திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-3-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

  ஊழிதோறு ஊழி உருவும்பேரும்
செய்கையும் வேறவன் வையம்காக்கும்
ஆழிநீர் வண்ணனை அச்சுதனை
அணிகுரு கூர்ச்சட கோபன்சொன்ன
கேழில்அந் தாதிஓர் ஆயிரத்துள்
இவைதிருப் பேரெயில் மேய பத்தும்
ஆழிஅம் கையனை ஏத்த வல்லார்
அவர்அடி மைத்திறத்து ஆழியாரே.

பொ-ரை : கல்பந்தோறும் வடிவும் பேரும் செயலும் வேறுபடக் கொள்ளுமவனும், பூலோகத்தைப் பாதுகாக்கின்ற கடல் வண்ணனும் அச்சுதனுமான எம்பெருமானை, அழகிய திருகுருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த ஒப்பில்லாத அந்தாதி ஓராயிரத்துள், திருப்பேரெயில் என்னும் திவ்விய தேசத்தைச் சேர்ந்த இவை பத்தும் கொண்டு, திருவாழியை அழகிய கையிலேயுடைய மகரநெடுங்குழைக்காதனைத் துதிக்க வல்லாராகிய அவர்கள் அடிமை விஷயத்திலே திருவாழியின் தன்மையையுடையவர்களாவார்கள்.

வி-கு :
 அச்சுதன் – அழிவில்லாதவன்; ‘அடியார்களை நழுவ விடாதவன்’ என்னலுமாம். திருப்பேரெயில் மேய இவை பத்தும் என்று கூட்டுக. ஆழியார்-மூழ்கினவர்கள் என்னலுமாம்.

ஈடு : முடிவில், 2‘இத்திருவாய்மொழி கற்றார், பகவானுடைய கைங்கரியத்திலே மிகவும் மூழ்கினாரேயாவர்,’ என்கிறார்.

ஊழிதோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன்-அடியார்களைக் காப்பாற்றும்பொருட்டுக் கல்பந்தோறும் கல்பந்தோறும் திருமேனியும் திருப்பெயரும் செயல்களும் வேறுபடக்கொள்ளமவன். 1‘இதற்குப் பயன் என்?’ என்னில், வையம் காக்கும்-உலகத்தைக் காப்பாற்றுதல். 2அப்படியே காத்திலனாகில் இப்படி நம்புவார் இல்லையே, இவனை ‘இரட்சகன்’ என்று, ஆழி நீர் வண்ணனை – 3நோக்காதே படுகொலை அடிக்கிலும் விட ஒண்ணாத வடிவு. 4வேறுபடாதே அங்குள்ளார்க்குக் காட்சி கொடுக்கும் அசாதாரண விக்கிரகத்தைச் சொல்லுகிறது. அச்சுதனை – 5அவ்வடிவு தனக்கு ஒருநாளும் அழிவு இல்லை என்னுதல். பற்றினாரை ஒரு நாளும் விடான் என்னுதல். அணி குருகூர் -ஆபரணமான திருநகரி. கேழ் இல் அந்தாதி – ஒப்பு இல்லாத அந்தாதி.6தம்மாலும் பிறராலும் மீட்க ஒண்ணாதபடி பகவத் விஷயத்தில் உண்டான உறுதியைச் சொன்ன பத்து ஆகையாலே, ஒப்பு இன்றிக்கே இருக்கிறபடி. ஓர் ஆயிரத்துள் திருப்பேரெயில் மேய இவை பத்தும் – ஒப்பு இல்லாத ஆயிரத்துள் திருப்பேரெயிலிலே சேர்ந்த இப்பத்தைக் கொண்டு. ஆழி அம் கையனை ஏத்த வல்லார் – 7‘இவை எல்லாவற்றாலும் என் சொல்லியவாறோ?’ எனின், கையும் திருவாழியுமான

அழகிலே இவர் அகப்பட்ட படியைத் தெரிவித்தபடி. 1அல்லாத அழகுகள் ஒருபடியும் இது ஒரு படியுமாய் இருக்கை; 2இது கை மேலே அனுபவித்துக் காணலாமே. 3அவர் அடிமைத் திறத்து ஆழியாரே – அடிமைக் கூட்டத்தில் திருவாழியின் தன்மையையுடையவர் என்னுதல்; அடிமை இடையாட்டத்தில் ஒருவரால் மீட்க ஒண்ணாதபடி உட்புகுவர் என்னுதல்.

 

    திருவாய்மொழி நூற்றந்தாதி

    வெள்ளியநா மங்கேட்டு விட்டகன்ற பின்மோகம்
தெள்ளியமால் தென்திருப்பேர் சென்றுபுக – உள்ளமங்கே
பற்றிநின்ற தன்மை பகருஞ் சடகோபற்கு
அற்றவர்களை தாமாழி யார்

நிகமத்தில் கைங்கர்யத்தில் முழுகுவார்
ஆழி நீர் வண்ணன்
அச்சுதன்
ஒப்பில்லாத அந்தாதி திருவாய்மொழி
அடிமை திறத்தில் திரு ஆழி ஆழ்வான் போலே கடல் போலே முழுகுவார்
ஆஸ்ரித ரஷனார்தமாக
திருமேனி திருநாமம் செஷ்டிதன்கள் வேறுபட கொண்டு
பிரயோஜனம் வையம் காக்கும்
அப்படியே ரஷிக்காவிடில் விச்வசிக்க மாட்டார்களே
நோக்காமல் படு கொலை செய்தாலும் விட ஒண்ணாத வடிவு
அங்கு உள்ளாருக்கு காட்டிக் கொடுக்கும் வடிவு
அச்சுதன் பற்றினாரை நழுவ விடாதவன்
ஆபரணமாக திரு நகர்
அணி புதுவை முப்புரி ஊட்டிய
உபய பிரதான பிரணவம் -இருவருக்கும் பிராதான்யம்
கேழில் அந்தாதி ஒப்பில்லாத
யாராலும் மீட்க ஒண்ணாத சொல்லிய பத்து
வேறு யாரோ சேர்த்தார்கள் நிகம பாசுரம் தப்பாக சொல்லி
முதல் ஆழ்வார் திரு மழிசை திருப்பாண் சொல்ல வில்லை
அந்தாதி என்பதால் இதை ஆழ்வார் மட்டுமே செய்து அருளி

ஆழி அம கையான்
கையும் திரு ஆழியும் அழகில் அகப்பட்டு
இது ஒரு தட்டு மற்றவை வேறு தட்டு
கை மேலே அனுபவித்து காணலாமே
அடிமை திறத்தில் திரு ஆழி ஆழ்வார் போலே ஆவார்
அன்றிக்கே
மீட்க ஒண்ணாத படி முழுகுவார் அடிமை திறத்தில் என்னவுமாம் –
சார பாசுரம் –
விட்டு அகன்ற பின் மோகம்
நாமம் கேட்டபடியால் அகல
வெள்ளிய நாமம் கேட்ட
ட்டிஹெல்லிய மால் தென் திருப்பேர் உள்ளம் சென்று புக
அங்கே பற்றி நின்ற தன்மை பகரும் மாறன்
அடி பணிந்து ஆழியார் ஆவோம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading