஈர் அரசு ஆயிற்றோ?’ என்று பொறாமையாலே மேல் விழுந்தார் அன்றோ?
4‘அத ஹரிவர நாத:-அத ஹரிவரநாத: ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம்
நிஸிசரபதிம் ஆஜௌ யோஜயித்வா ஸ்ரமேண,
ககநமதிவிஸாலம் லங்கயித்வா அர்க்கஸூநு:
ஹரிவரகணமத்யே ராமபார்ஸ்வம் ஜகாம.’- என்பது, ஸ்ரீராமா. யுத். 40:29
5தம்மோடு ஒக்க வினை செய்ய வல்ல பேர் தனித்தனியே பலர் அன்றோ? ப்ராப்ய ஸங்க்ராம கீர்த்திம் – 6இவர்களோடு கூடிநின்று ஒத்த போர் ஆக ஒண்ணாது, தூசித் தலையில் ஓர் ஏற்றம்செய்து தரம் பெற வேணும்,’ என்று இருந்தார். பூசல் தலையிலே பெருமாளுக்கு உண்டான கீர்த்தியையும் தம்தலையிலே ஏறிட்டுக்கொண்டார். நிசிசர பதிம் – 1அத்தலையிலும் அவனோடு ஒக்க வினை செய்ய வல்லார் பலர் அன்றோ? 2‘அவன் கீழ்த் திரியுமவர்கள் தரம் போரார்’ என்று அவனோடே பொருதபடி. ஆஜௌ-அவர்களைப் போலே வழி அல்லா வழியே இளைப்பிக்கை அன்றிக்கே, செவ்வைப் பூசல் செய்து இளைப்பித்தபடி. யோஜயித்வாஸ்ர மேண-இதற்கு முன்பு கூடாதது ஒன்றோடோ கூட்டினார். ககந மதிவிசாலம் லங்கயித்வா – பரப்பையுடைத்தான ஆகாயத்தைத் திறலாலே வருத்தம் அறக் கடந்தார். அர்க்கஸூநு:- மீட்சியில் தம் வரவு தெரியாதபடி மீண்டார். 3பிறப்புக்கு ஈடாகச்செய்தார். 4தன்நிலம் அன்றோ? 6சூரியன் ஓரிடத்தினின்றும் ஓரிடத்து ஏறப்போம் போது தெரியாது அன்றோ? ஹரிவர கணமத்யே-‘இவர்களில் ஒரு வேறுபாடு தோற்ற ஒண்ணாத’ என்று இவர்கள் நடுவே நின்றார். ராம பார்ஸ்வம் ஜகாம – 6‘தூசித்தலையிலே மதிக்க ஒரு வினை செய்தாரன்றோ முன்னிற்கப்பெறுவர்?’ என்று பெருமாள் பக்கத்திலே வந்து நின்றார்.
ஆழி எழ – 7‘ஆயிரக்காதம் பறப்பதன் குட்டி ஐந்நூற்றுக்காதம் சிறகு அடிக்கொள்ளும்’ என்னுமாறு போலே முற்கோலி வளர்ந்தபடி. சிறகடிக்கொள்ளுகையாவது, பின்பு தூரப்பரப்பதற்குத் தகுதியாம்படி இளமையிலே பயிலுதல்.8அச்சங்கொள்ளுதற்கு இடம் அல்லாத இடத்திலும் பயப்படக்கூடியவர்கள், அஞ்சத்தக்கஇடத்தைக் கண்டால் வாளா இரார்களே அன்றோ? 1பயசங்கை இல்லாத இடத்திலும் அஞ்சும்படி செய்கிறது விஷய வைலக்ஷண்யம் அன்றோ? 2துரியோதனன் கோட்டியிலே கிருஷ்ணன் எழுந்தருளின போது அவர்கள் செய்த வஞ்சனத்தைக் கண்டு, அச்சங்கொண்டு, தம்முடைய திருமாளிகையில் படுக்கையையும் தடவிப் பார்த்தாரே அன்றோ ஸ்ரீவிதுராழ்வான்? ‘மஹாபுத்திமானான அந்த விதுரர் கண்ணனுடைய படுக்கையைத் தடவிப் பார்த்தார்,’ என்கிறபடியே, ‘ஸம்ஸ்ப்ருசந் ஆஸநம் ஸௌரே: விதுரஸ்ஸ மஹாமதி:’- என்பது, பாரதம், உத்யோக.
கடல் கலங்குவது தன்னளவிலே அன்றோ? 3பிள்ளையுறங்காவில்லிதாசர் ‘மஹாமதி என்றது, மதிகேடர் என்றபடியோ?’ என்றார், 4பிள்ளைதாம், ‘பெருமாள் எழுந்தருளும் போது எங்கேனும் ஒரு சலனம் பிறக்கில் நம் பிராணனை விடுமத்தனை’ என்று சொட்டையை உருவிப் பிடித்துக்கொண்டு சேவிப்பாராம். நம்முதலிகள் அதனைக் கண்டு, இவரை ‘மஹாமதிகள்’ என்று அழைப்பார்கள். 5அறிவு உண்டாகையாவது, பகவத் விஷயத்தில் அறிவு கெடுகை அன்றோ?
ஆழி எழ – 1இவன் வளர்ந்தருளுகைக்குக் கணிசித்தபடியைக் கண்டு, ‘தனியாக ஒண்ணாத’ என்று அஞ்சித் திருவாழியாழ்வான் ஒரு கையிலே ஏறினார்.
சங்கும் வில்லும் எழ-தூசி ஏறினவர்கள் பொரப் புக்கவாறே நின்ற 2இளவணி கலங்கி மேலே நடக்குமாறு போலே,இளவணி-காலாள். மற்றை ஆழ்வார்களும் மற்றைக் கைகளிலே ஏறினார்கள். அன்றிக்கே, 3‘இரை பெறாத இடத்தே இருந்து சீறுபாறு என்னக்கூடியவர்கள் இரையுள்ள இடத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடார்கள் அன்றோ?’ என்னுதல்; இனத்திலே ஒருவன் வாழ்வதனைக் கண்டவாறே உறவினர்கள் கூட்டம் வந்து மேல் விழுமாறு போலே, மற்றைத் திவ்விய ஆயுதங்களும் மேல் விழுந்தபடி என்னுதல். 4‘இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப-இரண்டாந். 71.-இவனுடைய வடிவழகினை நினைந்து ஸ்ரீ பாஞ்சஜன்யமானது நின்று ஆர்ப்ப. எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்தது ஆழி-அவனைப்போல் ஆர்த்துக் கொள்ளுதற்குக் காலம் அற்று நெருப்பினை உமிழ்ந்துகொண்டு நமுசி முதலானவர்களை வாய்வாய் என்றது திருவாழி. விடம் காலும் தீவாய் அரவுகிடந்த இடத்தே கிடந்து பகைவர்கள் மேலே விஷமாகிய நெருப்பினை உமிழுமத்தனை அன்றொ திருவனந்தாழ்வானாலாவது? அரவணைமேல் தோன்றல் -திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய பிரதானன். திசை அளப்பான் பூவார் அடி நிமிர்த்தபோது-ஒரு பூவினைக்கொண்டே அன்றோ காடும் ஓடையும் அளந்து.கொண்டது? 1பூவை இட்டுப் பூவை கொண்டான்காணும். 2அப்படுக்கையிலே பொருந்தும் சௌகுமார்யத்தையுடையவன் இக்காடும் ஓடையுமான உலகத்தினை அளக்கப்புக்கால், இவர்களுக்கு இப்படிப்படவேண்டாவோ? அவன் இப்படி அளவாநின்றால் இவர்கள் பேசாது இரார்கள் அன்றோ?’ 3‘மூன்று அடிகளால் முறையே மூன்று உலகங்களையும் ஒரு கணநேரத்திற்குள் ஆக்கிரமித்தவராய் விளங்குகிற திவ்விய ஆயுதங்களையுடையவராய் எந்தத் திரிவிக்கிரமனாக ஆனானோ அந்த வாமனன் உன்னை எப்போதும் காக்கக் கடவன’ என்கிறபடியே.
‘வாமநோ ரக்ஷது ஸதா பவந்தம் ய: க்ஷணாத் அபூத்
த்ரிவிக்ரம: க்ரமாக்ராந்த த்ரைலோக்ய: ஸ்புரதாயுத:’- என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 5.:17
திசை வாழி எழ – 4‘அவனுக்கு என் வருகிறதோ?’ என்று ஆயிற்றுத் திவ்விய ஆயுதங்கள் கிளர்கின்றன! ‘அவைதமக்கு என் வருகிறதோ?’ என்று ‘வடிவார் சோதி வலத்து உறையும் சுடராழியும் பல்லாண்டு, படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே’ என்னாநிற்பார்கள் அன்றோ? ‘நின் கையில் வேல் போற்றி!’ என்று வேல் தனக்கும் பரியவேண்டி இருக்குமன்றோ? அன்றிக்கே, 5திக்குகள்தோறும் அநுகூலருடைய’ வாழிவாழி’ என்கிற மங்களாசாசன ஒலிகள் கிளர என்னுதல். 1திவ்விய ஆயுதங்களிலும் அவனுக்குப் பாதுகாவல் இவர்களுடைய மங்களாசாசனம் என்று இருக்கிறார், திவ்விய ஆயுதங்களின் நடுவே இவற்றைச் சொல்லுகையாலே. ஏத்த ஏழ் உலகும் பொண்ட கோலக் கூத்தன் அல்லனோ? -திருவாய். 2. 2,11.-தண்டும் வாளும் எழ- ‘தூசித்தலையில் அவர்களே 2கை தொடராய்த் தரம் பெற்றுப் போக ஒண்ணாது’ என்று நின்று பேரணியும் குலைந்து மேல் விழுமாறுபோலே; ‘பிற்பட்டோம், கெட்டோம்’ என்று ஒருவருக்கு ஒருவர் படுகிறபடி; ஒருவர்க்கு இட்ட சோற்றைப் பலர் ஆசைப்படுமாறு போலேகாணும் இவர்கள் படுகிற பாடு. 3அநுகூலன் வந்து புகுர, ‘கொல்லத்தக்கவன்’ என்கிறவர்கள் பிரதிகூலர் உள்ள இடத்தில் பேசாது இரார்கள் அன்றோ?’ 4‘என்இது மாயம் என்னப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்ட அளவாய்’- பெரியாழ்வார் திருமொழி. 1. 9 : 8.- என்று நமுசிவந்து, ‘என் தந்தை உன் வஞ்சநம் அறிந்திலன்; நீ முன்பு போலே நின்று அளக்கவேணும்’ என்று திருவடிகளைக் கட்டிக்கொண்டு கிடந்தான் அன்றோ? 5அன்றே பிறந்து அன்றே வளர்ந்தான் ஒருவனுடைய செயல் அன்றோ இவை அடைய? ஆகையாலே, பரிகைக்குக் காரணம் உண்டு என்றபடி. 6‘சீராற்பிறந்து’ என்கிறபடியே, ‘உன்கையிலே பருத்தி பட்ட பன்னிரண்டும் படுகிற பூமியை நீர் ஏற்கும் போது இப்படிப் படவேணுமோ?’ என்கிறார்.பெரிய திருவந். 16. ‘மார்பாரப் புல்கி நீ உண்டு உமிழ்ந்த’ என்றதனைக் கடாட்சித்துப்
‘பருத்தி பட்ட பன்னிரண்டும் படுகிற பூமியை’ என்கிறார். ‘
அண்டம் மோழை எழ – 1இந்திரனுக்காக மூன்று உலகமித்தனையும் அளந்து கொடுப்பதாக அன்றோ தொடங்கியது? கணிசம் அவ்வளவு அல்லாமையாலே அண்டத்தின் இடமுள்ள அளவும் சென்று அளந்து, அண்டகடாஹத்திலே திருவடி சென்று, ‘ஒண்மிதியிற் புனல் உருவி ஒருகால் நிற்ப’ என்கிறபடியே கீழேயுள்ள அண்டகடாஹத்தை உருவி நிற்க, கீழேயுள்ள ஆவரணஜலம் மேலே எழ. 2ஆவரண ஜலத்துக்கு நடுவே ஒரு கழல்போலே மிதக்குமித்தனை அன்றோ அண்டம்? 3‘இரட்சகமான செயலே பாதகமாகிறதோ?’ என்று அஞ்ச வேண்டும்படி அன்றோ அப்போதைக் கறுவுதல்’ மோழை-குமிழி. முடி பாதம் எழ-திருமுடியளவும் திருவடிகள் கிளர. ‘முடிமேலே பாதம் எழ’ என்றும் சொல்லுவர்கள் நிருத்த லக்ஷணத்துக்காக. அப்பன் ஊழி எழ – 4மஹாபலி தகுதி இல்லாமல் அரசு நடத்துகையால் வந்த பொல்லாக் காலமானது போய், நல்லடிக் காலமாயிற்று; நல்லடிக்காலம் கிளரும்படி.யாகவும். அப்பன் உலகம் 1கொண்டவாறே – ‘மஹேபகாரகனான சர்வேஸ்வரன் உலகத்தைக் கொண்ட ஆச்சரியம் இருந்தபடி என்?’ என்னுதல்: அன்றியே, ‘உலகத்தைக் கொண்ட பிரகாரம் இருந்தபடி என்?’ என்னுதல். அப்பன் அப்பன் என்று உவகை அடைகிறாராகவுமாம். அப்பன் – ‘இந்திரனுக்கு இராயச்சித்தைக் கொடுத்த செயலாலே எனக்கு2ஆத்துமாவைத் தந்தான்’ என்கிறாராகவுமாம்.
பகவத் விஷயத்தில் நெஞ்சை பறிகொடுத்தார்
இனி இவருக்கு -விஜய பரம்பரைகளை பத்தும் பத்தாக முழுக்க காட்டிக் கொடுத்தான்
உலகம் அளந்த
நரசிம்ஹ
ராம
கோவர்த்தன
போன்றவை
அனுபவித்து ஹிருஷ்டர் ஆனார்
உபகாரமாக இருந்தால் தாம் வேணும்
இல்லை என்றால் தாமும் வேண்டாம் உடைமையும் வேண்டாம்
எராலும் மாலுக்கு திருவாய்மொழி
நைச்சாயானுசந்தானம்
தம்மை அழிய மாறினும் பரிவாக அத்தலைக்கு நன்மை தேடுபவர்
அபதானங்கள் காட்டி வெற்றி பரம்பரை \
இழவு எல்லாம் தீரும் படி
பூத காலம் சம காலம் போலே பிரத்யஷமாக நடப்பது போலே காட்டிக் கொடுத்தான்
மயர்வற மதிநலம் அருளி -சாஷாத் கரிக்க வல்லராம் படி
மீண்டும் வாசனை -வளர்ந்து ஞானம் –
அனுபவித்து பாடுகிறார்
இரண்டாவது நிர்வாகம் –
ராமாவதாரம் பிரஸ்துதம் ஆகையால்
தென் இலங்கை செற்ற பிரான் சொல்லி
வசுதேவர் சக்கரவர்த்தி போலே இவரும் உகந்து பேசுகிறார்
வயசு குறைந்து -போலே இவருக்கும் துக்கம் தீர்ந்தது
பார்த்ததும் யவன பருவம் போலே சந்தோஷம் அடைந்தேன்
பெருமாள் காடேற போனால் நான் ஜீவிப்பேன் என்று நினைத்தாயோ
தேவ குமார ரூபம் –
ரிஷி கண் எச்சில் பூசுகிறார் இத்தால் –
சிரியாத்தான் கேட்க பட்டர் தரம் போராதாரை ஒப்பாக சொல்லி கரி பூசுகிறார் திருஷ்டி போட்டு வைப்பது போலே
அலங்க்ருதம் -ஒப்பித்தால் -ஒக்க சொல்ல முடியாதே
தம் சுத்தம் அப்படி பட்ட பிள்ளை அழகும் பிள்ளையும் உத்தேச்யம்
புஷ்பம் வண்டு நோக்கி அலருவது போலே என்னை குறித்து வருகிறான்
காணாதது கண்டது போலே உகக்கும் படி
பஷ்யன் நந்தாமி நிகழ காலத்தில் -கண்ட படியே -ஆராமுதே
அணைத்தல் வார்த்தை சொல்ல வேண்டாம் காட்சியே போதுமே
கரை புரண்ட அனுபவம்
சதா பச்யந்தி சூரய போலே
பெருமாளைக் கண்ட பின்பு அவன் போலே ஆனானாம் தசரதன்
காமனை பயந்த காளை போலே
அனுபவிப்பாரையும் தன்னைப் போலே ஆக்கி
தன்னையே ஒக்க அருள் செய்து
பரமம் சாம்யம் பவதி
வசு தேவரும் -யுவேன-மூப்பை விட்டு ஆனாரே இது போலே
கண்ணபிரானுக்கு பெண்மை தோற்றேன் -கீழே சொல்லி
விஜயங்களுக்கு தோற்று –
மூன்று வித சங்கதி -அருளிச் செய்து –
அவன் காட்ட கண்டு
ராம விருத்தாந்தம் வந்ததால்
தோற்று அந்த விஜயத்தை சொல்லுகிறார்
திரு உலகு அளந்த பெரிய விஜயத்தை முதலில் அனுபவிக்கிறார்
ஆழி சங்கு வில் எழ
திசை வாழி சப்தம் எழ
தாண்டும் வாளும் எழ
அண்டம் மோழி எழ
முடி பாதம் எழ
அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே –
ஜிதம் பாகவதா -ஜகத் -தனக்கு ஆக்கிக் கொண்ட செயல் இது –
ஒரு திருவடியே உலகை வியாபித்து
ஜாம்பவான் பிரத்யஷனம் செய்து பறை அடைக்க
தேவர்கள் தங்கள் இடம் அடைய
எதிரியாக ஆக்கி கொல்லாதே -மகாபலியை அழகாலே தோற்பித்து
நாயகனுக்கு அடியார் இ றே சென்று வெற்றி கொடுப்பார்
மகா பலியை அடக்க வேண்டி –
ஆஸ்ரிதர் சொத்தை அபகரித்து –
தேவானாம் தானவானாம் சாமான்ய அதி தெய்வதம் –
தரை லோகய ராஜ்யத்தை தன கால் கீழே கொள்ள வேண்டும் என்னும் கறுவுதல் உள்ளது ஈஸ்வரனுக்கு
அந்த அபி சந்தி இல்லாமல் இருந்தும் முன்பே பரிகரம்
முதலில் ஆழி எழ –
ஸ்ரீ ராமாயணம் -காட்டுக்கு போக பெருமாளை நியமிக்க இளைய பெருமாள் முற்பட்டாப் போலே –
பூர்வஜச்ய அனுயாத்ரை -தருமம் சீரம் மர உரி அலங்க்ருத
தோற்றத்திலே அரசு போராயிற்று
முக்கியமான யுத்தம் ஆயிற்று
ஆயுதங்கள் ராஜா ஹேதி ராஜன் -பிரதானம்
பரிகரம் நிற்க மகா ராஜர் பாய்ந்து ராவணன் முடி பரித்தாப் போலே
ராஜா பிடி தோறும் நெய் போலே நஞ்சீயர் ஸ்ரீ ராமாயணம்
உப்பரிகையில் நிற்க -கிரீடம் வேற
பெருமாள் தரையில் நிற்க –
தானே எழுந்து செய்த கார்யம் போலே –
இங்கும் தோற்றத்தில் அரசு போர்
பையல் முடியும் தானுமாக -ஈரசு ஆயிற்றோ
சர்வ லோக சரண்யன் இருக்க
மேல் விழுந்தார் இ றே சுக்ரீவர் மகா ராஜா
தம்மோடு யுத்தம் செய்வார் பலர் இருக்க வானவர் ஸ்ரேஷ்ட தலைவன் இவன் –
தூசித்தலையிலே-ஒரு மாதிரி புகழ் -ஏற்றம் செய்து பெருமை பெற
இன்றி தனியாக செய்து அருளி
பெருமாளுக்கு வந்த கீர்த்தியையும் தாமே ஏறிட்டு கொண்டு
நிசிசராள் பதி-இரவில் சஞ்சரிக்கும் அசுரர் தலைவர்
அங்கும் அவனுடன் ஒக்க பலர் உண்டே
அவன் தன்னுடன் செய்த போர்
மாரீசன் விட்டு மறைவாய் நின்று வழி அல்லா வழி ராவணன்
செவ்வை பூசல் செய்து இளைப்பித்தது
ராவணனுக்கு ஸ்ரமம் உண்டாக்கி -ஸ்ரமம் கூட்டி சப்தம் –
இதுக்கு முன்பு கூடாதது கூட்டி
முதலில் தான் ஸ்ரமம் உண்டு என்று உணர்ந்தான் –
சாத்தமுது இப்படி இருக்குமா போலே –
பரப்பை உடைய ஆகாசத்தை கடந்து –
சூர்யன் பிள்ளை சுக்ரீவர் –
பிறப்புக்கு இடமாக செய்தார்
ஆகாசம் இவருக்கு தன்னிலம்
ஆதித்யன் போவதும் வருவதும் தெரியாதபடி போவது போலே இவனும் சென்று கிரீடம் தட்டி வந்தார் –
வானர வீர நடுவில் வெட்கி நின்றார் -கண மத்யே
ராம பார்ச்வம் ஜகாம-பெரியதாக செய்ய வில்லை பின்னே போய் நின்றார் -கொன்று வராமல் கிரீடம் தட்டி வந்தோமே –
1000 காதம் பறக்கும் குட்டி 500 காதம் சிறகு அடி கொள்வது போலே
பிறக்கும் பொழுதே பாதி கார்யம் செய்யும்
ஆழி பாதி கார்யம் செய்தது -அவன் உலகம் அளக்கும் பொழுது
முர்கோலி வளர்ந்தபடி
அப்யாசமே 500 காதம் பறந்து பண்ணும்
ஆழி எழ –
மங்களா சாசனம் அஸ்தானே பய சங்கை காரணம்
அயோத்யா ந யோத்யும் சக்த்யா யுத்தம் யாரும் செய்ய முடியாத இடம்
இங்கு பிரகிருதி மண்டலம் பய ஸ்தானம் கண்டால் பேசாது இராரே
பரம பதம்
ஆங்கு ஆராவாரம் அது கேட்டு -நித்ய முக்தர் ஹாவு ஹாவு
செய்ய
ஆங்கு -அது கேட்டு அழல் உமிழும் பூம் கார அரவு -அஞ்சி உமிழ்ந்தான் -அஸ்தானே பய சங்கை –
சொல்பவர் நித்யர் சொல்வது சாம வேதம் -இடம் பரமபதம் –
பிரமம் ஏற்பட்டவர் ஞானம் இருப்பிடம் கொண்ட திரு அனந்த ஆழ்வான்-
விஷய வை லஷண்யம் படுத்தும் பாடு -மயங்கி அனைத்தையும் மறந்து –
மகா பாரதம் -திருஷ்டாந்தம் -திரு மாளிகை படுக்கையில் தடவி பார்த்தார் விதுரர்
போய் ஆசனம் இட்டான் -அது கண்டு அதி சங்கை பண்ணி
மகா மதி –
தர்ம சங்கை விலகும் ஞானம் உடையவர் -செய்த செயல்
தொட்டு பார்த்தார் –
இந்த ஸ்லோகம் மகா பாரதத்தில் இல்லை காஞ்சி சுவாமி –
பூர்வர் -காட்டியதால் ஓலை சுவடி மாறி இருக்கலாம் –
கடல் கலங்குவதும் தன அளவிலேயே –
மகா மதி அதிகம் கலங்கி
பிள்ளை உறங்கா வல்லி தாசர் மகா மதி என்றது மதி கேடர்
ஞான விபாக கார்யம் அடியாக வரும் அஞ்ஞானம் அடி களைஞ்சு பெரும் –
அவரும் மகா மதி
சலனம் இருந்தாலும் பெருமாள் எழுந்து அருளும் பொழுது
தன்னை கத்தியாலே குத்திக் கொள்ளுவாராம் -சொட்டை கத்தி உருவிபிடித்து சேவிப்பாராம்-
வம்சம் வந்தவர் போவார்
அறிவு உண்டாகையாவது பகவத் விஷயத்தில் அறிவு கலங்க
அஸ்தானே பய சங்கை -ஆழி எழ –
இவன் வளர்ந்து அருளுவதை கண்டு
தனியாக போக கூடாது என்று கணிசித்த படி -கையிலே ஏறினார்
சங்கும் வில்லும் எழ –
தூசி ஏறினவர்கள்-மற்ற ஆழ்வார் ஏற
சங்கும் வில்லும்
இறை பெறாத இடத்தில் சாறு பாறு
கிடைத்தால் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடார்
இனத்தில் ஒருவர் ஜீவிக்க புக்கவாறே –
இடங்கை வலம்புரி -நின்று ஆர்ப்ப -பாஞ்ச ஜன்யம் ஆர்ப்ப
அரவணை மேல் தோன்றல்
திசை அளப்பான் -பூவார் அடி நிமிர்ந்த போது
எரி கான்று -நெருப்பை உமிழ -சப்தத்தால் முடியாதே அக்னி உமிழ்ந்து
நமுசி பிரக்ருதிகளை வாய் வாய் ஏன்னா நின்றது இ றே -வானில் சுழற்றிய மின்னு முடியன்
விடம் காலும் திரு வனந்த ஆழ்வான் -தீ வாய் அரவணை –
இருக்கும் இடத்திலே இருந்து உமிழும்
தோன்றல் பிரதானம்
பூ கொண்டு ஆகாதே காடும் மேடும் அளந்து -பூவார் திருவடி
பூவை வீடு பூவைக் கொண்டான் பூமியை கொண்டான்
படுக்கையில் புகுந்தும் சௌகுமார்யம் உள்ளவன் –
அரவணை -துயின்றவன் -ஜகத்தை அளக்கப் புக்கால் இவர்கள் இப்படி பட வேண்டாவோ
திசை வாழி எழ -இவனுக்கு என்ன வருகிறதோ என்று மங்களா சாசனம்
ஆயுதங்களுக்கும் ஒரு கேடு வரக் கூடாதே
நின் கையில் வேல் போற்றி
வாழி வாழி தொனி கிளர –
திவ்ய ஆயுதங்களிலும் அவனுக்கு ரஷை மங்களா சாசனம் தானே –
நடுவில் இதை சொல்லுவதால்
அப்புறம் தாண்டும் வாளும் எழ சொல்லி
பட்டர் -அகளங்கன் பிள்ளை பிள்ளை ஆழ்வான் திருமாளிகை இடித்து மதிள் கட்ட -கேட்க்காமல் திரு கோஷ்டியூர்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் தான் ரஷகர் மதிள் ரஷகம் இல்லை
திசை வாழி எழ
ஏத்த ஏழு உலகம் கொண்ட கோலக் கூத்தன்
ஸ்ரீவிஷ்ணு புராணம் நந்த கோபர் வார்த்தை -பிரமாணம் காட்டி –
பிற்பட்டோம் பிற்பட்டோம் என்று நான் முந்தி -நான் முந்தி
ஒருவருக்கு இட்ட சோற்றை பலர் ஆசைப் படுவது போலே
அனுகூலம் வந்து புகுர -விபீஷணன் -பிரதி கூலர் வந்தால் சும்மா இருப்பாரா
என் இது மாயம் நமுசி திருவடி கட்டி கிடந்தான்
அன்றே பிறந்து அன்றே வளர்ந்தவன் வியாபாரம் பரிவுக்கு ஹேது உண்டே
அந்தியம் போதில் அரி உருவாகி -பந்தனை நடுக்கம் அனுக்கம் வியாக்யானம்
பந்தனை தீர பல்லாண்டு
அவதாரம் செய்த அப்பொழுதே
குழந்தை பிறந்த உடனே நடுக்கம் வருமே
வலிப்பு –
அவதார தினத்திலே நடந்த அபதானம்
இங்கும் அப்படியே பரிகைக்கு ஹேது உண்டே
சீரால் பிறந்து சிறப்பால் வளராது –இரண்டும் இல்லை வாமன
ராமன் சீரோடு பிறந்து
கிருஷ்ணன் சிறப்பாக வளர்ந்தான்
வாமனன் இரண்டும் இன்றி
ரிஷி ஆஸ்ரமம் பிறந்து
பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்ட பூமியை -உண்டும் உழிந்து -கடந்து இடந்து கண்டவாற்றால் தனதே உலகு என்று நின்றான்
பருத்திக்கு 12 அவஸ்தை
பூமியும் உன் கையிலே இப்படி பட
யாசகம் செய்து பெற வேண்டுமோ
அண்டம் மோளை எழ -அண்ட அவகாசம் உள்ள அளவும்
ஆசை மிக்கு -அளந்தான் –
கருமி -கஜானா தடவி பார்த்து எடுப்பது போலே –
கிடைத்த வாய்ப்பை விடாமல் 14 லோகமும் திருவடியால் தடவி –
ஒண் மிதியில் -கீழில் அண்ட கடாகத்தை உருவி நிற்க
ஆவரண ஜாலம் நடுவே மிதக்கும் அண்டம்
ரஷணம் பாதக செயலோ என்று அஞ்சும் படி கருவி-
மோளை குமுழி-பூமிக்கு ஓட்டை போட்டு ஜலம் வெளியில் வந்தது போலே ஊற்று பீறிட்டு வர –
முடி பாதம் எழ திரு அபிஷேகம்
முடி மேலே பாதம் எழ -நிருத்த லஷணம்
அப்பன் ஊழி எழ -பொல்லாங்கு போய் நல்லடி காலம்
ஊழி -நல்லடிக் காலம் கிளரும்படியாகவும்
அப்பன் உலகம் கொண்ட வாறு
மகா உபாகாரகன் –
லோகத்தை கொண்ட பிரகாரம்
அப்பன் பத்து பாட்டிலும் ஹிருஷ்டராக
இந்தரனுக்கு -தனக்கு சத்தையை கொடுக்க
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply